Friday, August 31, 2012

பாம்பன் சுவாமிகள்


பாம்பன் சுவாமிகள் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த உன்னத துறவியாவார். முருகன் பால் அன்பு பூண்டு கவிகள் பல பாடி கனவிலும, நனவிலும் ஆறுமுகப்பெருமானை தரிசித்தவர். சுவாமிகளின் தமிழ் ஞானம் அளவிடற்கரியது. சுவாமிகள் உலகம் உய்யPamban Swamigal பல அருள் நூல்களை அருளிச் செய்துள்ளார். சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றினை இங்கு சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது. அனைவரும் படித்து பயன் பெறுவோமாக.

பிறப்பு

பாம்பன் என்னும் ஊரில் பாம்பன் சுவாமிகள் பிறந்தார். அடிகளாரது தந்தையார் சாத்தப்ப பிள்ளை, தாயார் செங்கமல அம்மையார். அடிகளாரது பிள்ளை திருநாமம் அப்பாவு. சுவாமிகள் பிறந்த ஆண்டு உறுதியாக அறியப்படவில்லை. 1850 முதல் 1852 ஆண்டுக்குள் இருக்கலாம் என நம்பப்படுகிறது.

தமிழ் ஞானம்

அடிகளார் சிறு வயதிலேயே தமிழ் மொழியில் மிகுந்த ஞானத்துடன் விளங்கினார். திருமுருகன்பால் மிகுந்த பக்தி கொண்டார். கந்த சஷ்டி கவசத்தை நாள்தோறும் 36 முறை ஓதினார். கந்த சஷ்டி கவசத்தை எழுதிய தேவராய சுவாமிகள் போல் தாமும் முருகன் பால் தமிழில் கவி பாட வேண்டும் என வேட்கை கொண்டார். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் அருணகிரிநாதரின் பெயரை வைத்தே முடிக்க வேண்டும் என முடிவு செய்தார். முதன் முதலாக முருகனை போற்றி "கங்கையை சடையிற் பரித்து" என தொடங்கும் பாடலை இயற்றினார். தினமும் உண்பதற்கு முன் ஒரு பாடல் வீதமாக நூறு பாடல்கள் இயற்ற வேண்டும் என்ற நியதியை மேற்கொண்டார். அவ்வாறே நூறு பாடல்களை இயற்றினார். பின்னர் சேது மாதவ ஐயர் என்பவரிடம் சடக்ஷர மந்திர உபதேசம் பெற்றார்.

திருமணம்

சுவாமிகள் திருமண பருவம் அடைந்தும் திருமணஞ் செய்து கொள்ள விருப்பமில்லாமல் இருந்தார். சேது மாதவ ஐயரின் வற்புறுத்தலின் பேரில் 1872ஆம் ஆண்டு காளிமுத்தம்மையார் என்பவரை மணம் புரிந்தார். மூன்று ஆண்டுகள் கழிந்தன. முருகாண்டியாபிள்ளை, சிவஞானாம்பாள், குமரகுருதாச பிள்ளை என்று மூன்று குழந்தைகள் பிறந்தனர். சிவஞானாம்பாளுக்கு ஒராண்டு நிரம்பிய போது ஒரு நாள் நள்ளிரவில் ஓயாது அழுது கொண்டே இருந்தது. அம்மையார் சுவாமிகளிடம் குழந்தை அழுவதை கூறி திருநீறளிக்குமாறு வேண்டினார். சுவாமிகள் இப்பொழுது எவருக்கும் திருநீறு அளிப்பதில்லை என்றும், முருகனிடம் வேண்டுமாறும் கூறினார். அவ்வாறே அம்மையார் முருகனிடம் வேண்டி குழந்தையின் அருகில் படுத்தார். அப்போது, காவி உடை உடுத்திய ஒருவர் அங்கு வந்து குழந்தையை அம்மையாரிடம் வாங்கி திருநீறு பூசி குழந்தை இனி அழாது என கூறி தாயிடம் தந்து விட்டு மறைந்தருளினார். அம்மையார் நடந்தவற்றை சுவாமிகளிடம் கூறினார். சுவாமிகள் முருகனின் திருவருளை நினைத்து வியந்தார்.

பொய் பகரல்

சுவாமிகளின் பெருமையை உணர்ந்து பல அடியார்கள் சீடர்கள் ஆயினர். இந்நிலையில், சுவாமிகளின் தந்தையார் சிவபதம் அடைந்தார். சுவாமிகள் துறவறம் மேற்கொள்ளும் எண்ணத்தில் இருந்தார். ஒரு சமயம் அங்கமுத்துப்பிள்ளை என்பவரிடம் தாம் பழனி செல்ல இருப்பதாக சுவாமிகள் கூறினார். அங்கமுத்துப்பிள்ளை தற்போது செல்ல வேண்டாம் என சுவாமிகளிடம் கூறினார். அதற்கு சுவாமிகள், இது முருகப்பெருமான் ஆணை என பொய் பகன்றார். அன்று மாலை, சுவாமிகள் வீட்டின் மாடியில் அமர்ந்திருந்தார். அப்பொழுது, சுவாமிகள் கண்களுக்கு தென் திசையில் இறை உருவம் தென்பட்டது. அந்த உருவம் அச்சுறுத்தும் வகையில் பயங்கரமாக இருந்தது. "எனது கட்டளை என பொய் கூறினாயே, இது முறையாகுமா?" எனக்கூறி அச்சுறுத்தியது. சுவாமிகள், இறைவனது சினத்தை கண்டு அஞ்சி, "தம் தவறுக்கு மன்னித்தருளுமாறு" வேண்டினார். அதற்கு, இறைவன், "இனி பழனிக்கு வரக்கூடாது" என உறுதி அளிக்குமாறு கூறினார். சுவாமிகளும் அவ்வாறே உறுதி அளித்ததும் அந்த உருவம் மறைந்து போனது. ஒரு பொய் கூறிய காரணத்தினால் சுவாமிகள் இறுதி வரை பழனி செல்ல முடியாமல் போனது.

சண்முக கவசம்

அடிகளாரின் தந்தையார் இறந்ததால், சுவாமிகளுக்கு குடும்ப சுமை அதிகரித்தது. சுவாமிகள் குத்தகை தொழில் புரிந்து வந்தார். 1891ம் ஆண்டு தமக்கு வந்த இன்னல் நீங்கும் பொருட்டு அ முதல் ன முடிய (உயிர் எழுத்து - 12, மெய் எழுத்து - 18) 30 பாடல்களால் சண்முக கவசம் இயற்றினார். இதனால் அவரது இன்னல் நீங்கியது. சண்முக கவசம் மிகவும் சக்தி வாய்ந்தது. இதனை பாராயணம் செய்து பலனடைந்தார் பலர். சிறிது நாள் கழித்து, பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம் எனும் செய்யுளை பாடியருளினார். இந்த பாடல் முருகப்பெருமானுக்கு மிகவும் விருப்பமானது.

வழக்குகளில் வெற்றி

அடிகளார் தொழில் நிமித்தமான பல்வேறு வழக்குகளை சந்திக்க நேர்ந்தது. முருகன் அருளால் வழக்குகள் அனைத்திலும் வெற்றி பெற்றார்.

குமர கோட்ட தரிசனம்

சுவாமிகள் பல திருத்தலங்களை தரிசிக்க வேண்டி தல யாத்திரை மேற்கொண்டார். மதுரை, திருவண்ணாமலை, திருக்காளத்தி, திருத்தணி எனும் திருத்தலங்களை தரிசித்து விட்டு காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார். அங்கு உள்ள பல திருக்கோயில்களை தரிசித்து விட்டு ஊர் திரும்ப எண்ணினார். அப்போது, ஒரு சிவந்த மேனியுடைய இளைஞர் அடிகளாரை அணுகி, "இங்கு வந்த காரியம் யாது" என வினவினார். அதற்கு சுவாமிகள், "ஆலய தரிசனத்துக்காக" என்றார். "குமரகோட்டம் தரிசித்ததுண்டா?" என இளைஞர் கேட்டார். அதற்கு அடிகளார், "அது எங்குள்ளது" என்றார். அதற்கு இளைஞர் "என் பின்னே வருக" என கூறி அழைத்து சென்றார். குமரகோட்டம் திருக்கோயிலை காண்பித்து விட்டு மறைந்து போனார். இது ஆறுமுகப்பெருமானின் திருவிளையாடல் என்று உணர்ந்த சுவாமிகள், கண்ணீர் பெருக்குடன் குமரகோட்ட முருகப்பெருமானை வழிபட்டார். பின் பாம்பன் வந்தடைந்தார்.

தவம் புரிதல்

அடிகளார் முருகப்பெருமானை நேரில் கண்டு உபதேசம் பெற வேண்டும் என பேராவல் கொண்டார். 1894ம் ஆண்டு பிரப்பன்வலசை எனும் ஊரை அடைந்தார். அங்கு உள்ள மயான பூமியில் தமது சீடர்களின் உதவியால் ஒரு சதுரக் குழி வெட்ட செய்தார். அதை சுற்றி முள் வேலி, கொட்டகை அமைக்கச் செய்தார். அக்கொட்டகையின் உள் ஒரு கை செல்லுமாறு சிறிய சந்து அமைக்க செய்து, நாள் தோறும் ஒரு வேளை உப்பிலாத அன்னம் வைக்குமாறு சீடர்களுக்கு கூறினார். வைத்த உணவை தாம் எடுக்கவில்லையானால் அது முதல் வைக்க வேண்டாம் என கட்டளையிட்டார். பின்னர் அக்குழியில் அமர்ந்து தியான யோகத்தில் ஈடுபட்டார். முதல் ஐந்து நாள், பேய்கள் அவரை சூழ்ந்து தவத்திற்கு இடையூறு செய்தன. பின்னர் ஒரு ஆவி, அவரை தூக்க முயன்றது. சுவாமிகள் ஷடக்ஷர மந்திரத்தை ஓங்கி கூறினார். அந்த பேய்கள் அவரை விட்டு நீங்கி மறைந்து போனது. அடிகளார் தவத்தை தொடர்ந்து புரிந்து வந்தார். எழாவது நாள் இரவில் இரு முனிவர்களுடன், முருகப்பெருமான் இளைய அடிகளார் உருவில் காட்சி அளித்தார். அவரிடம் ஒரு ரகசியமான சொல்லை உபதேசித்து விட்டு, அம்முனிவர்களுடன் மேற்கு திசை நோக்கி சென்று மறைந்து போனார். அச்சொல்லை சிந்தித்த வண்ணம் முப்பது நாள் தவ யோகத்தில் இருந்தார். முப்பத்தைந்தாம் நாள், "தவத்திலிருந்து எழுக" என்ற ஒலி கேட்டது. "முருகன் கூறினால் மட்டுமே எழுவேன்" என சுவாமிகள் கூறினார். "முருகன் கட்டளை! எழுக" என்று பதில் வந்தது. சுவாமிகள், அவ்விடத்தை வணங்கி விட்டு அங்கிருந்து நீங்கினார். பின் பாம்பன் வந்து சேர்ந்தார். அது முதல் வெள்ளை அங்கி அணியலானார்.

துறவு பூணுதல்

1895ம் ஆண்டு கார்த்திகை மாதம் ஒரு நாள் தமது சீடர் ஒருவரிடம் தாம் துறவு பூண்டு செல்லும் முடிவை கூறினார். பின்னர், பாம்பனை விட்டு நீங்கி ஒரு படகு மூலம் வடகரை அடைந்தார். பின்னர் சென்னை செல்லும் எண்ணம் அவர் மனதில் உதித்தது. அவ்வாறே சென்னை வந்தடைந்தார். அங்கு ஒருவர் அடிகளாரை அணுகி அவரை வைத்தியநாத முதலித் தெருவில் உள்ள ஒரு இல்லத்தில் சேர்ப்பித்தார். அந்த இல்லத்தின் உரிமையாளரான ஒரு அம்மையார், தமது கனவில் அடிகளாரை உபசரிக்குமாறு கட்டளை பிறந்ததாக சுவாமிகளிடம் கூறி, அடிகளாருக்கு அன்னம் படைத்து உபசரித்தனர். சுவாமிகள் முருகப்பெருமானின் அருட்செயலை எண்ணி உவந்து இருந்தார். சென்னையில் அடிகளாருக்கு பல சீடர்கள் சேர்ந்தனர். பின்னர், சென்னையில் உள்ள திருத்தலங்களை தரிசித்து மகிழ்ந்தார். முருகன் பால் பல திருப்பாக்களை பாடி அருளினார்.

காவியுடை தரித்தல்

சுவாமிகள் காசி செல்ல பெருவிருப்பங்கொண்டு ஆடித்திங்கள் தொடக்கத்தில் காசி யாத்திரை மேற்கொண்டார். பெஜவாடா, கோதாவரி, விசாகப்பட்டினம், ஜகந்நாதம், கல்கத்தா, கயா முதலிய இடங்களுக்கு சென்று அங்குள்ள மூர்த்திகளை ஆறுமுக மூர்த்தியாகவே எண்ணி வழிபட்டார். பின்னர் காசி மாநகரம் சேர்ந்து அங்கு உள்ள குமரகுருபரர் திருமடத்தில் தங்கினார். அங்கிருந்த ஒரு வயோதிக அடியார் ஒருவர், சுவாமிகளுக்கு காவியுடை அளித்து, அதனை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினார். இது குமரகுருபரருடைய ஆணை என்று அடிகளார் உட்கொண்டு அவரை வணங்கி அவர் அளித்த காவி உடையை ஏற்றுக் கொண்டார். அன்று முதல், சுவாமிகள் காவியுடையை மட்டுமே அணியலானார். பின்னர் சென்னை வந்தடைந்தார். அடிகளார் எந்நேரமும் ஆறுமுகப்பெருமானை தியானிப்பதும், அப்பரமனை போற்றி பாடல்கள் பாடுவதும், மற்ற நேரங்களில் திருத்தல யாத்திரை புரிவதுமாகவே வாழ்ந்து வந்தார்.

பின்னத்தூர் அடைதல்

சென்னையை சுற்றியுள்ள திருவொற்றியூர், பழவேற்காடு, ஆண்டார்குப்பம் போன்ற திருத்தலங்களை தரிசித்து விட்டு சிதம்பரம் அருகே உள்ள பின்னத்தூர் என்ற ஊரை அடைந்தார். அங்குள்ள அடியார்கள் சுவாமிகளை வணங்கி உபசரித்தனர். அங்கு சிவ நிந்தனையில் ஈடுபட்டு வந்த சில வைணவர்கள் மீது வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றார். வழக்கில் தோற்ற சிலர், ஒரு மந்திரவாதியின் மூலம் சுவாமிகளை கொல்லும் பொருட்டு ஒரு துர்த்தேவதையை ஏவினர். ஆனால், சுவாமிகளின் அருள்த் தன்மையினால், அத்தேவதை சுவாமிகளை கண்டு அஞ்சி தன்னை ஏவிய மந்திரவாதியை தாக்கி கொன்றது. சுவாமிகளை கொல்ல பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், முருகன் அருளால் அடிகளார்க்கு எந்த தீங்கும் நேரவில்லை. பின்னர் பல ஆண்டுகள் கழித்து 1914ம் ஆண்டு மீண்டும் சென்னை சேர்ந்தார்.

குமாரஸ்தவம் இயற்றல்

1918ம் ஆண்டு தமக்கு ஏற்பட்ட வெப்பு நோய் விலகும் பொருட்டு குமாரஸ்தவம் எனும் அர்ச்சனை நூலை சுவாமிகள் இயற்றினார். அந்நோயும் நீங்கியது. சுவாமிகள் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் சுவாமிகட்கு குரு பூஜை நடத்தப்படாமை குறித்து வருந்தினார். தியான யோகத்தில் அமர்ந்து, அருணகிரிநாதர் முக்தி பெற்ற தினம் உத்தராயணம் கழிந்த ஆறாவது பௌர்ணமி என்று உணர்ந்தார். தமது சீடர்களுக்கு இது குறித்து அறிவித்து குரு பூஜை நடைபெறுமாறு செய்தார்.

மயூர வாகன சேவனம்

1923ம் ஆண்டு டிசம்பர் 27ம் நாள், சுவாமிகள் சென்னை தம்பு செட்டி தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு குதிரை வண்டியின் சக்கரம் அடிகளாரது இடது கணை காலின் மீது ஏற, கால் முறிவடைந்தது. அங்கிருந்த அன்பர்கள் சுவாமிகளை சென்னை பெரிய மருத்துவமனையில் சேர்த்தனர். இதை அறிந்த சுவாமிகளின் சீடர்கள் ஓடி வந்து பரிவுற்று வருந்தி அழுதனர். தலைமை மருத்துவரான ஆங்கிலேயர், சுவாமிகளின் கால் குணப்படாது என்று கூறினார். அது கேட்ட அன்பர்கள் மிகவும் வருந்தினர். பதினோராவது நாள் இரவு அடிகளார், படுக்கையில் படுத்த வண்ணம் முருகனை வேண்டினார். அப்போது முருகனின் வாகனமாகிய மயில்கள் வானத்தில் நடனம் புரிந்து வருவதை கண்டார். அப்பொழுது, முருகன் மயில்கள் மீது அமர்ந்து வரும் அரிய மயூரவாகன சேவனக்காட்சியை சுவாமிகள் கண்டு களித்தார். மறுநாள் இரவு அடிகளார் அருகில் முருகன் குழந்தை உருவில் படுத்திருப்பதை கண்டார். "முருகா" என்று அழைத்தவுடன் இறைவன் மறைந்து போனார். முருகனின் திருநாமத்தை பன்னிரு முறை கூறி வணங்கினார். உடனே கால் கூடி விட்டது. பெரிய மருத்துவரான ஆங்கிலேயர், இவரை சோதித்து இது தெய்வச் செயல் என்று அறிந்து அடிகளாரை வணங்கினார். இரு வாரங்களில் சுவாமிகள் முழுமையாக குணமடைந்து புதுப்பாக்கத்தில் உள்ள அன்பர் ஒருவர் வீட்டில் தங்கினார். பின் சுவாமிகளின் வேண்டுகோளின்படி, அடியார்கள் ஒவ்வொரு ஆண்டும் மயூர வாகன சேவன விழாவை நடத்தி வருகின்றார்கள்.
Mayura Vagana Sevanam

குமாரசுவாமியம்

சுவாமிகள் 1192 செய்யுள்கள் கொண்ட குமாரசுவாமியம் என்னும் நூலை இயற்றினார். ஆறுமுருகப்பெருமானை போற்றும் பாடல்களின் தொகை ஆறு என்ற எண்ணுடையாதாக இருக்க வேண்டும் என்று எண்ணிய அடிகளார் பாடிய பாடல்களின் மொத்த எண்ணிக்கை 6666.
 1. குமரகுருதாச சுவாமிகள் பாடல் - 1266
 2. ஸ்ரீமத் குமார சுவாமியம் (குமார நாயகன் திருவிளையாடல்) - 1192
 3. திருவலங்கற்றிரட்டு(பல சந்தப் பரிமளம்) - 1135
 4. திருப்பா (திட்ப உரை) - 1101
 5. காசியாத்திரை(வடநாட்டு யாத்திரை அனுபவம்) - 608
 6. சிறு நூற்றிரட்டு (சண்முக கவசம் முதலிய பத்து) - 258
 7. சீவயாதனா வியாசம் (சீவகாருண்யம் - புலால் மறுப்பு) - 235
 8. பரிபூரணானந்த போதம் (சிவசூரியப் பிரகாசம் உரை) - 230
 9. செக்கர் வேள் செம்மாப்பு - 198
 10. செக்கர் வேள் இறுமாப்பு - 64
 11. தகராலய ரகசியம் (சதானந்த சாகர உரை) - 117
 12. குமரவேள் பதிற்றுப் பத்தந்தாதி - 100
 13. சேந்தன் செந்தமிழ் (வடமொழி கலவாத் தனித் தமிழ்) - 50
 14. குமாரஸ்தவம் - 44
 15. தென்னாட்டுத் திருத்தலதரிசனம் (கட்டளைக் கலித்துறை) - 35
 16. பத்துப் பிரபந்தம் (சித்திரக் கவிகள்) - 30
 17. ஆனந்தக்களிப்பு - 30
 18. சமாதான சங்கீதம் - 1
 19. சண்முக சகச்சிர நாமார்ச்சனை - 2
ஆகப் பாடல்கள் 6666

உரைநடை நூல்கள்

சுவாமிகள் பாடல்கள் இயற்றுவதோடு மட்டுமல்லாமல், பல உரை நடை நூல்களையும் இயற்றினார். வேத வியாசம், சுப்ரமண்ய வியாசம், குரு சீட சம்பவ வரலாற்று வியாசம், செவியறிவுறூவு போன்ற நூல்களை எழுதினார்.

முக்தியடைதல்

தாம் முக்தி அடையும் காலம் வந்துவிட்டதை உணர்ந்த சுவாமிகள், Pamban Samadhiதமது சீடர்களிடம் திருவான்மியூரில் நிலம் வாங்குமாறு கூறினார். அவ்வாறே நிலம் வாங்கப்பட்டது. 1929ம் ஆண்டு, ஒரு நாள் சுவாமிகள் தமது சீடர்களை அழைத்து, "மயூர வாகன சேவன விழாவை தொடர்ந்து நடத்தி வாருங்கள். நான் சமாதி அடைந்ததும் என்னுடைய உடலை திருவான்மியூரில் சேர்த்து விடுங்கள்" என்று கட்டளையிட்டார். 30-5-1929 வியாழக்கிழமை காலை 7.15 மணிக்கு, சுவாமிகள் பிராண வாயுவை உள்ளிழுத்து மகாசமாதியில் ஆழ்ந்தனர். இதை அறிந்த அனபர்கள் பலர் சுவாமிகளை வந்து தரிசித்து சென்றனர். மறுநாள் (31-5-1929), சுவாமிகளின் திருமேனியை திருவான்மியூரில் சேர்த்து சமாதிக்கோவில் அமைத்தனர். சுவாமிகளின் சமாதிக்கோவில் மிகவும் மகிமை வாய்ந்தது. அங்கு சென்று வாழ்வில் வளம் பெற்றோர் பலர். திருவான்மியூர் பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோவில். அனைவரும் தரிசித்து திருவருள் பெறுவோமாக.

Thursday, August 30, 2012

அஷ்டலட்சுமி வழிபாடு-சமஸ்கிருதம்

1. மஹாலட்சுமி

மஹா லக்ஷ்மி மஹா தேவீம்
சங்க சக்ர சதுர் புஜாம்
பத்மா ஸநே பத்ம ஹஸ்தாம்
பத்மா ரூட மஹோ ஜ்வலாம்

2. தான்யலட்சுமி

தாநவான் நகரீம் தேவீம்
தான்ய லக்ஷ்மீம் சுக ப்ரதாம்
பத்ம நேத்ராம் பத்ம முகீம்
ஸர்வா பரண பூக்ஷிதாம்

3. தனலட்சுமி

மஹா தேவீம் மஹா மாயாம்
தனா கர்ஷண சுந்தரீம்
தனா திஷ்டான மாதங்கீம்
தன தான்யாபி வர்த்த னீம்.

4. பாக்யலட்சுமி

பாக்யலக்ஷ்மி மஹாதேவீம்
பாக்ய பாக்யாபி வர்த்த னீம்
மங்கள ஸ்வரூபா ம்போ தேவீ
மாங்கல்ய மணி பூக்ஷிதாம்

5. சந்தானலட்சுமி

சௌந்தரீம் சுந்த ரமுகீம்
சத் சந்தானபி வர்த்த னீம்
சௌபாக்ய ராஜ்ய ஸம்மானாம்
ஸர்வ ஸெளபாக்ய வர்த்த னீம்

6. வஸ்யலட்சுமி

ஈஸ்வர ப்ரே ரண கரீ
ஈஸ தாண்டவ ஸாக்ஷிணீ
ஈஸ்வரோத் ஸங்க நிலயா
ஈதி பாதா வினாசி னீம்.

7. கஜலட்சுமி

ஸ்ரீங்கார வேத்யா ஸ்ரீங்கார பூஜ்யா
ஸ்ரீங்கார பீடிகா, ஸ்ரீங்கார வேத்யா
ஸ்ரீங்கார கஜலக்ஷ்மி நமோ அஸ்துதே

8. வரலட்சுமி

பத்மாஸனே பத்ம கரே
பத்ம மாலா விபூஷணே
விஷ்ணுபத்நீம் மஹாதேவீம்
வரலக்ஷ்மி நமோஸ்துதே

Wednesday, August 29, 2012

பெண்கள் மூக்குத்தி அணிவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

மூக்குத்தி குத்திக் கொள்வதால் பெண்களுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதிகம். இதனால் பண்டைய காலத்திலேயே மூக்கு குத்திக் கொள்ளும் வழக்கம் உருவானது. மூக்கு குத்துவதினாலும் காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன. உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால் அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்லாமல் மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டு வருவதற்குத்தான் மூக்குக் குத்தப்படுகிறது. மூக்குக் குத்துவதால் பெண்கள், சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள் மற்றும் மனத்தடுமாற்றம் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.

Tuesday, August 28, 2012

கனவில் யானை வந்தால் என்ன பலன்?

கனவுகளுக்கான பலன்கள் பழமையான சாஸ்திரங்களில் மட்டுமே உள்ளது. நள்ளிரவில் ஒரு மணிக்கு கனவு கண்டால் ஒரு வருடம் கழித்து பலன் கிடைக்கும். இரண்டு மணிக்கு கனவு கண்டால் மூன்று மாதத்தில் பலன் கிடைக்கும், அதிகாலை கனவு உடனடியாக பலிக்கும் என்று கனவு சாஸ்திரம் கூறுகிறது. கனவில் யானை வந்தால் அரசாங்க உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக நடந்து வந்த வழக்கில் தீர்ப்பு கிடைக்கும். யானை மாலை போடுவது போல் கனவு கண்டால் பதவி உயர்வு கிடைக்கும். பிரிந்த கணவன் மனைவி இடையே உறவு ஏற்படும். இளம் தலைமுறையாக இருந்தால் திருமணம் நடக்கும். விநாயகப்பெருமானை வணங்கிவிட்டு தூங்கசெல்லுங்கள். விநாயகர் அகவலை காலை, மாலையில் பாராயணம் செய்யுங்கள். ஓம் சக்திவிநாயகநம என்ற நாமத்தை குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 108 முறை சொல்லுங்கள். நிச்சயம் நல்லபலன் உண்டாகும். கனவில் யானையைப் பார்ப்பது செல்வவளத்துக்கும் அறிகுறியே.

கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல என்பதன் பொருள் என்ன?

தேடிச் சென்ற விஷயம் தானாக நம் கைக்கு வந்து சேர்ந்தால், பருத்தியே புடவையாக காய்த்தது போல இரட்டிப்பு மகிழ்ச்சிஉண்டாகும் அல்லவா! அதையே இப்பழமொழியில், தெய்வதரிசனம் பெறுவதற்காக கோயிலுக்குச் செல்லும்போது நடுவழியில் கடவுள் காட்சி அளித்ததாக குறிப்பிடுகின்றனர். குறைந்த முயற்சியிலேயே கிடைப்பது என்றும் பொருள் கொள்ளலாம்.

Sunday, August 26, 2012

நெருப்பை ஏன் இந்துக்கள் வணங்குகிறார்கள் தெரியுமா?

இந்துக்களின் வழிபாட்டில் நெருப்புஒரு முக்கிய இடம் வகுக்கிறது. நெருப்பு மிகச் சுத்தமானது. மிக உக்கிரமானது. இந்த இரண்டும் கலந்த மனிதப்பிறவியாக இருக்க வேண்டும் என்பது முன்னோர்களின் எண்ணம். அநீதியைக் கண்டால் அழித்து ஒழிப்பது என்பது மனிதருக்குள் இருக்க வேண்டும். அதேநேரம் குற்றங்கள் புரியாத குற்றங்களிலிருந்து வெகுதூரம் தள்ளி இருக்கின்ற பரிசுத்தம் இருக்க வேண்டும். இந்த குணங்களைக் கொண்ட நெருப்பை வணங்குவது முன்னோர் வகுத்த வழி. அதுமட்டுமல்ல, நெருப்பு இடையறாது சலனமுள்ளது. ஆனால் சலனம் இல்லாதது போலத் தோன்றும். உற்று அந்த சலனத்தைக் கவனித்தால் அந்த ஆட்டத்தைப் பார்க்க நம்முடைய மனதிற்குள் உள்ள ஆட்டம் மெல்ல மெல்ல அடங்கும். நெருப்பை முன் வைத்து தியானிப்பது, நெருப்பை வளர்த்து அதனுள் மனதைச் செலுத்துவது என்பது மனதை கட்டுப்படுத்தக்கூடிய ஓர் அழகான பயிற்சி. நெருப்பு என்பது ஹோமகுண்டமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. குத்துவிளக்கின் முத்துச்சுடர் கூட உங்கள் மனதை ஒருமுகப்படுத்திவிடும். எனக்குப் பிடித்தது எல்லாவற்றையும் நெருப்பில் போட்டு விடுகிறேன். எனக்குப் பிடித்தது என்று இவ்வுலகில் எதுவும் இல்லை  என்று வழிபட்டால் போதும். நெருப்பு மிக எளிதாக மனதை ஒன்ற வைக்கும் சாதனம்.

Thursday, August 23, 2012

சிவனே என்றிரு என்பதன் பொருள் தெரியுமா?

சிவனேனு இரு என்று பலரும் சொல்ல கேட்டிருப்போம், அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?.. சிந்தனையை ஒருமுகப்படுத்தி இறைநினைப்பில் இருக்க வேண்டும் என்பதையே சிவனே என்றிரு என்று பெரியவர்கள் குறிப்பிட்டனர். திருமந்திரத்தில் திருமூலர், சிவ சிவ என்றிட தீவினை மாளும் என்கிறார். அவ்வையார், சிவாயநம என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை என்று குறிப்பிடுகிறார்.

Wednesday, August 22, 2012

திருமணத்தில் தாலிகட்டும் போது கெட்டிமேளம் ஒலிக்கச் செய்வது ஏன்?

திருமணத்தின் போது தாலி கட்டுவது தான் முத்தாய்ப்பான நிகழ்ச்சி. அந்நேரத்தில் பலரும் பல விஷயங்களை அளந்து கொண்டிருப்பார்கள். அதில் கெட்டதும் இருக்கலாம். அந்த சப்தத்தையெல்லாம் அடக்கும் வகையில், சப்தமாக மேளம் வாசிக்கும்போது, கவனம் மணமேடை பக்கம் திரும்பி விடும். அப்போது அட்சதை தூவி மணமக்களுக்கு ஆசியளிக்க வேண்டும் என்பதற்காக கெட்டிமேளம் முழக்கப்படுகிறது.

Monday, August 20, 2012

ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள் தெரியுமா?

ஓம் என்னும் மந்திரத்திற்கு பல விளக்கங்கள் உள்ளன. ஆதிபகவானாகிய இறைவனே! ஜீவனாகிய என்னை சேர்த்துக்கொள், என்பது இதன் பொருள். ஒவ்வொரு தடவையும் ஓம் என்று சொன்ன பிறகு, விஷ்ணுவே, சிவனே, சக்தியே, விநாயகா, ஐயப்பா, முருகா என்றெல்லாம் அவரவர் இஷ்டதெய்வத்தை அழைக்கிறோம். ஓம் முருகா, ஓம் விநாயகா, ஓம் விஷ்ணு, ஓம் சிவாயநம என்று சொல்லும் போது, அந்தந்த தெய்வங்களிடம் என்னை உன்னோடு சேர்த்துக்கொள் என்று பொருள் தெரிந்தோ, தெரியாமலோ கெஞ்சுகிறோம். காலம் வரும்போது, இந்த மந்திரம் சொன்னதற்குரிய பலன் உறுதியாகக் கிடைக்கும். பிறப்பற்ற நிலையும் பரமானந்தமும் ஏற்படும்.

ஓம் என்னும் மந்திரத்திற்குள் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மாவும்,, காக்கும் கடவுளான விஷ்ணுவும்,சம்ஹார மூர்த்தியாகிய ருத்திரனும் அடக்கம்.ஓம் என்னும் மந்திரம் ஜபிப்பதன் மூலம் உடலையும் உள்ளத்தையும் சீராக வைத்துக்கொள்ள முடியும்.எடுத்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும்.எதிர்ப்பு சக்திகள் நீங்கும்.மன சாந்தி ஏற்படும்.உலகத்தோடு ஒட்டி வாழலாம்,வயது முதிர்ந்தோர் இந்த ஏகாட்சரத்தால் ஏகாந்த நிலையை அடையலாம்.

வாய்விட்டு ஜபிக்காமல் மனதிற்குள் “ஒம்”, “ஓம்”, “ஓம்” என ஜபிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓ. . . ம் என நீட்டியும் மனதால் ஜபிக்கலாம்.கிழக்குப் பார்க்க அமர்ந்து கண்களை மூடி ஜெபிப்பது நன்று.மாடி வீட்டில் இருந்து ஜபித்தால் பலன் கூடும்.மலை மேல் இருந்து ஜெபித்தால் பல மடங்கு சக்தி கிடைக்கும்.எந்த மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தாலும்,குறைந்தது ஒரு லட்சம் உரு ஏற்றியபின் தான் பலன் கிடைக்க ஆரம்பிக்கும்.உங்கள் உடலின் மின்சக்தி மற்றும் காந்த சக்தி ஏற்படும். வியாதியஸ்தர் முன் ஜெபித்தால் அவர்களின் நோய் நீங்கும். வேப்பங்குச்சியால் குழந்தைகள் நாக்கில் “ஓம்” என எழுத அவர்கள் கல்வி மேம்படும்.சுத்தமான பசுஞ்சாண விபூதியில் “ஓம்” என எழுதிக்கொடுக்க வயிற்று நோய்கள் நீங்கும். ஒரு எலக்ட்ரானிக் எலக்ட்ரோ மீட்டர் மூலமாக சாதாரண மனிதனின் மின் சக்தியை அளக்க வேண்டும்.பின் ஒம் ஓம் ஒம் என்று ஒரு லட்சம் முறை ஜபித்தவரின் மின்சக்தியை அளக்க வேண்டும்.அப்போது இருவருக்குமுள்ள வேறுபாடு நன்கு தெரியும். வாகனம் ஓட்டும்போதும், தெருவில் நடக்கும்போதும் எந்த மந்திரமும் ஜபிக்கக் கூடாது.

Sunday, August 19, 2012

மகுடி சத்தம் பாம்புக்கு கேட்குமா?

பாம்புகளுக்கு காதுகள் இல்லை என்பது தெரியும். ஆனால் அவை ஒலியை நன்கு கேட்கும் திறனை கொண்டிருக்கிறது என்று அமெரிக்க மற்றும் ஜெர்மனி விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கடல்சார் தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து, வெளிப்புறத்தில் செவிமடல்களும் உட்புறத்தில் செவிப்பறையும் இல்லாத பாம்புகள் எப்படி ஒலியை உணர்கின்றன என்பதை முதன்முறையாக விளக்கியுள்ளனர். பாம்புகளில் எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. இன்னும் நாம் அறிந்து கொள்ள வேண்டியதும் ஏராளமாக உள்ளன, என்று வாஷ்பர்ன் பல்கலைக்கழக உயிரியல் துறை பேராசிரியர் புரூஸ் தெரிவித்துள்ளார். வாசனையை நுகர்தல், சுவை உணர்ச்சி, வெப்பம் ஆகிய உணர்ச்சிகளால் மட்டுமே பாம்பு வாழ்க்கை நடத்துகிறது என்று கருதினார்கள். ஆனால், 1970களில்தான் பாம்பால் ஒலியை உணரமுடியும் என்று கண்டறிந்தார்கள். ஒலி எப்படி பாம்பால் உணரப்படுகிறது என்பது இன்றுவரை விளக்கப்படவில்லை. அதைத்தான் தற்போது விஞ்ஞானிகள் கண்டறிந் துள்ளனர். தரையில் நடமாடும் விலங்கினங்கள் ஏற்படுத்தும் ஒலி அதிர்வுகள் பாம்பின் கீழ்த்தாடையில் அமைந்துள்ள உருளையான ஓர் அமைப்பில் அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. தண்ணீரில் மிதக்கும் கப்பல் எப்படி அலைகளுக்கு ஏற்ப அசைகிறதோ அது போல் இந்த உருளையான அமைப்பு ஒலி அதிர்வுகளுக்கு ஏற்ப அசைகிறது.

இதனால்தான் மண்ணுக்குள் புதைந்துள்ள பாம்புகள் கூட அதிர்வுகள் மூலம் எளிதில் நடமாட்டத்தை அறிந்து கொள்கின்றன. பாம்புக்கு செவிப்பறை இல்லாத போதும், செவிச்சுருள் பகுதி உள்ளது. அதிர்வுகள் இப்பகுதியில் உணரப்பட்டவுடன் அது, நரம்புகள் மூலம் மூளைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. மகுடி ஒலிக்கு பாம்பு ஆடாது. மகுடியை ஆட்டுவதாலும், பாம்பாட்டி கால்களை அசைப்பதாலும்தான் பாம்பு ஆடுகிறது என்று கருதப்படுகிறது. ஆனால் பாம்பால் மகுடியின் சத்தத்தை உணர்ந்து கொள்ள முடியும் என்பதே தற்போது விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு உணர்த்துகிறது. பாம்பின் கீழ்த்தாடை ஒரே எலும்பாக இல்லாமல் இரு எலும்புகளால் ஆனது. இதனால்தான் அது எலியைக்கூட விழுங்கிவிடுகிறது. உணவுக்கு மட்டும் பயன்படுவதாக கருதப்பட்ட பாம்பின் தாடைப்பகுதி தற்போது ஒலி உணரப்படும் கருவியாகவும் உள்ளது என்ற இந்த கண்டுபிடிப்புதான், நீர்வாழ்வன பரிணாமம் பெற்று தரைப்பகுதியில் வாழத் துவங்கிய போது, எப்படி ஒலி உணர்ந்தன என்பதற்கு விடையாக அமைந்துள்ளது என்று விஞ்ஞானிகள் ஆச்சரியப்படுகின்றனர்.

Thursday, August 16, 2012

வாராஹி அம்மனை வழிபடுவது எப்படி?(ஸ்ரீ வாராஹி மூல மந்திரம்)

ஒவ்வொருவரும் அம்பிகையைப் பூஜை செய்வது பூர்வ புண்ணிய பலத்தினால் வருவது. எதிலும் சக்தியே பிரகாசிக்கிறது. அந்த சக்தியை ஒரு இடத்தில் நிறுத்தி அதனுடைய பேரருளை பக்தி மார்க்கமாக வாராஹி அம்பாள் என்று நினைவில் வைத்து அம்பாளை லயம் செய்து கொள்வதே உபாசனை என்பதாகும். அவ்வாறு தாங்கள் வாராஹியை உபாசித்தால் சகலவிதமான காரியங்களும் நொடியில் சித்தியாகும். ஆதிசக்தியாகிய பராசக்தியின் படைக்கு சேனாதிபதியாக வாராஹி தேவி அவதரித்தாள். ஆகையால் நாம் வாராஹியை அன்றாடம் வழிபாடு செய்ய வேண்டும். 

குறிப்பு :

1. வாராஹிக்கு ஏற்ற மாலை - செவ்வரளி மாலை.
2. வாராஹிக்கு ஏற்ற புஷ்பம் - செந்தாமரை, வெண் தாமரை.
3. வாராஹிக்கு ஏற்ற கிழங்கு - தாமரைக் கிழங்கு, அல்லிக் கிழங்கு, தண்ணீர்விட்டான் கிழங்கு, மாகாளிக் கிழங்கு, பனங்கிழங்கு.
4. வாராஹிக்கு ஏற்ற வாசனைத் தளிர்கள் - மரிக்கொழுந்து, கருப்பு துளசி, செந்தாழை, மல்லியிழை.
5. வாராஹிக்கு ஏற்ற வேர்கள் - வெட்டிவேர், அல்லி வேர், மல்லி வேர், சிறு நன்னாரி வேர், பெரு நன்னாரி வேர்.
6. வாராஹிக்கு ஏற்ற வஸ்திரங்கள்-செவ்வண்ண வஸ்திரம் ஹோமத்தில் சேர்க்க வேண்டும்.
7. வாராஹிக்கு ஏற்ற நெய்வேத்திய பலகாரங்கள் - கருப்பு உளுந்து வடை, பாதாம் கேசரி, முந்திரி உருண்டை இத்துடன் பானகம் முதலியன.

வாராஹியின் நான்கு திருக்கோலங்கள் :

1. சிம்ம வாகனத்தில் அமர்ந்திருக்கும் வாராஹி.
2. மகிஷ வாகனத்தில் (எருமை) அமர்ந்திருக்கும் வாராஹி.
3. புலி வாகன வாராஹி.
4. வெண் குதிரை வாகன வாராஹி.
இந்த நான்கு திருக்கோலங்களும் நான்கு விதமான பலன்களைத் தருவதாக சித்தர்களாலும், மந்திர சாஸ்திரங்களாலும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

ஜபத்திற்கான மந்திரங்கள்

மந்திரங்கள் சப்த ரூபமாக உள்ளவை. இவை தேவதைகளின் ஸூக்ஷ்ம சரீரம். இவைகளில் இவ்வளவு என்று குறிப்பிட முடியாத சக்தி உண்டு. இன்ன மந்திரம் இன்ன பலன் தரும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வேண்டும். உபாஸனை, ஜபத்தினால்தான் வலிமை பெறும். ஜபத்திற்கு சாதனம் மந்திரம்.

ஒரு மந்திரத்தைக் கொண்டு சித்தி பெறுவது எப்படி?

மந்திரங்களின் சக்தி அதை உருவேற்றுவதில்தான் இருக்கிறது. லட்சக் கணக்கான மந்திரங்களை ஆவ்ருத்தி செய்து நீண்ட காலப் போக்கில் சித்தி பெறுதல் என்பது இக்காலச் சூழ்நிலையில் சாத்தியமற்றதாக இருக்கிறது. ஆகவே, நம் முன்னோர்கள் மந்திரங்கள் சித்தி அடைவதற்கு சுலபமான சில வழிகளையும், தங்கள் அனுபவத்தின் மூலம் விளக்கினர்.

1. எந்த ஒரு மந்திரத்தையும் ஒரே நாளில் சித்தி செய்யலாம். வழிபடுவோரின் ஊக்கமும் தளரா முயற்சியும் இதற்குக் காரணமாகிறது.
சுக்ல பக்ஷம், கிருஷ்ண பக்ஷம் ஆகிய இரண்டு பக்ஷங்களுக்கும் உரிய ஏதாவது ஒரு அஷ்டமி திதியிலோ அல்லது சதுர்த்தசி திதியிலோ சூரியோதயம் தொடங்கி மறுநாள் சூரியோதயம் வரை இடைவிடாது மந்திரத்தை ஜபிப்பதால் மந்திரம் சித்தியாகிறது.
 உபாசகன் ஸர்வ ஸித்தீஸ்வரன் ஆகிறான். அதாவது எல்லா ஸித்திகளுக்கும் தலைவன் ஆகிறான். இப்படி ஒரே நாளில், அதாவது 60 நாழிகை நேரத்தில் மந்திர ஸித்தி அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுபவர் சில ஜபங்களுக்கு உள்ளத்தில் இடம் கொடுக்க உறுதியுள்ளவராக இருக்க வேண்டும். வேறு பல சாஸ்திரங்களிலும் ஆசார முறைகளிலும் கொள்ளப்படும் பிரமாணங்களை செவியில் வாங்கிக் கொண்டு குழப்பமடையக் கூடாது. அறுபது நாழிகை நேரமும் எல்லாக் கர்மங்களும் தான் ஜபிக்கும் ஒரு மந்திரத்தினாலேயே ஆகிறது என்ற நிச்சயம் உடையவராக உபாசகன் இருக்க வேண்டும்.

2. ஒரு மாதத்தில் மந்திர ஸித்தி அடையலாம். ஒரு கிருஷ்ணாஷ்டமி தொடங்கி அடுத்த கிருஷ்ணாஷ்டமி முடிய. நாள் ஒன்றுக்கு 108 முறை நியமத்துடன் ஜபம் செய்வதால் மந்திர ஸித்தி உண்டாகிறது. ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது ஒன்று மந்திரத்திற்கு முன்னும் பின்னும் மாத்ருகா அக்ஷரங்கள் 51ஐ ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் அமைத்து ஜபம் செய்ய வேண்டும். இப்படி மாத்ருகா ஸம்புடிதமாக மந்திரத்தை நாளொன்றுக்கு 108 தடவையாக ஒரு மாதம் ஜபம் செய்ய வேண்டும். கிருஷ்ணாஷ்டமி போல கிருஷ்ண சதுர்தசீ சுக்ல அஷ்டமி, சுக்லி சதுர்தசீ திதிகளும் இந்த ஜப முறைக்கு ஏற்றவையே.

3. மாத்ருகா ஸம்புடீகரணமில்லாமல் ஒரு மாதத்தில் மந்திர ஸித்தியை விரும்புகிறவர், இந்த குறிப்பிட்ட திதிகளில் தொடங்கி குறிப்பிட்ட அடுத்த திதிகளில் முடியுமாறு நாள் ஒன்றுக்கு 1008 முறை மூலமந்திரத்தை மட்டும் ஜபம் செய்தால் வெற்றியடையவது நிச்சயம்.

4. மாத்ருகா அக்ஷரங்களில் பூதலிபி வரிசை என்று ஒரு முறை உள்ளது. அவ்வரிசைப்படி மூல மந்திரத்திற்கு முன்னும் பின்னும் ஒவ்வொரு எழுத்தைக் கூட்டி நாள் ஒன்றுக்கு 1008 முறை ஜபம் செய்தால் மந்திர ஸித்தி நிச்சயம்.

5. ரிக்வேதப்ராதி சாக்யத்தில் 63 எழுத்துகள் கொண்ட ஒரு அரிச்சுவடி இருக்கிறது. அதிலுள்ள 63 எழுத்துகளை ஏறுஇறங்கு வரிசைகளில் மந்திரத்தின் முன்னும் பின்னும் முறையே கூட்டி நாள் ஒன்றுக்கு 108 முறை மூலமந்திரம் செய்வதாலும் மந்திர ஸித்தி நிச்சயம்.

6. கிருஷ்ணாஷ்டமி தொடங்கி கிருஷ்ண சதுர்த்தசீ வரை உள்ள ஏழே நாட்களில் மொத்தம் கூட்டி 40,000 எண்ணிக்கை வரும்படி மந்திர ஜபம் செய்ய வேண்டும். இந்த ஏழு நாள் ஜபமுறையில் தசாம்சக் கணக்கில் ஹோமம் முதலானவைகளும் செய்ய வேண்டும். இந்த ஜபம் நாள் ஒன்றுக்கு 5714 ஆகும். கடைசி நாள் 5716 ஆகும். அந்தந்த நாளில் ஹோமம் தசாம்ச கணக்கில் செய்ய வேண்டும்.

7. சூர்ய சந்திர கிரஹண காலம் பூராவும் ஒரு மந்திரத்தை ஜபம் செய்வதால் அம்மந்திரம் ஸித்தியாகிறது.

8. ஒவ்வொரு இரவு (இரவு முழுவதும்) சர்வ உபசாரங்களுடன் மூன்று முறை நவாவரண பூஜையை ஒரு மாத காலம் செய்வதால் மந்திர ஸித்தி ஏற்படுகிறது.

9. மாத்ருகா அக்ஷரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மூலிகையாக பிரபஞ்சசாரம் கூறுகிறது. தான் ஸித்தி செய்ய வேண்டிய மந்திரத்தில் உள்ள எழுத்துக்களுக்குரிய மூலிகைகளை எல்லாம் கூட்டிப் பொடி செய்து குளிகைகளாகச் செய்து கொண்டு அவற்றை ஜபம் செய்யும் போது வாயில் அடக்கிக் கொண்டிருப்பதால் மந்திரம் எளிதில் ஸித்தியாகிறது.

10. மகாபாதுகையை தனது ஸகஸ்ரார சக்ரத்தில் தியானம் பண்ணுவதால் மந்திரம் ஸித்தியாகிறது. மஹாபாதுகைக்குள் மந்திரம் அடக்கியிருப்பதாலும் மஹாபாதுகைக்கு மேம்பட்ட வேறு மந்திரமே இல்லாததாலும் மகா பாதுகா தியானத்தால் அடைய முடியாதது ஒன்றில்லை.

11. ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றி பரோக்ஷ ஞானம் திருடமாகக் கைவரப்பெற்றவன். மந்திரத்திற்கு முந்தியும், பிந்தியும் சிவோஹம் என்ற பாவனையுடன் மந்திர ஜபம் செய்வதால் மந்திரம் எளிதில் ஸித்தியாகிறது.

12. அஹம் ப்ரஹ்மாஸ்மி அல்லது ஈம் என்ற பரா காமகலா அக்ஷரத்தையோ முன்னும் பின்னும் மந்திரத்தில் கூட்டி ஜபம் செய்வதால் ஸகல ஸித்திகளும் கிடைக்கின்றன.

ஜபத்திற்குரிய இடங்கள்

ஜபம் எங்கு எப்படிச் செய்யவேண்டும் என்று கீதையில் 6வது அத்தியாயத்தில் 11 - 13 ஸ்லோகங்களில் கூறப்பட்டுள்ளது.
சுத்தமான இடத்தில் தர்ப்பாசனத்தில் அல்லது மான்தோல் அல்லது வஸ்திரம் இவை மீது அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி இந்திரியங்களின் செயல்களை அடக்கி நிமிர்ந்து உட்கார்ந்து மூக்கின் நுனியைப் பார்த்த வண்ணம் ஜபம் செய்யவேண்டும்.
பூஜை அறை, பசுக்கொட்டில், நதிதீரம், கடற்கரை, ஆசிரமம், ஆலயம், தீபமுகம் இவைகள் ஜபம் செய்ய சிறந்த இடம்.
கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் வியாதி நீங்கும். தெற்கு நோக்கி ஜபம் செய்தால் வசியம் சித்திக்கும். அக்னி மூலை (தென்கிழக்கு) நோக்கி ஜபம் செய்தால் கடன் தீரும். மேற்கு நோக்கி ஜபம் செய்தால் பகை தீரும். ஈசானமாகிய வடகிழக்கு நோக்கி ஜபம் செய்தால் மோக்ஷம் சித்திக்கும். கிழக்கும், வடக்கும், நிஷ்காமியமானது.
சுகாஸனம் இருந்து ஜபம் செய்வது கிருஹஸ்தர்களுக்கு ஏற்றது. பத்ராஸனம், முக்தாஸனம், மயூராஸனம், ஸித்தாஸனம், பத்மாஸனம், ஸ்வஸ்திகாஸனம், வீராஸனம், கோமுகாஸனம், சுகாஸனம் என்ற ஒன்பது நிலைகளிலிருந்தும் ஜபம் செய்யலாம். பழக்கப் படாதவர்கள் கஷ்டமான ஆசனங்களைத் தவிர்ப்பது நல்லது.
கருங்கல் மீதிருந்து ஜபம் செய்தால் வியாதி; வெறும் தரையில் ஜபம் செய்தால் துக்கம்; மான் தோல் மீது ஜபம் செய்தால் ஞானம்; புலித்தோல் மீது ஜபம் செய்தால் மோக்ஷம்; வஸ்திரம் ஆஸனம் மீது ஜபம் செய்தால் வியாதி நிவர்த்தி, (வெள்ளை வஸ்திரம் சாந்தி; சிவப்பு வஸ்திரம் வசியம்) கம்பளம் மீது ஜபம் செய்தால் சகல சௌக்யம் உண்டாகும்.

ஸ்ரீ வாராஹி மூல மந்திரம்

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்! ஐம் க்லௌம்
ஐம் நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி
வாராஹி, வாராஹி வராஹமுகி, வராஹமுகி
அந்தே அந்தினி நம:
ருந்தே ருந்தினி நம :
ஸ்தம்பே ஸ்தம்பினி நம:
ஸர்வதுஷ்ட ப்ரதுஷ்டானாம்
ஸ்ர்வேஷாம் ஸ்ர்வவாக்
சித்த, சக்ஷர் முககதி
ஜிக்வா, ஸ்தம்பனம் குருகுரு

சீக்ரம் வஸ்யம்

ஐம் - க்லௌம் - ட : ட : ட : ட
ஹும் அஸ்த்ராய பட்
ஓம் அஸ்யஸ்ரீ வாராஹி
மஹா மந்த்ரஸ்ய பகவான்
பைரவ ரிஷித் ருஷ்டிப் ஸந்தவராகி
மஹா சக்தி தேவதா
க்லைம் பீஜம்
க்லாம் சக்தி
க்லூம் கீலகம்
மம ஸ்ரீ வாராஹி
மஹா சக்தி பிரசன்ன
ஸித்தியர்த்தே ஜெபோ விநியோக ஹா!

நியாஸம் :

கரம் :
ஐம் - அங்குஷ் டாப்யாம் நம:
க்லிம் - தர்ஜ்ஜனிப்யாம் நம:
சௌ - மத்யமாப்யாம் நம:
ஐம் - அனாமி காப்யாம் நம:
க்லீம் - கனிஷ்ட காப்யாம் நம:
சௌ - கரதலப்ருஷ்டாப்யாம் நம:
நியாஸம் :
அங்கம் :
ஐம் ஹ்ருதயாக நமஹ
க்லீம் சிரசே ஸ்வாஹ
சௌம் சிகாயை வஷட்
ஐம் கவசாய ஹும்
க்லீம் நேத்ராய வெளஷட்
சௌம் அஸ்திராயபட்
பூர்ப்பு வஸ்ஸுவரோம் இதி திக்பந்த :
அஸ்ய ஸ்ரீ மஹா வாராஹி ! மஹா
மந்திரஸ்ய ! தரணீ
வாராஹ ருஷி ! ப்ரஹதீ சந்த்; மஹா
வாராஹி தேவதா !!
த்லௌம் பீஜம் ! ஐம் சக்தி !
ஹ்ரீம் கீலகம் ! ஸ்ரீ மஹா வாராஹி
ப்ரஸாத ஸித்தியர்த்தே ஜப விநியோக
தியானம் :
வந்தே வராஹவக்த்ராம் மணிமகுடாம்
வித்ரும ச்ரோத்ர பூஷாம்
ஹாரக்ரை வேய துங்கஸ்தனபர நமதாம்
பீத கௌசேய வஸ்த்ராம்
தேவீம் த்÷க்ஷõர்த்வ ஹங்தே முஸலமத்
வரம் லாங்கலம் வா கபாலம்
வாமாப்யாம் தாரயதீ குவலய கலிதாம்
ச்யாமளாம் ; சுப்ரனை !!
லம் இத்யாதி பஞ்சபூஜா
தியானம் :
அஸ்ய ஸ்ரீ மஹா வாராஹி மந்தரஸ்ய
தரணி வாராஹ ரிஷி : ப்ரஹதீ சந்தாம்ஸி
மஹா வாராஹி தேவதா
மமகார்ய சித்யர்த்தே வாராஹி தேவி வந்த
ஜெப சித்யர்த்தே மமகுல சந்தோஷணார்த்தே
ஜெபே விநியோகக

ஸ்ரீ அஸ்வாரூடாம்பா மகா மந்திரம்

ஓம் அஸ்ய ஸ்ரீ அஸ்வாரூடாம்பா மகா
ஸ்வச் சந்த பைரவ ருஷி காயத்ரீ மந்திரஸ்ய சந்த:
ஸ்ரீ அஸ்வாரூடாம்பா தேவதா!
ஆம் பீஜம் ஹ்ரீம்சக்தி க்ரோம் கீலகம்
மமஸ்ரீ அஸ்வாரூடாம்பா பிரசாத சித்யர்த்தே
அஸ்வாரூடாம்பா மந்த்ர ஜெப விநியோக
ஆம் - அங்; ஹ்ரீம் - த; க்ரோம் - ம
ஏஹி - அனா - பரமேஸ்வரி - கனி ஸ்வாஹா
கர தலகிர நம
ஏவம் க்ருதயன்யாச :
தியானம்
அஸ்வாரூடாம் காராக்ரைர் நவ கனக மயீம்
வேத்ர யஷ்டிம் ததானம்
தக்ஷன்யே நா நாயந்கீம் பக்த நூலதாம்
பாராபத்தம் சுசாத்யம்
தேவீம் நித்ய பிரசன்னாம் சசி சகலதராம் தாம்
த்ரிநேத்ரா பிராமாம்
உத்யத் கவ்யாம் சபத்யாம் சகல சுப
பலப்பிராப்தி
(க்ருத்சாம் ஸ்ரீ யன் நம:)
மந்திரம் :
ஆம் - ஹ்ரீம் - க்ரோம் ஏஹி
பரமேஸ்வரி ஸ்வாஹா

ஸ்ரீ வாராஹி அஷ்டகம்

தேவி க்ரோடமுகி ந்வதங்ரி கமலத்வத்
த்வானு ரக்தாத்மனே
மஹ்மம் த்ருஹயதயோ மஹேசி மனஸா
காயேன வாசா நர ;
தஸ்யாசு த்வதயோக்ர நிஷ்டுரஹலா
கதா ப்ரபூதவ்யதா
பர்யஸ்யன் மனஸோ பவந்து வபுஷ ;
ப்ராணா ப்ராயாணோன் முகா
தேவி த்வத்பத பத்ம பக்தி விபவ ப்ரஷீனே
துஷ்கர்மணி
ப்ராதுர்பூத ந்ருசபர்ஸ பாவமலினாம்
வ்ருத்திம் விதத்தே மயி
யோ தேஹி புவணேத தீய ஹ்ருதாயாந்
நிர்கத்வரைர் லோஹிதை
ஸத்ய; பூரயஸே கராப்ஐ சஷகம்
வாஞசாபலைர் மாமயி
சண்டோத்துண்ட விதீர்ண துஷ்ட ஹ்ருதய
ப்ரோத்பின்ன ரக்தச்சுடா
ஹாலாபான மதாட்ட ஹாஸநித
தா கோப ப்ரதா போந் கடே,
மாதர் மத் பரிபந்தினா மபஹ்ருதை ;
ப்ரானண ஸத் வதங்ரித்வயம்
த்யானோட்டாமர வைபவோதய வசாத்
ஸந்தர்ப்பயாமி க்ஷணா ;
ச்யாமாம் தாமரஸானனாங்ரி நயனாம்
ஸோமார்த்த ஷடாம் ஜகத்
த்ராண வ்யக்ர ஹலாயு தோக்ர முஸலாம்
ஸந்த்ராஸ முத்ராவதீம்
யேத்வாம் ரக்த கபாலினீம் ஹரவராரோ
ஹேவரா ஹானனாம்
பாவை; ஸந்தத்தே சதப் க்ஷணம்பி
ப்ராணாந்தி தேஷம் த்விஷ
விஸ்வாஸ்தீஸ்வர வல்லபே ஜெயஸேயா
த்வம் நித்யந்த்ரி யாத்மிகா
பூதானாம் புருஷாயு ÷ஷாவதிகரீ
பகா ப்ரதா கர்மணாம்
தர்மயாசே பவதீம் கிமப்யவிதகம்
யோமத் விரோ நீஜன ;
தஸ்யாயர்ம வாஞ் சிதாவதி பவேத்
மாதஸ்தவை வாக்ஞயா
மாதஸ்ஸம்யகு பாஸிதும் ஜடமதி ஸ்திவாம்
நைவ சக்னோம் யஹம்
யத்யப்யன் வித தேசிகாங்ரி கமலானுக் ரோச
பாத் ஸங்கின ;
வாராஹி வ்யத்மான மானஸ களத்
ஸெனக்யம் ஹதாசாபலம்
ஸிதத்தம் தமபாக்ரு தாத்ய வஸிதம் ப்ராப்தா
கிலோத் பாதகம்
கிரந்தத் பந்துஜனம் களங்கித குலம் கண்ட
வரணோத்யத் க்ரியிம்
பச்யாமி ப்ரதிக்ஷமா பதிதம் ப்ராந்தம்
லுடந்தம் முஹு
வாராஹி த்வம்சேஷ ஜந்து ஹீபுன ;
ப்ராணாத்மிகா ஸ்பந்தஸே
சக்திவ்யாபத சராசர கலுய தஸ்த்வாமேத
தப்யர்த்தயே
த்வத பாதாம்புஜ ஸங்கினோமம ஸக்ருத்
பாபம சிகீர் ஷத்தியே
தோஷாம் மாகுரு சங்கரப் பிரியதமே
தேஹாந்தரா வஸ்திதம்

ஸ்ரீ வாராஹி ஸ்தோத்ரம்

தேவ்யுவாச :
1. நமோஸ்து தேவி வாராஹி ஐயைகாரஸ்வரூபிணி !
ஜபித்வா பூமிரூபேண நமோ பகவதிப்பரியே!!

2. ஜயக்ரோ டாஸ்து வாராஹி தேவித் வாம்ச நமாம்யஹம்!
ஜய வாராஹிவிஷ் வேஸிமுக்ய வாராஹிதே நம!!

3. ஸர்வதுஷ்ட ப்ரதுஷ்டாநாம் வாக் ஸ்தம்ப நகரீநம!
நமஸ் ஸ்தம்பிநி ஸ்தம்பே தவாம் ஜ்ரும்பே ஜரும்பிணி தே நம!!

4. முக்யவாரா ஹிவந்தே த்வாம் அந்தே அந்திநி தே நம!
ருந்தே ருந்தேநிவந்தே த்வாம் நமோ தேவீது மோஹி நீ !!

5. ஸ்வபக்தானாம் ஹி ஸர்வேஷாம் ஸர்வகாம ப்ரதே நம!
பாஹ்வோ ஸ்தம்பகரீம் வந்தே சித்தஸ் தம்பிந தே நம!!

6. சக்ஷúஸ் ஸ்தம்பிநி த்வாம் முக்யஸ்தம்பி தே நமோ நம
ஜகத்ஸ்தம்பிநி வந்தே த்வாம் ஜீஹ்வாஸ்தம்பந காரிணி

7. ஸ்தம்பனம் குரு ஸத்ரூணாம் குரு மே ஸத்ருநாஷநம்
ஸீக்ரம் வஸ்யம் ச குரு யோக்நௌ வாசாத்மகேநம

8. டசதுஷ்டயரூபே த்வாம் ஸரணம் ஸர்வதா பஜே
ஹோமாத்ம மகே பட்ரூபேண ஜய ஆத்யாநநேஸிவே

9. தேஹி மே ஸகலான் காமான் வாராஹீ ஜெகதீஸ்வரி
நமஸ்துப்யம், நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம

10. இதம் ஆத்யாநநா ஸ்தோத்ரம் ஸர்வ பாபவிநாஸநம்
படேத்ய ஸர்வதா பக்த்யா பாத கைர் முச்யதே ததா

11. லபந்தே ச ஸத்ரவோ நாஸம் து ; கரோகாபம்ருத்யவ
மஹதாயுஷ்யமாப் நோதி அல க்ஷ் மீர் நாஸமாப்நுயாத்

12. ந பயம் வித்ய தே க்வாபி ஸ்ர்வதா விஜயோ பவேத்
அபீஷ்டார்தான் லபேத் ஸர்வான் ஸரீரீ நாத்ர ஸம்ஸய
(இதி ஸ்ரீருத்ர யாமளே உமா மஹேஸ்வர ஸம்வாதே
ஆதிவாராஹீ ஸ்தோத்ரம் ஸமாப்தம்)

சிவன் கோயில்களில் பிரதோஷம் அன்று எப்படி வலம் வந்து வணங்க வேண்டும்!

நமது நாட்டின் சுதந்திர தினம் (15ம் தேதி) கொண்டாடப்படுகிறது. அன்று சுதந்திர தினம், மாத சிவராத்திரி, பிரதோஷம் மூன்றும் ஒரே நாளில் வருவது தனி சிறப்பாகும். மாதந்தோறும் இரண்டு முறை பிரதோஷம் வருகிறது. பிரதோஷம் அன்று சிவன் கோயில்களில் எந்தெந்த தெய்ங்களை எப்படி வலம் வந்து வணங்கி பலன் பெறுவது என்பது பற்றி பார்ப்போமே!. சிவன் கோயில்களில் சிவபெருமானுக்கு எதிரே நந்தி பகவானின் பெரிய திருவுருவம் கம்பீரமாக உள்ளது. பிரதோஷ காலங்களில் வழிபடும் பக்தர்கள் நந்தியை வழிபட்டு விரதமிருந்து மாலை பூஜை முடித்த பின் உணவு அருந்துகின்றனர். தியோத திதியில் மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் ஆகும். தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலில் உள்ள அமிர்தத்தை பெற வேண்டி "வடவரை என்னும் மந்திர மலையை மத்தாகவும், "வாசுகி என்னும் நாகத்தை கயிறாகவும் வைத்து திருப்பாற்கடலை கடைந்தனர். இந்நிகழ்ச்சியை சிலப்பதிகாரமும், ஆய்ச்சியர் குரவை என்ற பகுதியில் ""வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி பண்டொரு நாள் கடல் வயறு கலக்கினையே என கூறுகிறது.

தேவர்களும், அசுரர்களும் திருபாற்கடலை கடைய துவங்கியதும் வேதனை தாளாத வாசுகி நாகம் விஷத்தை கக்கியதால் வெளியே வந்த ஆலகால விஷம் தேவர்கள், அசுரர்களை நெருங்க அதன் வெப்பம் தாங்காத அனைவரும் சிவபெருமானை தஞ்சம் அடைந்தனர். சிவபெருமான் சக்தியுடன் நந்தி பகவானின் இரண்டு கொண்டுகளில் நடுவே பிரன்னமாகி எங்கும் பரவியிருந்த விஷத்தை உளுந்து அளவாக்கி அனைவரையும் காப்பாற்றுவதற்காக ஆலகால விஷத்தை தான் உண்டார். அதுகண்டு பயந்து நின்ற பார்வதிதேவியும் இறைவனுக்கு விஷத்தால் ஏதும் இன்னல்கள் ஏற்பட்டு விடக்கூடாது என கருதி சிவபெருமானது கண்டத்தில் (கழுத்தில்) தன் கையை வைத்து அவ்விஷத்தை கழுத்திலேயே நிலைத்திருக்க செய்தார். இதனால் ஆலகால விஷம் சிவபெருமானின் கழுத்து பகுதியிலேயே தேங்கி நின்று நீலகண்டம் ஆயிற்று. நஞ்சுண்டு இருந்ததால் நஞ்சுண்டவன் என சிவன் அழைக்கப்படுகிறார். ""பெயர்தக்க நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் என வள்ளுவர் குறிப்பிட்டது போல நஞ்சுண்டு உலகத்தை காத்த அந்த நேரத்தை "பிரதோஷ காலம் என கூறுகிறோம். அக்காலத்தில் நந்தி பகவானையும், சிவபெருமானையும் தரிசனம் செய்தால் சர்வ பாவமும் விலகும் என்றும், மகப்பேறு உண்டாகும் என்றும் நம்பப்படுகிறது.

பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வணங்கும் முறையை பற்றி கடண்பவன புராணம் தெரிவிப்பது யாதென்றால், நந்தியை தரிசனம் செய்து அங்கு நின்று இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்து சென்ற வழியே திருப்பி வரவேண்டும். நந்தியை மீண்டும் தரிசனம் செய்து அங்கு நின்று வலமாக சென்று கோமுகி எனப்படும் சிவபெருனின் அபிஷேக நீர் வரும் துவார வழியே தரிசனம் செய்து சென்ற வழியே திரும்பி வரவேண்டும். நந்தியை மீண்டும் தரிசனம் செய்து அங்கு நின்று இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்து சென்ற வழியே திரும்பி வந்து நந்தியை தரிசனம் செய்து வலமாக வரவேண்டும். திரும்பவும் கோமுகியை தரிசனம் செய்து மீண்டும் வந்த வழியே திரும்பி வந்து நந்தியை தரிசனம் செய்து இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்து திரும்பி வரவேண்டும். நந்தியை தரிசனம் செய்த பின்னரே சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும். இப்படி பரிதட்சணம் செய்து வழிபடுவது "சோமசூத்திர பிரதட்சணம் என்று கூறப்படுகிறது. சோமசூத்திர பிரதட்சணம் செய்த பின்னர் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு "ஆத்ம பிரதட்சணம் செய்ய வேண்டும். இதனால் செய்த பாவங்கள் விலகி நற்பலன்கள் கோடி கிட்டும்.

Monday, August 13, 2012

சிவாலயங்களில் தரிசனம் செய்து விட்டு உட்கார்ந்து வர வேண்டும் என்பது ஏன்?

நாம் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்கிறோம். திரும்பி வரும் போது ஆலயத்தில் சற்று நேரம் அமர்ந்து விட்டு வருகிறோம். ஏன்? சிவாலயங்களில் மட்டுமே அவ்வாறு அமர்ந்து விட்டுவர வேண்டும் என்ற காரணம் தெரியுமா. நம்மைப் பின்தொடர்ந்து சிவனுடைய பூதகணங்கள் நம் வீட்டிற்கு வந்து விடக்கூடாது. மேலும் சிவன் சொத்து குலநாசம் என்பார்கள். அதனால் சிவன் கோயில் தூசு கூட நம்மேல் ஒட்டக் கூடாது என்பதும் ஒரு கருத்து. அதுபோல் விஷ்ணு கோயிலில்களில் தரிசனம் செய்த பிறகு அமர்ந்து விட்டு வரக் கூடாது. ஏனென்றால் அப்போது தான் லட்சுமி நம்முடன் வீட்டிற்கு வருவாள். அதிர்ஷ்டம் பொங்கும் என்பது ஒரு கருத்து.

Sunday, August 12, 2012

சூரிய பூஜையின் சிறப்பும் அவசியமும்!

லட்சக்கணக்கான ஆலயங்கள் இருந்தாலும், சில நூறு பெரிய ஆலயங்களில், கருவறையிலுள்ள இறைத்திருவுருவின் மீது, சூரிய ஒளி படரும் அமைப்புடையவற்றை சூரிய பூஜைக் கோயில் என்று நம் முன்னோர்கள் போற்றி வந்திருக்கின்றனர். ஊர்தோறும், தெருதோறும் உள்ள கூரையே இல்லாத மேடைக் கோயில்களிலும் கருவறை மட்டுமே உடைய பல்லாயிரம் சிறிய கோயில்களிலும், அன்றாடம், இறைவடிவின் மேல் பல மணி நேரம் சூரிய ஒளி படுகின்றதை சிறப்பு அம்சமாகக் கருதாத போது, எப்போதாவது சில நாட்கள் மட்டுமே கருவறையில் சூரிய ஒளி பரவும் கோயில்களை பெருமையாகப் பேசுவது ஏன்? பல முன் மண்டபங்களைத் தாண்டிக் கருவறையில் சூரிய ஒளி படர்வது ஒரு பொறியியல் சாதனை மட்டுமா?

எல்லா மண்டபங்களையும் தாண்டி கருவறையில் கதிரவனின் ஒளி படருமாறு அமைப்பது ஏன்? நாம் உணராவிட்டாலும் கூட, காற்று ஓட்டம், காந்த சக்தி நகர்வு, ஒளிச் சிதறல், ஒலிப்பரவல் போன்ற பல இயற்கைச் சக்திகளின் இயக்கத்திற்கு நாம் ஒவ்வொரு நொடியும் ஆளாகிக் கொண்டேயிருக்கிறோம். குடிசையாயினும், மாளிகையாயினும், பலமாடிக்குடியிருப்பு ஆயினும், பொருள் கிடங்காயினும், பெரும் ஆலயங்களாயினும், சிறு பந்தலாயினும் சரி, நாம் உருவாக்கும் ஒவ்வொரு அமைப்பும் மேற்கண்ட இயற்கைச் சக்திகளின் நகர்வில் குறுக்கிடுகின்றன. இக்குறுக்கீட்டினால் நமக்கு தீங்கு ஏற்படக்கூடாது என்பதற்காக, தீவிர ஆராய்ச்சி செய்து எழுதப்பட்டவையே வாஸ்து சாஸ்திரம்.

வாஸ்து நியதிகள் எல்லா கட்டமைப்புக்கும் உண்டு. ஆலயங்கள் இதற்கு விதிவிலக்கல்ல. உண்மையில், ஆலயங்கள் கட்டுமானத்திற்குத் தான் வாஸ்து விதிகள் அதிகம். அதிலும், ஆலய வளாகம் பெரிதாகப் பெரிதாக நியதிகளும் அதிகமாகின்றன. கருவறையில் சூரிய ஒளி படர வழி வகுப்பதும், கருவறையைச் சுற்றி மண்டபங்கள் எழுப்பும்போது வெளிச்சமும், வெய்யிலும், காற்றும் உள்ளே பரவிடுதற்காக, மேல் விதானத்தில் ஆகாயம் தெரியுமாறு, பிரம்மவெளி என்று அழைக்கப்படும் ஜன்னல்கள் வைப்பது முக்கிய நியதிகளாகும். இயற்கைச் சக்தியோடு நமக்கு தடையற்ற தொடர்பு இருக்க வேண்டும் என்பதற்காகவே, இன்றும் பல ஊர்களில் பெரிய வீடுகளில் திறந்த வெளி முற்றங்கள் அமைக்கப்படுகின்றன. வீட்டு அறைகளில் இயற்கைச் சக்திகளின் இயல்பான ஓட்டம் தடைப்படுவது அதிகரிக்க அதிகரிக்க, நாம் செயற்கையாக, வெளிச்சத்துக்கு விளக்கும், காற்றுக்காக காற்றாடியும் உபயோகிக்கிறோம். பலமாடிக் குடியிருப்புக்களில் வீட்டிலுள்ள சமையல் வாடையும், கழிவறை நாற்றமும் வெளியேறிட காற்று வெளித்தள்ளியும் வைக்கிறோம். இது போன்ற ஒரு செயல்பாடே, ஆலயக்கருவறையில் சூரிய ஒளி படரச் செய்திடுவதும் ஆகும்.

அன்றாடம் இயலாவிட்டாலும், நாம் வருடாவருடம், எப்போதாவது அருவியிலும், ஆற்றிலும், கடலிலும் நீராடி ஆரோக்கியம் பராமரிப்பது போல, பல்லோரும் கூடிடும் ஆலயங்களிலும், அசுத்த நிலையை நீக்கி தூய்ப்பிக்கும் முயற்சியே மிக நுணுக்கமான, அளப்பரிய சக்தி வாய்ந்த சூரிய ஒளியை பரவச் செய்யும் ஆலய இயல் நியதியும் ஆகும். மூர்த்திக்கு எதிரே நின்று அர்ச்சகர் பூஜிக்கலாகாது என்றும், பக்தர்கள் வழிபடலாகாது என்றும் கூறுவதற்குக் காரணம், பின் இருப்பவர்க்கு இறைவனைக் காண முடியாது என்பது மட்டுமல்ல. கருவறைக்கும் பிற மண்டபங்களுக்கும் இடையிலான ஒளி, ஒலி, காற்றுப் பரவல் தடைப்படக்கூடாது என்பதுவே மிக முக்கியகாரணம்.

சூரிய ஒளி பரவல் அமைப்பு உள்ள கோயில்கள் பல இருந்தாலும், தமிழகத்தில் தான் அவை அதிகம் உள்ளன. தமிழகத்திலுள்ள சுமார் 100 சூரிய பூஜைக் கோயில்களில் மிகச் சிலவற்றில் மட்டுமே (கண்டியூர், சங்கரன் கோயில் போல) ஒளிப்பரவல் மாலையில் ஏற்படுகிறது. மற்றவற்றில் காலையில் தான். பலவற்றில் சூரிய பூஜை அமைப்புடைமை பொது மக்களுக்குத் தெரியாமலேயே உள்ளது. பஞ்சாங்கங்களில் கூட சிலவைப் பற்றி மட்டுமே குறிப்பு உள்ளது.

ஒளிப்பரவல் நேரத்தில் பல்லோரும் கூடி இறைநாமம் ஜபிக்கும்போது நல்ஒலி அதிர்வுகளும் சேருவதால் ஆலயம் புதுப்பொலிவும், ஈர்ப்பும் பெற்று நாம் அடையும் பயனும் பன்மடங்காகிறது. அடிக்கடி ஆலயம் செல்ல முடியாவிட்டாலும், சூரிய பூஜை நேரத்திலாவது இறைவனை கண்டிப்பாக தரிசிக்க முயல்வோம்.

Friday, August 10, 2012

மூல மந்திரங்கள்மூல மந்திரங்கள் :
1. கணபதி : ஓம் கம் கணபதயே நம:
2. குரு : ஓம் கும் குருப்யோ நம:
3. சிவன் : ஓம்
4. தேவீ : ஓம் ஹ்ரீம் தேவ்யை நம:
5. கந்தன் : ஓம் ஹாம் ஸ்கந்தாய நம:
6. ஸூர்யன்  : ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஸ: ஸிவஸூர்யாயை நம:


 3.8 சிவாச்சாரியாருக்கு உரிய சில அனுஷ்டான மந்திரங்கள்: 

 ஆசன மந்திரம் :
1. ஓம் ஹாம் ஆத்ம தத்வாய ஸ்வதா
2. ஓம் ஹீம் வித்யா தத்வாய ஸ்வதா
3. ஓம் ஹூம் ஸிவ தத்வாய ஸ்வதா

பஞ்சகலா மந்திரம் :
1. ஓம் ஹ்லாம் நிவ்ர்த்தி கலாயை நம:
2. ஓம் ஹ்லீம் ப்ரதிஷ்டா கலாயை நம:
3. ஓம் ஹ்ரூம் வித்யா-கலாயை நம:
4. ஓம் ஹ்யைம் ஸாந்தி கலாயை நம:
5. ஓம் ஹ: ஸாந்த்யாதீத கலாயை நம:

ஸம்ஹிதா மந்திரம் :
1. பஞ்ச ப்ரஹ்ம மந்திரங்களும்
2. ஷடங்க மந்திரங்களும் ஒன்று சேர்ந்தது.

பஞ்ச ப்ரஹ்ம மந்திரம் :
1. ஈசானம்  : ஓம் ஹோம் ஈஸாந மூர்த்தயே நம:
2. தத்புருஷம்: : ஓம் ஹேம் தத்புருஷ வக்த்ராய நம:
3. அகோரம் : ஓம் ஹும் அகோர ஹ்ருதயாய நம:
4. வாமதேவம் : ஓம் ஹிம் வாமதேவ குஹ்யாய நம:
5. ஸத்யோஜாதம்: ஓம்ஹம் ஸத்யோஜாத மூர்த்தயே நம:

ஷடங்க மந்திரங்கள் :
1. ஹ்ருதயம் : ஓம் ஹாம் ஹ்ருதயாய நம:
2. சிரஸ் : ஓம் ஹீம் ஸிரஸே நம:
3. சிகை : ஓம் ஹூம் ஸிகாயை நம:
4. கவசம் : ஓம் ஹைம் கவசாய நம:
5. நேத்ரம் : ஓம் ஹெளம் நேத்ரேப்யோ நம:
6. அஸ்த்ரம் : ஓம் ஹ: அஸ்த்ராய நம:


காயத்ரீ :
1. அஸ்த்ர காயத்ரீ :
ஓம் ஸிவாஸ்த்ராய வித்மஹே காலாநலாய தீமஹி
தந்நோ அஸ்த்ர ப்ரசோதயாத்.
2. சிவ காயத்ரீ :
ஓம் தன் மஹேஸாய வித்மஹே வாக்விஸுத்தாய தீமஹி
தந்ந: ஸிவ: ப்ரசோதயாத்

ஸப்தகோடி மஹாமந்திரம் : 

1. நம:  2. ஸ்வாஹா 3. ஸ்வதா
4. வஷட் 5. வெளஷட் 6. ஹும் 7. பட்

3.9 கர ந்யாஸம் : 

3.9.1 ஓம் ஹ: அஸ்த்ராய பட் என்ற சிவ அஸ்திர மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே, சாண முத்திரையால், இடது, வலது கைகளால், மேலும் கிழுமாக இடது வலது கைகளைத் துடைத்துக் கொள்ள வேண்டும். இடது கையை இரு முறையும், வலது கையை ஒரு முறையும் அவ்வாறு செய்ய வேண்டும். கரங்களில் உள்ள அசுத்தங்களை எல்லாம், சிவாஸ்திரத்தால் உண்டான அக்நியால் எரித்ததாக பாவனை செய்துகொள்ள வேண்டும். பின்னர், ஓம் ஹெளம் சக்தயே வெளஷட் என்று கைகளை ப்ரஸன்ன முத்திரையாகக் கூட்டி, நெற்றியில் புருவங்களின் இடை வரை உயர்த்தி, அங்குள்ள சக்தி அம்ருதத்தால் கைகள் நனைந்து புனிதமானதாகப் பாவித்துக் கொள்ள வேண்டும்.

3.9.2 இரு கைகளும் சக்தி சிவ வடிவம் என்றுணர்ந்து, கட்டை விரல் ஒழித்த எட்டு விரல்களும் எட்டிதழத் தாமரைகளாகப் பாவித்து, உள்ளே மடங்கி உள்ள விரல் தாமரையின் விதை உருவாகும் பிந்து (பொகுட்டு) ஸ்தானத்தைத் தொடுவதாகக் கொண்டு, உள்ளங்கைகளில் கண்டு விரலுக்குக் கீழே, புதன் மேட்டில், கட்டை விரலால் தொட்டு, ஓம் ஹாம் சிவாஸநாய நம: என்று நியஸித்து, சிவனுக்கு மந்திராஸனம் அளிக்க வேண்டும். ஓம் ஹாம் ஹம் ஹாம் சிவ மூர்த்தயே நம: என்று நியாஸித்து, சிவாஸனத்தில் சிவமூத்தியை எழுந்தருளச் செய்ய வேண்டும்.

3.9.3 பிறகு ஓம் ஹோம் ஈசான மூர்த்தயே நம: என்று உச்சரித்துக் கொண்டே, ஆள்காட்டி விரல்கள் நடு விரல்களைத் தொடாமல் விலகி இருந்து, அதன் நுனிகள் கட்டைவிரல் நுனிகளை தொட்டுக் கொண்டிருக்குமாறு (உஷ்ணீக முத்திரை) நியாஸம் செய்ய வேண்டும். அடுத்து, ஓம் ஹேம் தத் புருஷ வக்த்ராய நம: என்று உச்சரித்துக் கொண்டே, ஆள்காட்டி விரல்கள் நடு விரல்களோடு சேர்ந்து இருக்கையில், அதன் நுனிகள் கட்டைவிரல் நுனிகளைக் தொட்டுக் கொண்டிருக்குமாறு (சின் முத்திரை (அ) சின்மய முத்திரை) நியாஸம் செய்ய வேண்டும். தொடர்ந்து, ஓம் ஹூம் அகோர ஹ்ருதயாய நம; என்று உச்சரித்துக் கொண்டே, நடு விரல் நுனிகள் கட்டைவிரல் நுனிகளை தொட்டுக் கொண்டிருக்குமாறு (யோக முத்திரை (அ) மோக முத்திரை) நியாஸம் செய்ய வேண்டும். பிறகு, ஓம் ஹிம் வாம தேவ குஹ்யாய நம: என்று உச்சரித்துக் கொண்டிருக்குமாறு (திவ்ய முத்திரை) நியாஸம் செய்ய வேண்டும். இறுதியாக, ஓம் ஹம் ஸத்யோஜாத மூர்த்தயே நம: என்று உச்சரித்துக் கொண்ட, சுண்டு விரல் நுனிகள்  கட்டைவிரல் நுனிகளை தொட்டுக் கொண்டிருக்குமாறு (ஆக்ர முத்திரை) நியாஸம் செய்ய வேண்டும். சிவபெருமானுக்குரிய ஐந்து முகங்களையும் இந்த பஞ்ச ப்ரஹ்ம மந்திரங்களைக் கூறி நியாஸித்ததன் மூலம் தன் கரங்களின் விரல் நுனிகளில் எழுந்தருளியதாகப் பாவித்தல் வேண்டும்.

3.9.4 பிறகு உள்ளங்கைகளிலே, பெரு விரல்களால் தொட்டு (அதிஷ்டான முத்திரை) ஓம் ஹாம் ஹெளம் வித்யா தேஹாய நம: என்று நியாஸித்து, சிவனுக்கு வித்யா தேகம் கற்பிக்க வேண்டும். ஆள்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் என்ற மூன்று விரல்களால் உள்ளங் கைகளைத் தொட்டு (கடா முத்திரை), பின் கூப்பி, ஓம் ஹெளம் நேத்ரேப்யோ நம: என்று நியஸித்து, ஐயனின் த்ரிநேத்திரஙகளை த்யானிக்க வேண்டும். ஓம் ஹாம் ஹெளம் சிவாய நம: என்ற மூல மந்திரத்தை உச்சரித்தவாறே,சகல ஹஸ்த வ்யாப்த சக்தியினாலே, கைகளுக்குள்ளே, பெரு விரல்களால் நியஸித்து சிவனை ஆவாஹனம் செய்ய வேண்டும்.

3.9.5 பின்னர், ஓம் ஹாம் ஹ்ருதயாய நம; என்று உச்சரித்து, ஆக்ர முத்திரையால், இதயஸ்தான்தில் ந்யாஸம் செய்ய வேண்டும். அடுத்து, ஓம் சீரஸே ஸ்வாஹா என்று உச்சரித்து, திவ்ய முத்திரையால், (முன்) தலையில் ந்யாஸம் செய்ய வேண்டும். பிறகு ஓம் சிகாயை வெளஷட் என்று உச்சரித்து, யோக முத்திரையால், (குடுமி) சிகையில் ந்யாஸம் செய்ய வேண்டும். தொடர்ந்து, ஓம் ஹைம் கவசாய வெளஷட் என்று உச்சரித்து, கவச முத்திரையால், உடலில் ந்யாஸம் செய்ய வேண்டும். பின்னர், ஓம் ஹ: அஸ்த்ராய பட் என்று உச்சரித்து, அஸ்த்ர முத்திரையால், கைகளில் ந்யாஸம் செய்ய வேண்டும். இந்த ந்யாஸத்தின் மூலமாக, கரங்களில், எழுந்தருளியுள்ள சிவபிரானுக்கு உரிய உரு உண்டானதாகக் கொண்டு த்யானிக்க வேண்டும்.
3.9.6 பின்னர், அவகுண்டனம் செய்ய வேண்டும். அவகுண்டனம் செய்வது, சிவ-சக்தி எழுந்தருளியுள்ள தலத்தைச் சுற்றி மூன்று மதில்களும், மூன்று அகழிகளும் உண்டாவதாக எண்ணி அவகுண்டன முத்திரையால் ஓம் ஹைம் கவசாய வெளஷட் என்ற கவச மந்திரத்தை உச்சரித்தவாறே அந்த ஸ்தானத்தைச் சூழ வளைத்து மும் முறை சுற்றுவதாகும்.
3.9.7 நிறைவாக, ஓம் ஹாம் ஹெளம் சிவாய வெளஷட் என்று உச்சரித்தவாறே பரமீகரணம் செய்தல் வேண்டும். பரமீகரணம் என்பது, கைகளைக் கூப்பி வந்தனி என்றும் பெயருள்ள நமஸ்கார முத்திரை செய்து, கரங்களைத் தலைக்கு மேல் உயர்த்தி வணங்கி, பின் இதயத்திற்கு எதிரே கொண்டு வந்து முடிப்பது.
3.9.8 இதுவே சிவாச்சாரியார்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கரநியாஸம் செய்யும் முறையாகும்.

3.10 அங்க ந்யாஸம் :
3.10.1 கர ந்யாஸம் செய்து கொண்ட பின்னரே அங்க ந்யாஸம் செய்ய வேண்டும்.
3.10.2. ஓம் ஹ: அஸ்த்ராய ஹூம்பட் என்ற சிவ அஸ்திர மந்திரத்தை உச்சரித்துக் கொண்ட, சாண முத்திரை கொண்ட கைகளால், பாதம் முதல் சிரஸ்வரை துடைத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள அசுத்தங்களை எல்லாம், சிவாஸ்திரத்தால் உண்டான அக்நியால் எரித்ததாக பாவனை செய்துகொள்ள வேண்டும். பின்னர், ஓம் ஹெளம் சக்தயே வெளஷட் என்று கைகளை ப்ரஸன்ன முத்திரையாக கூட்டி, நெற்றியில் புருவங்களின் இடை வரை உயர்த்தி, அங்குள்ள சக்தி அம்ருதத்தால் உடல் முழுதும் நனைந்து புனிதமானதாகப் பாவித்துக் கொள்ள வேண்டும்.
3.10.3 திவ்ய முத்திரையால் இதயத்தைத் தொட்டு, ஓம் ஹாம் சிவாஸநாய நம: என்று நியஸித்து, சிவனுக்கு மந்திராஸனம் அளிக்க வேண்டும். மீண்டும் திவ்ய முத்திரையால் இதயத்தைத் தொட்டு, ஓம் ஹாம் ஹம் ஹாம் சிவ மூர்த்தயே நம: என்று நியாஸித்து, சிவாஸனத்தில் சிவமூர்த்தியை எழுந்தருளச் செய்ய வேண்டும்.

3.10.4 பிறகு, ஓம் ஹோம் ஈசான மூர்த்தயே நம: என்று உச்சரித்துக் கொண்டே, உஷ்ணீக முத்திரையால் தலை உச்சியில் நியாஸம் செய்ய வேண்டும். அடுத்து, ஓம் ஹேம் தத் புருஷ வக்த்ராய நம: என்று உச்சரித்துக் கொண்டே சின் முத்திரையால் நெற்றியில் நியாஸம் செய்ய வேண்டும். தொடர்ந்து ஓம் ஹூம் அகோர ஹ்ருதயாய நம: என்று உச்சரித்துக் கொண்டே, யோக முத்திரையால் மார்பில் நியாஸம் செய்ய வேண்டும். பிறகு, ஓம் ஹிம் வாம தேவ குஹ்யாய நம: என்று உச்சரித்துக் கொண்டே, திவ்ய முத்திரையால் நாபியில் நியாஸம் செய்ய வேண்டும். இறுதியாக, ஓம் ஹம் ஸத்யோஜாத மூர்த்தயே நம: என்று உச்சரித்துக் கொண்டே, ஆக்ர முத்திரையால் வலது-இடது முழங்கால்களில் நியாஸம் செய்ய வேண்டும். சிவபெருமானுக்குரிய ஐந்து முகங்களையும் இம்மந்திரங்களைக் கூறி நியாஸித்ததன் மூலம் தன் அங்கங்களில் எழுந்தருளியதாகப் பாவித்தல் வேண்டும்.

3.10.5 பிறகு திவ்ய முத்திரையால் ஓம் ஹாம் ஹெளம் வித்யா தேஹாய நம: என்று மார்பில் நியாஸித்து, சிவனுக்கு வித்யா தேஹம் கற்பிக்க வேண்டும். ஆக்ர கண்ட முத்திரை என்று கூறப்படும் நேத்ர முத்திரையால் ஓம் ஹெளம் நேத்ரேப்யோ நம: என்று கண்களில் நியஸித்து, ஐயனின் த்ரிநேத்திரங்களை த்யானிக்க வேண்டும்.
3.10.6. பிறகு, ஓம் ஹாம் ஹெளம் சிவாய நம: என்ற மூல மந்திரத்தை உச்சரித்தவாறே, ஹ்ருதயஸ்தானத்திலே நியாஸித்து சிவனை ஆவாஹனம் செய்ய வேண்டும்.

3.10.7 பின்னர், ஓம் ஹாம் ஹ்ருதயாய நம: என்று உச்சரித்து, ஆக்ர முத்திரையால், இதயஸ்தானத்தில் ந்யாஸம் செய்ய வேண்டும். அடுத்து, ஓம் சிரஸே ஸ்வாஹா என்று உச்சரித்து, திவ்ய முத்திரையால், (முன்) தலையில் ந்யாஸம் செய்ய வேண்டும். பிறகு, ஓம் சிகாயை வெளஷட் என்று உச்சரித்து, யோக முத்திரையால் (குடுமி) சிகையில் ந்யாஸம் செய்ய வேண்டும். தொடர்ந்து, ஓம் ஹைம் கவசாய வெளஷட் என்று உச்சரித்து, கவச முத்திரையால், கண்டத்திலிருந்து நடு மார்பு வரை உடலில் ந்யாஸம் செய்ய வேண்டும்.

3.10.8 உஷ: முத்திரை எனப்படும் மோதிர விரல்களால் அங்கங்களைத் தொடும் முறையினால், ஓம் ஹ: அஸ்த்ராய பட் என்ற அஸ்த்ர மந்திரத்தை உச்சரித்து, இரு கைகளிலும் ந்யாஸம் செய்து சிவபிரானுக்கு அஸ்திரங்கள் அறிவத்ததாகப் பாவிக்க வேண்டும்.

3.10.9 தாளத்ரயம்: கோவிடாண முத்திரை என்று அழைக்கப்பெறும் கட்க முத்திரையால், ஓம் ஹூம் ஹ: அஸ்த்ராய பட் என்ற ஹூம்-படந்த (ஹூம்-ஐ முதலிலும், பட்- ஐ ஈறாகவும் கொண்டுள்ள) அஸ்திர மந்திரத்தை உச்சரித்தவாறே தாளத்ரயம் செய்ய வேண்டும். தாளத்ரயம் என்பது இடது உள்ளங்கையில் வலது கை கட்க முத்திரை விரல்களால் மும்முறை தட்டுதல், சிவசக்தி ப்ரகாசங்களுக்குக் கேடு செய்ய வரும் அசுரர் முதலியோரை விரட்டு பொருட்டுச் செய்வதே தாளத்ரயம்.

3.10.10. திக்பந்தனம் : விரல்களை மடக்கி, ஆட்காட்டி விரலால் பெருவிரல் மத்தியில் விரல் துடிக்கத் தெறிக்கும் சோடிகா முத்திரையால் ஓம் ஹ: அஸ்த்ராய பட் என்ற அஸ்திர மந்திரத்தை உச்சரித்தவாறே சிரஸ்ஸைச் சூழ மேலே எண்மருங்கிலும் திக்பந்தனம் செய்து அக்நி ப்ரகாசம் உண்டாக்கி அக்நி தேவரைக் காவல் வைப்பதாகப் பாவிக்க வேண்டும்.
3.10.11 அவகுண்டனம் : ந்யாஸ முத்திரையால் ஓம் ஹைம் கவசாய வெளஷட் என்ற கவச மந்திரத்தை உச்சரித்தவாறே சிரஸ்ஸைச் சூழ கீழ்நோக்கி மேலே அவகுண்டனம் செய்து மூன்று மதில்களும் அகழ்களும் அமைப்பதாகக் கொள்ளவேண்டும்.

3.10.12 பரமீகரணம் : நிறைவாக, ஓம ஹாம் ஹெளம் சிவாய வெளஷட் என்று உச்சரித்தவாறே கைவிரல்கள் சாதாரணமாக நீண்டிருப்பதான மஹா முத்திரையால் பாதம் முதல் சிகை வரை தடவ வேண்டும். பாதம் முதல் கேசம் வரை துடைக்கும் இந்த கிரியைக்கு பரமீகரணம் என்று பெயர்.
3.10.13 இந்த ந்யாஸத்தின் மூலமாக, சிவபெருமானை மந்திராஸனத்தில் எழுந்தருளச் செய்து, அவயவங்களைப் பாவித்து, ப்ரகாசமும், அக்நி கோஷ்டமும், அகழும் உண்டானதாகப் பாவித்து, பரமாமிர்தாபிஷேகம் செய்து, பின் தான் அவருடன் இரண்டறக் கலந்ததாக (ஏக பாவம் ஆனதாக) பாவித்தல் வேண்டும்.

3.10.14. இதுவே சிவாச்சாரியார்க்கு விதிக்கப்பட்டுள்ள அங்க ந்யாஸம் செய்யும் முறையாகும்
3.11. ஆத்மபூஜா த்யாநம்: நாதம் லிங்கம் என்றும், அதுவே ஸ்ரேஷ்டமான சிவம் என்றும், பிந்து பீடம் என்றும், அதுவே சக்தியாகிய ஆதார ஆஸநம் (அல்லது ஆவுடையார்) என்றும், ஆதேயமாகிய சிவம் பாணமென்றும் சொல்லப்படுகின்றது. சிவம் அன்னியில் சக்தி இல்லை; சக்தி அன்னியில் சிவம் இல்லை; இவை, புஷ்பத்தில் வாஸனை போலும், எள்ளில் என்னை போலும் அபேதமாக இருப்பதாக அறியவும். எனவே, (மாநஸீகமாக) ஸிம்ஹாஸநம் செய்து, அதிலே சிவாஸநம் செய்து, சாஸ்ரோக்தமான க்ரியைகளினாலே தேவதேவேச்வரனை சிவாச்சாரியார் பூஜை பண்ணவேண்டியது.
3.12 சகளீகரணம்: கர ந்யாஸமும், அங்க ந்யாஸமும், சேர்ந்து செய்வதற்கு சகளீகரணம் என்று பெயர்.

3.13. விசேஷ அர்க்யம்: 

3.13.1 சகளீகரணம் செய்த பிறகு, த்ரவ்ய சுத்தி செய்வதற்கும், மற்றபடி விதித்துள்ள விசேஷ நிகழச்சிகளுக்கும் சிவாச்சாரியார் (பஞ்ச பாத்திரத்தில்) புனித நீர் தயாரித்துக் கொள்வதே விசேஷார்க்யம்.
3.13.2 பொன், தாமிரம், வெள்ளி, பஞ்சலோகம், வெண்கலம், பித்தளை (ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், இரும்பு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்) இவற்றுள் ஏதாவதொன்றால் செய்யப்பட்டுள்ள பஞ்சபாத்ரம்-உத்தரிணி அல்லது கெண்டி-கமண்டலம் போன்ற பாத்திரத்தைச் சுத்தப்படுத்தி எடுத்து வைத்துக் கொண்டு, அஸ்த்ர மந்திரத்தைக் கூறி அவற்றை மந்த்ர பூர்வகமாக மீண்டும் அலம்ப வேண்டும்.

3.13.3 நீரீக்ஷணம்: நிரீக்ஷணம் என்றால் பார்த்தல் என்று பொருள்படும். ஓம் ஹாம் சிவாய நம: என்று மூல மந்திரம் உச்சரித்து, நீரீக்ஷண முத்திரையால், பாத்திரத்தில் நிரப்பப்படும் சுத்தமான நீரைப் பார்க்க வேண்டும். அப்போது, அந்த நீரிலுள்ள குற்றங்களை ஸூர்யனாகிய வலக்கண்ணால் காய வைத்து, அக்நியாகிய நெற்றிக் கண்ணால் தகித்தெறிந்து விட்டு, சந்திரனாகிய இடது கண்ணில் ஊறும் அமுதத்தை அதனோடு கலப்பதாகப் பாவிப்பதே நிரீக்ஷணம் செய்தல் எனப்படும்.

3.13.4 ப்ரோக்ஷணம் : பிந்து ஸ்தானமாகிற புருவ மத்தியிலிருந்து பெறுகின்ற அம்ருத தாரா மயமாக சுத்த ஜலத்தை பாவித்துக் கொண்டு, ஹ்ருதய மந்திரத்தைக் கூறி, அதன்மூலமாக அந்த அம்ருத தாரா பாத்திரத்தினுள் சென்று நிரம்புவதாகப் பாவிக்கும் கிரியைக்கு ப்ரோக்ஷணம் என்று பெயர் கூறுவர்.

3.13.5 பிறகு, அந்த நீரிலே சந்தனம், புஷ்பம், அருகு, அக்ஷதை, ஆகியவற்றை இட்டு அலங்கரிக்க வேண்டும், தொடர்ந்து, ஆசமன, பஞ்ச ப்ரஹ்ம, வித்யாதேஹ, நேத்ர, மூல, ஹ்ருதய மந்திரங்களால் பூஜை செய் வேண்டும். ஸம்ஹிதா மந்திரத்தால் (பஞ்ச ப்ரஹ்ம + ஷடங்க மந்திரங்கள்) அபிமந்திரிக்க வேண்டும்.

3.13.6 தாடனம்: அஸ்திர மந்திரத்தால் அர்க்ய நீரை ரக்ஷõ பந்தனம் செய்வதற்குத் தாடனம் என்று பெயர். தூயதான நீரில் வியாபித்திருக்கும் சிவசக்தியரின் அருளை ப்ரகாசிக்கச் செய்யும் பொருட்டு, அஸ்த்ர மந்திரம் கூறி ஒரு முறை தட்டுதலே தாடனம்.
3.13.7 அப்யுக்ஷணம் : கவிழ்ந்த பதாகை முத்திரையால் அந்த நீரை சூடி, கவச மந்திரத்தை உச்சரித்து, அதிலுள்ள ப்ரகாசம் நீங்காது இருக்குமாறு செய்வதாக பாவித்தலே அப்யுதக்ஷணம்.

3.13.8 அடுத்து, அர்க்ய நீரில் நிரம்பியுள்ள சிவ-சக்தி ப்ரகாசத்திற்கு ஊறு செய்ய வரும் துர்தேவதைகளை விரட்ட தாளத்ரயம் சாய்ய வேண்டும்.
3.13.9 தொடர்ந்து, கவச மந்திரத்தால் திக்பந்தனுமும், கவச மந்திரத்தால் அவகுண்டனமும் செய்தல் வேண்டும்.

3.13.10 நிறைவாக, வெளஷடந்த மூல மந்திரத்தால் (ஓம் ஹாம் ஹம் ஹாம் சிவமூர்த்தாய வெளஷட்) தேனு முத்திரை கொடுத்து, சிறப்பாக அர்க்ய பாத்தி நீரைப் புனிதமாக்கிக் கொள்ளல் வேண்டும்.

3.13.11. மேற்சொன்ன கிரியையே விசேஷார்க்யம். இந்நிகழ்ச்சியின் மூலம் அர்க்ய நீரில் சிவசக்தி ப்ரகாசம் நிறைகின்றது.

3.14 சாமான்யார்க்யம் : சகளீகரணம் செய்த பிறகு, இரும்பு சம்பந்தப்படாத பாத்திரத்தில் வெளஷடந்த ஹ்ருதய மந்திரத்தை உச்சரித்தவாறு சுத்த ஜலத்தை நிரப்பி, அதில் ஏழு தடவை ப்ரணவ மந்திரத்தால் அபிமந்திரித்து, திக்பந்தனம், அவகுண்டனம் செய்ய வேண்டும். பிறகு,தேனு முத்திரை
கொடுத்து செய்து கொள்ளும் தீர்த்தத்திற்கு சாமான்யார்க்யம் என்று பெயர்

3.15 ஐவகை சுத்தி: பூஜை செய்யும் ஆச்சாரியார், பூஜை செய்யும் பொருட்டு, தூய்மை செய்து கொள்ளும் கிரியைகளுக்கு பஞ்ச சுத்தி என்று பெயர். அவையாவன (1) ஆத்ம சுத்தி (2) ஸ்தான சுத்தி (3) த்ரவ்ய சுத்தி (4) மந்த்ர சுத்தி (5) லிங்க சுத்தி.

3.16 ஆத்ம சுத்தி: சிவாச்சாரியார், தனக்குள் இறைவனை எழுந்தருளச் செய்வதே ஆத்ம சுத்தி. அதற்காக அவர் செய்யும் அனைத்துக் கிரியைகளும், அவரது உள்ளத்தளவிலே செய்யப்படுகின்றன; அதாவது, பாவனையாக செய்யப்படுகின்றன. அச்செயல்களாவன: 1. சரீரத்தில் உள்ள மலம், மாயை, கர்மா சம்பந்தமான புற அழுக்குகளை நீக்குதல் 2. பஞ்ச பூத தன்மாத்திரைகளால் ஏற்படும் அக அழுக்குகளாம் சப்தாதி குணங்களை நிக்குதல் 3. வலக்கால் பெரு விரலிலிருந்து உண்டாகும் காலாக்னியால் கர்ம சரீரத்தைப் பொசுக்குதல் 4. ப்ரம்மாந்திரத்தில் உள்ள அமிர்தத்தால் உள்ளும் புறமும் நனைத்துக் கொள்ளுதல் 5. நித்யத்வ, வியாபகத்வ, சுத்த தத்வ, யுக்த, பரமாகாஸாபிபூத்த, சுத்த சைதன்ய திவ்ய சரீரமாகத் தன் உடலை பாவித்துக் கொள்ளுதல் 6. ஹ்ருதய கமலத்தில் ஈச்வரனை மனோபாவனையால் பூஜித்தல் 7. நாபியில் உள்ள அக்னியில் ஹோமம் செய்து, ஹ்ருதய கமலத்தில் உள்ள இறைவனிடத்தில் சமர்ப்பணம் செய்து, உள்பூஜையை நிறைவு செய்வதாகப் பாவித்தல் 8. பிந்து ஸ்தானத்தில் ஈச்வரனை த்யானம் செய்து, புற பூஜையின் பொருட்டு ப்ரார்த்தனை செய்து, அதனைத் தொடங்க உத்தரவு கேட்டுப் பெற்றுக் கொள்ளுதல்.

3.17 ஸ்தான சுத்தி: சிவாச்சாரியார், பூஜை நடைபெறுகிற இடத்தில் விக்னங்கள் அணுகாமல் காப்பதாக பாவித்துச் செய்யும் கிரியைகளே ஸ்தான சுத்தி எனப்படும். அதற்காக அவர் செய்யும் கிரியைகளும், பாவனைகளும்: 1. அஸ்த்ர மந்திரத்தால் மூன்று தடவை தாளம் செய்து, சிட்டிகை போட்டு, ஸ்தலத்திலுள்ள தடைகளைப் போக்குதல் 2. அஸ்த்ர மந்த்ரத்தால் நான்கு மூலைகளிலும் அக்னி ப்ரகாசம் செய்தல் 3. கவச மந்த்ரத்தால் வலது ஆள் காட்டி விரலை மும்முறை சுழற்றி, மூன்று கோட்டைச் சுவர்களும், மூன்று அகழிகளும் உண்டாக்குதல் 4. வெளஷடந்த சக்தி மந்த்ரத்தைச் சொல்லி, தேனு முத்திரையை மேலும் கீழும் காண்பித்தி ரக்ஷõ பந்தனம் செய்தல்.

3.18 த்ரவ்ய சுத்தி: சிவாச்சாரியார், விசேஷ அர்க்யத்தால் புனித நீர் தயாரித்துக் கொண்டு, பிறகு அந்த நீரினால், தன்னையும், சுற்றி உள்ள மற்ற பூஜைக்கான  உதவியாளர்களையும், பூஜை செய்வதற்காக எடுத்துவைத்துள்ள சாதனங்கள், பொருட்கள் ஆகியவற்றையும் தூய்மை செய்வதாக பாவித்துச் செய்யும் கிரியைகளே த்ரவ்ய சுத்தி எனப்படும். அதற்காக அவர் செய்யும் கிரியைகளும், பாவனைகளும் 1. விசேஷ அர்க்யம் தயாரித்தல் 2. அஸ்திர மந்திரம் சொல்லித் தன் தலை மீது ப்ரோக்ஷணம் செய்து கொள்ளுதல் 3. பூஜா திரவியங்களை (அ) அஸ்திர மந்திரம் கூறி ப்ரோக்ஷணம் செய்தல் (ஆ) கவச மந்திரம் கூறி துடைத்து சுத்தம் செய்தல் (இ) ஹ்ருதய மந்திரம் சொல்லி அபிமந்திரித்தல் (ஈ) கவச மந்திரம் கூறி அவகுண்டனம் செய்தல் (உ தேனு முத்திரை கொடுத்து அனைத்தையும் அம்ருத மயாக்குதல் 4. அபிஷேகத்திற்கென வைத்திருக்கும் ஜலத்தின் மீது விசேஷார்க்ய ஜலத்திலிருந்து கொஞ்சம் புஷ்பத்தினால் எடுத்து விட்ட பிறகு, தேனு முத்திரை கொடுத்து அம்ருத மயமாக்குதல்.

3.19 மந்திர சுத்தி: சிவாச்சாரியார், தன்னுள் இறைவனை நிலைநிறுத்தித் தன்னை மந்திரங்கள் கூறுவதற்குத் தகுதி உடையவராகச் செய்து கொள்வதற்கு மேற்கொள்ளும் கிரியைகளே மந்திர சுத்தி எனப்படும். இது திரவிய சுத்தி செய்த பிறகே செய்யப்படும். முதலில் ஓம் ஹாம் சிவாஸநாய நம: என்று ஆஸனம் கற்பித்து, தன்னுடைய ஹ்ருதயத்தில் ஓம் ஹாம் சிவ மூர்த்தயே நச: என்று பூஜை செய்ய வேண்டும், பின்னர், நெற்றியில் புருவ மத்தியில் சந்தனத்தால் திலகம் இட்டு, மூல மந்திரத்தால் சிரஸிலே புஷ்பத்தால் பூஜித்து ஆத்ம பூஜை செய்ய வேண்டும். அடுத்து சம்ஹிதா மந்திரத்தையும், மூல மந்திரத்தையும் (ப்ரணவத்தை முதலிலும், நம: என்ற பதத்தைக் கடைசியிலும் உடைத்தானதாக) பஞ்ச ப்ரஹ்ம மந்திரங்களை ஹ்ரஸ்வமாகவும், ஷடங்க மந்திரங்களை தீர்க்கமாகவும், மூல மந்திரங்களை ப்லுதமாகவும் உச்சரிக்க வேண்டும். இதுவே மந்திர சுத்தி.

3.20 லிங்க சுத்தி : முதல் நாள் (அல்லது, முந்திய காலத்தில்) செய்த பூஜா திரவியங்களை லிங்கத்தில் மேலிருந்து களைந்து, பின்னர் அபிஷேகம் செய்து, நிறைவாக துடைத்தெடுத்து அலங்காரத்துக்கு ஆயத்தமாக்குவதே லிங்க சுத்தி எனப்படும். இது செய்ய வேண்டிய முறை : முதலில் சிவ காயத்ரியால் அர்ச்சனை : பூஜத்துடன் கூடிய ஹ்ருதய ஸ்வாஹந்தமான மூல மந்திரத்தால், ஸத்யோஜாதம் முதல் ஈசானம் வரையான ஐந்து சிரஸ்ஸிலும் சாமான்யார்க்யத்தைக் கொண்டு அர்க்யம்; தூப, தீபங்கள் காட்டுதல்; லிங்கத்தின் மேல் கையை வைத்து ஸத்யோஜாதாதி பஞ் பரஹ்ம மந்திரங்களை உச்சரித்தல்; அஸ்திர மந்திரங்களைக் கூறி நிர்மால்யங்களைக் களைந்து, ஈசான பாகத்தில் தயாராக வைத்துள்ள சுத்தமான பாத்திரத்தில், சண்டிகேச்வரரிடம் சமர்ப்பிப்பதற்காக, ஹ்ருதய மந்திரங்களைக் கூறியவாறே அந்நிர்மால்யங்களை வைத்தல்; அஸ்திர மந்திரத்தைச் சொல்லி லிங்கத்தையும் பீடத்தையும் அலம்புதல்; அஸ்திர மந்திரங்களைக் கூறி சாமான்யர்க்யத்தால் அபிஷேகம்; மூல மந்திரத்தால் ஐந்து தடவையும், சம்ஹிதா மந்திரம் - வ்யோம வ்யாபி மந்திரம் எண்பத்து ஒன்றினையும் சொல்லி அபிஷேக திரவியங்கள், பஞ்சாமிதாதி திரவியங்களால் அபிஷேகம்: குளிர்ந்த சுத்த நீரினால் ஸஹஸ்ர தாரா வழி அபிஷேகம்; ஹ்ருதய மந்திரம் கூறி அர்க்ய ஜலம், ஸ்நபன ஜலம் ஆகியவற்றால் அபிஷேகம்; நிறைவாக வெண்மையானதும், மெல்லியதானதும் சுத்தமானதுமான வஸ்த்ரத்தால் துடைத்து விடுதல். இதுவே லிங்க சுத்தி. இதன் பிறகே அலங்காரம்

3.21 கலாகர்ஷணம் : பாத்யாதி உபசாரங்களுக்குப் பிறகு, பஞ்ச ப்ரஹ்ம மந்த்ரங்கள், ஷடங்க மந்த்ரங்கள், வ்யோமவ்யாபி மந்த்ரங்கள் ஆகியவற்றை ஜபம் சொய்தவாறே, கிரீம் முதலாக வரிசையாக அஷ்ட த்ரிசத் கலா நியாஸம் செய்ய வேண்டும்; அதாவது, முப்பத்தெட்டு இடங்களில் முப்பத்தெட்டு கலைகளை வைக்க வேண்டும்.
3.22 அபிஷேகத்துக்குப் பிறகு, லிங்கம் ஆவுடையார் இவைகளை மெல்லிய, வெண்மையான, சுத்தமான வஸ்த்ரத்தினால் நன்றாகத் துடைத்து, சிவனுடைய சிரஸ்ஸிலே ஹ்ருதய மந்த்ரத்தைக் கூறி புஷ்பத்தை வைக்க வேண்டும்.

3.23 சிவோகம்பாவனை செய்யும் சிவாச்சாரியார் தன் வலக்கையில் சந்தனம் பூசிக்கொண்டு அதைச் சிவஹஸ்தமாகப் பாவிப்பர்; பின்னர் தன்னையே சிவமாகப் பாவனை செய்து கொள்வார்; தாம் புறத்தே பூஜிக்க இருக்கும் மந்திரங்களைக் கூறி, அந்தக் கையினால் தன் அகத்தையும் பூஜிப்பார்; இவ்வாறாக, காண்பானும் சிவம், காட்சியும் சிவம், காட்சிப் பொருளும் சிவம் என்ற முறையில் மூன்றும் ஒன்றித்த நிலையில் திரிகரண சுத்தியுடன், நிற்பதே சிவோகம்பாவனை.

3.24 நெற்றியில் குட்டு: விநாயகருக்கு பூஜை செய்யும் சிவாச்சாரியார் இரண்டு கைகளினாலும் விரல்களை மூடிக்கொண்டு , முஷ்டி முத்திரையைச் செய்துகொள்ள வேண்டும். இரண்டு கைகளிலும் நடுவிலுள்ள மூன்று விரல்களின் நடுப்பாகங்களால் நெற்றியின் இரண்டு பாகத்தையும் நன்றாகக் குட்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதனால், கபோலத்தில் உள்ள அம்ருதமானது, சமஸ்தான சரீரத்தையும் நன்றாக நனைத்து ஸ்நானம் செய்விக்கின்றது. இந்த அம்ருத ஸ்நானத்தால் ஆணவம், கர்வம், மலம், மாயைகள் நீங்கி ஞானம் பிறக்க வழி கிடைக்கின்றது. இந்த அம்ருத ஸ்நானத்தை விநாயகர் முன்பு செய்வதால் அவருக்கு நம்மிது தனிப்ரீதி உண்டாகும்.

3.25 பூஜை செய்யும் திசை : கிழக்கு அல்லது மேற்கு முகமாக ப்ரதிஷ்டை ஆகியுள்ள சுவாமியை, சிவாச்சாரியார் வடக்கு முகமாக நின்று பூஜிக்க வேண்டும். தெற்கு அல்லது வடக்கு முகமாக உள்ள ஸ்வாமியை கிழக்கு முகமாக நின்று பூஜை செய்ய வேண்டும்

3.26 கட்டை விரலால் மட்டும் எடுத்து விபூதி அளித்தால் வியாதி உண்டாகும்; சுட்டு விரலால் விபூதி அளித்தால் மரணம் உண்டாகும்; நடு விரலால் விபூதி அளித்தால் புத்ர சோகம் உண்டாகும்; கனிஷ்டிகையால் (சுண்டு விரலால்) விபூதி அளித்தால் தோஷம் உண்டாகும்; ஆதலால் பெருவிரலும் மோதிரவிரலும் சேர்த்து விபூதி அளிக்க வேண்டும்.
3.27 அனைத்துக் கிரியைகளின்போதும், விதிக்கப்பட்ட மந்த்ரங்களையும் ச்லோகங்களையும் கூறுவதுடன், அந்தந்த இடத்துக்குரிய முத்திரைகளையும் தவறாது காட்ட வேண்டும். முத்திரைகள் கிரியைகளின் அங்கம்; அவை தேவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பன; அசுரர்களை விரட்டுவன.

சிவாச்சாரியார்
 
.1 ஆலயக் கிரியை வகைகள்: சிவாலயங்களில் நடைபெறும் கிரியைகள் மூவகைப் படுத்தப் பட்டுள்ளன: 1. நித்தியக் கிரியைகள் 2. நைமித்திகக் கிரியைகள் 3. காமியக் கிரியைகள். தினந்தோறும் (குறைந்தது ஒரு காலம், அதிகபக்ஷம் 12 காலம்) நிகழும் பூஜைகள் நித்தியக் கிரியைகள்.  ஏதாவது காரணங் கொண்டு நிகழ்வன நைமித்திகக் கிரியைகள் (நிமித்தம் என்றால் காரணம்). இவை நித்தியக் கிரியைகளை அன்னியில், செய்யப்பெறும் விசேஷக் கிரியைகள், அதாவது, சதுர்த்தி, ஷஷ்டி, சிவராத்திரி, ப்ரதோஷம், பௌர்ணமி, நடராஜர் அபிஷேகம், ஆவணி மூலம், பெரிய கார்த்திகை, மாசி மகம், ஆருத்ரா, விஷு, ஆடிப்பூரம், அன்னாபிஷேகம், ப்ரஹ்மோத்ஸவம், மகாமகம், அர்த்தோதயம், மஹோதயம், கும்பாபிஷேகம் போன்ற நாட்களில், அல்லது காலங்களில், அல்லது முஹூர்த்தங்களில் விசேஷமாகத் திட்டமிடப்பட்டுச் செய்யப்பெறும் நிகழ்ச்சிகள். ஒரு குறிப்பிட்ட பேறு பெற விழைந்து, ஒருவராலோ அல்லது பலர் ஒரு குழுவாகச் சேர்ந்தோ,

செய்யப்படும் கிரியைகள் காமியக் கிரியைகள். (காமிகாகமம்). திருக்கோவில் பூஜைகள் பெரும்பாலும் பொது ஜனங்கள் அனைவரது நன்மையயும் வேண்டிப் பொதுவாகச் செய்யப்படும் நிஷ்காம்யக் கிரியைகளே. ஒரு அன்பரோ அல்லது குழுவோ தமக்கென்று ஒரு பேற்றினை வேண்டி பூஜைகள் நிகழ்வித்தாலும், அவை திருக்கோவிலில் நிகழ்ந்தால், மஹா ஸங்கல்பமாக, பூஜையின் ஆரம்பத்தில் அனைவருக்கும் பொதுவாக அனைத்து நன்மைகளையும் வேண்டி, நிஷ்காம்யக் கிரியையாக வழிபாடுகளை நிகழத்துதலே முறை.

3.2 சிவபூஜை வகைகள்: சிவபூஜை ஆத்மார்த்தம், பரார்த்தம் என இரு வகைப்படும். இவ்விரு பூஜைகளுள்,சிவதீøக்ஷ பெற்ற யாவரும் ஆத்மார்த்த பூஜை செய்யலாம், பரார்த்த பூஜைகளே திருக்கோவிலில் நிகழ்வன. சிவதீøக்ஷ பெற்ற ஆதிசைவர்கள் (சிவாச்சாரியார், குருக்கள்), குருமுகமாகப் பயிற்சி பெற்று, ஆசார்யராக இருக்கத் தகுதி பெற்றபின்னரே பரார்த்த பூஜை செய்ய உரிமை பெறுவர்.
3.3. சிவாச்சாரியார்: சிவாலயங்களில் பூஜை செய்யும் அருகதை உள்ள சிவாச்சாரியார்கள் பதினாறு வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், எழுபது வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்று காமிகாமம் கூறிகின்றது.
3.4 சிவாச்சாரியாருக்கு விதிக்கப்பட்ட கிரியைகள்: சிவாச்சாரியார் (அல்லது சிவ தீøக்ஷ செய்து கொண்ட எவரும்) தினமும் செய்ய வேண்டி விதிக்கப்பட்டுள்ள ஸ்நானம், பூஜை, ஜபம், த்யானம், ஹோமம் போன்றவற்றிற்கும், சிவாச்சாரியாருக்கு உருடய நித்தியக் கிரியைகள் என்றே பெயர். தீøக்ஷ செய்துகொள்ளுதல் ப்ரதிஷ்டை செய்தல் போன்றவை அவருக்கான நைமித்திகக் கிரியைகள் எனப்படும்
3.5 சிவ த்யானம்: நம்முடைய ஹ்ருதய கமலத்திலாவது, துவாதசாந்தத்திலேயாவது சிவனை நிறுத்தி தியானம் செய்ய வேண்டும். நிஷ்களமான சிவனை, குரு உபதேசித்தபடி த்யானம் செய்து மூல மந்திரத்தால் (ஓம் ஹாம் சிவாய நம: அல்லது ஓம் ஹாம் ஹம் ஹாம் சிவாய நம:) ஜபம் செய்யவேண்டும். அப்படி நிஷ்களமான சிவனை த்யானம் செய்யும் சாமர்த்தியம் இல்லாதவர் சிவபெருமானுடைய விக்ரஹங்களில் தனக்குப் பிடித்தமான ஒருவரை மனதில் நிலைக்கச் செய்து, த்யானம், ஜபம் செய்தல் வேண்டும்
3.6 சைவக் கிரியைகளின் அங்கங்கள்: பாவனை, கிரியை, மந்திரம் என்னும் மூன்றும் சேர்ந்து பரிமளிப்பனவே சைவக் கிரியைகள். பாவனை என்றால் எண்ணுவது என்று பொருள். கிரியைகள் என்பதை முத்திரைகளுடன் செய்யப்படும் செய்கைகள். மந்திரங்கள் என்பவை முத்திரைகளுடன் செய்யப்படும் செய்கைகள். மந்திரங்கள் என்பதை எண்ணங்களுக்கு ஏற்ற கிரியைகளின் பயன்களைத் தர வல்ல சொற்றொடர்கள். ஒவ்வொரு கிரியையும், அதற்கேற்ற பாவனை, மற்றும் மந்திரங்களுடனேதான் செய்யப்படுதல் வேண்டும். பாவனை இல்லாது மந்திரங்களுடன் மட்டும் கரியைகளைச் செய்தால் அவை பயனற்றவையாகும். பாவனையும் இல்லாது, மந்திரங்களையும் மொழியாது, கிரியைகளைச் செய்தால், அச்செய்கைகள் தேவர்களை மகிழ்விக்காது; அசுரர்களையே மகிழ்விக்கும்; அதனால் புண்ணியம் தேய்ந்து பாவமே வளரும். எனவே, பூஜைகளில் முழுப்பயனும் மக்களைச் சென்றடைய, பாவனை, கிரியை, மந்திரம் ஆகிய மூன்றிலுமே லோபம் (குறைகள்) இல்லாமல் அனுஷ்டானத்தைச் செய்யுமாறு சிவாச்சாரியார்கள் குருமுகமாகப் பயிற்சி அளிக்கப்படுகிறார்கள்.
3.7 பக்தியில்லாத சிவாச்சாரியார்: தீக்ஷிதனாகிய ஆச்சாரியார், பக்தி இல்லாதவனாக பூஜித்தால், ராஜா. ராஜ்யம் இவர்களுக்கு கெடுதல்; அது எவ்விதம் எனில், காட்டில் இருக்கிற துஷ்ட மிருகமாகிற ஸிம்ஹத்தைக் கண்ட யானையானது எப்படி பயம் அடையுமோ, அதுபோல் பக்தியில்லாத ஆச்சாரியனைப் பார்த்த உடனே சிவபெருமான் பயம் அடைந்து (விலகி விடுவார்) மந்திரம் இல்லாமல் அர்ச்சனை செய்தால், அந்த ஈச்வரன் பயம் அடைவார்.

Thursday, August 9, 2012

ஆடி கிருத்திகை


ஆடிமாதம் அம்மனுக்குத்தான் உரியது
என்றாலும் ஆடிக் கிருத்திகை தினம் முருகனுக்கு உரியதாகச் சொல்லப்படுகிறது.
ஏன்? முருகனின் கரத்தில் இருக்கும் வேல், சக்தி ஆயுதம் எனப்படும்.
அம்பிகையின் அம்சமே வேல் எனவும் சொல்வர். அதனால் சக்திதரனாகிய
முருகனுக்கும் ஆடியில் ஒருநாள் சிறப்பானதாகிவிட்டது. கந்தனைக் கார்த்திகைப்
பெண்கள் வளர்த்ததால், கிருத்திகை தினமே கார்த்திகேயனுக்கு
உரியதாகிவிட்டது. ஆடிக்கிருத்திகை நாளில் முருக பக்தர்கள் காவடிகள்
எடுத்தும், அலகு குத்தியும், பாலபிஷேகம் முதலியன செய்தும் ஆறுமுகனை
ஆராதிப்பார்கள். பல கோயில்களில் முழுக்க முழுக்க மலர்களாலேயே
அலங்கரிப்பதும் உண்டு. அம்மன் ஆலயங்களில் இது பூச்சொரிதல் என்றும், முருகன்
கோயில்களில் மலர் முழுக்கு என்றும் அழைக்கப்படுகிறது. ஆடிக் கிருத்திகை
வழிபாட்டால், தீயன யாவும் ஓடிப்போகும்; நல்லன எல்லாம் தேடி வரும் என்பது
ஐதிகம்.
Tuesday, August 7, 2012

மரணத்தின் பின்.. யாருக்கு மறுபிறவிகள் ஏற்படாது?

மரணத்தோடு ஒரு மனிதனின் வாழ்க்கை முற்றுப் பெறுவதில்லை. அது மேலும் மேலும் தொடர்கிறது.  யாருக்கு மறுபிறவிகள் ஏற்படாது என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். இதற்கு சாஸ்திரங்கள், கருட புராணம், கடோபநிஷதம் போன்றவை மறுபிறவி, பற்றிய சில செய்திகளை குறிப்பிடுகின்றன அவை..
பொதுவாக பூமியில் அனுபவிக்க வேண்டிய அனைத்தையும் அனுபவித்து முடிந்தவருக்கு மீண்டும் மறுபிறவி ஏற்படுவதில்லை. இது கர்ம பூமியாதலால் தங்களது கர்மத்தை அனுபவிக்கவே உயிர்கள் பிறப்பெடுக்கின்றன. அவற்றை முற்றிலுமாக அனுபவித்து விட்டு, இனி அனுபவிக்க சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாம்ய கர்மா என ஏதும் இல்லாதவர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை. இவ்வுலக ஆசைகள் ஏதும் இல்லாமல், பற்றற்ற வாழ்க்கை வாழ்பவர்களுக்கும், தவயோகிகளுக்கும் மறுபிறவி இல்லை. சிறந்த தவத்துடனும் பக்தியுடனும் வாழ்ந்து, இறைவன் ஒருவனையே தங்கள் பற்றுக் கோடாகக் கொண்டு, தாங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணித்து வாழ்பவர்களுக்கு மறுபிறவி இல்லை. தாங்கள் செய்த பாவக் கணக்கும், புண்ணியக் கணக்கும் சரியாகி கழிக்க ஏதும் கர்மவினைகள் இல்லாதவருக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.
தன்னலம் கருதாது வாழ்ந்து மறைந்த மகான்களுக்கு மறுபிறவி இல்லை. இறைவனின் கட்டளைப்படி மட்டுமே அவர்களது அவதாரம் நிகழும். பந்தம், பாசம், மோகம், அகந்தை, காமம் போன்ற மன அழுக்குகளிலிருந்து விடுபட்டு, இவ்வுலக வாழ்வை வெறுத்து, இறைவனையே சதா தியானித்து, அவன் நாமத்தையே எப்போதும் கூறி வரும் உண்மையான பக்தர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை. எல்லா ஆசைகளும் தீர்ந்தாலும் சில கர்ம எச்சங்களை மட்டும் கழிக்க இயலாமல் அதற்கேற்றவாறு உடல்நிலை, ஆயுள்நிலை இடம் தராது இறந்து போனவர்கள் மீண்டும் பூமியில் மறுபிறவி எடுக்கிறார்கள். அவர்கள் சில காலம் மனிதனாகவோ அல்லது மிருகங்களாகவோ வாழ்ந்து விட்டு, தங்களது கர்மக் கணக்குகளை நேர் செய்த பின் மரணிக்கிறார்கள். அவர்களுக்கு மீண்டும் மறுபிறவி என்பது ஏற்படாது. இது போன்ற பல காரணங்கள் மறுபிறவி எடுப்பது பற்றி நமது சாஸ்திரங்களில் கூறப்ப்பட்டுள்ளன.  நமது சாஸ்திரங்கள் கூறும் முறைப்படி பரமாத்மாவிலிருந்து பிரிந்து வந்த ஜீவாத்மாக்கள் அனைவரும், ஏதாவது ஒரு காலத்தில் அந்தப் பரமாத்மாவோடு இணைந்து தான் ஆக வேண்டும். அது ஒரு பிறவியிலும் நிகழலாம். அல்லது அதற்கு ஓராயிரம் பிறவிகள் எடுக்க வேண்டியும் வரலாம். அது அந்த ஆன்மாவின் பரிபக்குவத்தைப் பொறுத்தே நிகழ்கிறது என குறிப்பிடுகின்றன.

Monday, August 6, 2012

ஆடி மாதம் அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது ஏன்?

ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் திருவிழாவும், கூழ் ஊற்றுவதும் வழக்கம், இது ஏன் தெரியுமா? ..  ஆடி மாதம் வீசக்கூடிய காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அதனால் எங்கும் தூசியாக இருக்கும். இதனால், இருமல் போன்ற நோய்கள் வரலாம். இதைத் தவிர்க்கவே மாரியம்மன் கோயில்களில் ஆடி மாதம் முழுவதும் கூழ் ஊற்றுவார்கள். இதை ஆடிக்கஞ்சி என்பர். அதிமதுரம், சீரகம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகம், குன்னிவேர், உழிஞ்சி வேர், சீற்றாமுட்டி, கடலாடி வேர்-இவற்றை லேசாகத் தட்டி எடுத்து, ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வைத்துக்கொள்ளவேண்டும். அரிசியைக் கஞ்சியாக வேகவைத்து அதில் இந்தத் துணியில் உள்ள மருந்துகளைப் பிழிய வேண்டும்; அல்லது, கஞ்சிக்குள் அந்தத் துணிப் பொட்டலத்தைச் சிறிது நேரம் போட்டு ஊறவைத்து, எடுத்துவிடவேண்டும். அதன்பிறகே ஆடிக் கஞ்சியைப் பரிமாற வேண்டும். இந்த முறையை எல்லாரும் பின்பற்றுவது நல்லது.

Sunday, August 5, 2012

கண்ணை மூடிக் கொண்டு கடவுளை வழிபடக்கூடாது என்கிறார்களே! உண்மையா?

கடவுளின் திருவுருவம் கண் முன்னே  இருக்கும்போது கண்ணாரக் கண்டு வழிபட வேண்டும். திருவுருவம் இல்லாத இடத்தில் வழிபட வேண்டிய காலத்தில், கண்ணை மூடி மனதில் கடவுளின் உருவத்தை நிலை நிறுத்தி வழிபாடு செய்யலாம்.

காற்றடித்து கற்பூரம், விளக்கு அணைந்துவிட்டால் மனம் வருந்துகிறதா?

காற்றடிப்பதை நிறுத்த இயலாது. இது இயற்கையாக நிகழ்வது. இதுபோன்ற இடங்களில் நாம் தான் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். கனத்த திரியாகப் போட்டு விளக்கேற்றலாம். கற்பூரத்தை கட்டியாக வைக்காமல் நொறுக்கி தூளாக நிறைய வைத்து ஏற்றலாம். இவையும் மீறி காற்றில் அணைந்தாலும் வருத்தப்படத் தேவையில்லை. மீண்டும் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.

செவ்வாய், வெள்ளிக்கிழமையில் வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாதா ஏன்?

செவ்வாயும், வெள்ளியும் பொருள் வாங்கிச் சேர்த்தால் வளரும். அதனால், இவ்விரு நாட்களிலும் வீட்டைத் துடைப்பதில்லை. முதல்நாளே ஒட்டடை அடித்து சுத்தப்படுத்தி விடுங்கள்.

Thursday, August 2, 2012

காமாட்சி ஸ்தோத்திரம்(மந்திரங்கள் சித்திக்க)

மந்திரங்கள் சித்திக்க

காஞ்சீ நூபுர ரத்ன கங்கண லஸத்
கேயூர ஹாரோஜ்வலாம்
காச்மீராருண கஞ்சுகாஞ்சித குசாம்
கஸ்தூரிகா சர்ச்சிதாம் னு
கல்ஹாராஞ்சித கல்பகோ ஜ்வலமுகீம்
காருண்ய கல்லோலினீம்
காமாக்ஷீம் கலயாமி கல்ப லதிகாம்
காஞ்சீ புரீ தேவதாம்

காமாராதி மன: ப்ரியாம் கமலபூ
ஸேவ்யாம் ரமாராதிதாம்
கந்தர்பாதிக தர்பகான விலஸத்
ஸெளந்தர்ய தீபாங்குராம்
கீராலாப வினோதினீம் பகவதீம்
காம்ய ப்ரதான வ்ரதாம்
காமாக்ஷீம் கலயாமி கல்ப லதிகாம்
காஞ்சீ புரீ தேவதாம்

காதம்ப ப்ரமதாம் விலாஸ கமனாம்
கல்யாண காஞ்சீ ரவாம்
கல்யாணாசல பாத பத்ம யுகளாம்
காந்த்யா ஸ்மரந்தீம் சுபாம்
கல்யாணாசல கார்முகப்ரியதமாம்
காதம்ப மாலாச்ரியாம்
காமாக்ஷீம் கலயாமி கல்ப லதிகாம்
காஞ்சீ புரீ தேவதாம்

கந்தர்வாமர ஸித்தசாரண வதூம்
த்யாயேத்பதா காஞ்சிதாம்
கௌரீம் குங்கும பங்க பங்கித ருசாம்
த்வந்த்வாபி ராமாம் சுபாம்
கம்பீரஸ்மித விப்ரமாங்கித முகீம்
கங்காதராலிங்கிதாம்
காமாக்ஷீம் கலயாமி கல்ப லதிகாம்
காஞ்சீ புரீ தேவதாம்

விஷ்ணு ப்ரஹ்ம முகாமரேந்த்ர பரிஷத்
கோடீர பீடஸ்த்தலாம்
லாக்ஷõ ரஞ்ஜித பாத பத்மயுகளாம்
ராகேந்து பிம்பானனாம்
வேதாந்தாகம வேத்ய சிந்த்ய சரிதாம்
வித்வஜ்ஜனைராவ்ருதாம்
காமாக்ஷீம் கலயாமி கல்ப லதிகாம்
காஞ்சீ புரீ தேவதாம்

மாகந்த த்ரும மூலதேச மஹிதே
மாணிக்ய ஸிம்ஹாஸனே
திவ்யாம் தீபித ஹேமகாந்தி நிவஹா
வஸ்த்ரா வ்ருதாம் தாம் சுபாம்
திவ்யா கல்பித திவ்யதேஹ பரிதாம்
த்ருஷ்டி ப்ரமோதார்பிதாம்
காமாக்ஷீம் கலயாமி கல்ப லதிகாம்
காஞ்சீ புரீ தேவதாம்

ஆதாராதி ஸமஸ்த சக்ரநிலயாம்
ஆத்யந்த சூன்யாமுமாம்
ஆகாசாதி ஸமஸ்தபூத நிவஹா
காராம் அசேஷாத் மிகாம்
யோகீந்த்ரைரபி யோகினீ சதகணை
ராராதிதா மம்பிகாம்
காமாக்ஷீம் கலயாமி கல்ப லதிகாம்
காஞ்சீ புரீ தேவதாம்

ஹ்ரீங்கார ப்ரணவாத்மிகாம் ப்ரணமதாம்
ஸ்ரீ வித்யவித்யாமயீம்
ஐம் க்லீம் ஸெளம் ருசி மந்த்ர மூர்த்தி
நிவஹா காரா மசேஷாத்மிகாம்
ப்ரஹ்மானந்த ரஸானுபூத மஹிதாம்
ப்ரஹ்மப்ரியம்வாதினீம்
காமாக்ஷீம் கலயாமி கல்ப லதிகாம்
காஞ்சீ புரீ தேவதாம்

ஸித்தானந்த ஜனஸ்ய சின்மய ஸூகா
காரா மஹோயோகிபி
மாயா விச்வ விமோஹினீம் மதுமதீம்
த்யாயேத் சுபாம்ப்ராஹ்மணீம்
த்யேயாம் கின்னர ஸித்தசாரண வதூ
த்யேயாம் ஸதா யோகிபி
காமாக்ஷீம் கலயாமி கல்ப லதிகாம்
காஞ்சீ புரீ தேவதாம்

காமாரிகாமாம் கமலாஸனஸ்த்தாம்
காம்யப்ரதாம் கங்கண சூடஹஸ்தாம்
காஞ்சீ நிவாஸாம் கனக ப்ரபாஸாம்
காமாக்ஷீ தேவீம் கலயாமி சித்தே

Wednesday, August 1, 2012

பழங்களின் ஆன்மீக மற்றும் மருத்துவ குணங்கள்!

இறைவழிபாட்டில்  பழ வகைகளும் ஒரு முக்கிய இடம் பெறுகிறது. பொதுவாக மா, பலா, வாழை போன்ற கனிகளை இறைவனுக்கு படைத்து வழிபடுகிறோம். புராதன காலம் முதலாக முனிவர், ரிஷிகள் சமைத்த உணவைத் துறந்து பெரும்பாலும் பால், பழம், ஆகியவற்றை உண்டார்கள். இதனால் நீண்ட காலம் திடகாத்திரமாக வாழ்ந்திருக்கிறார்கள். இதை புராண இதிகாசக் கதைகளும் எடுத்து கூறியுள்ளன. நாரதர் கொடுத்த மாங்கனிக்காக விநாயகரும் முருகனும் போட்டியிட்ட கதையை நாம் அறிவோம், அதேபோல் அதியமான் கொடுத்த நெல்லிக்கனியை உண்டதால் அவ்வைப் பிராட்டி நீண்டகாலம் வாழ்ந்த வரலாறும் உண்டு. பழங்களில் உள்ள சத்துக்கள் நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இத்தகைய காரணங்களினால் இறைவழிபாட்டில் பழங்கள் ஒரு முக்கிய இடம் பெறுகிறது.

பழங்களின் மருத்துவ குணங்கள்:
ஆப்பிள் வயிற்றுப்போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரக கோளாறுகள், சிறுநீரகத்தில் கல், இதய நோய்கள் ஆகியவைகளுக்கு நல்லது. நாவல் பழம் நீரிழிவை நீக்கும். வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும், விந்துவை கட்டும். திராட்சை ஒரு வயது குழந்தையின் மலக்கட்டு, சளி ஆகியவற்றை நீக்கும். காய்ச்சல் குணமாக திராட்சை பழங்களை பிழிந்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் கொடுத்து வந்தால் நீங்கும். கொய்யாப்பழத்தால் உடல் வளர்ச்சியும், எலும்புகளும் பலம் பெறுகின்றன. வயிற்றில் புண் இருந்தால் குணப்படும். சிவப்பு திராட்சை, தோல் வியாதியை போக்கும். திராட்சை, ஆப்பிள், எலுமிச்சை - மலச்சிக்கலைப் போக்கும். பப்பாளி, ஆரஞ்சு - மூல வியாதிக்காரர்களுக்கு நல்ல பயன் தரும். திராட்சை, சாத்துக்குடி - ரத்த அழுத்தத்திற்கு