Tuesday, August 16, 2016

பித்ரு தோஷம் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள கருடப்புராணம் கூறும் எளிய வழிமுறைகள்

நமது குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள கருடப் புராணம் மிக எளிமையான வழிமுறைகளை தெளிவாக எடுத்துரைத்துள்ளது.
ஒருவர் இறந்த பின்பு அவருக்குரிய பித்ரு கடன்களை முறைப்படி செய்யாதவர்கள் குடும்பத்தில் மனக் கஷ்டம், பணக்கஷ்டம் போன்றவை இருந்து கொண்டே இருக்கும்.
இறந்தவர் ஆன்மா சாந்தியடைய நமது முன்னோர்கள் பல்வேறு வழிமுறைகளை கையாண்டனர், இறந்தவுடன் இறந்தவருக்கு செய்ய வேண்டிய பிண்டம் இடுதல், இறந்தவரின் திதி தோறும் அவருக்குரிய கடமைகளை செய்தல், போன்றவற்றை செய்யாமல் இருக்கும் போது இறந்தவரின் ஆன்மா பசி, தாகம் போன்றவற்றால் அவதிப்படும், அப்படி அந்த ஆத்மா அவதிப்படும்போது, அந்த அவதியின் கொடூரங்கள் அவரது சந்ததியினரையும் விட்டு வைக்காது, அவர்களையும் பாதிப்படைய வைக்கும். இதைத்தான் பித்ரு தோஷம் என்று கூறுவார்கள்.
ஒருவன் நல்லவனாகவும், தெய்வ பக்தி மிகுந்தவனாக இருந்து இறந்தால், இறந்தவருக்கு பித்ரு கடன்களை சரியாக செய்யாவிட்டாலும் இறந்தவரின் குடும்பத்திற்கு பித்ரு தோஷம் கண்டிப்பாக ஏற்படும். ஆனால் அதன் தாக்கம் சற்று குறைவாக இருக்கும், காரணம், பித்ருக்களுக்கு இறைவனின் ஆசி இருப்பதால் தோஷத்தின் தீவிரம் சற்று குறைவாக இருக்கும்.
ஆனால் ஒருவன் மிக கொடூரமானவனாகவும், அடுத்தவர் மனைவி, அடுத்தவர் சொத்து போன்றவற்றை அபகரித்து, லஞ்சம், திருட்டு போன்ற கொடூரத்தில் ஈடுபடுவானாயின் அவன் இறந்த பிறகு அவனுக்குரிய பித்ரு காரியங்களை அவன் குடும்பம் செய்யாமல் விட்டுவிட்டால் இறந்தவனின் குடும்பத்தினருக்கு மிகப் பெரிய தீங்கு விளையும், இறந்தவனுக்கு இறைவனின் ஆசி இல்லாமல், நரக வேதனையில், பசி, தாகம் போன்றவற்றால் அவதிப்பட்டு அல்லல் படுவான் அப்படிப்பட்டன் படும் வேதனையின் தாக்கம் மிகுந்த வீரியம் மிகுந்ததாக இருக்கும். அந்த தாக்கம் அவனது குடும்பம், மற்றும் சந்ததியினரையும் மிகவும் கொடூரமாக தாக்கும்.
பித்ரு தோஷம் உள்ளவன் வீட்டில் அதிகம் நடைபெறும் செயல்களைப் பார்ப்போம்.
தான் செய்யும் செயல்களில் அதிகமாக பாவம் உண்டாக்கும் செயலையும், லஞ்சம், லாவணியம் போன்ற கெடுதல் தரக்கூடிய செயல்கள் அதிகம் நடைபெறும்.
குழந்தைகள் பிறந்து பிறந்து இறப்பார்கள்.
சுற்றத்தாரோடு ஒற்றுமையில்லாமல் மனம் வேறுபட்டு வாழ்வதற்கும், குடும்பத்தில் நிம்மதி இன்றி கடைசியில் வெறுமையே ஏற்படும்.
பசுக்களை போஷிக்க முடியாமற் போகும்.
நல்ல நண்பனோடு விரோதிக்க நேர்ந்து நல்ல நட்புகள் ஏற்டாமல் போகும்.
ஹரி பக்தி செய்ய முடியாமல் வாழ்நாள் வீணாவதற்கும் ஜெப ஓமங்களைச் செய்ய முடியாமல் போகும்,
தந்தை தாயாரை இகல்வதும், அவர்களை மதிக்காமல் அவமதிக்கும் செயல்கள் நடைபெறும்.
பணம் மற்றும் சொத்து, பொன் பொருள், பெண் போன்ற காரணங்களால் அயலாரை கொல்ல முயற்சிக்கும் செயலுக்கு மனம் உந்தப்படும்.
இழிந்தோர் செய்யும் தொழிலைச் செய்து பிழைக்க நேரிடும்.
அதர்மங்களையே செய்ய தூண்டும் எண்ணம் மனம் முழுவதும் எழும்.
பிதுர் கர்மங்களை விக்கினத்தால் தடைபட்டு குறைபட்டு போகும்,
புத்திரன் பகைவனைப் போல மாறும் சூழல் ஏற்படும்.
மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாமல் நெடுநாட்கள் பிரிந்து வாழும் நிலை ஏற்படும்.
மேற்கண்ட கெடுதல் தரக்கூடிய செயல் உங்களுக்கு (உங்கள் இல்லத்தில்) அதிகம் நடைபெறுகிறதா, இவை எல்லாம் பிரேத ஜென்மத்தை அடைந்தவனால் ஏற்பட்ட விளைவுகளால் தான் என்பதை கருடப் புராணம் கூறுகிறது.
இதுபோன்ற பிரச்சனை தீரவேண்டுமெனில் பித்ரு கடன்களை ஒழுங்காகவும், கடமை தவறாமலும் செய்யுங்கள், பித்ரு கடன் என்ன என்பதை கேட்டு அறிந்து அதன்படி உங்கள் பித்ருகளை திருப்தி படுத்தினாலே மேற்கண்ட கெடுதல்களில் இருந்து எளிதாக நீங்கள் தப்பிக்கலாம்.

அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு வெற்றி-பாக்கு போடுவதுமட்டுமே, வெற்றிலை போடும் முறை

பழம்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.
தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.
மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது. என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும் இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.
பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது. சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது. வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.
ஆக மொத்தம் வெற்றிலை போடுவதால் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன. அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது. தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது. நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.
இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும் சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது. ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.
தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணாம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும்.
அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.
இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான் தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.

திருமணம்

ஜாதகத்தில் ஏழாமிடமானது களஸ்திர ஸ்தானம், சப்தம ஸ்தானம், இன்ப ஸ்தானம் என்றெல்லாம் கூறப்படும்.

திருமணம் , சூதாட்டம், வழக்கு, சுற்றங்கள் சூழ்தல், வியாபாரம், சன்மானம், சௌக்கியம், அலங்காரம், மனைவியின் அழகு, ஜவுளி வியாபாரம், நட்பு, விவாதங்கள், அன்னிய தேசத்தில் வசித்தல், ஆபரணங்கள்,மனைவியின் சுக துக்கங்கள் அறிவதற்கும் ஏழாமிடம் துணை செய்யும்.

கண்டிட ஏழாம் தான
காரியம் அறிய வேண்டில்
பெண்டிரின் குணமும் அல்லால்
பேசிய காமம் தன்னைக்
கொண்டிடும் செய்தி புத்ரர்
குறிப்பும்யாத் திரையு மாக
வண்டமர் குழலி யாளே!
சுகத்தையும் வகுக்க லாமே!

இறைவனின் திருவிளையாடல்களில், இந்த வாழ்க்கைப் பொருத்தம் மிக முக்கியமான ஒன்று. ஒருவரின் வாழ்க்கை நிம்மதியாக இருப்பதும், நிம்மதி இருந்து தவிப்பதும் தம்பதியரின் கையில் தான் இருக்கின்றது.
மனப் பொருத்தம், வாழ்க்கைப் பிண்ணனி, குடும்பத்தாரது குணாதிசயங்கள், பழக்க வழக்கங்கள், தொழில்கள், இவையெல்லாம் பார்த்து திருமணம் முடிப்போரும் உண்டு.
காதல் கொண்டு வாழ்க்கைத் துணை நலம் தேடுவோருமுண்டு.

புந்தியும் குருவும் ஏழில்
பொருந்திடப் புனிதப் பெண்டிர்
வந்திடும் நல்ல பிள்ளை
வாய்த்திடும்! ஏழில் சுங்கன்
உந்திடப் பாக்யப் பெண்டிர்
உதவியாம்! குளிகன் கேது
சொந்தமாய் ஏழி லாகில்
தூரத்ரீ யோடு வாழ்வான்!

புதன் குரு கூடி ஏழாமிடத்தில் நின்றிருந்தால் உத்தமான மனைவி அமைவாள்.
ஏழாம் வீட்டில் சுக்கிரன் நின்றிருக்க, நல்ல செல்வ வசதியுள்ள குடும்பத்தில் இருந்து பெண் மனைவியாக அமைவாள்.
குளிகனும் கேதுவும் கூடி ஏழாமிடத்தில் இருக்க, இழிவான பெண்ணை இல்லாள் ஆக்கிக் கொள்வான். ( தூரத்ரீ - என்பது தூரத்தில் ஒதுக்கி வைக்கக் கூடிய குணத்தைக் கொண்டவள் எனக் கொள்க)


சரி.....திருமணப் பொருத்தம் பார்ப்பது பற்றியும் ஏழாமிடத்தைக் கொண்டு, அமையும் பெண்ணின் நிலைகளையும் ( நல்ல பெண்மணி, தீய பெண்மணி, தாசியாகுபவள்....என எல்லா விடயங்களையும் வகுத்துக் கொடுத்துள்ள ) பாடல்களையும் பின்னர் பார்ப்போம் .


27 நட்சத்திரங்களின் பட்டியல்:


1.அசுவினி
14.சித்திரை
2.பரணி
15.ஸ்வாதி
3.கிருத்திகை
16.விசாகம்
4.ரோகிணி
17.அனுஷம்
5.மிருகசீரிடம்
18.கேட்டை
6.திருவாதிரை
19.மூலம்
7.புனர்பூசம்
20.பூராடம்
8.பூசம்
21.உத்திராடம்
9.ஆயில்யம்
22.திருவோணம்
10.மகம்
23.அவிட்டம்
11.பூரம்
24.சதயம்
12.உத்திரம்
25.பூரட்டாதி
13.ஹஸ்தம்
26.உத்திரட்டாதி

27.ரேவதி

திருமணப் பொருத்தம் பார்க்க : ஆண் பெண் இருவரின் நட்சத்திரம் 22 வது நட்சத்திரமாக அமைதல் கூடாது.
 
பெண்ணின் நட்சத்திரத்தில் இருந்து 27 வது நட்சத்திரம் ஆண் நட்சத்திரம் அமையக் கூடாது.
 
ஆனால், இந்த இரண்டு நட்சத்திரமும் ஒரே ராசியாக அமையுமானால், பொருந்தும். வேறு ராசியாக இருந்தால் பொருந்தாது.
 
உ-ம். பெண்ணின் நட்சத்திரம் பரணி. ஆணின் நட்சத்திரம் அசுவினி.
இரண்டு நட்சத்திரங்களும் மேஷ ராசி. பரணிக்கு அசுவினி 27 வது நட்சத்திரம். என்பதால் பொருந்தும்.
 
உ-ம்: பெண்ணின் நட்சத்திரம் அசுவினி. ஆணின் நட்சத்திரம் ரேவதி.
அசுவினியில் இருந்து ரேவதி 27 வது நட்சத்திரம்.
 
 
ஒன்று மேஷ ராசி. மற்றது மீன ராசி என்பதனால் பொருந்தாது.
 
 1. சித்திரை, வைகாசி, ஆனி, கார்த்திகை, தை, மாசி மாதங்கள் திருமணம் செய்ய ஏற்ற தமிழ் மாதங்கள்.
 2. ஆண், பெண் இருவரின் பிறந்த நட்சத்திரம், திதி, மாதங்களில் திருமணம் செய்ய ஏற்ற காலமல்ல.
 3. ஒரே குடும்பத்தில் மகனுக்கோ, மகளுக்கோ இரண்டு திருமணமும் ஆறு மாத இடைவெளிக்குப் பிறகே செய்ய வேண்டும். இந்த விதி தற்பொழுது கடைபிடிப்பதில்லை!
 4. அண்ணன் , தம்பி இருவரும் ஒரே குடும்பத்து அக்கா, தங்கையை திருமணம் செய்தல் கூடாது.
 5. திருமணம் முடிவு செய்த நேரத்தில், அந்த குடும்பத்தில் இறப்பு நிகழ்ந்து விட்டால், 31 நாட்கள் கழித்தே திருமணம் செய்ய வேண்டும்.
 6. மிருக சீரிஷம், அஸ்தம், மூலம், அனுஷம், மகம், ரோகிணி, ரேவதி, உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, சுவாதி - இந்த நட்சத்திரங்கள் இருக்கும் காலம் திருமணம் செய்ய ஏற்ற நட்சத்திர தினங்களாகும்.
 7. மேலே குறிப்பிட்ட நட்சத்திரங்கள் மணமகன் , மணமகள் இருவருக்கும் இருவரது பிறந்த நட்சத்திரத்தில் இருந்து 3 -5 -7 -12 - 14 - 16 - 21 - 25 - வது நட்சத்திர நாளாக வரக் கூடாது. ஏனெனில் தாரா பலமில்லாத நாளாக அமைந்து விடும். • அமாவாசை திதி திருமணம் செய்ய கூடாது.


 1. தேய்பிறையில் பஞ்சமி திதி வரையிலும் , வளர்பிறையிலும் திருமணம் செய்யலாம்.
 2. திங்கட் கிழமை, புதன், வியாழன், வெள்ளி , ஞாயிறு ஆகிய தினங்களில் திருமணம் செய்யலாம்.

 • வேதை நட்சத்திரத்தில் திருமணம் செய்யக் கூடாது.

    • வேதை நட்சத்திர விபரம்

  • அசுவினி - கேட்டை
  1.  
       • பரணி - அனுஷம்
  • கார்த்திகை - விசாகம்
  • ரோகிணி - சுவாதி
  • புனர்பூசம் - உத்திராடம்
  • பூசம் - பூராடம்
 1. ஆயில்யம் - மூலம்
 2. மகம் - ரேவதி
 3. பூரம் - உத்திரட்டாதி
 4. உத்திரம் - பூரட்டாதி
 5. அஸ்தம் - சதயம்
 6. மிருகசீரிடம் - சித்திரை , அவிட்டம்.
 7. திருவாதிரை - திருவோணம்பொருத்தமுள்ள நட்சத்திரங்கள்
பூரட்டாதி – அவிட்டம்
புனர்பூசம் – ஆயில்யம்
திருவாதிரை – மூலம்
ரோகிணி – மிருகசீரிடம்
பரணி – ரேவதி
அனுஷம் – கேட்டை
அசுவினி – சதயம்
பூராடம் – திருவோணம்
உத்திரம் – உத்திரட்டாதி
மகம் – பூரம்
கிருத்திகை – பூசம்
ஹஸ்தம் – சுவாதி
சித்திரை - விசாகம்
 

ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடக்க இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் விரைவில் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடக்க இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் விரைவில் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
1. விதேஹி தேவி கல்யாணம்
விதேஹி விபுலாம் ச்ரியம்
ரூபம் தேஹி ஜயம் தேஹி
யசோ தேஹி த்வி÷ஷா ஜஹி.
2. பத்னீம் மனோரமாம் தேஹி
மானோவ்ருத்தனு ஸாரீனீம்
தாரினீம் துர்கஸம்ஸார
ஸாகரஸய குலோத்பவாம்.
3. விதேஹி தேவி கல்யாணம்
விதேஹி விபுலாம் ச்ரியம்
ரூபம் தேஹி ஜயம் தேஹி
யசோதேஹி த்விஷா ஜஹி

மாமியார் -மருமகள் சண்டை தீர பரிகாரம்

கழுத்திலிருந்து மார்பை வரை உள்ள நீளத்திற்கு வெள்ளியிலான சங்கிலியை மாமியர், மருமகள் இருவரில் ஒருவர் தொடர்ந்து அணிந்து வந்தால் மாமியார் -மருமகள் சண்டை தீரும். நடத்தை விசயமாக சந்தேகத்திற்கு உள்ளாகி அவமானப்படும் பெண்களும் இந்த வெள்ளியிலான அணிகலனை அணியலாம். இது போன்ற பிரச்சினைகளை சந்திக்கும் பெண்களின் ஜாதகத்தில் சுக்கிரன்,சந்திரன் சேர்க்கை இருக்கும்

சந்திராஷ்டமம் நாளில் சங்கடம் தவிர்ப்பது எப்படி?

சந்திராஷ்டமம் நாளில் சங்கடம் தவிர்ப்பது எப்படி?

ஜோதிட சாஸ்திரத்தில் நாம் பலன்களையும், வார, ராசி, நட்சத்திர கோசார பலன்களையும், எந்த நேரத்தில் என்ன செய்யலாம்? எந்தெந்த நேரங்களை தவிர்க்க வேண்டும் என்பதையெல்லாம் நமக்கு ஜோதிட சாஸ்திரம் வழிகாட்ட...ுகிறது. அந்த வகையில் சந்திராஷ்டமம் என்ற அமைப்பு சந்திரனின் சுழற்சியால் ஏற்படுகிறது. சந்திரன் ஒருவர் பிறந்த ராசிக்கு எட்டாம் இடத்தில் வரும்போது சந்திராஷ்டமம் என்கிறோம். இது ஒருவருக்கு என்ன செய்யும் என்பதை காணலாம்.

சந்திரனின் முக்கியத்துவம்

ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் பிரதானமாக இருப்பது லக்னமாகும். இதற்கு அடுத்த நிலையை பெறுவது ராசியாகும். ராசி என்பது நாம் பிறக்கும்போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ, அந்த நட்சத்திரம் அமைந்துள்ள வீட்டை குறிப்பதாகும். சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைத்தான் நாம் ராசி என்கிறோம். அதே நேரத்தில் குரு இருக்கும் இடத்தையோ, ராகு-கேது இருக்கும் இடத்தையோ நாம் ராசி என்று சொல்வதில்லை. இதில் இருந்து சந்திரனின் முக்கியத்துவத்தை நாம் தெரிந்து கொள்ளலாம்.

சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துதான் பிறந்தநாள் கொண்டாடுகிறோம். சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துதான் திருமண பொருத்தம் பார்க்கிறோம். சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துதான் ஒருவருக்கு முதல் தசை எது என்று கணிக்கிறோம். சந்திரன் இருக்கும் ராசிப்படிதான் கோசார பலன்களை பார்க்கிறோம். சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தில்தான் கோயிலில் அர்ச்சனை வழிபாடுகள் செய்கிறோம். சந்திரன் மூலம்தான் நம் ஜாதகத்தில் யோகங்கள், அவயோகங்கள் ஏற்படுகின்றன. இத்தகைய முக்கியத்துவம் பெற்ற சந்திரன் மூலம் நமக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு நெருக்கடியான, அவயோக, இடையூறு ஏற்படுகிறது. அதுதான் சந்திராஷ்டமம் ஆகும்.

நீங்கள் பிறந்த ராசிக்கு ஒவ்வொரு மாதமும், சந்திரன் எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தை கடந்து செல்லும். இதையே சந்திராஷ்டமம் என்கிறோம். சந்திரன்+அஷ்டமம்=சந்திராஷ்டமம். சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான் ‘சந்திராஷ்டம‘ காலம் என்கிறோம். அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டம வேளையாகும்.

பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள், மனசங்கடங்கள், மனச்சோர்வு, இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும். மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர்பார்வையாக தனம், வாக்கு, குடும்பம் எனும் இரண்டாம் இடத்தைப் பார்ப்பதால் அந்த ஸ்தான அமைப்புக்களும் பாதிப்படைகின்றன. ஆகையால் இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுபகாரியங்களை செய்யமாட்டார்கள். மணமகன், மணமகள் ஆகிய இருவருக்கும் சந்திராஷ்டமம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள்.

கிரகப்பிரவேசம், பால் காய்ச்சுதல், வளைகாப்பு, நிச்சயதார்த்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கும் சந்திராஷ்டமத்தை தவிர்த்து விடுவார்கள். முக்கிய பேச்சுவார்த்தைகளை தொடங்க மாட்டார்கள். பிரயாணங்கள் செய்வது, புதிய வண்டி வாங்குவது போன்றவற்றை தவிர்ப்பதும் நலம் தரும்.
சந்திராஷ்டம தினத்தன்று சந்திரனால் நம் மனதில் சில மாற்றங்கள் உண்டாகின்றன. எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுகின்றன. டென்ஷன், கோபதாபங்கள், வாக்குவாதம், மறதி, படபடப்பு, சிடுசிடுப்பு உண்டாகிறது.

இதை நாம் அனுபவபூர்வமாக உணரலாம். ஏனென்றால் சந்திரன் மனோகாரகன், மனதை ஆள்பவன். ஆகையால் நம் எண்ணங்களிலும், செயல்களிலும், கருத்துக்களிலும் நிதான மற்ற நிலை உண்டாகிறது. சந்திரன் ஜெனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைந்து இருந்தாலும், உச்சம், ஆட்சி, நீச்சம் போன்ற அமைப்புக்களில் இருந்தாலும் சந்திராஷ்டமத்தால் கெடுபலன்கள் ஏற்படுவதில்லை என சில ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.

சந்திரன் இருக்கும் இடம்

சந்திரன் தினக்கோள் ஆகும். வேகமாக சுற்றும் இந்த கிரகம் முப்பது நாட்களில் (ஒரு மாதத்தில்) 12 ராசிகளை கடந்துவிடும். இப்படி கடக்கும்போது தினசரி சந்திரன் இருக்கும் இடத்தை பொறுத்து நம் குணாதிசயங்கள் வேறுபடுகிறது. அதே நேரத்தில் லாப நஷ்டங்கள், நிறை குறைகள், சிந்தனை, கோபதாபம், உற்சாகம், வீண் அலைச்சல், பயணங்கள், காதல், காமம் என்று கலவையான பலன்கள் உண்டாகிறது. நாம் பிறந்த ராசிக்கு சந்திரன் எங்கெங்கு வரும்போது என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பதை காணலாம்.

சந்திரன் நாம் பிறந்த ராசியில் இருக்கும் போது, மனம் அலைபாயும். சிந்தனை அதிகரிக்கும். ஞாபக மறதி உண்டாகலாம். வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நலம் தரும்.

இரண்டாம் ராசியில் இருக்கும் போது, பணவரவு உண்டு. பேச்சில் நளினமிருக்கும். வேகம், விவேகம் இருக்கும். கவிஞர்களுக்கு கற்பனை வளம் மிகும்.

மூன்றாம் ராசி: சமயோசிதமாக செயல்படுதல், சகோதர ஆதரவு, அவசிய செலவுகள், உற்சாகம்.
நான்காம் ராசி:பயணங்கள், மனமகிழ்ச்சி, தாய்வழி ஆதரவு, உடல் ஆரோக்கியம்.

ஐந்தாம் ராசி: நல்ல எண்ணங்கள், ஆன்மிக பயணங்கள், தெய்வபக்தி, தெளிந்த மனம், தாய்மாமன் உதவி.

ஆறாம் ராசி: எரிச்சல், டென்ஷன், கோபதாபங்கள், மறதி, வீண்செலவுகள், காயம் ஏற்படுதல்.

ஏழாம் ராசி: பயணங்கள், உற்சாகம், நண்பர்கள் சேர்க்கை, சுற்றுலா, பெண் சுகம்.

எட்டாம் ராசியில் இருக்கும் நாளைத் தான் சந்திராஷ்டமம் என்று சொல்கிறோம். இந்நாளில் மவுனம் காத்தல் நல்லது. தியானம் செய்யலாம். கோயில், குளம் என்று சென்று வரலாம். கொடுக்கல், வாங்கல், வீண் விவாதங்களை தவிர்ப்பது அவசியம்.

ஒன்பதாம் ராசி: காரிய வெற்றி, நல்ல தகவல், குதூகலம், ஆலய தரிசனம், முக்கிய முடிவுகள்.
பத்தாம் ராசி: பயணங்கள், நிறை-குறைகள், பணவரவு, அலைச்சல், உடல் உபாதைகள்.
பதினொன்றாம் ராசி: தொட்டது துலங்கும், பொருள் சேர்க்கை, தரும சிந்தனை, அமைதியான மனம்.
பனிரெண்டாம் ராசி: அலைச்சல், டென்ஷன், கைப்பொருள் இழப்பு, உடல் உபாதைகள், செலவுகள்.

உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம நட்சத்திரம் தரப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட நட்சத்திர நாளில் நிதானமாகவும், கவனமாகவும் இருப்பது நலம் தரும். உதாரணமாக அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் அனுஷம் நட்சத்திரம் வரும் நாள் சந்திராஷ்டம
தினமாகும்.

17ம் நட்சத்திரத்துக்கு வரும் சந்திரன்

உங்களுக்குரிய சந்திராஷ்டம தினத்தை எளிதில் தெரிந்துகொள்ள உதவும் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரம் வரும் நாளே சந்திராஷ்டம தினமாகும்.

பிறந்த நட்சத்திரம் - சந்திராஷ்டம நட்சத்திரம்

அஸ்வினி - அனுஷம்
பரணி - கேட்டை
கிருத்திகை - மூலம்
ரோகிணி - பூராடம்
மிருகசீரிஷம் - உத்திராடம்
திருவாதிரை - திருவோணம்
புனர் பூசம் - அவிட்டம்
பூசம் - சதயம்
ஆயில்யம் - பூரட்டாதி
மகம் - உத்திரட்டாதி
பூரம் - ரேவதி
உத்திரம் - அஸ்வினி
அஸ்தம் - பரணி
சித்திரை - கிருத்திகை
சுவாதி - ரோகிணி
விசாகம் - மிருகசீரிஷம்
அனுஷம் - திருவாதிரை
கேட்டை - புனர்பூசம்
மூலம் - பூசம்
பூராடம் - ஆயில்யம்
உத்திராடம் - மகம்
திருவோணம் - பூரம்
அவிட்டம் - உத்திரம்
சதயம் - அஸ்தம்
பூரட்டாதி - சித்திரை
உத்திரட்டாதி - சுவாதி
ரேவதி - விசாகம்

அமாவாசையானது

சாதாரணமான அமாவாசையானது அனுஷம், விசாகம், சுவாதி நட்சத்திரங்களில் வருமானால் அப்போது செய்கிற சிரார்த்தம் ஒரு வருடத்துக்குரிய திருப்தியை உண்டாக்குகிறது.
திருவாதிரை, புனர்பூசம், பூசம் நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பிதர் தர்ப்பணம் பனிரெண்டு ஆண்டுகள் பிதர்திருப்தி ஏற்படுத்தும். அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பிதரு பூஜையானது, பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலத்தைத் தரும்.
மாசி மாதத்து அமாவாசையானது சதய நட்சத்திரத்தன்று வருமானால் அது பித்ருக்களுக்கு மிகவும் திருப்தியை அளிக்கக்கூடிய காலமாகும். மாசி மாத அமாவாசை அவிட்டம் நட்சத்திரத்தில் வருமானால் அதுவும் பித்ருக்களுக்கு அளவற்ற மனமகிழ்ச்சியைத்தரும். மாதம் அமாவாசை அவிட்டம் நட்சத்திரம் வரும் நாளில் பித்ருக்களை நினைத்து அன்னம் அல்லது தண்ணீர் தானம் செய்தால் பதினாயிரம் ஆண்டுகள் பிதுர்களைத் திருப்தி செய்த பலன் கிடைக்கும்.
மாசி மாதம் வரும் அமாவாசை பூரட்டாதி நட்சத்திரத்தில் அப்போது அந்த நன்னாளில் சிரர்த்தம் செய்தால், பித்ருக்கள் திருப்தி அடைந்து ஆயிரம் யுகங்கள் சுகமாக தூங்குவார்கள் என விஷ்ணுபுராணம் கூறுகிறது.

முகூர்த்த நாள் முக்கியத்துவம்

முகூர்த்த நாள் முக்கியத்துவம்
திருமணம் செய்வதற்கு ஒரு ஆணும் பெண்ணும் எப்படி அவசியமோ, அதே போலத் தான் முகூர்த்த நாள் நிர்ணயிப்பதும். முகூர்த்தம் என்பது ஒன்றரை மணி நேர அளவுள்ள காலமாகும். ஒரு குழந்தையின் வளர்ச்சி, ஆரோக்கியம், புகழ், ஆயுள் போன்றவற்றைப் பார்க்க எப்படி குழந்தையின் ஜனன ஜாதகம் அவசியமோ அதே போல முகூர்த்த நாள் மற்றும் நேரம் நிர்ணயம் அவசியமாகிறது. கணவன், மனைவி பந்தம், சமுதாயத்தில்அவர்கள் வாழ்க்கை சிறத்தல், . இருவருக்கும் உள்ள அன்னியோன்யம், குழந்தைப்பேறு முதலிய பல நிகழ்வுகள் நல்லபடியாக அமைவதற்கு முகூர்த்த நாள் மற்றும் நேர நிர்ணயம் அவசியமாகிறது . மணமக்களின் ஜாதகங்களில் ஒரு சில குறைகள் இருந்தாலும் இந்த முகூர்த்த நேர லக்னம் நன்கு அமையுமானால் அந்தக் குறைகள் தெரியாமல் போகிறது. நாள் செய்வதை நல்லோரும் செய்யார்.
நல்ல நாள் பார்த்து எந்தவொரு வேலையையும் செய்தோம் என்றால் அந்த வேலையை சிறந்த முறையில் நவக்கிரகங்கள் நமக்கு அமைத்துக் கொடுத்துவிடும். மணமக்கள் இருவர் ஜாதகங் களையும் ஒப்பிட்டுப் பார்த்து இவர்களுக்கு திருமணம் செய்விக்கலாம் என்று ஜோதிடர்கள் தெரிவித்த பின்பு, இருவர் வீட்டில் உள்ள அனைவரும் சம்மதம் தெரிவித்த பின்னர் திருமண முகூர்த்த நாளை தேர்வு செய்ய முற்படவேண்டும். திருமணம் ஒருவருக்கு செய்ய முயலும் போது முதலில் அவரது நட்சத்திரத்தின்படி குருபலம் உள்ளதா என்று அறிய வேண்டும்.
குருபகவான் அவரவர் ஜென்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ம் இடங்களில் பிரவேசம் செய்யும் போது குரு பலம் இருப்பதாக கருதப்படுகிறது. குருபகவான் 2 ல் இருக்கும் போது திருமணம் செய்வித்தால் அந்த தம்பதியருக்கு தனசம்பத்துகள் கிடைக்கும்.
5 ல் குரு இருக்கும் போது திருமணம் நடந்தால் சொற்படி நடக்கும் சத்புத்திரர்கள் பிறப்பார்கள்.
7ல் குரு இருந்தால் பெண்கள் என்றும் தீர்க்கசுமங்கலியாக இருப்பார்கள். 9ல் இருக்கும்போது கணவருக்கு சகல செல்வாக்கும்,
11ல் குரு தங்கும் போது திருமணம் செய்தால் மனைவி அல்லது கணவன் மூலம் செல்வங்கள் பல வந்து சேரும். குருபலம் ஆண் பெண் இருவருக்கும் இருப்பின் மிக்க நலம். இதில் பெண்ணிற்கு மட்டுமாவது இருப்பது இன்றியமையாதது. குருபலம் போலவே சூரிய பலமும் சிறிது முக்கியமாக கருதப்படுகிறது.
சூரிய பலம் என்பது ஒருவரின் ஜென்ம ராசிக்கு சூரியன் 3, 6, 10, 11 ம் இடங்களில் பிரவேசம் செய்வதே ஆகும். சூரிய பலம் பெண்ணைவிட ஆணுக்கு மிக முக்கியமாக கருதப்படுகிறது. திருமணக்காலங்கள் மணமக்களுக்கு யோகாதிபதிகளின் தசாபுக்திகளாக அமைந்தால் அந்தத் திருமணம் சீரும் சிறப்புமாக அமையும்.
மணமக்கள் இருவருக்கும் குருபலம் இல்லாத சமயத்தில் இவர்களுக்கு சுக்ரன், அல்லது 2, 7, 11 ம் அதிபதிகளின் தசாபுக்திகள் நடந்தாலும் திருமணம் செய்விக்கலாம். மணமக்களுக்கு அஷ்டம சனி காலத்திலும் விரய சனி நேரத்திலும் திருமணத்தை தள்ளிப்போடுவது சிறப்பை தரும். குருபலம், சூரியபலம், நல்ல தசாபுக்தி மற்றும் சனிபகவானின் தாக்கம் இல்லாத காலங்களை தேர்ந்தெடுத்த பின்னர் ஒரு நல்ல நாளை கீழ்கண்டவாறு தேர்வு செய்யலாம்.
1. சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி மற்றும் தை மாதங்ளை தேர்வு செய்து இவைகளில் மலமாதம் இல்லாத மாதத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
2. வளர்பிறையின் துவிதியை, திரிதியை, பஞ்சமி, சப்தமி மற்றும் திரயோதசி உள்ள நாட்கள்.
3. இருவர் நட்சத்திரத்திற்கும் தாராபலம் ஏற்றார்போல் உள்ள நாட்கள்.
4. அன்றைக்கு சந்திரன் ஐன்ம ராசிக்கு 1, 3, 6, 7, 10, 11 ராசிகளில் இருப்பது.
5. இரு கண்ணுள்ள நாட்களான புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகள் சிறந்தது. ஒரு கண்ணுள்ள நாட்களான ஞாயிறு மற்றும் திங்கள் பாதி சிறந்தது. குருட்டு நாட்களான செவ்வாய் சனியை தவிர்ப்பது உத்தமம்.
6. அக்னி ராசிகளான சிம்மம் மற்றும் மேஷம் முகூர்த்த லக்னமாக இல்லாது இருப்பது.
7. முகூர்த்த லக்னத்திற்க்கு 7, 8 இடங்கள் திதி சூன்ய ராசிகளாக அமையாமல் இருப்பது.
8. முகூர்த்த லக்னத்திற்க்கு ஏழாமிடம் சுத்தமாக இருப்பின் நல்ல கணவன் மனைவி அமையும். எட்டாம் இடம் சுத்தமாயின் நீடித்த திருமணபந்தம். 12ம் இடம் சந்தோஷத்தை குறிக்கின்றது. ஆக 2,7,8ம் இடங்கள் சுத்தமாக இருக்க வேண்டும் மற்றும் எட்டாம் இடத்தை குரு அல்லது சுக்ரன் பார்க்கலாமேவொழிய இந்த இடங்களில்இவர்கள் யாரும் இருக்கக்கூடாது.
9. உபஜெய ஸ்தானங்களான 3, 6, 11 ல் தீய கிரகங்கள் இருப்பது வாழ்க்கையின் வெற்றி மற்றும் ஆதாயங்களை குறிக்கும்.
10. திருமணநாள் மணமக்களின் ஜென்ம நட்சத்திரமாகவோ, ஜென்ம கிழமையாகவோஅமையாமல் இருப்பது மிக நல்லது.
11. நவக்கிரகங்களில் அதிக சுபத்தன்மை பொருந்திய குருவும் சுக்ரனும் மூடம் என்கின்றஅஸ்தங்க தோஷம் அடைந்திருக்க கூடவே கூடாது.
12. ராகு காலம் மற்றும் ஏமகண்டம் போன்ற விஷ நேரங்களை ஒதுக்க வேண்டும். குளிகைகாலத்தைக் கூட தவிர்ப்பது சிறந்தது. காரணம் குளிகை காலத்தில் செய்யும் காரியங்கள்திரும்பவும் செய்ய நேரிடலாம்.
13. மொத்தம் உள்ள பதினோறு கரணங்களில் அசுப கரணங்களை ஒதுக்கவேண்டும்.
சித்தயோகத்தை மாங்கல்ய தாரணத்திற்கும் அமிர்தயோகத்தை சாந்தி
முகூர்த்தத்திற்க்கும் தேர்வு செய்தல் வேண்டும்.
14. “பஞ்சகம்” என்ற முறையில் நல்ல நாளை தேர்வு செய்ய வேண்டும். பஞ்சகமுறையில் பார்த்தால் வருடத்திற்க்கு மிக குறைந்த முகூர்த்த நாட்களே வரும்.எனவே இதற்கு பரிகாரமாக இரத்தினம், சந்தனம், எலுமிச்சை, தீபம் மற்றும் தானியம்முதலியவைகளை துணிமணிகளுடன் சேர்த்து தானம் செய்யவேண்டும்.
15. பெண்ணிற்கு மாதவிலக்குக்கு உரிய நாட்களாக அமையாமல் இருப்பது அவசியம்.ஏனென்றால் இதில் புனிதமான அக்னியை வார்த்து இறைவனை அதில் வரவழைத்து வணங்குகிறோம்.
16. திருமணம் செய்ய இருக்கும் நாளுக்கு 15 தினங்கள் முன்பு அவரவர் குல தெய்வத்திற்கு பொங்கலிட்டு ஆராதனைகள் செய்து பிறகு முன்னோர்களை தியானித்துஅனுமதி பெறவேண்டும்.
இப்படி அமையும் திருமண உறவு என்றும் நிலைத்திருப்பதுடன், ஒருவரையொருவர் விட்டுத் தராமல் அன்புடன் இல்லற இன்பம் பெறுவார்கள் என்பது ஜோதிட ரகசியங்களில் ஒன்றாகும்

பிறந்த நட்சத்திர ஸ்தலம்

வருடத்திற்கு ஒருமுறையாவது உங்களது பிறந்த நட்சத்திர ஸ்தலத்திற்கு உங்களின் நட்சத்திரம் வரும் நாளன்று சென்று வளம் பெறுங்கள்…
1.)அஸ்வினி – முக்கிய ஸ்தலம் – கூத்தனூர்
மற்ற தலங்கள் – ஸ்ரீரங்கம், திருத்துறைபூண்டி, கொல்லிமலை.
2. பரணி – முக்கிய ஸ்தலம் – நல்லாடை
மற்ற தலங்கள் – திருநெல்லிக்கா, கீழப்பறையார், பழனி, பட்டீஸ்வரம், திருத்தங்கல், திருவாஞ்சியம்.
3. கார்த்திகை – முக்கிய ஸ்தலம் – கஞ்சானகரம்
மற்ற தலங்கள் – காஞ்சிபுரம், திருப்புகலூர், கீரனூர், திருச்செந்தூர், திருவொற்றியூர், கானாட்டுமுள்ளூர்.
4. ரோஹிணி – முக்கிய ஸ்தலம் – திருக்கண்ணமங்கை
மற்ற தலங்கள் – காஞ்சிபுரம், திருவானைக்கோவில், ஜம்பை, கழுகுமலை, செம்பாக்கம், கொரட்டூர், நெல்லிச்சேரி, மன்னார்குடி, பெருமாள் அகரம், திருவரங்கம், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி.
5. மிருகசீரிடம் – முக்கிய ஸ்தலம் – எண்கண்
மற்ற தலங்கள் – அம்பர் மாகாளம், ஓசூர், முசிறி, தாழமங்கை.
6. திருவாதிரை – முக்கிய ஸ்தலம் – சேங்காலிபுரம்
மற்ற தலங்கள் – சிதம்பரம், அதிராம்பட்டினம்.
7. புனர்பூசம் – முக்கிய ஸ்தலம் – சீர்காழி
மற்ற தலங்கள் – பழைய வாணியம்பாடி, திருவள்ளூர், திருநெல்வேலி, திருப்பாசூர், திருவெண்ணெய்நல்லூர்.
8. பூசம் – முக்கிய ஸ்தலம் – திருச்சேறை
மற்ற தலங்கள் – விளங்குளம், ஒழுந்தியாபட்டு, ஆவூர், கோனேரிராஜபுரம், பரிதிநியமம், திருச்சுழி, அழகர் கோயில்.
9. ஆயில்யம் – முக்கிய ஸ்தலம் – திருப்புறம்பியம்
மற்ற தலங்கள் – திருந்துதேவன்குடி, நண்டான் கோயில், சங்கரன்கோயில், திருப்புனவாசல், புள்ளபூதக்குடி, திருவிடந்தை.
10. மகம் – முக்கிய ஸ்தலம் – திருவெண்காடு
மற்ற தலங்கள் – திருக்கச்சூர், திருவரத்துறை, கீழப்பழுவூர், ஆலம்பொழில், அன்பில், திருவாலங்காடு.
11. பூரம் – முக்கிய ஸ்தலம் – தலைசங்காடு
மற்ற தலங்கள் – நாலூர், கஞ்சனூர், திருவரங்குளம், புரசைவாக்கம்.
12. உத்திரம் – முக்கிய ஸ்தலம் – கரவீரம்
மற்ற தலங்கள் – காஞ்சிபுரம், திருவக்கரை, செய்யூர், கூவத்தூர், மயிலாடுதுறை, இடையாற்றுமங்கலம்.
13. ஹஸ்தம் – முக்கிய ஸ்தலம் – கோமல்
மற்ற தலங்கள் – தர்மபுரி, செய்யாறு, புவனகிரி, ஏமப்பூர் , எழிலூர், திருவாதவூர், திருவேற்காடு.
14. சித்திரை – முக்கிய ஸ்தலம் – திருவையாறு
மற்ற தலங்கள் – அண்ணன்கோயில், தாடிக்கொம்பு, திருநாரயணபுரம், நாச்சியார் கோயில், திருவல்லம், திருவக்கரை, திருக்கோயிலூர், திருமாற்பேறு.
15. சுவாதி – முக்கிய ஸ்தலம் – திருவிடைமருதூர்
மற்ற தலங்கள் – திருப்புடைமருதூர், பெரியதிருக்கோணம், கடத்தூர், பிள்ளையார்பட்டி, நயினார் கோயில், ஸ்ரீரங்கம்.
16. விசாகம் – முக்கிய ஸ்தலம் – கபிஸ்தலம்
மற்ற தலங்கள் – திருமலைக்கோயில், அத்தாளநல்லூர், தீயத்தூர், திருநன்றியூர், நத்தம்.
17. அனுஷம் – முக்கிய ஸ்தலம் – நாச்சியார் கோயில்
மற்ற தலங்கள் – திருவொற்றியூர், திருவண்ணாமலை, திருப்புனவாசல், திருக்கண்ணமங்கை, நீடூர், திருநன்றியூர்.
18. கேட்டை – முக்கிய ஸ்தலம் – வழுவூர்
மற்ற தலங்கள் – பிச்சாண்டார் கோயில், பசுபதி கோயில், பல்லடம், திருப்பராய்த்துறை.
19. மூலம் – முக்கிய ஸ்தலம் – மயிலாடுதுறை
மற்ற தலங்கள் – மாந்துறை, ஆச்சாள்புரம், பாமணி, கோயிலூர், குலசேகரப்பட்டினம், பொழிச்சலூர், மம்பேடு.
20. பூராடம் – முக்கிய ஸ்தலம் – கடுவெளி
மற்ற தலங்கள் – நகர், சிதம்பரம், இரும்பை மகாகாளம்.
21. உத்திராடம் – முக்கிய ஸ்தலம் – இன்னம்பூர்
மற்ற தலங்கள் – கோயம்பேடு, காங்கேயநல்லூர், பேளூர், கீழ்பூங்குடி, திருப்பூவனூர், திருக்கடிக்குளம், திருப்பூவணம், திருக்கோஷ்டியூர், திருக்குற்றாலம்.
22. திருவோணம் – முக்கிய ஸ்தலம் – திருவிடைமருதூர்.
மற்ற தலங்கள் – ராஜேந்திரப்பட்டினம், திருமுல்லைவாயில், திருப்பாற்கடல்.
23. அவிட்டம் – முக்கிய ஸ்தலம் – திருபூந்துருத்தி
மற்ற தலங்கள் – விருதாச்சலம், திருவான்மியூர், திருக்காட்டுப்பள்ளி, திருகொள்ளிக்காடு, திருமறைக்காடு, கொடுமுடி.
24. சதயம் – முக்கிய ஸ்தலம் – திருப்புகலூர்
மற்ற தலங்கள் – கடம்பனூர், கோயில் கடம்பனூர், ஆதி கடம்பனூர், இளங்கடம்பனூர், வாழிக்கடம்பனூர், பெருங்கடம்பனூர், கடம்பர் கோயில், மேலக்கடம்பூர் , பிச்சாண்டார் கோயில், மதுரை.
25. பூரட்டாதி – முக்கிய ஸ்தலம் – திருக்குவளை
மற்ற தலங்கள் – ரெங்கநாதபுரம்.
26. உத்திரட்டாதி – முக்கிய ஸ்தலம் – திருநாங்கூர்.
மற்ற தலங்கள் – தீயாத்தூர், வைத்தீஸ்வரன் கோயில்.
27. ரேவதி – முக்கிய ஸ்தலம் – இலுப்பைப்பட்டு
மற்ற தலங்கள் – காருகுடி, இரும்பை மாகாளம், திருச்செங்கோடு.

அமானுஷ்ய பரிகாரங்கள்!!!

அமானுஷ்ய பரிகாரங்கள்!!!
(1) வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது கூடவே சிறிது காகித பூ எடுத்து செல்ல விபத்துக்கள் ஏற்படாது
(2)காலை எழுந்ததும் தங்க நாணயம் அல்லது தங்கங்கள் நிறைந்த படம், ரூபாய் நோட்டுகள் நிறைந்த படம் ஒன்று பார்த்து வர செல்வ வளம் பெருகும்
(3) இடது கை கீழே இருக்கும் படி படுத்துறங்க ஆயுள் விருத்தியாகும்
(4) வீட்டை சுற்றி நீரோட்டங்கள்இருந்தாலோ செயற்கையாகஅமைத்து கொண்டாலோ பண புழக்கம் உடனடியாக உயரும்
(5) காரணமில்லாமல் இரவில் குழந்தைகள் தூங்காமல் அழுது கொண்டே இருந்தால் அறையில் கல் உப்பு கலந்த நீரை வைக்க, குழந்தை நன்றாக தூங்கும்
(6) சமையலறையும், படுக்கையரையும் அருகருகே இருக்கும் படி அமைத்து கொண்டால் தம்பதியர் ஒற்றுமை ஓங்கும். இல்லறம் இனிக்கும்.
(7) துர் சக்திகள் நம்மை அண்டாதிருக்க வீட்டு வாசலில் மருதாணி கொத்தை தொங்க விட வேண்டும்
பண வரவிற்கு
மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உண்டாகும். தன அகர்ஷணம் செய்யும் சக்தி மிகுந்தது நொச்சியின் வேர். ஒரு மாதத்திற்கு ஒரு முறை மாற்றலாம்
கண்திருஷ்டி
பிறர் பார்த்து பிரமிக்கும் விதமாக ஒன்று இருந்தால் திருஷ்டி தோஷம் உண்டாகி விடும். இதனைப் போக்குவது அவசியம். மிளகாய் வத்தல், உப்பு, நடைபாதை மண் ஆகிய மூன்றாலும் திருஷ்டி பட்டவர்களுக்கு வலமாக மூன்று முறையும், இடமாக மூன்றுமுறையும் சுற்றி நெருப்பில் போட வேண் டும். இதனை "கண்ணேறு கழித்தல்' என்பார்கள். திருஷ்டி என்பது தவிர்க்க முடியாதது. கழித்து விட்டால் பாதிப்பு உண்டாகாது

எதிர் மறை சக்திகளை விரட்டியடிக்க முட்டை பரிகாரம் !

எதிர் மறை சக்திகளை விரட்டியடிக்க முட்டை பரிகாரம் !
எப்போதும் தடங்கல், எந்த காரியங்களும் முடிவு வரை வந்து பின்பு நடக்காமல் போதல், எப்போதும் மனக்கவலை, தோல்வி பற்றியே எப்போதும் சிந்தனை போன்ற எதிர் மறை சக்திகளை கீழ்க்கண்ட பரிகாரம் மூலம் நம் உடலில் இருந்து விரட்டி அடிக்கலாம். இதை முதல் முதல் ஆரம்பிக்கும் நாள் அமாவாசை நாளாக இருத்தல் நலம். பின்பு தேவைப்படும் போதெல்லாம் செய்து கொள்ளலாம்.
தேவை : 2 கோழி முட்டை
உடைகளை முழுதும் கலைந்து குளியல் அறையில் கிழக்கு நோக்கி நின்று கொள்ளவும். பின்பு 1 முட்டையை எடுத்து அதை ராக் சால்ட் அல்லது கல் உப்பு நீரால் கழுவி கொள்ளவும்.பின்பு சிறிது எலுமிச்சை நீரால் கழுவவும்.
பின்பு கண்களை மூடி கொண்டு பிரபஞ்சத்தை உங்கள் எதிர் மறை சக்திகள் அனைத்தும் விலக வேண்டி கொள்ளவும். பின்பு உச்சந்‌தலையில் ஆரம்பித்து உடல் முழுதும் மெதுவாக ஒரு இடம் விடாமல் முட்டையால் தடவ ஆரம்பிக்கவும். உடலில் உள்ள எதிர் மறை சக்திகள் அனைத்தும் முட்டை சுவீகரித்து கொள்ளும். உடலில் ஒரு இடம் விடாமல் தடவி கொள்ளவும்-ஏதேனும் இடத்தில் வலி இருந்தால் அந்த இடத்தை பிரத்யேகமாக கவனித்து தடவி கொள்ளவும். உள்ளங்கால் வரை தடவ வேண்டும். முக்கியமாக கழுத்தின் பின் புறம், கை கால்களின் முட்டிகளின் பின்புறங்களில் நன்கு தேய்க்கவும் -இந்த இடங்களில் தான் எதிர் மறை சக்திகள் அதிகம் தங்கும். நன்கு தேய்து முடித்ததும் ஒரு பாத்திரத்தில் அதை உடைத்து விட்டு பார்க்கவும்.
முட்டையில் கொப்பளம் அல்லது குமிழ்கள் வரின் எதிர் மறை சக்திகள் எடுக்கப்பட்டு விட்டது என அறிந்து கொள்ளவும். சாரங்களாக வந்தால் மேலும் எடுக்கப்பட வேண்டும் என அர்த்தம். ரத்தம் அல்லது கருப்பு புள்ளிகள் இருப்பின் ஏதோ பெரிய எதிர் மறை சக்தி இருந்தது க விட்டது என அர்த்தம் கொள்க. பின்பு இதை கழிவறையில் கொட்டி அதில் எலுமிச்சை நீர் சிறிது மற்றும் கல் உப்பு போட்டு நீர் விட்டு கழுவி விட்டு, பின்பு நீங்கள் யாம் ஏற்கனவே கூறியுள்ள நம் புற ஒளியை (Aura Cleansing)மிளர செய்யும் குளியல் செய்யலாம் அல்லது ராக் சால்ட் குளியல் செய்யவும். மற்றொரு முட்டையை மூன்று நாட்கள் இரவு தூங்கும் சமயம் ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு அதில் முட்டையை போட்டு,தலை மாட்டில் வைத்து உறங்கி பின்பு காலையில் அந்த நீரை கழிவறையில் கொட்டி விடவும். மூன்று நாட்களும் புதிய நீரை எடுத்து கொள்ளவும். நான்காம் நாள் முட்டையை கழிவரை அல்ல்து தெரு சாக்கடையில் எறிந்து விடலாம்.
மேலை நாடுகளில் பரவலாக கடைபிடிக்கும் பரிகாரம் இது. மிகுந்த சக்தி வாய்ந்தது. செய்து பயன் அடையுங்கள்.

27 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய சித்தர்களும், ஊர்களும். .

27 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய சித்தர்களும், ஊர்களும்.
.
* அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி
.
* பரணி(மேஷம்) = ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கைநல்லூர்(நாகப்பட்டிணம்), ஸ்ரீபோகர், பழனி
.
* கார்த்திகை1(மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி, ஸ்ரீதணிகைமுனி மற்றும் ஸ்ரீசம்ஹாரமூர்த்தி, திருச்செந்தூர்; ஸ்ரீபுலிப்பாணி, பழனி
.
* கார்த்திகை 2, 3, 4 (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம்; ஸ்ரீவான்மீகர், எட்டுக்குடி; ஸ்ரீஇடைக்காடர், திரு அண்ணாமலை.
.
* ரோகிணி (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம்,
ஸ்ரீலஸ்ரீசிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர், திருவலம்
.
* மிருகசீரிடம்1, (ரிஷபம்)=சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர்.
.
மிருகசீரிடம்2 (ரிஷபம்) = ஸ்ரீசட்டைநாதர், சீர்காழி மற்றும் ஸ்ரீரங்கம். ஸ்ரீபாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன்கோவில்.
.
மிருகசீரிடம்3 (மிதுனம்)= ஸ்ரீபாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன் கோவில்.
.
மிருகசீரிடம் 4 (மிதுனம்)=அமிர்த கடேஸ்வரர் ஆலயம், திருக்கடையூர்.
.
* திருவாதிரை (மிதுனம்) = ஸ்ரீஇடைக்காடர் – திருஅண்ணாமலை, ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம்.
.
* புனர்பூசம்1,2,3(மிதுனம்)=ஸ்ரீதன்வந்திரி,ஸ்ரீவசிஷ்டர் – வைத்தீஸ்வரன்கோவில்,
.
புனர்பூசம் 4 (கடகம்)= ஸ்ரீதன்வந்திரி, வைத்தீஸ்வரன் கோவில்.
.
* பூசம்(கடகம்)=ஸ்ரீகமலமுனி, திருவாரூர்; ஸ்ரீகுருதட்சிணா மூர்த்தி,திருவாரூர் (மடப்புரம்)
.
* ஆயில்யம்(கடகம்)=ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கை நல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்; ஸ்ரீஅகத்தியர், ஆதி கும்பேஸ்வரர்கோவில், கும்பகோணம்; ஸ்ரீஅகத்தியர், திருவனந்தபுரம், பொதியமலை, பாபநாசம்.
.
* மகம் (சிம்மம்), ஸ்ரீராமதேவர்,அழகர் கோவில்,மதுரைஅருகில்.
.
பூரம்(சிம்மம்)=ஸ்ரீராமதேவர்,அழகர் கோவில்,மதுரைஅருகில்.
.
* உத்திரம்1(சிம்மம்)= ஸ்ரீராமத்தேவர், அழகர்கோவில், மதுரை அருகில், ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம்.
.
உத்திரம் 2(கன்னி)=ஸ்ரீஸ்ரீசதா சிவப்ரும்மேந்திரா – நெரூர்;
.
* உத்திரம் 3 = ஸ்ரீகரூவூரார் – கரூர் பசுபதீஸ்வரர் கோவில்
.
* உத்திரம் 4 = ஆனிலையப்பர் கோவில் – கருவூர்; கல்யாணபசுபதீஸ்வரர் கோவில் – தஞ்சாவூர்.
.
* அஸ்தம்(கன்னி)=ஆனிலையப்பர் கோவில் – கரூவூர், ஸ்ரீகரூவூரார் – கரூர்.
.
* சித்திரை1,2(கன்னி)=ஸ்ரீகருவூரார் – கரூர்,ஸ்ரீசச்சிதானந்தர் – கொடுவிலார்ப்பட்டி.
.
சித்திரை 3, 4(துலாம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மாயூரம்
.
* சுவாதி (துலாம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் -மாயூரம்
.
* விசாகம்1,2,3 (துலாம்) = ஸ்ரீநந்தீஸ்வரர் – காசி,ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடுதுறை
.
விசாகம் 4 (விருச்சிகம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடு துறை, ஸ்ரீவான்மீகர் – எட்டுக்குடி, ஸ்ரீஅழுகண்ணி சித்தர் – நீலாயதாட்சியம்மன்கோவில், நாகப்பட்டிணம்
.
* அனுஷம்(விருச்சிகம்)= ஸ்ரீவான்மீகி -எட்டுக்குடி, தவத்திரு.சிவஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள், தோளூர்பட்டி, தொட்டியம்-621 215. திருச்சி மாவட்டம்.
.
* கேட்டை(விருச்சிகம்)=ஸ்ரீவான்மீகி – எட்டுக்குடி, ஸ்ரீகோரக்கர் – வடக்குப் பொய்கைநல்லூர், நாகப்பட்டிணம் அருகில்.
.
* மூலம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி – ராமேஸ்வரம், சேதுக்கரை, திருப்பட்டூர்
.
* பூராடம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி – ராமேஸ்வரம், ஸ்ரீசித்ரமுத்து அடிகளார் – பனைக்குளம் (இராமநாதபுரம்), ஸ்ரீபுலஸ்தியர் – ஆவுடையார்கோவில்.
.
* உத்திராடம்1(தனுசு)=ஸ்ரீகொங்கணர் – திருப்பதி, ஸ்ரீதிருவலம் சித்தர் – திருவலம்(ராணிப்பேட்டை), ஸ்ரீலஸ்ரீமவுன குருசாமிகள் – தங்கால் பொன்னை (வேலூர் மாவட்டம்)
.
* உத்திராடம் 2,3,4 (மகரம்) =ஸ்ரீகொங்கணர் – திருப்பதி
.
* திருவோணம்(மகரம்)=ஸ்ரீகொங்கணர் – திருப்பதி, ஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரால் – நெரூர், ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீகருவூரார் – கரூர், ஸ்ரீபடாஸாகிப் – கண்டமங்கலம்.
.
* அவிட்டம்1,2 (மகரம்); அவிட்டம் 3,4 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம் (திருமூலகணபதி சந்நிதானம்).
.
* சதயம் (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீசட்டநாதர் – சீர்காழி, ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீதன்வந்திரி – வைத்தீஸ்வரன் கோவில்.
.
* பூரட்டாதி 1,2,3 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீதட்சிணாமூர்த்தி – திருவாரூர். ஸ்ரீகமலமுனி – திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் – திருவாடுதுறை, சித்தர் கோவில்,சேலம் ஸ்ரீசதாசிவப்ரும் மானந்த ஸ்ரீசிவபிரபாகர சித்த யோகி. பரமஹம்ஸர் – ஓமலூர் – பந்தனம்திட்டா.
.
பூரட்டாதி4(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, ஸ்ரீஆனந்த நடராஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), பரம்மானந்த ஸ்ரீசித்தயோகி பரமஹம்ஸர்,ஓமலூர்.
.
* உத்திரட்டாதி(மீனம்)=சுந்தரானந்தர் ஃ மதுரை; ஆனந்த நடராஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), ஸ்ரீமச்சமுனி – திருப்பரங்குன்றம்.
.
* ரேவதி(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, குனியமுத்தூர் சுவாமிகள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி.

உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக

உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக
இதை உங்கள் மனைவிக்கு பொறுமையாக கிழக்கு நோக்கி அமர்ந்து படித்து கூறவும்
48 நாட்களுக்கு பின் அது உங்களுக்கு புரியும்
1) ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான்.
அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை.
அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள்.
ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம்.
அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.
2) வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும்.
விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.
நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு.
லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி.
நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும்.
எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது.
நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.
3) சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.
4) தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.
5) பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால்?
பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான்.
கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.
6) செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.
7) சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.
8) காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்
9) தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.
10) விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும்.
‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.
11) விளக்கை தானாக மலையேற விடக்கூடாது,
ஊதியும் அமர்த்தக்கூடாது.
புஷ்பத்தினாலும் மலையேற்றக்கூடாது.
அப்போ எப்படித் தான் சார் மலையேற்றுவது என்று தானே கேட்க்கிறீர்கள்?
அப்படி கேளுங்க….
தீபத்தை எப்போதும் கல்கண்டை கொண்டு தான் அமர்த்தவேண்டும்.
12) வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது.
அமங்கலச் சொற்கள் பேசவே கூடாது.
13) மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும்.
14) ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள்.
15) எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது.
எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும்.
16) எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.
17) வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும்.
அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.
18) எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
19) எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது.
20) சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.
21) தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.
22) குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், நோயாளிகளிடமும் கோபத்தைக் காட்டக் கூடாது.
கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை உபயோகிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடையும். இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும்.
அன்பு உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும்.
23) அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது.
கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும்.
கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.
24) பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.
25) அமாவாசை யன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது
26) வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.
27) இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.
28) வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்.
29) பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது.
30) மங்கையர்கள் நெற்றிக்கு குங்குமம் இடாமல் ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது.
31) விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறர்க்குக் கொடுக்கக் கூடாது.
32) விருந்தினர் போன பிறகு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடாது.
33) கோலம் இட்ட வீட்டில் திருமகள் தங்குவாள்.
வீட்டு வாசலில் கோலம் இடுவது அவசியம்.
பிளாட்களில் வசிப்பவர்கள் தங்கள் மெயின் டோர் வாசலில் கோலம் வரையலாம்.
34) ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொடுக்கக் கூடாது.
கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல்படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும்.
35) துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது.
36) உப்பைத் தரையில் சிந்தக் கூடாது.
அரிசியைக் கழுவும் போது தரையில் சிந்தக் கூடாது.
37) வாசல்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.
38) பணம், நாணயம் உள்ளிட்டவைகளை கண்ட கண்ட இடத்தில் வைக்கக்கூடாது.
ஆண்கள் பணம் வைக்கும் பர்ஸை, ஏ.டி.எம். கார்டுகளை பின்புறத்தில் வைத்துக்கொள்ளாது, சட்டையின் உள் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளவேண்டும்.
39) வெற்றிலை, வாழை இலை இவைகளை வாடவிடக் கூடாது, வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.
40) சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது. பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது.
41) அக்னியை வாயால் ஊதி எழுப்பவோ அணைக்கவோ கூடாது.
42) அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாது
43) நகத்தை கிள்ளி வீட்டில் போட்டால் தரித்திரம் உண்டாகும்.
44) பெண்கள் தலைவிரி கோலத்துடன் காட்சியளிப்பது கூடாது.
45) சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில் உபயோகிக்கவேண்டும்.
46) ஈரத் துணி அணிந்து பூஜை செய்யக்கூடாது.
47) பெண்கள் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் அணியாமல் இருக்கக்கூடாது.
48) தங்கம் எனப்படும் சொர்ணம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது.
49) பெண்கள் மாதவிடாய் உற்றிருக்கும் சமயம் அவர்களின் நிழல் சுவாமி படங்கள் மீது விழக்கூடாது
50) தைரியமாக ஒருவன் தர்மம் செய்தால், துணிவாக லக்ஷ்மியும் அருளை அவன் மீது சொரிந்துவிடுகிறாள்.
இதையெல்லாம் செய்தால் இருக்கிற செல்வம் தங்கும்.
லட்சுமி தேவி நம் வீடு தேடி ஓடி வருவாள்.

எந்த ராசிக்கு யார் அதிபதி? யார் உச்சம்?


சாதரணமா ஒரு கிரகத்துக்கு - சக்தி ஒரு மடங்கு னா, ஆட்சி ஸ்தானங்களில் மூன்று மடங்கு சக்தியுடன் இருக்கும்.

அதைப் போல , சில வீடுகள் - அந்த கிரகங்களுக்கு - உச்ச பலம் , நீச பலம் என்றும் இருக்கிறது. உச்ச வீடுகளில் அந்த கிரகங்கள் - ஐந்து மடங்கு பலத்துடன் இருக்கும். நீச வீடுகளில் , பலம் இழந்து பரிதாபமாக இருக்கும்.

இதைப் போல, ஒவ்வொரு இடமும் , ஒவ்வொரு கிரகத்திற்கு , நட்பு, பகை, சமம் என்று மூன்று பண்புகளுடன் இருக்கும். நம்ம வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரங்க கிட்டே , நாம இருப்போம் இல்லே.. ஒருத்தரைப் பிடிக்கும். ஒருத்தரை பிடிக்காது.. அந்த மாதிரி..