Saturday, April 25, 2015

உங்க வீட்டில் மகாலட்சுமி தங்கணுமா

பாற்கடலில் விஷ்ணுவைச் சந்திக்க நாரதர் வந்தார். அருகில் இருந்த லட்சுமியிடம், தாயே! நீ எங்கெல்லாம்  குடியிருக்க விரும்புவாய்? என்று கேட்டார்,நாரதரே! தினமும் விளக்கேற்றும் வீடு, துளசிமாடம், சங்கு, சாளக்கிராமம், தாமரை மலர், தானியக்குவியல், அன்னதானம் செய்யும் இடம், பசு கொட்டில், தயாள குணம் கொண்டவர், இனிமையாகப் பேசுபவர், சுறுசுறுப்பு மிக்கவர், தற்பெருமை இல்லாதவர், சத்திய வழி நடப்பவர், எண்ணம், சொல், செயல் மூன்றாலும் துõய்மை காப்பவர், உணவின் போது ஈரக்காலுடன் அமர்பவர், ஈரக்காலை துடைத்துவிட்டு துõங்கச் செல்பவர், உடல் சுத்தம் பேணுபவர், கூந்தலை எப்போதும் பின்னி முடித்த பெண்கள், கற்புக்கரசிகள் ஆகியோர் இருக்கும் இடங்களிலும் நிரந்தரமாக தங்கியிருப்பேன் என்றாள்.

ராகுகால வழிபாட்டின் பலன்!

எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றித்தருவது ராகுகால துர்கா பூஜையாகும். ராகு காலத்தில் துர்காதேவியை ராகுபகவான்வழிபடுவதால் அந்த நேரத்தில் நாம் செய்யும் வழிபாடும் விசேஷமானது. எண்ணியபடி செயல்கள் நடைபெற, தீராத நோய் தீர,சஞ்சலங்கள் அகல, மனக்கஷ்டங்கள் நீங்க, எதிரிகளின் கொட்டம் அடங்க அருள்புரிபவள் துர்காதேவி. இந்நேரத்தில் துர்க்கைக்கு நெய் விளக்கேற்றினால் மனம் கனிந்து அருள்வாள். ராகு திசை, புத்தி நடப்பவர்கள் ராகுகால துர்காதேவி வழிபாட்டினால் பலன் பெறலாம்.

செயல் தடங்கலின்றி வெற்றிகரமாக முடிய .

ஒரு செயலைத் தொடங்குகிறோம். என்ன தான் திட்டமிட்டு துவங்கினாலும் இடையில் சில தடைகள் வருகின்றன. மீண்டும் முயற்சிக்க வேண்டியிருக்கிறது. இதுபோல, தடைகள் வராமல், ஆரம்பித்த செயல் தடங்கலின்றி வெற்றிகரமாக முடிய எளிய பரிகாரம் இருக்கிறது. அதுதான் மகாகணபதி சகஸ்ரநாம ஸ்தோத்திரம் சொல்வது. அதாவது, விநாயகரை அவரது ஆயிரம் பெயர்கள் சொல்லி வணங்குவது. ஒரு செயலைத் துவங்குவதற்கு 48 நாட்கள் முன்னதாக, இந்த பாராயணத்தை சொல்ல ஆரம்பிக்கலாம். தினமும் அதிகாலை வேளையில் விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து, இந்த ஸ்தோத்திரத்தைச் சொன்னால் பலன் இரட்டிப்பாக இருக்கும். இந்த பாராயணம் செய்ய வயது வரம்பு கிடையாது. ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.

காயத்ரி மந்திரத்தை அர்த்தம் தெரியாமல் சொல்லலாமா

அனைவரும் பேதமில்லாமல் காயத்ரி மந்திரம் ஜெபிக்கலாம் என சிவானந்தர் கூறியுள்ளார். காயத்ரி என்பதற்கு ஜபிப்பவனைக் காப்பது என்பது பொருள். ஓம் பூர் புவஸ் ஸ்வ:     தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி   த்யோ யோ ந: ப்ரசோதயாத்பொருள்: உலகைப் படைத்தவரே! வணங்கத்  தக்கவரே! அறிவு வடிவானவரே! ஜோதியாக இருப்பவரே! பாவம் போக்குபவரே! அறியாமை அகற்றுபவரே! மேலானவரே!உம்மை தியானிக்கிறோம் பொருளை உணர்ந்து ஜெபியுங்கள்.

சக்தி மிக்க ஸ்ரீசக்ரம்

அம்பிகையை யந்திர முறையில் ஸ்ரீ சக்ரம் வரைந்து வழிபடுவது சிறப்பு. அம்பாளின் சூட்சும வடிவமான ஸ்ரீ சக்ரத்தை, அம்பிகையின் முன்போ அல்லது சிலையின் அடியிலோ பிரதிஷ்டை செய்வர்."ஸ்ரீ சக்ரம்' என்பதற்கு "பெருமைமிகு சக்கரம்' என்று பொருள். ஸ்ரீசக்ரத்தில் பராசக்தியின் சக்தி மட்டுமல்ல, 64 கோடி தேவதைகளும் இருப்பதாக "தேவி புஜங்கம்' என்னும் நூல் கூறுகிறது. முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் மட்டுமே சக்கர வழிபாடு செய்யமுடியும். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில், கோமதி அம்மன் சந்நிதி முன்புள்ள ஸ்ரீசக்ரம், திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியின் காதிலுள்ள தோடு வடிவிலான ஸ்ரீசக்ரம் ஆகியவை மிகவும் சக்தி வாய்ந்தவை.

Monday, April 20, 2015

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதன் பொருள் என்ன?

கோபுரம் பாத யுகளம் (கடவுளின் திருவடி) என்கிறது ஆகமம். கடவுளின் திருவடியை அடையும் வகையில், மனிதன் தனது செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற அரிய தத்துவத்தை வலியுறுத்துகிறது. இதனால் தான் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும்படியாக கோபுரத்தை உயரமாக அமைத்தார்கள்.

நாளெல்லாம் நன்மை தரும் வில்வ மரம்!

வில்வ மரத்தில் லட்சுமி வாசம் செய்வதாக அஷ்டோத்திரமந்திரம் கூறுகிறது. இதற்குஸ்ரீ விருட்சம் என்றும் பெயருண்டு. வில்வ மரப்பலகையில் யந்திரம் வரைந்து லட்சுமியை வழிபடுவது சிறந்த பலன் தரும். வில்வ மரத்தை வீட்டில் வளர்த்தால் அஸ்வமேத யாகம் செய்த புண்ணிய உண்டாகும். வில்வ கன்றுகளை பிறருக்கு  தானம் அளிப்பதும் புனிதமானதாகும். வீட்டின் முன் புறபகுதியில் வில்வ மரத்தை வளர்ப்பது நல்லது. காலையில் எழுந்ததும் இதனை தரிசித்தால் நாளெல்லாம் நல்லதாக இருக்கும்.

அட்சய திரிதியை வழிபடும் முறை!

அட்சய என்ற சொல்லுக்குகுறைவில்லாதது என்று பொருள். இந்நாளில் லட்சுமி, குபேரரை வழிபட வேண்டும். விளக்கிற்கு சந்தனம், குங்குமம் இட்டு பூக்களால் அலங்கரித்து ஐந்து முகங்களையும் ஏற்ற வேண்டும். பாற்கடலில் அவதரித்தவளே! தாமரையில் வாசம் செய்பவளே! செல்வ வளத்தை தந்தருள்வாயாக! என்று வேண்டிக் கொள்ள வேண்டும். ஐந்து முகம் ஏற்றுவதன் மூலம் செல்வச்செழிப்புடன், அன்பு, மன உறுதி, நிதானம், சகிப்புத்தன்மை, சமயோசிதம் ஆகிய குணங்கள் வளரும். நகை, மஞ்சள், அரிசி, பருப்பு, உப்பு, சர்க்கரைஉள்ளிட்டமளிகைப்பொருட்கள், புத்தாடை வாங்கினால் வளமான வாழ்வு உண்டாகும்.

Tuesday, April 14, 2015

தமிழ் புத்தாண்டில் விஷு கனி தரிசனம்!

தமிழ் புத்தாண்டின் முதல் நாள் அதிகாலை விஷு கனி தரிசித்தால் ஆண்டு முழுவதும் ஆனந்தமாக அமையும். பங்குனி கடைசி நாள் இரவு சுவாமி படங்களுக்கு பூச்சூட்டி அலங்கரிக்க வேண்டும். குருவாயூரப்பன் படம் இருப்பது சிறப்பு. ஒரு மேஜையில் முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்து இருபுறமும் குத்துவிளக்கு வைப்பார்கள். ஒரு தாம்பாளத்தில் பூ, பழம், வெற்றிலை பாக்கு, கிண்ணங்களில் அரிசி, பருப்பு, நகைகள் வைப்பர். இன்னொரு தாம்பாளத்தில் பழ வகைகள், வெள்ளரி, கொன்றைப்பூ, தென்னம்பூ வைக்க வேண்டும். மறுநாள் அதிகாலை வீட்டின் மூத்தவர் எழுந்து மேஜையில் உள்ள பொருட்களை பார்த்தபிறகு நீராடி குத்துவிளக்கை ஏற்ற வேண்டும். பின் வீட்டில் உள்ளவர்களை வயதுப்படி ஒவ்வொருவராக கண் மூடி வரச் செய்து, மேஜை முன் கண் திறந்து காணச் செய்ய வேண்டும். இதையே விஷு கனி தரிசனம் என்பர். எல்லாரும் நீராடிய பின் புத்தாடையும், காசும் கொடுக்க வேண்டும். இதற்கு கை நீட்டம் என்று பெயர். அன்று மதிய உணவில் வெல்லம், மாங்காய் சேர்த்த வேப்பம்பூ பச்சடி இருக்க வேண்டும். சகல வகை பாயாசமும் செய்யலாம். டிவி பார்ப்பதைத் தவிர்த்து குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று வர வேண்டும்.

தமிழ் புத்தாண்டு வழிபாடும் சிறப்பும்!

தமிழ் ஆண்டுகள் அறுபதில் 29வது ஆண்டு மன்மத ஆண்டு. நவக்கிரகங்களில் இந்த ஆண்டுக்குரிய ராஜாவாக சனியும், மந்திரியாக செவ்வாயும் ஆட்சி செய்கின்றனர். இவ்வாண்டு கோயில் வழிபாடு சிறப்பாக நடக்கும். மக்கள் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொள்வர். மழை வளம் சிறக்கும். எல்லா உயிர்களுக்கும் குறைவில்லாத நன்மை உண்டாகும் என பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது. 

மன்மத ஆண்டுக்கு ஈடான மற்ற ஆண்டுகள்
ஆங்கிலம்-2015-2016
கொல்லம்-1190-1191
பசலி-1424-1425
சாலிவாகனம்(தெலுங்கு)-1936-1937
திருவள்ளுவர்-2046-2047
ஜகத்குரு சங்கராச்சாரியார்-2086
ஸ்ரீ மகாவீரர்(ஜைனர்)- 2542
ஸ்ரீ புத்தர் சகாப்தம்-2558-2559
கலியப்தம்-5116

புத்தாண்டு வழிபாடு: மன்மத ஆண்டின் ராஜா சனீஸ்வரர். இவருக்குரிய தெய்வமான சாஸ்தாவே இந்த ஆண்டின் தெய்வம். சபரிமலை ஐயப்பன், அய்யனார் ஆகியோரை வணங்கினால் தொடங்கும் செயல் எளிதாக நிறைவேறும். புத்தாண்டின் ராஜாவாக சனீஸ்வரர் இருப்பதால், இந்த ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் விரதமிருந்து பெருமாளை வணங்கினால் சிரமங்களில் இருந்து விடுபடலாம். தினமும் ஓம் ஸ்ரீ வெங்கடேசாய நமஹ என்று 108 முறை ஜெபிக்கலாம்.

Saturday, April 11, 2015

சத்தியம், தர்மம் இரண்டில் எது வலிமையானது?

இரண்டும் சமமானது தான். ஆனால், சத்தியத்தைக் கடைபிடிப்பதும் ஒரு தர்மம் தான். பொய் பேசாததையே தர்மமாகக் கடைபிடித்த சத்தியவிரதன், அரிச்சந்திரன் போன்றோர்  துன்பம் அனுபவித்தே வெற்றி பெற்றனர். தர்மம் சத்தியத்தில் அடங்கி விடுவதால் சத்தியமே வலிமையானது.

ராகு பகவான் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?

ராகு மட்டுமில்லாமல் நவக்கிரகங்களையும் வழிபடலாம். கோயில்களில் நவக்கிரக சந்நிதியை வழிபடத் தானே செய்கிறோம். அசுரனாக இருந்தாலும், இறைவனை வழிபட்டே ராகுவும் கிரகபதவியை அடைந்தார். அந்த வகையில் அவரும் இறையடியார் தான்.

கும்பாபிஷேகம் : சில தகவல்கள் ...!

கும்பாபிஷேகம் என்பது கோயில் நிர்மாணம் தொடங்கி, விமான கலசம், மூலஸ்தான விக்ரஹம் உள்ளிட்டவற்றிற்கு புனிதநீர் கலசாபிஷேகம் செய்யும் பெரிய நிகழ்வாகும். சிவாகமங்களின் அடிப்படையில் சிற்பம், ஜோதிடம் முதலியவற்றில் தேர்ச்சி, மந்திரங்களை உச்சரித்தல், விக்ரஹப் பிரதிஷ்டை, மருந்து சாத்துதல், யாகசாலை அமைத்து அங்கல பிரமாணம் பிசகாமல், குண்டம் அமைத்து அர்ச்சகர்களைக் கொண்டு யாகம் செய்தல் என எல்லா விஷயங்களிலும் தேர்ச்சி மிக்க ஒருவரால் தான், கும்பாபிஷேகத்தை நிர்வாகம் செய்ய முடியும். இப்படிப்பட்ட கும்பாபிஷேக வல்லுநர்களையே சர்வசாதகம் என அழைப்பர்.

கும்பாபிஷேகத்திற்கு தேவைப்படும் பொருள்கள்:

மஞ்சள் பொடி
தேங்காய்
பழம்
வெற்றிலை
சுருள்பாக்கு
பூ, சூடம்
சந்தனம்
விபூதி
குங்குமம்
ஊதுபத்தி
சாம்பராணி
நெல்
பச்சை அரிசி
வாழை இலை
மந்தார இலை
கோதுமை
துவரை
பாசிபயிறு
கொண்டை கடலை
வெள்ளை மொச்சை
எள்ளு
உளுந்து
கொள்ளு
தட்டை
தேன்
நெல் பொறி
அருகம்புல்
கரும்பு
சத்து மாவு
அவல்
நாட்டு சர்க்கரை
கொப்பரை தேங்காய்
நெய்
நல்லெண்ணை
திரிநூல்
தீப்பெட்டி
முப்புரிநூல்
கலர்நூல்கண்டு 
கிஸ்மிஸ் 
கற்கண்டு
பேரீச்சை பழம்
நூல்கண்டு-10 நம்பர்
அச்சுவெல்லம்
வலம்புரி காய்
இடம்புரி காய்
ரோஜா மொட்டு
ஷெண்பக மொட்டு
பூலாங்கிழங்கு
சமுத்திராபச்சை
பவை நெல்
வெண் கடுகு
வெட்டிவேர்
வீளாமிச்சை வேர்
ஏலக்காய்
ஜாதிக்காய்
ஜாதிபத்திரி
பச்சை கற்பூரம்
குங்குமம் பூ
ஜவ்வாது பவுடர்
சந்தன தூள்
லவங்கம் பட்டை
சந்தன கட்டை
அகில் கட்டை
முகில் கட்டை
தேவதாரு கட்டை
கருங்கால் கட்டை
செஞ்சந்தன கட்டை
முத்துகாசு
கோஷ்டம்
ஜடாமஞ்சரி
தொன்னை கட்டு
தாமரை கிழக்கு
தாமரை மொட்டு
அல்லி மொட்டு
கோரக்கிழங்கு
குங்கிலியம்
ஜாதிலிங்கம்
கஸ்தூரி மஞ்சள்
விரலி மஞ்சள்
பட்ட மஞ்சள்
வால் மிளகு
வெள்ளை மிளகு
மிளகு
கொட்டை பாக்கு
கடுக்காய்
நாயுருவி, கிடுகு
தர்ப்பை, கருங்கால்
எருக்கங்குச்சி
பந்தல்
தோரணம்
வாழைமரம்
மேளம்
ரொக்கம் சில்லரை செலவுகள், சில்லரை செலவுகளுக்கு (ஒரு ரூபாய் காயின்கள்
தேவதா ஆனிக்கை
ப்ராம்மன ஆனிக்கை
எஜமான ஆனிக்கை
விநாயகர் பூஜை
வருண கும்ப பூஜை
புன்னியாக வாசனம்
கும்பாலங்காரம்
கும்ப வஸ்திரம்
ஸ்வர்ண புஷ்பம்
பூர்ணாகுதி பட்டு
லக்ஷ்மி ஹோமம்

ரொக்க செலவுகள்

ஆச்சார்ய சம்பாவணை
சாதகாசார்ய சம்பாவணை
சர்வதாத காச்சார்ய
ருத்வஜூக்கள்
போக்குவரத்து செலவுகள்
வெள்ளி பிரதிமை
நவக்ரஹ பிரதினை

யாகசாலை நிர்மானம்

வாழை மரம்
வாழை தோகை
கொடி
அஷ்டமங்களம்
தசாயுதம்
தம்பதி பூஜை
கோ பூஜை
கஜ பூஜை
ப்ருமச்சாரி பூஜை
படம் வரைதல்
ஸ்வாமி அலங்காரம்
சந்தன அலங்காரம்
புஷ்ப அலங்காரம்
யாகசாலை படம்
தித்வார படம்
யந்திர ஸ்தாபனம்
ரத்னந்யாகம்
தச தர்சனம்
சயனம்
நயனேள் மிளாகாய்
அஷ்டபந்தனம்
பெரிய மூங்கில், கூடை, தட்டு
சிறிய மூங்கில், கூடை, தட்டு
மீடியம் சைஸ் தட்டு
ஓலை பாய்
ஜமக்காளம்
மைக் செட்
எலெக்ட்ரிகல் வசதி
பெட்ரோமாக்ஸ் லைட்
மண் ஆலயம்
பலகை
மடக்கு
மண்வெட்டி
அரிவாள்
கத்தி
கைவிளக்கு
தீப்பெட்டி
குடை
நகரா
பேரி தவண்டை
மோது (வாஸ்து வஸ்திரம்
கலர் கோலம் பொடி 
அகல்சட்டி சிறியது, பெரியது 
நெக்கம் பாக்கு
சிறு நாகப்பூ
மட்டிபால்
நெரியசீனி பாலை பால்
பாதாம் பருப்பு
பிஸ்தா பருப்பு
முந்திரி பருப்பு
புனுகு
ஜவ்வாது
சந்தனாதி தைலம்
சாம்பிராணி தைலம்
 பன்னீர் பாட்டில்

விலை உயர்ந்த சாமான்

தங்க காப்பு
தங்க பவித்திரம்
வெள்ளி காப்பு
வெள்ளி (அ தங்க தகடு

பழவகைகள்

ஆப்பிள் 
மாம்பழம்
விளாம்பழம்
சாத்துக்குடி
ஆரஞ்சு 
திராட்சை
எலுமிச்சை
பூசணிக்காய்

புஷ்ப வகைகள்

மாலை
கதம்பம் சரம்
 பூ சரம்
 உதிரி பூ

நைவேத்யம்

மோதகம்
வடை
சர்க்கரைப் பொங்கல்
எள்ளு சாதம்
சுத்தான்னம்
சுண்டல் புளியோதரை
வெண் பொங்கல்

வஸ்திரங்கள்

வேதிகா வஸ்திரங்கள்
வேஷ்டி துண்டு
நவக்ரஹ வஸ்திரம்
ரவிக்கை துண்டுகள்
வெள்ளை 2, 80 செ.மீ.
சிவப்பு
பரிவட்ட துண்டு: பலகலர் வஸ்திரம்- 80.செ.மீ
அர்ச்சகர் வஸ்திரங்கள் (சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம், ரோஸ்
8 முழ வேஷ்டிகள்
5 முழ துண்டுகள்
சாதக: வஸ்திரங்கள்
8 முழ வேஷ்டிகள் (கலர், சிவப்பு, மஞ்சள், பச்சை, ரோஸ்
5 முழ துண்டுகள்

சுவாமி வஸ்திரங்கள்
அம்பாள் வஸ்திரங்கள்

தயார் செய்ய வேண்டியவைகள்

பசும்பால் 
பசம் தயிர்
பசுஞ்சாணம்
பசுநெய்
பசு கோமியம்
குத்துவிளக்கு
சின்னகுடம்
சொம்பு, பெரிய குடம்
பெரிய தாம்புளம்
சிறிய தாம்புளம்
புஷ்ப கூடை
மணி
அலங்கார தீபசெட்டு
பூஜை சாமான்கள்
தூபக்கால்
பஞ்ச பாத்திரம்
உத்திரிணி
நெய் டவரா
சிக்கிருவம் செட்
மனைக் அட்டை, ஆசனபலகை
சூடம் தட்டு
உக்கிலி
செங்கல்
மாவிலை
மணல்
உமி
காட்டுகட்டை
சமித்துவகைகள்
ஆல், அரசி
தர்ப்பைகயிறு
சிவப்பு கயிறு
பசுமாடு - கன்று

பயம் ஒன்றே திருத்தும்!

பாண்டுரங்கனின் பக்தரான ஏகநாதரிடம், அறிந்தோ, அறியாமலோ பாவம் செய்து விடுகிறேன். நீங்கள் மட்டும் பாவம் செய்யாமல் இருக்கிறீர்களே! எப்படி? என்று கேட்டார் ஒருபக்தர். பயம் தான் காரணம் என்றார் ஏகநாதர். கடவுளின் அருள் பெற்ற நீங்களுமா பயப்படுகிறீர்கள்? என்று ஆச்சரியப் பட்டார் பக்தர். ஆச்சரியப்பட ஏதுமில்லை. மண்ணில் பிறந்த அனைவருக்கும் மரணம் வரப் போவது உறுதி. பூமியை விட்டு ஒருநாள் நாம் செல்லத் தான் வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டால், பாவத்தைப் பற்றி யோசிக்க கூட நேரமிருக்காது. மரண பயமே மனிதனை திருத்தும், என விளக்கம் அளித்தார்.

திருமணத்தில் சொல்லப்படும் .. மாங்கல்யம் தந்துனானேன மந்திரத்தின் பொருள் தெரியுமா

திருமணத்தின் போது சொல்லப்படும் மந்திரங்களில் புகழ்மிக்கது மாங்கல்ய தாரணம். 
“மாங்கல்யம் தந்துனானேன 
மமஜீவன ஹேதுநா  
கண்டே பத்நாமி ஸுபகே 
த்வம ஜீவ சரதஸ் சதம்” என்னும் இந்த மந்திரம் தாலி கட்டும் சமயத்தில், கெட்டிமேளச் சத்தத்துடன் சொல்லப்படும். “மங்களம் நிறைந்தவளே! உன்னோடு இல்லற வாழ்வை நல்ல முறையில் நடத்த வேண்டும் என்று திருமாங்கல்யத்தை உன்னுடைய கழுத்தில் அணிவிக்கிறேன். என் வாழ்வில் ஏற்படும் சுக, துக்கங்களில் பங்கேற்கும் நீ, சுபபோகங்களுடன் நுõறாண்டு வாழ்வாயாக!” என்பது இதன் பொருள். தம்பதிகள், இந்த  மந்திரத்தின் பொருள் உணர்ந்து ஒற்றுமையாய் வாழலாமே!

தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிப்பது ஏன்

சிவன் வீற்றிருக்கும் கைலாய மலை வடக்கில் இருக்கிறது. இறந்த உயிர்கள் சென்றடையும் பிதுர்லோகம் தெற்கில் இருக்கிறது. வடக்கு நோக்கி செல்வதைச் சரண யாத்திரை, தெற்கு நோக்கி செல்வதை மரண யாத்திரை என்பர். உயிர்களைத்தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அழைக்கும் விதமாக தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

வாசலில் மஞ்சள் நீர் தெளிக்கலாமா

சிலர் கடை திறக்கும் போது வாசலில் மஞ்சள் நீர் தெளிக்கின்றனர். இதெல்லாம் பிற்காலத்தில் புகுந்து விட்ட பழக்கங்கள். மகாலட்சுமிக்கு விருப்பமான மஞ்சளை கால்படும் விதமாகக் கீழே தெளிப்பது தவறு. சாணம் மகாலட்சுமி கடாட்சத்தைப் பெற்றுத்தருவது. இதனால் சாணம் தெளிப்பதே சிறந்தது.

பேராபத்து மற்றும் தீரா நோயிலிருந்து காக்கும் சுதர்சன தரிசனம்!

எண்ணரிய பிறவிதனில் மானிடப் பிறவிதான் யாதினும் அரிது அரிது காண் என தாயுமானவர் போற்றும் இந்த மானிடப் பிறவி ஏன் சிறந்தது என்று பார்த்தால், ஆறறிவு படைத்தனால்தான் என்பர் பெரியோர். இறைவன் எங்குமுளன்; அவன் தன்னுள்ளும் உளன். அவனைக் காண வேண்டும் என்ற முதிர்ந்த அறிவு (ஞானம்) ஏற்பட, இந்த மனிதப் பிறவியில்தான் முடியுமாதலால், மனிதன் சிறந்தவனாகிறான். அப்படி இறைவனைக் காண விழையும்போது அவன் மேற்கொள்ளும் முயற்சிகள் பல; உத்திகள் அநேகம். அகண்டாகாரமான உருவமற்ற ஒரு பெரும்பொருளை தன் மனதுக்குகந்த உருவில் வழிபட்டு, முடிவில் அப்பரம்பொருளில் கலப்பதே அவன் நோக்கம். இதையே தெய்வ உபாசனை என்று கூறுகிறோம்.

இந்த வழியில் தன்னிலும் அந்நியமாக எண்ணி பாவனையினால் வழிபட்டு வரும் ஆரம்ப தசையிலே, அச் சக்தியினால் மனதுக்கு பலமும் வீரியமும் ஏறி, அந்தத் தெய்வத்தின் சக்தியைப் பிரயோகித்து, உலகோபகாரமாக தீமை, நோய், பைசாச உபாதை முதலியவற்றுக்குப் பரிகாரமும் காண்கின்றனர் சிலர். முக்திக்கு வித்தான மூர்த்தி, ஸித்திக்கும் உதவ முன்வருவதுதான் உபாஸனா மார்க்கத்தின் விந்தை. அத்தகைய ஞான மார்க்கத்தின் நடுவே, இகத்துக்கு மட்டும் விரைவில் பலனளிக்கும் நிலையில் உள்ள உபாஸனை தெய்வங்களில் ஸ்ரீசுதர்சனர் முக்கியமானவர். சூரியன் ஒன்றுதான். ஆனாலும் அதிலிருந்து வெளிப்படும் ஒளிக் கதிர்களுக்குப் பல வண்ணங்கள். அதைப் போலவே பரம்பொரும் ஒன்றுதான். ஆனாலும், தத்துவ சொரூபமான அநேக வடிவங்களில் பல குண இயல்புகள் கொண்டு விளங்குகிறது. அப்பரம்பொருளை அணுகும் முறையிலும் உபாஸனையிலும் பல துறைகள்- நெறிகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று சுதர்சன உபாஸனை.

மகாவிஷ்ணுவின் கரங்கள் ஒன்றில் காணப்படும் சக்கர ஆயுதத்தில் உறையும் தேவனே சுதர்சன எனப்படுகிறார். அந்தச் சக்கரம் சுதர்சன சக்கரம் எனப்படுகிறது. காத்தல், படைத்தல், அழித்தல் என்ற முத்தொழிலில் காக்கும் தொழில் கொண்ட விஷ்ணுவுக்கு, துஷ்ட நிக்ரஹத்துக்கு பொறுப்பு இருப்பதால் ஆயுதப்படை அவசியம். அத்தகைய ஆயுதங்களில் ராஜனாக இருப்பது சுதர்சனம். அதனால் அவரை ஹேதிராஜன் என்றும் கூறுவர். திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்கரத்துக்கு உரிய தெய்வம் என்பதால், சுதர்சனர் உக்கிர வடிவினர். வைணவர்கள் விஷ்ணுவின் சக்கர சக்தியை சக்கரத்தாழ்வார் என்று கூறுவர். சுதர்சனருக்கு சக்கரராயர் என்றும் ஒரு பெயர் உண்டு.

சுதர்சனர் பிரத்யட்சமான தெய்வம். நெறிமுறைகளுக்கு ஏற்ப தீவிரமாக உபாஸிப்பவர்களுக்கு, உக்கிர வடிவம் கொண்ட சக்கரத்தாழ்வார் மங்கலம் நல்குவதாக பல நூல்களும் கூறுகின்றன.

ஸ்நானே, தானே, ஜபாதௌச
ச்ராத்தே சைவ விஷேத:
சிந்ததீய: சக்ரபாணி: ஸர்வா
கௌக விநாசந: ஸர்வ கர்மஸு
பூர்ணம் ஸ்யாத் ஸத்யம் ஸத்யம் ஹி நாரத

என்று பிரம்மன் நாரதருக்கு, ஸ்ரீ சுதர்சனர் ஸ்நானம், தானம், தவம், ஜபம் முதலியவற்றை எடுத்துக்காட்டி, எக்காலத்திலும் த்யானிக்கத் தக்கவர் என்று ஸத்யம் செய்து கூறுகிறார் என்கிறது புராணம்.

தீவிரமாக யோக மார்க்கத்தில் வழிபடும் எந்த உபாஸனையிலும், உபாஸனைக்கு உரிய தேவனை யந்திர வடிவில் அமர்த்தி வழிபடுவது உண்டு. சுதர்சன வழிபாட்டில் யந்திர உபாஸனை மிக முக்கியமானது. சுதர்சன சக்கர யந்திர அமைப்பு இரு வகையானது. செப்புத் தகட்டில் வரி வடிவிலேயே முக்கோணம், ஷட்கோணம் போன்ற கோண அமைப்பில் பரம்பொருளின் வடிவைக் கண்டு வழிபடுவது ஒருமுறை. சக்கரத்தில் சுதர்சனின் வடிவை உள்ளடக்கிய விக்கிரக ஆராதனை மற்றொரு வகை. வார்த்தைகளே இல்லாமல் வெறும் ஒலி ஆலாபனையால் மட்டும் இனிய இசையை எழுப்பி மகிழ்வூட்டுவதைப் போல, உருவம் இல்லாத வரிவடிவ யந்திர வழிபாடு மனதுக்கு சாந்தி அளிக்கவல்லது.

சுதர்சனரின் வீரம் கிளர்ந்தெழும் வடிவத்தையும், மங்கல இயல்பு களையும், சுதர்சன வழிபாட்டில் ஏற்படும் அருள் நலன்களையும் கீழ்க்காணும் சுலோகம் வர்ணிக்கிறது:

சங்கம் சக்கரம்ச சாபம் பரதம் அஸிகதா
குந்தம் அத்யுக்ர தம்ஷ்ட்ரம் ஜ்வாலா
கேசம் த்ரிநேத்ரம்
ஜ்வல லலனனிடம் ஹார கேயூர வக்த்ரம்
வந்தே ஷட்கோண சக்ரம் சகல ரிபுஜன
ப்ராண ஸம்ஹார சக்ரம்

சுதர்சன உபாசனை வீரம் அளிக்கவல்லது. தீர்க்கவொண்ணா நோய்களும் சுதர்சனரின் கடாட்சத்தால் நீங்கப் பெறும் என்பது சுதர்சன உபாஸகர்களின் அனுபவம். போர் முனையில் வெற்றித் திருமகளின் கடாட்சத்தைப் பெறுவதையே லட்சியமாகக் கொண்டு வீர வாழ்வு வாழ்ந்த பல மன்னர்கள் சுதர்சன உபாஸிகளாக இருந்திருக்கின்றனர். சுதர்சன சதகம் எனும் நூறு பாசுரங்கள் கொண்ட அருள் மாலையை நெறி தவறாது முறைப்படிப் பாராயணம் செய்வதனால், எத்தகைய ஆபத்திலிருந்தும் விடுபெறலாம் என்பது சுதர்சன உபாஸிகளின் நம்பிக்கை. சுதர்சன உபாஸனையின் பெருமைச் சிறப்புகளை நாடறியச் செய்தவர்களாள் ஸ்ரீநிகமாந்த மகாதேசிகரின் பணி ஒப்பற்றது. ஸ்ரீ தேசிகர் சிறந்த சுதர்சன உபாஸியாக விளங்கியதுடன் ஸ்ரீ சுதர்சன அஷ்டகம் என்ற பாமாலையையும் சக்கரத்தாழ்வாருக்குச் சூட்டியிருக்கிறார். 

சுதர்சன வடிவங்கள்: சில்ப ரத்தினம் சுதர்சனரின் பல்வேறு வடிவங்களை வருணிக்கிறது. திருமாலின் சக்கரத்துக்கு உரிய தேவனை அந்நூல் சக்கர ரூபி விஷ்ணு என்று குறிப்பிடுவதுடன், சுதர்சனர் விஷ்ணுவின் அம்சமே என்பதையும் வலியுறுத்துகிறது. வேலாயுதத்தையே முருகனாக வழிபடுவதுபோல் சுதர்சனரையும் விஷ்ணுவாகவே பாவித்து வழிபடுவது மரபு. எண் கரங்கள் கொண்ட சுதர்சனரையும், பதினாறு கரங்கள் கொண்ட வடிவையும், முப்பத்திரண்டு கரங்கள் கொண்ட வடிவையும், சில்பரத்தினம் குறிப்பிடுகிறது. சாதாரணமாக கோயில்களில் சுதர்சனர் எட்டு அல்லது பதினாறு கரங்களுடன் வீறு கொண்டு எழும் தோற்றத்துடன் சக்கரத்தில் எழுந்தருளியிருக்கும் வடிவைக் கல்லிலும் செம்பிலும் காணலாம். ப்ரயொக அவசரத்தில் போர்க்கெழும் கோலத்துடன் பாய்வது போல் பதினாறு கரங்களுடன் காணப்படுகிறார். காஞ்சியில் உள்ள அஷ்டபுஜர், எண் கரங்கள் கொண்ட பெருமான், திருமாலின் சுதர்சன சக்தி எனப்படுகிறார். குடந்தையில் திருக்கோயில் கொண்டுள்ள சக்கரபாணி, சுதர்சனரின் வடிவமே ஆகும். சக்கரத்தை கரத்தில் கொண்டு சக்கரபாணி என்றே பெயர் பெற்றிருக்கம் அப்பெருமான் சுதர்சனராகவே காட்சி தருகிறார். 

சுதர்சன வழிபாடு பேராபத்துக்களிலிருந்தும், தீரா நோயிலிருந்தும், எடுத்த காரியத்தில் ஏற்படும் இடையூறுகளிலிருந்தும் காக்க வல்லது என்பதால், குரு முகமாக உபதேசம் பெற்று, ஜப, தவ, ஹோம, மஹா மந்திரங்களைச் செய்து பயனடையலாம்.

ஐஸ்வர்யங்கள் சேர்க்கும் அறுகம்புல் வழிபாடு!

அறுகம்புல்லை தூர்வை என்பார்கள். அதை லட்சுமி சொரூபமாக பாவிக்கவேண்டுமென்று வேதம் உபதேசிக்கிறது. தூர்வையைப் புகழும் வகையில் வேதத்தில் பல மந்திரங்கள் உள்ளன. அறுகம்புல்லை தினமும் பகவானுக்கு அர்ப்பணித்தபிறகு தலையில் வைத்துக்கொள்வதால், கெட்ட கனவுகள் விலகி, நன்கு உறக்கம் வரும். துர்க்கையைத் தவிர மற்ற எல்லா தேவதைகளுக்கும் தூர்வையால் அர்ச்சனை செய்வது மிகவும் சிறந்தது. துர்க்கையை அறுகம்புல்லினால் அர்ச்சனை செய்யலாகாது. உலகிலுள்ள ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்புண்டு. அவ்வகையில் தூர்வையை ஆராதிக்கும் தினம் பாத்ரபத (ஆவணி) மாதத்தின் சுக்லபட்ச அஷ்டமி. இதற்கு தூர்வாஷ்டமி என்று பெயர். இந்த தூர்வாஷ்டமி விரதத்தை எல்லாரும் கடைப்பிடிக்கலாம். குறிப்பாக பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். இவ்விரதம் பெண்களுக்கென்றே விதிக்கப்பட்ட ஓர் உன்னதமான விரதமாகும்.

இவ்விரதத்தைக் கடைப்பிடிப்பதால் சகல சவுபாக்கியங்களும் ஏற்படும். நமது பாரத தேசத்தை வளமாக வைத்துக்கொள்வதற்கும்; எல்லா இடத்திலும் உணவு, நீர், ஆடை நிறைவாகக் கிடைப்பதற்கும்; நீண்ட ஆயுளுடைய புத்திமான்களான- வீரர்களான புத்திரர்களைப் பெறுவதற்கும்; நினைத்த காரியங்கள் நிறைவேறுவதற்கும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கவேண்டும். இந்த தூர்வாஷ்டமி விரத பூஜாவிதி பவிஷ்ய புராணத்திலும், மதனரத்னத்திலும் கூறப்பட்டுள்ளது. தூர்வாஷ்டமி அன்று காலை நித்ய கர்மாக்களை முடித்துக்கொண்டு, நித்ய பூஜையையும் செய்தபிறகு இவ்விரதத்தைச் செய்யவேண்டும். பூஜையறையை சுத்தம்செய்து கோலமிட்டு விளக்கேற்றி, சுத்தம் செய்யப்பட்ட பலகையின்மேல் கோலமிட்டு, சுத்தமான இடத்தில் விளைந்த அறுகம்புல்லைப் பறித்துவந்து அப்பலகையின்மேல் பரப்பி, அதன்மேல் சிவலிங்கம் (இருந்தால் விசேஷம்) அல்லது படம் ஏதாவது ஒன்றை வைத்துப் பூஜிக்க வேண்டும். பூஜைக்கு எல்லாவிதமான இலைகளையும் மலர்களையும் எடுத்துக் கொள்ளலாம். அவைகளில் அறுகு, வன்னி இலை இரண்டும் அவசியம் இருக்கவேண்டும். பலகையில் பரப்பப்பட்ட அறுகம்புல்லின் நுனிபாகம் நம்மைநோக்கி இருக்கவேண்டும். புல்லைப் பறிக்கும்போது கணுக்கணுவாகத்தான் பறிக்கவேண்டும். ஆரம்பத்திலிருக்கும் முனை மட்டும்தான் நுனி என்கிற அர்த்தமில்லை. இது கணுக்கணுவாக வளர்வதால், நுனியைப் பறித்தாலும் அடுத்த கணுவே நுனி என்கிற கணக்குதான். ஆகையால் எல்லாக் கணுவையும் பறித்து அர்ச்சனை செய்யலாம். பகவானை அபிஷேகம் செய்து, ஷோடசோபசாரப் பூஜைகளைச் செய்து, 108 நாமங்களால் (சிவ அஷ்டோத்திரம், தேவி அஷ்டோத்திரம்) வணங்கி, அறுகு மற்றும் வன்னி இலைகளால் அர்ச்சிக்க வேண்டும்.

சக்திக்குத் தகுந்தாற்போல் நைவேத்தியங்கள் செய்து பிரார்த்தனை செய்ய வேண்டும். பிறகு பரமேஸ்வரனுக்கு அட்சதை, சந்தனம் கலந்த தயிரால் அர்க்யம் தர வேண்டும். பிறகு அறுகம்புலை நமஸ்கரித்து பிரார்த்தனை செய்யவேண்டும். அதற்கான மந்திரம்-

த்வம் தூர்வேஸ்ம்ருத ஜன்மாஸி வந்திதாஸி ஸுராஸுரை:
ஸௌபாக்ய ஸந்ததிம் தேஹி ஸர்வகார்ய கரீபவ
யதாசாகாப்ரசாகாபி: விஸ்த்ரு தாஸி மஹுதலே
ததா மமாபி ஸந்தானம் தேஹி த்வம் அஜராமரம்

பூஜைக்குப் பிறகு அந்தணர்களுக்கும், சுவாசினிகளுக்கும் மங்கள திரவியங்கள் மற்றும் தட்சிணையளித்து விருந்தளிக்க வேண்டும். அன்றைய தினம் பூஜை முடிந்த பிறகு பத்தியமில்லாமல் ஒரு வேளை மட்டும் உணவருந்தலாம்.

தூர்வையை தினமும் தலையில் வைத்துக்கொள்வதற்கான மந்திரம்: 
ஆயுள் தீர்க்கம் அரோகஞ்ச வபு: ஸ்யாத் வஜ்ர ஸன்னிபம். இதன் பொருள், தீர்க்காயுள் கிடைக்க வேண்டும். சரீரமானது நோயற்றதாகவும் வஜ்ரம்போல் பலமுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்பது. அறுகம்புல்லானது பற்பல ஹோமங்களில் விதிக்கப்பட்டுள்ளது. ஹோமம் செய்த அறுகின் புகையை நுகர்ந்தால் பாசம், அபஸ்மாரம் முதலிய தீராத நோய்கள் குணமடையும். அப்புகையை நுகர்வதால் நன்கு பசியெடுக்கும். பல்வேறு நோய்களைத் தீர்க்கும் வல்லமை அறுகுக்கு உண்டு. அறுகம் புல்லானது ஐஸ்வர்யத்தை அளிக்கவல்லது. இந்த தூர்வாஷ்டமி விரதத்தை அனுஷ்டித்தால் சகலசவுபாக்கியங்களையும் பெற்று, சிறந்த பிள்ளை பாக்கியத்தை அடைந்து, நினைத்த காரியங்களிலும் வெற்றியடையலாம்.

தூர்வையைப் போற்றும் மந்தரிம்: தூர்ஸ்வப்னங்களை நாசம் செய்யும் தூர்வாதேவியே, உன்னை வணங்குகிறேன். உன்னைத் தொடுவதாலும் பகவானுக்கு உன்னை அர்ப்பணம் செய்வதாலும் எனது எல்லாப் பாவங்களும் நீங்கவேண்டும். நீ எவ்வாறு கணுக்கணுவாக வளர்கிறாயோ, அவ்விதமே நானும் படிப்படியாக வளர்ந்து சகல ச்ரேயஸ்களையும் அடைய வேண்டும். ஹே தேவியே! நீ நன்கு படர்ந்து வளர்வாயாக. உன்னை நான் பூஜிக்கிறேன். உன்னை என் தலையால் தாங்கிக் கொள்கிறேன். நீ என்னை எப்பொழுதும் காப்பாற்றுவாயாக.