Thursday, November 20, 2014

காளி வழிபாடு

காளியை வழிபட்டால் சகலயோகங்கள் பெறலாம். காளிவழிபாடு தொன்று தொட்டு நம்மிடையே இருந்து வருகிறது. காளி கோயில்கள் பெரும்பாலும் தனித்தே காணப்படும். ஒரு சில சிவன் கோவில்களிலும் காளிதேவி அருள்பாலிக்கிறார். இவள் கலியுக தெய்வம், தன்னை நம்பியவர்களை இவர் கைவிடமாட்டார்.  
 
விரதங்களைக் கடைபிடித்தல், பலியிடுதல், தீ மிதித்தல், ஆகிய வழிபாடுகள் இவரைச் சார்ந்தவை.  பத்ரகாளி, மாகாளி, பிடாரி, எல்லையம்மன், வடக்குவாசல் செல்வி, ஆயா செல்லியம்மாள், மகமாயி என்றெல்லாம் இவரை அழைப்பர். `காலி' என்று இவரை  முதலில் அழைத்தனர். இதற்கு `காலத்தின் வடிவமானவள்' என்று பொருள்.  
 
பின்னர் `காளி' என மாறியது. இதற்கு `கருப் பாவள்' என்று பொருள். சிவபெருமாளை நோக்கி இவர் கடும் தவம் புரிந்து தன் கருப்பு நிறத்தை மாற்றி பொன்னுடல் பெற்றார். இதன் பிறகு இவர் `கவுரி' எனப்பட்டார். `கவுரி' என்றால் தங்க உடல் பெற்றவர் எனப் பொருள். நீங்கிய கருப்பு நிறம். `கவுசகி' என்று பெயர் பெற்று மீண்டும் காளியாயிற்று.  
 
சிவபுராணத்தில் காளியை `ஆதி காளி' என்கின்றனர். ஜைன புத்த மதங்களில் 24 பட்சிகளின் பெயர் சொல்லப்பட்டுள்ளது. அதில் ஒருத்திக்கு `மகாகாளி' என்று பெயர். அதாவது, காலத்தால் அழிக்க முடியாத தெய்வமாக இவர் விளங்குகிறார்.  
 
பார்ப்பதற்கு பயங்கரமாக இருப்பாரே  தவிர, இவரைப் போல குணவதி யாருமில்லை. சதயம் நட்சத்திரக்காரர்களின் தெய்வம் காளி.நல்லவருக்கு நல்லவர், கெட்டவருக்கே மகா கெட்டவராக இவர் விளங்குறார்.  

செல்வம் பெற எளிய பரிகாரம்

யந்திரங்கள் மிக சக்தி வாய்ந்தவை.பல பெரிய, நடக்க முடியாத விஷயங்களுக்கெல்லாம் முற்காலத்தில் யந்திரங்கள் உபயோகித்து பயன் அடைந்துள்ளனர். இது, நம் நாட்டில் மட்டும் அல்ல பல் வேறு நாடுகளிலும் உள்ள நடைமுறையே. இதில் மிக எளிய அனைவரும் வீட்டிலேயே பின்பற்ற கூடிய, அதுவும் ஐப்பசி மாதம் தொடங்க வேண்டிய ஒரு சுலப தன ஆகர்ஷன முறையை இங்கே கொடுக்கிறேன். குபேரர் உருவம் அல்லது படம் வைத்து செய்வது மிக சிறப்பு. (சீனத்து சிரிக்கும் குபேரர் சிலை அல்ல) இது நாளை முதல் ஆரம்பித்து (சனிக்கிழமை-18.10.2014-காலை 10-11 அல்லது மாலை 5-6 தொடங்குவது சிறப்பு.

கீழே கொடுக்கப்பட்டுள்ள குபேர யந்திரத்தை அரிசி மாவினால் பூஜை அறையில் வரைந்து கொள்ளவும் (கோலமிடவும்-மாதிரி கோலமும் கொடுக்கப்பட்டு உள்ளது) பின்பு ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு-ஒரு ரூபாய் நாணயத்தை வைக்கவும். நாணயத்தின் மேல் ஒரு சிகப்பு ஒரு வெள்ளை பூவையும் வைக்கவும். கோலத்தின் முன் சுத்தமான நெய் தீபம் மண் அகலில் ஏற்றவும். இதை வடக்கு திசையில் செய்தால் சிறப்பு-அல்லது பூஜை அறையில் செய்யலாம். விளக்கேற்றியதும் கீழ் கண்ட குபேர மந்திரத்தை 11 முறை கூறி வழிபடவும். பின்பு நிவேதனம் செய்து பூஜையை முடித்து கொள்ளலாம். விளக்கு அணைந்ததும் 9 நாணயங்களையும் எடுத்து தனியாக வைத்து கொள்ளவும். மறு நாள் அதே நாணயத்தை உபயோகிக்கலாம். இதை ஐப்பசி மாதம் முழுதும் செய்து வர, குபேரர் நம் அனைத்து பண தேவைகளையும் நிறைவேற்றி செல்வ செழிப்போடு வாழ வைப்பார். மேலும் ஐப்பசி மாதம் முடிந்ததும் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளியிலும் இதை செய்யலாம். குறிப்பு : நாளை மட்டும் நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற நாட்களில் தங்களால் முடிந்த நேரத்தில் செய்யலாம்.
மந்திரம் : ஓம் ஷ்ரீம் ஓம் ஹ்ரீம் ஷ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஷ்ரீம் க்லீம் விட்டேஸ்வராய நமஹ :

Tuesday, November 4, 2014

சனி பெயர்ச்சி பலன்கள் 2014

2014 சனி பெயர்ச்சி பலன்கள் நவ.02, 2014 முதல், அக். 25, 2017 வரை

நவ கிரகங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராகவும் ஈஸ்வரன் பட்டம் பெட்டவராகவும் உலக மக்கள் அனைவரும் பயந்து பணிந்து பக்தியுடன் வணங்கப் பெறுபவராகவும் திகழ்பவர் சனீஸ்வர பகவான் ஆவார். பொதுவாக குரு மற்றும் சனி பெயர்ச்சி அனைவராலும் ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது. திருக்கணித பஞ்சாங்க முறைப்படி 02-11-2014 ஞாயிறு கிழமை அன்று இரவு 08-54 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். விருச்சிக ராசியில் சனி சுமார் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார். இந்த காலகட்டத்தில் பன்னிரெண்டு ராசியில் பிறந்த அன்பர்களுக்கு ஏற்படக்கூடிய பலன்களை காண்போம். வானியலில் சனி: நம் முன்னோர்கள் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களையும் அறிந்திருந்தனர், இவை நம் கண்ணுக்கு தெரியக் கூடிய கிரகங்கள் ஆகும். இந்த ஏழு கிரகங்களில் சனிக்கு மட்டும் சனைச்சரன் என்று பட்டம் அளித்ததிலிருந்து சனியின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம். சனி பிற கிரகங்களை விட மிகவும் மெதுவாக நகர்கிறது. சனி பூமிக்கு அப்பால் சுற்றும் வெளிவட்ட கிரகமாகும். இது சூரிய மண்டலத்தில் கடைசி கிரகமாகும். சூரியனிலிருந்து மிகவும் தொலைவில் சுற்றி வருகிறது. சனி நீல நிற பந்து போன்றும் மூன்று பொது மையம் கொண்ட மஞ்சள் நிற வளையங்களால் சூழப்பட்ட நிலையில் இருக்கிறது. இந்த வளையங்கள் தனித்தனியாக உள்ளன. இரு வளையங்களுக்கிடையே கருமையான இடைவெளி உள்ளது. சனி சூரியனிலிருந்து 886 மில்லியன் மைல் தூரத்தில் உள்ளது குறுக்களவு 75000 மைல்களாகும். சனியை பூமியுடன் ஒப்பிடும் பொழுது 700 மடங்கு திண்மையுடையதாகவும் பூமியை விட 100 மடங்கு எடையில் குறைந்ததாகவும் இருக்கிறது. நம் பூமிக்கு ஒரு சந்திரன் இருப்பது போல சனியை ஒன்பது சந்திரன்கள் சுற்றி வருகின்றன. சனி ஒரு முறை சூரியனை சுற்றி வர ஏறத்தாழ இருபத்து ஒன்பதரை வருடங்கள் எடுத்துக் கொள்கிறது. எனவே சனி ஒவ்வொரு ராசியையும் கடந்து செல்ல இரண்டரை வருடங்களை எடுத்துக் கொள்கிறது. புராணத்தில் சனி: புராணத்தில் சனி எமன் என்று அழைக்கப்படுகிறார். சிவன் அம்சமான ருத்திரனின் செயலை சனி செய்கிறார். பனி போன்ற குளிர்ச்சியான கைகள் கொண்டுள்ளவர் என்றும் கூறப்படுகிறது அதாவது ஒருவர் இறந்துவிட்டாரென்றால் அவரது உடல் குளிர்ந்துவிடும் என்பதை இது காட்டுகிறது. தீய பலங்களை தருகின்ற குளிகன், மாந்தி ஆகியோருக்கு சனி தந்தையாகிறார். சனி நீல நிறமாக இருப்பதால் நீலன் என்றும் மெதுவாக செல்வதால் மந்தன் என்றும் முடவன் என்றும் அழைக்கப்படுகிறார். சனியின் ஆதிக்கம் மிக்கவர்கள் மந்தமாக செயல்படுவார்கள் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது. ராவணனின் மகன் இந்திரஜித் பிறக்கும் நேரத்தில் எல்லா கிரகங்களும் இந்திரஜித்தின் ஜாதகத்தில் லக்கினத்திற்க்கு பதினொன்றாவது பாவகத்தில் அமரும் வகையில் ராவணன் திட்டமிட்டிருந்தார். ஜோதிடவியலில் லக்கினத்திற்கு பதினொன்றாம் பாவகம் என்பது ஜாதகரின் ஆசை, விருப்பம் போன்றவை நிறைவேறுவதற்கு துணை புரியும் பாவகமாகும். பதினொன்றாவது பாவகத்தில் இருந்த சனி தன் காலை பன்னிரெண்டாம் பாவகத்தில் நீட்டிக் கொண்டார். ஒருவர் ஜாதகத்தில் லக்கினத்திற்கு பன்னிரெண்டாம் பாவகத்தில் சனி இருந்தால் ஜாதகருக்கு அற்பாயுள் என்று கூறப்படுகிறது. ராவணனுக்கு மகன் பிறந்துள்ளதாக தகவல் தெரிவித்தவுடன் அவர் எல்லா கிரகங்களும் இந்திரஜித்தின் ஜாதகத்தில் பதினொன்றாவது பாவகத்தில் இருக்கிறதா என்பதை நிச்சயம் செய்துகொள்ள விரும்பினார் அப்பொழுது சனி தன் கால பன்னிரெண்டாவது பாவகத்தில் நீட்டிக் கொண்டிருப்பதை கண்டார். மித மிஞ்சிய கோபத்திற்கு வசப்பட்ட ராவணன் உடனே சனியுடைய காலை துண்டித்து விட்டார். எனவே சனி முடவன் என்று அழைக்கப்படுகிறார். சூரியனின் மகன் சனி சனி சூரியனுடைய மகன் ஆவார். சனி சூரியனுடனும் சந்திரனுடனும் ஒத்துப்போவதில்லை இதன் காரணமாகத்தான் ஒளிரும் கிரகங்களான சூரியன் மற்றும் சந்திரனுக்குறிய ராசிகளுக்கு நேர் எதிரில் உள்ள மகரம் மற்றும் கும்பம் ராசிகள் சனிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன இவை இருள் ராசிகள் என்று ஆதியில் குறிப்பிட்டனர். மேற்கத்திய ஜோதிடத்தில் சனி யுரேனசின் மகன் என்று கூறுகிறார்கள். சனி ரேஹா என்பவரை மணம் புரிந்துகொண்டார் தனக்கு பிறக்கும் குழந்தைகள் உலகத்தை ஆளும் என்பதை தெரிந்துகொண்டு அவைகளை அழித்தார். சனிக்கு நேர்மாறான குணத்தை கொண்ட குரு ஒருவருக்கு தொடர்ந்து வாழ்வளிக்கக்கூடியவர். எனவே குரு பிறந்தவுடன் குரு வம்சத்தை அழிக்கவந்த சனியிடம் குருவின் தாயார் ஒரு கடினமான பொருளை ஒரு துணியில் சுற்றி இது தான் குரு எனக் கொடுத்தார், அதை சனி அழித்தார் அதனால் தான் குரு பிழைத்தார். கடவுள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் பாணியிலேயே பதிலளிக்கிறார். சனி தன் தந்தையான யுரேனசை ஆட்சி இழக்கச் செய்தார், பதிலுக்கு குரு சனியை ஆட்சி இழக்க செய்து இயற்கையின் விதிமுறைகளை கற்பித்தார். இது போன்று பல புராணக் கதைகள் வழங்கப்படுகின்றன. சிவனின் குணங்களைப் பெற்ற சனி சிவனுடைய கடமைகளை செய்கிறார். சனி நீலன் என்றும் சிவன் நீலகண்டன் என்றும் அழைக்கப்படுகின்றனர். சனி பிப்ரவரி-மார்ச் மாதங்களை குறிக்கும் சிசிர ருதுவை ஆள்கிறார். இவை சனியை குளிர்ச்சியான மாதங்கள் ஆகும். ஜோதிடத்தில் சனி: சனி ஒரு வறண்ட குளிர்ச்சியான கிரகம். ராசி மண்டலத்தில் மகரம், கும்பம் ஆகிய இரு ராசிகளை சொந்த ராசிகளாக பெற்றுள்ளது இவ்விரு ராசிகளில் கும்பத்தை மூலத்திரிகோண ராசியாகக் கொண்டுள்ளது. பகல் நேர ராசி கும்பம் என்றும் இரவு நேர ராசி மகரம் என்றும் கூறப்படுகிறது. சனி சூரியனின் மகன் என்று புராணங்கள் கூறினாலும் சூரியனின் ராசிக்கு எதிர் ராசியை ஆட்சி செய்கிறார். சனி பூரண பலம்-உச்ச பலம்-பெறும் ராசி துலாம், இங்கு சூரியன் மிகவும் பலவீனம்-நீசம்-பெறுகிறார். சனி மிகவும் பலவீனம்-நீசம்-அடையும் ராசி மேஷம் இங்கு சூரியன் பூரண பலமான உச்சம் பெறுகிறார். சூரியனுக்கு சொந்தமான சிம்மம் ராசியிலும் சந்திரனுக்கு சொந்தமான கடகம் ராசியிலும் சனி பகை நிலை அடைந்து பலம் குறையும் நிலையில் தீய பலன்களையும் சுக்கிரனுக்குறிய ரிஷபம் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு சனி யோகாதிபதியாகி உன்னத பலன்களையும் அளிக்கிறார். ராசி மண்டலத்தில் அமைந்துள்ள இருபத்தியேழு நட்சத்திரங்களில் பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் சனியின் நட்சத்திரங்கள் ஆகும். இந்த மூன்று நட்சத்திரங்களில் உள்ள கிரகங்கள் ஜாதகத்தில் சனி இருக்கும் இடம் பெற்ற ஆதிபத்தியம் ஆகியவற்றுக்கு தக்கவாறு பலன்களை அளிக்கின்றன. சனியின் தசா ஆண்டுகள் பத்தொன்பது ஆண்டுகளாகும். உற்பத்திக்கும் விரிவாக்கத்திற்கும் காரணகர்த்தா குரு. குரு உற்பத்தி செய்வதை சனி அளித்து சமநிலையை உண்டாக்குகிறார். சனி ஒரு குளிர்ச்சியான கிரகம் எனவே சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் எல்லாவற்றிலும் குளிர்ச்சியை விரும்புவார்கள் மேலும் கசப்பு, துவர்ப்பு மற்றும் புளிப்பான பொருட்களையே விரும்புவார்கள். பகலில் பிறந்தவர்களுக்கு சூரியன் தந்தை எனவும் இரவில் பிறந்தவர்களுக்கு சனி தந்தை எனவும் சில ஜோதிட நூல்கள் கூறுகின்றன. அவரவர்கள் கர்மவினைக்கு தக்கவாறு சனி சொர்க்கதிற்க்கோ நரகத்திற்க்கோ அனுப்புகிறார். சனி சுத்தமான நீலத்தை ஆளுகிறார். மேற்கத்திய ஜோதிடத்தில் சனி கருப்பு, கரும் பழுப்பு மற்றும் நீல நிறத்தை ஆளுவதாக கூறப்படுகிறது.. சனி சுரங்க கனிமப் பொருட்கள், குகைப் பாதை, சுடுகாடு, கரி போன்றவைகளை குறிக்கிறார். சனி விளை நிலங்களையும் பூமிக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகள் நிலக்கடலை போன்ற தாவர வகைகளையும் குறிக்கிறார். நீண்ட காலம் சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய மற்றும் குணப்படுத்த முடியாத நோய்களை சனி கொடுக்கிறார். குறிப்பாக எலும்பு, தேமல், காக்காய் வலிப்பு, வாதம் போன்றவற்றிற்கு சனி காரணமாகிறார். மேலும் சனி ஒருவரின் ஆயுளுக்கு பொறுப்பேற்கிறார். சனியின் தலம் திருநள்ளாறு இங்கு சனியின் கதிர்வீச்சுகள் மிக அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. சனியின் தேவதை எமன், கருங்குவளை மலரைக் கொண்டு வழிபட்டால் சனி மனம் மகிழ்வார். இவரது தானியம் எள், உலோகம் இரும்பு, வஸ்திரம் கருப்பு பட்டு, விருட்சம் வன்னி மரம், மேற்கு திசைக்குறியவர், பஞ்சபூத தத்துவத்தில் காற்று தத்துவத்தை குறிப்பவர் ஆவார். சனி ஜாதகத்தில் தான் இருக்கும் இடத்திலிருந்து மூன்று,ஏழு,பத்து ஆகிய இடங்களை பார்ப்பார். கோசார சனியின் ஸ்தான பலன்கள்: வான் மண்டலம் பன்னிரெண்டு ராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியிலும் சுமார் இரண்டரை ஆண்டு காலம் சனி சஞ்சாரம் செய்கிறார். கோச்சாரத்தில் ஜாதகரின் ராசிக்கு மூன்று,ஏழு,பதினொன்று ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் பொழுது நல்ல பலன்களை தருவார். ஜாதகரின் ஜன்ம ராசிக்கு பன்னிரெண்டாவது ராசி, ஜன்ம ராசி, ஜன்மராசிக்கு இரண்டாவது ராசி ஆகிய ராசிகளில் சனி சஞ்சரிக்கும் பொழுது ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் என்ற கணக்கில் ஏழரை சனி என்று அழைக்கப்படுகிறது. இதில் ஜன்ம ராசியில் சனி சஞ்சரிப்பதை ஜன்ம சனி என்று அழைக்கப்படும். ஏழரை சனி காலத்தில் ஜன்ம சனியே அதிக தீய பலனை தரும். ஜன்ம ராசிக்கு ஏழாவது ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது கண்டக சனி என்று அழைக்கப்படுகிறது. ஜன்ம ராசிக்கு எட்டாவது ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது அஷ்டம சனி என்று அழைக்கப்படுகிறது. ஜன்ம ராசிக்கு நான்காவது ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது அர்த்தாஷ்டம சனி என்று அழைக்கப்படுகிறது. மேற்கண்ட ராசிகளை தவிர்த்து ஐந்து, ஒன்பது,பத்து ஆகிய ராசிகளில் பொதுவாக சனி நல்ல பலன்களையே தருவார் என்பது நம்பிக்கை. மேற்கண்டவாறு கணக்கிட்டு பார்க்கும் பொழுது ஜன்ம சனி, கண்டக சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி என நான்கு இடங்களில் பத்து வருடங்கள் (2½X4=10) வீதம் மூன்று சுற்றுகளில் மொத்தம் முப்பது வருடங்கள் சனியால் கஷ்டம் ஏற்படுகிறது. இதனால் தான் முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை என்ற பழமொழி பழக்கத்தில் உள்ளது. மங்குசனி ஏழரை சனி ஒருவரது வாழ்நாளில் நான்கு முறை தனது தாக்கத்தை கொடுக்கும் என்பது நூல்களின் கருத்து. முதல் சுற்று மங்கு சனி எனப்படும். இந்த காலகட்டத்தில் அரசால் கஷ்டம் உண்டாகும், பல சோதனைகள் ஏற்படும், படிப்பு தடைபடும், உடல் நலம் கெடும் தீய பலன்களே அதிகம் நடை பெறும். பொங்கு சனி இரண்டாவது சுற்று பொங்கு சனி எனப்படும். இந்த காலகட்டத்தில் திருமணம், வேலைகிடைத்தல், குழந்தை கிடைத்தல், வீடு கட்டுதல் போன்ற மங்கள காரியங்கள் நடைபெறும். இதன் இறுதி காலகட்டத்தில் தாய் தந்தைக்கு மரணம் நேரிடலாம். குங்கு சனி மூன்றாவது சுற்று குங்கு சனி எனப்படும். இந்த காலகட்டத்தில் எப்பொழுதும் மன சஞ்சலம், கவலை, துக்கம், துயரம் மிகுந்திருக்கும். ஜாதகப்படி ஆயுள் முடியுமானால் மரணம் உண்டாகலாம். மரண சனி நாங்காவது சுற்று மரண சனி எனப்படும். இந்த காலகட்டத்தில் சுய நினைவு இழத்தல், தன்னிலை இழத்தல், மரணம் உண்டாகுதல் ஆகியவை நடைபெறும். சனி பன்னிரெண்டு ராசிகளில் பெறும் பலம்: வரிசை எண் ராசிகளின் பெயர் சனியின் நிலை பலம் விகிதம் 01 மேஷம் நீசம் 0 சதவிகிதம் 02 ரிஷபம் நட்பு 40 சதவிகிதம் 03 மிதுனம் நட்பு 40 சதவிகிதம் 04 கடகம் பகை 10 சதவிகிதம் 05 சிம்மம் பகை 10 சதவிகிதம் 06 கன்னி நட்பு 40 சதவிகிதம் 07 துலாம் உச்சம் 100 சதவிகிதம் 08 விருச்சிகம் பகை 10 சதவிகிதம் 09 தனுசு சமம் 30 சதவிகிதம் 10 மகரம் ஆட்சி 50 சதவிகிதம் 11 கும்பம் ஆட்சி&மூ.தி * 75 சதவிகிதம் 12 மீனம் சமம் 30 சதவிகிதம் * மூ.தி. - மூலதிரிகோணம் சிறிது நல்ல பலன் அஷ்டம சனி தீய பலன் கண்டக சனி தீய பலன் பூரண நல்ல பலன் சிறிது நல்ல பலன் 02-11-2014 பன்னிரெண்டு ராசிகளுக்கும் சனி கொடுக்கக்கூடிய பலன்கள் சிறிது நல்ல பலன் பூரண நல்ல பலன் அர்த்தாஷ்டம சனி தீய பலன் ஏழரை சனி தீய பலன் ஏழரை சனி தீய பலன் ஏழரை சனி தீய பலன் பூரண நல்ல பலன் பொதுவாக ஏழரை சனி காலத்தில் தீய பலன்களே நடக்கும் என்பது நம்பிக்கை. சனி ஆயுள் காரகன் எனவே ஆயுள் முழுவதும் பயன் தரத்தக்க திருமணம் நடைபெறுதல், குழந்தை பிறத்தல், உத்தியோகம் கிடைத்தல், வீடு கட்டுதல் போன்ற நல்ல பலன்களும் நடைபெறுவது உண்டு கோச்சார பலன்கள் என்பது பொதுவானதாகும். ஒவ்வொருவர் ஜாதகமும் பல்வேறு அம்சங்களைக் கொண்டதாகும். ஜாதகத்தில் லக்கினம், ஒன்பது கிரகங்களும் அமர்ந்துள்ள ஸ்தானம், அவை பெற்றிருக்கும் பலம், அவை நிற்கக்கூடிய நட்சத்திரம், ஜன்ம ராசி, ஜன்ம நட்சத்திரம், ஜனன கால தசாபுத்தி, தற்காலத்தில் நடைபெறும் தசாபுக்தி, தற்காலத்தில் ஒன்பது கிரகங்களும் சஞ்சரிக்கும் நிலை, ஜனன ஜாதகத்திலும் கோச்சாரத்திலும் தசாநாதன் மற்றும் புத்தி நாதன் ஆகியோர்கள் பெற்றுள்ள தொடர்பு, ஜனன கால கிரகங்களுக்கும் கோச்சார கிரகங்களுக்கும் உள்ள தொடர்பு ஆகிய பல அம்சங்களை நன்கு தீர்க்கமாக ஆராய வேண்டும். வெறுமனே ஜன்ம ராசியை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படும் கோச்சார பலன்களைக் கண்டு மனம் கலங்கக்கூடாது. மேலும் தெய்வ பலம், ஆன்ம பலம், நேர்மறை சிந்தனை, நேர்மை, கடும் உழைப்பு ஆகியவை நம் வாழ்வை மிக நிச்சயமாக வளமாக்கும் சிறப்படைய வைக்கும் என்பது உறுதி. மேஷம்: மேஷம் ராசி அன்பர்களுக்கு சனி பகவான் அஷ்டம சனியாக செயல்பட்டு பலன்களை வழங்கப்போகிறார். இந்த இரண்டரை வருட காலத்தில் ஏறக்குறைய பின்வரும் பலன்களை தருவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. அஷ்டம சனி தரும் தீய பலனை நினைத்து மனம் கலங்க வேண்டாம். உங்கள் ராசிக்கு பாக்கியாதிபதி குரு உச்சம் பலம் பெற்று உங்கள் பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதாலும் அஷ்டமத்தில் நிற்கும் சனியை பார்ப்பதாலும் கெட்ட பலன்கள் மிகவும் குறைவாகவே நடைபெறும். புதிதாக வயிற்று வலி வரும் அது ரொம்ப நாளைக்கு நீடிக்கும், எல்லாதிலேயுமே பணம் நஷ்டம் ஆகும், எல்லாக் காரியங்களும் தோல்வியில் முடியும், நிலையில்லாத வாழ்க்கை என மனம் விரக்தியடையும் வளர்ப்பு பிராணிகளுக்கும் பாதிக்கப்படும், உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் புதிது புதிதாகபலவகையான நோய்களால் பாதிப்பு ஏற்பட்டு உடம்பு ஆரோக்கியத்தை பாதிக்கும். நண்பர்க்ளுக்கும் கஷ்டம், அரசாங்கத்தால் தொல்லைகளும் சிறை தண்டனையும் ஏற்படலாம். ஜாதகப்படி மாரக தசை நடப்பவர்களுக்கு உயிருக்கு பயம் வரும், மானம் கௌரவம் கெடும், மனைவியுடன் தகராறு உண்டாகி அதனால் மன நிம்மதி குறையும் எல்லாவற்றிலும் பலவகை தடங்கல்கள் தண்டச் செலவுகள் அபராதத் தொகை செலுத்துதல் போன்ற வகைகளில் வீணாக பணம் செலவழியும், வசதியற்ற ஊருக்கு உத்தியோக மாற்றம் ஏற்பட்டு கஷ்டப்படும் நிலை உருவாகும், கண்ணில் நோய் ஏற்படும். இந்த அஷ்டம சனி காலகட்டத்தில் கூசாமல் பொய் சொல்லும் நிலை ஏற்படும், பசிக்கு சரியான சாப்பாடு கிடைக்காமல் திண்டாட வேண்டியிருக்கும். மனதை ஏதாவது துன்பமோ கவலையோ வாட்டிகொண்டேயிருக்கும், யாருக்காவது அடிமையாக இருக்கவேண்டியிருக்கும், கடுமையான உழைப்பின் மூலம் தான் வாழ்க்கையை நடத்தவேண்டியிருக்கும், விபத்துகளும் உண்டாகலாம், இந்த காலகட்டத்தில் யாரும் உங்களை மதிக்க மாட்டார்கள் உங்கள் குழந்தைகளே உங்களை மதிக்கமாட்டர்கள். மனசு கலங்காதீர்கள் யாரிடமும் வீண் பேச்சு விதண்டாவாதம் செய்யாதீர்கள் கடவுள் அருளும் கடும் உழைப்பும் கஷ்டமான பலனை குறைக்கும். ரிஷபம்: ரிஷபம் ராசி அன்பர்களுக்கு சனி பகவான் கண்டக சனியாக செயல்பட்டு பலன்களை வழங்கப்போகிறார். இந்த இரண்டரை வருட காலத்தில் ஏறக்குறைய பின்வரும் பலன்களை தருவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. உங்கள் ராசிக்கு ஒன்பதுக்கும் பத்துக்கும் யோகாதிபதியான சனி பகவான் யோக பலன்களையே தருவார். இருப்பினும் இயற்க்கையின் விதிக்கு கட்டுப்பட்டு கொஞ்சம் கெட்ட பலனும் தருவார். மேலும் உங்கள் ராசிக்கு தைரிய ஸ்தானத்தில் பூரண சுபரான குரு பகவான் உச்சம் பலம் பெற்று சனி பகவானை பார்ப்பதால் சனி கொடுக்கும் கெட்டபலன்கள் கதிரவனைக் கண்ட பனியைப்போல் விலகும். ஏதாவது ஒரு வகையில் கஷ்டம் வரும் வீணாக பணம் செலவழியும் சேமிப்புகள் கரையும், இருக்குமிடத்தை விட்டு விருப்பத்திற்கு மாறாக வேறு இடத்திற்கு உத்தியோக மாற்றம் அல்லது வீடு மாற்றம் ஏற்படும், போக்குவரத்தில் விபத்துகள் ஏற்படலாம் வாகனங்களை கவனமாக கையாளுங்கள் வளர்ப்பு பிராணிகளால் தேவையில்லாமல் நஷ்டம் உண்டாகும், வேலையாட்கள் உங்களை விட்டு பிரிந்துவிடுவார்கள். அவமானம் உண்டாகும் கௌரவம் குறையும். தொழிலில் பிரச்சினை உண்டாகும், உடல் ஆரோக்கியம் கெடும், அதிகமாக பசிக்கும் ஆனால் பசிக்கு உணவு கிடைக்காது, தீராத தலைவலி உண்டாகும், உடம்பில் ஏதாவது நோய் வாட்டிக்கொண்டேயிருக்கும், நடத்தை கெடும் நற்பெயருக்கு களங்கமும் உண்டாகும், மனதில் இனம் தெரியாத பயம் சோகம் இருந்து கொண்டே இருக்கும், நெருங்கிய உறவினரை இழக்க நேரிடலாம், இருக்க இடமின்றி எந்த குறிக்கோளுமின்றி அலையும் நிலை உண்டாகலாம் மனதை தளர விடாதீர்கள் எங்கே சென்றாலும் கஷ்டங்களே உண்டாகும். மனசு கலங்காதீர்கள் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள் எல்லாமே நல்லவிதமாக நடக்கும். மிதுனம்: மிதுனம் ராசி அன்பர்களுக்கு சனி பகவான் நற்பலன் தரும் ஆறாவது ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்து நல்ல பலன்களை வழங்கப்போகிறார். இந்த இரண்டரை வருட காலத்தில் ஏறக்குறைய பின்வரும் பலன்களை தருவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. எல்லா வகைகளிலும் நல்ல பலன்கள் நடைபெறும், பொன்னும் பொருளும் சேரும், நிலம் வாங்குதல் வீடுகட்டுதல் வாகனம் வாங்குதல் போன்ற நற்பலன்கள் நடைபெரும், பதவி உயர்வு கிடைக்கும், கௌரவம், அந்தஸ்து மேலோங்கும், நோய்கள் நீங்கும், உடல் பலம் பெறும் முகத்தில் புத்தொளி தோன்றும், எல்லா எதிரிகளையும் வென்று விடுவீர்கள் எல்லோருமே உங்களிடம் பணிந்து நிற்கும் உன்னத நிலை உருவாகும். எல்லா வகையிலுமே சனி பகவான் உங்களுக்கு நல்ல பலன்களையே இந்த ஆறாம் இடத்தில் தரப்போகிறார். மேலும் உச்சம் பெற்ற குரு மேற்கண்ட நற்பலன்களை ஊக்குவிப்பார். கடகம்: கடகம் ராசி அன்பர்களுக்கு சனி பகவான் ஐந்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்து பலன்களை வழங்கப்போகிறார். இந்த இரண்டரை வருட காலத்தில் ஏறக்குறைய பின்வரும் பலன்களை தருவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. ஐந்தாம் இடம் என்பது பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானம் என்று சிறப்பித்து அழைக்கப்படும். எந்த கிரகம் இந்த ஐந்தாமிடத்தில் இருந்தாலும் நிச்சயமாக நல்ல பலங்கள் தான் நடக்கும். மேலும் ராசியில் உங்கள் ராசியின் பாக்கியாதிபதியும் அதிர்ஷ்டத்தை அள்ளித் தருபவருமான குரு உச்சமாக இருக்கும் காரணத்தால் எந்தவிதமான கெடுதியும் வராது. இருந்தாலும் சனி தன்னுடைய குணத்தை காண்பிக்கவே செய்யும் கொஞ்சம் கெட்ட பலனும் வரும் அதை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் தற்காத்துக் கொள்ளலாம். புத்தி கொஞ்சம் சரியாக செயல்படாது முடிவுகள் எடுப்பதில் அவ்வப்பொழுது தடுமாற்றம் உண்டாகும், மனம் கலங்கும். நினைத்தவை தாமதமாக நடக்கும், விபத்து ஏற்படலாம் கவனம் தேவை. தேவையில்லாமல் பணம் அதிகமாக விரயமாகும் அன்றாட செலவுக்கே திண்டாட வேண்டியிருக்கும். தேவைக்கு மட்டும் செலவழிங்கள், உருப்படியாக ஒன்றும் செய்ய இயலாது, எல்லாரும் தகராறு பண்ணுவாங்க உறவினர்கள் எல்லோருமே பகையாகிவிடுவார்கள், குடும்பத்தை விட்டு பிரியும் நிலை உருவாகும் பேச்சை குறையுங்கள் தினசரி கோயிலுக்கு செல்வது மனக்கஷ்டத்தை குறைக்கும். சிம்மம்: சிம்மம் ராசி அன்பர்களுக்கு சனி பகவான் அர்த்தாஷ்டம சனியாக செயல்பட்டு பலன்களை வழங்கப்போகிறார். இந்த இரண்டரை வருட காலத்தில் ஏறக்குறைய பின்வரும் பலன்களை தருவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. அர்த்தாஷ்டம சனி மிகவும் கெட்ட பலனையே தரும் என்றுதான் எல்லாரும் சொல்லுவார்கள், உங்கள் ராசிக்கு பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான குரு உச்சம் பெற்று சனி பகவானைப் பார்ப்பதால் அர்த்தாஷ்டம சனியின் தீயபலன்கள் பெரிதும் மட்டுப்படும். கொஞ்சம் அரசாங்க கெடுபிடியும் அரசு அதிகாரிகளின் தொல்லையும் உண்டாகும், வீட்டு வளர்ப்பு பிராணிகளுக்கு நோயின் பாதிப்பு ஏற்படும், சேமிப்புகள் கரையும், சொத்துகள் கைவிட்டு போகும் அளவுக்கு ஆடம்பர செலவு செய்வீர்கள், கடன் காரணமாக ஊரை விட்டே வெளியேற வேண்டிய சூழ்நிலையும் வரலாம், உறவினர்கள் அனைவரும் உங்களை பகையாக நினைப்பார்கள். மனம் இனம் தெரியாத துக்கத்தில் உழலும் தேவையில்லாத பயமும் தயக்கமும் உருவாகும், வாதம் தொடர்பான நோய்கள் வந்துவிடும் என்று பயப்படுவீர்கள், நோயால் ஒரு கால் முடமாவதற்கும் வாய்ப்புகள் அதிகம், நாய் கடிக்கலாம் மாடு முட்டலாம், சுகபோகம் தூக்கம் கெடும்.மனதில் எதிர்மறை சிந்தனைகளே ஓடிக்கொண்டிருக்கும், மானம் மரியாதை கௌரவம் அனைத்துமே காப்பாற்றிக் கொள்ளுங்கள், முகம் தெரியாத பகைவர்களால் தொல்லைகள் உண்டாகும். கன்னி: கன்னி ராசி அன்பர்களுக்கு சனி பகவான் மூன்றாம் இடத்தில் சஞ்சாரம் செய்து நல்ல பலன்களை வழங்கப்போகிறார். இந்த இரண்டரை வருட காலத்தில் ஏறக்குறைய பின்வரும் நற்பலன்களை தருவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. அஷ்டலட்சுமி அருள் பொழியும் காலம், அனைத்து செயல்களும் வெற்றிபெறும் நோய்கள் நீங்கும் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும், தொழில் சிறப்படையும் பதவி உயர்வு மற்றும் தலைமை பதவி கிடைக்கும் எல்லாமே நன்மையாக நடைபெறும், ராஜ யோகம் உண்டாகும், உயர் ரக வாகன யோகம் உண்டாகும். உடன் பிறப்புக்கும் அதிர்ஷ்டம் உண்டாகும், நண்பர்களின் அனைத்து விஷயங்களிலும் துணையாக நிற்பார்கள், திறன் மிக்க பணியாட்கள் அமைவார்கள், அழகான வசதியான பெரிய வீடு அமையும். ஜாதகர் பயந்த சுபாவம் உள்ளவராக இருப்பினும் இந்த காலகட்டத்தில் தைரியம் வீரம் மிக்கவராக மாறி எதிரிகளை எல்லாம் பந்தாடிவிடுவீர்கள். கால்நடைகள் சேர்க்கை உண்டாகும். எல்லா வகையிலும் நல்ல பலன்களே நடக்கும். லாபஸ்தானத்தில் நிற்கும் குரு சனி தரக்கூடிய சுப பலனை மேலும் விருத்தி செய்வார். துலாம்: துலாம் ராசி அன்பர்களுக்கு சனி பகவான் ஏழரை சனியின் கடைசி இரண்டரை வருஷ காலமாகும் பாத சனி-குடும்ப சனியாக செயல்பட்டு பலன்களை வழங்கப்போகிறார். இந்த இரண்டரை வருட காலத்தில் ஏறக்குறைய பின்வரும் பலன்களை தருவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. குடும்பத்தில் மனைவி மக்களுக்கு புதிதாக நோய் தோன்றலாம் அதனால் அதிகமாக செலவழிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் குடும்ப உறுப்பினர்களால் தேவையற்ற செலவும் நஷ்டமும் உண்டாகும். வேலையாட்கள் அவர்களுடைய பணியை சரியாக செய்ய மாட்டர்கள். அவமானம் ஏற்படும், வீட்டை விட்டு கட்டாயமாக வெளியேறி கண்ட இடங்களுக்கு அலையும் நிலை வரும், பெரியோர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டி வரும், கண்ணில் பாதிப்பு உண்டாகும் கண் பார்வை குறையும், அதிக செலவின் காரணமாக சொத்துக்கள் விற்க வேண்டி வரும், ஆரோக்கியம் கெடும் உடல் வலிமை முக வசீகரம் குறையும் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் நிலையும் வரலாம். தீய வழிகளில் பணம் சம்பாதிக்கும் எண்ணம் வரும், வேலையை விட்டு விலகும் சூழ்நிலையும் உண்டாகும் நிர்பந்தப்படுத்தி இடமாற்றம் செய்யப்படுவீர்கள், மனதில் குழப்பமும் உறவினர்களுடன் பகைமையும் உண்டாகும், அவசர தேவைக்காக கடன் வாங்கினாலும் அது வீண் விரயமாகும். தேவையில்லாத பயம் உண்டாகும், கடுமையாக உழைக்கத் தயங்காதீர்கள், ஒரு செலவு செய்வதற்க்கு முன் இது தேவையா என யோசித்து செயல்பட்டால் சனி பகவானின் கருணை கிடைக்கும். மேலும் உச்சம் பெற்ற குரு சனியை பார்ப்பதால் குடும்பத்தில் சுபம் நடக்கும் தீய பலன்கள் குறையும். விருச்சிகம்: விருச்சிகம் ராசி அன்பர்களுக்கு சனி பகவான் ஏழரை சனியின் இரண்டாவது இரண்டரை வருஷ காலமாகும் ஜன்ம சனியாக செயல்பட்டு பலன்களை வழங்கப்போகிறார். இந்த இரண்டரை வருட காலத்தில் ஏறக்குறைய பின்வரும் பலன்களை தருவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. ஜன்மத்தில் சனி அதிகமாக தீய பலன்களையே தருவார் என்று நினைத்து பயப்படாதீர்கள், உங்கள் ராசிக்கு பூர்வபுண்ணிய குடும்ப ஸ்தானதிபதி குரு உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பலத்துடன் நின்று உங்கள் ராசியை பார்ப்பதால் ஒரு கஷ்டமும் வராது எல்லாமே நல்லதே நடக்கும் இருந்தாலும் சனி பகவான் ராசியில் இருக்கிறார் அல்லவா, சில விஷயங்களில் கவனமாக இருந்தால் எல்லா கெட்ட பலனின் தாக்கத்தையும் குறைத்துக் கொள்ளலாம். நோயின் காரணத்தால் தேவையில்லாமல் வீணாக செலவழிக்கவேண்டிவரும் எல்லாருமே உங்களுக்கு எதிரியாக தெரிவார்கள், சுயநலமிக்க எதிரிகளின் சூழ்ச்சியால் சிக்கலில் மாட்டிக்கொண்டு விடுபட முடியாமல் அவதிப்பட நேரிடும் சிறை பயம் உண்டாகும், மானம் கௌரவம் பாதிக்கப்படும் தலை குனியும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள் பழகுபவர்களின் குணத்தை அறிந்து கொண்டு உறவை தொடருங்கள். தண்ணீரில் கண்டம் உண்டு, வாதம் சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகலாம் கவனம் தேவை, தவறான உணவு பழக்கவழக்கத்தால் உடல் நிறம் மாறும் முகப்பொலிவு கெட்டு முகம் அழகு குறையும், கத்தி அரிவாள் போன்ற கூர்மையான ஆயுதங்களால் காயம் ஏற்படலாம், அளவிற்கு மீறி உழைக்க வேண்டி வரும் அதனால் உடல் சோர்வடையும் சோம்பேறித்தனம் அதிகரிக்கும். சனி உழைப்பிற்கு காரகர் எனவே கடுமையாக உழைக்கும் உங்களை சனி சோதிக்க மாட்டார். தனுசு: தனுசு ராசி அன்பர்களுக்கு ஏழரை சனி ஆரம்பமாகிறது. இது ஏழரை சனியின் முதல் இரண்டரை வருஷ காலமாகும். இந்த இரண்டரை வருட காலத்தில் ஏறக்குறைய பின்வரும் பலன்களை தருவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. உங்கள் ராசியதிபதி குரு ரொம்ப பலமாக உச்சமாக இருந்து சனியை பார்ப்பதால் இந்த ஏழரை சனியின் தாக்கம் அவ்வளவாக பாதிக்காது நெகடிவ் எல்லாம் பாசிடிவாக மாறிவிடும். சனி கொஞ்சமாக தரப்போகும் கெட்டபலனை தெரிந்து கொண்டு கவனமாக செயல்பட்டால் சிறப்பு உண்டாகும். கொஞ்சம் கெட்டபலன் நடந்தாலும் குரு பார்வை இருக்கிறதால் செலவுகள் சுப செலவுகளாக மாறும் அதாவது வீடு கட்டுதல் புது வாகனம் வாங்குதல் திருமண வயது ஆகிறவர்களுக்கு திருமணம் நடைபெறுதல் போல நல்ல பலனை எதிர்பார்க்கலாம். தேவையில்லாமல் அலைய வேண்டியிருக்கும் கொஞ்சம் நஷ்டம் வரும் தொழிலில் கவனமாக இருங்கள், நீண்ட தூரத்திற்கு பயணம் செய்ய வேண்டியிருக்கும், அலைச்சல் செலவு காரணமாக மனசு சங்கடப்படும். தொழில் உத்தியோக வகைகளில் கொஞ்சம் பிரச்சினை வரலாம், பணம் கொடுக்கல் வாங்கல் சற்று சிரமமாக இருக்கும், மனசு குழம்பும் முடிவு எடுக்க திணறுவீர்கள், குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியூருக்கு செல்ல வேண்டியிருக்கும். மனம் கலங்க வேண்டாம் எல்லாமே நல்லதாகவே நடைபெறும். மகரம்: மகரம் ராசி அன்பர்களுக்கு சனி பகவான் நற்பலன் தரும் பதினொன்றாவது ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்து நல்ல பலன்களை வழங்கப்போகிறார். இந்த இரண்டரை வருட காலத்தில் ஏறக்குறைய பின்வரும் பலன்களை தருவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. பணம் கொட்டோ என்று கொட்டும் குரு பார்வையும் இதற்கு உதவிகரமாக இருக்கும். தெம்பாக இருப்பீர்கள் மனசு தெளிவாக இருக்கும் முகம் பிரகாசிக்கும். பூரணமாக எந்த குறைவுமில்லாமல் சுகபோக வாழ்க்கை கிடைக்கும். புதிதாக வீடு கட்டுதல், வாகனம் வாங்குதல் போன்ற நல்ல பலன்கள் நடக்கும். மிதமிஞ்சிய தைரியம் வரும், புதிதாக நண்பர்கள் சேருவார்கள். இந்த இரண்டரை வருடமும் ராஜ யோகம் தான். எல்லா வகையிலும் நல்ல பலன்களே நடக்கும். வாழ்க்கையில் மேன்மை பெறப்போகும் உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள். கும்பம்: கும்பம் ராசி அன்பர்களுக்கு சனி பகவான் பத்தாவது ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்து நல்ல பலன்களை வழங்கப் போகிறார். இந்த இரண்டரை வருட காலத்தில் ஏறக்குறைய பின்வரும் பலன்களை தருவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. தொழில் உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமென்றால் உழைப்பை அதிகரிக்க வேண்டும். வருமானம் கொஞ்சம் குறையும் செலவை குறைத்துக் கொள்ளவும். இருந்தாலும் உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்திற்கு அதிபதி குரு உச்சம் பலம் பெற்று தன்னுடைய வீட்டையே பார்ப்பதால் எப்படியோ எங்கிருந்தோ பணம் வந்து சேரும். சேமிப்பை அதிகப்படுத்துங்கள் தேவையானதிற்கு மட்டும் கவனமாக செலவழியுங்கள். ஒரு சிலர் மதிக்கமாட்டார்கள் அதற்காக கவலைப்பட மனதில் கவலை வேண்டாம். கொஞ்சம் கஷ்டபலன் நடந்தாலும் கடும் உழைப்பினால் அதை சரி செய்துவிடலாம். மீனம்: மீனம் ராசி அன்பர்களுக்கு சனி பகவான் ஒன்பதாவது ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்து பலன்களை வழங்கப் போகிறார். இந்த இரண்டரை வருட காலத்தில் ஏறக்குறைய பின்வரும் பலன்களை தருவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. ஒன்பதாம் இடம் என்பது பாக்கியஸ்தானம் என்று ஜோதிடத்தில் மிகவும் சிறப்பித்து போற்றப்படுகிறது. ஒருவர் ஜாதகத்தில் ஒன்பதாவது இடத்தில் எந்த கிரகம் நின்றிருந்தாலும் நிச்சயமாக நல்ல பலன்களையே தரும் என்று எல்லா ஜோதிட நூல்களும் கூறுகின்றன. சனி இயற்கை அசுபர் தன் குணத்திற்கேற்றவாறு கொஞ்சம் கெட்ட பலன்களும் தரத்தான் செய்வார். தானம் தர்மங்கள் புண்ணிய காரியங்கள் செய்வீர்கள், அப்பாவுக்காக செலவழிக்க வேண்டியிருக்கும், சில சமயம் தீய குணங்கள் தலைதூக்கும் தர்ம சிந்தனை குறையும் குடும்பத்தில் கொஞ்சம் சச்சரவு உண்டாகலாம். உங்கள் ராசிநாதன் குரு உச்சம் பலம் பெற்று ராசியையே பார்ப்பதால் கஷ்டங்களின் தாக்கம் பெரிய அளவில் பாதிக்காது. பன்னிரெண்டு ராசியில் பிறந்தவர்களுக்கும் இந்த சனி பெயர்ச்சி சுபம் அசுபம் பலன்களை தருவார் என்றாலும் சனி பகவான் உழைப்பிற்க்கும் நீதி நேர்மைக்கும் பொறுப்பு வகிப்பதால் சோம்பலை விட்டுவிட்டு அன்றைய வேலையை அன்றே முடிப்பதும் நாளைய வேலைக்கு முன்னோட்டமாக செயல்படுவதும் தெய்வ அனுகூலமும் அனைவருக்கும் உயர்வு தரும்.

Monday, November 3, 2014

27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்

நமது ஆன்மீக அன்பர்களின் நலம் கருதி , ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும்உரிய திருத் தலங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம்இங்கு உள்ள ஸ்தலங்கள்அனைத்தும் , பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவைஇடையில் அழிவு ஏற்பட்டாலும்,அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையே புதுப்பித்துக் கொண்டவை.  எத்தனையோமகான்களும்ரிஷிகளும்தேவர்களும் வழிபட்டஇன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக்கொண்டுதரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை.
இவையெல்லாவற்றையும் விட முக்கியமான ரகசியம் - இந்த நட்சத்திரங்களுக்குரியதேவதைகள் , சூட்சும ரீதியாக இங்கே தினமும் ஒரு தடவையாவது தங்களுக்குரிய ஆலயம்சென்று வழிபாடு செய்கின்றன.

 
மனிதராய் பிறந்த அனைவர்க்கும்அவரவர்  கர்ம வினையே -  லக்கினமாகவும்ஜென்மநட்சத்திரமாகவும்பன்னிரண்டு வீடுகளில் நவக் கிரகங்கள் அமர்ந்து -  பெற்றெடுக்கும்பெற்றோர்களையும்பிறக்கும் ஊரையும்,  வாழ்க்கை துணையையும் , அவர் வாழ்வில்நடக்கும் முக்கிய சம்பவங்களையும் , வாழ்க்கையையுமே தீர்மானிக்கிறது.நமது பூர்வ ஜென்ம தொடர்புடையஆலயங்களுக்குநம்மை அறியாமலே நாம் சென்றுவழிபடும்போது,  நமது கர்மக்கணக்கு நேராகிறதுஅப்படி நிகழும்போது நம் வாழ்வில்ஏற்படும் பல தடைகளும்தீராத பிரச்னைகளும் தீர்ந்து , மனதளவில் நமக்கு பலமும்,மாற்றமும் ஏற்படுகின்றன.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை  -  உங்கள் ஜென்ம நட்சத்திரம்வரும் தினத்தன்று , ஆத்ம சுத்தியுடன்நம்பிக்கையுடன் வழிபட்டு வாருங்கள்அதன் பிறகுஉங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு புது வெளிச்சம் பிறக்கும்.உங்களால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதாரண தினங்களில் கூட இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர , உங்கள் கஷ்டங்கள் வெகுவாக மட்டுப்படும்.
ஆலயங்களும்அமைவிடங்களும் :
அஸ்வினி - அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: திருவாரூரில் இருந்து 30 கி.மீ.தூரத்தில் திருத்துறைப் பூண்டி உள்ளதுபஸ்ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீதூரத்தில் கோயில் உள்ளது.
பரணி - அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்


 
இருப்பிடம்: மயிலாடு துறையிலிருந்து(15 கி.மீ.)நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும்வழியில் நல்லாடை என்னும் ஊரில்  உள்ளது.

 
கார்த்திகை - அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் கஞ்சாநகரம்அமைந்துள்ளதுமெயின் ரோட்டிலிருந்து பிரியும் ரோட்டில் அரை கி.மீ., சென்றால்கோயிலை அடையலாம்.
ரோஹிணி -  அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில்
 
இருப்பிடம்: காஞ்சிபுரம் ஏகாம் பரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள சாலையில் கோயில்அமைந்துள்ளது.
மிருக சீரிஷம் -  அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில்
 
இருப்பிடம் : தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 50 கி.மீ., தூரத்தில்
முகூந்தனூர் உள்ளதுஇந்தஸ்டாப்பில் இருந்துஒரு கி.மீதூரம் சென்றால் கோயிலைஅடையலாம்.
திருவாதிரை - அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம் : தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ., தூரத்திலுள்ளபட்டுக்கோட்டை சென்று,அங்கிருந்து 12 கி.மீசென்றால் அதிராம்பட்டினத்தில் உள்ள இந்த ஆலயத்தை அடையலாம்.
புனர் பூசம் - அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம் : வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில், 67 கி.மீ., தூரத்தில்வாணியம்பாடி உள்ளதுபஸ்ஸ்டாண் டில் இருந்து 3 கி.மீதூரத்தில் உள்ள பழைய
வாணியம் பாடியில் கோயில் உள்ளது.
பூசம் - அருள்மிகு அட்சய புரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரைசாலையில் 30 கி.மீ., சென்றால் விளங்குளம் விலக்கு வரும்அங்கிருந்து தெற்கே 2 கி.மீ.சென்றால் கோயிலை அடையலாம்புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி வழியாகவும்விளங்குளத்தை அடைய வழியிருக்கிறது.
ஆயில்யம் - அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்
 இருப்பிடம்கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் ரோட்டில் 11 கி.மீ.,தூரத்தில் உள்ள திருவிசநல்லூர் சென்றுஅங்கிருந்து பிரியும் ரோட்டில் 2கி.மீ., சென்றால்கோயிலை அடையலாம்திருவிசநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு
மகம் - அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்


இருப்பிடம்: திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் 12 கி.மீ., தூரத்தில்விராலிப்பட்டி விலக்கு உள்ளதுஇங்கிருந்து 2 கி.மீ., மினிபஸ்சில் சென்றால் கோயிலைஅடையலாம்ஆட்டோ வசதியும் உண்டு.
பூரம் - அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்
  
இருப்பிடம்: புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கி.மீ.,சென்றால் வரும் திருவரங்குளம் என்னும் ஊரில் ஆலயம் உள்ளது.
உத்திரம் - அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில்
 
இருப்பிடம் : திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து 22 கி.மீதூரத்திலுள்ள லால்குடிசென்று அங்கிருந்து 5 கி.மீதூரத்திலுள்ள இடையாற்று மங்கலம் என்னும் ஊரில் உள்ளது.
ஹஸ்தம் - அருள்மிகு கிருபா கூபாரேச்வரர் திருக்கோயில்
  
இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ளகுத்தாலத்திலிருந்து பிரியும் ரோட்டில் 8 கி.மீதூரத்தில் கோமல் என்னும் ஊரில்உள்ளது.குத்தாலத்திலிருந்து பஸ்ஆட்டோ வசதி உள்ளது.
சித்திரை - அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்
இருப்பிடம்: மதுரையில் இருந்து 23 கி.மீ., தூரத்திலுள்ள குருவித்துறைக்கு மதுரை பெரியார்பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ் உள்ளதுகுருவித்துறையில் இருந்து 3 கி.மீதூரத்தில் கோயில்உள்ளதுவியாழன்பவுர்ணமி தினங்களில்  கோயில் வரை பஸ்கள் செல்லும்மற்றநாட்களில் ஆட்டோவில் செல்ல வேண்டும்.
சுவாதி - அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில்
  
இருப்பிடம்: சென்னை பூந்தமல்லியில் இருந்து தண்டுரை என்ற ஊருக்கு செல்லும்வழியில் 8 கி.மீ., தூரத்தில் சித்துக்காடு என்ற ஊரில் இத்தலம் உள்ளதுகுறித்த நேரத்தில்மட்டுமே பஸ் உண்டு என்பதால்பூந்தமல்லியில் இருந்து வாகனங்களில் சென்றுதிரும்பலாம்.
விசாகம் - அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்
இருப்பிடம் : மதுரையில் இருந்து 155 கி.மீ., தொலைவிலுள்ள செங்கோட்டை சென்று,அங்கிருந்து 7 கி.மீ., தூரத்திலுள்ள திருமலைக்கோவிலை பஸ் மற்றும் வேன்களில்அடையலாம்இவ்வூரைச் சுற்றி பிரபல ஐயப்ப ஸ்தலங்களான ஆரியங்காவுஅச்சன்கோவில்குளத்துப்புழை ஆகியவை உள்ளன
அனுஷம் - அருள்மிகு மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோயில்
 
இருப்பிடம்மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கீ.மீதூரத்தில் திருநின்றியூர் என்னும் ஊரில் இத்தலம் அமைந்துள்ளது.
கேட்டை - அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்
இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ., தூரத்திலுள்ளபசுபதிகோயில் பஸ் ஸ்டாப்பில் இருந்து அரை கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.

மூலம் - அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில்
   
இருப்பிடம்: சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கி.மீ.,தூரத்தில் மப்பேடு என்ற ஊரில்  உள்ளது. (பூந்தமல்லியிலிருந்து (22 கி.மீ.) பேரம்பாக்கம்செல்லும் வழியில் மப்பேடு உள்ளது.)
பூராடம் -  அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்
 இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து (13 கி.மீ.,) திருவையாறு சென்றுஅங்கிருந்து கல்லணைசெல்லும் வழியில் 4 கி.மீ., தூரம் சென்றால் கடுவெளியை அடையலாம்பஸ் ஸ்டாப்அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.
உத்திராடம் - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
 
இருப்பிடம்சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ள (12 கி.மீ.,) ஒக்கூர்சென்றுஅங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கி.மீ., சென்றால் பூங்குடி என்ற ஊரில் உள்ளது.ஆட்டோ உண்டுமதுரையில் இருந்து (45 கி.மீ.,) இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நேரடிபஸ் வசதி உண்டு.
திருவோணம் -  பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில்
இருப்பிடம்: வேலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்திலுள்ள
காவேரிப்பாக்கத்தில் இறங்கிஅங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கி.மீசென்றால் திருப்பாற்கடலை அடையலாம்ஆற்காடுவாலாஜா விலிருந்தும் பேருந்துகள் உள்ளனஇவ்வூரில்இரண்டு பெருமாள் கோயில்கள் இருப்பதால்பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் எனகேட்டு செல்லவும்
அவிட்டம் - அருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில்
 
இருப்பிடம் : கும்பகோணம் மகாமகக்குளம் மேற்குக் கரையிலிருந்து 4 கி.மீதூரத்தில்கோயில்அமைந்துள்ளதுகும்பகோணத்திலிருந்து தாராசுரம்முழையூர் வழியாகமருதாநல்லூர் செல்லும் பஸ்களில் கொருக்கை என்னும் இடத்தில் உள்ளது..
சதயம் -  அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: திருவாரூர் மாவட்டம்நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில்10 கி.மீதொலைவில் திருப்புகலூர் என்னும் ஊரில் உள்ளது.

பூரட்டாதி - அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில்
 
இருப்பிடம்திருவையாறிலிருந்து 17 கி.மீதூரத்தில் உள்ள திருக் காட்டுப்பள்ளி சென்று,அங்கிருந்து அகரப் பேட்டை செல்லும் ரோட்டில் 2 கி.மீதூரம் சென்றால் ரங்கநாதபுரம்என்னும் ஊரில் உள்ளது.
உத்திரட்டாதி - அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ.தூரத்திலுள்ள ஆவுடையார்கோவில்சென்றுஅங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் வழியில் 21 கி.மீ தூரத்தில் தீயத்தூர்உள்ளது.  மதுரையில் இருந்து செல்பவர்கள்அறந்தாங்கி சென்றுஅங்கிருந்துதிருப்புவனவாசல் செல்லும் பஸ்களில் சென்றால் தீயத்தூர் என்னும் இடத்தில் உள்ளது.தூரம் 120 கி.மீ.
ரேவதி - அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
 
இருப்பிடம்: திருச்சியிலிருந்து முசிறி (40கி.மீ)சென்றுஅங்கிருந்து வேறு பஸ்களில்தாத்தய்யங்கார் பேட்டை(21 கி.மீசெல்ல வேண்டும்இங்கிருந்து 5 கி.மீ.தூரத்திலுள்ளகாருகுடி என்னும் இடத்தில்