Sunday, January 31, 2016

இறைவழிபாடு அவசியம்

சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த பூ என்றால், அது கொன்றை மலர்தான். ஏன் தெரியுமா? அது பார்ப்பதற்கு ‘ஓம்’ என்ற வடிவத்திலேயே இருக்கும். அதை ‘ஓம் கார புஷ்பம்’ என்றுகூடச் சொல்வார்கள்.

சிவபெருமானை ‘கொன்றையஞ் சடையன்’ என்று அப்பர் ஸ்வாமிகள் குறிப்பிடுவதன் அர்த்தம் இதுதான். ‘கொன்றை மாலையை அணிந்திருப்பவனே!’ என்று பொருள்.

அப்படிப்பட்ட கொன்றைப் பூ சூடியவனை நாம் நாட வேண்டும். இறைவனைத் தவிர, வேறு ஒருவராலும் ஒரு செயலையும் செய்ய முடியாது. அவனைத் தவிர, நம்மை ஒருவராலும் ஒரு செயலும் செய்ய வைக்க இயலாது. 

அவனை அறிந்தவன் எல்லாம், அறிந்தவனாகிறான். அவனை அறியாதவன் எல்லாம், அறிந்தும் எதையுமே அறியாதவன் போலாகிறான்.

பாம்பன் சுவாமிகள் முருகனை முழுதுமாக உணர்ந்தவர். எதையுமே அவர் தனியாக படித்து அறியவில்லை. இறைவனை, அவன் திருவருளை உணர்ந்தார். அதனால் எல்லாம் உணர்ந்தவர் ஆனார். 

ஸ்வாமி விவேகானந்தரிடம் சென்று ஒரு புத்தகத்தை நீட்டினால், அதை அப்படியே ஒரு நொடியில் படித்துவிடுவாராம். அந்த சக்தியை, அந்த ஆற்றலை அருளுபவன் இறைவன் தான்.

பல பேர் மரங்களாக நின்று உன்னை நோக்கி கடும் தவம் புரிந்தார்களே. ஆனால், என்னை நீ எப்படி ஆட்கொண்டா’ என்று கேட்பார் மாணிக்கவாசகர். அசுரர்களும் கடும் தவம் புரிந்தார்கள். ஆனால், அவர்கள் ஒரு வரத்தை நோக்கி தவம் புரிந்தார்கள். இறைவன் திருவருளே வேண்டும் என்று நிற்பதுதான் உயரிய தவம்.

ஆங்கிலத்தில் duty என்ற ஒரு வார்த்தை வரும். அந்த , duty எனும் வார்த்தையே, , due என்ற வார்த்தையிலிருந்து வந்ததுதான். நாம் அனைவருமே இறைவனுக்கு கடன்பட்டவர்கள் (due). 

அந்தக்கடனை செலுத்த, இறை வழிபாட்டை கட்டாயம் நாம் செய்யத்தான் வேண்டும். இறைவனின் மீது, அவனின் திருவருளின் மீது இன்றியமையாத, இயற்கையாக பக்தி கொள்ளவேண்டும் என்பதைத் தான் அப்பர் ஸ்வாமிகளும் வலியுறுத்துகிறார்."

No comments:

Post a Comment