Tuesday, September 4, 2012

ஒவ்வொரு கோயிலிலும் தலவிருட்சம் (தல மரம்) இருப்பதன் நோக்கம் என்ன?

காடாக இருந்த இடங்களில் சுவாமியோ, அம்மனோ எழுந்தருளி காட்சி கொடுத்ததாக கோயில் தலபுராணங்களில் வரலாறு இடம்பெற்றிருக்கும். கடம்பவனம் என்று மதுரைக்கு ஒரு பெயருண்டு. கடம்பவனமே மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலாக உள்ளது. இங்கு கடம்பமரம் தலவிருட்சம். இவ்வாறு, அந்தந்த இடங்களில் எது முக்கியத்துவம் பெற்றிருக்கும் மரமோ, அதை தலமரமாக வைத்தனர். இயற்கையை இறைவனாகப் போற்ற வேண்டும் என்ற அரிய உண்மை இதில் புதைந்து கிடக்கிறது. பசுமையான மரத்தை வளர்த்தால் நாட்டில் மழை வளம் பெருகும் என்ற அடிப்படையில் தலவிருட்சம் அமைக்கப்பட்டது.

No comments:

Post a Comment