Monday, July 17, 2017

ஆடி மாதத்தின் சிறப்புகள்

தமிழ் வருடங்கள் 60. தமிழ் மாதங்கள் 12. இதில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. பல மாதங்களுக்கு பழமொழிகளும் உண்டு.

தை பிறந்தால் வழி பிறக்கும், புரட்டாசியில் மண் உருக மழை பெய்யும், பொன் உருக வெயில் காயும், ஆடிப்பட்டம் தேடி விதை என்று பல மொழிகள் உள்ளன.

வரும் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிறக்க உள்ள ஆடி மாதத்திற்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. அவற்றை இங்கு தொகுத்துள்ளோம்.

webdunia photoWD
ஆடி மாதத்தில்தான் தட்சிணாயன புண்ணியகாலம் ஆரம்பிக்கிறது. அதாவது சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி தனது பயணத்தை துவக்குகிறது.

இந்த காலக்கட்டத்தில் பகல் பொழுது குறைவாகவும், இரவு நேரம் நீண்டும் காணப்படும். காற்றும் மழையும் அதிகமாக இருக்கும்.

ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதிலும் இந்த ஆடி மாதம் வெள்ளிக்கிழமையிலேயே துவங்குகிறது.

ஆடி செவ்வாய் தேடிக் குளி என்பது பழமொழி. அதாவது செவ்வாய்க்கிழமை எண்ணெய் தேய்த்து தலை குளித்து, அம்மனை வழிபட்டு வந்தால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.

webdunia photoWD
ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் திருவிழாவும், கூழ் ஊற்றுதலும், தீ மிதித்தலும் என்று களை கட்டும். ஆடி மாத‌ம் எ‌ன்பது அ‌ம்மனு‌க்கு உக‌ந்தது எ‌ன்றாலு‌ம், கு‌றி‌ப்பாக மா‌ரிய‌ம்ம‌ன் வ‌ழிபாடு இ‌ன்னு‌ம் ‌சிற‌ப்பாகு‌ம். ஞா‌யி‌ற்று‌க்‌கிழமைக‌ளி‌ல் மா‌‌ரிய‌ம்மனு‌க்கு கூ‌ழ் ஊ‌ற்‌றி ‌வீடுக‌ளி‌ல் ‌சிற‌ப்பு பூஜைக‌ள் செ‌ய்வா‌ர்க‌ள்.

ஆடி அமாவாசையில் குடும்பத்தின் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதும் புண்ணியத்தை அளிக்கும்.

ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப் பெருக்கு விழாவாகக் கொண்டாடப்படும். இந்த நாளில் நதிகளில் நீர்ப் பெருக்கு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. அந்த நாளில், நதிக்கரை மற்றும் கடற்கரைகளில் குடும்பத்தினருடன் அமர்ந்து இரவு உணவு உண்பதும் மரபாக இருந்து வந்துள்ளது. புதிதாக திருமணமான புதுமணத் தம்பதிகள் நதிக்கரையில் நிலாச் சோறு சாப்பிடுவார்கள்.

அன்றைய தினம் தாலி மாற்றிப் புதுத் தாலி அணிவதும் வழக்கம். திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணமாக வேண்டும் என்று அம்மனை வேண்டிக் கொண்டு மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வார்கள்.

webdunia photoWD
ஆடி மாதம் என்பது விவசாயிகளுக்கும் உகந்த மாதமாகும். விவசாயிகள் தங்கள் பணிகளை இந்த மாதத்தில்தான் துவக்குவார்கள். ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் இதனால்தான் உருவாயிற்று.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோயில் தபசு விழா இந்த மாதத்தின் சிறப்புகளுக்கு சிறப்பு சேர்க்கும் விழாவாகும்.

ஆடி மாதத்தில் என்னதான் சிறப்புகள் என்று நாம் கூறினாலும், புதுமணத் தம்பதிகளுக்கு ஆடி மாதம் ஒரு கஷ்ட காலமாகவே இருக்கும்.

அதாவது, ஆடி மாதத்தில் தம்பதியர் ஒன்று சேர்ந்து குழந்தஉண்டானால் சித்திரையில் குழந்தை பிறக்கும். அந்த சமயத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால்தான் ஆடி மாதத்தில் தம்பதிகளை பிரித்து வைப்பார்கள்.

எல்லாம் நன்மைக்கே என்று தம்பதிகள் பெருமூச்சு விடுவதும் இந்த ஆடி மாதம்தான்

அம்மன் அருளும் அற்புதங்களும் நிறைந்த ஆடிமாதம்

சூரியன் வடபுறத்தில் இருந்து தென்புறம் நோக்கித் தனது பயணத்தைத் துவக்கும் தட்சினாயண காலமாகும். ஆடி மாதத்தில் சூரியனின் பயணம் தெற்கு நோக்கி தொடங்குகிறது. தமிழ் காலண்டரில் ஆடி மாதம் 4வது மாதமாகும். தேவர்களுக்கு அந்தி சாய்ந்து இரவு துவங்கும் நேரமிது. நாம் தினந்தோறும் அந்தி சாய்ந்தவுடன் நம் இல்லங்களில் பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து வழிபடுவதைப் போல் தேவர்களும் அம்மனை நினைத்து பூஜை செய்கின்றனர் எனவேதான் ஆடி மாதம் முழுவதும் அம்மன் ஆலயங்களில் திருவிழா களைகட்டுகிறது. கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் என்பதால் ஆடிக்கு கடக மாதம் என்று பெயர். அதாவது, தகப்பனைக் குறிக்கும் கிரகமான சூரியன், தாயாரைக் குறிக்கும் கிரகமான சந்திரனின் சொந்த வீடான கடகத்தில் வந்து இணையும் மாதம் ஆடிமாதமாகும். இது கடகமாதமாகும்.

ஆடி அமாவாசை ஆடி அமாவாசை, முன்னோர்களை ஆராதிக்க உகந்த நாளாகும். ஜோதிட ரீதியாக தந்தையான சூரியனும் தாயான சந்திரனும் தாய் வீடான கடகத்தில் ஒன்றாக இணையும் நாளே ஆடி அமாவாசை. பித்ரு சாபம் நீங்கும் ராமேஸ்வரம் உள்ளிட்ட புண்ணிய நீர் நிலைகளில் முன்னோர்களுக்குரிய தர்ப்பண காரியங்களைச் செய்து வழிபட வேண்டும். இதனால் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையும். பித்ரு சாபம் நீங்கி பிள்ளைகளின் வாழ்வு சிறக்கும். ஆடிப்பெருக்கு ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. காவிரி முதலான நதிக்கரைகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இந்த நாளில் ஆறுகளில் கூடும் பெண்கள் மாங்கல்ய பலம் வேண்டி புதிதாக திருமாங்கல்யச் சரடினை மாற்றி நதி அன்னையை வணங்குகின்றனர். ஆடி மாதத்தில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால்தான் 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்று கூறுகின்றனர். ஆடி மாதத்தில் விதை விதைத்து தை மாதத் துவக்கத்தில் அறுவடை செய்வார்கள். ஆடிக்கூழ் உடல்சூட்டினைத் தணித்து நமக்கு ஆரோக்கியத்தைத் தருவது கூழ். எனவேதான் ஆடி மாதத்தில் வேப்பிலையும், கூழும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு சிறப்பான நாட்களாகும். இந்த நாட்களில் அம்மன் ஆலயங்களில் கூழ் ஊற்றி கொண்டாடுவார்கள். ஆடி விஷேச தினங்கள் ஆடி மாதம் கிருத்திகை, ஆடிபூரம், ஆடி பௌர்ணமி, ஆடி அமாவாசை ஆகிய தினங்கள் விஷேச தினங்களாகும். பெண்களுக்குரிய விரதங்களில் முக்கியமானது வரலட்சுமி விரதம். ஆடி மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமை அன்று இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது. அன்று சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து, அவர்களுக்கு அன்னமிட்டு புடவை ரவிக்கை சேர்த்து தாம்பூலம் அளிப்பதன் மூலம் சகல சௌபாக்யங்களும் வந்து சேரும்.

Sunday, June 11, 2017

பெருஞ்செல்வம் அடைய


வையம் துரகம் மதகரி
மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை
ஆரம் பிறைமுடித்த
ஐயன் திருமனையாள் அடித்
தாமரைக்(கு) அன்பு முன்பு
செய்யும் தவம் உடையார்க்குள
வாகிய சின்னங்களே

கடன்தீர, பெருஞ்செல்வம் அடைய

இல்லாமை சொல்லி ஒருவர்தம்
பால்சென்(று) இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல்நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம்
பால்ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை
பாதங்கள் சேர்மின்களே

Sunday, May 21, 2017

அஷ்ட ஐஸ்வர்யங்களை அடைய


மாதங்கி

(அஷ்ட ஐஸ்வர்யங்களை அடைய)

ஓம் மாதங்க்யை வித்மஹே
உச்சிஷ்ட சாண்டால்யை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்

பிரச்சனைகளில் தீர்வு காண

மஹா வஜ்ரேஸ்வரி
(பிரச்சனைகளில் தீர்வு காண)


ஓம் மஹா வஜ்ரேஸ்வராய வித்மஹே
வஜ்ரநித்யாய தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்

சுக பிரசவத்திற்காக

பகமாளினி

(சுக பிரசவத்திற்காக)

ஓம் பகமாளிணி வித்மஹே
சர்வ வசங்கர்யை தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்

சகல செல்வங்களையும் அடைய

லட்சுமி

(சகல செல்வங்களையும் அடைய)

ஓம் மஹாலக்ஷ்மை ச வித்மஹே
விஷ்ணுபத்ன்யை ச தீமஹி
தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்

Thursday, May 18, 2017

தீய சக்திகளிலிருந்து காக்க


லினிதேவி


(தீய சக்திகளிலிருந்து காக்க)

ஓம் ஜ்வாலாமாலினி வித்மஹே
 மஹாசூலினி தீமஹி
 தன்னோ துர்கா ப்ரசோதயாத்

கல்வியும், விவேகமும் பெருக

சரஸ்வதி


(கல்வியும், விவேகமும் பெருக)

 ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
 விரிஞ்சிபத்ன்யை ச தீமஹி
 தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்

தேர்தலில் மற்றும் பரீட்சையில் வெற்றி பெற


(தேர்தலில் மற்றும் பரீட்சையில் வெற்றி பெற)

 ஓம் நீலபதாகை வித்மஹே
 மஹாநித்யாயை தீமஹி
 தன்னோ நித்ய ப்ரசோதயாத்

கணவன் மனைவி ஒற்றுமை நிலைக்க

ஜானகிதேவி

(கணவன் மனைவி ஒற்றுமை நிலைக்க)

 ஓம் ஜனகனாயை வித்மஹே
 ராமபிரியாய தீமஹி
 தன்னோ சீதா ப்ரசோதயாத்

நவகிரக தோஷங்கள் விலக


சண்டீஸ்வரி

(நவகிரக தோஷங்கள் விலக)

 ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே
 மஹாதேவீ ச தீமஹி
 தன்னோ சண்டீ ப்ரசோதயாத்

ஞாபக சக்தி பெற - கங்காதேவி

(ஞாபக சக்தி பெற)

 ஓம் த்ரிபதகாமினி வித்மஹே
 ருத்ரபத்ன்யை ச தீமஹி
 தன்னோ கங்கா ப்ரசோதயாத்

சொத்து, கவுரவம் அடைய

குலசுந்தரி

(சொத்து, கவுரவம் அடைய) ஓம் குலசுந்தர்யை வித்மஹே
 காமேஸ்வர்யை தீமஹி
 தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்

Tuesday, May 16, 2017

கேட்ட வரம் கிடைக்க - காளிகா தேவி

ஓம் காளிகாயை ச வித்மஹே
ஸ்மசான வாசின்யை தீமஹி
தன்னோ கோரா ப்ரசோதயாத்

சகல காரியங்கள் வெற்றி அடைய


ஓம் பூர்புவஸ்ஸுவஹ் தத்ஸ விதுர்
வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோனஹ் ப்ரசோதயாத்