Monday, August 18, 2014

சோதிட ரகசியம் .....

சோதிட ரகசியம் .......
1. 3 காளி தேவியரை ஒரே நாளில் வழிபட 108 சிவ கோவில்கள் வழிபட்ட பலன் உண்டாம்
2. 9 காளி தேவியரை ஒரே நாளில் வழிபட 1008 சிவ கோவில்கள் வழிபட்ட பலன் உண்டாம்
3.ராகு பகவானின் கடுமையான தோசத்திற்க்கு உட்பட்டவர்கள்
1.பெண் குழந்தைகளை மற்றும் பெற்றவர்கள் ......
2.தீய பழக்கம் உடையவர்கள் .....
3.பல நோய்களுக்கு பாதிக்க பட்டவர்கள் .....
இவர்கள் எல்லாம் கால பைரவானின் தாயான
காளி தேவிகளை வழிபட ராகுவின் தோஷத்தில் இருந்து விடுபடுவர் ......
காளிதேவியின் பரிகார நூலில் ......

Saturday, August 16, 2014

14 உலகங்களில் வசிப்பவர்கள்!

இறைவன் ஏழு உலகங்களை உருவாக்கி இருக்கிறாராம். சத்தியலோகத்தில் பிரம்மன், தபோலோகத்தில் தேவதைகள், ஜனோலோகத்தில் பித்ருக்கள்,  சொர்க்கத்தில் இந்திரன் முதலான தேவர்கள், மஹர்லோகத்தில் முனிவர்கள், புனர்லோகத்தில் கிரகங்கள், நட்சத்திர தேவதைகள், பூலோகத்தில்  மனிதர்கள், விலங்குகள் வசிக்கின்றனர். இவையெல்லாம் பூமிக்கு மேலிருப்பவை. பாதாளத்திலும் இதே போல ஏ ழு லோகங்கள் உண்டு. இதனால்  தான் அசுரர்கள் ஈரேழு 14 லோகங்களையும் அடக்கியாண்டதாக புராணங்களில் சொல்லப்படும். கீழுள்ள அதல, விதல லோகங்களில் அரக்கர்கள்,  சுதல லோகத்தில் அரக்கர் குலத்தில் பிறந்தாலும் உலகளந்த நாயகனால் ஆட்கொள்ளப்பட்ட மகாபலி, தலாதல லோகத்தில் மாயாவிகள், மகாதல  லோகத்தில் புகழ்பெற்ற அசுரர்கள், பாதாள லோகத்தில் வாசுகி முதலான பாம்புகள், ரஸாதல லோகத்தில் அசுர ஆசான்கள் வசிப்பதாக நம்பிக்கை.

சூரியனின் வெப்பமும், அக்னியின் வெம்மையும்!

அக்னி நட்சத்திரம், இந்தப் பெயரைச் சொன்னாலே, வியர்த்து விறுவிறுத்து, பெருமூச்சு விடத் தொடங்கிவிடுவார்கள் பலர். சூரியனுக்கும் அக்னிக்கும் என்ன சம்பந்தம்? நட்சத்திரம் என்று சொல்வது ஏன்? சூரியனும் ஓர் நட்சத்திரம்தான். அதீத பிரகாசத்தினாலும் பூமிக்கு அருகிலேயே இருப்பதாலும் பகலில் தெரிகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். குறிப்பிட்ட காலகட்டத்தில் பூமிக்கு மிக அருகில் சூரியன் வருவதால் வெம்மை அதிகரிக்கிறது. அதோடு, அக்னிநட்சத்திர காலகட்டத்தில் சூரியனும், சந்திரனும் பூமிக்கு அருகே வருவதாகச் சொல்கின்றனர். புராணம் என்ன சொல்கிறது? முன்னொரு காலத்தில் பன்னிரண்டு வருடங்கள் இடைவிடாமல் நெய் ஊற்றி சுவேதகி எனும் யாகம் செய்தனர் முனிவர்கள். அக்னி தேவன் அந்த யாக நெய்யை உண்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டான். மூலிகைச் செடிகள் நிறைந்த காண்டவ வனத்தை உண்டால், அவனது உடல் நலமாகும் என்றனர் எல்லோரும், அதன்படி அவன் அதனை அழிக்க முற்பட்டபோது, அங்கிருந்த உயிர்கள் வருணனை வேண்ட, பலத்த மழை பெய்தது. எனவே அக்னி திருமாலின் உதவியை நாடினான். மகாவிஷ்ணு, அர்ஜுனனை அனுப்பினார். அவன் அம்புகளால் கூரை அமைத்து மழையைத் தடுத்து, அக்னிபகவான் காட்டினை உண்ண உதவினான். இருபத்தொரு நாட்கள் இந்த காண்டவ வன தகனம் நடந்தது.

சூரியனின் வெப்பமும், அக்னியின் வெம்மையும் சேர்ந்து உலகையே தகித்தது அந்த நாட்களில், இதுவே அக்னி நட்சத்திர காலகட்டமாகச் சொல்லப்படுகிறது. சூரியனின் மனைவி உஷாதேவி, தன் கணவனின் உடல் வெப்பம் தாங்காமல் தவித்தாள். தன் நிழலையே ஒரு பெண்ணாகப் படைத்து அங்கே இருக்கச் செய்துவிட்டு தான் மறைந்து வாழ்ந்தாள். நிழல் பெண்ணுடன் வாழ்ந்த சூரியன் ஒரு காலகட்டத்தில் உண்மை உணர்ந்தான். உஷாவை மீண்டும் அழைத்தான். அவள் மறுக்க, சூரியனின் வெம்மையைக் குறைத்திட முடிவு செய்தார், அவள் தந்தையான விஸ்வகர்மா. அதன்படி பகலவனின் தேஜஸைத் தேய்த்து மழுக்கி, அவனது வெப்பத்தைத் தணித்தார். உஷா மகிழ்வோடு கணவன் வீடு வந்தாள். தான் இழந்த ஒளியை வருடத்தில் சில நாட்கள் திரும்பப் பெற வேண்டும் என விரும்பினான், சூரியன். சம்மதித்தார் விஸ்வகர்மா. சூரியன் தன் முழுமையான தேஜஸுடன் இருக்கும் காலகட்டமே அக்னி நட்சத்திரம் என்கிறது மற்றொரு புராணம்.

ஈசனின் அனல் விழிக் கனலில் இருந்து அவதரித்தவன் ஆறுமுகன். தீப்பிழம்பு சரவணப் பொய்கையில் விழுந்து சிசுவான போது அவனை எடுத்து வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள். குழந்தையின் உடல் தகிப்பைத் தணிக்க, தங்கள் உடலோடு சேர்த்து அணைத்துக் கொண்டனராம் அப்பெண்கள். அவர்களிடம் இருந்த குளிர்ச்சி குழந்தைக்குப் போக, பாலகனின் உடல் வெப்பம் அந்தப் பாவையர்க்குச் சென்றதாம். தன் மீது அன்பு கொண்ட அவர்களது உடல் வெப்பத்தை, பிரகாசமான ஒளியாக மாற்றி அவர்களை நட்சத்திரங்களாக வானத்தில் சுடர்விடச் செய்தான் சுப்ரமண்யன். கார்த்திகை நட்சத்திரத்தின் அதிதேவதை அக்னிதேவன். பொதுவாகவே கார்த்திகை நட்சத்திரத்தினை வெப்பமான நட்சத்திரம் என்பார்கள்.

அக்னி நட்சத்திரத் தொடக்க நாள் முதல் காலத்தில் அதிகாலையில் எழுந்து நீராடுங்கள். சூரியனுக்கு உரிய கோலத்தை பூஜை அறையில் அரிசி மாவினால் போடுங்கள். சூரியனை நோக்கி மனதார வேண்டுங்கள். முதல் நாளிலும் கடைசி நாளிலும் சூரியனுக்கு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யலாம். நெய் தீபம் அல்லது நல்லெண்யணய் தீபம் ஏற்றி வைத்து முருகப் பெருமான் துதிகளைச் சொல்லுங்கள் வெம்மை தீர்க்கும் அம்மன்களான, மாரியம்மன், மீனாட்சியம்மனை வழிபடுவதும் நல்லது. பரணிக்குரிய துர்க்கையையும், ரேவதிக்கு உரிய பிரம்மனையும் கிருத்திகைக்கு உரிய அக்னி பகவானையும் கும்பிடுவதும் சிறந்தது. சிவபெருமான், நரசிம்மர், மகாவிஷ்ணு, சீதளா தேவி போன்ற தெய்வங்களை வணங்குவது மிகுந்த நன்மை தரும். நோய்கள் எளிதாகப் பரவும் காலகட்டம் இது. எனவே மஞ்சள் கரைத்த நீரை வேப்பிலையால் தொட்டு வீடு முழுவதும் தெளிக்கலாம். இவை அனைத்தையும் விட, வெயிலால் வாடுவோர் குளிரும் வண்ணம் பானகம், நீர்மோர், தண்ணீர், தயிர்சாதம், விசிறி, காலணிகள் என உங்களால் இயன்றதை தானமாக அளியுங்கள். கால்நடைகளுக்கு நீரும், கீரையும் கொடுங்கள். உங்கள் மனமும் உடலும் குளிர இறைவன் அருள் மழை பொழிவான். 

கணவனை இழந்த பெண்களை இழிவாகக் கருதி ஒதுக்கி வைக்கிறது சமூகம் - மனம் புண்படலாமா?

பொதுவாக, கணவனை இழந்த பெண்களை  இழிவாகக் கருதி ஒதுக்கி வைக்கிறது சமூகம். அதிலும், அவர்கள் எதிரே வந்தால், பலரும் ஒதுங்கிப் போவார்கள். காஞ்சி மடத்தில், தினமும் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் ஒரு அம்மையார் சுத்தம் செய்ய வந்து விடுவார். அவர் கணவனை இழந்தவர். அதிகாலையில் மடத்திற்கு வரும் அவரைப் பார்ப்பவர்கள்,“இவள் முகத்தில் தினமும் காலையில் விழிக்க வேண்டியிருக்கிறதே!” என்று முகம் சுளித்துப் பேசுவார்கள். இது அந்த அம்மையாருக்கும் தெரியும். இருந்தாலும், அதைக் கண்டு கொள்ளாமல் சேவையே பெரிதென நினைத்து, சுத்தப்படுத்தும் பணியைத் தொடர்ந்தார். திடீரென சில நாட்களாக அந்த அம்மையாரைக் காணவில்லை. காஞ்சிப்பெரியவர் இதுபற்றி ஊழியர்களிடம் விசாரித்தார். “அந்த அம்மாவுக்கு உடல் நலமில்லையாம்! அதனால் தான் வரவில்லை!” என்றனர் அவர்கள். உடனடியாக பெரியவர் அந்த அம்மாவின் வீட்டுக்கே போய்விட்டார். தன் வீட்டு வாசலில் பெரியவர் வந்து நின்றதைக் கண்ட அந்த அம்மாவுக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும்... ஓடி வந்து பெரியவரை நமஸ்கரித்தார். அவரிடம் உடல்நலம் விசாரித்த பிறகு மடத்திற்கு திரும்பினார் பெரியவர். நாம் எந்த நிலையில் இருந்தாலும், தெய்வம் கருணை செய்யும் என்பதற்கு இதை விட வேறென்ன உதாரணம் வேண்டும்!

வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு!

வலம்புரிச் சங்கு பூஜிக்கப்பட்டு வரும் இல்லங்களில், பிரம்மஹத்தி முதலான அனைத்துவகை தோஷங்களும் அகன்றுவிடும். சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோபரி அங்க லக்ஷ்ணம் மனுஷ்யானாம் ப்ரம்ம ஹத்யாதிகம் தஹேத் என்பது வேதவாக்கு. வீடு கட்டுபவர்கள் கைப்பிடி அளவுள்ள வலம்புரிச் சங்கை நிலை வாசலில் வைத்து, வாஸ்து விதிப்படி சங்குப் பதிப்பு முறை செய்துவிட்டால், அந்த வீடு மூன்று தலைமுறைக்கு செல்வச் செழிப்போடு குபேர சம்பத்துடன் விளங்கும் என்பது நம்பிக்கை.

கோயில்களிலும் கும்பாபிஷேகம் நடைபெறும்போது, யாக சாலைகளில் எண்வகை மங்களப் பொருட்களில் ஒன்றாக வலம்புரிச் சங்கும் ஸ்தாபிக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது. அதேபோன்று, கார்த்திகை மாத சோமவார (திங்கட்கிழமை) அபிஷேக காலங்களில் 108 சங்குகளுக்கு நடுவில் வலம்புரிச் சங்கு ஒன்றை வைத்து, சிவபெருமானாக வர்ணிக்கப்பட்டு பூஜிக்கப்படும். அபிஷேக ஆராதனைகள் செய்த பிறகு, சங்கு தீர்த்தத்தை நம் மீது தெளிப்பார்கள். சங்கு நீர் உடலில் பட்டாலே அனைத்து துர்சக்திகளும் நம்மை விட்டு விலகும் என்கிறது சாஸ்திரம்.

சப்தரிஷிகள் பற்றி தெரியுமா?



கச்யபர், அத்ரி, பரத்வாஜர், விஸ்வாமித்திரர், கவுதமர், ஜமதக்னி, வசிஷ்டர் ஆகியோரே சப்த ரிஷிகள்! (மற்றொரு விதமாகவும் சொல்வதுண்டு).

கச்யபர்: தேவர் குலம் மற்றும் அசுரர் குலம் இரண்டுமே கச்யபரிடம் இருந்து தோன்றின. அவரில் இருந்து வந்த மனுவிடம் இருந்து தோன்றியதே  மனித குலம்!

அத்ரி: இவரிடமிருந்து தோன்றியவன் சந்திரன். தத்தாத்ரேயரும், அத்ரி தம்பதியிடம் இருந்து உருப்பெற்றார். மருத்துவத்தில் சிறந்த ஆத்ரேயரும்  அத்ரியிடம் இருந்து தோன்றியவரே! அத்ரி-அனசூயை தம்பதிபோல் தாம்பத்தியம் சிறக்க வாழ வேண்டும் என்று புதுமணத் தம்பதியை  வாழ்த்துகிறது ரிக்வேதம்.

பரத்வாஜர்: இந்த மகரிஷி தமது மூன்று முழு ஆயுளையும் வேதம் பயிலுவதற்குப் பயன்படுத்தியவர். இவரும் மருத்துவ ஆய்வில் சிறந்தவர்  என்கிறது வேதம். இன்றைக்கும் பரத்வாஜ கோத்திரத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகம்.

விஸ்வாமித்திரர்: இந்தப் பெயருக்கு, உலகத்துக்கு உற்ற நண்பன் என்று அர்த்தம். இந்திரனுடன் மோதி, புது உலகைப் படைக்க முயன்றவர் இவர்.  விஸ்வாமித்திர சிருஷ்டி எனச் சிலவற்றைக் குறிப்பிடுவர். சிங்கமும் புலியும் இறைவனின் படைப்புகள். அந்த இனத்துடன் தொடர்பு கொண்ட  நாயும் பூனையும் விஸ்வாமித்திர சிருஷ்டிகள்! நாம் பயன்படுத்தும் தர்ப்பைப் புல்லிலும் விஸ்வாமித்திரம் எனும் பிரிவு உண்டு.

கவுதமர்: அகல்யையின் கணவர். இவர் இயற்றிய தர்ம சூத்திரம் இன்றளவும் பேசப்படுகிறது. அறம் காக்க அனைவருக்கும் அறைகூவல் விடுத்து போதித்தவர்.

ஜமதக்னி: துஷ்டர்களை அடக்க அவதாரம் இஏற்ற ஸ்ரீமந் நாராயணனுக்கு (ஸ்ரீபரசுராமருக்கு) தகப்பனாக இருந்து அறம் காத்தவர்.

வசிஷ்டர்: இவரின் ஆன்மிகத் தகவல்கள் இன்றும் பயனுள்ளவையாகப் போற்றப்படுகின்றன. அருந்ததியின் கணவர் இவர். இருவரும் ஆதர்ச  தம்பதி. இவரிடம் பாராட்டு பெறுவது கடினம். மிகச் சிறந்ததையே இவர் பாராட்டுவார். எனவேதான், வசிஷ்டர் வாயால் பிரும்மரிஷி என்னும்  சொல்வழக்கு உருவானது. பெண்மைக்கு உயர்வளித்துப் போற்றுபவர்கள் இவர்கள். இவர்களை பெண்ணினம் வழிபடும் நாளே ரிஷி பஞ்சமி!  ஆவணி மாத வளர்பிறை  5-ம் நாளில் இவர்களை வழிபட, மறுபிறவியே இல்லாத பேரின்ப நிலையில் இணைவார்கள் என்கிறது புராணம்.

யாருக்கு வணக்கம் சொல்ல வேண்டும்?

நம்மை விட வயதில் மூத்தவர்கள் வந்தால், அவர்களை வணங்கி வரவேற்பது இயல்பு. ஆனால், இவ்வாறு வணக்கம் சொல்வதற்கு வயது வரம்பு இருக்கிறது. நம்மை விட மூன்று வயது அதிகமானவர்களையே வணக்கம் தெரிவித்து வரவேற்கலாம்.அண்ணன், அக்காவுக்கு மட்டும் இந்த வயது வரம்பு பொருந்தாது. அவர்கள் நம்மை விட ஒரு வயது மூத்தவராக இருந்தாலும் கூட நமஸ்காரம் சொல்லலாம்.

சங்கு பூஜையால் ஏற்படும் நன்மைகள்!

வலம்புரிச் சங்கு வீட்டில் இருந்தால் தோஷங்கள், துர்சக்திகள் நெருங்காமல் வீடு பாதுகாப்பாக இருக்கும்; மற்றவர்கள் பொறாமையால் வைக்கும் ஏவல்கள் நம்மை நெருங்காமல் விலகிவிடும் என்பது நம்பிக்கை. நீண்ட ஆண்டுகளாக செவ்வாய் தோஷம் காரணமாக திருமணம் தடைபட்டு வருந்தும் பெண்கள், 8 செவ்வாய்க்கிழமைகள் வலம்புரிச் சங்கில் பால் வைத்து, அங்காரகனுக்கு செவ்வரளி மலர்களால் 108 நாமாவளி அர்ச்சனை செய்தால், கைமேல் பலன் கிடைக்கும். பிறந்த குழந்தைகள் தொடர்ந்து அழுது கொண்டிருந்தால் சுத்தமான பாலை சங்கில் ஊற்றிவைத்து, விநாயகரை வணங்கி ஒரு மணி நேரம் கழித்துக் கொடுத்தால் பலன் கிடைக்கும்.  கடன் தொல்லையிலிருந்து மீண்டு வர 16 சங்கு வடிவங்களைக் கோலமாகப் போட்டு, பவுர்ணமி இரவில் குங்குமத்தால் அர்ச்சனை செய்து, குளிகை காலத்தில் கடன் கொடுத்தவரை சந்தித்து சிறிதளவு பணத்தைத் திரும்பக் கொடுத்தால், விரைவிலேயே முழுக்கடனும் அடைபடும்.

சொந்தமான பழைய வீடு எவருக்கும் பயன்படாமல், விற்கவும் முடியாமல் பாழடைந்து கிடந்தால்... வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாளில், நடுவீட்டில் பிரம்ம ஸ்தானத்தில் வலம்புரிச் சங்கை வைத்து, அதில் வாஸ்து பகவானை எழுந்தருளச் செய்து, மஞ்சள், துளசி இட்ட நீரை வைத்து பூஜிக்கவேண்டும். பிறகு சங்கு தீர்த்தத்தை வேப்பிலையின் உதவியோடு வீடு முழுவதும் தெளிக்கலாம். அத்துடன், செப்பு நாணயம் ஒன்றை மஞ்சள் துணியில் முடிந்து, ஈசான்ய பாகத்தில் கட்டிவிட்டால், விரைவில் அந்த வீட்டை விற்கவோ புதுப்பிக்கவோ நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றிபெறும். குழந்தைப் பேறு இல்லாத பெண்கள் வலம்புரிச் சங்கில் பால், குங்குமப்பூ இட்டு சந்தான கணபதியை வரித்து, பூஜையை செய்து, 48 தினங்களுக்கு கணவருடன் சேர்ந்து அருந்திவந்தால் பலன் கிடைக்கும். கோயில்களில் நடைபெறும் சங்காபிஷேக வைபவத்தில் கலந்துகொண்டு வழிபட தோஷங்கள் விலகும்; செல்வம் சேரும். ஒருவர் தமது நட்சத்திர அதிதேவதையையும், லட்சுமிகுபேரனையும் யோக எண் மற்றும் (சிறிய) பட உருவில் வலம்புரிச் சங்கில் வைத்து, சில காசுகளும் போட்டு வைத்து தினமும் வழிபட, அபரிமிதமான செல்வச் சேர்க்கை உண்டாகும்.

Saturday, August 2, 2014

உங்கள் ராசி, நட்சத்திரத்திற்குரிய மரங்கள்!

மொத்தம் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்கு என்று மரம் உள்ளது. பண்டைக்காலத்தில்  மரங்களை மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். அதே போல் ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. இது பலருக்கு தெரியாது. ஒவ்வொரு  நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்குரிய மரங்களை வழிபட்டு வந்தாலே பலன் கிடைக்கும். இனி நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்குரிய மரங்கள் பற்றி
பார்ப்போம்:

நட்சத்திரம்:
* அஸ்வதி  ஈட்டி மரம்
* பரணி  நெல்லி மரம்
* கார்த்திகை அத்திமரம்
* ரோகிணி  நாவல்மரம்
* மிருகசீரிடம்  கருங்காலி மரம்
* திருவாதிரை  செங்கருங்காலி மரம்
* புனர்பூசம்  மூங்கில் மரம்
* பூசம்  அரசமரம்
* ஆயில்யம்  புன்னை மரம்
* மகம்  ஆலமரம்
* பூரம்  பலா மரம்
* உத்திரம்  அலரி மரம்
* அஸ்தம் அத்தி மரம்
* சித்திரை வில்வ மரம்
* சுவாதி  மருத மரம்
* விசாகம்  விலா மரம்
* அனுஷம்  மகிழ மரம்
* கேட்டை  பராய் மரம்
* மூலம்  மராமரம்
* பூராடம்  வஞ்சி மரம்
* உத்திராடம்  பலா மரம்
* திருவோணம்  எருக்க மரம்
* அவிட்டம்  வன்னி மரம்
* சதயம்  கடம்பு மரம்
* பூரட்டாதி  தேமமரம்
* உத்திரட்டாதி  வேம்பு மரம்
* ரேவதி  இலுப்பை மரம்

ராசிகள்

* மேஷம்  செஞ்சந்தனம் மரம்
* ரிஷபம்  அத்தி மரம்
* மிதுனம்  பலா மரம்
* கடகம்  புரசு மரம்
* சிம்மம்  குங்குமப்பூ மரம்
* கன்னி  மா மரம்
* துலாம்  மகிழ மரம்
* விருச்சிகம்  கருங்காலி மரம்
* தனுசு  அரச மரம்
* மகரம்  ஈட்டி மரம்
* கும்பம்  வன்னி மரம்
* மீனம்  புன்னை மரம்

இந்த மரங்களை, ஈரோடு அருகேயுள்ள லக்காபுரம்புதுõர் லட்சுமி நாராயணர் கோயில், சென்னை திருவொற்றியூர் வடிவுடை நாயகி அம்மன் கோயி ல், மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆகிய இடங்களில் வணங்கலாம்.