Monday, May 20, 2013

கஷ்டங்களை ஏன் கடவுளிடம் சொல்கிறோம்?

நம் பாவத்துக்கு பலனாக கஷ்டங்கள் வருகின்றன. என் மனமறிந்து யாருக்கும் எந்தக் கேடும் செய்யவில்லையே, அப்படியிருந்தும் ஏன் இந்தக் கஷ்டம்? என்றால், முற்பிறவியில் செய்ததன் பலனை அனுபவிப்பீர்கள். அப்படியானால் கஷ்டம் நிஜம் என்று ஆனபிறகு, கடவுளை வணங்குவானேன்! அதை அனுபவித்து விட்டு போய்விடுவோமே என்றால், கஷ்டத்தை தாங்கும் சக்தியில்லை. இந்த சமயத்தில் நாம் கடவுளை துணைக்கு அழைக்கலாம். எப்படி தெரியுமா? நீலகண்டதீட்சிதர், அன்னை மீனாட்சியை துணைக்கு அழைத்த மாதிரி! ஆனந்த ஸாகர ஸ்தவம் என்ற தனது நூலில், அவர், அம்மா மீனாட்சி, உன்னிடம் எதையும் சொல்லவே வேண்டாம். சகலமும் தெரிந்தவள் நீ. ஆனாலும், உன்னிடம் கஷ்டங்களை வாய்விட்டு சொல்லாவிட்டால், மனம் புண்ணாகிறது. வாய்விட்டுச் சொல்வது ஆறுதல் தருகிறது. அதனாலேயே உனக்கு எல்லாம் தெரிந்திருந்தாலும் நான் என் குறைகளைச் சொல்கிறேன், என்கிறார். நாமும், நம் கஷ்டங்களை தெய்வத்திடம் முறையிட்டு மனதில் இருக்கும் பாரத்தைக் குறைப்போம். மனச்சாந்தி பெறுவோம்.

இறைவனை அடைய எளிமையான பக்தியே போதும்!

கடவுள் மிகவும் எளிமையானவர். பக்தியாலேயே அவனை அடைய முடியும். பக்தியே முக்திக்கு வழி. பக்தி செய்வது மிகவும் சுலபம். தவம், தியானம், பூஜை போன்றவைகளை விட, மனதால் பகவானை துதி செய்வது சுலபம். மனதுக்குள்ளேயே பகவானை வழிபடுவது இன்னும் விசேஷமானது. எளிமையாக இருந்தே, எளியவனான கடவுளிடம் பக்தி வைக்கலாம். நம்முடைய பூஜை, பக்தி இவைகளை கண்டு, மற்றவர்கள் பாராட்ட வேண்டுமென் பதில்லை; பகவான் பாராட்டினால் போதும். ஒரு கூடை பூவைப் போட்டு, ஆயிரம் நாமாவால் பூஜை செய்ய வேண்டுமென்பதில்லை; ஒரே ஒரு புஷ்பம் போட்டு, ஒரே நாமாவைச் சொன்னாலும் அவன் ஏற்றுக் கொள்வான். பூஜை செய்வதற்கான பொருட்களை தேடிக் கொண்டிருக்க வேண்டியதில்லை; மானச பூஜையே போதும்.

வள்ளலார் கூட எளிமையாக வாழ்ந்தவர். எளிய முறையிலேயே ஆண்டவனை பூஜித்தவர். அகல் ஜோதியையே கடவுளாக வழிபட்டார். தெய்வங்கள் ஜோதி வடிவமாகத் தான் சொல் லப்பட்டுள்ளது. "ஜோதி ஸ்வரூபன் என்பர். ஜோதி தான் அவனது வடிவம். கடவுள் மன்னிக்கும் குணம் உடையவர். தவறு செய்துவிட்டு மன்னிப்பு கேட்டால், உடனே மன்னித்து விடுவான். கடவுள், என்றாலே, ஒரே பரம் பொருள் தான். பல உருவங்களில் வழிபடுகின்றனர். இந்த உணர்வு வேண்டும். தினமும் கோவிலுக்குப் போய்த் தான் தெய்வ வழிபாடு செய்ய வேண்டுமா அல்லது வீட்டில் இருந்து கொண்டே பக்தி செய்ய முடியாதா என்று யோசிக்கலாம். கோவிலுக்கு போனாலும் சரி, வீட்டில் இருந்தாலும் சரி, மனம் மட்டும் தெய்வத்திடம் இருக்க வேண்டும். கோவிலுக்குப் போனால், பலவித ஆரவாரங்களுக்கு இடையில், மனதை பகவானிடம் வைக்க முடியுமா என்பதும் கேள்விக் குறிதான். அங்கே தான் பல உறவினர், நண்பர்களை சந்திக்க நேரிடும். அவர்களை பார்த்த பின் சும்மா இருக்க முடியுமா? குசலம் விசாரிக்க வேண்டியிருக்கும்... "பெண் கல்யாணம் என்ன ஆயிற்று? பிள்ளை படிப்பு என்ன ஆயிற்று? துபாயில் இருக்கும் பெரிய பையன் பணம் அனுப்புகிறானா? இப்படி, பலவித குடும்ப விஷயங்கள் கேள்வி - பதிலாக ஆகிவிடுகிறது. அப்புறம் மனதை பகவானிடமே வைப்பது என்பது, எப்படி சாத்தியம். சரி, வீட்டிலேயே இருந்து, மனதை, பகவான் பக்கம் திருப்பலாமே என்றால், இது கூட சிலருக்கு சாத்தியமாவதில்லை.

அப்போதும் கூட குடும்ப விவகாரம்... "சின்ன பையன் ஸ்கூல் போனானா, பெரிய பெண் டியூஷனுக்கு போனாளா, இந்த வாரம் ரேஷன் வாங்கியாச்சா? ஸ்டோர்ல பாமாயில் வந்திருக்கா... என்று எத்தனையோ கேள்வி - பதில்கள். தெய்வ வழிபாடு, பக்தி என்பது ஒரு பகுதி; குடும்பம், குடும்ப விவகாரம் என்பது இன்னொரு பகுதி. இரண்டையும் கலந்தால், பக்திக்கு பங்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குக்கிராமத்தில், ஓட்டு வீட்டில் வள்ளலார் தவம் செய்து முக்தி பெற்றார். 63 நாயன்மார்களில் ஒருவரான சண்டிகேஸ்வரர், திருவப்பாடி கிராமத்தில் பசுக்களை மேய்த்து, வெட்ட வெளியில் மண்ணால் லிங்கம் செய்து அதன் மீது, பால் கறக்கவிட்டு வணங்கி முக்தி பெற்றார். பூசலார் நாயனார் மனதினாலேயே கோவிலை நிர்ணயம் செய்து, சிவபெருமானை வழிபட்டு சிவ தரிசனம் பெற்றார். இப்படி பல சரித்திரங்கள் உள்ளன. ஆக, மனிதனுக்கு தெய்வ பக்தி அவசியம் இருக்க வேண்டும். இப்படி பக்தி செய்து நற்கதி அடையும் பாக்கியம் மனிதனுக்கு மட்டுமே உள்ளது. மற்ற ஜீவன்களுக்கு பக்தி, பூஜை, வழிபாடு என்பதெல்லாம் தெரியாது; அதனால், அவை இதில் ஈடுபடுவதில்லை. மனிதன், சுலபமான முறையில், தியானத்தின் மூலமே பக்தி செய்து பகவானை அடைய முடியும். இதற்குத் தான் முயற்சி செய்ய வேண்டும்.

Saturday, May 4, 2013

படிப்பில் இனி நீங்கதான் ராஜா!

வெண்குதிரை முகமும், மனித உடலுமாக விஷ்ணு எடுத்த அவதாரம் ஹயக்ரீவர். மது, கைடப அரக்கர்களைக் கொன்று வேதங்களை மீட்டவர் இவர். அதனால், மறை மீட்ட பெருமான் என்று பெயர். கல்விக்குரியவராக விளங்குவதால் இவரை வித்யாராஜா என்றும் போற்றுவர். மாணவர்கள் இவரை புதன்கிழமையன்று வழிபட்டால், படிப்பில் இனி நீங்க தான் ராஜா என புகழப்படுவீர்கள். யோக நிலையில் இருக்கும்போது இவர் யோகஹயக்ரீவர் என்றும், வலக்கரத்தால் அபயமுத்திரை காட்டியபடி இருந்தால் அபயஹஸ்த ஹயக்ரீவர் என்றும் பெயர் பெறுவார். வரம் அளிக்கும் விதத்தில் வலதுகையை கீழ்நோக்கி காட்டி இருப்பவரை வரதஹஸ்த ஹயக்ரீவர் என்பர். தாயாரை மடியில் ஏந்தியிருக்கும் போதுலட்சுமி ஹயக்ரீவர் எனப்படுவார்.  வாதிராஜ சுவாமிகள் என்ற பக்தர், நைவேத்யத்தை தலையில் வைத்து அமர்ந்திருக்கும் போது, பெருமாள் குதிரை முகத்துடன் வந்து, தன் முன்னங்கால்களை தட்டில் வைத்து ஆர்வமாகச் சாப்பிட்டதாக தகவல் உண்டு.

கொடிமரத்தில் எந்த பக்கமாக நின்று எவ்வாறு வணங்க வேண்டும்?

கருவறை கிழக்குநோக்கி இருக்கும். கருவறை முன்னரே கொடிமரம் இருக்கும். பிரகாரத்தை வலம் வந்து எல்லா சந்நிதிகளிலும் வணங்கிய பின், கொடிமரத்தின் முன் வடக்கு முகமாக நின்று சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். கோயிலில் கொடிமரம் தவிர வேறெந்த சந்நிதியிலும் தரையில் விழுந்து வணங்கக் கூடாது.

சிவபெருமானை எட்டு வகையான விரதங்கள்

சிவபெருமானை எட்டு வகையான விரதங்கள் இருந்து வழிபட்டு அவரது பரிபூரணஅருளைப்பெறலாம்.
1. சோமவார விரதம் - திங்கள் கிழமைகளில் இருப்பது
2. உமா மகேஸ்வர விரதம் - கார்த்திகை பவுர்ணமியில் இருப்பது
3. திருவாதிரை விரதம் - மார்கழி மாதத்தில் வருவது
4. சிவராத்திரி விரதம் - மாசி மாதம் அமாவாசை தினத்தில் வருவது
5. கல்யாண விரதம் - பங்குனி உத்திரத்தன்று கடைபிடிப்பது
6. பாசுபத விரதம் - தைப்பூச தினத்தில் வருவது
7. அஷ்டமி விரதம் - வைகாசி மாதத்தில பூர்வபட்ச அஷ்டமி தினத்தில் அனுஷ்டிப்பது
8. கேதார கவுரி விரதம் - ஐப்பசி அமாவாசையை ஒட்டி (தீபாவளி தினத்தில்) இருக்கும் விரதம்.

சைவ சமய விரதங்கள் (நோன்புகள்) மனம் ஐம்பொறிகளின் தன்மைக்கு ஆட்பட்டு அலைபாயாது, பொய்யான ஆகைகளுக்கு ஆட்படாமல் மெய்ஞான வழியில் தங்களது நினைவை செலுத்த, நெறி பிறழாத நினைவால் இறைவனை ஒரு நிலைப்படுத்திய வழக்காக சில நியமங்களைக் கைக் கொள்ள வேண்டியுள்ளது.

முதலாவது மனக்கட்டுப்பாட்டுடன் உணவுக் காட்டுப்பாட்டினையும் கடைப்பிடித்திட வேண்டும். உணவின் தன்மைக் கேற்ற நமது சிந்தனைகள் மென்மை, கடினம் என்ற நிலையைப் பாதிப்பதால் நமது முன்னோர்கள் விரதங்களை கடைப்பிடித்தனர் - உணவுகட்டுப்பாடு ஒழுக்கத்துடன். சிவ விரதங்களாக கையாளப்படும் நமது விரதங்கள் ஒன்பது ஆகும்.அவையாவின,

1)சோமவாரவிரதம்,
2)திருவாதிரை விரதம்,
3)உமா மகேஸ்வரி விரதம்,
4)சிவசாத்திரி விரதம்,
5)கேதார விரதம்,
6{கல்யாண சுந்தர விரதம்,
7)சூல விரதம்,
8)இடப விரதம்,
9)பிரதோஷ விரதம்,
10) கந்த சஷ்டி விரதம் ஆகும்.


சோம வார விரதம்:
சோம வார விரதம் - கார்த்திகை மாதம் முதல் சோம வாரத்திலிருந்து
இருத்தல் வேண்டும் சோமா வாரத்தில் உண்ணா நோன்பு மேற்கொள்வது முறை இவ்விரதம் வாழ்நாள் முழுமையோ, ஓராண்டு, மூன்று ஆண்டுகள், 12 ஆண்டுகள் என்ற கணக்கில் அனுஷ்டிப்பதே முறை.
திருவாதிரை விரதம்:

மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்று இருவேளை உண்ணா நோன்பும். இரவு பால், பழத்துடன் முடித்துக் கொள்வது.

 உமா மகேஸ்வரி விரதம்:
இவ்விரதம் கார்த்திகை பௌர்ணமியில் இருக்க வேண்டும். இந்நாளில் ஒரு பொழுது பகல் உணவு அருந்தலாம். இரவு பலகாரம்,பழம் சாப்பிடலாம். 


 சிவசாத்திரி விரதம்:
இவ்விரதம் மாசி கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று இருத்தல் வேண்டும். அன்று உண்ணா நோன்பு மேற்கொள்வது சிறப்பு. நான்கு ஜாமங்களும் உறங்காது சிவபூஜை செய்வது மிக நல்லது.

 கேதார விரதம்:
 இந்த விரதம் புரட்டாசி மாதம் சுக்கிலபட்ச அட்டமி முதல் 21 நாட்களும் கிருஷ்ணபட்ச பாதமை முதல் 14 நாட்களும் கிருஷ்ணபட்சத்து அட்டமி முதல் 7 நாட்களும் கிருஷ்ணபட்சத்து சதுர்த்தியன்றும் இருத்தல் வழக்கம். இந்த விரதம் அனுஷ்டிக்கும் போது இருபத்தொரு நூலிழைகளினால் காப்புகட்டிக் கொள்வது முறை ஆண்கள் வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டுதல் வேண்டும். இவ்விரதம் நிகழ்முறை முதல் 20 நாட்கள் ஒருபொழுது மட்டும் உணவு கொள்ள வேண்டும். இறுதி நாளன்று உண்ணாவிரதம் இருத்தல் முறை.
 கல்யாண சுந்தர விரதம்:
இவ்விரதம் பங்குனி உத்திரத்தன்று மேற்கொள்ளப்படும் ஒரு பொழுது மட்டும் உணவு கொள்ளலாம் இரவில் பால் அருந்தலாம்.

 சூல விரதம்::  இந்த விரதம் தை மாசம் அமாவாசையன்று இருக்க வேண்டும். ஒரு பொழுது மட்டும் பகல் உணவு உட்கொள்ளலாம். இரவு உண்ணா நோன்பு இருக்க வேண்டும்.
 இடப விரதம்:
இவ்விரதம் சுக்கிலபட்சம் அஷ்டமியன்று மேற்கொள்ள வேண்டும். ஒரு பொழுது பகல் உணவு மட்டும் உண்ணலாம்.
பிரதோஷ விரதம்
:

 இவ்விரதம் சுக்கிலபட்ச திரியோதசி, கிருஷ்ணபட்ச திரியோசி ஐப்பசி அல்லது கார்த்திகை அல்லது வைகாசி மாதங்களில் சனி பிரதோஷம் முதல் மேற்கொள்ள வேண்டும். பகலில் உணவு உட்கொள்ளக்கூடாது. பிரதோஷம் கழிந்த பின் உணவு அருந்தலாம்.

அட்சய திருதி

ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு பிறகு வரும் திருதியை திதி சிறப்பு வாய்ந்தது. சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் திருதியைதான் அட்சய திருதியை எனப்படுகிறது. இந்த ஆண்டில் அட்சய திருதி மே  மாதம் 5 , 6 ம்  தேதி வருகிறது. அட்சயம் என்றால் வளருதல், அள்ள அள்ளக் குறையாமல் வளர்ந்துகொண்டே இருத்தல். அட்சய பாத்திரம் என்பதுபோல. அன்றைய தினம் செய்கிற எந்த காரியமும் வளர்ந்துகொண்டே இருக்கும், வெற்றிகரமாக நடந்து முடியும்

கணபதி ஹோமத்தின் முக்கியத்துவம்

ஹோமங்களில் பல வகை உண்டு. அதில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு பலன் இருக்கிறது. பொதுவாக ஹோமங்களை விளை நிலங்களில்தான் நடத்த வேண்டும். அப்படித்தான் பழங்காலத்தில் நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக செங்கரும்பு, செவ்வாழை விளைந்த நிலத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி, பசுவைக் கொண்டு சுத்தப்படுத்தி (அதாவது பசுவை வலம் வரச் செய்தல்), அதன் பின்னர் யாக குண்டம் அமைத்து ஹோமம் செய்வதுதான் முறையானது. தற்போது ...

ருத்ராட்சம்

இந்துக்களில் சைவம், வைணவம் என்று கூறுவது போல், கிரகங் களிலும் சைவம், வைணவம் என் றெல்லாம் உண்டு.
சூரியன், சனி, செவ்வாய், குரு ஆகிய வை சிவ கோத்திரம். சனியை இரண் டு பக்கத்திலும் வைக்கலாம்.

செவ்வாய், குரு, சூரியன் ஆகிய மூன் றும் சைவக் கிரகங்கள், சைவக் கட வுள்கள் ஆகும். செவ்வாய் – முருகன், குரு – தட்சிணாமூர்த்தி, சூரியன் சிவனுக்குரியவர்கள். இந்த ஆதிக்கம் உடையவர்கள் எல்லாம் ருத்ராட்சம்    அணிந்தால் பிரம்மாண்டமாக முன்னுக்கு வருவார்கள்.

அதிலேயும் ருத்ராட்சத்திலும் ஒன்று முதல் பல முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் உள் ளன. ஆனால் எல்லா முக ருத்ராட்சங்களும் பலன் அளிக்கக்கூடிய ருத்ராட்சங்களே. அதில் எந்த மாறுபாடும் இல்லை.
ஒவ்வொரு முகத்திற்கும் ஏற்றபடி அதில் மருத்துவ குணங்களும், ஆன்மீக குணங்களும் உள்ளன. 

ஏகமுக ருத்ராட்சம்:

ஜோதிட சாஸ்த்திரத்தின் படி ஏகமுக ருத்ராட்சம் சூரியனின் அதிர்வை பெறுகின்றது. இது இதய நோயை குணப்படுத்தும். வலது கண், தலைவலியைப் போக்கும். தோல் நோயை நீக்கும். சுவாச கோளாறுகளை நீக்கும்.இந்த நோய் உள்ளவர்களோ அல்லது சூரியனின் ஆதிக்கம் குறைந்தவர்களோ ஏகமுக ருத்ராட்சத்தை அணியலாம்.

2 முக ருத்ராட்சம்:

சந்திரனின் ஆதிக்கம் உள்ளது.
சுவாச கோளாறுகள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள், இடது கண் பதிப்பு உடையவர்கள், நுரையீரல் கோளாறு உடையவர்கள் குடல் புண் உள்ளவர்கள், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இதை அணியலாம்.

3 முக ருத்ராட்சம்:

ரத்த சம்பந்தமான நோய்கள் உடையவர்கள் இதை அணியலாம். கழுத்து, காது நோய் உடையவர்கள் ரத்த இறக்கம் (B.P.) குடற்புண், தீராத காயங்கள், எலும்பு சம்பந்தமான வியாதி உடையவர்கள் இதை அணியலாம். செவ்வாயின் அதிர்வுகள் 3 முக ருத்ராட்சதிற்கு உள்ளது.

 4முக ருத்ராட்சம்:

கணிதம், எழுத்தும், அறிவும் போன்றவற்றை 4 முக ருத்ராட்சம் ஆதிக்கம் செலுத்துகின்றது. பிஸினஸ் செய்பவர்களுக்கு மிக நல்லது. வாத நோய்கள், ஜுரம், மனம் சம்பந்தப்பட்டவியாதிகளுக்கு இது நல்லது. புதன் அதிர்வுகளை கொண்டது.

5முக ருத்ராட்சம்:

கல்லீரல், கணையம், தொண்டை, பாதம், எலும்பு மஜ்ஜை போன்ற தொடர்பான வியாதிகளை போக்க வல்லது. பணப்புழக்கம், மதம் தொடர்பான விஷயங்கள், உலகாயுத விஷயங்களில் வெற்றி போன்றவற்றைத் தரவல்லது. கடுமையான ஏழ்மையிலிருந்து காப்பாற்றும் தன்மை உடையது. குரு கிரக அதிர்வுகளை கொண்டது.

6முக ருத்ராட்சம்:

ஜனனேந்திரிய உறுப்புகளை நோயை நீக்க வல்லது. வாய்ப்புண், தொண்டை எரிச்சல், இசையில் நாட்டத்தை ஏற்படுத்தும். குடும்ப வாழ்க்கையில் பரஸ்பர அன்பைத் தரும்.

7 முக ருத்ராட்சம்:

மரண பயத்தைப் போக்கும். ஆயுளை நீடிக்கும். ஜலதோசத்தைப் போக்கும். இடுப்புக்கு கீழே உள்ள பகுதிகளில் நோயை நீக்கும். உடலில் உள்ள விசத் தன்மையை நீக்கும்.  மதுவிற்கு அடிமையானவர்களை விடுதலை தரும். கவலையைப் போக்கும். நம்பிக்கையையும், வெற்றியையும் தரும். சனியின் அதிர்வுகள் படைத்தது.

8 முக ருத்ராட்சம்:

8 முக ருத்ராட்சத்தின் கிரக தேவதை ராகு. சனிக்கு உடைய பலனே இதற்கு எனலாம். திடீர் பிரச்சனைகள், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், கால், சருமம், கண், சிறுநீரக பிரச்சனைகள், ரத்தத்தில் விஷம் சேருதல் போன்றவை 8 முக ருத்ராட்சம் அணிவதால் நீங்கும்.

9 முக ருத்ராட்சம்:

இதன் கிரக அதி தேவதை கிரகமான கேது. நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் கண், வயது சம்பந்தப்பட்ட கோளாறுகள் எல்லாம் 9 முக ருத்ராட்சம் நீக்கும் என சாஸ்த்திரங்கள் கூறுகின்றன.

10 முக ருத்ராட்சம்:

இதற்கு தனியாக அதிதேவதை இல்லை. இது எல்லா கிரகங்களையும் கட்டுப்படுதும் சக்தி படைத்தது. எந்த தீய கிரகத்தின் தன்மையையும் இது நீக்கும்.

11 முக ருத்ராட்சம்:

தியானம் செய்பவர்களுக்கு இது உதவும். யோக, தியான, ஆன்மிக வாழ்க்கையில் உள்ள சிக்கல்களை இது நீக்கும்.

12 முக ருத்ராட்சம்:

இதன் அதிதேவதை சூரியன். சூரியன் தீய அதிர்வுகளால் ஏற்படும் தீமையை இது நீக்கும்.

13 முக ருத்ராட்சம்:

6 முக ருத்ராட்சத்திற்குள்ள பலன்களே தான் இதற்கும், தியானம், ஆன்மிக வாழ்க்கை உயர்வுக்கு இது உதவும்.

14 முக ருத்ராட்சம்:

இதுவும் 7 முக ருத்ராட்சத்தைப் போல பலன் தரும். சனியின் தீய பலன்களை இது மாற்றும்.

 ருத்ராட்சத்தை எப்படி வேண்டுமானாலும் அணியலாம். ஆனால் ருத்ராட்சத்தை தனியாக அணியாமல் ஏதாவது ஒரு உலோகத்துடன் சேர்த்து அணிந்தால் அது இல்லற வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நல்லது.
 
அதற்காகத்தான் ருத்ராட்சத்தின் இரு பக்கத்திலும் பூன் போன்று செய்து அதனை நூலில் கட்டித் தொங்க விடுகிறார்கள்.

ருத்ராட்சத்திற்கு இயல்பாகவே மருத்துவ குணங்கள் நிறைய உண்டு. ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம்.
ஆனால், ருத்ராட்சத்தை தங்கம் அல்லது வெள்ளியில் கட்டி அணி யும் போது, மந்த்ரா உபதேசம் பெற்று, குரு நாதர் கையில் இருந்து வாங்கி அணியும் போதெல்லாம் மிகவும் நேமமிஷ்டையுடன் இருக்க வேண்டும். அதாவது தீட்சையாக தரும் ருத்ராட்சத்தை பெற்றுக் கொண்டு தவறான செயல்கள், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக் கூடாது.

ஆண், பெண் என இருபாலருமே ருத்ராட்சத்தை அணியலாம். பெண் களுக்கு இருக்கக்கூடிய இயல்பான இடர்பாடான நாட்களில் கூட அணிந்திருக்கலாம். அது ஒன்று ம் குரோதம் கிடையாது.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத் தக்கூடிய சக்தியும், மன அழுத்த த்தை குறைக்கும் சக்தியும் ருத் ராட்சத்திற்கு உண்டு. பக்கவாத த்திற்கு முந்தைய காலகட்டத்தில் ருத்ராட்ச மாலையை உடம்பு முழுவதும் தேய்த்துவிடும் போது அது சரியாகிறது
சீரான இரத்த ஓட்டங்கள், கால் மறத்துப் போகாமல் இருப்பதற்கு போன்றவற்றிற்கும் ருத்ராட்சம் பயன்படும். ருத்ராட்சத்தின் சிறு துளி யை இழைத்து உள்ளுக்கு சாப்பிடும் போது நோய் எதிர்ப்புச் சக்தியெ ல்லாம் அதிகரிக்கிறது. உடலிற்கு ஒரு மினுமினுப்பைக் கொடுக்கு ம். இதுபோன்ற மருத்துவக் குணங்கள் ருத்ராட்சத்திற்கு உண்டு.       

ருத்ராட்சத்திற்கு தீட்டு உண்டா?

ஸூதகே மிருதகே சைவ ருத்ராட்சம் நது தாரயேத் என்பது சாஸ்திர வாக்கியம். அதாவது பிறப்பு, இறப்பு தீட்டுக்களின் போது ருத்ராட்சம் அணியக்கூடாது என்பது பொருள்.

அம்பாளுக்கு சாத்திய பட்டுப்புடவையை, கோயிலில் விலைக்கு வாங்கி அணிந்து கொள்ளலாமா?

சுவாமிக்கு சாத்த வேண்டும் என பக்தர்கள் காணிக்கையாக வஸ்திரம் வாங்கிக் கொடுக்கிறார்கள். இதுவே கூடுதலாக சேர்ந்து விடுகிற பொழுது
வீணடிக்காமலிருக்க ஏலத்தில் விடுகிறார்கள். இதன் மூலம் மூன்று வழிகளில் பயன் கிடைக்கிறது. பக்தர்களின் வஸ்திர காணிக்கை நிறைவேறுகிறது. ஏலத்தின் மூலம் கோயில் நிர்வாகத்திற்கு வருவாய் கிடைக்கிறது. வஸ்திரங்கள் வீணாகாமல் மற்றவர்கள் உபயோகிக்கவும் முடிகிறது. சுவாமிக்குப் படைக்கப் படும் நிவேதன பிரசாதத்தை உண்பது போல, சுவாமிக்கென பக்தியோடு அணிவிக்கும் பட்டுப்புடவை உள்ளிட்ட எந்த வஸ்திரங்களையும் உபயோகிக்கலாம்.

நல்லதை செய்ய நேரம் காலம் எதற்கு?

இறைவனை உணர்வதன் மூலமும், காண்பதன் மூலமும் அல்லது இரண்டின் மூலமாகவும் தெய்வ அருளைப் பெறலாம்.  மகத்தான ஓர் முடிவைக் காணும் போது, அங்கே மகத்தான செயலின் ஆரம்பமும் ஏற்பட போகிறது என்பதை உறுதியாக நம்பு. துன்பம் நிறைந்த அழிவு மனதை அச்சுறுத்தும் போது, ஒரு பெரிய மகத்தான செயல் நிச்சயமாக வரவிருக்கிறது என ஆறுதல் கொள்ள வேண்டும்.

நினைப்பில் உண்மையும், சொல்லில் உண்மையும் இருக்க வேண்டும். பொய் உனது ஜீவனின் இயல்பானதல்ல. அது வெளியிலிருந்து வருகிறது என்பதை உணரும் போது அதை மறுத்து ஒதுக்குவது எளிதாகும். உலகில் உள்ள எவற்றின் மீதும் நமக்கு ஆசை தேவையில்லை, குறிப்பாக செல்வம், வறுமை, மகிழ்ச்சி, துன்பம், வாழ்வு, சாவு, பெருமை, சிறுமை, அறம், நண்பன், மனைவி, குழந்தைகள், நாடு, நமது வேலை, சொர்க்கம், பூமி இவற்றில் உள்ள அல்லது இவற்றைக் கடந்த எதிலும் நமக்கு ஆசை வேண்டியதில்லை.

கடவுளை மட்டும் நேசிப்பதால், அவரும் பிறரை நேசிக்காமல் உன்னை மட்டும் நேசிக்க வேண்டும் என்று ஆசைப்படலாம். ஆனால், இது நேர்மையற்ற, இயற்கைக்குப் புறம்பான ஆசையாகும். காரணம் கடவுள் ஒருவர் தான், நீயோ பலரில் ஒருவன். இரவில் கண் விழிப்பது சரியான அணுகு முறையல்ல, தேவையான உறக்கத்தைத் தடுத்தால் உடம்பைத் தாமசமாக்கி, விழிப்பு நேரத்தில் செயல் திறனை குறைத்து தடுமாற்றத்தை ஏற்படுத்தும்.

நீ எதை வேண்டுகிறாய் என்பதைத் தூர வைத்துவிட்டு இறைவன் எதை வேண்டுகிறான் என்பதை நீ அறிய விரும்ப வேண்டும். உள்ளம், வேக உணர்ச்சிகள், வழக்கமான கருத்துக்கள் ஆகியவை சரியானது என்று நம்பக்கூடாது. கீதையில் அர்ஜூனன் செய்தது போல அவற்றைத் தாண்டிச் சென்று, சரியானவை, தேவையானவை என்று இறைவன் நிர்ணயித்துஇருப்பதைப் புரிந்து கொள்ள ஆசைப்பட வேண்டும்.

ஆன்மிகத்தில் ஈடுபடுபவரின் உயிரையும், உடலையும் காமச் செயலில் இருந்து காக்க தவறினால், இறைவன் அருள் கிடைக்காமலும், ஆன்மிக இன்பம் பெற வழியில்லாமலும் போய்விடும். எனவே வாழ்க்கையில் தூய்மையான இன்பத்தை அறியும் போது இறைவனையும் அறிய வாய்ப்பு கிடைக்கும். -கேட்கிறார் அரவிந்தர்.

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது ஏன்?

அவசரமாக ஒரு செயலைச் செய்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுகிற நேரத்தில், புதன்கிழமை அமைந்து விட்டால் வேறு எதையும் பார்க்காமல் செய்து விடலாம். பொன்னைக் கூட(தங்கம்) விலை கொடுத்து வாங்கி விடலாம். நமக்குப் பொருத்தமாக புதன் கிடைப்பது அரிது என்பது இதன் பொருள்

கோயில் சொத்தில் கை வச்சா என்னாகும்?

ராமராஜ்யம் அயோத்தியில் நடந்து கொண்டிருந்த போது, மக்கள் யாராவது குறைகளைச் சொல்ல வருகிறார்களா என காவலர்களிடம் அக்கறையுடன் கேட்பார். இல்லை என்றே அவர்கள் பதிலளிப்பர். ஒருநாள் ஒரு நாய் ரத்தக்காயத்துடன் ஓடி வந்து ராமனைப் பார்க்க வேண்டும் என்றது. நாயை உள்ளே அனுமதிக்கச் சொன்னார் ராமர்.  ராமராஜ்யத்தில் எல்லா உயிர்களும் சமமே. ராமா! உன் ஆட்சியில் எனக்கு ஏற்பட்ட அவலத்தைப் பார்த்தாயா! ஒரு சன்னியாசி, சாப்பிட்டுக் கொண்டிருந்த என்னை கல்லால் அடித்து  விட்டான். காரணமே இல்லை, என்றது.  சன்னியாசி இழுத்து வரப்பட்டார். ஏன் நாயை அடித்தீர்? அதுவா ராமா! நான் பிச்சை கிடைத்தால் மட்டுமே சாப்பிடும் பழக்கமுள்ளவன். இன்று பிச்சை கிடைக்கவில்லை. நான் பட்டினி கிடக்கிறேன். 

இந்த நாய், என் முன்னால் தனக்கு கிடைத்ததை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. இந்த நாய்க்கு கிடைத்தது எனக்கு கிடைக்கவில்லையே என்ற  எரிச்சலில் அடித்தேன்,. கொடியவனே! வாயில்லா ஜீவனை வதைத்திருக்கிறாயே! உனக்கு மரணதண்டனை,. அப்போது நாய் சொன்னது. ராமா! மரணதண்டனை போதாது. அதை விட கொடிய தண்டனை தர வேண்டும்,. ராமன் ஆச்சரியப்பட்டார். மரணத்தை விட கொடியது எது? என்றார்.  நான் சென்ற பிறவியில் ஒரு கோயில் அறங்காவலராக இருந்து, அங்குள்ள சொத்துக்களைச் சாப்பிட்டேன். அதனால் இப்போது நாயாகப் பிறந்து, குப்பையில் கொட்டுவதைச் சாப்பிடுகிறேன். கல்லடி வாங்குகிறேன். இவரையும் ஒரு கோயில் அறங்காவலரா போடுங்க! இந்த ஆள் நிச்சயம் கோயில் பணத்தை தின்பான். என்னை மாதிரி நாயா பிறந்து கல்லடி படட்டும், என்றது நாய்.