Sunday, January 23, 2011

பூஜைக்குரிய காலங்களும் பூக்களும்!

temple
கொன்றை, செவ்வந்தி, செண்பகம் முதலிய மஞ்சள் நிற பூக்கள் விடியற்காலை பூஜைக்குரியவை. செந்தாமரை, செவ்வரளி, பாதிரி முதலிய சிவப்பு நிற பூக்கள் பகல் பூஜைக்குரியவை. மல்லிகை, முல்லை, தும்பை முதலிய வெள்ளை நிற பூக்கள் மாலை நேர பூஜைக்குரியவை. நீலோற்பவம் எனப்படும் பூ தற்போது உபயோகத்தில் இல்லை. இதை தவிர வேறு எந்த நீல நிற பூவும் பூஜைக்கு தகுதியற்றது. பொதுவாக மஞ்சள், சிவப்பு, வெள்ளை நிற பூக்கள் தான் பூஜைக்க உகந்ததாக கருதப்படுகிறது.

Tuesday, January 18, 2011

ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்லோகம்

 ஸ்ரீ ஆஞ்சநேயர் துதி மற்றும் ஸ்தோத்திரங்களைக் கீழே கொடுத்துள்ளேன். பாராயணம் செய்து பலன் பெறவும். (மற்ற விரதங்கள் விவரங்கள் பின்னால் வரும்)

 

ஜெய் ஹனுமான்

ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்லோகம் மற்றும் மந்த்ரம்


1) ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வாபத் கன மாருதம் |
அபார கருணாமூர்த்திம் ஆஞ்ஜநேயம் நமாம்யஹம் |
2) அஞ்ஜநா நந்தனம் வீரம் ஜானகீ சோ’கநாசனம் |

கபீச’மக்ஷ ஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம் ||
3) ஆஞ்சநேயமதி பாடலாநநம் காஞ்சநாத்ரி கமநீய விக்ரஹம் |
 பாரிஜாத தருமூலவாஸிநம் பாவயாமி பவமான நந்தனம் ||

4) யத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்ஜலிம் |
பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம்
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம் ||

5) மனோஜவம் மாருத துல்ய வேகம்
ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் |
வாதாத்மஜம் வானரயூத முக்யம்
ஸ்ரீ ராமதூதம் சி’ரஸா நமாமி ||


ப்ரார்த்தனா மந்த்ரம்

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வம் அரோகதா |
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத் ||கார்ய சித்தி மந்த்ரம்
அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் தவ கிம்வத |
ராம தூத க்ருபாஸிந்தோ மத் கார்யம் ஸாதயப்ரபோ ||
நமஸ்கார மந்த்ரம்


ராமதூத மஹாதீர ருத்ரவீர்ய ஸமுத்பவ |
அஞ்ஜநாகர்ப்ப ஸம்பூத வாயுபுத்ர நமோஸ்து தே ||


ஸ்ரீ ஆஞ்சநேய மூல மந்த்ரம்


ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹனுமதே ராம தூதாய
லங்கா வித்வம்ஸனாய
அஞ்சனா கர்ப்ப ஸம்பூதாய
சாஹினி டாஹினி வித்வம்ஸனாய
கில கில பூ காரினே விபீஷணாய
ஹனுமத் தேவாய
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹூம் பட் ஸ்வாஹா!!ஆஞ்சநேய பல ச்ருதி மந்த்ரம்


ஓம் நமோ பகவதே ஆஞ்சனேயாய மஹா பலாய ஸ்ரீ ஹனுமதே ஸ்வாஹாஆஞ்சநேயர் காயத்ரி

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ : ஹநுமத் ப்ரசோதயாத்!!


ஓம் தத் புருஷாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ மாருதி ப்ரசோதயாத்ஸ்ரீ ஆஞ்சநேயர் துதி


அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.
—————
ஸ்ரீ ஹனுமத் கவசம்


அஸ்ய ஸ்ரீ ஹனுமத்கவச ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய |
ஸ்ரீராமசந்த்ரருஷி: |

காயத்ரீச்சந்த: |

ஸ்ரீ ஹனுமான் பரமாத்மா தேவதா |

மாருதாத்மஜ இதி பீஜம் |

அஞ்ஜனாஸூனுரிதி ச’க்தி: |

ஸ்ரீராமதூத இதி கீலகம் |

மம மானஸாபீஷ்ட ஸித்யர்த்தே ஜபே வினியோக: ||

ஸ்ரீ ராமசந்த்ர உவாச :-

ஹனுமான் பூர்வத: பாது தக்ஷிணே பவனாத்மஜ: |

ப்ரதீச்யாம் பாது ரக்ஷோக்ன: ஸௌம்யாம் ஸாகரதாரண: ||

ஊர்த்வம் மே கேஸரீ பாது விஷ்ணு பக்தஸ்துமேஹ்யத: |

லங்காவிதாஹக: பாது ஸர்வாபத்ப்யோ நிரந்தரம் ||

ஸுக்ரீவ ஸ சிவ: பாது மஸ்தகே வாயுநந்தன: |

பாலம் பாது மஹாவீர: ப்ருவோர்மத்யே நிரந்தரம் ||

நேத்ரே சாயாபஹாரீ ச பாது மாம் ப்லவகேச்’வர: |

கபோலௌ கர்ணமூலே து பாது மே ராமகிங்கர: ||

நாஸாயாமஞ்ஜனாஸூனு: பாது வக்த்ரம் ஹரீச்’வர: |

பாது கண்டம் ச தைத்யாரி: ஸ்கந்தௌ பாது ஸுரார்சித: ||

புஜௌ பாது மஹா தேஜா: கரௌ து சரணாயுத: |

நகான் நகாயுத: பாது குக்ஷௌ பாது கபீச்’வர: ||

வக்ஷௌ முத்ராபஹாரீச பாது பார்ச்’வே மஹாபுஜ:|

ஸீதா சோ’கப்ரஹர்தாச ஸ்தனௌ பாது நிரந்தரம் ||

லங்காபயங்கர: பாது ப்ருஷ்டதேசே’ நிரந்தரம் |

நாபிம் ஸ்ரீராமசந்தரோ மே கடிம் பாது ஸமீரஜ: ||

குஹ்யம் பாது மஹாப்ராக்ஞ: ஸக்தினீ ச சி’வப்ரிய: |

ஊரூ ச ஜானுனீ பாது லங்கா ப்ராஸாத பஞ்சன: ||

ஜங்கே பாது கபிச்’ரேஷ்ட: குல்பம் பாது மஹாபல: |

அசலோத்தாரக: பாது பாதௌ பாஸ்கர ஸன்னிப: ||

அங்கான்யமிதஸத்வாட்ய: பாது பாதாங்குளீஸ்ஸதா |

ஸர்வாங்காநி மஹா சூ’ர: பாது ரோமாணி சாத்மவான் ||

ஹனுமத் கவசம் யஸ்து படேத் வித்வான் விசக்ஷண: |

ஸ ஏவ புருஷச்’ரேஷ்ட: புக்திம் முக்திஞ்ச விந்ததி ||

த்ரிகாலம் ஏககாலம் வா படேன் மாஸத்ரயம் நர: |

ஸர்வான் ரிபூன் க்ஷணாஜ்ஜித்வா ஸ புமான் ச்’ரியம் ஆப்னுயாத் ||

அர்தராத்ரௌ ஜலேஸ்தித்வா ஸப்த வாரம் படேத்யதி |

க்ஷயாபஸ்மார குஷ்டாதி தாபத்ரய நிவாரணம் ||

அச்’வத்தமூலே அர்கவாரே ஸ்தித்வா படதி ய:புமான் |

அசலாம் ச்’ரியமாப்னோதி ஸங்க்ராமே விஜயீபவேத் ||

ஸர்வரோகா: க்ஷயம் யாந்தி ஸர்வஸித்திப்ரதாயகம் |

ய: கரே தாரயேந்நித்யம் ராமரக்ஷா ஸமன்விதம் ||

ராமரக்ஷம் படேத்யஸ்து ஹனூமத் கவசம் வினா |

அரண்யே ருதிதம் தேன ஸ்தோத்ரபாடஞ்ச நிஷ்பலம் ||

ஸர்வ து:க பயம் நாஸ்தி ஸர்வத்ர விஜயீ பவேத் |

அஹோராத்ரம் படேத்யஸ்து சு’சி: ப்ரயதமானஸ: ||

முச்யதே நாத்ரஸந்தேஹ: காராக்ருஹகதோ நர: |

பாபோபபாதகான் மர்த்ய: முச்யதே நாத்ரஸம்ச’ய: ||

அக்ஷக்னோ ஜிதராக்ஷஸேச்’வர மஹாதர்பாபஹாரீரணே

ஸோயம் வானரபுங்கவோ அவது ஸதா த்வஸ்மான் ஸமீராத்மஜ: ||

ஸ்ரீ ராம விரசித ஸ்ரீ ஆஞ்சநேய கவசம் ஸம்பூர்ணம்.
வைதேஹீ கன சோ’க தாபஹரணோ வைகுண்டபக்திப்ரிய: |

அக்ஷக்னோ ஜிதராக்ஷஸேச்’வர மஹாதர்பாபஹாரீரணே
ஸோயம் வானரபுங்கவோ அவது ஸதா த்வஸ்மான் ஸமீராத்மஜ: ||

ஸ்ரீ ராம விரசித ஸ்ரீ ஆஞ்சநேய கவசம் ஸம்பூர்ணம்.

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் வாழ்வில்…

பாம்பன் சுவாமிகள் முருக பக்தர். அவர் தம் கனவில் ஆவியுலக வாசிகளையும், சொர்க்கம் மற்றும் நரக மக்களையும் கண்டதாக தமது சுயசரித நூலில் குறிப்பிட்டுள்ளார்.


ஒருநாள் நடுநிசியில் சுவாமிகள் ஒரு கனவு கண்டார். அக்கனவில் அவர் ஒரு காட்டுப் பாதை வழியே நடந்து கொண்டிருந்தார். சுற்றிலும் கற்றாழை, கள்ளிச் செடிகள். வறண்ட மணற்பாங்கான அந்தப் பாதையின் ஓரத்திலே கரிய நிறமுடைய சிலர் கூச்சலிட்டுக் கொண்டு நின்று கொண்டிருந்தனர். சுவாமிகளைப் பார்த்ததும், கீழே இருந்த கல்லையும், மணற் துகளையும் அள்ளி வீசி எறிந்தனர். இதைக் கண்டு திகைத்துப் போய் அவர் நின்று கொண்டிருந்த பொழுது, ஒளியுடைய தேகமுடைய மூவர் சுவாமிகள் அருகே வந்தனர். தங்களுடன் வருமாறு கூறி உடன் அழைத்துச் சென்றனர். அந்தப் பாதை நீண்டு கொண்டே சென்றது. இறுதியில் பல வண்ண நிறமுடைய மலர்களும், செடி, கொடிகளும் இருந்த பகுதிக்கு சுவாமிகள் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே இனிய நறுமணம் கமழ்ந்து கொண்டிருந்தது. மக்களும் ஒருவர் மீது ஒருவர் அன்புடையவராய் காணப்பட்டனர். அது சொர்க்கம், நரகம் பற்றிய கனவு என்றும்,  அதை உணர்த்துவதற்காகவே அக்கனவு வந்தது என்றும் சுவாமிகள் 
பின்னர் உணர்ந்து கொண்டார்.


பாம்பன் சுவாமிகள்


ஒரு நாள்… கடற்கரை மணல் வெளியில் காலாற நடந்து கொண்டிருந்தார் சுவாமிகள். அப்பொழுது அங்கே வந்தார் ஒரு ஆங்கில மருத்துவர். வந்தவர், சுவாமிகளிடம், “ஆன்மா என்ற ஒன்று கிடையவே கிடையாது. மனிதனின் உடலில் உள்ள உதிரமே அறிவுடைய ஆன்மா. முன்னோர்கள் எல்லோரும் மூடர்கள். இது பற்றி எதுவும் அறியாது எல்லாம் தவறாக எழுதி வைத்து விட்டனர்” என்று வாதித்தார்.


அதைக் கேட்டு மிகவும் மன வருத்தம் உற்ற பாம்பன் சுவாமிகள், ” உதிரம் எப்படி அறிவுடைய ஆன்மாவாக முடியும்? அப்பொழுது அதிக உதிரம் உடையவன் அதிக அறிவுடையவன் என்றல்லவா பொருள்படும்! அது சரியாகுமா? உதிரத்திற்கும் ஆன்மாவிற்கும் எந்த சம்பந்தமுமில்லை. உதிரத்தை, பிராணவாயுவும், பிராண வாயுவை ஆன்ம உணர்வும் பற்றி நிற்கின்றன. ஆன்மா என்பது மிக நுண்ணிய நுணுக்க உணர்வை உடையது.” என்று ஆன்ம தத்துவத்தை அந்த மருத்துவருக்கு விரிவாக விளக்கினார்.
அது போன்றதொரு விளக்கத்தை அதுவரை கேட்காத அந்த மருத்துவர், உண்மையை உணர்ந்து கொண்டு, சுவாமிகளை வணங்கி விடை பெற்றார்.

Monday, January 17, 2011

temple வாழ்வில் வளம் பெற வாயு மைந்தன் வழிபாடு


இரண்டெழுத்தில் நம் மூச்சிருக்கும் :

ராமபக்தியில் சிறந்தவர்களை எண்ணிக்கையில் அடக்கமுடியாது. கோடிக்கணக்கான ஜீவன்கள் ராமநாமத்தை ஜெபித்து மோட்ச கதியைப் பெற்றிருக்கின்றனர். மிகவும் புனிதமானது "ராம என்னும் இரண்டெழுத்து நாமம். "ராம என்று சொன்னவருக்கு பாவம் விலகி புண்ணியம் வந்து சேரும். பக்த ரத்தினமான அனுமன் எங்கெல்லாம் ராமநாமம் சொல்லப்படுகிறதோ, எங்கெல்லாம் ராமனின்வரலாறு பேசப்படுகிறதோ அங்கெல்லாம் ஆனந்தக் கண்ணீருடன் மெய்சிலிர்த்தபடி கேட்டுக் கொண்டிருப்பார் என்பது ஐதீகம். அதனால், ராமாயணத்தைப் பாராயணம் செய்பவர்கள் அனுமனுக்கு தனியாக ஒரு மணையை (பலகை) போடுவர். கண்ணுக்கு புலனாகாமல் சூட்சும உடலுடன் அனுமன் அந்த மணையில் அமர்ந்து ராமநாமத்தைக் கேட்பார். வேதாந்த தேசிகன் என்பவர், சங்கல்பசூரியோதயம் என்னும் நூலில்,""அனுமனிடம் நம்மை ஒப்படைத்து விட்டால் பரம்பொருளான ராமசந்திர மூர்த்தியிடம் நிச்சயம் சேர்த்துவிடுவான் என்று நம்பிக்கையூட்டுகிறார்.ராமாவதாரம் முடிந்து அனைவரையும் வைகுண்டத்திற்கு அனுப்பி தானும் கிளம்பினார் ராமர். ஆனால், ராமநாமம் ஒலிக்காத வைகுண்டத்திற்குச் செல்ல விரும்பாமல் பூலோகத்திலேயே இருந்து ராமநாமத்தை ஜெபிப்பது என்று தீர்மானித்தார் அனுமன். ராமபிரானும், ""ராமாயணமும், ராமநாமமும் இவ்வுலகில் இருக்கும்வரை என்றென்றும் நீ சிரஞ்சீவியாக இருப்பாயாக! என்று வாழ்த்தி வைகுண்டம் கிளம்பினார்.


செல்வம் பெருக்கும் ஸ்லோகம்:

சுந்தர காண்டத்தில் அனுமன் கடலைத்
தாண்டுவதற்கு முன் சொன்ன ஸ்லோகத்திற்கு ஜெய பஞ்சகம் என்று பெயர். இதைச் சொல்லி அனுமனை வழிபட்டால், வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
""ஜயத்யதிபலோ ராமோ லக்ஷ்மணஸ்ச மஹாபல:
ராஜாதி ஜயதி சுக்ரீவோ ராகவேன அபி பாலித:
தாஸோஹம் கோஸலேந்த்ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்ட கர்மன:
ஹனுமான் சத்ரு வைத்யாநாம் நிஹந்த்ர மாருதாத்மஜ:
ராவண ஸஹஸ்ரம்மே யுத்தே ப்ரதி பலம் பவேத்
ஸலாபிஸ்து ப்ரஹரத; பாத வைச்ச ஸஹஸ்ரஸ:


வெற்றி தரும் ஸ்லோகம்:

அனுமன் சீதாதேவியை கண்டுபிடிக்க அசோகவனத்திற்கு செல்வதற்கு முன் சொன்ன ஸ்லோகத்தைக் கூறி, எந்தச் செயலைத் தொடங்கினாலும் அதில் வெற்றி உண்டாகும்.
""நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய
தேவ்யை ச தஸ்யை ஜன காத்மஜாயை!
நமோஸ்து ருத்ரேந்திர யமாலி னேப்யோ
நமோஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்யப்!!


ஐந்தே நிமிடத்தில் சுந்தரகாண்டம் படியுங்க:
 சுந்தரகாண்டத்தைப் பாராயணம் செய்பவர்களுக்கு சகல சவுபாக்கியங்களும் உண்டாகும். நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் அகலும். எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். வாழ்வில் நம்பிக்கை ஏற்படும். நோய்கள் விலகும். ராமச்சந்திர மூர்த்தியையும், ராமபக்தனான அனுமனையும் மனதில் தியானித்து, இந்த எளிய சுந்தரகாண்டத்தைப் படிப்போருக்கு வாழ்வில் எல்லா நன்மைகளும் வந்துசேரும்.
சுந்தர காண்டம் என்று பெயர் சொல்லுவார்
இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார்
கண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்ன
கருணைமிகு ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பெருமையிது.
அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே
ஆயத்தமாகி நின்றான், அனைத்து வானரங்களும்
அங்கதனும், ஜாம்பவானும் அன்புடன்
விடை கொடுத்து வழியனுப்பினரே!
வானவர்கள் தானவர்கள் வருணாத் தேவர்கள்
வழியெல்லாம் சூழ நின்று பூமாரி பொழிந்தனரே!
மைநாக பர்வதம் மாருதியை உபசரிக்க
மகிழ்வுடன் மாருதியும் மைநாகனைத் திருப்தி செய்து
சுரசையை வெற்றி கண்டு ஹிம்சை வதம் செய்து
சாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சேர்ந்தான்.
இடக்காகப் பேசிய இலங்கையின் தேவதையை
இடக்கையால் தண்டித்து இலங்கையைக் கலக்கினான்.
அழகான இலங்கையில் அன்னை ஜானகியை அங்கும்
இங்கும் தேடியே அசோக வனத்தை அடைந்தான்.
கிம்சுபா மரத்தடியில் ஸ்ரீராமனைத் தியானம் செய்யும்
சீதா பிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினான்.
ராவணன் வெகுண்டிட, ராட்சசியர் அரண்டிட
வைதேகி கலங்கிட, வந்தான் துயர் துடைக்க
கணையாழியைக் கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி
சூடாமணியைப் பெற்றுக் கொண்ட சுந்தர ஆஞ்சநேயர்
அன்னையின் கண்ணீர் கொண்டு, அரக்கர் மேல் கோபம்
கொண்டு, அசோகவனம் அழித்து அனைவரையும் ஒழித்தான்.
பிரம்மாஸ்திரத்தால் பிணைத்திட்ட ஆஞ்சநேயர்
பட்டாபிராமன் பெயர் சொல்ல
வெகுண்ட இலங்கை வேந்தன் வையுங்கள் தீ
வாலுக்கென்றான். வைத்த நெருப்பினால் வெந்ததே
இலங்கை நகரம். அரக்கனின் அகந்தையை அழித்திட்ட
அனுமானும் அன்னை ஜானகியிடம்
அனுமதி பெற்றுக் கொண்டு
ஆகாய மார்க்கத்தில் தாவி வந்தான்.
அன்னையைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய் மறந்தான்.
ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ஸ்ரீராமனிடம் ஆஞ்சநேயர்
"கண்டேன் சீதையை என்றான்.
வைதேகி வாய்மொழியை அடையாளமாகக் கூறி
சொல்லின் செல்வன் ஆஞ்சநேயர் சூடாமணியைக்
கொடுத்தான், மனம் கனிந்து மாருதியை
மார்போடணைத்து ஸ்ரீராமர் மைதிலியை சீறை மீட்க சித்தமானார்.
ஆழ்கடலில் அற்புதமாய் அணை கட்டி படைகள் சூழ
அனுமானும், இலக்குவனும் உடன் புறப்பட்டனர்.
அழித்திட்டான் இராவணனை ஒழித்திட்டான்
அதர்மத்தை அயோத்தி சென்று ஸ்ரீராமர்
அகிலம் புகழ ஆட்சி செய்தான். அவனை சரண்
அடைந்தோருக்கு அவன் அருள் என்றும் உண்டு.
எங்கே எங்கே ரகுநாத கீர்த்தனமோ அங்கே அங்கே
சிரம் மேல் கரம் குவித்து மனம் உருகி நீர் சொரிந்து
ஆனந்தத்தில் மூழ்கி இருக்கும் ஆஞ்சநேயா!
உன்னைப் பணிகின்றோம், பன்முறை உன்னை
பணிகின்றோம், பன்முறை உன்னைப் பணிகின்றோம்.

Wednesday, January 12, 2011

சரஸ்வதி வழிபாடு- தமிழ்

சரஸ்வதி வழிபாடு- தமிழ்  
ஸ்ரீ சரஸ்வதி  பாடல்கள் (கல்வியில் நினைவாற்றல் பெருக)

வெள்ளை தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளையின்பம் குலவு கவிதை
கூறும் பாவலர் உள்ளத் திருப்பாள்
உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத் துட்பொரு ளாவாள்
மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்
கோதகன்ற தொழிலுடைத் தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்
இன்ப மேவடி வாகிடப்  பெற்றாள்.    - பாரதியார்ஸ்ரீ சரஸ்வதி கவசம் (கற்ற கல்வியினால் பலன் பெற)


சரஸ்வதி என் தலையைக் காக்க வாக்கின்
தலைவியாம் வாக்தேவி நுதலைக் காக்க
விரசு பகவதி கண்ணைக் காக்க நாசி
விமலைவாக் வாதினியாள் காக்க வித்தைக்(கு)
உரியதனித் தேவதைகள் என் உதடு காக்க
உயர்புகழ் பிராம்மிபல் வரிசை காக்க
மருவும் ஐம் என்றிடுமனு கண்டம் காக்க
வாழ் ஹ்ரீமாம் எழுதது என்றன் பிடரைக்காக்க
எழுத்தான சிரீம் என்தோள் காக்க வித்யா
திருஷ்டாத்மா என்மார்பில் இருந்து காக்க
வழுத்துவித்யா ரூபிணிஎன் நாபி காக்க
வாணிகரம் காக்க எல்லா எழுத்தின் தேவி
விழுத்தகஎன் அடிகாக்க வாக்கிற் சென்று
மேய அதிட்டான தேவதை தான் என்றன்
மழுத்தஉறுப் பெவற்றினையும் காக்க காக்க
முள் கிழக்கில் சர்வகண்ட நாசிகாக்க
அங்கியெனும் திசைக்கண்ணே நின்று பீஜாட்
சரிகாக்க மந்திரராஜத்தின் தேவி
பொங்கு தெற்கிலேயிருந்து காக்க காக்க
புகல்மூன்றக்கர வருவாள் நிருதி திக்கில்
தங்கியெனைப் புரந்தருள்க மேற்குத் திக்கில்
சாற்றுநா நுனியுறையும் அன்னை காக்க
துங்கமிகு சர்வாம்பிகை தான் வாயு
துன்னுதிசையினின் என்னைக் காக்க காக்க
கத்திய வாகினி வடக்கில் காக்க எல்லாக்
கலையினிலும் உறைவாள் ஈசானம் காக்க
நத்துசர்வ பூசிதையாள் ஊர்த்துவத்தில்
நயந்திருத்து காத்தருள்க அகோமுகத்தில்
புத்தகவா இனியாகும் தேவி காக்க
புகழ்கிரந்த பீஜத்தின் உருவாய் நின்றாள்
எத்திசைகளிலும் இருந்து காக்க காக்க
எளியேனைக் கலைமகள் தான் என்றும்.
ஸ்ரீ குங்கும மஹிமை (மங்களம் உண்டாக)
குங்கும மாவது குறைகளைத் தீர்ப்பது
குங்கும மாவது குடியினைக் காப்பது
குங்கும மாவது குணமது அளிப்பது
குங்கும மாவது கொல்வினைத் தீர்ப்பது
விதிதனை வெல்வது விமலையின் குங்குமம்
நிதிதனை ஈவது நிமலையின் குங்குமம்
பதிதனைக் காப்பது பதிவிரதை குங்குமம்
கதிதனை யாள்வதும் குங்கும மாமே
தஞ்சமென்றோரைத் தடுத்தாண்டு கொள்வதும்
பஞ்ச மாபாதகம்பரிந்துமே தீர்ப்பதும்
அஞ்ஜின பேருக் கபய மளிப்பதும்
காஞ்சி காமாக்ஷியின் குங்கும மாமே
நற்பத மீவது நாரணி குங்குமம்
பொற்பினை ஈவது பூரணி குங்குமம்
சிற்பரமாவது சிவகாமி குங்குமம்
கற்பினைக் காப்பதும் குங்கும மாமே
செஞ்சுடர் போல்வது சீரான குங்குமம்
கொஞ்சம் அழகைக் கொடுப்பது குங்குமம்
அஞ்சு புலன்களடக்கி யருள்வதும்
காஞ்சி காமாக்ஷியின் குங்குமமாமே
நோயினைத் தீர்ப்பதும் நுண்ணறி வீவதும்
பேயினைத் தீர்ப்பதும் பெரும் புகழீவதும்
சேயினைக் காப்பதும் செல்வம் தருவதும்
தாயினை அர்ச்சித்த குங்குமமாமே
சக்தி கொடுப்பதும் சத்தியம் காப்பதும்
பக்தி யளிப்பதும் பரகதி யீவதும்
முக்தி கொடுப்பதும் மும்மலம் தீர்ப்பதும்
சித்தி தருவதும் குங்குமமாமே
நெஞ்சிர் கவலைகள் நீக்கியருள்வதும்
செஞ்சொற் கவிபாடுஞ் சீரினை யீவதும்
வஞ்சப் பகைவரை வாட்டி யருள்வதும்
காஞ்சி காமாக்ஷியின் குங்குமமாமே
சிவசிவ என்றுத் திருநீறணிந்த பின்
சிவகாமியேயெனச் சிந்தித்தணிவதும்
தவமான மேலோருந்தரித்துக் களிப்பதும்
பலவினை தீர்ப்பதும் குங்குமமாமே
எவையெவை கருதிடில் அவையவை யீவதும்
நவவகை சக்தியின் நலனைக் கொடுப்பதும்
குவிசெய் கரத்துடன் கும்பிட்ட பேருக்குக்
குவிநிதி யீவதும் குங்குமமாமே
அஷ்ட லட்சுமி அருளை அளிப்பதும்
இஷ்டங்களீவதும் ஈடற்ற குங்குமம்
கஷ்டந் தவிர்ப்பதும் காத்தெனை யாள்வதும்
சிஷ்டராய்ச் செய்வதும் குங்குமமாமே
குஷ்டம் முதலான மாரோகந்தீர்ப்பதும்
நஷ்டம் வராதொரு நலனைக் கொடுப்பதும்
எட்டும் இரண்டும் அறிவித்தோர் வீடினைக்
கிட்டவே செய்வதும் குங்குமமாமே
பட்டகாலிலே படுமெனக் கஷ்டங்கள்
விட்டிடாமலே வந்துமே வாட்டினும்
பட்டான பார்வதி பாதம் பணிந்தே
இட்டார் இடர் தவிர் குங்கும மாமே
சித்தந்தனைச் சுத்தி செய்வதற்கெளியதோர்
எத்துந் தெரியாத ஏமாந்த மாந்தரே
நித்தம் தொழுதன்னை குங்குமந்தன்னை
நித்தம் தரித்துமே மேன்மை அடைவீரே
மிஞ்சும் அழகுடன் குங்கம ஆடைகள்
செஞ்சுடராகுமோர் காஞ்சி காமாக்ஷியின்
கஞ்ச மலர் முகந்தன்னிற் றிகழ்வதும்
பஞ்ச நிதி தரும் குங்கும மாமே.


சகல கலா வல்லி மாலை
1. வெண்தாமரைக்கு அன்றி நின்பதம்
தாங்க என் வெள்ளை உள்ளத்
தண்தாமரைக்குத் தகாது கொலோ?
சகம் ஏழும் அளித்து
உண்டான் உறங்க, ஒழித்தான் பித்தாக,
உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே!
2. நாடும் பொருள்சுவை சொற்சுவை
தோய்தர, நாற்கவியும்
பாடும் பணியில் பணித்து அருள்வாய்;
பங்கய ஆசனத்தில்
கூடும் பசும்பொன் கொடியே!
கனதனக் குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே!
சகல கலாவல்லியே!
3. அளிக்கும் செந்தமிழ்த் தெள்ளமுது
ஆர்ந்து, உன் அருள் கடலில்
குளிக்கும் படிக்கு என்று கூடும் கொலோ?
உளம் கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர்
கவிமழை சிந்தக் கண்டு,
களிக்கும் கலாப மயிலே!
சகல கலாவல்லியே!
4. தூக்கும் பனுவல் துறைதோய்ந்த
கல்வியும், சொல்சுவை தோய்
வாக்கும், பெருகப் பணித்து அருள்வாய்;
வட நூற்கடலும்,
தேக்கும், செந்தமிழ்ச் செல்வமும்,
தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே!
சகல கலாவல்லியே!
5. பஞ்சு அப்பி இதம்தரு செய்யபொன்
பாத பங்கேருகம் என்
நெஞ்சத் தடத்து அலராதது என்னே?
நெடுந்தாள் கமலத்து
அஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்
நாவும், அகமும் வெள்ளைக்
கஞ்சத் தவிசு! ஒத்து இருந்தாய்;
சகல கலாவல்லியே!
6. பண்ணும், பரதமும், கல்வியும்
தீஞ்சொல் பனுவலும், யான்
எண்ணும் பொழுதுஎளிது எய்த நல்காய்;
எழுதா மறையும்,
விண்ணும், புவியும், புனலும்,
கனலும், கருத்தும் நிறைந்தாய்;
சகல கலாவல்லியே!
7. பாட்டும், பொருளும், பொருளால்
பொருந்தும் பயனும், என்பதால்
கூட்டும் படிநின் கடைக்கண் நல்காய்;
உளம் கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால்
அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும்வெள் ஓதிமப் பேடே
சகல கலாவல்லியே!
8. சொல்விற்பனமும், அவதானமும்,
கவி சொல்லவல்ல
நல்வித்தையும், தந்து அடிமைகொள்வாய்,
நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிது என்று ஒருகாலமும்
சிதையாமை நல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே!
சகல கலாவல்லியே!
9. சொற்கும் பொருட்கும் உயிராமெய்ஞ்
ஞானத்தின் தோற்றம் என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்?
நிலம் தோய் புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோடு
அரச அன்னம் நாண, நடை
கற்கும் பதாம்புயத் தாயே!
சகல கலாவல்லியே!
10. மண்கண்ட வெண்குடைக் கீழாக
மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவில் பணிரச் செய்வாய்;
படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடி உண்டேனும்
விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ?
சகல கலாவல்லியே!


மகாகவி கம்பர் இயற்றிய சரஸ்வதி அந்தாதி


ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அம்மை-தூய
உருப்பளிங்கு போல்வாள், என் உள்ளத்தின் உள்ளே
இருப்பள் இங்கு வாராது இடர்.
படிக நிறமும், பவளச்செவ்வாயும்
கடிகமழ்பூந் தாமரை போற் கையும்-துடியிடையும்
அல்லும் பகலும் அனவரத மும்துதித்தால்
கல்லும் சொல் லாதோ கவி?

நூல்

1. சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கம லாசனத் தேவி, செஞ்சொல்
தார் தந்த என்மனத் தாமரை யாட்டி, சரோருகமேல்
பார் தந்த நாதன் இசைதந்த ஆரணப் பங்கயத்தாள்
வார் தந்த சோதிஅம் போருகத் தாளைவணங்குதுமே.
2. வணங்கும், சிலைநுதலும் கழை தோளும்வன முலைமேற்
சுணங்கும், புதிய நிலவெழு மேனியும் தோட்டுடனே
பிணங்கும் கருந்தடங் கண்களும், நோக்கிப் பிரமன் அன்பால்
உணங்கும் திருமுன்றி லாய், மறை நான்கும் உரைப்பவளே.
3. உரைப்பார் உரைக்கும் கலைகள் எல்லாம் எண்ணில்
உன்னையன்றித் தரைப்பால் ஒருவர் தரவலரோ?தண்
தரளமுலை வரைப்பால் அது தந்து இங்கெனைவாழ்வித்த
மாமயிலே விரைப்பா சடை மலர்வெண் தாமரைப் பதி மெல்லியலே.
4. இயலானது கொண்டு நின் திருநாமங்கள் ஏத்துதற்கு
முயலாமையால் தடுமாறுகின்றேன்; இந்த மூவுலகும்
செயலால் அமைத்த கலைமகளே, நின் திருவருளுக்கு
அயலாய் விடாமல் அடியேனையும் உவந்து ஆண்டருளே.
5. அருணோ தயத்திலும் சந்திரோதயம் ஒத்து அழகு எரிக்கும்
திருக்கோல நாயகி, செந்தமிழ்ப் பாவை திசை முகத்தால்
இருக்கோது நாதனும், தானும் எப்போதும் இனிதிருக்கும்
மருக்கோல நாண் மலராள் என்னை ஆளும் மடமயிலே.
6. மயிலே, மடப்பிடியே, கொடியே இளமான் பிணையே
குயிலே, பசுங்கிளியே, அன்னமே மனக்கூர் இருட்கோர்
வெயிலே, நிலவெழும் மேனி மின்னே, இனி வேறுதவம்
பயிலேன் மகிழ்ந்து பணிவேன் உனது பொற் பாதங்களே.
7. பாதாம் புயத்திற் பணிவார் தமக்குப் பலகலையும்
வேதாந்த முத்தியும் தந்தருள் பாரதி; வெள்ளிதழ் பூஞ்
சீதாம் புயத்தில் இருப்பாள்; இருப்ப என் சிந்தையுள்ளே
ஏதாம்? புவியில் பெறல் அரிதாவது எனக்கினியே !
8. இனிநான் உணர்வது எண்ணென் கலையாளே, இலகு தொண்டைக்
கனி நாணும் செவ்விதழ் வெண்ணிறத் தாளைக் கமலஅயன்
தனி நாயகியை அகிலாண்டமும் பெற்ற தாயை மணப்
பனிநாள் மலர் உறை பூவையை ஆரணப் பாவையையே.
9. பாவும் தொடையும் பதங்களும் சீரும் பலவிதமா
மேவும் கலைகள் விதிப்பாளிடம், விதியின் முதிய
நாவும், பகர்ந்த தொல் வேதங்கள் நான்கும், நறுங்கமலப்
பூவும் திருப்பதம் பூவால் அணிபவர் புந்தியுமே.
10. புந்தியில் கூரிருள் நீக்கும் புதிய மதியமென் கோ?
அந்தியில் தோன்றிய தீபம் என்கோ? நல் அருமறை யோர்
சந்தியில் தோன்றும் தபனன் என்கோ? மணித் தாமம் என்கோ?
உந்தியில் தோன்றும் பிரான் புயந் தோயும் ஒருத்தியையே.
11. ஒருத்தியை, ஒன்றும் இலா என் மனத்தின் உவந்து தன்னை
இருத்தியை, வெண்கமலத்து இருப்பாளை எண்ணெண் கலை தோய்
கருத்தியை, ஐம்புலனும் கலங்காமல் கருத்தை யெல்லாம்
திருத்தியை, யான்மற வேன்; திசை நான் முகன் தேவியையே.
12. தேவரும், தெய்வப் பெருமானும், நான்மறை செப்புகின்ற
மூவரும், தானவர் ஆகி உள்ளோரும், முனிவரும்
யாவரும், ஏனைய எல்லா உயிரும் இதழ் வெளுத்த
பூவரும் மாதின் அருள்கொண்டு, ஞானம் புரிகின்றதே.
13. புரிகின்ற சிந்தையின் ஊடே புகுந்து புகுந்து  இருளை
அரிகின்றது, ஆய்கின்ற எல்லா அறிவின் அரும் பொருளைத்
தெரிகின்ற இன்பம் கனிந்தூறி நெஞ்சம் தெளிந்து முற்ற
விரிகின்றது, எண்ணென் கலைமாது உணர்த்திய வேதமே.
14. வேதமும், வேதத்தின் அந்தமும் அந்தத்தின் மெய்ப் பொருளாம்
பேதமும், பேதத்தின் மார்க்கமும், மார்க்கப் பிணக்கு அறுக்கும்
போதமும், போத உருவாகி எங்கும் பொதிந்த விந்து
நாதமும், நாதவண்டு ஆர்க்கும் வெண்டாமரை நாயகியே.
15. நாயகம் ஆனமலர் அகமாவதும் ஞான இன்பச்
சேய் அகம் ஆன மலர் அகமாவதும் தீவினையால்
ஏய் அகம் மாறிவிடும் அகமாவதும் எவ்வுயிர்க்கும்
தாயகம் ஆவதும், தாதார் சுவேத சரோருகமே.
16. சரோருகமே; திருக்கோயிலும் கைகளும் தாள் இணையும்
உரோருகமும், திரு அல்குலும், நாபியும் ஓங்கிருள் போற்
சிரோருகம் சூழ்ந்த வதனமும் நாட்டம், சேயிதழும்
ஓரோர் உகம் ஈர் அரை மாத்திரை ஆன உரை மகட்கே.
17. கருந்தாமரை மலர், கண் தாமரைமலர், காமருதாள்
அருந்தாமரை மலர், செந்தாமரை மலர், ஆலயமாத்
தருந்தாமரை மலர், வெண்தாமரை மலர் தாவில் எழில்
பெருந்தாமரை மணக்கும் கலைக்கூட்டப் பிணைதனக்கே.
18. தனக்கே துணிபொருள் என்னும் தொல்வேதம்; சதுர் கத்தோன்
எனக்கே சமைந்த அபிடேகம் என்னும்; இமையவர் தாம்
மனக்கேதம் மாற்றும் மருந்து என்ப; சூடும் மலர் என்பன் யான்
கனக்கேச பந்திக் கலைமங்கை பாத கமலங்களே.
19. கமலந்தனில் இருப்பாள் விருப்போடு அம்கரம் குவித்துக்
கமலம் கடவுளர் போற்றும் மென்பூவை; கண்ணில் கருணைக்
கமலந்தனைக் கொண்டுகண்டு, ஒருகால் தம் கருத்துள் வைப்பார்
கமலம் கழிக்கும் கலைமங்கை ஆரணி காரணியே.
20. காரணன் பாகமும் சென்னியும் சேர்தரு கன்னியரும்
நாரணன் ஆகம் அகலாத் திருவும், ஓர் நான் மருப்பு
வாரணன் தேவியும், மற்றுள்ள தெய்வ மடந்தையரும்
ஆரணப் பாவை பணித்த குற்றேவல் அடியவரே.
21. அடிவேதம் நாறும்சிறப்பு ஆர்ந்த வேதம் அனைத்தினுக்கும்
முடிவே, தவள முளரி மின்னே, முடியா இரத்ன
வடிவே, மகிழ்ந்து பணிவார் தமது மயல் இரவின்
விடிவே, அறிந்து என்னை ஆள்வார் தலந்தனில் வேறு இலையே.
22. வேறு இலையென்று, உன் அடியாரிற், சுடி விளங்கும் நன்பேர்
கூறிலை, யானும் குறித்து நின்றேன்; ஐம்புலக் குறும்பர்,
மாறிலை கள்வர் மயக்காமல், நன் மலர்த்தாள் நெறியில்
சேறிலை ஈந்தருள்; வெண்தாமரை மலர்ச் சேயிழையே.
23. சேதிக்கலாம் தர்க்க மார்க்கங்கள் எவ்வௌர் சிந்தனையும்
சோதிக்கலாம்; உறப் போதிக்கலாம்; சொன்னதே துணிந்து
சாதிக்கலாம்; மிகப் பேதிக்கலாம் முத்தி தான் எய்தலாம்;
ஆதித் கலாமயில் வல்லி பொற்றாளை அடைந்தவர்க்கே.
24. அடையாள நாள்மலர் அங்கையில் ஏடும் அணிவடமும்
உடையாளை நுண்ணிடை ஒன்றும் இலாளை, உபநிடதப்
படையாளை, எவ்வுயிரும் படைப்பாளைப் பதும நநுந்
தொடையாளை, அல்லது மற்று, இனியாரைத் தொழுவதுவே.
25. தொழுவார் வலம் வருவார், துதிப்பார் தம்தொழில் மறந்து
விழுவார், அருமறை மெய் தெரிவார், இன்ப மெய் புளகித்து
அழுவார், இன்னும் கண்ணில்நீர்மல்குவார் என்கண் ஆவது என்னை?
வழுவாத செஞ்சொற் கலைமங்கை பால் அன்பு வைத்தவரே.
26. வைக்கும் பொருளும், இல்வாழ்க்கைப் பொருளும், மற்றுளப் பொருளும்
பொய்க்கும் பொருள் அன்றி, நீடும் பொருள் அல்ல; பூதலத்தின்
மொய்க்கும் பொருளும், அழியாப் பொருளும் விழுப்பொருளும்
உய்க்கும் பொருளும், கலைமாது உணர்த்து உரைப்பொருளே.
27. பொருளால் இரண்டும் பெறலாகும் என்ற பொருள் பொருளோ?
மருளாத சொற்கலை வான்பொருளோ? பொருள் வந்து வந்தித்து
அருளாய் விளங்கு மவர்க்கு ஒளியாய் அறியாத வர்க்கு
இருளாய் விளங்கும் நலங்கிளர் மேனி இலங்கிழையே.
28. இலங்கும் திருமுகம்; மெய்யிற் புளகம் எழும்; கண்கள் நீர்
மலங்கும்; பழுதற்ற வாக்கும் வலிக்கும்; மனம் மிகவே
துலங்கும்; முறுவல் செயக் களி கூரும் சுழல் புனல் போல்
கலங்கும் பொழுது தெளியும், சொல்மானைக் கருதினர்க்கே.
29. கரியார் அளகமும், கண்ணும், கதிர் முலைக் கண்ணும், செய்ய
சரியார் கரமும், பதமும், இதழும், தவள நறும்
புரியார்ந்த தாமரையும், திருமேனியும், பூண் பனவும்
பிரியாது என்நெஞ்சினும் நாவினும் நிற்கும்; பெருந்திருவே.
30. பெருந்திருவும் சமயமங்கையும் ஆகி, என் பேதை நெஞ்சில்
இருந்தருளும் செஞ்சொல் வஞ்சியைப் போற்றில், எல்லா உயிர்க்கும்
பொருந்திய ஞானந்தரும்; இன்ப வேதப் பொருளும் தரும்;
திருந்திய செல்வம் தரும்; அழியாப் பெருஞ் சீர்தருமே.
  


Monday, January 10, 2011

துளசி வழிபாடு

<h1><font color="green">துளசி வழிபாடு</h1></font>
துளசி வழிபாடு
ஸ்ரீமத் துளசியம்மா திருவே கல்யாணியம்மா
வெள்ளிக் கிழமை தன்னில் விளங்குகின்ற மாதாவே
செவ்வாய்க் கிழமை செழிக்க வந்த செந்திருவே
தாயாரே உந்தன் தாளிணையில் நான் பணிந்தேன்
பச்சைப் பசுமை உள்ள துளஸி நமஸ்தே
பரிமளிக்கும் மூலக் கொழுந்தே நமஸ்தே
அற்பப் பிறப்பைத் தவிர்ப்பாய் நமஸ்தே
அஷ்ட ஐஸ்வர்யம் அளிப்பாய் நமஸ்தே
ஹரியுடைய தேவி அழகீ நமஸ்தே
அடைந்தார்க்கு இன்பம் அளிப்பாய் நமஸ்தே
வனமாலை என்னும் மருவே நமஸ்தே
வைகுண்ட வாசியுடன் மகிழ்வாய் நமஸ்தே
அன்புடனே நல்ல அருந்துளசி கொண்டுவந்து
மண்ணில் மேல்நட்டு மகிழ்ந்து நல்ல நீருற்றி
முற்றத்தில் தான் வளர்த்து முத்துப்போல் கோலமிட்டு
செங்காவிச் சுற்றமிட்டுத் திருவிளக்கும் ஏற்றிவைத்து
பழங்களுடன் தேங்காயும் தாம்பூலம் தட்டில் வைத்து
புஷ்பங்களைச் சொரிந்து பூஜித்த பேர்களுக்கு
என்ன பலனென்று ஹ்ருஷீகேசர்தான் கேட்க
மங்களமான துளசி மகிழ்ந்துரைப்பாள்
மங்களமாய் என்னை வைத்து மகிழ்ந்து உபாஸித்தவர்கள்
தீவினையைப் போக்கிச் சிறந்தபலன் நான் அளிப்பேன்
அரும் பிணியை நீக்கி அஷ்ட ஐஸ்வர்யம் நான் அளிப்பேன்
தரித்திரத்தை நீக்கிச் செல்வத்தை நான் கொடுப்பேன்
புத்திரன் இல்லாதவர்க்குப் புத்திரபாக்கியம் அளிப்பேன்
கன்னிகைகள் பூஜை செய்தால் நல்ல கணவரைக் கூட்டுவிப்பேன்
முழுக்ஷúக்கள் பூஜை செய்யாதல் மோக்ஷபதம் கொடுப்பேன்
கோடீ காராம்பசுவைக் கன்றுடனே கொண்டு வந்து
கொம்புக்குப் பொன்னமைத்துக்குளம்புக்கு வெள்ளிகட்டி
கங்கைக் கரைதனிலே கிரஹண புண்யகாலத்தில்
வாலுருவி அந்தணர்க்கு மகாதானம் செய்த பலன்
நான் அளிப்பேன் சத்யம் என்றுநாயகியுமே சொல்லலுமே
அப்படியேயாக என்று திருமால் அறிக்கையிட்டார்
இப்படியே அன்புடனே ஏற்றித் தொழுதவர்கள்
அற்புதமாய் வாழ்ந்திடுவார் பரதேவி தன்னருளால்.

அகிலாண்டேஸ்வரி ஸ்தோத்திரம்

அகிலாண்டேஸ்வரி ஸ்தோத்திரம்

பிரம்மதேவனால் செய்யப்பட்ட ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி ஸ்தோத்திரம்
(ஜம்புகேச்வா ஸ்தோத்திரம்)

அஷ்டமே ÷க்ஷத்ரமாகத்ய கஜாரண்யம் கிரேஸ்ஸுதா
கிலால லிங்கம் ஸம்ஸ்தாப்ய பூஜயாமாஸ ஸாதரம்


பிரம்ஹோவாச

நமோஸ்து ஸெளவர்க மஹீருஹோத்கர
ப்ரஸூன ஸெளரப்யநிரந்தராளகே
நமோஸ்து ஸப்தாஷ்ட கலாத்மஸீதருக்
விடம்பநாசுஞ்சுரபாலபட்டிகே


நமோஸ்து காருண்யஸுதா தரங்கிணீ
சரிஷ்ணுமீநாயிதசாரு வீக்ஷணே
நமோஸ்து தாடங்க லஸன்மணிப்ரபா
நிகாய நீராஜிதகண்டபாலிகே


நமோஸ்து பந்தூக லதாந்தவித்ரும
ப்ரவாள பிம்பீபலபாடலாதரே
நமோஸ்து மந்தஸ்மித மாதுரீஸுதா
ரீபரீக்ஷõளமுகேந்துமண்டலே


நமோஸ்து புஷ்பாயுத வீரவிக்ரம
ப்ரதாஸமுத்கோஷண ஸங்கசுந்தரே
நமோஸ்து ஹாராவளி ஜன்ஸுகன்யகா
பரிஷ்க்ருதா போககுசக்ஷமாதரே


நமோஸ்து கந்தர்பஹரோகூஹன
ப்ரமோதரோமாஞ்சிதபாஹுவல்லிகே
நமோஸ்து வைபோதிக ஸோணவாரிஜ
ப்ரபாஸத்ருக்ஷச்சவிபாணிபல்லவே


நமோஸ்து துங்கஸ்தன பாரதுர்யதா
ஸமுன்மிஷத்கார்ஸ்ய மனோக்ஞமத்யமே
நமோஸ்து பூதேசஜயார்த்தஸம்ப்ரம
ஸ்மராக்னிகுண்டாயிதநாபிமண்டலே


நமோஸ்து விஸ்தர்ண நிதம்பமண்டலீ
ரதாங்கசக்ரப்ரமிதேஸமானஸே
நமோஸ்து லக்ஷ்மீரணாதிதேவதா
ஸமுத்கரோத்தம்ஸித பாதபங்கஜே


நமோஸ்து நிர்ணித்ரஸிதேதராம்புஜ
ப்ரபோபமேயாங்க மரீசிமஞ்சரி
நமோஸ்து நம்ராபிமதப்ரதாயிகே
நமோ நமஸ்தே த்வகிலாண்டநாயிகே


தேவதேவஸ்யமஹதோ தேவஸ்ய க்ருஹமேதிநி
மயா பாக்யவஸாத் த்ருஷ்டா பவதீ மத்தப: பலம்

கஸ்மாதேதாவதீம் பூமிம் ஆகதா த்வம் ஹரப்ரியே
த்வத்தர்ஸனேந நியதம் பூததாஸ்மஸுத்ருஸ்யதே

அத்யாத்வரபலம் த்ருஷ்டம் அத்ய வித்யாப்ரயோஜனம்
அத்யைவ தபஸஸ: ஸித்தி : தேவித்வத்தர்ஸனான்மம

அகம்யம் வேதஸிரஸாம் அப்ராப்யம் ஸாஸ்த்ரஸம்பதாம்
ஆகமாநாஞ்ச துஷ்ப்ரபாம் தவஸர்வாணி தர்சனம்

அநேகதீர்த்தநிலயாத் ஆகாரிததப: பலாத்
தேவர்ஷிமானஸோல்லாஸகைலாஸாந்நாஸ்திதத்பதம்

பக்தாநுகம்பாஸுலபம் பவானிஸஸிஸேகரம்
அவிநாபாவரஸிகம் விநாத்வம் கதமாகதா.