Saturday, July 12, 2014

விதியை வெல்லும் சூட்சுமங்கள்

கருவமைப்பின் வழிவந்த வினைபதிவு சஞ்சிதமாம் 
உருவெடுத்த பின்கொண்ட வினைபதிவு பிராப்தம் 
இருவினையும் கூடி எழும் புகுவினையே ஆகாமியம் 
ஒருவினையும் வீண்போக உள்ளடங்கி பின்விளைவாம்" 
                                                                                           - யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி               மேற்கண்ட பாடலின் படி மனிதன் தன் வாழ்நாளில் மூன்று வகையான கர்ம வினைகளை பெற்று அனுபவிக்கிறான். அவை சஞ்சித கர்மம், பிராப்த கர்மம், ஆகாமிய கர்மம். இதில் சஞ்சித கர்மம் என்பது நம் கரு உருவாகும் போதே உடன் உருவாவது, அதாவது முன்ஜென்மங்களில் நாம் செய்த பாவ புண்ணியத்தின் வித்தாக இந்த பிறவியில் நம்மை பற்றிக்கொள்ளும் கர்ம வினையாகும். பிராப்த கர்மாஎன்பது  நாம் இந்த பிறவியில் உடலெடுத்து வாழும் காலத்தில் நம் ஜீவனத்துக்காக நாம் செய்யும் தொழிலின் வாயிலாகா நாம் பிறருக்கு செய்யும் நன்மை தீமைகளால் உண்டாகும் கர்ம வினை, இந்த கர்மாவால் வரும் பலனையும் நாம் இந்த பிறவிலேயே அனுபவிக்கவேண்டும், மூன்றாவதாக ஆகாமிய கர்மா என்பது இந்த பிறவியில் நாம் வாழும் காலத்தில் நம் ஆசைகளால் பிறருக்கு செய்யும் நன்மை தீமைகளால் வருவது, இவ்விதமாக மூன்று வகையான கர்மாக்கள் நம்மை சூழ்ந்துள்ளன.

                  இந்த கர்மவினைகளில் இருந்து யாரும் தப்பிவிட இயலாது, அனைவரும் கர்மவினையில் சிக்கி உழன்றாக வேண்டியதுதான், நாம் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், குழப்பங்கள், எதிர்ப்புகள், நஷ்டங்கள், விரயங்கள், கடன்கள், பிரிவினைகள், முடக்கங்கள், விபத்துகள், நோய்கள், துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் நான் மேலே குறிப்பிட்ட கர்ம வினைகளின் சாராம்சம் ஆகும். இந்த கர்ம வினைகளை களைய நம்மில் பலர் பல ஆலயங்களுக்கு சென்றும், பலவிதமான பரிகாரங்களை மேற்கொண்டும் கைப்பணம் செலவானதுதான் மிச்சம், நம் கர்ம வினைப் பலன்கள் மட்டும் மாறிய பாடில்லை, நம் வேதனை தீர்ந்த பாடில்லை. அப்படியென்றால் நம் கர்ம வினைகளை தீர்க்க வழியே இல்லையா ?

                                   ஏன் இல்லை. கர்ம வினைகளை நீக்க பரிகாரங்கள் உள்ளது, ஆனால் அதனை நமக்கு சரியாக விளக்கி சொல்ல ஆட்கள்தான் இல்லை. இங்கே என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய, நமது புராணங்களும், சாஸ்திரங்களும் பறைசாற்றுகின்ற கர்ம வினைகளை நீக்கும் உபாயங்களை விவரிக்கிறேன்.

பிரம்மா எல்லா படைப்பு இயக்கங்களையும் செய்பவர். அவரின் படைப்புக்கு தேவையான ஞானத்தினை தருகிற சரஸ்வதி அவரின் மனைவி.

விஷ்ணு காக்கும் கடவுள், எல்லா உயிர்களையும் இரட்சித்து காப்பவர். இவர் உலகினை காக்க செல்வம் வேண்டுமல்லவா? அதை அவருக்கு நல்க செல்வத்திற்கு அதிபதியான மஹா லக்ஷ்மி அவரின் மனைவி.

சிவம் அழிக்கும் கடவுள். மனிதனின் அஞ்ஞான இருளை, கர்மவினைகளை, தீமைகளை அளித்து நன்மை தருபவர். இவருக்கு தீமைகளை அழிக்கின்ற சக்தியினை தருவதற்கு சக்தி தேவியே இவருக்கு துணைவியாக.

                    அப்படியென்றால் நம் கர்ம வினைகள் நீங்க நாம் யாரை பற்ற வேண்டும்? நம் கர்ம வினைகளை யாரால் தீர்க்க முடியும்? தேவாதி தேவர்களும், முனிவர்களும், சித்தர்களும் தேடிச்சென்று சரண் புகுந்தது யாரிடம்? அறியா பருவ குழந்தைகூட சொல்லிவிடும் அத்தகைய ஆற்றல் கொண்டவர் சிவபெருமான் ஒருவரே என்று. நாமும் நம் கர்ம வினைகள் நீங்க அவரையே பற்ற வேண்டும். சரி அவரை பற்றிவிட்டோம். நம் கர்ம வினைகள் நீங்க நாம் என்ன செய்ய வேண்டும்.

                 மனித உடல் இறைவனால் பஞ்சபூதத்தினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. நிலம், நீர், நெருப்பு, கற்று, ஆகாயம் என்பவைபஞ்ச பூதங்களாகும். சிவனே பஞ்சபூத பெருமையை சிறப்பிக்கும் விதமாக பஞ்சபூத தலங்களில் நாயகனாக நின்று அருள்பாலிக்கிறார். அவையாவன 1. காஞ்சிபுரம் - நிலம் - ஏகம்பநாதர், 2. திருவனைகாவல் - நீர் - ஜலகண்டீஸ்வரர், 3. திருவண்ணாமலை - நெருப்பு - அண்ணாமலைநாதர், 4. காளஹஸ்தி - வாயு - காளத்திநாதர், 5. சிதம்பரம் - ஆகாயம் - நடராஜர்.அகவே பஞ்சபூத ஆற்றலில் உண்டாக்கப்பட்டு இயங்கும் மனிதன், தாம் வாழும் காலத்தில் பஞ்ச இந்திரியங்களால் (ஐந்து புலன்களால் - மெய், வாய், கண், காது, மூக்கு)  ஆகியவற்றின் மூலியமாக தூண்டப்பட்டு தன் புலன்களால் இச்சைக்கு அடிமையாகி செய்யும் செயல்களால் பிறருக்கு தீங்கு நேரும் பொது பாவங்கள் - கர்மவினைகள் உண்டாகிறது. எவ்வகையில் பாவம் செய்தோமோ அவ்வகையில் தானே அதனை தீர்க்க முடியும். பஞ்ச பூதங்களால் - பஞ்ச இந்திரியங்களால் தோன்றிய பாவத்தை - பஞ்ச லிங்கங்கள் அல்லவா தீர்க்க முடியும். மேலும் ஒரு முக்கிய விஷயத்தை அலசுவோம்.

                  இறைவனுக்கு ஐந்து விதமான சேவைகள் மூலம் நம் பாவங்களை நாம் போக்கிக்கொள்ள முடியும். அவையாவன 

1.யாதனம் - கோயில் கட்டுதல், நந்தவனம் அமைத்தல், கோயில் திருப்பணிகள் செய்தல்.

2.சிரவணம் - இறைவனின் பெருமைகளை ஆன்மீகம் அறிந்தவர்களின் மூலமாக கேட்டல்.

3. கீர்த்தனம் - இறைவனை இசை கருவிகள் கொண்டு பாடி ஆடி மகிழ்வித்தல்.

4. பூஜார்தனம் - அபிஷேகம் செய்தல், அலங்காரம் செய்தல், அர்ச்சனை செய்தல், நைவேத்தியம் படைத்து பூஜை செய்தல்.

5. ஸ்துதி - இறைவனை புகழ்ந்து தோத்திர இசைப் பாடல்களை பாடுதல்.

                          இந்த ஐந்த விதமான சேவைகளை நாம் செய்து வர நம் கர்ம வினைகளால் நாம் அனுபவிக்கும் துன்பங்கள் மாறி இன்பங்கள் நல்கும். நமது சர்வ சக்தி விருட்ச பீடம் பஞ்சலிங்க பாதாள லிங்க பிரதிஷ்ட்டை செய்து ஆலயம் கட்ட முயன்று வருகிறது. பஞ்ச லிங்கத்தை பிரதிஷ்ட்டை செய்தால் நம் வாழ்வில் பஞ்சம் பறந்தோடும், நம் கர்ம வினைகள் பறந்தோடும். இந்த அறிய திருப்பணியில் நீங்களும் நன்கொடைகள் கொடுத்து உதவி உங்களின் கர்ம வினைகளை களைய அழைக்கிறோம்

காளி மூல மந்திரம்

ஓம் க்ரீம்

சித்தி பலன்-  அமோக தைரியம், வாக் வன்மை, முன் கூட்டியறியும் தன்மை , நிகரற்ற செல்வம் , நோயற்ற நீண்ட வாழ்வு, ஞானம் பெறுதல்.

காளியின் முக்கிய தலங்கள் :
1. திருவெண்காடு - சுவேத காளி.
2. அம்பகரத்தூர். (காரைக்கால் அருகில்).
3. திருவக்கரை வக்கிர காளி, பாண்டிச்சேரி அருகில்.
4. திருவாச்சூர் மதுர காளி.
5. வெக்காளி அம்மன் திருச்சி உறையூர்.
6. மடப்புரம் காளி திருபுவனம்.
7. கல்கத்தா காளி, சென்னை மேற்கு மாம்பலம்.
8. ஸ்ரீ காளிகாம்பாள், சென்னை.
9. வெட்டுடையார் காளியம்மன் கொல்லங்குடி.


மூல மந்திரம் :

     ஓம் க்ரீம் க்ரீம் க்ரீம் ஹும் ஹும் ஹ்ரீம் ஹ்ரீம்
     தக்ஷிணே காளிகே
க்ரீம் க்ரீம் க்ரீம் ஹும் ஹும் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா


   காயத்ரீ மந்திரம் :

 ஓம் மஹாகாள்யை வித்மஹே 
ச்மசான வாஸின்யை தீமஹி
தந்நோ கோர ப்ரசோதயாத்

மாங்கல்யச் சரடு தானம் செய்வதால் உண்டாகும் நன்மை என்ன?

இதை தானம் என்று சொல்லக்கூடாது. சுமங்கலிப் பெண்கள் வீட்டுக்கு வந்தால், வழியனுப்பும்போது வைத்துக் கொடுக்கும் பொருள் தான் இது. தீர்க்க சுமங்கலி பாக்கியம் பெறவும், லட்சுமி  கடாட்சம் கிடைக்கவும் இதைச் செய்வது வழக்கில் உள்ளது.

போராடாமல் எதையும் சாதிக்க முடியாது!

உங்கள் முன் இருக்கும் லட்சியத்தை ஒருபோதும் மறந்து விடாதீர்கள். சுகபோகத்தை மறந்து கொழுந்து விட்டெரியும் நெருப்பாக மாறி செயல்படத் தொடங்குங்கள்.  அடுத்தவர்களின் குறைகளை மாற்றக்கூடிய சக்தி உங்களுக்கு இருந்தாலன்றி, யாரையும் குறை சொல்ல முற்படாதீர்கள். வாழ்வில் எதிர்ப்படும் அனைத்தும் நம் முன்னேற்றத்திற்காக என்றே எண்ணிச் செயல்படுங்கள். அப்போது தான் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும்.  எந்த செயலையும் உங்கள் சொந்த மகிழ்ச்சிக்காக செய்வது கூடாது. அதில் பொதுநலம் இருப்பது மிகவும் அவசியம். நீங்கள் உண்ணும் உணவு மகத்தான செயல்களைச் செய்வதற்குத் தேவையான சக்தியை உங்களுக்கு அளிப்பதாக இருக்கட்டும். பேச்சை எப்போதும் உங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அவசியமானதை மட்டுமே பேசுங்கள். தளராத முயற்சி உங்களுக்குள் புதிய கதவைத் திறக்கட்டும். அப்போது ஒரு திவ்விய ஒளி உங்கள் மீது குவியும்.உங்கள் வாழ்விற்கு நீங்களே எஜமானர் என்பதை உணருங்கள். நல்லவர்களின் லட்சியம் வெற்றி பெறுவது உறுதி. பெருமித உணர்வோடு வாழ்க்கைப் பாதையில் வெற்றி நடைபோடுங்கள். கடவுளை உணரும் உணர்வு அழகின் மலர்ச்சியால் வெளிப்பட வேண்டும். இல்லாவிட்டால் அது முழுமையற்றது தான்.  எப்போதும் அன்பு கொண்டவராக இருங்கள். எதிர் மறையான விமர்சனங்களை விட்டு விடுங்கள்.  அன்பில்லாத மனிதன் சிடுமூஞ்சியாகவும், இரக்கம் இல்லாதவனாகவும் ஆகி விடுவான். அவனுக்கு எல்லாவற்றின் மீதும் வெறுப்புணர்வு உண்டாகி விடும். அச்சம் நோயை விட பயங்கரமானது. ஆபத்தானதும் கூட. அதுவே, உங்களிடம் இருந்து களையப்பட வேண்டிய முதல் குறைபாடு. உங்களிடமுள்ள முழு வலிமையையும் பயன்படுத்தி நேர்மையுடன் செயல்பட்டால், அச்சத்தின் நிழல் கூட இல்லாமல் செய்ய முடியும். புதிய உலகம் படைப்பதற்காகவே மனிதராகப் பிறந்திருக்கிறோம். நாம் இங்கு இருப்பதே மதிப்பிட முடியாத பெரிய வாய்ப்பு. துணிவுடன் செயலாற்றுங்கள். நம்பிக்கை மனதில் மேலோங்கட்டும். வாழ்க்கைப்பாதையின் முடிவில் பேரொளியைக் காணத் தயாராக இருங்கள். முன்னேறுவதற்காகவே பூமியில் பிறந்திருக்கிறோம். ஒவ்வொரு நிமிடமும் முன்னேறாவிட்டால் நம் வாழ்க்கையே சுவாரஸ்யமற்றதாகி விடும். வழியில் துன்பங்களும், தடங்கல்களும் குறுக்கிடலாம். அதற்காக நேர்மையை கைவிடுவது கூடாது. முயற்சியும், போராட்டமும் இல்லாமல் எதையும் வாழ்வில் சாதிக்க முடியாது. மாசற்ற மனம், நோயற்ற உடல் இரண்டும் இருந்து விட்டால் போதும். எதையும் எதிர் கொள்ளும் ஆற்றலையும், சாதிக்கும் உந்துதலையும் பெற்று விட முடியும். கடந்த காலம் எப்படிப்பட்டதாயும் இருந்து விட்டுப் போகட்டும். நீங்கள் தவறு கூட செய்திருக்கலாம். ஆனால், உள்ளத்தின் அடி ஆழத்தில் துõய்மை மிக்கவராகவே எப்போதும் இருக்கிறீர்கள் என்பதை மறக்க வேண்டாம். எந்த நிலையிலும் உதவிக்காக கடவுளை வேண்டிஅழைக்க கற்றுக் கொள்ளுங்கள். அற்புதங்களை நிகழ்த்த கடவுளால் மட்டுமே முடியும்.