Sunday, September 30, 2012

பசுவின் பால் சைவமா அசைவமா?

மாமிசம் சாப்பிடுபவர்கள் சைவர்களைப் பார்த்து, நீங்கள் குடிக்கும் பால், பசுவின் உடலிலிருந்து தானே வருகிறது. அதன் ரத்தம் தானே பாலாக மாறுகிறது, அதைக் குடிக்கும் நீங்களும் அசைவர்கள் தான், என்று கேலி பேசுவார்கள். ஒரு மிருகக்தைக் கொன்று அதன் இறைச்சியைச் சாப்பிட்டால் தான் அது அசைவம். பால் அப்படியல்ல. பாலைக் கறக்காமல் விட்டால் தான் பசுவுக்கு துன்பம் ஏற்படும். ஆனால், பால் கறக்கும் விஷயத்தில் கவனம் வேண்டும். பசுவுக்கு நான்கு மடு இருக்கும். இதில் இரண்டில் இருந்து மட்டுமே பால் கறக்க வேண்டும். மற்ற இரண்டு மடுக்களை கன்றுக்காக விட்டுவிட வேண்டும். பசும்பால் மனிதனுக்கு சாந்த குணத்தை தரும் வல்லமையுள்ளது. அது புனிதமானதும் கூட. பசுவின் கோமியமும் மருந்தாகவும், கிருமிநாசினியாகவும் பயன்படுகிறது. அது புனிதமானது என்பதால் தான், பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன், என்று விநாயகருக்கு வாக்களிக்கிறாள் அவ்வைப்பாட்டி.

Friday, September 28, 2012

எந்த கோயிலில் எவ்வாறு வலம்வர வேண்டும் தெரியுமா?

விநாயகரை ஒரு முறைதான் வலம் வரவேண்டும். ஈஸ்வரனையும், அம்மனையும் 3 முறை வலம் வர வேண்டும், அரச மரத்தை 7 முறை வலம் வர வேண்டும்,மகான்களின் சமாதியை 4 முறை வலம் வர வேண்டும், நவக்கிரகங்களை 9 முறை வலம் வர வேண்டும்,சூரியனை 2 முறை வலம் வர வேண்டும், தோஷ நிவர்த்திக்காக பெருமாளையும், தாயாரையும் வணங்குபவர்கள் 4 முறை வலம் வர வேண்டும், கோவிலுக்குள் ஆலய பலிப்பீடம், கொடிக்கம்பம் முன்பு தான் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.

Thursday, September 27, 2012

துர்க்கா ஸ்துதி (ராகுகாலத்திற்குரியது) - மூலமந்திரம்

ஸ்ரீ மங்கள சண்டிக ஸ்தோத்ரம்

ஸாரே மங்கள தாரே பாரேச ஸர்வ கர்மணாம்
ப்ரதி மங்களா தாரேச பூஜ்யே மங்கள சுகப்ரதே

மங்களத்திற்கு ஆதாரமானவளே ! மங்கள வாரம் தோறும் (செவ்வாய்க்கிழமை தோறும்) பூஜிக்கத் தக்கவளே மங்களத்தை அருளும் அன்னையே உன்தாள் பணிகின்றேன்.

தேவீம் ÷ஷாடஸ வர்ஷியாம் ஸுஸ்திர யௌவனாம்
பிம்போஷ்டீம் ஸுதீதம் சுந்தரம் சரத் பத்ம நிபாநநாம்

தேவியை என்றும் பதினாறு வயதுடைய நித்யயௌவன உருவமுடையவளாகவும், அழகிய உதடுகளில் அருள் வழியும் புன்னகையுடன் சரத் காலத்து நிலவொளியில் தாமரை மலர் மீது அமர்ந்திருப்பவளாக தியானிக்கிறேன்.

ஸ்வேத சம்பக வர்ணாம் ஸுநீலோத்லப லோசநாம்
ஜகதாத்ரீம் சதாத்ரீம் ச ஸந்வேப்ய : ஸர்வ சம்பதாம்

காயாம்பு வண்ண மேனியுடன் நீலோத்பல மலர் போன்ற கண்களுடன் விளங்கும் அன்னை, உலகை ஈன்று சகல சௌபாக்கியங்களையும் அளிக்கின்றாள்.

ஸ்ம்ஸார சாகரே கோரே ஜ்யோதிரூபாம் சதாபஜே
தேவ்யாச்ச த்யான மித்யேவம் ஸ்தவ நம் ச்ருயதாம் முனே

பயங்கரமான பிறவிப் பெருங்கடலைத் தாண்ட, மணி விளக்காய் வழிகாட்டும் தேவியின் பாதங்களை நினைப்பதே சிறந்த மார்க்கமாகும்.

மங்கள மங்களார் ஹே ச சர்வ மங்கள மங்களே
ஸதாம் மங்களதே தேவி ஸர்வேஷாம் மங்களாலயே

மங்களத்தை தரும் மங்கள நாயகியே !
என்றென்றும் மங்கள வாழ்வை அளிப்பாயாக.

பூஜ்ய மங்கள வாரே ச மங்களா பீஷ்ட தேவதே
பூஜ்யே மங்கள பூபஸ்ய மனுவம்சஸ்ய ஸந்தகம்

பூஜிக்க தக்க மங்கள நாயகியே ! சுபத்தை அளிக்கும் தேவியே! மனித வர்க்கத்திற்கு என்றும் நல்வாழ்வை நல்குவாயாக !

மங்களா திஷ்டாத்ரு தேவி மங்களநாம்ச மங்களே
ஸம்ஸார மங்களா தாரே மோக்ஷ மங்கள தாயினி

மங்களத்தைத் தரும் அருள் நோக்கு உடையவளே! மங்களமே உருவானவளே உலகின் நல்வாழ்வுக்கு ஆதாரமானவளே ! மாந்தருக்கு மோக்ஷத்தை அளிப்பவளே !

ஸாரே மங்கள தாரே பாரேச ஸர்வ கர்மணாம்
ப்ரதி மங்களா தாரேச பூஜ்ய மங்கள சுகப்ரதே

மங்களத்திற்கு ஆதாரமானவளே மங்கள வாரம் தோறும் (செவ்வாய்கிழமை தோறும்) பூஜிக்கத்தக்கவளே மங்களத்தை அருளும் அன்னையே உன் தாள் பணிகின்றேன்.

பலஸ்ருதி

ஸ்தோத்ரேனாநேந சம்பிஸ் ச ஸ்துத்வா மங்கள சண்டிகாம்
ப்ரதி மங்கள வாரே ராகு காலௌ பூஜரம் தத்வா கத: சிவ

மங்கள சண்டிகையான அன்னையை மங்கள வாரம் தோறும் ராகு காலத்தில் பூஜித்து துதித்தால் சகலநன்மைகளையும் அளிப்பாள்.

தேவ்யாஸ் ச மங்கள ஸ்தோத்ரம் ய ச்ருணோதி ஸமாஹித
தத்மங்களம் பவேத் தஸ்ய நபவேத் தத் மங்களம்
வர்த்ததே புத்ர பௌத்ரஸ்ச மங்களம் ச திநே திநே

தேவியைப் போற்றும் இந்த மங்கள ஸ்துதியை ஓதுவதால் உலகில் கிடைக்காத பாக்கியமே இல்லை, சகல சம்பத்துகளும் வம்ச விருத்தியும் எண்ணற்ற பாக்யங்களும் நாளுக்கு நாள் பெருகும் என்பதில் ஐயமே இல்லை.

பவானி த்வம் தாஸேமயீ விதிர க்ருஷ்டியும் ஸகருணாம்
இதி ஸ்தோதும் வாஞ்சன் கதயதிபவானி த்வமிதிய:
தவைத த்வம் தஸ்மை திசஸி நிஜ ஸாயுஜ்ய பதவீம்
முகுந்த ப்ரஹ்மேந்திர ஸ்புட மகுட நீராஜித பதாம்

ஹே பவானி அடிமையாகிய என்னிடம் கருணையுடன் கூடிய பார்வையை நீ செலுத்தி அருள்வாயாக என்று எவனொருவன் துதிசெய்ய விரும்பி பவானி நீ என்ற இரண்டு வார்த்தைகளை சொன்ன மாத்திரம் விஷ்ணு, பிரம்மா, இந்திரன் ஆகியவர்களின் கிரீட ஒளியால் நிராஜனம் செய்ய பெற்ற திருவடிகளையுடைய உனது ஸாயுஜ்ய பதவியை அவனுக்கு அளிக்கிறாய்.

பன்னிரு ராசி நேயர்கள்  ராகு தோஷம் நீக்கி ஸ்ரீதுர்கையின் அருள் கிடைக்க திருநாமம்

ஓம் துர்லபாம் துர்கமாம் துர்காம்
துக்க ஹந்த்ரீம் ஸுகப்ரதாம்
துஷ்டதூராம் துராசார ஸமனீம்
தோஷவர்ஜிதாம் ஜெயப்ரதாம் ஓம்

(தன, ஸித்தி, ஞான, ஸஹாய குணயோக போக, மோக்ஷ என மாற்றியும் சொல்லலாம்)

மூலமந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் ஸ்ரீதுர்காதேவ்யை ஸ்வாஹா ஓம்

Wednesday, September 26, 2012

சாயிபாபா வழிபாடு (யாமிருக்க பயமேன்! நம்பிக்கை, பொறுமை மிக்க பக்தி கொள்)

1. அம்பிகை பெற்ற ஐங்கரனை துதித்தெழுதும் அடியேனின் ஐயன் சாயிநாதனே! அத்ரி அநுசூயா ஈன்ற மும்மூர்த்தி சேர் தத்த அவதாரமே! வாசுகியால் கடையப்பெற்று அமுது பொங்கிய தலம் ஷீர்டியில் எழுந்தருளிய பரப்ரஹ்மமே, கற்பகத்தருவே! கலியுகத்தின் கண்கண்ட தெய்வமே, பாத வல்லபனே! நரஸிம்ஹ சரஸ்வதியே, அக்கல்கோட் ஸ்வாமி ஸமர்த்தனே! பக்தனின் இன்னல் போக்கும் அனாத ரட்சகனே, அல்லாவின் புதல்வனே, இடர் நீக்கி, துயர் துடைத்து நலம் நல்க விரைந்து வந்து அருள்வாய் புண்ய நகர் ஷீர்டி வாஸ சாயிநாதனே.

2. அனுதினமும் சாயிநாமமே பிரதானமென்று எனக்கு விதித்த கடமையும் மறந்து, உன்னையே நினைந்து, உன் பாதமே பணிந்து பலவித பூஜைகள் செய்தேன். உன் திருக்கதை படித்தேன். திருநாமம் ஜபித்தேன். உன் சொற்படி அன்னதானமிட்டேன். பிறர் மனதை நோகடித்து அறியேன் இத்தனை செய்தும் இக்கணம் இன்னல் வந்திட யாம் செய்த பிழைதாம் யாதென உரைத்திடுவாய். பக்தி வேடம் பூண்டு போலி நாடகம் புரியும் அற்பனென்று என்னைப் புரிந்திட்டாயா? குழம்பித் தவிக்கும் எனக்கு விரைந்து வந்து அருள்வாய் புண்யநகர் ஷீர்டி வாஸ சாயிநாதனே.

3. வசீகர அருளால் பக்தரை உன் பக்கம் காணச் செய்தாயே. கோடானு கோடி பக்தர் உன் பதம் பற்றியதால், அடியேனுக்கு இரங்கிட உமக்கு நேரமில்லையா? மனமில்லையா? நொடிப் பொழுதும் உன்னைப் பிரியேன். இமைப்பொழுதும் உன்னை விலகிடேன். என் பக்தியில் நீ கண்ட பிழையறியேன் சாயி! முன்வினையோ! தீவினையோ? நானறியேன். தீவினையைத் தீக்கிரை யாக்க உன் தயவொன்று போதுமே. கருணா சாகரா! தாயிலும் மேலான தயை மனம் கொண்டவனே. சேய் அழுதால் தாங்குமோ உன் மனமே? உன் நாமமே பிதற்றும் எனக்கு விரைந்து வந்து அருள்வாய் புண்ய நகர் ஷீர்டி வாஸ சாயிநாதனே.

4. கொடும் விட நஞ்சு கொண்ட அரவம் தீண்டியும், ஷாமாவை காலனின் பிடியிலிருந்து காத்தாயே ! சர்வேஸா! சேஷசாயி! என்னைக் காத்தருள ஏனிந்தத் தயக்கம்? கண்கள் நீர் சொறிந்து காய்ந்தும் போனதே, நாவும் சாயிநாமம் பாடியே உலர்ந்தும் போனதே. என் மேல் நீ கொண்ட கோபம் அறியேனே. உன் நினைவன்றி வேறு எதையும் நினைந்திடேனே. நீயே அடைக்கலமென்று தஞ்சமும் அடைந்தேனே. என் பக்திக்கிரங்கி இக்கணமே என் கண் முன்னே தோன்றி வேண்டிய வரமளித்திட விரைந்து வந்து அருள்வாய் புண்ய நகர் ஷீர்டி வாஸ சாயிநாதனே.

5. தூய மனதில் நான் உன்மேல் கொண்ட பக்தி சத்தியமே. உன் திருக்கதை கேட்டு சாயி பக்தனாகி, சாயி பித்தனாயும் ஆனேனே. உன் பதமலரில் பக்தியோடு விழுந்து கிடந்தேனே. நீ என்னைப் பாராமல் போனால் அது நியாயமில்லையே. என் துயர் நீ போக்காவிடில் உலகம் நம்மைக் கேலி பேசுமே, சாயி உன்னிடம் இரங்கவில்லை, உன் பக்தி ஒரு நாடகமே என்று என்னைத் தூற்றுமே. சாயி பக்தனுக்கா துயரம்? உலகம் உன்னையும் பழிக்குமே, உலகம் உன்னைப் பழித்தால் என் மனம் தாங்காதே. பழிச்சொல்லிலிருந்து காப்பாற்றி பக்தனையருள விரைந்து வந்து அருள்வாய் புண்யநகர் ஷீர்டி வாஸ சாயிநாதனே.

6. ஏதுமறியோ மூடனாய், அறிவிலியாய், இறைவனை அறியாமல் திரிந்த என்னை உன் பாதம் காணச் செய்து பக்தனாக்கினாய். எம்மதமும் சம்மதம் என்ற சர்வதத்வ போதகனே. இக்கணம் எனக்கு வந்த துயர் நீ போக்காவிடில் நாஸ்திகம் ஆனந்த எக்காளமிடுமே. தெய்வம் பொய்யானதே என்று எள்ளி நகையாடுமே. பக்தி நம்பிக்கையை ஏசிடுமே. நீ பொய்யில்லை. நீ சத்தியமென்று நான் அறிவேனே. உண்மையாய் உலகமுழுதில் வியாபிக்கின்றாய் என்று பெருமையுடன் பறைசாற்றும் எனக்கு விரைந்து வந்து அருள்வாய் புண்ய நகர் ஷீர்டி வாஸ சாயிநாதனே.

7. அக்னி ஹோத்ரியாய் துனியை எரிய விட்டு, அரும் உதியால் பக்தனின் பிணி, துயர் போக்கும் துவாரகமாயி வாழ் ஆனந்த சாயி! பஞ்சபூதமும் உந்தன் கையசைவிலே, விரல் சொடுக்கில் விதியையே மாற்றும் விஸ்வநாதனே, பிரம்ம ஸ்வரூபனே! உம்மையன்றி யாரையும் அறியாத என் வேதனையைக் போக்கிடுவாய். துன்பக்கடலில் தத்தளிக்கும் எமக்கு தோணியாய் வந்திடுவாய். என் விண்ணப்பங்களை விருப்பமாய்க் கேட்டு என் இன்னல் களைந்து இன்பம் தருவாய். ஈடில்லா செல்வமும், வெற்றியும், பிணியிலா வாழ்வும், இறையருளும், நற்கதியும் பெற்றிட விரைந்து வந்து அருள்வாய் புண்ய நகர் ஷீர்டி வாஸ சாயிநாதனே.

8. யாமிருக்க பயமேன்! நம்பிக்கை, பொறுமை மிக்க பக்தி கொள் என்றாய். எத்தனை காலம் பொறுமை காப்பேன். பொறுமைக்கொரு எல்லை உண்டே. நான் உயர் கடவுள் இல்லையே. ஜனன மரணம் எய்தும் அற்ப மானிடப் பிறவியே. காலம் கடந்து விட்டதே. என்னையும் தாண்டி பலர் முன் சென்று விட்டனரே. கவலையில் நெஞ்சும் கனக்கிறதே. தோல்வியில் துவண்டு, வேதனையில் மாண்டு தூண்டிலிட்ட புழுபோல் துடிதுடிக்கும் பக்தனுக்கிரங்கி வேண்டிய பதினாறு செல்வமிக்க வளமான வாழ்வும், சீரும் சிறப்பும், ஆரோக்கியம் ஆயுளும், புகழ் தரும் வெற்றியும், தனதானம் அனைத்தும் இனிதே தந்திட விரைந்து வந்து அருள்வாய் புண்யநகர் ஷீர்டி வாஸ சாயிநாதனே.

சாயிநாதருக்கு அர்ப்பணம்

ஆடு பலியிடும் வழக்கம் எவ்வாறு வந்தது தெரியுமா?

அஜம் என்ற சமஸ்கிருதச் சொல்லே, கோயில்களில் ஆடு பலியிடும் வழக்கத்திற்கு காரணமாக அமைந்து விட்டது. அஜம் என்றால் ஆடு என்ற பொருள் இருக்கிறது. ஒரு காலத்தில் அஸ்வமேதயாகம் செய்த போது குதிரையை பலியிட்டார்கள். அஸ்வம் என்றால் குதிரை. எரியும் யாகநெருப்பில் குதிரையைத் தள்ளி விட்டு விடுவார்களாம். இதேபோல் தான் அஜம் என்ற வார்த்தைக்கு உரிய பொருளையும் பயன்படுத்தி ஆடு பலியிடும் வழக்கம் வந்தது. அஜம் என்ற சொல்லுக்கு முளைக்காத பழைய நெல் என்ற பொருளும் உண்டு. இதை யாககுண்டத்தில் கொட்டுவது வழக்கம். இதையே அஜமுகி (கந்தபுராணத்தில் வரும் சூரபத்மனின் தங்கை, ஆடு முகம் கொண்டவள்) போன்ற வார்த்தைக் குழப்பங்களால் ஆடாக மாற்றி, ஆடு பலியிடும் வழக்கத்திற்கு மாறி விட்டனர் என்று சில மகான்கள் சொல்கின்றனர்.

Monday, September 24, 2012

சூரியனை ஏன் வணங்க வேண்டும்?

மனிதர்கள் எல்லோரும் சாதாரணமானவர்கள். எப்பொழுது வேண்டுமானாலும் செத்துப்போகக் கூடியவர்கள். நோய் நொடியில் விழக்கூடியவர்கள். தவறு செய்யக்கூடியவர்கள். மிகப் பெரிய அபத்தங்களுக்கு ஆளாகக்கூடியவர்கள். ஆனால் அவர்கள் எதிரே வரும்போது முகமன் சொல்கிறீர்களே.. வாழ்க, வணக்கம் என்று சொல்கிறீர்களே.. ஏன்? எதனால்? அவரிடம் இருந்து ஏதேனும் ஒரு நல்ல விஷயம், நல்ல உதவி உங்களுக்கு வந்து சேரும். வந்திருக்கும்; வரலாம் என்ற எண்ணத்தால் அப்படி செய்கிறீர்கள். சூரியனால் இடையறாது இடையறாது பெரும் உதவி கிடைத்துக் கொண்டிருக்கிறது. சூரியன் ஒரு மகத்தான சக்தி. சந்திரன் இன்னொரு சக்தி. நட்சத்திரங்கள், கிரகங்கள் எல்லாமும் தனித்தனியே சக்தி வாய்ந்தவை. அவை பூமியோடு நெருங்கிய சம்பந்தமுடையவை. அவற்றின் தாக்கம் இங்கே இருக்கிறது. அப்படித் தாக்கம் இருக்கின்ற, தொடர்பு இருக்கின்ற, நல்லது செய்கின்ற கிரகங்களையும் சூரியனையும் சந்திரனையும் வழிபடுவதில் என்ன தவறு? எல்லா சக்தியும் வழிபடக்கூடியவை. சக்தியை அலட்சியம் செய்கிறவர் கடவுளை அலட்சியம் செய்கிறார். கடவுளின் பேச்சாக, கடவுளின் குணமாக, கடவுளின் உருவமாக, கடவுளின் பிரத்யட்ச வடிவமாக சூரிய, சந்திர கிரகங்கள் நம் முன்னே தோன்றி இருக்கின்றன. எல்லாம் வல்ல கடவுளை உங்களால் கண்டறிய முடியாது. பேசிப் புரிந்துகொள்ள முடியாது. அதனால் பார்க்க முடிகிற கடவுளாக நினைத்து சூரியனை வழிபடுவதில் தவறே கிடையாது.

Sunday, September 23, 2012

மணமேடையில் மறைந்தவர்கள்!

திருமணவிழாவில் மணமேடையில் பெண்ணும் மாப்பிள்ளையும் அமர்ந்திருப்பர். ஆனால், மறைந்த நம் முன்னோர்களுக்கும் இம் மேடையில் இடம் தரப்படும். முன்னோர்களின் ஆசி பெற்ற பின்னரே, மாப்பிள்ளை மணமகளின் கழுத்தில் மாங்கல்யத்தைச் சூட்டவேண்டும் என்பது நியதி. மணமேடையில் பிதுர்களை வணங்குவதற்கு நாந்தி சிரார்த்தம் என்று பெயர். சிலர் மணமேடையில் இதனைச் செய்யாமல் திருமண முகூர்த்தத்திற்கு முதல் நாள் இரவு வீட்டில் வீட்டுச் சாமி கும்பிடுதல் என்னும் பெயரில் திருமாங்கல்யம், முகூர்த்தப்புடவை ஆகியவற்றை முன்னோர்களுக்குப் படைத்து வழிபாடு செய்வர். சீதா, சாவித்ரி, நளாயினி, அனுசூயா, கண்ணகி, சந்திரமதி போன்ற கற்புக்கரசிகளின் திருமணங்கள் எல்லாமே பிதுர் வழிபாட்டுடனேயே நடந்தன.

Friday, September 21, 2012

புரட்டாசி மாதத்தில் பெருமாளை எப்படி வணங்க வேண்டும்?

மாதவா, என் மனதுக்கு பிடித்த அரங்கனே எனக்கு மணவாளனாக வந்தால் நூறு அண்டா வெண்ணையும், நூறு அண்டா அக்காரவடிசலும் உனக்கு நிவேதனமாகத் தருகிறேன்... திருமாலிருஞ்சோலை அழகரிடம் இப்படி வேண்டிக் கொண்டாள், ஆண்டாள். அவள் மனம் போலவே அரங்கன் அவளுக்கு மாலை சூட்டி தன்னுடன் ஐக்கியம் செய்துகொண்டது உங்களுக்கே தெரிந்திருக்கும். ஆண்டாள், தான் வேண்டியபடி நூறு அண்டா வெண்ணெயும், நூறு அண்டா அக்காரவடிசலும் பகவானுக்குக் கொடுத்தாளா, இல்லையா...! கிட்டத்தட்ட முந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு சந்தேகம் வந்தது, யதிராஜரான ராமானுஜருக்கு. உடனே அந்த மகான் என்ன செய்தார் தெரியுமா?நூறு தடா அதாவது நூறு அண்டா வெண்ணெயும், நூறு அண்டா அக்காரவடிசலும் நிவேதனம் செய்து அழகரை ஆராதித்து, ஆண்டாளின் வேண்டுதலை தானே நிறைவேற்றினார். அதனால், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அவர் வந்தபோது, வாசலுக்கே ஓடிவந்து, வாருங்கள் நம் கோயில் அண்ணா...! என்று கூப்பிட்டாளாம் ஆண்டாள். இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வருடத்துக்கு ஒருமுறை இந்த சம்பவத்தை உத்ஸவமாக கொண்டாடுகிறார்கள். அன்று அக்காரஅடிசல் பிரசாதமும் உண்டு. அக்காரவடிசல். அக்காரை என்றால் சர்க்கரை. அடிசல் என்பது குழைய வெந்த சாதம். பார்க்க சர்க்கரைப் பொங்கல் போல இருந்தாலும் சர்க்கரைப் பொங்கலுக்கு இதற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு அக்காரவடிசல் செய்து வணங்கினால் கேட்டது கிடைக்கும்.

அக்காரவடிசல் எப்படி செய்வது?

தேவையானவை: பச்சரிசி கால் கிலோ, பச்சைப் பருப்பு-100 கிராம், வெல்லம் ஒன்றரைக் கிலோ (ஒரு பங்கு அரிசிக்கு ஆறு பங்கு வெல்லம்) ஏலக்காய் தூள்- 2 ஸ்பூன், பச்சைக் கற்பூரம் கொஞ்சம் (வாசனைக்காக கொஞ்சமாகச் சேர்க்க வேண்டும். அதிகமானால், கசப்பாகிவிடும், கவனம்). இவை தவிர, நிறைய பால், நிறைய நெய்( மேலே தரப்பட்டுள்ள அரிசி, வெல்லம் அளவுக்கு குறைந்தது நான்கு லிட்டர் பால், ஒன்றரைக் கிலோ நெய் ஊற்றலாம். கோயிலில் இதெல்லாம் கணக்கே பார்ப்பதில்லை.
செய்முறைக்கு முன்பாகவே முக்கியமாக கவனிக்க வேண்டியவை: அக்காரவடிசலுக்கு நெய்யும் பாலும் விடுவதில் தயக்கமோ கஞ்சத்தனமோ கூடவே கூடாது. இரண்டாவது முக்கியக் குறிப்பு. கைவலித்தாலும் நிறுத்தாமல் கிண்ட வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் அடிப்படித்துவிடும். மூன்றாவது விஷயம்... அக்காரவடிசல்ல முந்திரி, திராட்சை இன்ன பிறவற்றைப் பகட்டுக்காகவோ, ருசிக்காகவோ போடக்கூடாது. (வாயில் போட்டால், நாக்கில் வழுக்கி தொண்டைவழியாக அப்படியே உள்ளே போவதற்குத் தடையாக எதுவும் இருக்கக் கூடாது) நாலாவது பாயின்ட். அடுப்பு சீராகவும் மிதமாகவும் எரியவேண்டும். சீக்கிரம் செய்ய ஆசைப்பட்டு அடுப்பைப் பெரிதாக எரியவிடக்கூடாது. அனைத்தையும் விட முக்கியமானது, அடுப்பைப் பற்றவைத்தது முதல் அக்காரவடிசலை இறக்கும்வரை ஆண்டவன் நினைவோடு இருப்பது தான்.

செய்முறை: அரிசியையும் பாசிப்பருப்பையும் கல், தூசி இல்லாமல் சுத்தம் செய்து களைந்து கழுவி, தண்ணீரை வடித்து கொஞ்சநேரம் நிழலில் காயவையுங்கள். பிறகு ஒரு வாணலியில் கொஞ்சம் நெய்விட்டு அரிசி, பருப்பைப் போட்டு லேசாக வறுங்கள். அரிசி ஒருபங்குக்கு ஐந்து பங்கு பால் சேர்த்து குக்கரில் வேகவிடுங்கள். எவ்வளவு குழைகிறதோ அவ்வளவு ருசி கிடைக்கும். எனவே நன்கு குழையவிட்டு இறக்குங்கள்.
வெல்லத்தைத் தூளாக்கி தண்ணீரில் கரைத்து வடிகட்டியபின் ஒரு வாணலியில் வெல்லக் கரைசலை ஊற்றி அடுப்பில் வையுங்கள். கொஞ்சம் சூடானதும், குழைய வெந்த அரிசி பருப்புக் கலவையை வெல்லக் கரைசலில் போடுங்கள். ஒரு லிட்டர் பாலைச் சேர்த்து, கிளற ஆரம்பியுங்கள். இறுக இறுக பால் சேருங்கள். கிளறுங்கள். பால்... பால்... மேலும் பால்...! பால் தீர்ந்ததும், நெய் சேர்த்துக் கிளறுங்கள். இறுகும் போதெல்லாம் வழிய வழிய நெய் விடுங்கள். அக்காரவடிசலுக்கு அலங்காரமே அதில் மினுமினுக்கும் நெய்தான். எனவே உங்களால் முடிந்த அளவுக்கு நெய்யை ஊற்றுங்கள். கடைசியாக சிறிது ஏலப்பொடி, பச்சைக் கற்பூரப் பொடி சேர்த்துக் கிளறி இறக்கி வையுங்கள். நிவேதனம் செய்து அரங்கனை வணங்கிவிட்டு சாப்பிடுங்கள். உங்கவாய் மட்டுமல்லாமல் வாழ்க்கையும் இனிக்கும்.

Thursday, September 20, 2012

(ஸர்ப்ப தோஷம் நீங்க)

நாகர்
(ஸர்ப்ப தோஷம் நீங்க)

ஓம் நாகராஜாய வித்மஹே
சக்ஷúஸ்ஸ்ரவணாய தீமஹி
தன்னோ சர்பஹ் ப்ரசோதயாத்

Wednesday, September 19, 2012

(நாக) ராகு தோசம் நீங்க) - (அழகு பெற)

 இந்திராணி
(அழகு பெற)

ஓம் கஜத்வஜாயை வித்மஹே
வஜ்ரஹஸ்தாய தீமஹி
தன்னோ இந்த்ராணி ப்ரசோதயாத்


 அனந்தன்
(நாக) ராகு தோசம் நீங்க)

ஓம் சர்பராஜாய வித்மஹே
நாகராஜாய தீமஹி
தன்னோ னந்தஹ் ப்ரசோதயாத்

ஓம் அனந்ததேசாய வித்மஹே
மஹாபோகாய தீமஹி
தன்னோ னந்தஹ் ப்ரசோதயாத்

Monday, September 17, 2012

பத்திரகாளியம்மனை வடக்கு முகமாக அமைப்பது ஏன்?

துர்க்கை, காளி போன்ற உக்ரதெய்வங்களை வடக்கு முகமாக வைப்பர். இதனால் காளிக்கு வடக்குவாசல் செல்வி என்ற பெயரும் கூட உண்டு. சத்தியம், தர்மத்தைக் காக்கும் நீதிதேவதைகளை வடக்கு நோக்கி வைக்கும் வழக்கம் வழக்கில் இருக்கிறது.

சாப்பிடும் முன், உணவிருக்கும் இலையை நீரால் சுற்றுகிறார்களே ஏன்?

இறைவன் நம் உயிராக நமக்குள்ளேயே இருக்கிறார். இப்படி ஆன்ம வடிவமாக இருக்கும் இறைவனுக்கு நாம் சாப்பிடுவதை நிவேதனம் செய்யும் முறையாக இது செய்யப்படுகிறது. இதை பரிசேஷனம் என்பர்.

Thursday, September 13, 2012

அமாவாசை தர்ப்பணம் (பொதுவாக தர்ப்பணம் செய்யவேண்டிய பித்ருவர்க்கம்)

பொதுவாக தர்ப்பணம் செய்யவேண்டிய பித்ருவர்க்கம்

1. பிதா - தகப்பனார்
2. பிதாமஹர் - பாட்டனார்
3. ப்ரபிதாமஹர் - பாட்டனாருக்கு தகப்பனார்
4. மாதா - தாயார்
5. பிதாமஹி - பாட்டி
6. ப்ரபிதாமஹி - பாட்டனாருக்கு தாயார்
7. மாதாமஹர் - தாயாருக்குத் தகப்பனார்
8. மாது: பிதாமஹர் - தாய்ப்பாட்டனாருக்குத் தகப்பனார்
9. மாது: பிரபிதாமஹர் - தாய்ப் பாட்டனாருக்குப் பாட்டனார்
10. மாதாமஹி - பாட்டி (தாயாருக்கு தாயார்)
11. மாது : பிதாமஹி - தாய்ப்பபாட்டனாருக்குத் தாயார்
12. மாது: ப்ரபிதாமஹி - தாய்ப்பாட்டனாருக்குப் பாட்டி
மேற்கண்டபடி பொதுவாக 12 பேர்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும். இவர்களில் யாராவது ஒருவர் பிழைத்திருந்தால் அவருக்கு முன்னோர் ஒருவரை தர்ப்பணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக பித்ருவர்க்கத்தில் பிதாமஹர் (பாட்டனார் பிழைத்திருந்தால் வரிசையாக பித்ரு பிது: பிதாமஹ பிது: ப்ரபிதாமஹா (பாட்டனாருக்குப் பாட்டனார்) களுக்கு தர்ப்பணம் செய்யவேண்டும். அம்மாதிரியே தாயார் பிழைத்திருந்தால் பிதாமஹி, பிது: பிதாமஹி, பிது பிரபிதாமஹி என்ற வரிசையில் தர்ப்பணம் செய்ய வேண்டும். தாயார் இல்லாமல் பிதாமஹியிருந்தால் மாதா, ப்ரபிதாமஹீ பிது: ப்ரபிதாமஹி என்ற வரிசையில் தர்ப்பணம் செய்ய வேண்டும். இவ்விதமாகவே தர்ப்பணம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன் யார் யாருக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும். அவர்களின் பெயர் கோத்ரம் இவைகளை விபரமாக ஞாபகப்படுத்திக் கொண்டு தர்ப்பணம் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

ஸ்ரீ வைஷ்ணவ யஜுர்வேதிகளின் அமாவாஸ்யை தர்ப்பணம்
ஆரம்பம்


காலையில் ஸ்நானம், ஸந்த்யாவந்தனம், மாத்யான்னிகம், திருவாராதனம் இவைகளை முடித்த பிறகு கைகால்களைச் சுத்தம் செய்து கொண்டு இரண்டு தடவை ஆசமனம் செய்து 3 தர்ப்பங்களை செய்த பவித்ரத்தை மோதிர விரலில் தரித்து, அத்துடன் தர்ப்பங்களை இடுக்கிக் கொண்டு, சில தர்ப்பங்களை ஆஸனமாகம் போட்டுக் கொண்டு கிழக்கு முகமாக உட்கார்ந்து ப்ராணாயாமம் செய்யவும்.
ஸங்கல்பம்
(வடகலையார் மாத்திரம் கீழ்க்கண்ட மூன்று ஸ்லோகங்களைச் சொல்லவும்)
1. ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய: கவிதார்கிக கேஸரீ
வேதாந்தாசர்ய வர்யோ மே ஸந்திதத்தாம் ஸதா ஹ்ருதி
2. குருப்யஸ் தத் குருப்யஸ்ச நமோவாக மதீமஹே
வ்ருணீமஹே சதத்ராத் யௌ தம்பதீ ஜகதாம் பதீ
3. ஸ்வசேஷ பூதேந மயா ஸ்வீயை ஸர்வபரிச்ச தை:
விதாதும் ப்ரீத மாத்மாநம் தேவ: ப்ரக்ரமதே ஸ்வயம்

பொது

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரஸந்நவதநம் த்யாயேத் ஸர்வ விக்நோபஸாந்தயே
யஸ்யத் விரத வக்த்ராத்யா: பாரிஷத்யா : பரஸ்ஸதம்
விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக்ஸேநம் தமாஸ்ரயே

வடகலையார் பூணூலைப் பிராசீனாவீதமாகப் போட்டுக் கொண்டு ஹரி : ஓம் தத் ஸத்

ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த - அஸ்ய ஸ்ரீ பகவத: மஹாபுருஷஸ்ய - விஷ்ணோராஜ்யா - ப்ரவாதமாநவஸ்ய - ஆத்ய ப்ரஹ்மண : த்விதீய பரார்த்தே - ஸ்ரீஸ்வேதவராஹ கல்பே - வைவஸ்த மந்வந்தரே - அஷ்டாவிம்ஸ்திதமே கலியுகே - ப்ரதமே பாதே - ஜம் பூத் வீபே - பாரதவர்ஷே பரதகண்டே சகாப்தே மேரோ: தக்ஷிணே பார்ச்வே - அஸ்மிந் வர்தமாநே வ்யாவாரிகே - ப்ரப வாதி ஷஷ்டி ஸம்வத்ஸ்ராணாம் மத்யே ... நாமே ஸம்வத்ஸரே தக்ஷிணாயநே (அல்லது, உத்ராயணே) ... ருதௌ ... மாஸே க்ருஷ்ணப÷க்ஷ - அமாவாஸ்யாம் புண்யதிதௌ ... வாஸர யுக்தாயாம் .... நக்ஷத்ர யுக்தாயாம் ஸ்ரீ விஷ்ணுயோக ஸ்ரீவிஷ்ணுகரண சுபயோக சுபகரண ஏவங்குண விஸேஷண விஸிஷ்டாயாம் அஸ்யாம் அமாவாஸ்யாம் புண்ய திதௌ - ஸ்ரீபகவதாஜ்ஞயா ஸ்ரீ மந் நாராயண ப்ரீத்யர்த்தம் (தென்கலையார் : பகவத் கைங்கர்யரூபம் ... கோத்ரணாம் .... ஸர்மணாம் வஸுருத்ராதித்ய ஸ்வரூபாணாம் .... அஸ்மத் பித்ரு பிதாமஹ: ப்ரபிதா மஹாநாம் மாத்ரு, பிதாமஹீ ப்ரபிதாமஹிநாம் ... கோத்ராணாம் வஸுருத்ராதித்ய ஸ்வரூபாணாம் .... அஸ்மத் மாதாஹ : மாது: பிதாமஹ: மாது: பிதாமஹீ - மாது ப்ரபிதாமஹீநாம் வர்கத்வய பித்ருணாம் அக்ஷய்யத்ருப்த்யர்த்தம் அமாவாஸ்யா புண்யகாலே (தர்சச்ராத்தம் திலதர்பண) ரூபேண கரிஷ்யே என்று ஸங்கல்பித்து இடுக்குப்புல்லை வடபுறம் எரிந்துவிட்டு பூணூலை உபவீதமாகப் போட்டுக்கொண்டு கீழ்க்கண்டபடி ஸாத்விகத்யாகம் செய்ய வேண்டும்.
பகவாநேவ ஸ்வேஸஷபூதம் இதம் வர்க்த்வய பித்ருத் உத்திஸ்ய தர்ஸஸ்ராத்தாக்யம் கர்மஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே ஸ்வயமே காரயதி
பிறகு ப்ராசீனாவீதம் செய்து கொண்டு தர்ப்பங்களை தெற்கு நுனியாக கீழ்ப்பக்கத்திலும் அதற்கு மேற்கில் 4 தர்ப்பங்களைத் தெற்கு நுனியாகவும் போட்டு அவைகளின் மீது கிழக்குப் பக்கத்தில் 5 அல்லது 3 தர்ப்பங்களால் ஒரு புக்னத்தை தெற்கு நுனியாகவும் மற்றொரு புக்னத்தை மேற்கு பக்கத்தில் தெற்கு நுனியாகவும் போட்டு, பிறகு பவித்ரவிரல் கட்டை விரல்களால் சிறிது எள்ளை எடுத்துக் கொண்டு,
அபஹதா அஸுரா ரக்ஷõகும்ஸி பிஸாசா:
யே க்ஷயந்தி ப்ருதி வீமநு - அந்யத்ரேதோ கச்சந்து
யத்ரைஷாம் க தம்மந : உதீரதாம்
அவர உத்பராஸ - உத்மத்யமா : பிதர:
ஸோம்யாஸ : அஸீம் ய ஈயு: அவ்ருகா
ருதஜ்ஞா:- தேநோ வந்து பிதரோ ஹவேஷு
அபவித்ர: பவித்ரோ வாஸர்வாவஸ்தாம் கதோபி வா
ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யாப் யந்ர: ஸுசி:
ஓம் பூர்ப்பூவஸ்ஸுவ புண்டரீகாக்ஷõய நம: என்று சொல்லி தீர்த்தத்தை தர்ப்பணம் செய்கிற இடத்தை ப்ரோக்ஷிக்கவும்.

ஆவாஹனம் (பித்ருவர்க்கம்)

பிறகு தெற்கு முகமாக நின்று கொண்டு
ஆயாத பிதர: ஸோம்யா கம்பீரை
பதிபி : பூர்வ்யை:- ப்ரஜாமஸ்மப்யம்
தததோ ரயிசஞ் - தீர்கா யுத்வஞ்ச
ஸதஸார தஞ்ச
....... கோத்ராத் 1. ...... 2. ..... ஸர்மண: வஸுருத்ராதி த்யரூபாத் அஸ்மத் பித்ரூ, பிதாமஹ ப்ரபிதாமஹாந் .... கோத்ரா .... நாம்நீ அஸ்மத் மாத்ரு பிதாமஹி, ப்ரபிதாமஹிஸ்ச ஆவாஹயாமி

ஆஸநம் (பித்ருவர்க்கம்)

மூன்று தர்ப்பங்களால் செய்த மற்றொரு புக்னத்தைக் கையில் எடுத்துக்கொண்டு
ஸக்ருதாச்சிந்நம் பர்ஹிரூர்ணா
மருது ஸ்யோநம் - பித்ருப் யஸ்த்வா
பராம்யஹம் - அஸ்மிந்த்ஸீதந்து மே பிதா :
ஸோம்யா : பிதாமஹா : ப்ரபிதாமஹாஸ்சா
அநுகைஸ் ஸஹ
.... கோத்ராணாம் 1. ....
2. ..... 3. .....
ஸர்மணாம் வஸுருத்ராதி த்யரூபாணாம் அஸ்மத் பித்ரூந் பிதாமஹ ப்ரபிதாமஹாநாம்
.... கோத்ராணாம் .... நாம்நீ அஸ்மத் மாத்ரு பிதாமஹி, ப்ரபிதாமஹிநாம்ச இதமாஸநம், என்று சொல்லி கிழக்கே உள்ள புக்னத்தோடு இந்த புக்னத்தை தெற்கு நுனியாகச் சேர்க்க வேண்டும்.
இதமர்ச்சனம் என்று எள்ளை சேர்த்துவிட்டு
ஊர்ஜம வஹந்தீ :- அம்ருதம் க்ருதம் பய: கீலாலம்
பரிஸ்ருதம் ஸ்வதா ஸ்த தர்பயதே மே பித்ரூத்
என்று எள்ளும் ஜலமும் இரு கைகளில் சேர்த்து எடுத்து இரு கட்டை விரல்களும் கலக்காமல் வலது கட்டை விரல் இடுக்கால் புக்னத்தின் மீது விடவும்.

ஆவாஹனம் (மாதா மஹவர்க்கம்)

ஆயாத மாது: பிதர: ஸோம்யா கம்பீரை : பதிபி:
பூர்வ்யை: - ப்ரஜாமஸ்மப்யம் தததோ ரயிஞ்ச - தீர்க்காயுத்வஞ்ச ஸதஸாரதஞ்ச
.... கோதராந் 1. ....
2. ...... 3. .....
ஸர்மண: வஸுருத்ராதித்ய ரூபாந், அஸ்மத் மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதாமஹாந் .... கோத்ர: ..... நாம்நீ: மாதாமஹி: மாது: பிதாமஹீ: மாது: ப்ரபிதாமஹீஸ்ச ஆவாஹயாமி என்று எள்ளை மேலண்டை புக்னத்தின் மீது சேர்க்கவும்.
ஆஸநம் (மாதா மஹவர்க்கம்)
ஸக்ருதாச்சிந்தம் பர்ஹிரூர்ணா ம்ருது ஸ்யோநம் - பித்ருப்யஸ்
த்வா பராம்யஹம் - அஸ்மிந்த் ஸீதந்துமே பிதர: ஸோம்யா :
பிதாமஹ : ப்ரபிதாமஹாஸ்ச - அநுகைஸ் ஸஹ :
.... கோதராந் 1. ....
2. .... 3. ....
ஸர்மணாம்: வஸுருத்ராதித்ய ரூபாந், அஸ்மத் மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதாமஹாநாம் ... கோத்ராணாம் .... நாம்நீ: மாதாமஹீ: மாது: பிதாமஹீ: மாது: ப்ரபிதாமஹீநாம் ச இதம் ஆஸநம் என்று 3 தர்ப்பங்களுள்ள புக்னத்தை ஆஸனமாகச் சேர்த்து இதமாச்சனம் என்று சொல்லி எள்ளை சேர்த்து
ஊர்ஜம் வஹந்தீ :- அம்ருதம் க்ருதம் பய கீலாலம்
பரீஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதே மே மாது பித்ரூந்
என்று எள்ளும் ஜலமும் விடவேண்டியது. பிறகு தெற்கு முகமாக இருந்து இடது முழங்காலைத் தரையில் ஊன்றி தர்ப்பணம் என்பதின் கீழ் குறிப்பிட்டபடி இரண்டு வர்க்கத்தாரையும் சொல்லி இருகைகளையும் சேர்த்துக் கொண்டு வலதுகை கட்டை விரல் இடுக்கால் மும்மூன்று தடவை தர்ப்பணம் செய்ய வேண்டியது.

தர்ப்பணம் பித்ருவர்க்கம் (புருஷர்கள்)

பிதாவுக்கு
1. உதீரதாம் அவர உத்பராஸ:- உந்மத்யமா : பிதர : ஸோம்யாஸ :- அஸும்ய ஈயு:- அவ்ருகா ரிதஜ்ஞா : தே நோவந்து பிதரோ ஹவேஷு
.... கோத்ராந் ... ஸர்மண :- வஸுருபாந் அஸ்மத் பித்ரூந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
2. அங்கிரஸோ ந : பிதரோ நவக்வா - அதர்வாணோப்ருகவ : ஸோம்யாஸ : தேஷாம் வயம் ஸுமநௌ யஜ்ஞாநாம் - அபிபத்ரே ஸெளமநஸே ஸ்யாம்
.... கோத்ராந் .... ஸர்மண:- வஸுருபாந் அஸ்மத் பித்ரூந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
3. ஆயந்து ந பிதர :- மநோஜவஸ அக்நிஷ்வாத்தா - பதிபிர்தேவயாநை: அஸ்மிந் யஜ்ஞே ஸ்வதயா - மதந்து அதிப்ருவந்து தே அவந்த் ஸ்மாந்
.... கோத்ராந் .... ஸர்மண:- வஸுருபாந் அஸ்மத் பித்ரூந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
பிதாமஹருக்கு
1. ஊர்ஜம் வஹந்தீ :- அம்ருதம் க்ருதம் பய கீலாலம்
பரீஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதே மே பித்ரூந்
..... கோத்ராந் ... ஸர்மண:- ருத்ரரூபாந் அஸ்மத் பிதா மஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
2. பித்ருப்ய : ஸ்வதாவிப்ய : ஸ்வதா நம: பிதாமஹேப்ய : ஸ்வதாவிப்ய - ஸ்வதா நம: ப்ரபிதாம்ஹேப்ய : ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம: அக்ஷந்பிதர:
.... கோத்ராந் .... ஸர்மண :- ருத்ரரூபாந் அஸ்மத் பிதா மஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
3. யே சேஹ பிதர: யேச நேஹ - யாகும்ஸ்ச வித்மயாந் உ ச நப்ரவித்ம - அக்நே தாந் வேத்த - யதிதே ஜாதவேத: தயாப்ரத்தகும் ஸ்வதயா மதந்து
.... கோத்ராந் .... ஸர்மண :- ருத்ரரூபாந் அஸ்மத் பிதா மஹாந் ஸ்வதா
நமஸ் தர்ப்பயாமி

ப்ரபிதாமஹருக்கு

1. மதுவாதா ருதாயதே - மதுக்ஷரந்தி ஸிந்தவ : மாத்வீர்ந ஸந்த்வோஷதீ
..... கோத்ராந் .... ஸர்மண ஆதித்யரூபாந் அஸ்மத் ப்ரபிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
2. மது நக்தமுதோஷஸி - மதுமத்பார்திவகும் ரஜ - மதுத்யௌ அஸ்து ந : பிதா:
..... கோத்ராந் .... ஸர்மண ஆதித்யரூபாந் அஸ்மத் ப்ரபிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
3. மதுமாந்நோ வநஸ்பதி - மதுமாகும் அஸ்து ஸூர்ய : மாதவீர் காவோ பவந்து ந:
..... கோத்ராந் .... ஸர்மண ஆதித்யரூபாந் அஸ்மத் ப்ரபிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

பித்ருவர்க்கம் (ஸ்த்ரீகள்)

மாதா (தாயார்)
.... கோத்ராந் .... நாம்நீ :- வஸுரூபா: அஸ்மத் மாத்ரூ : ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (3 தடவை தர்ப்பணம்)

பிதாமஹி (தகப்பனார் வழிப்பாட்டி)

.... கோத்ராந் ..... நாம்நீ :- ருத்ரரூபா: அஸ்மத் ப்ரபிதாமஹி: ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (3 தடவை தர்ப்பணம்)

ப்ரபிதாமஹி (தகப்பனாருக்குப் பாட்டி)

.... கோத்ராந் ..... நாம்நீ :- ஆதித்யரூபா: அஸ்மத் ப்ரபிதாமஹி: ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (3 தடவை தர்ப்பணம்)
ஜ்ஞாதாஜ்ஞாத வர்கத்வய பித்ரூந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி என்று 3 தடவையும், கோத்ரா ஜ்ஞாதா ஜ்ஞாத பித்ரு பத்நீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி என்று 3 தடவையும் தர்ப்பணம் செய்யவும். பிறகு ஊர்ஜம் வஹந்தீ :- அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதே மே பித்ரூந் என்று பித்ருவர்க்க புக்னத்தின் மீது எள்ளுடன் ஜலத்தை விட்டு த்ருப்யத, த்ருப்யத த்ருப்யத என்று சொல்லவும்.

மாதாமஹ வர்க்கம் (புருஷர்கள்)

குறிப்பு : மாதாமஹர் (தாயாரின் தகப்பனார்) ஜீவித்திருந்தால் இந்த வர்க்கத்துக்குத் தர்ப்பணம் செய்யவேண்டியதில்லை.

மாதாமஹருக்கு (தாய்வழி பாட்டனார்)

1.  உதீரதாம் அவர உத்பராஸ:- உந்மத்யமா : பிதர : ஸோம்யாஸ :- அஸும்ய ஈயு:- அவ்ருகா ரிதஜ்ஞா : தே நோவந்து மாது: பிதரோ ஹவேஷு
.... கோத்ராந் ... ஸர்மண :- வஸுருபாந் அஸ்மத் மாதாமஹாந்  ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
2. அங்கிரஸோ ந : மாது: பிதர நவக்வா - அதர்வாணோப்ருகவ : ஸோம்யாஸ : தேஷாம் வயம் ஸுமதௌ யஞ்ஞியாநாம் - அபிபத்ரே ஸெளமநஸே ஸ்யாம
.... கோத்ராந் ... ஸர்மண :- வஸுருபாந் அஸ்மத் மாதாமஹாந்  ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
3. ஆயந்து ந: மாது:  பிதர :- மநோஜவஸ அக்நிஷ்வாத்தா - பதிபிர்தேவயாநை: அஸ்மிந் யஜ்ஞே ஸ்வதயா - மதந்து அதிப்ருவந்து தே அவந்த் ஸ்மாந்
.... கோத்ராந் ... ஸர்மண :- வஸுருபாந் அஸ்மத் மாதாமஹாந்  ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

மாது : பிதாமஹருக்கு

1. ஊர்ஜம் வஹந்தீ :- அம்ருதம் க்ருதம் பய கீலாலம்
பரீஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதே மே மாது: பித்ரூந்
..... கோத்ராந் ... ஸர்மண:- ருத்ரரூபாந் அஸ்மத் மாது: பிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
2. பித்ருப்ய : ஸ்வதாவிப்ய : ஸ்வதா நம: பிதாமஹேப்ய : ஸ்வதாவிப்ய - ஸ்வதா நம: ப்ரபிதாம்ஹேப்ய : ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம: அக்ஷந் மாது பிதர:
.... கோத்ராந் .... ஸர்மண :- ருத்ரரூபாந் அஸ்மத் மாது பிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
3. யே சேஹ மாது: பிதர: யேச நேஹ - யாகுஸ்ச வித்மயாந் உ ச நப்ரவித்ம - அக்நே தாந் வேத்த - யதிதே ஜாதவேத: தயாப்ரக்தகும் ஸ்வதயா மதந்தி
.... கோத்ராந் .... ஸர்மண :- ருத்ரரூபாந் அஸ்மத் பிதா மஹாந் ஸ்வதா
நமஸ் தர்ப்பயாமி

மாது : ப்ரபிதாமஹருக்கு

1. மதுவாதா ருதாயதே - மது க்ஷரந்தி ஸிந்தவ : மாத்வீர்ந ஸந்த்வோஷதீ
..... கோத்ராந் .... ஸர்மண ஆதித்ய ரூபாந் அஸ்மத் மாது : ப்ரபிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
2. மது நக்தமுதோஷஸி - மதுமத்பார்திவகும் ரஜ - மதுத்யௌ அஸ்து ந : பிதா:
...... கோத்ராந் .... ஸர்மண ஆதித்யரூபாந் அஸ்மத் மாது : ப்ரபிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
3. மதுமாந்நோ வநஸ்பதி - மதுமாகும் அஸ்து ஸூர்ய : மாதவீர் காவோ பவந்து ந:
..... கோத்ராந் .... ஸர்மண ஆதித்யரூபாந் அஸ்மத் மாது : ப்ரபிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

மாதாமஹ வர்க்கம் (ஸ்த்ரீகள்)

மாதாமஹி
.... கோத்ரா : .... நாம்நீ :- வஸுபத்நீ ரூபா: மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (3 தடவை தர்ப்பணம்)
மாது : பிதாமஹி
.... கோத்ரா: .... நாம்நீ :- ருத்ரபத்நீ ரூபா : மாது : பிதாமஹீ: ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (3 தடவை தர்ப்பணம்)
மாது : ப்ரபிதாமஹி
... கோத்ரா: .... நாம்நீ :- ஆதித்யபத்நீ ரூபா: மாது : ப்ரபிதாமஹீ: ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
.... கோத்ராந் ஜ்ஞாதாஞ்ஞாத : மாதுபித்ருந் ஸ்வதாநம: தர்ப்பயாமி: மாத்ரு பித்ருபத்நீ : ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (3 தடவை தர்ப்பணம்)
ஊர்ஜம் வஹந்தீ :- அம்ருதம் க்ருதம் பய கீலாலம் பரீஸ்ருதம் ஸ்வதா ஸ்ததர்பயதே மே மாது: பித்ரூந் : என்று மாத்ருவர்க்க புக்னத்தின் மேல் போல் எள்ளும் ஜலமும் விடவும். த்ருப்யத த்ருப்யத த்ருப்யத என்று சொல்லவும். எழுந்து கையைக் கூப்பிக் கொண்டு

நமோ வ: பிதரோ ரஸாய - நமோவ: பிதர: ஸ்வதாயை நமோ: வ: பிதரோ மந்யவே நமோ வ பிதரோ ஸுஷ்மாய நமோ வ: பிதரோ ஜீவாய - நமோ வ: பிதர: கோராய - பிதரோ நமோவ: யஏதஸ்மிந் லோகே ஸ்த யுஷ்மாகும் ஸ்தே நு யேஸ்மிந் லோகே மாம்தேநு, ய ஏதேஸ்மிந் லோகே ஸ்த்தயூயம் தேஷாம் வஸிஷ்டா: பூயாஸ்த - யேஸ்மிந் லோகே - அஹம் தேஷாம் வஸிஷ்டோ பூயாஸம்

என்று சொல்லி, உபவீதம் செய்துகொண்டு வாஜே, வாஜே அவத வாஜிந: நோதநேஷீ அம்ருதா ரிதஞ்ஞா - அஸ்ய - மத்வா-பிவத மாதயத்வம் - திருப்தாயத - பிதிபி தேவயானை - தேவதாப்ய - பித்ருப்யஸ்ச மஹாயோகிப்ய - ஏவச நம: ஸ்வதாயை - ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம: என்று சொல்லி புக்னங்களை மூன்று தடவை பிரதக்ஷிணம் செய்து ஸேவித்து அபிவாதநம் செய்ய வேண்டும்.

உத்வாஸநம்

பிறகு ப்ராசீனாவீதம் செய்து கொண்டு எள்ளைக் கையில் எடுத்துக் கொண்டு, .... கோத்ராந் .... ஸர்மண : அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமாஹந், ஸபத்நீகாந், கோத்ராந் ... ஸர்மண : ஸபத்தீகாந் மாதாமஹ மாது : பிதாமஹ மாது : பிரபிதாமஹாஸ்ச யதாஸ்தா நம் ப்ரதிஷ்டாபயாமி என்று சொல்லி நான்கு புக்கினங்களின் மீது எள்ளைச் சேர்த்துவிட்டு பிறகு புக்கினங்களை அவிழ்த்து எல்லா நுனிகளையும் ஒன்று சேர்த்து எள்ளையும் கையில் வைத்துக் கொண்டு
யேஷாம் ந பிதா ந ப்ராதா
நபந்து : நாத்ய கோத்ரிண :
தே த்ருப்தி மகிலா யாந்து
மயா த்யக்தை : குஸைஸ் திலை:
என்று தீர்த்தத்தைச் சேர்த்து கால் படாத இடத்தில் கீழே விடவும். பிறகு <உபவீதம் செய்து கொண்டு, ஆசமனம் செய்து பவித்ரத்தை அவிழ்த்துவிட்டு,
பகவாநேவ ஸ்வஸேஷபூதம் இதம் தர்ஸ ஸ்ராத்தாக்யம் திலதர்த்பணாக்யம் கர்ம ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே ஸ்வயமேவ காரிதவாந் என்று சொல்லவும்.
பகவாந் ப்ரீயதாம் வாஸுதேவ:

ஆபஸ்தம்ப அமாதர்ப்பண விதி

ஆசமனம் செய்து மூன்று தர்ப்பங்களால் செய்த பவித்திரத்தை மோதிரவிரலில் தரித்து ஆஸனமாக சில தர்ப்பங்களைச் சேர்த்து இடுக்கிக் கொண்டு ஸங்கல்பம் செய்ய வேண்டியது.

ஸுக்லாம் பரதரம் - ஸாந்தயே ஓம்பூ: - பூர்புவஸ்ஸுவரோம் மமோபாத்த - ப்ரீத்யர்த்தம், அபவித்ர: பவித்ரோவா ஸர்வாவஸ்தாந் கதோபிவா யஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸபாஹ்யாப்யந்தர: ஸுசி : மானஸம் வாசகம் பாபம் கர்மணா ஸமுபர்ஜிதம் ஸ்ரீராம ஸ்மரணேனைவ வ்யபோஹதி நஸம்சய: ஸ்ரீராம ராம ராம திதிர்விஷ்ணு: ததாவார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச யோகஸ்ச கரணம் சைவ ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்: ஸ்ரீகோவிந்த கோவிந்த கோவிந்த அஸ்ய ஸ்ரீபகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோ ராஞ்ஞயா ப்ரவர்த்த மானஸ்ய ஆத்யப்ரஹ்மண: த்விதீய பரார்தே ஸ்வேத வராஹ கல்பே வைவஸ்வத - மன்வந்தரே அஷ்டா விம்சதி தமே கலியுகே ப்ரதமேபாதே ஜம்பூத்வீபே - பாரத வர்ஷே

பரத கண்டே மேரோ: தக்ஷிணேபார்ஸ்வே - சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே - ப்ரபவாதீனாம் ஷஷ்ட்யா: ஸம்வத்ஸராணாம் மத்யே ..... நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயநே (அல்லது) உத்தராயணே .... ருதௌ .... மாஸே க்ருஷ்ணப÷க்ஷ அமாவாஸ்யாம் புண்யதிதௌ..... வாஸர யுக்தாயாம் ... நக்ஷத்ர யுக்தாயாம் விஷ்ணுயோக விஷ்ணுகரண ஏவம் குண விஸேஷண விஸிஷ்டாயாம் அஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ ப்ராசீனா வீதி (பூணூலை இடமாக மாற்றிக் கொள்ள) .... கோத்ராணாம் வஸுருத்ராதித்யஸ்வ ரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதா மஹானாம் மாத்ரு பிதா மஹி ப்ரபிதா மஹீனாம் .... கோத்ராணாம் ஸபத்னீக மாதாமஹ மாது : பிதாமஹ மாது: ப்ரபிதாமஹாநாம் உபயவம்ஸ பித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்தம் அமாவாஸ்யா: புண்யகாலே தர்சச்சராத்தம் (திலதர்ப்பண) ரூபேணாத்ய கரிஷ்யே.

உபவீதி .... (பூணூலை வலமாக மாற்றிக் கொண்டு ஜலத்தினால் கையைச் சுத்திசெய்து கொள்ள) பிறகு 7 தர்ப்பத்துக்கு குறையாத 9,11,13,15,17,19,21 முதலிய ஒற்றைப்படை தர்ப்பங்களினால் கூர்ச்சம் (அதாவது மேற்படி தர்ப்பங்களை முறுக்கி நுனியும் அடியும் ஒரே பக்கமாக அடுக்கும்படி செய்வது) செய்து தர்ப்பணம் செய்யுமிடத்தில் தர்ப்பபைகளை பரப்பி அதன்மேல் கூர்ச்சத்தை தெற்கு நுனியாக வைக்கவும்.

(கொஞ்சம் எள்ளை எடுத்துக்கொண்டு ப்ராசீனாவீதி - இடம் செய்து கொள்க) ஆயாதபிதர : ஸோம்யாகம்பீரை : பதிபி: பூர்வ்யை: ப்ரஜாமஸ்மப்யம் தததோரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஸதஸாரதஞ்ச அஸ்மின் கூர்சசே வர்கத்வய பித்ரூன் ஆவாஹயாமி (என்று எள்ளை கூர்ச்சத்தில் போடவும்). ஸக்ருதாச் சின்னம் பர்ஹீருர்ணா ம்ருதுஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம், அஸ்மின் ஸீதந்துமே பிதர: ஸோம்யா: பிதாமஹா: ப்ரபிதாமஹாஸச அனுகைஸ்ஸஹவர்கத்வய பித்ரூணாம் இதமாஸனம் (தர்பங்களை ஆஸனமாக போடவும்) ஸகலராதனை: ஸ்வர்ச்சிதம் (என்று எள்ளைக் கூர்ச்சத்தின் மேல் போடவும்) (பிறகு தர்ப்பணம் செய்ய உபயோகிக்கும் ஜலத்தில் எள்ளைப் போட்டுக்கொண்டு கீழ் கூறப்பட்டிருக்கும் மந்திரங்களால் ஒவ்வொன்றும் 3 தடவை தர்ப்பணம் செய்யவும்.)

தர்ப்பணம்
பித்ருவர்க்கம் (புருஷர்கள்)
பிதாவுக்கு
1.  உதீரதாம் அவர உத்பராஸ:- உந்மத்யமா : பிதர : ஸோம்யாஸ :- அஸும்ய ஈயு:- அவ்ருகாரிதஜ்ஞா : தே நோவந்து : பிதரோ ஹவேஷு
.... கோத்ராந் ... ஸர்மண :- வஸுருபாந் அஸ்மத் பித்ரூந்  ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
2. அங்கிரஸோ ந :  பிதரோ நவக்வா:- அதர்வாணோப்ருகவ : ஸோம்யாஸ : தேஷாம் வயம் ஸுமதௌ யஞ்ஞியானாம் - அபிபத்ரே ஸெளமநஸே ஸ்யாம
.... கோத்ராந் ... ஸர்மண :- வஸுருபாந் அஸ்மத் பித்ரூந்  ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
3. ஆயந்து ந:  பிதர :- மநோஜவஸ அக்நிஷ்வாத்தா - பதிபிர்தேவயாநை: அஸ்மிந் யஜ்ஞே ஸ்வதயா - மதந்து அதிப்ருவந்துதே அவந்த்வ ஸ்மாந்
.... கோத்ராந் ... ஸர்மண :- வஸுருபாந் அஸ்மத் பித்ரூந்  ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
பிதாமஹருக்கு
1. ஊர்ஜம் வஹந்தீ :- அம்ருதம் க்ருதம் பய கீலாலம்
பரீஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதே மே பித்ரூந்
..... கோத்ராந் ... ஸர்மண:- ருத்ரரூபாந் அஸ்மத் பிதா மஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
2. பித்ருப்ய : ஸ்வதாவிப்ய : ஸ்வதா நம: பிதாமஹேப்ய : ஸ்வதாவிப்ய - ஸ்வதா நம: ப்ரபிதாம்ஹேப்ய : ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம: அக்ஷந்பிதர:
.... கோத்ராந் .... ஸர்மண :- ருத்ரரூபாந் அஸ்மத் பிதா மஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
3. யே சேஹ பிதர: யேச நேஹ - யாகும் ஸ்சவித்மயாந் உ ச நப்ரவித்ம - அக்நே தாந் வேத்த - யதிதே ஜாதவேத: தயாப்ரத்தகும் ஸ்வதயா மதந்தி
.... கோத்ராந் .... ஸர்மண :- ருத்ரரூபாந் அஸ்மத் பிதா மஹாந் ஸ்வதா
நமஸ் தர்ப்பயாமி
ப்ரபிதாமஹருக்கு
1. மதுவாதா ருதாயதே - மது க்ஷரந்தி ஸிந்தவ : மாத்வீர்ந ஸந்த்வோஷதீ
..... கோத்ராந் .... ஸர்மண ஆதித்யரூபாந் அஸ்மத் ப்ரபிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
2. மது நக்தமுதோஷஸி - மதுமத்பார்திவகும் ரஜ - மதுத்யௌ அஸ்து ந : பிதா:
..... கோத்ராந் .... ஸர்மண ஆதித்யரூபாந் அஸ்மத் ப்ரபிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
3. மதுமாந்நோ வநஸ்பதி - மதுமாகும் அஸ்து ஸூர்ய : மாதவீர் காவோ பவந்து ந:
..... கோத்ராந் .... ஸர்மண ஆதித்யரூபாந் அஸ்மத் ப்ரபிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
பித்ருவர்க்கம் (ஸ்த்ரீகள்)
மாதா (தாயார்)
.... கோத்ரா .... நாம்நீ :- வஸுரூபா: அஸ்மத் மாத்ரூ : ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (3 தடவை தர்ப்பணம்)
பிதாமஹி (தகப்பனார் வழிப்பாட்டி)
.... கோத்ரா ..... நாம்நீ :- ருத்ரரூபா: அஸ்மத் பிதாமஹி: ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (3 தடவை தர்ப்பணம்)
ப்ரபிதாமஹி (தகப்பனாருக்குப் பாட்டி)
.... கோத்ரா ..... நாம்நீ :- ஆதித்யரூபா: அஸ்மத் ப்ரபிதாமஹீ: ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (3 தடவை தர்ப்பணம்)
மாதாமஹ வர்க்கம் (புருஷர்கள்)

குறிப்பு : மாதாமஹர் (தாயாரின் தகப்பனார்) ஜீவித்திருந்தால் இந்த வர்க்கத்துக்குத் தர்ப்பணம் செய்யவேண்டியதில்லை.
மாதாமஹருக்கு (தாய்வழி பாட்டனார்)

1.  உதீரதாம் அவர உத்பாரஸ:- உந்மத்யமா : பிதர : ஸோம்யாஸ :- அஸும்ய ஈயு:- அவ்ருகா ரிதஜ்ஞா : தே நோவந்து மாது: பிதரோ ஹவேஷு
.... கோத்ராந் ... ஸர்மண :- வஸுருபாந் அஸ்மத் மாதாமஹாந்  ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

2. அங்கிரஸோ ந : மாது: பிதர நவக்வா - அதர்வாணோப்ருகவ : ஸோம்யாஸ : தேஷாம் வயம் ஸுமதௌ யஞ்ஞியாநாம் - அபிபத்ரே ஸெளமநஸே ஸ்யாம
.... கோத்ராந் ... ஸர்மண :- வஸுருபாந் அஸ்மத் மாதாமஹாந்  ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

3. ஆயந்து ந: பிதர :- மநோஜவஸ அக்நிஷ்வாத்தா - பதிபிர்தேவயாநை: அஸ்மிந் யஜ்ஞே ஸ்வதயா - மதந்து அதிப்ருவந்து தே அவந்த் ஸ்மாந்
.... கோத்ராந் ... ஸர்மண :- வஸுருபாந் அஸ்மத் மாதாமஹாந்  ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
மாது : பிதாமஹருக்கு

1. ஊர்ஜம் வஹந்தீ :- அம்ருதம் க்ருதம் பய கீலாலம்
பரீஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதே மே மாது: பித்ரூந்
..... கோத்ராந் ... ஸர்மண:- ருத்ரரூபாந் அஸ்மத் மாது: பிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

2. பித்ருப்ய : ஸ்வதாவிப்ய : ஸ்வதா நம: பிதாமஹேப்ய : ஸ்வதாவிப்ய - ஸ்வதா நம: ப்ரபிதாம்ஹேப்ய : ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம:
.... கோத்ராந் .... ஸர்மண :- ருத்ரரூபாந் அஸ்மத் மாது பிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

3. யே சேஹ மாது: பிதர: யேச நேஹ - யாகும் ஸ்ச வித்மயாகும் உ ச நப்ரவித்ம - அக்நே தாந் வேத்த - யதிதே ஜாதவேத: தயாப்ரத்தகும் ஸ்வதயா மதந்து
.... கோத்ராந் .... ஸர்மண :- ருத்ரரூபாந் அஸ்மத் மாது :பிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
மாது : ப்ரபிதாமஹருக்கு

1. மதுவாதா ருதாயதே - மது க்ஷரந்தி ஸிந்தவ : மாத்வீர்ந ஸந்த்வோஷதீ
..... கோத்ராந் .... ஸர்மண ஆதித்ய ரூபாந் அஸ்மத் மாது : ப்ரபிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

2. மது நக்தமுதோஷஸி - மதுமத்பார்திவகும் ரஜ - மதுத்யௌ அஸ்து ந : பிதா:
...... கோத்ராந் .... ஸர்மண ஆதித்யரூபாந் அஸ்மத் மாது : ப்ரபிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

3. மதுமாந்நோ வநஸ்பதி - மதுமாகும் அஸ்து ஸூர்ய : மாதவீர் காவோ பவந்து ந:
..... கோத்ராந் .... ஸர்மண ஆதித்யரூபாந் அஸ்மத் மாது : ப்ரபிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
மாதாமஹ வர்க்கம் (ஸ்த்ரீகள்)
மாதாமஹி
.... கோத்ரா : .... நாம்நீ :- வஸுபத்நீ ரூபா: மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (3 தடவை தர்ப்பணம்)
மாது : பிதாமஹி
.... கோத்ரா: .... நாம்நீ :- ருத்ரபத்நீ ரூபா : மாது : பிதாமஹீ: ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (3 தடவை தர்ப்பணம்)
மாது : ப்ரபிதாமஹி
... கோத்ரா: .... நாம்நீ :- ஆதித்யபத்நீ ரூபா: மாது : ப்ரபிதாமஹீ: ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
.... கோத்ராந் ஜ்ஞாதாஞ்ஞாத :மாத்ரு பித்ருபத்நீ : ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (3 தடவை தர்ப்பணம்)

ஊர்ஜம் வஹந்தீ :- அம்ருதம் க்ருதம் பய கீலாலம் பரீஸ்ருதம் ஸ்வதா ஸ்ததர்பயதே மே மாது: பித்ரூந் : என்று எள்ளும் ஜலமும் விடவும். த்ருப்யத த்ருப்யத த்ருப்யத என்று உபசாரம் சொல்லவும்.
***************

உபவீதி
ப்ரதக்ஷிணம் :
தேவதாய் : பித்ருப்யஸ்ச மஹாயோகிப்ய ஏவச
நமஸ் ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோநம:
இடம் - வர்கத்வய பித்ருப்யோ நம: என்று சுர்ச்சத்தில் எள்ளை சேர்க்கவும்
வலம் - நமஸ்காரம்
தேவதாப்ய : பித்ருப்யஸ்ச மஹாயோகிப்ய ஏவச நமஸ் ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ : நமோ நம : - ப்ராசீனாவீதி (இடம்)
உத்வாஸநம்
ஆயாத பிதர : ஸோம்யா கம்பீரை : பதிபி: பூர்வ்யை: ப்ரஜாம் அஸ்மப்யம் தததோரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச சத ஸாரதஞ்ச அஸ்மாத் கூர்சாத் வர்கத்வய பித்ரூன் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி என்று கூச்சங்களின் மீது எள்ளைச் சேர்க்கவும்.
பிறகு கூர்ச்சங்களை அவிழ்த்து எல்லா நுனிகளையும் ஒன்று சேர்த்து எள்ளையும் கையில் வைத்துக்கொண்டு
யேஷாம் நமாதா நபிதா நபந்து : நான்ய கோத்ரிண : தேஸர்வேத்ருப்திம் ஆயாந்துமயோ த்ஸ்ருஷ்டை : குஸோதகை: என்று தீர்த்தத்தை விடவும்.
வலம் பவித்ரம் கர்ணே த்ருத்வா ஆசமனம் செய்யவும். பவித்ரத்தை அவிழ்த்தெறிந்து விட்டு மறுபடியும் ஆசமனம் செய்யவும்.
****************

ருதுக்கள் :

சித்திரை, வைகாசி - வஸந்த ருது
ஆனி, ஆடி - க்ரீஷ்ம ருது
ஆவணி, புரட்டாசி - வர்ஷ ருது
ஐப்பசி, கார்த்திகை - சரத் ருது
மார்கழி, தை - ஹேமந்த ருது
மாசி, பங்குனி - ஸிஸிர ருது

மாதங்கள்
சித்திரை - மேஷம்
வைகாசி - வ்ருஷபம்
ஆனி - மிதுனம்
ஆடி - கடகம்
ஆவணி - ஸிம்மம்
புரட்டாசி - கன்னி
ஐப்பசி - துலாம்
கார்த்திகை - விருச்சிகம்
மார்கழி - தனுஸு
தை - மகரம்
மாசி - கும்பம்
பங்குனி - மீனம்

வாரங்கள் :
ஞாயிற்றுக்கிழமை - பானு வாஸரம்
திங்கட்கிழமை - இந்து வாஸரம்
செவ்வாய் கிழமை - பௌம வாஸரம்
புதன் கிழமை - ஸெளம்ய வாஸரம்
வியாழக்கிழமை - குரு வாஸரம்
வெள்ளிக்கிழமை - சுக்ர வாஸரம்
சனிக்கிழமை - ஸ்திர வாஸரம்

நக்ஷத்திரங்கள் :

அஸ்வதி - அஸ்விநி
பரணி - அபபரணி
கார்த்திகை - க்ருத்திகா
ரோஹிணீ - ரோஹிணீ
மிருகசீர்ஷம் - ம்ருகஸிரோ
திருவாதிரை - ஆர்த்ரா
புனர்பூசம் - புனர்வஸு
பூசம் - புஷ்யம்
ஆயில்யம் - ஆச்லேஷா
மகம் - மகா
பூரம் - பூர்வபல்குனீ
உத்திரம் - உத்ர பல்குனீ
ஹஸ்தம் - ஹஸ்த
சித்திரை - சித்ரா
ஸ்வாதி - ஸ்வாதீ
விசாகம் - விசாகா
அனுஷம் - அனுராதா
கேட்டை - ஜ்யேஷ்டா
மூலம் - மூல
பூராடம் - பூர்வாஷாடா
உத்திராடம் - உத்தராஷாடா
திருவோணம் - சிரவண
அவிட்டம் - ஸ்ரவிஷ்ட்டா
சதயம் - ஸதபிஷக்
பூரட்டாதி - பூர்வப்ரோஷ்ட்டபதா
உத்ரட்டாதி - உத்ரப்ரோஷ்ட்டபதா
ரேவதி - ரேவதி

சில முக்கிய அபிவாதனப் ப்ரவரங்கள்

1. ஆத்ரயே - ஆத்ரயே - அர்ச்சநாரிச ஸ்யாவாஸ்ய
2. உதுத்ய - ஆங்கீரஸ - ஒளதுத்ய - கௌதம
3. நைத்ருவ - காச்யப - ஆவத்ஸார - நைத்ருவ
4. ரேப - காச்யப - ஆவத்ஸார - நைத்ருவ ரைவ
5. சாண்டில்ய - காச்யப - ஆவத்ஸார - நைத்ருவ சாண்டில்ய
6. காச்யப காச்யப - ஆவத்ஸார - நைத்ருவ வத்ஸர - நைத்ருவ சாண்டில்ய ரேப - ரைப - சாண்டில - சாண்டில்ய
7. கப்யாங்கரிஸ - ஆங்கிரஸ - ஆமஸாய்ய - ஓளருக்ஷ்ய
8. கார்க்கேய - ஆங்கீரஸ - கார்க்ய- சைன்ய
9. கார்க்கேய - ஆங்கீரஸ - சைன்யகார்க்ய பார்ஸ்பத்ய - பாரத்வாஜ
10. கௌண்டின்ய - வாஸிஷ்ட - மைத்ராவருண - கௌண்டின்ய
11. கௌசிக் - வைச்வாமித்ர - அகமர்ஷண - கௌசிக
12. கௌதம - ஆங்கீரஸ - ஆயாஸ்ய - கௌதம
13. பராசர - வாஸிஸ்ட - சாகத்ய - பாராசர்ய
14. பௌருகுத்ஸ - ஆங்கீரஸ - பௌருகுத்ஸ - த்ராஸதஸ்ய
15. பாதராயண - ஆங்கீரஸ - பௌருகுத்ஸ - த்ராஸதஸ்ய
16. பாரத்வாஜ - ஆங்கீரஸ - பார்ஹஸ்பத்ய - பாரத்வாஜ
17. மௌத்கல்ய - ஆங்கீரஸ - ஆம்பரீஷ - மௌத்கல்ய
18. மௌத்கல்ய - ஆங்கீரஸ - பார்ம்ச்வ - மௌத்கல்ய
19. மௌத்கல்ய - ஆத்ரேய - ஆர்ச்சனானஸ - பௌர்வாதித
20. மௌனபாக்கவ - பார்க்கவ - வைதஹவ்ய - ஸா வேதஸ
21. ராதீத்ர - ஆங்கீரஸ - வைரூப - ராதீத்ர
22. லோஹித - வைச்வாமித்ர - அஷ்டக - லோஹித
23. வாதூல - பார்க்வ - வீதஹவ்ய - ஸாவேதஸ
24. வார்த்தரஸ - வார்த்தஸ (ஏகார்ஷேய)
25. வாஸிஷ்ட - வாஸிஷ்ட மைத்ரா வருண - கௌண்டின்ய
26. விச்வாமித்ர - வைச்வாமித்ர தேவராத - ஒளதல
27. விஷ்ணுவ்ருத்த - ஆங்கீரஸ - பௌருகுத்ஸ - த்ரான தஸ்ய
28. சாண்டில்ய - காச்யப - தைவல - ஆஸித
29. சாண்டில்ய - காச்யப - ஆவத்ஸார - நைத்ருவ - ரேப - ரைப - சௌண்டில்ய - சாண்டில்ய
30. சாலாவத - வைச்வாமித்ர தைவராத - ஒளதல
31. சௌனக - கார்த்ஸமத (ஏகார்ஷேய)
32. ஸ்ரீவத்ஸ - பார்க்கவ - ச்யவன - ஆப்னவான - ஒளர்வ - ஜாமைதக்ன்ய
33. ஷடமர்ஷண - ஆங்கீரஸ - பௌருகுத்ஸ - த்ராஸதஸ்ய
34. ஸங்க்ருதி - சாத்ய - ஸாங்க்ருத்ய - கௌரிவீத
35. ஸங்க்ருதி - ஆங்கீரஸ - ஸாங்க்ருத்ய - கௌரிவீத
36. ஹ்ரித - ஆங்கீரஸ - அம்பரீஷ - யௌவனாச்வ

ஸங்கல்பம்
சித்திரை மாதப் பிறப்பு தர்ப்பணத்திற்கு மேஷ ஸங்கிரமண புண்யகாலே, மேஷ ஸங்கிர மண ஸ்ரார்த்தம் தில தர்ப்பண ரூபணே கரிஷ்யே எனவும்
தை மாத பிறப்பிற்கு, மகர ஸங்கிரமண புண்யகாலே மகர ஸங்கிரமண ஸ்ரார்த்தம் என்றும்
சூர்ய கிரஹணத்திற்கு ஸுர்யோபராக புண்யகாலே, சூர்யோபராக ஸ்ரார்த்தம் என்றும்
சந்திர கிரஹணத்திற்கு ஸோமோபராக புண்யகாலே ஸோமோபராக எனவும்
ஸங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.

பரிஷேசனம்

சாப்பிட உட்கார்ந்தவுடன் இலையில் எல்லா பதார்த்தங்களும் பரிமாறி அன்னம் வைக்கும் சமயத்தில் அன்னத்திற்கு கைகூப்பி வணங்கிவிட்டு இலையை வலது கையினால் பிடித்துக்கொண்டு அன்னம் வைத்த பிறகு இடது கையினால் இலையைத் தொட்டுக் கொண்டு வலது கையில் தீர்த்தத்தை எடுத்து ஓம் பூர்புவஸ்ஸுவ : என்று பிரதக்ஷிணமாகத் தீர்த்தம் கீழே விழும்படி இலையை சுற்றவும். பிறகு கொஞ்சம் தீர்த்தம் எடுத்து தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி தியோயோந:
ப்ரசோதயாத் என்று சொல்லி அன்னத்தை ப்ரோக்ஷிக்கவும். தேவஸவித: ப்ரஸுவ என்று மறுபடியும் தீர்த்தத்தால் சுற்றவும். நெய்யினால் அபிகாரம் செய்த பிறகு கொஞ்சம் தீர்த்தம் எடுத்து ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி என்று பகலிலும் ருதம் த்வாஸத்யேன பரிஷிஞ்சாமி என்று இரவிலும் இலையை சுற்றவும். (ஆபோஸனம் பிறரைக் கொண்டு போடச் சொல்லவும்) அம்ருதோ பஸ்தரணமஸி என்று சொல்லி உளுந்து முழுங்கக்கூடிய அளவுள்ள தீர்த்தத்தை உட்கொண்டு 6 ப்ராணாஹுதிகள் செய்ய வேண்டியது. (மூன்று விரல் அளவில் கொஞ்சம் கொஞ்சமாக அன்னத்தைக் கீழ்க்கண்ட மந்திரங்களால் பற்களில் படாமல் 6 தடவை விழுங்க வேண்டியது.)
ப்ராணாய ஸ்வாஹா,
அபானாய ஸ்வாஹா,
வ்யானாய ஸ்வாஹா,
உதானாய ஸ்வாஹா,
ஸமானாய ஸ்வாஹா,
ப்ரஹ்ம்ணே ஸ்வாஹா,
என்று சொல்லிய பிறகு வலது கையால் இலையை பிடித்துக் கொண்டு இடது கையை தீர்த்தத்தினால் சுத்தி செய்து இடது கையினால் மார்பைத் தொட்டு ப்ரஹ்மணிம ஆத்மா அம்ருதத்வாயா என்று சொல்லிவிட்டு (இடது கையை சுத்தி செய்து கொள்க) சாப்பாடு முடிந்தவுடன் முன்போல் கொஞ்சம் தீர்த்தத்தை பிறரைக்கொண்டு கையில் சேர்க்கச் செய்து அம்ருதாபிதானமஸி என்று சொல்லி கொஞ்சம் உட்கொண்டு மீதியை ரௌரவே அபுண்ய நிலயே பத்ம அற்புத நிவாஸினாம் அர்த்தினாம் உதகம் தத்தம் அக்ஷ்ய்யம் உபதிஷ்டது என்று சொல்லி கீழே விடவும்.
அன்ன தாதா ஸுகீ பவ என்று கூறவும்.

Wednesday, September 12, 2012

கோயிலுக்கு எதிரே இருக்கும் வீட்டில் குடியிருக்கக்கூடாது என்கிறார்களே ஏன்?

கோயிலுக்கு நேர் எதிர்புறம் வீடு கட்டக்கூடாது. அந்தப்பகுதியை சந்நிதித்தெரு என்று விட்டுவிட வேண்டும். தெய்வத்தின் நேர் கொண்ட பார்வையில் திருக்குளம், நந்தவனம், சந்நிதிதெரு இவற்றைத் தவிர வேறு கட்டடங்கள் இருக்கக்கூடாது.

Tuesday, September 11, 2012

கனகதாரா ஹோமம் (திறமையை வெளிப்படுத்த)

ஒரு மனிதனின் வெற்றிக்கு மூலகாரணமாக இருப்பதே அவனது திறமைதான். ஆனால், சிலர் இதை உள்ளடக்கி வைத்து இருப்பார்கள். கனகதாரா ஹோமம் பரம ஏழையைக் கூட செல்வந்தன் ஆக்கிவிடும் வகையில் அவனுக்குள் புதைந்து கிடக்கும் திறமையை வெளிக்கொண்டு வரும் சக்தியுடையது.

Monday, September 10, 2012

ஆகமவிதிகள் என்பது என்ன?

ஆலயவழிபாட்டு விதிமுறைகளைத் தான் ஆகமவிதிகள் என்று குறிப்பிடுகிறார்கள். இதில் அன்றாட பூஜைமுறை, திருவிழா, கும்பாபிஷேகம் போன்ற விசேஷ காலங்களில் செய்யும் சிறப்பு வழிபாடுகள், ஹோமம் நடத்தும் முறை போன்றவை இடம் பெற்றுள்ளன.

Sunday, September 9, 2012

வேம்பு தோன்றிய கதை தெரியுமா?

நம் அன்றாட வாழ்வில் நமக்குப் பயன்படும் தாவர வகைகளில் வேம்பும் ஒன்று. சிறந்து கிருமிநாசினியாக பயன்படுகிறது. இத்தகைய வேம்பு எவ்வாறு தோன்றியது தெரியுமா? பாற்கடலைக் கடைந்த போது அமிர்தம் கிடைத்தது. அந்த அமிர்தத்தை திருமால் மோகினி வடிவம் கொண்டு தேவர்களுக்கு அகப்பையினால் பகிர்ந்து கொண்டு இருக்கும்போது, அசுரர்கள் மோகினியின் அழகில் மயங்கியிருக்கையில், அசுரர்களில் ஒருவன் தேவர்களின் பந்தியில் யாருக்கும் தெரியாமல் அமர்ந்து விடுகிறான். திருமாலும் தேவர்களின் வரிசையில் தேவர்களைப் போல இருந்த அசுரனுக்கு மூன்று அகப்பை அமிர்தத்தைக் கொடுத்து விடுகிறார். அமிர்தத்தைக் கொடுத்த திருமாலுக்கு அவன் அசுரன் என்பதை அருகில் இருந்த சூரியனும் சந்திரனும் ஜாடை காட்டிச் சொல்ல, அமிர்தத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்த அசுரனின் தலையை திருமால் அகப்பையால் வெட்டி விடுகிறார். இதனால் தலை (ராகு) வேறு உடல் (கேது) வேறு என வெட்டுண்ட அசுரன், தனது வாயில் மீதமிருந்த அமிர்தத்தைக் கக்கி விடுகிறான். தன்னைக் காட்டிக் கொடுத்ததால் சூரியனும் சந்திரனும் ராகு கேதுவுக்கு பகை கிரகங்களாக ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.

கக்கிய அமிர்தமானது பூமியில் விழுந்து வேப்பமரமானது. வேம்புக்கு கசப்புச் சுவை ஏனென்றால், அது அசுரனின் (பாம்பின்) வாயிலிருந்து வெளிப்பட்டதால்தான். இப்படி பாம்பின் நஞ்சும் அமிர்தமும் கலந்து உருவானதே வேம்பு. வேம்பின் இலை, பட்டை, வேர், பிசின், காய், எண்ணெய், முதலியன உண்ணும் மருந்தாகவும், புற மருந்தாகவும் பலவிதமான நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. அப்படிப்பட்ட வேம்பை உண்டு வந்தால் மனிதனுக்கு நோய் என்பதே கிடையாது.

வேம்பின் மருத்துவ குணங்கள்: வேம்பு வீக்கம், கட்டிகளைக் கரைத்தல்,சிறுநீர் பெருக்குதல், வாதம், மஞ்சள் காமாலை, காய்ச்சல், பித்தம், கபம், நீரிழிவு, தோல் வியாதிகள், பூச்சிக் கொல்லியாகவும் பயன் படுகிறது. வேம்பு இலையை அரைத்துக் கட்டி வர ஆறாத ரணம், பழுத்து உடையாத கட்டி, வீக்கம் தீரும். வேப்பங்கொழுந்து 20 கிராம், 4 கடுக்காய் தோல், பிரண்டைச் சாறு விட்டரைத்து அரை அவுன்ஸ் விளக்கெண்ணெய் கலந்து கொடுக்கக் குடல் பூச்சி வெளியாகும். வேம்பின் பஞ்சாங்கச் சூரணம் 10 அரிசி எடை நெய், தேன், வெண்ணெய், பாலில் 2 மண்டலம் கொடுக்க எந்த மருந்துலும் கட்டுப் படாத நோய்கள் மதுமேகம், என்புருக்கி, இளைப்பு, காசம் ஆகியவை தீரும். உடம்பு கெட்டி படும், நரை திரை மாறும்.
வேம்பு இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்துத் தடவி வரப் பொன்னுக்கு வீங்கி, பித்த வெடிப்பு, கட்டி, பருவு, அம்மைக் கொப்புளம் ஆகியவை குணமாகும். 5 கிராம் உலர்ந்த பழைய வேம்புப் பூவை 50 மி.லி. குடிநீர் விட்டு மூடி வைத்திருந்து வடிகட்டிச் சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும். கல்லீரலை நன்கு இயக்குவிக்கும். 3 கிராம் வேப்பம் விதையை சிறிது வெல்லம் கூட்டி அரைத்துக் காலை, மாலையாக 40 நாட்கள் சாப்பிட மூல நோய் தீரும். நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் நோய்கள், சூதக சன்னி, நரம்பு இசிவு, குடல் புழுக்கள் தீரும். 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட முதிர்ந்த வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரைக் கூட்டி காலை, மாலை நீண்ட நாட்கள் சாப்பிட்டு வரத் தொழுநோய் முதலான அனைத்துத் தோல் நோய்களும் குணமாகும்.  வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் மறைந்து விடும்.

Tuesday, September 4, 2012

குடும்பம் செழிப்புடன் இருக்க வீட்டின் முன் எந்த மரம் வளர்க்க வேண்டும்?

லட்சுமியின் அம்சம் கொண்ட நெல்லி, மாமரம், துளசி ஆகியவற்றை வைக்கலாம். பூஜைக்குத் தேவையான செம்பருத்தி, நந்தியாவட்டை போன்ற பூச்செடிகளையும் வைப்பதும் நல்லது.

ஒவ்வொரு கோயிலிலும் தலவிருட்சம் (தல மரம்) இருப்பதன் நோக்கம் என்ன?

காடாக இருந்த இடங்களில் சுவாமியோ, அம்மனோ எழுந்தருளி காட்சி கொடுத்ததாக கோயில் தலபுராணங்களில் வரலாறு இடம்பெற்றிருக்கும். கடம்பவனம் என்று மதுரைக்கு ஒரு பெயருண்டு. கடம்பவனமே மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலாக உள்ளது. இங்கு கடம்பமரம் தலவிருட்சம். இவ்வாறு, அந்தந்த இடங்களில் எது முக்கியத்துவம் பெற்றிருக்கும் மரமோ, அதை தலமரமாக வைத்தனர். இயற்கையை இறைவனாகப் போற்ற வேண்டும் என்ற அரிய உண்மை இதில் புதைந்து கிடக்கிறது. பசுமையான மரத்தை வளர்த்தால் நாட்டில் மழை வளம் பெருகும் என்ற அடிப்படையில் தலவிருட்சம் அமைக்கப்பட்டது.

Monday, September 3, 2012

குளிக்காமல் விபூதி குங்குமம் பூசலாமா?

நீராடியபின் விபூதி பூசுவது தான் சரியானமுறை. உடல்நலக்குறைவு, வயோதிகம், ஆபத்து நேர்ந்த காலத்தில் குளிக்காமல் பூசுவதால் தவறில்லை. உடல் தூய்மையை விட உள்ளத் தூய்மையே முக்கியம் என்றாலும், இதையே காரணம் காட்டி சோம்பலும் எட்டிப் பார்த்து விடும். மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸாதனம் கூட. சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள் எனவே இளைஞர்கள் குளியலுக்கு  பிறகே திருநீறு பூச வேண்டும்.

Sunday, September 2, 2012

ஆவணி ஞாயிற்றுக்கிழமையின் மகத்துவம் தெரியுமா?

ஆவணி மாதத்தில் சூரியன் சிம்மவீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்மவீடு பலமான வீடு. நமக்கு ஆத்மபலத்தைத் தருபவர் சூரியனே. எனவே தான், ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம்  ஆகியன நிகழ்ந்ததாகச் சொல்வர். சஞ்சலமாக இருந்த அர்ஜுனனுக்கு, ஆத்மபலத்தை அளிக்க கீதையை உபதேசம் செய்ய கிருஷ்ணர் இம்மாதம் பிறந்தார். இதனால் தான் ஆவணி மாதத்தில் "ஞாயிற்றுக்கிழமை முக்கியத்துவம் பெற்றது. "ஞாயிறு என்றாலே "சூரியன். அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை 6-7 மணி வரை சூரிய ஹோரையே இருக்கும். ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மிக அறிவைப் புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவர். சிலருக்கு இயற்கையாகவே ஆன்மிக அறிவு அமையும். தேகநலனுக்காக சூரியநமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷம்.
அக்காலத்தில் ஆடிப்பட்டம் தேடி விதைப்பார்கள். ஆவணியில் பயிர்கள் வளர ஆரம்பிக்கும். பூச்சிகள், பாம்புகள் தொல்லை அதிகரிக்கும். இவற்றால் விவசாயப்பணிகளுக்குச் செல்லும் தங்கள் கணவருக்கு ஆபத்து வரக்கூடாது என்பதற்காக, ஆவணி ஞாயிற்றுக்கிழமை விரதம் அனுஷ்டிக்கும் வழக்கம் உருவானது. இந்தியாவில் பாம்பை மூலவராகக் கொண்ட கோயில்கள் நாகர்கோவிலிலும், கேரள மாநிலத்தில் சில இடங்களிலும் <உள்ளன. இந்தக் கோயில்களில் ஆவணி ஞாயிறு விழா விசேஷம். இந்நாளில், பெண்கள் நாகருக்கு பாலபிஷேகம் செய்து,  பாம்புத்தொல்லை இருக்கக்கூடாது என வேண்டுவர். தந்தை இல்லாதவர்கள் சூரியனைத் தந்தையாகக் கொள்வது மரபு. இவர்கள் சூரியோதய வேளையில் கிழக்கு நோக்கி விழுந்து வணங்கி, சூரிய பகவானிடம் ஆசி பெறலாம். இந்த ஆசியின் பலன் இரட்டிப்பாக வேண்டுமானால் ஆவணி ஞாயிற்றுக் கிழமைகளைத் தேர்ந்தெடுக்கலாம். இந்நாளில், "ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி சூரியனை வழிபட வேண்டும்.

மங்கள நாயகி: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் உள்ள அம்மன் மங்களநாயகிக்கு, மந்திரபீட நலத்தாள் ஆகிய திருநாமங்கள் உண்டு. சம்பந்தர் இவளை "வளர்மங்கை என அழைக்கிறார். சிவபெருமான் தனது திருமேனியில் பாதியை அம்மனுக்கு வழங்கியதைப்போல், தனது மந்திர சக்திகளில் 36 ஆயிரம் கோடியை இத்தல நாயகிக்கு வழங்கியுள்ளார். அம்பாளுக்கென 36ஆயிரம் கோடி மந்திர சக்திகள் உள்ளதால், 72ஆயிரம் கோடி மந்திர சக்திகளுக்கு அதிபதியாக மந்திரபீடேஸ்வரி என்ற திருõமமும் பெறுகிறாள். அம்மனுக்குரிய 51 சக்தி பீடங்களில் இத்தலம் முதன்மையானதாக கருதப்படுகிறது. அம்பாள் மஞ்சள் பட்டு உடுத்தி முகத்தில் மஞ்சள் பூசி, குங்கும திலகம் இட்டு அருள்பாலிப்பதை பார்த்துக் கொண்டே இருக்கலாம். எனவே ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இங்குள்ள மங்களாம்பிகைக்கு செம்பருத்தி பூவால் அலங்காரம் செய்து அர்ச்சனை செய்தால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பெண்கள் மூக்குத்தி அணிவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

மூக்குத்தி குத்திக் கொள்வதால் பெண்களுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதிகம். இதனால் பண்டைய காலத்திலேயே மூக்கு குத்திக் கொள்ளும் வழக்கம் உருவானது. மூக்கு குத்துவதினாலும் காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன. உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால் அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்லாமல் மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டு வருவதற்குத்தான் மூக்குக் குத்தப்படுகிறது. மூக்குக் குத்துவதால் பெண்கள், சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள் மற்றும் மனத்தடுமாற்றம் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.