Sunday, December 28, 2014

துளசியில் இவ்ளோ விஷயம் இருக்கா!

துளசியைப் பூவோடு சேர்த்து விஷ்ணுவை ஆராதிப்பது சிறப்பு. துளசியில் நெற்கதிர் போல பூக்கள் இருப்பதைக் காணலாம். அதற்கு அடுத்த  நிலையில் துளசி இலைகள், துளசிக்கட்டை, துளசி வேர் ஆகியவற்றாலும் பெருமாளை ஆராதிக்கலாம். அதுவும் இல்லாத பட்சத்தில்துளசி  செடி  இருந்த மண்ணாலும் பூஜிக்கலாம். இதில் எதற்கும் வாய்ப்பில்லாத போது, அர்ச்சிக்கும் மலர் எதுவாக இருந்தாலும்,“பெருமாளே! இந்த மலரை  துளசியாக ஏற்று அருள்புரிய வேண்டும்’ என்று மனதில் எண்ணியவாறே ‘துளசி! துளசி!’ என்று சொல்லிக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்

சனி பகவானை நேருக்கு நேர் வணங்க கூடாது என்பது ஏன்?

கோயிலில் ஸ்தாபிக்கப்பட்ட எந்த ஒரு தெய்வத்தையும் வணங்கும்போது, நேருக்கு நேர் நின்று தரிசிக்கக் கூடாது. அந்த தெய்வத்தின் பார்வையை சக்தியை நம்மால் தாங்கிக்கொள்ள இயலாது. சன்னிதியின் இரு பக்க வாட்டிலும் நின்று தரிசிக்க வேண்டும். தெய்வ சக்தியை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் சக்தியை உடைய நந்தி, கருடாழ்வார், சிம்மம் போன்ற அந்த தெய்வ வாகனங்கள் மட்டும் நேருக்கு நேர் அமைக்கப்பட்டிருப்பதை கோயில்களில் காணலாம்.

நவக்கிரகங்களில் ஒவ்வொரு கிரகத்துக்கும் அதன் இருப்பிடம், சேர்க்கை, பார்வை ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொருவிதமான பலன்கள் உண்டு. இதற்கு ஸ்தான பலம், ஸம்யோக பலம், த்ருஷ்டி பலம் என்று சொல்வார்கள். இயற்கையிலேயே அசுபகிரஹமான சனி கிரஹத்தின் 3, 7, 10ஆம் பார்வை பொதுவாக அசுப பலனையே ஏற்படுத்தும். ஆகவே, சனியின் பார்வை பொதுவாக அசுபத்தையே ஏற்படுத்தும் என்பதால், கோயில்களிலும் சனீஸ்வரன் சன்னிதியில் (சனியின் பார்வை நம் மீது விழக்கூடாது என்பதால்) நேருக்கு நேர் நின்று அமர்ந்து சனியை தரிசிப்பதைத் தவிர்க்கிறார்கள். இது ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்.

நவக்கிரகங்களை, தன் கட்டுப்பாட்டில் வேலைக்காரர்களாக வைத்து கொடுமைப்படுத்தி வந்த இலங்கை வேந்தன் இராவணன், சூரியன், சந்திரன், செவ்வாய் முதலான ஒன்பது கிரகங்களையும் தனது சிம்மாசனத்தின் கீழே அமைக்கப்பட்டிருக்கும் படிக் கட்டுகளில் படுக்க வைத்து, தான் அரியணையில் ஏறும்போதும் இறங்கும்போதும் அவர்களின் மார்பின் மீது தனது கால்களை வைத்து அவர்களை மிதித்துக் கொண்டே அரியணை ஏறும் வழக்கத்தைக் கொண்டிருந்தான். இதற்காக நவக்கிரகங்கள் ஒன்பதும் ஒவ்வொரு படிகளிலும் ஒவ்வொன்றாக வரிசையாக மேல்நோக்கி படுத்துக் கொண்டிருக்கும். ஆனால், நவக்கிரகங்களில் சனி கிரகம் மட்டும் (தனது பார்வை பட்டால் கெடுதல் விளையும் என்பதால்), மேல் நோக்கிப் படுக்காமல் கீழ் (தரையை) நோக்கி குப்புறப்படுத்திருந்தது.

இதை கவனித்த நாரதர், இராவணனின் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக, இராவணன் சபைக்கு வந்து, ராவணன் நவக்கிரஹங்களை காலால் மிதித்து அரியணை ஏறுவதை கவனித்தார். அப்போது ராவணனிடம் நாரதர், ராவணா! உனது கட்டளையை அனைவரும் மதித்து, மேல் நோக்கி படிகளில் படித்திருக்கிறார்கள். ஆனால், இந்த சனி கிரகம் மட்டும் உனது கட்டளையை அவமதிக்கும் வகையில் கீழ் (தரை) நோக்கி படுத்திருக்கிறது பார்த்தாயா! என்று கூற, ராவணனும் சனியை மேல் நோக்கி படுக்கச் சொன்னான்.

தனது பார்வையால் கெடுதல் விளையும் என்பதை சனி கிரகம் எடுத்துச் சொல்லியும் ராவணன் பிடிவாதமாக இருக்கனே, சனியும் படிக்கட்டில் மேல் நோக்கியவாறு திரும்பிப் படுத்தது. ராவணன் தனது காலால் சனியை மாõர்பில் மிதிக்கும்போது சனி கிரகத்தின் குரூரமான பார்வை, இராவணனின் மீது விழுந்தது. அது முதல் ராவணனுக்கு அனர்த்தம் ஆரம்பமாயிற்று. நாரதரும் வந்த வேலை முடிந்ததை எண்ணி மகிழ்ச்சியுடன் புறப்பட்டார். புராணத்தில் காணப்படும் இந்த நிகழ்வின் மூலம் சனியின் பார்வை நம் மீது விழாமல் இருப்பது சிறப்பானது என்பது தெரிகிறது.நமது உடல் தசையால் ஆனது. தசை வளர்ச்சிக்கு உளுந்து முக்கிய காரணமாகிறது. ஒல்லியாக இருப்பவர்கள் இட்லி, தோசை, உளுந்துவடை சாப் பிட்டால் சதைப்பிடிப்பு ஏற்படும். ஆனால், சதையாலான இந்த உடம்பு எதற்காவது பயன்படுமா? எனவே, பயனற்ற இந்த உடலை உனக்கே அர்ப் பணிக்கிறேன் ஆஞ்சநேயா என்ற தத்துவார்த்தத்தின் அடிப்படையிலேயே உளுந்துவடை மாலை அணிவிக்கிறோம். அனுமானுடைய தாய்  அஞ்சனாதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உளுந்து வடைசெய்து கொடுத்ததாக ஐதீகம். உளுந்து எலும்புகளுக்கு நல்ல போஷாக்கு.

வெற்றிலைமாலை: ராமர் வெற்றி பெற்றதை சீதைக்கு முதலில் தெரிவித்தவர் ஆஞ்சநேயர். இதனால் மகிழ்ந்த சீதை தன் அருகில் இருந்த  வெற்றிலைக் கொடியில் இருந்த இலைகளை மாலையாக்கி அணிவித்தாள். அதன் அடிப்படையில் எண்ணிய செயல் வெற்றி பெற ஆஞ்சநேயருக்கு  வெற்றிலைமாலை அணிவிக்கும் வழக்கம் உண்டானது.

மாலையை எப்படி கட்டுவது?: இரு வெற்றிலை, ஒரு பாக்கு என வைத்துக் கொண்டு மாலை தொடுக்க வேண்டும். ஒரு மாலையில் 21 கண்ணிகள்  அமைவது நல்லது. 48, 54, 108 எண்ணிக்கையிலும் வெற்றிலையைக் கட்டலாம். ஒற்றைப்படை எண்ணிக்கையில் 3, 5, 7 என சனிக்கிழமைகளில்  மாலை சாத்துவது நல்லது. இதனால், சுபநிகழ்ச்சிகளில் ஏற்படும் தடை நீங்கி விரைவில் நல்லபடியாக நடந்தேறும்.

ஏழரை சனிக்கு அறிவியல் பரிகாரம்!

எனக்கு ஏழரைச்சனி, எனக்கு அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனி என்றெல்லாம் பலரும் நடுக்கம் கொள்கிறார்கள். இவை தங்கள்  வாழ்க்கையில் பெரும் பின்னடவை ஏற்படுத்தும் என நினைக்கிறார்கள். இதற்காக பல பரிகாரங்களைச் செய்கிறார்கள். அதில் தவறில்லை. ஆனால்,  செலவே இல்லாமல் எளிய அறிவியல் பரிகாரம் ஒன்று உள்ளது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.  கோள்களின் நகர்வுகளை அறிந்து  கொண்டால் பரம்பொருளான கடவுளின் நிலையை அடையமுடியும், என வானவியல் அறிஞர் ஆர்யபட்டா கூறியுள்ளார். கோள்களின் நகர்வு பற்றி  அறிந்தவர்கள் நல்ல பிள்ளைகளைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள், என யஜுர் வேத ஜோதிடம் கூறுகிறது.
நாசா விஞ்ஞானி கார்ல் சாகன்,  நாம் கிரகங்கள், நட்சத்திரங்களில் இருந்து தான் பிறந்திருக்கிறோம். நம் பூர்வீகமே நட்சத்திரங்கள் தான்.  அவைகளைப் பற்றி எந்த அளவுக்கு அறிந்து கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நம்முடைய எதிர்காலம் நன்றாக அமையும், என்று குறிப்பிடுகிறார்.  கிரகம், நட்சத்திரங்களை நோக்கி தியானம் செய்தால் நற்பலனை நிச்சயம் நம்மால் பெற முடியும்.  வானத்தில் கிரகங்கள் எந்த இடத்தில் சுற்றுகின்றன  என்பது பற்றி யாரும் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. அதனைத் தெரிந்து கொள்வதால் நமக்கு உண்டாகும் பலனையும் யாரும் அறிந்து  கொள்ளவில்லை. பொதுவாக, ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் கிரகம் செல்வதை பெயர்ச்சி என குறிப்பிடுகிறோம். அந்த வகையில் குரு,  சனி கிரகங்களின் பெயர்ச்சிகளை மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர். மெதுவாக நகர்வதால் சனியை மந்த கிரகம் என்பர். 9 கோடி மைல்  துõரத்தில் இருக்கும் பூமி, சூரியனைச் சுற்றி வர ஒரு வருடம் ஆகிறது. ஆனால், சூரியனை விட்டு 85 கோடி மைல் தள்ளியிருக்கும் சனி, அதற்கான  சுற்றுப்பாதையில் ஒரு முறை சுற்றி வர 30 வருடம் ஆகிறது. மிக நீண்ட தொலைவில் இருப்பதால், சனி ஒரு ராசியைக் கடக்க உத்தேசமாக  இரண்டரை ஆண்டு காலம் ஆகிறது.

தற்போது சனி கிரகம் தீர்க்க ரேகை 209ல் இருந்து 210 ஐ அடைகிறது. அதாவது 209 டிகிரியில் உள்ள துலாமை விட்டு, 210 டிகிரியிலுள்ள விருச்சிக  ராசியை அடைவதையே துலாம்- விருச்சிக ராசி மாற்றம் என்கிறோம்.  சரி...இனி அறிவியல் ரீதியாக சனி பரிகாரம் தேடுவது பற்றி பார்ப்போம்.  பஞ்சாங்கம் அல்லது எபிமரிஸ் அளிக்கும் கிரக நிலைகளை ஒரு வரைபடத்தில் சுற்றுப்பாதைகளில் அமைத்துக் கொண்டால் சனி உள்ளிட்ட எல்லா
கிரகங்களையும் அதன் இருப்பிடத்திலேயே பறவைப் பார்வையாக மனதாலேயே நம்மால் பார்க்க முடியும். அதாவது, கிரகங்களை ஒரு குறிப்பிட்ட  இடத்தில் இருப்பதாக மனதில் கற்பனை செய்து கொள்ள வேண்டும். தற்போதைய சனிப்பெயர்ச்சியில்,  சூரியனுக்கு மிகவும் அருகில், அதாவது 15  டிகிரி அளவு வித்தியாசத்தில் சனி இருக்கும். எனவே இந்த முறை ஏற்படும் சனிப்பெயர்ச்சியை நேரில் பார்ப்பது கடினம். எனவே, சூரியனுக்கு சற்று  மேலாக சனி இருப்பதாக நம் மனதில் கற்பனை செய்து கொள்ள வேண்டும். முதலில், பூமியின் வடதுருவத்தை மனதில் வரவழைக்க வேண்டும். அ ங்கிருந்து பல லட்சம் கோடி மைல் துõரம் மனதாலேயே கடந்து செல்ல வேண்டும்.

அப்போது சூரிய மண்டலத்தையும், அதனைச் சுற்றியுள்ள நட்சத்திரங்களையும் ஒரே நேரத்தில் ஒரே பார்வையாக நம் மனதால் காண முடியும்.  சூரியனுக்கு அருகில் சனி இருப்பதாக மனதில் கற்பனை செய்து, சனீஸ்வரா! எனக்கு உன்னால் வரும் கெடுபலன்களில் இருந்து காப்பாற்று, என  மனதால் தியானம் செய்ய வேண்டும். இந்த முறையில் இரவில் அல்லது பகலில் எந்த நேரத்திலும் மனத்திரையில் கண்டு தியானிக்கலாம். சனி  மட்டுமல்ல! பிற கிரகப்பெயர்ச்சிகளால் நமக்கு பிரச்னை இருந்தாலும், சம்பந்தப்பட்ட கிரகங்களுடன் ஒன்றாகவோ அல்லது குறிப்பிட்ட கிரகத்துடன்  அன்றைய நாளில் சம்பந்தப்பட்ட நட்சத்திரத்துடன் ஒன்றிக் கலந்தோ உயிர்க்கலப்பு பெறலாம். கிரகங்களின் இருப்பிடத்தை மனத்திரையில் கண்டு  தியானத்தில் ஆழ்ந்து விடுவதன் மூலம் அவைகளிடம் இருந்து காந்த அலைக்கதிர்களைநம்மால் ஈர்க்க முடியும்.  10 அல்லது 15 நிமிடம் இந்த திய õனத்தை செய்வதன் மூலம் கிடைக்கும் பலன், கோயில்களில் நவக்கிரகங்களை வலம் வந்து அடையும் பலனுக்கு ஈடாகவோ அல்லது அதற்கும் ÷ மலானதாகவோ இருக்கும்.  உங்கள் பிறந்த நட்சத்திர நாளில், உங்களது நட்சத்திரம் இருக்குமிடத்தை உத்தேசமாகக் கணக்கிட்டு அந்த இடத்திற்கு  மனதால் சென்று தியானம் செய்பவர்கள் பிரத்யேக பலனைப் பெற முடியும். கிரகங்கள் ஒன்பதும் நம் உடம்பில் ஒவ்வொரு பாகத்தைக் குறிக்கும்.  சூரியன்- எலும்பு, சந்திரன்- ரத்தஓட்டம், செவ்வாய்- மஜ்ஜை, புதன்- தோல், வியாழன்- மூளை, சுக்கிரன்- உயிர்ச்சக்தி, சனி- நரம்பு மண்டலம். அந் தந்த உறுப்புகள் நலம் பெற அந்த கிரகத்தை நோக்கி தியானம் செய்யலாம்.  மொத்தத்தில், இரவு நேரத்தில் மட்டுமே கிரகம், நட்சத்திரங்களைக் கண்டு  களிக்கலாம் என்ற நிலையை மாற்றி பிரமிப்பூட்டும் பறவைப்பார்வை மூலம் பகல், இரவு பாகுபாடு இல்லாமல் எந்த நேரத்திலும் மனதை செலுத்தி  உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி மன ஆரோக்கியத்தை அடையலாம். இதை நடைமுறையில் கொண்டு வர நாம் எதையும் கற்றுக் கொள்ள  வேண்டியதில்லை. வீட்டிலேயே அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து கிரகங்களின் இருப்பிடம் அறிந்து மனம் செலுத்தி தியானம் செய்வதே  போதுமானது. இவ்வாறு தொடர்ந்து செய்பவர்கள் வாழ்வில் பல நன்மைகளைப் பெறுவது உறுதி.

ராகு காலம்.. எமகண்டம் பார்ப்பது எப்படி?

திருவிழா சந்தையில் வெளியே புறப்பட்டு விளையாடச் செல்வது ஞாயமா?

விளையாட்டாய் புண்ணியம் செய்தாலும் திருவருளை ஞானமும் சத்தியமும் வெளிப்படுத்தும்!

எப்போதும் எந்தச் செயலைச் செய்யும் போதும் ராகுகாலம், எமகண்டம் பார்க்க காலண்டரைப் புரட்டுபவரா நீங்கள்? அப்படியானால் மேலே இருக்கும் இரண்டு வாக்கியங்களையும் மனப்பாடம் செய்துகொள்ளுங்கள். அப்புறம் உங்களுக்கு ராகுகாலம், எமகண்டம் பார்க்க காலண்டர் தேவைப்படாது.

எப்படி? திங்கட்கிழமை 7.30-9 ராகுகாலம், அடுத்து சனிக்கிழமை 9-10.30, வெள்ளிக்கிழமை 10.30-12, புதன் கிழமை 12-1.30, வியாழக்கிழமை 1.30-3, செவ்வாய்க்கிழமை 3-4.30, ஞாயிற்றுக்கிழமை, 4.30-6. இதில் முதல் நாளுக்கு உரிய நேரமான 7.30-9 மட்டும் நினைவில் இருந்தால் போதும், வாக்கியத்தில் ஒவ்வொரு வார்த்தையி<லும் முதலில் உள்ள எழுத்துகளை கிழமையின் முதலெழுத்தாகக் கொண்டால் அடுத்தடுத்த ஒன்றரை மணி நேரம் ராகுகாலம் என எளிதாகத் தெரிந்துகொண்டுவிடலாம்.

இரண்டாவது வாக்கியம் யம கண்டத்திற்கு வியாழக்கிழமை 6-7.30 எமகண்டம். அடுத்தடுத்து வாக்கியத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையின் முதலெழுத்தை கிழமையின் முதலெழுத்தாகக் கொண்டால், அடுத்தடுத்து புதன், செவ்வாய், திங்கள், ஞாயிறு, சனி, வெள்ளிக் கிழமைகள் அடுத்தடுத்த ஒன்றரை மணிநேரம் எமகண்டம் என்பதைக் கணக்கிட்டுவிடுவது சுலபம்தான்!

கோடீஸ்வரனாக்கும் குபேர இரகசியங்கள்!

வந்த செல்வத்தை மதித்துப் போற்றுங்கள். வராத வருமானத்தை எண்ணி ஏங்காதீர்கள். அவற்றின்மீது ஆசை வைக்காதீர்கள். பணம் வந்தால் வாய்பிழந்த ஏழைகளுக்கு வாரி வழங்கி வள்ளலாவேன்! என்று இறைவனிடம் திரும்பத் திரும்பக் கூறுங்கள். குபேர வாசலைத் திறந்து விடுவார். வரவு-செலவுக் கணக்கை, முறையாய் வைத்திருப்போர்க்குக் கணக்கின்றி செல்வம் வழங்க வேண்டும்! என்பது தெய்வச் சட்டம். கணக்கு வைத்து வாழுங்கள். கணக்கின்றிச் செல்வம் குவியும்.

* பணத்தைப் பிறரிடம் வழங்கும்போது தலைப் பகுதியியை நம் பக்கம் வைத்தபடி வழங்கிப் பிரியா விடைதரவும்.

*வாடகை..... பலசரக்கு.... பால்பாக்கி... எனப் பணத்தைப் பிறருக்கு வழங்கும்போதெல்லாம், சீக்கிரம் வேறு வழியில் என்னிடம் வந்து சேர்! எனப் பிரியா விடை கொடுத்து அனுப்புங்கள்.

* ஈரம், ஈரத்தை ஈர்ப்பதுபோல் ஏற்கனவே இருக்கும் பணம்தான் புதிய பணத்தை ஈர்த்து வரும். எனவே பர்சில்... வங்கியில்.... பீரோவில் வறட்சி கூடாது. இருப்புத் தொகை அதாவது ( கணிtஞுணtடிச்டூ அட்ணிதணt) ஆகக் குறிப்பிட்ட தொகை இருக்கும்போதே செலவை நிறுத்தி விட வேண்டும். நாள்தோறும் கண்கள் பணத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கும் வகையில் பசுமையைப் பராமரிக்கவும்.

*தூய்மையற்ற இடத்திற்குள் திருமகள் நுழைய மாட்டாள். வீடு.... அலுவலகம்.........கல்லாப்பெட்டி.....பணப்பை.... எனச் செல்வம் புழங்கவேண்டிய இடங்களை எப்போதும் தூய்மையாக வைத்துப் பராமரிக்கவும்.

*வணிகத்தை... தொழிலை.... அலுவலகப் பணியை மனமலர்ச்சியுடன் விளையாட்டகச் செய்யுங்கள். சிரிப்பவர்களைப் பார்த்தே செல்வ லட்சுமி வருகிறாள். சிடுமூஞ்சிகளையும் அழுமூஞ்சிகளையும் பார்த்து மூதேவிதான் விரும்பி வருகிறாள். சிரித்து வாழுங்கள். சிரிப்பவர்களுடன் சேர்ந்து வாழுங்கள்.

*ஆபிரகாம் லிங்கன் படத்தைப் பாக்கெட்டில் வைத்துக் கேளுங்கள். பண வருமானம் குறையாது.

* கீழே குறிப்பிட்டுள்ள குபேர மந்திரத்தை நாள்தோறும் குறைந்தது 7 முறை உச்சரித்துக் குபேர தேவனை வேண்டுங்கள் குபேர உறவு வாய்க்கும். வெள்ளிக்கிழமைகளில் பூவும் காசும் சமர்ப்பித்து 108 குபேரன் போற்றி சொல்லிக் குடும்பத்துடன் வணங்கி வந்தால் வருமானம் பெருகும்.

ஓம் ........ஹ்ரீம்.......க்ளீம்சௌம்........ஸ்ரீம்......கும் குபேராய........... நரவாகனாயயக்ஷ ராஜாய...... தன தான்யாதிபதியே............ லக்ஷ்மி புத்ராய......ஸ்ரீம்........ ஓம்....... குபேராய நமஹ.........!

 மனம் தரும் பணம்! போன்ற பொன்மொழிகளை உணர்ந்து முதலில் மனத்தைப் பணக்கார மனமாக மாற்றுங்கள். வெகுசீக்கிரம் வெளியில் பணக்காரன் ஆகிவிடுவீர்கள்.

சனிப்பெயர்ச்சியால் தோஷமா.. இனி கிடையவே கிடையாது!

தசரத மகாராஜா அயோத்தியை ஆண்ட வேளை அது. அப்போது, சனிபகவான் ரோகிணிநட்சத்திரத்தை கடக்க இருந்தார். இதனால், தேசத்துக்கு ஆபத்து வரும் என்று மந்திரிபிரதானிகளெல்லாம்,தசரதரிடம் முறையிட்டனர். என் தேசத்துக்கு ஒருகிரகத்தால் ஆபத்தா? அதைத் தடுத்து, என் மக்களைக் காப்பாற்ற அதற்காக என்ன விலையும் கொடுப்பேன்? என்று ஆர்த்தெழுந்தார் தசரதர். 

உடனே தன் பறக்கும் தேரை எடுத்தார். வில் அம்பு ஏந்தி சனியின் லோகத்திற்கே சென்று விட்டார். அதிர்ந்து போனார் சனீஸ்வரர்.என்னைப் பார்த்தாலே எல்லாரும் ஓடும் வேளையில், நீர் இங்கே வந்திருக்கிறீரே! யார் நீர்? எப்படி வந்தீர்! எதற்காக வந்தீர்? என்று கேள்விகளை அடுக்கினார் சனீஸ்வரர்.சனீஸ்வரரே! உம் மீது எனக்கு எந்த விரோதமும் இல்லை. உம்முடைய கிரக சஞ்சாரத்தால், எமது தேசத்துக்கு ஆபத்து என்று மந்திரிகள் உரைத்தார்கள். அதைத் தடுக்கவே, உம்மைத் தேடி வந்தேன், என்றார் தசரதர்.சனீஸ்வரர் மகிழ்ந்து போனார்.

தசரதரே! என் கிரக சஞ்சார காலத்தில், எவரொருவர் பொதுநலன் கருதி பணி செய்கிறாரோ, பிறருக்கு நன்மை செய்கிறாரோ, கடமையைக் கருத்துடன் செய்கிறாரோ... அவர்களை நான் அண்டவே மாட்டேன். மக்களுக்காக, இங்கே வந்து என்னுடன் போரிடவே துணிந்துவிட்ட உம்மை வாழ்த்துகிறேன். உம் தேசத்தை ஏதும் செய்யமாட்டேன், என்றார். தசரதர் மகிழ்ந்தார். தனக்கு அருள்செய்த சனீஸ்வரரை ஸ்லோகங்களால் அர்ச்சித்தார். அந்த ஸ்லோகங்களின் தமிழாக்கம் தந்துள்ளோம். இதைப் பக்தியுடன் படிப்பதுடன், பிறருக்கு நன்மையும் செய்தால், ஏழரை, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டகச்சனியால் பீடிக்கப்படும் ராசியினரை சனீஸ்வரர் ஏதும் செய்யமாட்டார்.  

ரவுத்திரன், இந்திரியத்தை அடக்குபவன், பப்ரு, கிருஷ்ணன், சனி, பிங்களன், மந்தன், சூரியபுத்திரன் என்னும் பலவித திருநாமங்களை கொண்ட சனீஸ்வரரே! 

சகல பீடைகளையும் போக்குபவரே! சூரிய புத்திரரே! உமக்கு நமஸ்காரம்.ஊ  கெட்ட ஸ்தானங்களில் இருக்கும் போது தேவர்கள், அசுரர்கள், கிங்கரர்கள், நாகர்கள், கந்தர்வர்கள், வித்யாதரர்கள், பன்னகர்கள் முதலியோரையும் துன்புறுத்தும் சூரியனின் மைந்தனே! உம்மை வணங்குகிறேன்.  

மனிதர், அரசர், பசுக்கள், சிங்கங்கள், காட்டிலுள்ள புழுக்கள், பறவைகள், வண்டுகள் முதலிய அனைத்துமே உம்மால் பீடிக்கப்படுகின்றன. அத்தகைய சக்தி படைத்த சனீஸ்வரரே! உமக்கு என் வணக்கம்.

நீங்கள் கெட்ட ஸ்தானத்தில் இருக்கும் காலத்தில் நாடு, நகரம், காடு, படை என அனைத்தும் துன்பத்திற்கு ஆளாகின்றன. அத்தகைய ஆற்றல் மிக்க சக்தி படைத்தவரே! உம்மைப் போற்றுகிறேன்.  

சனிக்கிழமையில் எள், உளுந்து, சர்க்கரை அன்னம் இவற்றை தானம் அளிப்பதாலும், இரும்பு, கருப்பு வஸ்திரம் இவற்றை தர்மம் செய்வதாலும் மகிழ்ச்சி அடைபவரே! சூரிய குமாரனே! உம்மைத்தியானிக்கிறேன்.  

சூட்சும வடிவிலும், பிரயாகை என்னும் திருத்தலத்திலும், யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிக்கரைகளிலும், குகைகளிலும் இருக்கும் யோகிகளின் தியானத்திற்கு காரணமானவரே! உம்மை வணங்குகிறேன்.  

சனிக்கிழமையில் வெளி இடத்தில் இருந்து தன் வீட்டை அடைபவன் சுகம் அடைவான். சனியன்று வீட்டை விட்டுக் கிளம்ப முடிவெடுத்திருப்பவர், திரும்பவும் அந்த செயலுக்காக செல்லும் தேவை உண்டாகாது. (அதேநாளில் அந்தச் செயல் வெற்றிகரமாக முடிந்து விடும்) இத்தகைய சக்தியைத் தந்துள்ள சனீஸ்வரரே! உம்மைப் போற்றுகிறேன். 

படைப்புக் கடவுளான பிரம்மாவாகவும், காத்தல் கடவுளான விஷ்ணுவாகவும், சம்ஹாரம் செய்யும் சிவனாகவும், ரிக், யஜூர், சாம வேதங்களின் வடிவமாகவும்விளங்குபவரே! உம்மைவணங்குகிறேன். 

திருக்கோணத்தில் இருப்பவரே! பிரகாசம் மிக்கவரே! கருப்பு நிறம் உடையவரே! பயங்கரமானவரே! அழிவைச் செய்பவரே! அடக்குபவரே! சூரியனின் மகனே! ராசிகளில் தாமதமாக சஞ்சரிப்பவரே! மந்த கதி உள்ளவரே! பிப்பலாதரால் துதிக்கப்பட்டவரே! இந்ததிருநாமங்களால், காலையில் எழுந்ததும் சொல்லி உம்மை வணங்குபவர்க்கு தோஷம் நீங்குவதோடு சகலசவுபாக்கியமும் தர வேண்டும். சனீஸ்வரரே! 

தசரதனாகிய என்னால் பாடப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தை தினமும்  மனத்தூய்மையுடன் சொல்பவர்களுக்கு, நல்ல குழந்தைகள், பசுக்கள்,  செல்வம், சொந்தபந்தம் என சகல சவுபாக்கியமும்  தர வேண்டும். வாழ்வுக்குப்  பின், மோட்சம் அளிக்க  வேண்டும்.

வர்மக்கலையும் சித்தர்களும்..!

வர்மக்கலை. என்பது  மருத்துவக்கலையின் ஒரு பகுதி. அது நம் நாட்டு சித்தர்களால் உருவாக்கப்பட்ட அரிய மருத்துவமுறை. இன்று அக்கலை தற்காத்துக்கொள்ளவும், எதிரிகளை வீழ்த்தவும் பயன்படுத்தப்பட்டாலும் ஆரம்பத்தில் அது சித்தர்களால் மருத்துவசிகிச்சைக்காகவே பயன்படுத்தப்பட்டு வந்தது. மனித உடலின் மேற்பரப்பிலுள்ள நரம்புமுனைகள் சிலவற்றை வர்ம ஸ்தானங்கள் எனச் சித்த மருத்துவர்கள் குறிப்பிடுவர். இந்நரம்பு முனைகளில் அடி விழுந்தால் உடலின்  உள்ளுறுப்புகளுக்கு காயம் நேருமென்றும், உயிருக்கே ஆபத்து விளையக்கூடுமென்றும் கருதப்படுகின்றன. ஆனால் அதே இடங்களில் சில தொடு உணர்வுகள் மூலம் மென்மையான சிகிச்சை அளித்து, குறிப்பிட்ட உள்ளுறுப்புகளின் செயல்திறனை அதிகரித்து, குறிப்பிட்ட உள்ளுறுப்புகளின் செயல்திறனை அதிகரித்து, உடலியக்கத்தை சீராக்கவும் முடியும் என்பதைக் கண்டறிந்திருந்தார்கள் சித்தர்கள். இது குறித்த அறிவியலே வர்மக்கலை ஆகும்.

உலகத் தற்காப்புக் கலைகளுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள் நமது சித்தர்கள் என்பதை எவரும் மறுக்கமுடியாது. ஆன்மிக ரகசியங்களை உணர்ந்து கொள்ளத் தனக்கு உறுதுணையாக இருந்தது சிலம்பம் எனும் தற்காப்புப் பயிற்சியே என்பதை அகத்தியர் தனது கம்பு சூத்திரத்தில் தௌவுபடக் கூறுகிறார். மேலும் எதிரியின் கால் வரிசையை வைத்தே அவனுடைய சுவாசம் நிலை அறிந்து, சரியானபடி தாக்கி வெல்ல முடியும் என்பதையும் தெளிவுபடக்கூறுகிறார் அகத்தியர்.

வர்மக்கலை அகத்திய மாமுனிவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது உருவான இடம் பொதிகைமலை (தற்போதைய குற்றால மலை). அகத்தியர் கற்பித்த வர்மக் கலைகளுள் அகத்தியர் வசிவர்மம், அகத்தியர் வர்மக் கண்ணாடி, அகத்தியர் வர்ம வரிசை, அகத்தியர் மெய் தீண்டாக் கலை ஆகியன குறிப்பிடத்தக்கவை. எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள், உடலின் முக்கிய உறுப்புகளில் அடிபட்டதால் வாதநோய் ஏற்பட்டவர்களை வர்மக்கலையைப் பயன்படுத்தி சித்தர்கள் மிகச்சுலபமாகக் குணப்படுத்தி வந்தனர்.

வர்மக் கலையை அகத்தியர் நான்கு பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார். அவை:

தொடு வர்மம்: பலமாகத் தாக்கப்படுவதன் மூலம் ஏற்படுகிறது. இதை எளிதில் குணப்படுத்த முடியும்.

தட்டு வர்மம்: இது ஒரே ஒரு விரலை மட்டும் பயன்படுத்தி, தாக்கப்படுபவரின் உடலில் வலி ஏற்படாமல் மிக லேசாக தட்டுவதன் மூலம் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகும். இம்முறையில் தாக்கப்படுபவரை இதற்கு உரிய தனியான சிகிச்சை முறையில் மட்டுமே குணப்படுத்த முடியும்.

நோக்கு வர்மம்: பார்வையை ஒரே இடத்தில் செலுத்தி விளைவுகளை ஏற்படுத்துவதே நோக்கு வர்மம் ஆகும். இந்த முறை ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். நோக்கு வர்மம் முறையில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு நிகர் உலகில் எவரும் இல்லை எனச் சொல்கிறார்.

படு வர்மம்: நான்கு வகை வர்மங்களில் அபாயகரமானது இதுவே! உடலில் உள்ள வர்மப் பகுதிகளில் அடியோ தாக்குதலா ஏற்படுத்தினால் அதுவே படுவர்மம் ஆகும். இத்தாக்குதலுக்கு ஆளானவர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதால் இது மிகவும் ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார்.

அதேபோல வர்மக்கலையால் தாக்கவோ, பாதிப்பினைப் போக்கவோ எல்லோராலும் இயலாது. மிகுந்த பயிற்சி உள்ளவரால் மட்டுமே இது சாத்தியமாகும் என்கிறார். அதோடு, தலையில் முக்கியமான 37 வர்மப் புள்ளிகளும், நெஞ்சுப் பகுதியில் 13 வர்மப் புள்ளிகளும், உடலின் முன் பகுதியில் 15 வர்மப் புள்ளிகளும், முதுகுப் பகுதியில் 10 வர்மப் புள்ளிகளும், கைகளின் முன் பகுதியில் 9 வர்மப் புள்ளிகளும், கைகளின் பின் பகுதியில் 8 வர்மப் புள்ளிகளும், கால்களின் முன் பகுதியில் 19 வர்மப் புள்ளிகளும், கால்களின் பின் பகுதியில் 13 வர்மப் புள்ளிகளும், கீழ் முதுகுப் பகுதியில் 8 வர்மப் புள்ளிகளும் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

காலன், வன்மம், ஏமம், சூட்சுமம், அடக்கம் ஆகியன வர்மக்கலையைக் குறிக்கும் மாற்றுப்பெயர்கள். வர்மக்கலை கற்றவரால் எதிரியை வீழ்த்துவதைப் போலவே, வீழ்ந்துக் கிடப்பவரை எழுப்பவும் முடியும். வர்ம அடி பட்டவனை குறிப்பிட்ட காலத்திற்குள் எழுப்பிட விட வேண்டும். இல்லையேல், அவனுக்கு மரணம் சம்பவிக்கும். எனவே காலன் என்பார்கள். வலிந்து தாக்குதலை வன்மம் என்ற சொல் குறிக்கும். பாதுகாப்பைக் குறிப்பது ஏமம்; உடலின் சூட்சுமமான ஸ்தானங்களை உட்படுத்தியதால் அடக்கம் என்றும் குறிப்பிடுவர்.

வேறெந்தத் தற்காப்புக் கலைகளிலோ மருத்துவ <உத்திகளிலோ இல்லாத அதிசயங்கள் வர்மத்தில் உண்டு. ஒளிவு, பூட்டு, பிரிவு என்னும் மூன்று அடிமுறை உத்திகளும் வர்மக்கலையில் இருப்பதுபோல் வேறெந்தத் தற்காப்புக் கலையிலும் இல்லை.

வெட்டுக் காயங்களிலிருந்து பீறிடும் ரத்தத்தை எந்தக் கட்டும் போடாமலேயே வர்ம நரம்புப் பிடியால் கட்டுப்படுத்தி நிறுத்திவிட முடியும். ஜன்னி, வாந்தி ஆகிய நோய்களை எந்தவித மருந்தும் இல்லாமலேயே வர்மக்கலையின் தடவுமுறைகளால் உடனடியாகச் சரிசெய்துவிட முடியும். ஒற்றைத் தலைவலி என்னும் கொடிய நோயை கணுக்காலில் உள்ள வர்ம அடங்கல் கொண்டு நாலைந்து நிமிடங்களில் ஒட்டிவிடலாம். இக்கலை மூலம் ஒருவர் தாக்கப்பட்டால் அதற்கென்று தனியாக உள்ள சிகிச்சை முறையைப் பயன்படுத்தியே சரிசெய்ய முடியும் என, அப்பனே வர்மத்தில் அடி பிடி வெட்டு குத்து கற்று பின் வரிசையுடன் பின் வர்ம இலக்கு செய்யே! என்ற வரிகள் விளக்குகின்றன.

நரம்பியலின் அடிப்படை தான் வர்மம், சுவாசத்திலுள்ள பிராணவாயு நுரையீரலில் அதிகநேரம் தங்குவதன் மூலம் உடலுக்குக் கூடுதலான பிராண சக்தி கிடைக்கிறது என்பதை சித்தர்கள் கண்டறிந்து, சுவாசத்தை பயிற்சியின் மூலம் முறைப்படுத்தினர். இதைத்தான் பிராணாயமம் என பெயரிட்டு அழைத்தனர். வர்மக் கலைக்கு பிராணாயமம் அத்தியாவசியமான பயிற்சி.

இந்த உச்சந்தலை சுவாசம் பற்றி அறியாமல் எந்த ஒரு வர்ம மருத்துவரும், மருத்துவராக முடியாது. சரசுவாசமும், உச்சந்தலை சுவாசமும் பற்றிய உற்மை நிலைகளை அறிந்திருந்தால்தான் உடலில் உள்ள வர்மப் புள்ளிகள் பற்றித் தெரிந்துகொள்ள முடியும். காரணம் சரசுவாசம், உச்சந்தலை சுவாசம் இரண்டின் மூலம்தான் வர்மப் புள்ளிகளின் இயக்கம் நடைபெறுகிறது. இந்த வர்மப் புள்ளிகளின் இயக்கம்தான் நரம்புகளின் இயக்கம், ரத்த ஓட்டத்தின் நிலை, இவையெல்லாம் சுவாசத்தைப் பொறுத்தே இயங்குகின்றன.

வர்மக்கலையின் அடிப்படைத்தேவை மனக்கட்டுப்பாடு, தவப்பயிற்சி, தவத்தில் சிறந்து இறையுணர்வு பெற்று அறநெறியில் வாழ்பவர்களுக்கு வர்மக்கலை கற்றுத்தரப்படும். அவர்களுக்குத்தான் வசப்படும். நேரடியாக குருவின் மூலம் மட்டுமே வர்மக்கலையைக் கற்க முடியும். இறையின் அருளும் குருவின் துணையும் இருந்தால்தான் வர்மக்கலையைக் கற்று, பிறருக்கு <உதவ முடியும்.

சித்தர் பெருமக்களின் தவத்தால் நமக்குக் கிடைக்கப்பெற்ற இந்த வர்மக்கலை, நரம்பியல் சிகிச்சையில் தலைசிறந்து விளங்குகிறது. நரம்புகளின் பெயர்களைக்கூட வகை தொகைப்படுத்தி வர்மநூல்கள் போதிக்கின்றன. அனைத்து விதமான நரம்பு நோய்களுக்கும் வர்ம மருத்துவம் சிகிச்சை அளிக்கிறது. இந்த மருவத்துவத்தால் எதிர்விளைவோ பக்கவிளைவோ இல்லை. மருத்துவமும் ஆன்மிகமும் கலந்தது வர்மக்கலை. எனவே வர்மக்கலையைக் கற்றறிந்து, அதனைப் பிரயோகிக்கும் நிபுணத்துவம் உடையோரை வர்மாணி ஆசான் என அழைப்பது வழக்கம்.

கேரள மாநிலத்திலும் திருவிதாங்கோடு சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்த இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்திலும் வர்மாணி ஆசான் பரம்பரையைச் சேர்ந்தோர் பலர் உள்ளனர். வர்மக்கலை என்பது களரிப் பயிற்று எனப்படும் போர்முறைக் கல்விப் பயிற்சிப் புலத்தின் உயர் கல்விப் பிரிவைச் சேர்ந்ததாகும். ஆயினும், இதன் ஆக்கப்பூர்வமான பயன்பாடே, வர்ம சிகிச்சை என்ற மருத்துவச் செயல்பாடே பரவலாக அறியப்பட்டுள்ளது. சீன நாட்டு அக்குபங்க்சர் சிகிச்சை முறை அண்மைக் காலமாக நம் நாட்டில் பிரபலமடைந்துள்ளதாலும், அச்சிகிச்சை முறையிலும் வர்மஸ்தானங்களுக்கு இணையான நரம்பு முனைகள் குறிப்பிடப்படுவதாலும் வர்ம சிகிச்சை குறித்த வாய்ந்த வர்ம மருத்துவம் அகத்திய்ர காலம்தொட்டு அரசர்களுக்கு அளிக்கப்படும் ராஜவைத்தியமாகவே இருந்து வந்திருக்கிறது.

வர்மக் கலையில் மிக உச்சம் தொட்டவர்களுக்கே நோக்கு வர்மம் சாத்தியமாகும். பார்வையாலே தாம் நினைத்ததை சாதிக்கும் திறன் இதனால் ஏற்படும்.

சித்தர்களின் தெய்வமாகவே போற்றப்படும். சிவபெருமானே இந்த வர்மக் கலையையும் உலகிற்கு அளித்தார். தலைமைச் சித்தரான ஈசன், திரிபுராதியரைத் தம் விழியால் நோக்கி, சிரிப்பினால் சிதைத்து அழித்ததை நோக்கு வர்மக்கலையைப் பிறப்பித்தவர், பிறைசூடனே என்பதற்கான ஆதாரம் என்றே சொல்லலாம்.

விநாயகர் முன் நெற்றியில் குட்டிக் கொள்வது, காது நுனிகளைப் பிடித்தபடி தோப்புக் கரணம் போடுவதும்கூட வர்ம சிகிச்சை சார்ந்ததுதான். சோர்வுடன் தெம்பு குறைந்து காணப்படும் போது வர்மப்புள்ளிகள் இருக்கும் இடத்தை சாதாரணமாகத் தட்டி விட்டால் சுறுசுறுப்பு அடையலாம் என்கிறது வர்மம்.

குற்றாலத்தில் குளித்தால் நோய்கள் விலகி விடும் என்பது நம்பிக்கை. இதற்குக் காரணம், அருவியிலிருந்து விழுகின்ற மூலிகை நீர் தலையிலும் உடலிலுள்ள வர்மப்புள்ளிகள் மீது நம்மை அறியாமலே படும்போது நோய்கள் தானாகவே குணமாகும் வாய்ப்பு ஏற்படுகிறது. கண்ணகி மதுரையை எரித்தது நோக்கு வர்மத்தின் அடிப்படையில்தான் என்பர்

துர்க்கையின் ஒன்பது வடிவங்கள்!

துர்க்கா தேவி வன துர்க்கா, சூலினி துர்க்கா, ஜாதவேதோ துர்க்கா, சாந்தி துர்க்கா, சபரி துர்க்கா, ஜ்வாலா துர்க்கா, லவண துர்க்கா, தீப துர்க்கா, ஆசுரி துர்க்கா என்று ஒன்பது வகையான வடிவங்களை அடைகிறாள் என்பது புராணச் செய்தி.

வனதுர்க்கா: பண்டைத் தமிழ் இலக்கியங்களால் கொற்றவை என்ற பெயரால் குறிப்பிடப்பட்டவள் வனதுர்க்கையே ஆவாள். அகத்திய முனிவர் வனதுர்க்கையை வழிபட்டார் என்பது புராணச் செய்தி. ராவணனை வதைத்திடும் வல்லமையைப் பெறுவதற்காக அகத்தியரின் ஆலோசனைப்படி ராமபிரான் இந்த துர்க்கையை வழிபட்டார். வனதுர்க்கை வழிபாடு ஆந்திரப் பிரதேசத்தில் மிகவும் பிரசித்தம். மகாவித்யா என்று லலிதா சகஸ்ரநாமம் பராசக்தியை துதிக்கும். மகாவித்யாவே வனதுர்க்கையாவாள். வனம் என்ற சொல்லுக்கு காடு என்று பொருள். தன்னை வழிபடுபவர்களை சம்சாரமாகிய காட்டிலிருந்து காப்பாற்றுபவள் வனதுர்க்கா என்பது பக்தர்களின் நம்பிக்கை! தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு அருகில் கதிராமங்கலம், மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள தருமபுரம் என அபூர்வமாகவே வனதுர்க்கை கோயில்கள் காணப்படுகின்றன.

சூலினி துர்க்கா: துர்க்கையின் வடிவங்களில் இவள் மிகவும் சக்தி படைத்தவள். சரபேஸ்வரரின் இறக்கை ஒன்றில் இவள் இருக்கிறாள். சிவனின் உக்ரவடிவின் தேவி இவள். முத்தலை சூலத்தினைக் கையில் ஏந்தியிருப்பதால் சூலினி துர்க்கா எனப்படுகிறாள். திருவாரூர் மாவட்டம், பேரளம் எனும் ஊருக்கு அருகில் உள்ளது அம்பர் மாகாளம் எனும் பாடல் பெற்ற தலம். இங்கே மாகாளி சூலினிதுர்க்கையாக காட்சி தருகிறார். இவளது திருமேனியை அர்ச்சகர்கள் கூட தொட்டு பூஜை செய்வதில்லை. ஒரு சிறிய கோலின் துணையாலேயே மாலை, ஆடை முதலியவற்றை அணிவிப்பார்கள்.

ஜாதவேதோ துர்க்கா: சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்துது தீப்பொறிகள் பிறந்தன. அவையே முருகனாக மாறின. நெற்றிக் கண்ணில் உருவான தீப்பொறிகளை ஏற்றுக்கொண்டு கங்கை நதியில் சேர்த்ததால் இந்த துர்க்கைக்கு ஜாதவேதோ துர்க்கை என்று பெயர். யஜூர் வேதத்தில் துர்க்கா ஸூக்தம் என்ற பகுதி உண்டு. மிகவும் சக்தி வாய்ந்த இந்த ஸூக்தம் ஜாத வேதஸே என்றே துவங்குகிறது.

சாந்தி துர்க்கா: இறை வழிபாட்டால் விளையும் பயன்களில் மிகவும் சிறந்தது உள்ளத்துக்குக் கிடைக்கும் அமைதியே ஆகும். ஓம் சாந்தி சாந்தி என்றே வேதங்களும் பிரார்த்திக்கின்றன. தன்னை வழிபடுபவர்களின் துன்பங்களையெல்லாம் நீக்கி வாழ்வில் சாந்தி நிலவ வழி செய்பவள் சாந்தி துர்க்கா என்று அழைக்கப்படுகிறாள்.

சபரி துர்க்கா: ஒரு சமயம் சிவபெருமான் வேடுவன் உருவத்தைத் தாங்கியபோது பார்வதிதேவி வேடுவப் பெண்ணாக வடிவம் கொண்டு அவருடன் வந்தாள். வேடுவச்சி உருவம் எடுத்த துர்க்கா தேவியே சபரி துர்க்கா என்று சொல்லப்படுகிறாள்.

ஜ்வாலா துர்க்கா: அன்னை ஆதிபராசக்தி பண்டாசுரன் என்ற அசுரனுடன் கடும்போர் புரிந்தபோது எதிரிகள் பார்வதி தேவிக்கு அருகில் வராமல் தடுப்பதற்காக துர்க்கை அக்னி ஜூவாலையுடன் கூடிய மிகப் பெரியதொரு நெருப்பு வட்டத்தை அமைத்தாள். இந்தச் செயலைச் செய்த துர்க்கா தேவி ஜ்வாலா துர்க்கா எனப்படுகிறாள்.

லவண துர்க்கா: ராமாயண காலத்தில் லவணாசுரன் என்றொரு அசுரன் இருந்தான். அந்த அசுரனை அழிக்கப் புறப்பட்ட லட்சுமணன், தனக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு வழிபட்ட துர்க்கையே லவண துர்க்கையாவாள். லவணாசுரன் அழிவதற்குக் காரணமாக இருந்ததால் இவள் லவண துர்க்கா எனப்பட்டாள்.

தீப துர்க்கா: தீபமாகிய விளக்கு, புற இருளை அகற்றி ஒளி வழங்குகிறது. பக்தர்களின் மனத்தில் இருக்கும் அஞ்ஞானம் என்னும் அக இருளை நீக்கி மெய்ஞானமான ஒளியை வழங்கும் தீப லட்சுமியே தீபதுர்க்கா என்று போற்றப்படுகிறாள்.

ஆசுரி துர்க்கா: பக்தர்களிடமுள்ள காமம் முதலான குணங்களை அழித்து மோட்சத்துக்கு அழைத்துச் செல்பவள் ஆசுரி துர்க்கா.

பைரவரை வழிபடுவது ஏன்?

தீயோர்களுக்கு பயத்தை ஏற்படுத்தவும், அத்தீயோரால் பயம் கண்டோரின் பயத்தைப் போக்கவும் வெளிப்பட்டது பைரவர் அவதாரம். சிவபெருமானின் தத்புருஷ முகத்திலிருந்து தோன்றியவரும், சிவகணங்களுக்கு தலைவருமானவர் பைரவர். பிரம்மனின் அகந்தையை அழிக்க சிவபெருமானின் ஆணைப்படி ருத்திர், உருக்கொண்டு பிரம்மனின் ஐந்தாவது தலையை துண்டித்தவர். அறுபத்து நான்கு திருவடிவங்களாகக் கூறப்பட்டுள்ள பைரவரின் தலை மீது தீ ஜுவாலை, திருவடிகளில் சிலம்பு, மார்பில் கபால மாலை துலங்குவதைக் காணலாம். இவர் முக்கண் கொண்டவர். திரிசூலம், கபாலம், நாகபாசம், உடுக்கை, டமருகம் போன்றவற்றை கரங்களில் ஏந்தி நாகத்தையே பூணூலாகத் தரித்தவர். ஆடை அணியா அழகராகக் காட்சி தருபவர். சிவன்கோயில்களில் வடகிழக்கு மூலையில் அருள்பாலிப்பவர்.

காலையில் வழிபாடு துவங்கும் முன்னரும், இரவில் அர்த்தஜாம வழிபாடு நிறைவு பெற்ற பின்னரும் பூட்டிய திருச்சன்னிதிகளின் அனைத்து சாவிகளையும் பைரவரின் திருவடிகளில் சமர்ப்பித்த பின்னரே கோயிலைச் சாத்துவது மரபு. கோயிலில் காவலராக இருந்து எந்த இடையூறோ, இழப்போ ஏற்படாமல் பாதுகாப்பதால் இவரை க்ஷேத்ரபாலகர் என்று பக்தர்கள் வணங்குகின்றனர்.

பைரவரை செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து, தேன், அவல் பாயசம், தயிர்சாதம், செவ்வாழை ஆகியவற்றை நைவேத்தியம் செய்து வழிபட, மனதில் ஏற்படும் பயம், கடன் தொல்லை நீங்கும், திருமணம், வீடு கட்டுதல், வேலை வாய்ப்பு, வியாபார முன்னேற்றமும் ஏற்படும். எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். பைரவருக்கு உகந்தது வெள்ளை வஸ்திரம். தயிர் அன்னம், தேங்காய் போன்ற வெண்ணிற உணவுகள். எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுபட பைரவர் வழிபாடு சிறந்தது.