Tuesday, February 28, 2012

ஸ்ரீ முருகன் மூல மந்திரம்

முருகன் மூல மந்திரம்:
ஓம் சௌம் சரவணபவ
ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ.


சரவண பவ ஓம்  

Monday, February 27, 2012

மலர்கள்

8.1 காலங்களுக்கேற்ற புஷ்பங்கள் : காலை : தாமரை, பொரசு, துளசி, நவமல்லிகை, நந்தியாவட்டை, மந்தாரை, முல்லை, சண்பகம், புன்னாகம், தாழை, நண்பகல் : வெண்தாமரை, அரளி, பொரசு, துளசி, நெய்தல், வில்வம், சங்கபுஷ்பம், மருதாணி, கோவிதாரம், ஒரிதழ். மாலை : செந்தாமரை, அல்லி, மல்லிகை, ஜாதி, முல்லை, மருக்கொழுந்து, வெட்டிவேர், கஜகர்ணிகை, துளசி, வில்வம்.
8.2 அஷ்ட புஷ்பங்கள் : அறுகு, சண்பகம், பன்னாகம், நந்தியாவட்டை, பாதிரி, ப்ரஹதி, அரளி, தும்பை இலைகள்.

8.3 எடுக்கப்பட்ட புஷ்பங்களின் உபயோக நாட்கள் : தாமரை - 5 நாட்கள், அரளி - 3 நாட்கள், வில்வம் - 6 மாதம், துளசி - மூன்று மாதம், தாழம்பூ - 5 நாட்கள், நெய்தல் - 3 நாட்கள், சண்பகம் - 1 நாள், விஷ்ணுக்ரந்தி - 3 நாள், விளாமிச்சை - எப்போதும்.

8.4 உபயோகப் படுத்தக் கூடாத புஷ்பங்கள் : கையில் கொண்டு வந்தது, தானாக விழுந்தது, கொட்டை (ஆமணக்கு) அல்லது எருக்க இலைகளில் கட்டிக் கொண்டு வந்தது, வாசனை அற்றது, மயிர் கலந்து கிடந்தது, புழு இருந்தது, மிகக் கடுமையான வாசனை உள்ளது, வாடியது, நுகரப்பட்டது, தானாக மலராமல் செயற்கையாக மலரச் செய்யப்பட்டது, அசுத்தமான முறையில் எடுத்து வரப்பட்டது, ஈர வஸ்திரத்துடன் எடுத்து வரப்பட்டது. யாசித்துப் பெறப்பட்டது, பூமியில் விழுந்து கிடந்தது ஆகியன. பொதுவாக, மலராத மொட்டுக்கள் (சம்பக மொட்டு நீங்கலாக) பூஜைக்கு உதவா.

8.5 துளசி, முகிழ், சண்பகம், தாமரை, வில்வம், கல்ஹாரம், மருக்கொழுந்து, மருதாணி, தருப்பை, அருகு, அஸிவல்லி, நாயுருவி, விஷ்ணுக்ரந்தி, நெல்லி - ஆகிய செடி கொடி, மரங்களின் இலைகள் (பத்ரங்கள்) பூஜைக்கு உதவும்.

8.6 அக்ஷதை, வெள்ளெருக்கு, ஊமத்தை இவை விஷ்ணு பூஜைக்கு ஆகாது. செம்பருத்தி, தாழம்பூ குந்தம், கேஸரம், குடஜம், ஜபா புஷ்பம் இவை சிவனுக்கு சுகாது. அறுகு, வெள்ளெருக்கு மந்தாரம் - இவை அம்பாளுக்குக் கூடாது. துளசி விநாயகருக்கு ஆகாது.

8.7 புஷ்பங்களைக் கவிழ்த்துச் சாத்தக்கூடாது; ஆனால் புஷ்பாஞ்சலியின்போது மலர்கள் கவிழ்ந்து விழுவது தவறல்ல. புஷ்பச் சேதம் செய்யக் கூடாது. அதாவது, ஒரு மலரை சிறிது சிறிதாகக் கிள்ளியோ வெட்டியோ பயன்படுத்தக் கூடாது.

ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தலாம் என்பதன் பொருள் தெரியுமா?

ஒருவர் தன் வாழ்நாளில் எந்த சூழ்நிலையிலும் பொய் சொல்வது உகந்ததல்ல. ஆயிரம் முறை மாப்பிள்ளை வீட்டுக்கோ, பெண் வீட்டுக்கோ போயாவது ஒரு கல்யாணத்தை நடத்தி வை என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். போய் என்பதே பேச்சுவழக்கில் பொய் என்று மாறி விட்டது. இந்தப் பொய்யை உண்டாக்கியது எந்த புண்ணியவானோ? தெரியவில்லை

Friday, February 24, 2012

திருமால் வழிபாடு

பெருமாள் கோயிலுக்கு செல்பவர்கள் ஒவ்வொரு தெய்வத்திற்கு முன்னும் சொல்ல வேண்டிய மந்திரங்கள் சமஸ்கிருதத்திலும், தமிழிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

மகாவிஷ்ணு

சாந்தாகாரம் புஜங்க சயநம் பத்மநாபம் ஸுரேசம்
விச்வாகாரம் ககநஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மீ காந்தம் கமல நயநம் யோகிஹ்ருத் த்யா நகம்யம்
வந்தே விஷ்ணும் பவ பயஹரம் ஸர்வலோகைக நாதம்
மேகச்யாமம் பீத கௌசேய வாஸம்
ஸ்ரீ வத்ஸாங்கம் கௌஸ்து போத்பாஸிதாங்கம்
புண்யோ பேதம் புண்ட ரீகாய தாக்ஷம்
விஷ்ணும் வந்தே ஸர்வலோகைக நாதம்
ஸசங்க சக்ரம் ஸகிரீட குண்டலம்
ஸபீத வஸ்த்ரம் ஸரஸிரு ஹேக்ஷணம்
ஸஹார வக்ஷஸ்த்தல கௌஸ்துப ச்ரியம்
நமாமி விஷ்ணும் சிரஸா சதுர்ப்புஜம்
அச்சுதன் அமலன் என்கோ!
அடியவர் வினை கெடுக்கும்
நச்சு மாமருந்தும் என்கோ!
நலங்கடல் அமுதம் என்கோ!
அச்சுவைக் கட்டி என்கோ!
அறுசுவை அடிசில் என்கோ!
நெய்ச் சுவை தேறல்  என்கோ!
கனிஎன்கோ! பால் என்கேனோ;

லட்சுமி

லக்ஷ்மீம் க்ஷீரஸமுத்ர ராஜ தநயாம் ஸ்ரீ ரங்கதாமேச்வரீம்
தாஸீ பூதஸமஸ்த தேவவநிதாம் லோகைக தீபாங்குராம்
ஸ்ரீ மந்மந்தகடாக்ஷலப்பதவிபவப்ரஹ்மேந்த்ரகங்காதராம்
த்வாம் த்ரைலோக்ய குடும்பிநீம் ஸரஸிஜாம்வந்தே முகுந்தப்ரியாம்
மாநாதீத ப்ரதித விபவாம் மங்களம் மங்களாநாம்
வக்ஷ: பீடீம் மதுவிஜயிநோ பூஷயத்தீம் ஸ்வகாந்த்யா
ப்ரத்யக்ஷõ நுச்ரவிக மஹிமப்ரார்த்தி நீ நயம் ப்ரஜாநாம்
ச்யோ மூர்த்திம் ச்ரியமசரண, த்வாம்சரண்யாம் ப்ரபத்யே
ரக்ஷத்வம் வேததேவேசி தேவ தேவஸ்ய வல்லபே
தாரித்ர்யாத் த்ராஹிமாம் லக்ஷ்மி க்ருபாம் குருமமோபரி.

ராமர்

ஸ்ரீராம சந்த்ர கருணாகர தீனபந்தோ
ஸீதாஸமேத பரதாக்ரஜ ராகவேச
பாபர்த்தி பஞ்ஜன பயாதுர தீனபந்தோ
பாபாம்புதௌ பதித முத்தர மாமநாதம்
ஸ்ரீராகம் தசரதாத்மஜ மப்ரமேயம்
ஸீதாபதிம் ரகுகுலாப்வய ரத்நதீபம்
ஆஜாபுபாஹு மரவிந்த தளாயதாக்ஷம்
ராமம் நிசாசர விநாசகரம் நமாமி.

கிருஷ்ணர்

கோபல ரத்நம் புவனைக ரத்நம்
கோபாங்க நாயௌவந பாக்ய ரத்நம்
ஸ்ரீகிருஷ்ண ரத்நம் ஸுரஸேவ்ய ரத்நம்
பஜா மஹே யாதவ வம்ச ரத்நம்.

லட்சுமி நரசிம்மர்

ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹாய நம; ஹரி ஓம்
பாந்தஸ்மான் புருஸூத வைரிபலவன்
மாதங்க மாத்யத் கடா கும்போச்சாத்ரி
விபாட நாதிகபடு ப்ரத்யேக வஜ்ராயுத;

அனுமான்

வாமே கரே வைரிபிதம் வஹந்தம்
சைலம் பரே ச்ருங்கல ஹாரிடங்கம்
ததாந மச்சச்சவி யஜ்ஞ ஸூத்ரம்
பஜே ஜ்வலத் குண்டலம் ஆஞ்ஜநேயம்.
ஸபீத கௌபீந முதஞ்சிதாங் குளிம்
ஸமுஜ்வலந் மௌஜியஜி நோபவீதிநம்
ஸகுண்டலம் லம்பசிகா ஸமாவ் ருதம்
தமரஞ்ஜநேயம் சரணம் ப்ரபத்யே.
அஞ்சிலே ஒன்று பெற்றான்: அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்: அவன் நம்மை அளித்துக் காப்பான்

சாஸ்தா

யஸ்ய தன்வந்தரீ மாதா பிதாருத்ரோ பிஷக்தம்
தம் சாஸ்தார மஹம் வந்தே மரா வைதயம் தயாநிதிம்.

கருடன்

குங்கு மாங்கித வர்ணாய குந்தேந்து தவளாயச
விஷ்ணு வாஹ நமஸ்துப்யம் பக்ஷிராஜாய நேநம

சக்கரத்தாழ்வார்

ஸஹஸ்ராதித்ய ஸங்காசம் ஸஹஸ்ர வதநாம் பரம்
ஸஹஸ்ர தோஸிஸஹஸ்ராரம்ப்ரபத்யே (அ) ஹம்ஸுதர்சநம்
ஹும் கார பைரவம் பீமம் ப்ரபந்நார்த்தி ஹரம் ப்ரபும்
ஸர்வ பாப ப்ரசமநம் ப்ரபத்யேஹம் ஸுதர்சநம்

பாகவதவோத்தமர்கள்

ப்ரஹ்லாத நாரத தபராசர புண்டரீக
வ்யாஸாம்பரீஷ சுகசௌநக பீஷ்மதால்ம்யாந்
ருக்மாங்க தார்ஜுந வஸிஷ்ட விபீஷணாதீந்
புண்யாநிமாந் பரமபாகவதாந் ஸ்மராபி

நன்றி தினமலர்

ஸ்ரீ ராமஜயம் ஸ்தோத்திரம் ( தமிழ்)

அன்பர்கள் இடரை அகற்றிடவேண்டி அயோத்தியில் வந்தது ஸ்ரீ ராமஜயம்
அசுரரை அழித்து அறந்தழைத்தோங்க அமைதி அளித்தது ஸ்ரீ ராமஜயம்
ஆதவன் மரபில் அழகிய உருக்கொண்டு அவதரித்தது ஸ்ரீ ராமஜயம்
ஆரணம் கமழும் வேதமாமுனிவன் அருளைப் பெற்றது ஸ்ரீ ராமஜயம்
இருள் வடிவான அலகையைக்கொன்று மருள் ஒழித்தது ஸ்ரீ ராமஜயம்
இருடியின் மகத்தை இலக்குவனோடு இமைபோல் காத்தது ஸ்ரீ ராமஜயம்
ஈசனை ஒத்தகௌதமன் இல்லாள் இடரை ஒழித்தது ஸ்ரீ ராமஜயம்
ஈசனோடு இந்திரன் இமையவர் எவரும் ஏத்தநின்றது ஸ்ரீ ராமஜயம்
உண்மையின் வடிவாய் பீஜாக்ஷரத்தை ஓர்வாய் என்றது ஸ்ரீ ராமஜயம்
<உறுதியை கொடுத்து மறதியைகெடுத்து உலகத்தை காப்பது ஸ்ரீ ராமஜயம்
ஊனமில் உடலும் உயரிய பொருளும் உடனே தருவது ஸ்ரீ ராமஜயம்
ஊமைபோன்ற உயிர்களும் பேசும் உயர்வை அளிப்பது ஸ்ரீ ராமஜயம்
என்றும் நமக்கு இன்பம் அளித்து இங்கே இருப்பது ஸ்ரீ ராமஜயம்
எமக்கு இது சாது பிறர்க்கு இது தீது என்பது அற்றது ஸ்ரீ ராமஜயம்
ஏதுமற்று ஏங்கி நிற்போர் தமக்கு ஏற்றம் தருவது ஸ்ரீ ராமஜயம்
ஏனஉருகொண்ட வனியை ஏந்தி இருக்கையில் வைத்தது ஸ்ரீ ராமஜயம்
ஐம்பூதங்களை அடிமையாய்க் கொண்ட அனுமன் உரைத்தது ஸ்ரீ ராமஜயம்
ஐம்முகத்தவனும் பங்கயத்தவனும் அமரரும் உரைப்பது ஸ்ரீ ராமஜயம்
ஒருவழி நில்லாது அலையுறு மனத்தை ஒருவழிப்படுத்தும் ஸ்ரீ ராமஜயம்
ஒருவனும் யான் எனநினை என்று உண்மை உணர்த்தும் ஸ்ரீ ராமஜயம்
ஓங்காரப் பொருளே உண்மையின் வடிவாய் ஓர்வாம் என்பது ஸ்ரீ ராமஜயம்
ஓவியம்தனிலும் காவியம் தனிலும் ஊக்கமளிப்பது ஸ்ரீ ராமஜயம்
ஒளவையைப்போன்று அருணகிரிக்கும் அறத்தை உரைப்பது ஸ்ரீ ராமஜயம்
ஒளடதம் போன்று படிபோர் தமக்கு அனைத்தும் அளிப்பது ஸ்ரீ ராமஜயம்.

Tuesday, February 21, 2012

நைவேத்யம்11.1 வண்டு மலரை முகர்ந்து தேனைப் பருகி, அந்தத் தேனை திருப்பித் தருகிறது;  மலரின் மணமோ சுவையோ தண்மையோ நீரோட்டமோ கெடுவதில்தல. அதுபோல இறைவர்க்கு நிவேதித்த பிரசாதங்களின் ரஸம் போவதில்லை. மேகம் சூர்ய கிரகணங்களைக் கொண்டு நீரைக் குடித்து, அதையே பிறகு மழையாகப் பொழிகின்றது, அவ்வாறே, இறைவன் நிவேதனத்தைத் தன் பார்வையால் ஏற்றுக் கொண்டு, கருணை மழை பொழிந்து, நம்மைக் காக்கிறான்.

11.2 அபிஷேகத்தில் நிறைவு, அர்ச்சனையின் முடிவு ஆகிய இரண்டு சமயங்களில் நைவேத்யம் செய்ய வேண்டும்

11.3 மந்த்ராந்நம், நைவேத்யம் : மந்த்ரம் என்பது ரஹஸ்யம். பல்லிலும், உதட்டிலும், முகவாய்க்கட்டிலும் உற்பத்தி ஆவதால் மந்த்ரங்கள் ரஹஸ்யம் எனப்படுகின்றன. எந்த அந்தமானது ரஹஸ்யமாக நிவேதிக்கப்படுகிறதோ அதற்கு மந்த்ராந்நம் என்று பெயர். அத்தகைய மந்த்ராந்தமாகிய மஹாநிவேதனத்தை ஒரு பாத்திரத்தில் முக்காலியின் மேல் வைத்து, அதைச் சுற்றி, பாகம் பண்ணப்பட்ட (சமைக்கப்பட்ட) பதார்த்தங்களைத் தனித் தனிப் பாத்திரங்களில் வரிசையாக வைத்து, அவற்றை ஒன்றொன்றாகச் சோதனை செய்து, ஹ்ருதய மந்திரத்தினால் ப்ரோக்ஷிக்க வேண்டும். அந்த நிவேதனத்தை அம்ருதமயமாகப் பாவித்து, தேனு முத்திரை காட்டி, புஷ்பத்தை வைத்து, நைவேத்யத்தை ஸ்வாமியினுடைய தக்ஷிண ஹஸ்தத்திலே கொடுத்து, தீர்த்த பானத்தையும் கொடுக்க வேண்டும்.

11.4 மயிர், புழு, மணல், உமி இவை கலந்துள்ள அரிசிச்சோறு (அன்னம்) நைவேத்யத்திற்கு ஆகாது ; அரை அரிசிச் சோறு, குழைந்த அன்னம், துர்நாற்றம் உள்ள அன்னம் ஆகியவையும் கூடாது; மிகச் சூடாக நிவேதனம் செய்யக்கூடாது.

11.5 ஈசான முகத்திற்கு சுத்த அன்னமும், தத்புருஷ முகத்திற்கு சர்க்கரைப் பொங்கலும், அகோர முகத்திற்கு எள் அன்னமும், வாமதேவ முகத்திற்கு தயிர் அன்னமும், ஸத்யோஜாத முகத்திற்கு வெண்பொங்கலும் படைப்பது சிறந்தது.

11.6 தாம்பூலத்தின் நுனியில் லக்ஷ்மி, மத்தியில் ஸரஸ்வதீ, பின்பகுதியில் மூதேவி ஆகியோர் உள்ளதாக ஐதீகம். எனவே, பின்பாகத்தை நீக்கிவிட்டு தான் வெற்றியையை நிவேதனம் செய்ய வேண்டும்.
11.7 ஜலம் உள்ள தேங்காயைத்தான் உடைத்து நிவேதனம் செய்ய வேண்டும்; சமமாக இரு பாதியாக உடைப்பதே சிறந்தது; குடுமி இல்லாமல் உடைத்தால் அரசுக்கு கேடு; முழுக் குடுமியும் உள்ளதாக உடைத்தால் நாட்டுக்கு கேடு; எனவே, கொஞ்சம் குடுமி உள்ளதாகச் செய்துகொண்டு உடைக்க வேண்டும்; உடைத்த பின்னர், அந்தச் சிறிதளவு குடுமியையும் நீக்கி விட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.

11.8 நந்திக்கு நிவேதனம் : அரிசியையும், பயத்தம் பருப்பையும், வெல்லத்தையும், திருகின தேங்காயையும் ஒன்றாகக் கலந்து ப்ரதோஷ காலத்தில் நந்தி தேவருக்கு விசேஷமாக நைவேத்யம் செய்திடல் வேண்டும்

11.9 திரை இடுதல் : பூஜையின் போது, நிவேதன காலத்தில் திரை இடாவிட்டால், பாபிகள் அதைப் பார்க்க நேரிட்டு, அதனால் அந்த நிவேதனமும், அது அங்கமாக உள்ள பூஜையும் பலனற்றதாகப் போய்விடும்.

Sunday, February 19, 2012

பூஜை இல்லாவிடில்..
15.1. பூஜை செய்ய வகுக்கப்பட்டுள்ள முறைகளே ஐயனின் ஐந்தொழில் திறனைப் போற்றும் வகையில் அமைந்துள்ளன; 1. படைத்தல் - அபிஷேகம். 2. காத்தல் - நைவேத்யம் 3. ஸம்ஹாரம் - பலி போதல் 4. திரோபாவம் - தீபாராதனை 5. அனுக்ரஹம் - ஹோமம், பூஜைகளைச் செவ்வனே செய்யவிடின் ஐயன் ஐந்தொழில் புரிந்து நமக்கேன் அருள வேண்டும் ?

15.2. பூஜை இல்லாவிடில் ரோகமும், புஷ்பம் இல்லாவிடில் குல நாசமும், சந்தனம் இல்லாவிடில் குஷ்டிரோகமும், ஜலம் இல்லாவிடில் துக்கமும், தூபம் இல்லாவிடில் சுகத்தின் நாசமும், தீபம் இல்லாவிடில் பொருள் நாசமும், நைவேத்யம் இல்லாவிடில் பஞ்சமும், மந்திரம் இல்லாவிடில் தரித்திரமும், வஸ்திரம் இல்லாவிடில் மகா ரோகமும், ஹோமம் இல்லாவிடில் குல நாசமும், பலி இல்லாவிடில் கிராம நாசமும், நெய் இல்லாவிடில் மரணமும், வில்வம்-அறுகு-அக்ஷதை இல்லாவிடில் பகைவர் பயமும், மணி இல்லாவிடில் செவிட்டுத்தன்மையும், முத்திரை இல்லாவிடில் அசுர பயமும், நித்திய அக்கினி இல்லாவிடில் அரசர்க்கும் நாட்டுக்கும் தீங்கும், மற்ற திரவியங்கள் இல்லாவிடில் தேவதைகளுக்குக் கோபம் ஏற்பட்டு அதனால் ஒவ்வா விளைவுகளும் உண்டாகும்.

15.3. 1. சந்தனம் இல்லையென்றால் பயம் உண்டாகும். 2. ஆபரணம் இல்லையென்றால் தரித்ரம் உண்டாகும். 3. புஷ்பம், தூபம் இல்லையென்றால் ராஜ்யம் க்ஷீணிக்கும். 4. தீபம் இல்லையென்றால் தனம் இல்லாதொழியும். 5. நைவேத்தியம் இல்லையென்றால் க்ஷõமம் (பஞ்சம்) உண்டாகும். 6. அக்நிகார்யம் இல்லையென்றால் சங்கடங்கள் உண்டாகும். 7. பலி இல்லையென்றால் ஆள்பவர்களுக்குக் கெடுதல் உண்டாகும். 8. ந்ருத்தம் (கலை நிகழ்ச்சிகள்) இல்லையென்றால் துக்கம் உண்டாகும். 9. மந்திரங்கள் இல்லையென்றால் மரணபயம் உண்டாகும். 10. கிரியைகள் இல்லையென்றால் வியாதிகள் உண்டாகும்.

ஆலயங்கள் அமைத்தல்2.1 ஆலயக் கிரியைகள் : ஆலயங்களில் செய்யப்பெறும் கிரியைகள் முப்பெரும் பிரிவினுள் அடங்கும்; 1. கர்ஷணாதி ப்ரதிஷ்டாந்தம், 2. ப்ரதிஷ்டாதி உற்சவாந்தம், 3. உற்சவாதி ப்ராயச்சித்தாந்தம்.

2.2. கர்ஷணாதி ப்ரதிஷ்டாந்தம் : புது இடத்தை உழுதல் (கர்ஷணம்) முதலான கிரியைகளுடன் தொடங்கி, திருக்கோவில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்யும் வரை.

2.3 ப்ரதிஷ்டாதி உற்சவாந்தம்: நித்திய, நைமித்திய, காமிக கிரியைகளும், உற்சவங்களும்.

2.4 உற்சவாதி ப்ராயச்சித்தாந்தம்: மஹோத்ஸவங்களும், அவற்றின் நிறைவாக நிகழும் ப்ராயச்சித்த (மஞ்சள் நீராட்டு வைபவங்களும்)

2.5 பாலாலயம் : தற்காலிகமாக அமைக்கப்பெறும் இறைவனின் இருப்பிடங்கள் இளங்கோயில் அல்லது பாலாலயம் என்று அழைக்கப்பெறும். புதிதாக ஆலயம் எழுப்புவதாயினுங்கூட, முதலில் பாலாலயம் அமைத்தே அதில் இறைவரை எழுந்தருளச் செய்திடல் வேண்டும். ப்ரதானாலயம் கட்ட இடம் சதுரித்த பின், பால லிங்கத்தை பாலாலயத்தில் பிரதிஷ்டை செய்து, பூஜித்து வரவேண்டும்; இதற்காகக் கட்டப்படுவது முதலாவது பாலாலய வகை. பின் மூலாலயத்தில் மூல லிங்கத்தை பிரதிஷ்டை செய்தபின், இறைவரை பாலலிங்கத்திலிருந்து மூல லிங்கத்திற்குச் சென்று எழுந்தருளச் செய்து, பிறகு பாலாலயத்தை நீக்க வேண்டும். பிற்காலத்தில், மூலாலயம், பீடம், சிவலிங்கம், பிம்பங்கள் இவை ஜீர்ணம், பின்னம், அங்கக் குறைவு, வெடிப்பு முதலியவற்றால் தோஷமுற்றபோது, இவைகளை கும்பத்தில் ஆவாஹனம் செய்து, பின்னர் பாலபிம்பத்தில் சேர்க்க வேண்டும்; இத்தகு தருணங்களில் அமைக்கப்பெறும் பாலாலயங்கள் இரண்டாவது வகைத்து. இவை தருணாலயம் என்றும் கூறப்படும்.

2.6 உற்சவங்கள்: ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் ஒரு நாள் நிகழ்ச்சிகளாகவும், 3 முதல் 36 நாட்கள் வரை தொடர் விழாக்களாகவும் நடைபெறுவது உண்டு. அவ்வாறு 1,3,5 நாட்கள் நடைபெறும் உற்சவங்களுக்குக் கொடியேற்றம் தேவையில்லை. அதற்கு மேற்பட்ட நாட்களாக செய்யப்படும் உற்சவங்கள் கொடியேற்றத்துடன் செய்ய வேண்டுமென ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது. அத்தகைய உற்சவங்கள் மஹோற்சவங்கள் எனவும் கூறப்படும். பாலாலயம் செய்துள்ளபோது, கும்பாபிஷேகம் ஆகும் வரை, மத்தியில் மஹோத்சவம் (கொடி ஏற்றி உற்சவங்கள்) செய்யலாகாது. அப்படி அவசியம் உற்சவம் செய்யவேண்டுமாயின், மூலாலயத்திற்கு ஈசானம் முதலிய குறிப்பிட்ட திசைகளில், மூலாலயம் போலவே விமானம், கர்ப்பக்ருஹம், பரிவார தேவதைகள், கொடிமரம், பலிபீடம் யாவும் உள்ள பாலாலயம் அமைத்து, பிரதிஷ்டைகள் செய்து, அந்தக் கொடிமரத்தில் கொடி ஏற்றி உற்சவம் செய்யலாம்
2.7 யாகசாலை : உற்சவத்திற்கான யாகசாலை மேற்கு முகமாக இருத்தல் வேண்டும். ஆனால், பிரதிஷ்டை, கும்பாபிஷேகம், சம்ப்ரோக்ஷணம் யாவற்றிற்கும் யாகசாலை கிழக்கு முகமாய் இருத்தலே உத்தமம் என்று காரணாகமம் கூறுகிறது.

2.8 நந்திதேவர் பிரதிஷ்டை: சிவாலயங்களி, குறைந்த பக்ஷமாக ஒரு நந்தியும், அதிக பக்ஷமாக ஐந்து நந்திகளும் ப்ரதிஷ்டை செய்யப்பட வேண்டும். ஐந்து வித நந்திகள்: 1. லிங்கத்துக்கு மிக அருகிலுள்ள (முதல்) நந்தி கைலாஸ நந்தி (பொற் பிரம்பும், வீர வாளும் தாங்கியவர்; தன் மூச்சுக் காற்றால் இறைவனைக் குளிர வைத்துக் கொண்டு இருப்பவர். ஆலயத்தினுள் ஒரே ஒரு நந்தி அமைப்பதனால் இவர் மட்டுமே ப்ரதிஷ்டை ஆவார்) 2. இரண்டாவது நந்தி மஹாவிஷ்ணு அவதார நந்தி (திருமால் இறைவனைத் தான் தாங்குவதற்காக நந்தி உருக் கொண்டு அமர்ந்துள்ளமை - நான்கு நந்திகளுக்குக் குறைவாக உள்ள ஆலயங்களில் இந்த ப்ரதிஷ்டை இல்லை) 3. மூன்றாவதான நந்தி பக்தர்களை உள்ளே விடவும், தடுப்பதற்கும் அதிகாரம் பெற்றவர். சில நூல்களில் இவரை அதிகார நந்தி என்றும் பெயரிட்டு குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறுவர் (துவஜஸ்தம்பம் அருகே உள்ளவர். இரண்டு நந்திகள் மட்டுமே அமைப்பதனால், இரண்டாவதாக இவர் ப்ரதிஷ்டை ஆவார்) 4. நான்காவதான நந்தி சாதாரண நந்தி (ஐந்து நந்திகளுக்குக் குறைவாக உள்ள ஆலயங்களில் இந்த ப்ரதிஷ்டை ஆவார்) 4. நான்காவதான நந்தி சாதாரண நந்தி (ஐந்து நந்திகளுக்குக் குறைவாக உள்ள ஆலயங்களில் இந்த பிரதிஷ்டை இல்லை) 5. ஐந்தாவதான் நந்தி உருவில் மிகப் பெரியவர். விச்வரூபம் கொண்டு போருக்கு ஆயத்தமாயுள்ளவர். ஆலயங்களின் நுழைவாயிலில் அமைக்கப்பெறுபவர் இவரே. புகழ்பெற்ற தஞ்சைப் பெருவுடையார் கோயில் பெரிய நந்தி இதற்கு உதாரணம். இவர் பெரிய நந்தி, அல்லது மஹா நந்தி என்றும் அழைக்கப்படுவார் (மூன்று நந்திகளுக்கு குறைவாக உள்ள ஆலயங்களில் இந்த ப்ரதிஷ்டை இல்லை)

2.9 ப்ரதிஷ்டா கிரியைகள்: கும்பாபிஷேகத்தை ஒட்டி நிகழ்விக்க வேண்டிய கிரியைகள் - அதாவது கர்ஷணாதி ப்ரதிஷ்டாந்த கிரியைகள் - பற்பல. அவற்றின் பெயர்களைத் தொகுத்து ஒரு (ஏறத்தாழ, அனைத்து கிரியைகளின்) பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. இவற்றுள் சிலவற்றின் விளக்கமும் மேற்கொண்டு காணலாம்: 1. மஹூர்த்த நிர்ணயம் 2. ஸ்தம்ப ஸ்தாபனம் 3. அனுக்ஞை 4. தன பூஜை 5. ஆசார்ய வரணம் 6. ப்ஸன்ன கணபதி பூஜை. 7. க்ராம சாந்தி 8. ப்ரவேச பலி. 9. ர÷க்ஷõக்ன ஹோமம் 10. ஆசார்ய தசவித ஸ்நானம் 11. வாஸ்து சாந்தி 12. க்ரஹ மகம் 13. திசா ஹோமம் 14. கோ பூஜை, 15. விப்ர போஜனம், 16. ம்ருத் ஸங்க்ரஹணம் 17. ரத்ன ந்யாஸம் 18. நயனோன் மீலனம், 19. தான்யாதி வாசனம், 20. ஜலாதி வாசம் 21. சாந்தி ஹோமம், 22. மூர்த்தி ஹோமம், 23. சம்மிதா ஹோமம், 24. அங்குரார்ப்பணம், 25. ரக்ஷõ பந்தனம் 26. சயனாதி வாசம், 27. யாகசாலை தான்ய ஸ்தாபனம் - ஸூர்யகாந்தாக்நி ஸங்க்ரஹணம் 28. ருத்விக் சாதஹாதி வரணம் 29. ப்ரஸன்னாபிஷேகம் 30. கும்ப ஸ்தாபனம் 31. கலா கர்ஷணம் 32. மூர்த்தி ஹோமம் 33. யாத்ரா ஹோமம் 34. யாத்ரா தானம் 35. கடோத்வாஸனம், 36. யாகசாலா ப்ரவேசம் 37. யாக பூஜை ன த்ரவ்யாஹுதிகள், 38. யாக பூஜை - பூர்ணாஹுதிகள் 39. ஜம் ரத்ன ந்யாஸம், யந்த்ர ஸ்தாபனம், 40. தேவதா ஸ்தாபனம் 41. அஷ்ட பந்தனம், ஸ்வர்ண பந்தனம் 42. க்ருத சிரோர்ப்பணம் 43. தைலாபிஷேகம் 44. பிம்ப சுத்தி 45. பிம்ப ரக்ஷõ பந்தனம் 46. தீப ஸ்தாபனம், தீபலக்ஷ்மீ பூஜை. 47. லக்ஷ்மீ பூஜை.  48. கந்தலோபனம் 49. மஸ்தக ஜபம் 50. ந்யாஸார்ச்சனம் 51. சாந்தி கும்பம் 52. ஸ்பர்சாஹுதி 53. மஹா பூர்ணாஹுதி 54. யாத்ரா தானம் 55. கடோத்வாஸனம் 56. மூலாலய ப்ரவேசம் 57. ஸ்தூபி கும்பாபிஷேகம் 58. ஸ்வாமி கும்பாபிஷேகம் 59. பரிவார கும்பாபிஷேகங்கள் 60. யஜமான உற்சவம் 61. சண்ட ஹோமம் 62. மஹாபிஷேகம் 63. திருக்கல்யாணம் 64. திருநீதி உலா 65. அவப்ருத ஸ்நானம் 66. ஆசார்ய உற்சவம் 67. மண்டல பூஜாரம்பம் 68. மண்டலாபிஷேக பூர்த்தி 69. சண்டிகேசர் உற்சவம் 70. யஜமானஸ்ய பல ஸமர்ப்பணம்.

2.10 சங்கற்பம், அனுக்ஞை: ஆலய நிர்மாணம் தொடங்கி, எந்தக் காரியம் செய்தாலும், முதலாவதாக சங்கற்பமும், அனுக்ஞையும் செய்திடல் வேண்டும். எடுத்துக் கொண்ட காரியத்தை குருவின் உதவியுடன் செய்து முடிப்பதாக உறுதி பூணுதல் சங்கல்பம். விநாயகர், இறைவன், மூலமூர்த்தி முதலாக சண்டேச்வரர் ஈறாகவுள்ள அனைத்துத் தெய்வங்கள், குருமார்கள், பெரியோர்கள், முதியோர்கள் ஆகியோரது அனுமதியைக் கோரிப் பெறும் உத்தரவு பெறுதல் என்னும் நிகழ்ச்சியே அனுக்ஞை.

2.11 ப்ரவேச பலி: பூத, பிசாச, ப்ரம்மராக்ஷஸர்களுக்கு பலி (நைவேத்யம் முதலாய உபசாரப் பொருட்கள்) கொடுத்து, அவற்றை ஏற்றுக் கொண்டு வேறிடம் செல்லுமாறு அவர்களை வேண்டி, இடையூறுகளை நீக்கிக் கொள்ளும் கிரியையே ப்ரவேச பலி. இது கீழ்க்கண்ட காலங்களில் செய்திடல் வேண்டும். 1. புதுஆலய நிர்மாணம் தொடங்கும் போது 2. நெடுங்காலமாக நித்திய நைமித்திய பூஜைகள் இன்றிக் கிடந்த ஆலயங்களில் மீண்டும் வழிபாடுகள் தொடங்கும்போது 3. கும்பாபிஷேகங்களுக்கு முன்னதாக 4. மஹோத்சவங்களுக்கு முன்னதாக

2.12 ர÷க்ஷõக்ன ஹோமம்: புறத்தேயிருக்கும் தேவதைகளை அகற்ற ப்ரவேச பலி செய்யப்படுவதைப் போல, ஆலயத்தில் உள்ளிருக்கக்கூடிய துர்தேவதைகளை சாந்தி செய்து அகற்றிட ர÷க்ஷõக்ன ஹோமம் செய்யப்படும்.

2.13 வாஸ்து சாந்தி: ஆலயம் சமைப்பதற்கு முன்னாலும், பின்னர் நடைபெறும் சம்ப்ரோக்ஷணம்-பிரதிஷ்டை-கும்பாபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு முன்பாகவும், சங்காபிஷேகம், மஹோற்சவம் போன்ற பெருவிழாக்கள் துவங்குவதற்கு முன்னும் - ஆகிய காலகட்டங்களிலே, இடத்திற்கு தேவதையாக உள்ள வாஸ்து புருஷனையும், அவரது அதிவேதையான ப்ரம்ம தேவரையும், சக்திகளையும் பூஜித்து, ஏனைய தெய்வங்களையும் வழிபட்டு திருப்தி செய்வதே வாஸ்து சாந்தி. மகிழ்வித்த வாஸ்து புருஷனை, ஹோமாக்னியால் எரியூட்டி, ஆலயம் முழுதும் இழுத்துச் சென்று சுத்திகரித்து, இறுதியாக புண்யாஹவாசன கலச நீரினால் அவ்விடங்களை சுத்த செய்வதே வாஸ்து சாந்தியின் நிறைவு.

2.14 அங்குரார்ப்பணம்: அங்குரார்ப்பணம் என்பது முளை இடுதல் (பாலிகை). மஹோற்சவம், ப்ரதிஷ்டை ஆகிய காலங்களில் இந்நிகழ்ச்சி செய்யப்பெறும். சிவாச்சார்யார், 5 அல்லது 9 நாள் முன்னதாக, மங்கள முறைப்படி, 40, 24, 16 (அல்லது வைதீக முறைப்படி 5) பாலிகைகளில் நன்முளையிட்டு காலை - மாலை  பஞ்சகவ்ய நீர் வார்த்து, அவற்றின் முளைகளை நன்கு கவனித்து, பயன்களை அறிந்து கொண்டு, அவற்றின் சூசகத்தை எஜமானருக்கு உணர்த்திடல் வேண்டும்

2.15 ம்ருத்ஸங்க்ரஹணம்: அங்குரார்ப்பணத்துக்காக சிவாச்சார்யார், ஆற்றங்கரை, மலையடிவாரம், நந்தவனம் போன்ற பரிசுத்தமான இடத்திலிருந்து புது மண் எடுத்து வரும் நிகழ்ச்சி ம்ருத்ஸங்க்ரஹணம் எனப்படும்.
2.16 ரக்ஷõபந்தனம் : ரக்ஷõபந்தனம் என்பது காப்புக் கட்டுதல். விழாவின் தொடக்கம் முதன், நிறைவு வரை, வெளி உலக உபாதைகள் ஒன்றும் தீண்டக்கூடாது என்பதற்காக, சிவாச்சாரியார், தமக்கும், யாகத்தில் பங்கு பற்றும் ஏனைய சிவாச்சாரியாருக்கும் காப்பு கட்டுவதுடன், மூல மூர்த்திக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் அவரவர்க்குரிய ஸ்தானத்தில் ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும்

2.17 ஸ்நபநம்: இறைவரை, தேவர்களை தற்காலிகமாக உருவேற்றிப் பூஜிப்பதற்கென, கும்பங்களைக் கலாகர்ஷணப் பொருளாக ஸ்தாபிப்பதே கடஸ்தாபனம் அல்லது ஸ்நபநம் எனப்படும். அப்படி ஸ்தாபிக்கப்பட்ட கும்பம் மூர்த்தியாகவே பாவிக்கப்படுகிறது. கும்பத்தோடு சகஜமாக இருக்கும் மண் உடலுக்கு உரிய அம்சம்; அதில் சுற்றப்படும் நூல் எழுபத்து இரண்டு ஆயிரம் நாடி நரம்புகள்; அதில் சுற்றப்படும் வஸ்த்ரம் தோல்; கும்பத்துள் இடப்படும் நீர் இரத்தம் மற்றும் மேதை எனப்படும் ஏழு தாதுக்கள்; கும்பத்துள் இடப்படும் நவரத்தினம், வெள்ளி, பொன் முதலியவை சுக்கிலம்; உள்ளே இடப்படும் கூர்ச்சம் முள்ளந்தண்டு எனப்படும் முதுகெலும்பு; மாவிலை சடை; தேங்காய் கபாலம்; வெளியே இடப்படும் கூர்ச்சம் குடுமி; நியாஸங்கள், ப்ராண ப்ரதிஷ்டை முதலான மந்திரங்கள் ஜீவன். கீழே பரப்பப்படும் தானியங்கள் மூர்த்திக்கு உரிய ஆஸனம்; உத்தரீய மாலைகள், மலர்கள் முதலிய அலங்காரப் பொருள்கள்.

சிவாலய வழிபாட்டின் முக்கியத்துவம்

1.1 ஒரு சிறு புல்லைக்கூட சிருஷ்டிக்கத் திறனற்ற மனிதனுக்கு இத்தனை உணவும், உடையும், மற்ற உபகரணங்களும் வழங்கும் ஆண்டவனுக்கு நன்றி கூறும் அடையாளமாகவே நாம் நிவேதனம் செய்கிறோம்; ஆபரணங்களையும் வஸ்திரங்களையும் சமர்ப்பிக்கிறோம். எல்லாருமே வீட்டில் இவ்வாறு பூஜை செய்து, திரவியங்களை ஈசுவரார்ப்பணம் செய்ய இயலாது. எனவே, சமுதாயம் முழுவதும் சேர்ந்து இப்படி சமர்ப்பணம் பண்ணும்படியான பொது வழிபாட்டு நிலையங்களாக ஆலயங்கள் எழுந்துள்ளன. இறைவனுக்கு நன்றி செலுத்துவதைத்தான் பரார்த்த பூஜையாக, நிஷ்காம்ய வழிபாடாக, ஆலயங்களில் செய்கிறோம்.

1.2 அரணிக்கட்டையுள் நெருப்பு மறைந்துள்ளது போல, மலரில் மணம் மறைந்துள்ளது போல ஈச்வரன் பிம்பத்தில் (லிங்கத்தில்) உள்ளார். பாலை விட, தயிரிலிருக்கும் நெய்யைக் கண்டெடுப்பது எளிது. உலகெங்கிலும் பாலில் மறைந்துள்ள நெய் போல் உறையும் இறைவன், ஆலயத்தில் தயிரினுள் மறைந்திருக்கும் நெய் போல எளிதில் நமக்கு முன் வந்து அருளக் காத்திருக்கிறான்.

1.3 ஆகமங்களில் விதித்துள்ள சிற்ப சாஸ்திரங்களுக்கொப்ப அமைந்துள்ள திருக்கோவில்களே பரம்பொருள் வீற்றிருக்கும் தேவாலயங்கள். ஆகம விதிப்படி அமையாத ஆலயங்கள் மடாலயங்கள் எனப்படும்.

1.4 சிவலிங்கம் இருக்கும் இடத்திலிருந்து நான்கு புறமும் 150 முழ தூரம் சிவ÷க்ஷத்ரம் ஆகும். இங்கு வசிப்பதுமச் சிவலோகவாசத்திற்கு காரணமாகும் என்று சுப்ரபேத ஆகமம் கூறுகிறது

1.5 முன் ஜன்மாவில் சிவ கைங்கர்ய உபகாரிகளாக வாழ்ந்தவர்கள், இந்த ஜன்மாவில், நல்ல உருவமும், தன ப்ராப்தியும் உடையவர்களாக காணப்படுவார்கள். சிவ தர்மத்தில் - பக்தியுடன், தன் சொத்துக்குத் தகுந்தபடி, ஆலயங்களை ஒவ்வொருவரும் செய்விக்க வேண்டும். அப்படிச் செய்தால், சிறிதாக அல்லது பெரிதாக செய்தாலும், தனவானுக்கும் ஏழ்மையானவர்களுக்கும், சமமான புண்யமே. பணக்காரராயினும், லோபமான மனஸுடன் பணத்தைக் குறைத்து சிவதர்மங்களைச் செய்பவர், அப்புண்ய பலனை அடைய மாட்டார். வாழ்வு நிலையற்றது; எனவே, ஒவ்வொருவரும் தன் சொத்தில் இரு பங்கு தர்மத்திற்கும், தனது வாழ்விற்கு ஒரு பங்குமாக ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும் என்கிறது ஜீர்ணோத்தார தசகம்.

1.6 மனத்தை ஒருவழிப் படுத்தவும், கீழ்ப்படிவு, நீதி வழி நிற்றல், தன்னலம் மறுப்பு, பணிவு, இரக்கம் ஆகிய பல சிறந்த பண்படுகளை உண்டாக்கி வளர்க்கவும், இறுதியாக மோக்ஷ ஸாம்ராஜ்யம் அடைந்திட வழி வகுக்கவும் திருக்கோயில் வழிபாட்டைத் தவிர வேறு மார்க்கம் இல்லை.

1.7 சாதாரணமாக, நம் கைகள் இரண்டு விரிந்து, வளைந்து, பற்பல செய்கைகளைச் செய்கின்றன. இறைவனுடைய ஸந்நிதானத்தில் கும்பிடும்போது, அத்தகைய செய்கைகள் எல்லாம் ஒழிந்து, கைகள் ஒன்று சேர்ந்து குவிகின்றன. அவ்வாறு குவிந்திடும் கைகள் ஆண்டவனே ! இனி என் செயல் என்று ஏதும் இல்லை என்பதை உணர்ந்துவிட்டேன். எல்லாம் உன் அருட் செயலே என்ற சரணாகதி தத்துவத்தை உணர்த்துகின்றது.

1.8 ஆலயங்களில் விக்ரஹ ஆராதனை முக்கியத்துவம் பெறுகிறது. உலகத்தில் சக்திகள் யாவும் உறையும் இடம் என்று பொருள் தருவது விக்ரஹம் என்ற சொல் (விஸேஷேண க்ருஹ்யதே ஸக்திஸமூஹ: அஸ்மின் இதி விக்ரஹ:) வி என்றால் விசேஷமான, சிறப்பான, இறைத்தன்மையுள்ள என்று பொருள். க்ரஹிப்பது என்றால் ஈர்த்துக்கொள்வது. பல்வேறு மந்த்ர தந்த்ர யந்த்ர வழிபாட்டு முறைகளினால் ஆராதிக்கப்படும்போது, இறையருளை முன்வைத்து, இறைத்தன்மையை ஈர்த்துத் தன்னுள் தேக்கி வைத்துக்கொண்டு, தன்னை வணங்குவோருக்கு அருள் புரியும் வல்லமை உள்ள பொருள்தான் விக்ரஹம்

1.9 விக்ரஹங்கள் பல திறத்தன: பொருள் பொதிந்து விளங்குவன. 
எடுத்துக்காட்டாக, இறைவன் உருவமற்றவன்: அருவமானவன். அவனுக்கு அருவுருவமாகிய லிங்க ப்ரதிஷ்டை கருவறையிலே. அவனுக்கே, மாகேச்வர மூர்த்தங்கள் என்று அழைக்கப்படும் 25 உருவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. (அவையாவன: 1. லிங்கோத்பவர் 2. சுகாசனர் 3. சந்திதர மூர்த்தி 4. கல்யாண சுந்தரர் 5. அர்த்த நாரீச்வரர் 6. ஸோமாஸ்கந்தர் 7. சக்ரவரதர் 8. திரிமூர்த்தி 9. ஹரிமர்த்தனம் 10. சலந்தராரி 16. திரிபுராரி 17. சரப மூர்த்தி 18. நீலகண்டர் 19. திரிபாதர் 20. ஏகபாதர் 21. பைரவர் 22. இடபாரூடர் 23. சந்திரசேகரர் 24. நடராஜர் 25. கங்காதரர்). இவை 25 விக்ரஹங்களுள் ஒவ்வொன்றும், பற்பல தத்துவங்களை உள்ளடக்கியவை. மீண்டும் எடுத்துக்காட்டாக, சோமாஸ்கந்த மூர்த்தியை எடுத்துக் கொண்டால், ஸச்சிதானந்தமே சோமாஸ்கந்தம் என்கிறார் காஞ்சிப் பரமாச்சாரியார். அவர் கூற்றுவது: ஸத்-சித்-ஆனந்தம் என்று சொல்வார்களே அதுதான் பரம்பொருள். இதிலே ஸத் (இருப்பு) பரமேச்வரன்; இருக்கிறோம் என்பதை உணர்ந்து சக்தியைக் காட்டுகிறது சித் அம்பாள்: இப்படி உணர்ந்ததில் பேரானந்தம் பிறக்கிறது. இந்த ஆனந்தமே சுப்ரமண்யர். சிவம் என்கிற மங்களமும், அம்பாள் என்கிற காருண்யமும் கலந்த மரம் பரம உத்க்ருஷ்டமான (உயர்வான) ஸ்தானம் அவர் (ஸுப்ரஹ்மண்யர்); ஸச்சிதானந்தத்தையே சோமாஸ்கந்தர் என்று தமிழ்நாட்டுச் சிவாலயங்களில் எல்லாம் வைத்து உற்சவம் நடத்துகிறோம்.

1.10 இறைவனை அடையும் வழிகள் ஒன்பது என்பர்: (1) ச்ரவணம் - கேட்டல், இறைவன் புகழ் கேட்டல் - உதாரணம்: ஹனுமான், (2) கீர்த்தனம் - பாடுதல், நாதோபாஸனை - உதாரணம்: வால்மீகி, தியாகராஜ ஸ்வாமிகள். (3) ஸ்மரணம் - நினைத்தல், நின்றும் இருந்தும் கிடந்தும் அவனையே நினைப்பது - உதாரணம்; ஸீதாதேவி, (4) பாதசேவனம் - சேவித்தல் - உதாரணம்: பரதன், (5) அர்ச்சனம் - பூஜித்தல் - உதாரணம்: சபரி, கண்ணப்ப நாயனார், சாக்கிய நாயனார், (6) வந்தனம் - நமஸ்கரித்தல், வந்தித்தல் - உதாரணம்: விபீஷணன். (7) தாஸ்யம் - தொண்டு புரிதல் - உதாரணம்: லக்ஷ்மணன், திருநாவுக்கரசர். (8) ஸக்யம் - சிநேக பாவம் - உதாரணம்: சுக்ரீவன், அர்ஜுனன், சுந்தரர். (9) ஆத்ம நிவேதநம் - தன்னையே அர்ப்பணித்தல் - உதாரணம்: ஜடாயு. இந்த ஒன்பது வழிகளுள் ஏதாவது ஒன்றை உறுதியாகப் பற்றுவதே இறைவனை அடைவதற்கு  போதுமானது. இவற்றுள் கடைசி இரண்டைத் தவிர, ஏழு முறைகளில் வழிபட ஆலயங்களே வகை செய்வது குறிப்பிடத்தக்கது.

1.11 இவ்வாறு ஆலய வழிபாட்டை மையமாக வைத்து அமைக்கப்பட்ட வாழ்க்கை முறையே சிவதன்மம் ஆகிறது. சிவதன்மம் என்றால் சைவ ஒழுக்கம் என்று பொருள். சிதம்பரம் மறைஞானதேசிகர் (கி.பி.1560) சிவாகம பரிபாஷா மஞ்சரி என்ற வடமொழி நூலில் சிவதன்மம் பத்துக் கோட்காடுகளைக் கொண்ட நெறி என்கிறார்: 1. அஹிம்சை. 2. தயை, 3. சத்யம், 4. அடக்கம் 5. வளம், 6. புலனடக்கம் 7. எளியோர்க்கு வழங்குதல், 8. தியாகம், 9. ஜபம், 10. தியானம் - அல்லது 1. அஹிம்சை, 2. சத்யம், 3. பிறர் பொருள் விழையாமை, 4. சிற்றின்பம் துறத்தல், 5. அவா ஒழித்தல், 6. க்ரோதம் தவிர்த்தல், 7. பெரியோரைப் போற்றுதல், 8. தூய்மை, 9. துயறுற்றலும் மகிழ்வுடன் இருத்தல், 10. நேர்மை என்றபடி. இக்கோட்பாடுகள் அனைத்தும் ஆலய வழிபாட்டு நெறிக்கும் இன்றியமையாததாக இருப்பது கவனிக்கத் தக்கது.

1.12 எனவே, ஆலயத்தை மையமாகக் கொண்ட வாழ்க்கையில், நீறு இல்லா நெற்றி பாழ்; சிவாலயம் இல்லா ஊர் பாழ்; சிவபூஜை இல்லா ஜன்மம் பாழ்; சிவனை அடையா வித்யை பாழ் என்று ஆகமங்கள் வலியுறுத்துகின்றன.

Saturday, February 18, 2012

சொர்க்கத்திற்கு செல்வது எப்படி?சொர்க்கம் , நரகம் செல்லுவதற்கான பாதை என்பது ஏதோ நீண்ட தூரத்தில் உள்ளது. அல்லது நம் கண்ணுக்கு எட்டாத தூரத்தில் உள்ளது என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள். நாம் செய்யும் செயலில் தான் சொர்க்கம் மற்றும் நரகத்திற்கு செல்வதற்கான பாதை உள்ளது என்பது தான் உண்மை. இதை மனதில் வைத்துக்கொண்டு நாம் உண்மையாக ஒவ்வொரு செயலையும் செய்தால் சொர்க்கத்தில வாசலுக்குள் நுழைந்து விடாலம்.

ஆயிரம் அஸ்வமேத யாகங்கள் செய்ததன் பலனையும், ஒரு சத்தியத்தையும் தராசின் இரு தட்டுக்களில் வைத்தால், சத்தியமே மிகுந்திருக்கும் என்று மகாபாரதம் சொல்கிறது. வாய்மையே வெல்லும் என்று சொல்லப்படுவதற்குக் காரணம், சத்தியம் என்றுமே ஜெயிக்கும் என்பதை நாம் உணர வேண்டும் என்பதற்குத்தான். என்றென்றும் - எப்போதும் உண்மை பேசி வாழ்பவன் - அதாவது சத்தியத்தையே தன் கொள்கையாகக் கொண்டு வாழ்பவன், கவலை இன்றி வாழ்கிறான். இப்படிப் பன்னிரண்டு வருடங்கள் தொடர்ந்து வாய்மையின் வழி நின்றால், அவனுக்கு வாக் ஸித்தி உண்டாகும். அவன் சொல்வதெல்லாம் பலிக்கும் என்று ஆன்மிக நூல்களில் குறிப்புகள் இருக்கின்றன.
 
உண்மையே கடவுள். எல்லா அறங்களும் உண்மையைப் பின்தொடர்கின்றன என்பார் வால்மீகி. உண்மையைச் சொல்வதற்காகத் தூக்கு மரம் ஏறவேண்டி வந்தாலும் தயாராக இருங்கள் என்பார் காந்திஅடிகள். பொறுமை, அடக்கம், நிதானம், அன்பு, நேர்மை, நியாயம் - இவை போன்ற குணங்களைக் கடைப்பிடித்து வாழும் ஒருவன் சத்தியம் தவற மாட்டான். இவற்றுள் எந்த ஒரு குணத்தை இழந்து விட்டாலும், நரகம் அவனுக்கு வலை விரித்துக் காத்திருக்கும். ஹக்குயின் என்ற பிரபல புத்த ஞானியிடம் ஜப்பானிய வீரன் ஒருவன் சந்தேகம் ஒன்றைக் கேட்டான். குருதேவா... சொர்க்கமும் நரகமும் இருப்பது உண்மைதானா? ஹக்குயின் அந்த வீரனை நோக்கி, நீ யார்? என்று கேட்டார். இந்த நாட்டு அரசனின் வீரம் மிக்க பாதுகாவலன் என்றான். முட்டாளே... உன் முகத்தை இதுவரை கண்ணாடியில் பார்த்திருக்கிறாயா? கோழையைப் போல் தோற்றம் தரும் உன்னை வீரன் என்று எவன் ஒப்புக் கொண்டான்? என்று கேட்டார் புத்த ஞானி. வீரனுக்குக் கோபம் வந்தது. உடைவாளை உருவினான். ஹக்குயினைக் கண்டம்துண்டமாக வெட்டுவதற்கு நெருங்கினான். வீரன் தன்னை நெருங்குவதற்குள் ஹக்குயின் சிரித்தபடி சொன்னார். சற்றுமுன் நீ கேட்ட கேள்விக்குப் பாதி விடை கிடைத்து விட்டது. அதுதான் நீ திறந்து பார்த்திருக்கும் நரகம் என்ற உலகத்தின் பாதை. திடுக்கிட்டு சிலையாக நின்றான் வீரன். உருவிய வாளை உறைக்குள் போட்டான். ஞானியை சிரம் தாழ்த்தி வணங்கினான். புத்த ஞானி சட்டென்று சொன்னார்: நீ கேட்ட கேள்விக்கு மறு பாதி விடையும் இப்போது கிடைத்து விட்டது. சிந்திக்கத் துவங்கும்போது பொறுமையைக் கடைப்பிடித்தாய். சொர்க்கத்துக்குப் போகும் பாதை இதுதான்.

குல தெய்வம் தெரியாதவர்கள் எவ்வாறு வழிபட வேண்டும்?
பொதுவாக ஒவ்வொருவரும் அவர்களது முன்னோர்களின் வழியைப் பின்பற்றி ஏதாவது ஒரு தெய்வத்தை குலதெய்வாக வழிபடுவார்கள். குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம்கூடவே இருந்து வழிகாட்டும் அருட்சக்தியாகக் கருதப்படுகிறது. நமக்கு ஒரு கஷ்டம் என்றால் குலதெய்வம் தான் உடனே முன் வந்து காப்பாற்றும், மற்ற தெய்வங்கள் எல்லாம் அடுத்து தான் வரும் என கிராமங்களில் கூறுவர்.

குழந்தை பிறந்தவுடன் அதற்கு பெயர் வைப்பது முதல் மொட்டைஅடித்து முடி காணிக்கை செலுத்தி காது குத்துவது வரை அனைத்தும் குலதெய்வத்தின் கோயிலில்தான். குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை  முதலில் வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குவது வழக்கம். சுப நிகழ்ச்சிகளை துவங்குபவர்கள் உடனே குல தெய்வம் கோயிலுக்கு செல்ல முடியாவிட்டால் குல தெய்வத்தை நினைத்து காணிக்கையை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து, குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் போது செலுத்தி விடுவது வழக்கம்.

சில சந்தர்ப்பங்களில் சிலர் குலதெய்வ வழிபாட்டை தொடராமல் விட்டு விடுவர். சில ஆண்டுகள் கழித்து குலதெய்வம் எதுவென்றே தெரியாமல் போய் விடுவதும் உண்டு. இதனால், சோதனைகள் ஏற்படும் போது, குலதெய்வ குற்றமாக இருக்குமோ என்று நினைப்பதுண்டு. உடனே அவர்கள் தங்களின் சொந்த ஊர் எது என்று அறிந்து அங்கு அந்தக் கிராமத்தைக் காக்கும் கடவுளே தங்களின் குலதெய்வம் என்று அறிந்து வழிபடுகின்றனர்.

குலதெய்வத்தை தங்களால் அறிய இயலவில்லை எனில் தெய்வ அருள் பெற்றவர்களிடம் சென்று தங்களின் கோரிக்கையை வைப்பின் அவர்கள் தெய்வ அருளினால் தங்களுக்கு வழிகாட்டலாம். சித்தர்களால் அருளப்பட்ட நாடி ஜோதிடம் போன்றவற்றினாலும் தாங்கள் தங்கள் குலதெய்வத்தை அறியலாம். குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் இன்றிமையாதது. இஷ்டதெய்வம் என்பது நாம் விரும்பி வழிபடும் கடவுள். எனினும், குலதெய்வம் என்பது நமது முன்னோர்களினால் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வருவது. ஆகவே, எப்படியாவது நமது குலதெய்வத்தை அறிந்து வழிபடுதல் அவசியம்.

குல தெய்வம் எது? அதை வழிபடுவது எப்படி? எனத்தெரிந்து அதை வழிபட ஆரம்பிக்கும் வரை,  கும்பகோணம் அருகில் 3 கி.மீ. தொலைவில், கதிராமங்கலத்தில் அமைந்துள்ள அகத்தியர் பூஜித்த துர்கை கோயிலுக்கு செல்ல வேண்டும்.  ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமை ராகு காலங்களில் இந்த துர்க்கையை வழிபாடு செய்வது சிறப்பாகும்.கவிச்சக்கரவர்த்தி கம்பர் தான் பாடல் எழுதும் முன்பாக இந்த துர்க்கையை வழிபாடு செய்தபின் தான் கவிதை எழுதுவாரம்.

திருஷ்டி கழிக்க என்ன செய்ய வேண்டும்?


திருஷ்டி என்பது மற்றவர்களின் தீய எண்ணங்களால் நாம் சூழப்பட்டிருப்பது. த்ருஷ் எனில் பார்த்தல். நம்மை சிலர் நோக்கும்போது நமது வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொண்டார்கள் எனில் அவை நம்மை தாக்கக்கூடும். தற்காலத்தில் உளவியல் அறிஞர்கள்கூட பாசிட்டிவ் திங்கிங், நெகட்டிவ் திங்திங் என எண்ணங்களின் தன்மைகளைப் பிரித்து இருக்கிறார்கள். மற்றவர்கள் இப்படித்தான் நினைக்கவேண்டும் என்று நாம் கட்டளை இடமுடியாது. எனினும், மழை பெய்தால் நாம் ஒரு குடையை பிடித்துக்கொண்டு நம்மை தற்காத்துக் கொள்கிறோமோ, அதுபோன்று நமது புருவ மத்தியில் தூய மஞ்சளினால் ஆன குங்குமத்தை வைத்துக் கொள்ளுதல், பெண்கள் சிறப்பாக மஞ்சள் தேய்த்து நீராடுதல், வீட்டு நிலைக்காலில் மஞ்சள் போன்ற மங்கள சின்னங்களை வைத்தல், பார்த்தவுடன் மற்றவர்களின் மனதில் மாற்று எண்ணம் வருவதுபோல் நமது வீட்டுவாசலில் பொம்மைகள், படங்கள் வைப்பது, பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சம்பழம் போன்றவற்றை வைப்பது இப்படி பல வழிமுறைகள் தீய த்ருஷ்டியை போக்குவதற்கும், நம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் நாம் பயன்படுத்தி வருகிறோம். இவற்றில் ஒன்றுதான் மேலே குறிப்பிட்டுள்ளது.

தந்திர சாஸ்திரங்களிலும் பெரியோர்களின் பழக்க வழக்கங்களினாலும் அந்தந்த ஊர்களில் இருக்கக்கூடிய வழக்கங்களிலும் உள்ளவற்றைக் கடைப்பிடிக்கலாம். இவற்றைத் தவிர நாம் முக்கியமாகக் கொள்ள வேண்டியது கடவுளின் மீது முழு நம்பிக்கை வைத்து நாம் மற்றவர்கள் மீது பொறாமைப்படாமல் இருப்பது, எண்ணம் போல் வாழ்வு என்பதுபோல் நாம் தூய எண்ணத்துடன் நமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டோமானால் சூரியனைக் கண்ட பனி போல எப்படிப்பட்ட தீய சக்திகளும் நம்மை அண்டாத வண்ணம் கடவுள் நம்மைக் காப்பாற்றுவார். 

Wednesday, February 15, 2012

காதலில் வெற்றிபெற செல்ல வேண்டிய கோயில் எது தெரியுமா?
எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் அதை தீர்த்து வைப்பதற்கென்று ஒரு சில கோயில்கள் உள்ளது. இப்படி தனித்துவம் வாய்ந்த கோயில்கள் ஒவ்வொன்றுக்கும் இருக்கும் போது, காதலிப்பவர்களை ஒன்று சேர்ப்பதற்கென்று கோயில் ஏதும் உண்டா என்பது பலரது கேள்வியாக உள்ளது.

அது சரி....
காதல் என்றால் என்ன? ஒரு சிலரிடம் கேட்டால் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நேசிப்பது காதல் என்பார்கள். காதல் என்றால் இதுமட்டும் தானா? இல்லை....இல்லவே இல்லை...

காதல் என்பது ஒருவரை ஒருவர் நேசிப்பது. விரும்புவது. அன்பு செலுத்துவது. பிரியம் வைப்பது. பாசம் வைப்பது. இதற்கு பெயர்தான் காதல் என பெரியவர்கள் கூறுகின்றனர். ஆணுக்கும் பெண்ணுக்கும் வருவது மட்டும் காதல் இல்லை. தாய் பிள்ளைகளிடம் வைக்கும் பாசம். சகோதரன் சகோதரியிடம் வைக்கும் பிரியம். ஒருவன்  ஆண் அல்லது பெண் நண்பரிடம் வைக்கும் நேசம், ஒரு ஆண் ஒரு பெண்ணை மனதார விரும்புவது. தலைமையில் இருக்கும் ஒருவர் தனக்கு கீழ் இருப்பவரிடம் வைக்கும் அன்பு இப்படிப்பட்ட எல்லாமே காதல் தான்.

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே பாசம் இல்லாமல் தவிப்பவர்களும், சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் இடையே பிரியம் இல்லாமல் வருத்தப்படுவர்களும். நண்பர்களுக்கிடையே நேசம் இல்லாமல் கவலைப்படுபவர்களும், ஆணும் பெண்ணும் ஒருவர் விரும்பி மற்றொருவர் விரும்பால் திரிபவர்களும், தலைமையும் கீழ் உள்ளவர்களும் ஒற்றுமையில்லையே என நினைப்பவர்களும் சென்று வழிபட வேண்டிய கோயில் நாகப்பட்டினம் மாவட்டம் கொருக்கை வீரட்டேஸ்வரர் கோயில் ஆகும்.

தாரகாசூரன் போன்ற அசுரர்கள் அழிய முருகனின் அவதாரம் தேவை. எப்போதுமே தியானத்திலிருப்பவர் சிவன். தேவர்கள் எல்லோரும் சேர்ந்து மன்மதனிடம் கூறி சிவன் மீது அம்பெய்து சிவனது தியானத்தை கலைக்க கூறினர். மன்மதனும் சிவன் மீது கணை தொடுக்க, கோபமடைந்த சிவன் மன்மதனை எரித்து விடுகிறார். பதறிப்போன ரதி தேவி, சிவனிடம் மடிப்பிச்சை கேட்க சிவனின் அருளால் மன்மதன் உயிர்ப்பிழைக்கிறான். சிவன் இத்தலத்தில் காமதகன மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார்.

காதலர் தினத்தன்று ஆண், பெண் காதலர்கள் தான் இந்த கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும் என்பதில்லை. பாசம், பிரியம், நேசம், விருப்பம், அன்பு, ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோயிலுக்கு சென்று  இங்குள்ள காமதகன மூர்த்தியை வழிபட்டால் தங்களது விருப்பம் உடனே நிறைவேறும் என்பது நம்பிக்கை.

12 ராசிகளுக்கான மாசி மாத ராசிபலனும் பரிகாரமும்!மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை 1) திருப்தி

துடிப்புடன் உழைத்து வாழ்வில் முன்னேறும் மேஷராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் செவ்வாய் மாறுபட்ட குணத்துடன் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் உள்ளார். செவ்வாய்க்கு இடம் தந்த சூரியனும், பாக்கியாதிபதி குருவும் செவ்வாயைப் பார்க்கின்றனர். இதனால் நேர்மையான செயல்பாடுகளை திறமையுடன் நிறைவேற்றுவீர்கள். சூரியன், புதன், சுக்கிரனின் நல்லருள் பலமாக துணை நின்று உதவும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வீடு, வாகன வகையில் பெறுகிற வசதி தொடர்ந்து கிடைத்திடும். புத்திரர்கள் மன குழப்பத்தால் படிப்பில் பின் தங்கலாம். பூர்வ சொத்தில் தாராள வருமானம் கிடைக்கும். உடல்நலம் சீராக இருக்கும். முக்கிய கடன்களை அடைப்பீர்கள். அரசு தொடர்பான உதவி எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். நண்பர்களிடம் அதிக கண்டிப்புடன் பேசவேண்டாம். தம்பதியர் அன்புடன் நடந்து திருப் தியான  சூழ்நிலையை உருவாக்குவர்.
தொழிலதிபர்கள் உற்பத்தி உயர்வும் புதிய ஒப்பந்தமும் கிடைத்து உபரி பணவரவு காண்பர். வியாபாரிகளுக்கு போட்டி குறைந்து விற்பனை அதிகரிக்கும். லாபவிகிதம் கூடும். பணியாளர்கள் கூடுதல் வேலைவாய்ப்பு, திருப்தி கரமான பணவரவு அடைவர். பணிபுரியும் பெண்கள் திறம்பட செயல்பட்டு பணியில் பாராட்டு, சலுகை பெறுவர். குடும்ப பெண்கள் கணவரின் நல்அன்பு, சீரான பணவசதி கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவர். சுயதொழில் புரியும் பெண்களுக்கு உற்பத்தி, விற்பனை சிறக்கும். அரசியல்வாதிகள் கூடுதல் பதவி பொறுப்பு பெறுவர். விவசாயிகளுக்கு கூடுதல் மகசூல், எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். மாணவர்கள் நன்றாக படித்து உயர்ந்த தேர்ச்சி அடைவர்.

பரிகாரம்: லட்சுமியை வழிபடுவதால் தாராள பணவரவு கிடைக்கும். உஷார் நாள்: 14.2.12 இரவு 10.11 - 17.2.12 அதிகாலை 1.22 மற்றும் 13.3.12 காலை 6.46 -  நள்ளிரவு 1.22.
வெற்றி நாள்: மார்ச் 2, 3, 4  நிறம்: மஞ்சள், சந்தனம்     எண்: 3, 6

ரிஷபம் (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) வெற்றி
எதிலும் புதுப்பாணியை கடைபிடிக்க விரும்பும் ரிஷபராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் மீனத்தில் உச்ச பலத்துடன் செவ்வாயின் பார்வை பெற்றுள்ளார். இதனால் உங்களின் செயல்பாடுகளில் வசீகரத்தன்மை வளரும். கூடுதல் நற்பலன் தரும் கிரகங்களாக சனி, சூரியன், புதன் செயல்படுகின்றனர்.வெற்றியும். பணவரவும் கிடைக்கும். இடம், பொருள் அறிந்து பேசி நற்பெயர் பெறுவீர்கள். தம்பி, தங்கை அன்பு பாராட்டுவர். வீடு, வாகனத்தில் பராமரிப்பு மேற்கொள்ள வேண்டியிருக்கும். புத்திரர் தகுதி, திறமை வளர்த்து படிப்பில் முன்னேற்றம் காண்பர். புதியசொத்து சேர்க்கை கிடைக்கும். இஷ்டதெய்வ வழிபாடு நிறைவேறும். உடல்நலம் சீராக இருக்க கேளிக்கை விருந்துகளில் அளவுடன் பங்கேற்பது நல்லது. தம்பதியர் கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமையாக இருப்பர்.
தொழிலதிபர்கள் இடையூறு தருகிற விஷயங்களை ஆராய்ந்து சரிசெய்வர். தொழில் வளர்ச்சியும் திட்டமிட்ட பணவரவும் கிடைக்கும். பணியாளர்கள் உற்சாகத்துடன் செயல்பட்டு பணி இலக்கை எளிதாக நிறைவேற்றுவர். கூடுதல் பணவரவு, சலுகை கிடைக்கும். வியாபாரிகள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணிபுரிவர். விற்பனை சிறந்து லாபவிகிதம் கூடும். பணிபுரியும் பெண்கள் இலகுவான மனதுடன் செயல்பட்டு பணி இலக்கை நிறைவேற்றுவர். ஓய்வுநேரம் அதிகரிக்கும். குடும்பப் பெண்கள் சுபநிகழ்ச்சிகளை திட்டமிட்டபடி நடத்துவர். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், தோழியின் உதவியால் விற்பனை அதிகமாகப் பெறுவர். அரசியல்வாதிகள் தலைமையிடமும், மக்களிடமும் மதிப்பு பெறுவர். விவசாயிகளுக்கு மகசூல் சிறந்து கால்நடை வளர்ப்பிலும் ஆதாயம் வளரும். மாணவர்கள் நல்ல தரதேர்ச்சி பெறுவர். விளையாட்டு பயிற்சியில் தகுந்த பாதுகாப்பு நடைமுறை அவசியம்.

பரிகாரம்: சிவனை வழிபடுவதால் துன்பம் நீங்கும்.   உஷார் நாள்: 17.2.12 அதிகாலை 1.23 - 19.2.12 அதிகாலை 5.36.
வெற்றி நாள்: மார்ச் 4, 5, 6       நிறம்: பச்சை, சிமென்ட்     எண்: 2, 9

மிதுனம் (மிருகசீரிடம் 3,4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) ஆர்வம்
நியாயத்தை ஏற்கும் மனப்பக்குவம் கொண்ட மிதுனராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் புதன் மாத முற்பகுதியில் அனுகூலக் குறைவாகவும் மாத பிற்பகுதியில் நற்பலன் வழங்கும் வகையிலும் உள்ளார். செவ்வாய், ராகு, குரு நல்ல இடங்களில் உள்ளனர். குடும்ப செலவுக்கான பணவரவு எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். தம்பி, தங்கை அன்பு பாராட்டுவர். மனதில் ஆர்வமும்,  நம்பிக்கையும் வளரும். வீடு, வாகன வகையில் அளவான நன்மை உண்டு. புத்திரரின் பிடிவாத குணம் குடும்பத்தில் சிறு அளவில் சிரமம் தரும். சொத்து தொடர்பான ஆவணம் பிறர் பொறுப்பில் தரக்கூடாது. உடல்நலம் சீராக இருக்கும். நிலுவைப்பணம் சிறிய முயற்சியினால் எளிதில் வசூலாகும். தம்பதியர் தமது பொறுப்பை உணர்ந்து பாசத்துடன் நடந்துகொள்வர். திட்டமிட்ட சுபநிகழ்ச்சி இனிதே நிறைவேறும். நண்பர் சொல்லும் ஆலோசனை உங்கள் வாழ்வில் புதிய பாதையை உருவாக்கும்.

வெளியூர் பயணம் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும்.
தொழிலதிபர்கள் தரத்தை உயர்த்தி புதிய ஒப்பந்தங்களைக் காண்பர். தாராள பணவரவில் கடன்களை அடைப்பீர்கள். பணியாளர்கள் சலுகைகளைப் பெறும் ஆர்வத்தில் லட்சிய மனதுடன் செயல்படுவர். வியாபாரிகள் கூடுதல் விற்பனை, உபரி பணவரவு, தகுந்த சேமிப்பால் மகிழ்வர். பணிபுரியும் பெண்கள் புதிய உத்திகளை பயன்படுத்தி பணியை எளிதாக்குவர். சலுகைகளும் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவர் வழி உறவினர்களிடம் நற்பெயர் பெறுவதில் அதிக கவனம் கொள்வது நல்லது. பயன்பாடு இல்லாத வீட்டு சாதனம் வாங்குவதை தவிர்க்க வேண்டும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தியை உயர்த்தி புதிய சந்தைவாய்ப்புக்களை பெறுவர். லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் ஆதரவாளர் களிடம் நன்மதிப்பு பெறுவர். விவசாயிகளுக்கு மகசூல் சராசரி அளவில் இருக்கும். மாணவர்கள் சோம்பலைத் தவிர்ப்பதால் மட்டுமே படிப்பில் தேர்ச்சி அதிகரிக்கும்.

பரிகாரம்: ரங்கநாதரை வழிபடுவதால் தொழில்வளம் சிறக்கும். உஷார் நாள்: 19.2.12 காலை 5.37 -21.2.12 காலை 11.15
வெற்றி நாள்: மார்ச் 7, 8 நிறம்: ஆரஞ்ச், நீலம்   எண்: 4, 9

கடகம் (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) உஷார்
பரந்த மனமும் உழைப்பில் ஆர்வமும் நிறைந்த கடகராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சந்திரன், மாத துவக்கத்தில் செவ்வாயின் நட்சத்திரமான சித்திரையில் உள்ளார். இதனால் சிந்தனையில் விவேகமும் செயல்திறனும் அதிகரிக்கும். நற்பலன் தரும் கிரகங்களாக புதன், சுக்கிரன், கேது உள்ளனர். ராசிக்கு தர்ம அதிபதியான குரு, செவ்வாயின் வீட்டில் அமர்ந்து கர்ம அதிபதியான செவ்வாயை பார்க்கிறார். இந்த நிலை உங்கள் வாழ்வில் தர்ம, கர்ம யோக பலன்களை பெற்றுத்தரும். வரம்பு மீறி பேசுவதை தவிர்க்கவும். தைரியம், நம்பிக்கை மிகவும் தேவை. பயணத்தில் மிதவேகம் வேண்டும். வீட்டில் பராமரிப்பு, பாதுகாப்பு அவசியம். புத்திரர் ஆடம்பர உணவு வகைகளை உண்பதில் விருப்பம் கொள்வர். குடும்பச்செலவு அதிகரிக்கும். தம்பதியர் குடும்பத்தேவை, சூழ்நிலை உணர்ந்து ஒற்றுமையுடன் செயல்படுவர். நண்பர்களால் உதவி உண்டு. வெளியூர் பயணங்களை பயனறிந்து மேற்கொள்ளலாம்.
தொழிலதிபர்கள் அரசின் தொழிலியல் சட்டதிட்டங்களை கவனத்துடன் பின்பற்றுவது நலம்தரும். உற்பத்தி, பணவரவு சுமாராக இருக்கும். வியாபாரிகள்விற்பனை இலக்கை அடைந்தாலும்ஓரளவுக்கே லாபம் இருக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் எதிர்பார்ப்பை உணர்ந்து செயல்படுவது நல்லது. சலுகைகள் பெறுவதில் தாமதம் இருக்கும். பணிபுரியும் பெண்கள் நிலுவைப்பணியை நிறைவேற்றுவதால் மட்டுமே நிர்வாகத்தின் கண்டிப்பைத் தவிர்க்கலாம். குடும்பப் பெண்கள் வீட்டுச்செலவுக்கு போதுமான பணமின்றி தவிப்பர். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான விற்பனை, சுமாரான லாபம் அடைவர். அரசியல்வாதிகள் தங்கள் பணிகளை நிறைவேற்றுவதில் முன்னேற்றம் காண்பர். சிலருக்கு புதிய பதவி கிடைக்கும். விவசாயிகளுக்கு சுமாரான மகசூல், கால்நடை வளர்ப்பில் உபரி வருமானம் கிடைக்கும். மாணவர்கள் கடுமையாக உழைத்தால் தான் தேர்ச்சி பெற முடியும். கவனம் சிதறும். உஷாராக இருக்கவும்.

பரிகாரம்: பைரவரை வழிபடுவதால் பாதுகாப்பும், நற்பலனும் கிடைக்கும்.  உஷார் நாள்: 21.2.12 காலை 11.16 -  23.2.12 இரவு 9.31.
வெற்றி நாள்: மார்ச் 9, 10     நிறம்: ரோஸ், இளஞ்சிவப்பு  எண்: 1, 7    

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1) இனிமை
துணிச்சலும், செயல்திறனும் மிக்க சிம்மராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சூரியன் ஏழாம் இடத்தில் மாறுபட்ட குணத்துடன் புதனுடன் உள்ளார். அனுகூல பலன் தரும் கிரகங்களாக குரு, சுக்கிரன், சனி செயல்படுகின்றனர். ராசியில் உள்ள செவ்வாயை ராசிநாதன் சூரியன் மற்றும் குரு பார்க்கின்றனர். மொத்தத்தில் இனிமையே.  குடும்ப உறுப்பினர்கள் மாத முற்பகுதியில் உங்கள் செயல்பாடுகளுக்கு உதவ தயங்குவர். பிற்பகுதியில் நிலைமை சரியாகும். இளைய சகோதரர்களுக்கு தேவையான பணஉதவி செய்வீர்கள். புத்திரர்கள் உங்கள் எண்ணங்களை அறிந்து நல்லவிதமாக நடந்துகொள்வர். உடல்நலம் சீர்பெற தகுந்த ஓய்வு, மருத்துவ சிகிச்சை பலன் தரும். மாத முற்பகுதியில் தாமதமான பணவரவு, பிற்பகுதியில் வந்துசேரும். தம்பதியர் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். நண்பர்களிடமும் அளவுடன் பேசுவதால் சிரமம் தவிர்க்கலாம். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி உண்டு.
தொழிலதிபர்கள் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தியை உயர்த்துவர். லாபம் நன்றாக இருக்கும். வியாபாரிகள் கூடுதல் மூலதனத்தில் அபிவிருத்தி பணி செய்வர். விற்பனை அதிகரித்து லாபம் கூடும். பணியாளர்கள் பணி இலக்கை புதிய உத்திகளை பயன்படுத்தி நிறைவேற்றுவர். எதிர்பார்த்த சலுகை மாத
பிற்பகுதியில் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் நிலுவைப் பணிகளை சுறுசுறுப்பாக நிறைவேற்றுவதால் நன்மதிப்பு பெறுவர். குடும்பப் பெண்கள் கணவரின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், சச்சரவு இல்லாத நன்னிலை தொடரும். சுயதொழில் புரியும் பெண்கள் புதிய முயற்சியால் கூடுதல் வாய்ப்புபெறுவர். அரசியல்வாதிகள் இதமான அணுகுமுறையால் அரசின் சலுகைகளைப் பெறுவர். சமூக அந்தஸ்து உயரும். விவசாயிகளுக்கு நடைமுறை செலவு கூடினாலும் மகசூல் அதிகரித்து தாராள பணவரவு இருக்கும். மாணவர்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து தரத் தேர்ச்சி பெறுவர்.

பரிகாரம்: துர்க்கையை வழிபடுவதால் குடும்பத்தில் ஒற்றுமை கூடும்.     உஷார் நாள்: 23.2.12 இரவு 9.32 - 26.2.12 காலை 7.32.
வெற்றி நாள்: பிப்ரவரி 13, 14         நிறம்: பச்சை, சிமென்ட்        எண்: 4, 5

கன்னி (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை1,2) வளர்ச்சி
தாய் மீது அன்பு மிக்க கன்னிராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் புதன் மாத முற்பகுதியில் அனுகூலமாகவும் மாத பிற்பகுதியில் பலம் குறைந்தும் கும்ப, மீன ராசிகளில் இடம்பெறுகிறார். நற்பலன் தரும் கிரகங்களாக ராகு, சூரியன் செயல்படுகின்றனர். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். வீடு,வாகனத்தில் பெறுகிற வசதி திருப்திகரமாக இருக்கும். உங்கள் தகுதியை உயர்த்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். புத்திரர்களின் செயல்பாடு திருப்தி தரும். பூர்வசொத்தில் கிடைக்கும் வருமானம் குறையும். எதிரிகள் தானாகவே விலகிச் செல்வர். அரசு தொடர்பான விஷயங்களில் அனுகூலம் உண்டு. உடல்நலம் சுமார். வருமானம் சிறப்பாக அமையும். பழைய கடன் அடைபட வாய்ப்புண்டு. தம்பதியர் ஒருவருக்கொருவர் கருத்துவேறுபாடு கொள்வர். விட்டுக் கொடுத்து நடந்தால் மட்டுமே வீட்டில் அமைதி நிலைத்திருக்கும். பணம் கொடுக்கல், வாங்கலில் நிதானத்தைப் பின்பற்றுவது நல்லது.
தொழிலதிபர்கள் பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவர். தொழிலில் சீரான வளர்ச்சி உண்டாகும். அதிர்ஷ்டவசமாக புதிய ஒப்பந்தம் கிடைக்கப்பெற்று லாபம் கூடும்.வியாபாரிகள் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பர். நிலுவைப்பணம் வசூலாகும். பணியாளர்கள் திறமையை வெளிப்படுத்தி நிர்வாகத்தினரிடம் பாராட்டு காண்பர். பணிபுரியும் பெண்கள் உற்சாகத்துடன் செயல்பட்டு குறித்த காலத்தில் பணியை நிறைவேற்றுவர்.  குடும்ப பெண்கள் கணவரின் மனமறிந்து செயல்படுவது நல்லது. பிறரது அவதூறு பேச்சைப் பொருட்படுத்தக் கூடாது. சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையை அதிகரிக்கச் செய்வர். புதிய ஆர்டர் கிடைக்கும். அரசியல்வாதிகள் அந்தஸ்தை உயர்த்த அதிக பணம் செலவழிப்பர். புத்திரர்களின் உதவி கிடைக்கும். விவசாயிகள் நல்ல விளைச்சல் காண்பர். கால்நடை வளர்ப்பிலும் ஓரளவு ஆதாயம் உண்டு. மாணவர்கள் பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றும் விதத்தில் நன்கு படிப்பர்.

பரிகாரம்: விநாயகரை வழிபாடு நன்மை தரும்.  உஷார் நாள்: 26.2.12 காலை 7.33 - 28.2.12 இரவு 7.12
வெற்றிநாள்: பிப்ரவரி 15, 16 நிறம்: சிவப்பு, மஞ்சள்        எண்: 3,5

துலாம் (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) சுமார்
கலை உணர்வுடன் எச்செயலிலும் ஈடுபடும் துலாம் ராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் மீனத்தில் உச்சம் பெற்று மாறுபட்ட குணத்துடன் செயல்படுகிறார். இந்த மாதம் நல்ல பலன் வழங்கும் கிரகங்களாக குரு, செவ்வாய் உள்ளனர். உங்களுக்கு சம்பந்த மில்லாத விஷயங்களில் ஈடுபடுவதால் வீண்செலவு, அவப்பெயர் உண்டாகலாம் கவனம்.  வீடு, வாகனத்தில் பராமரிப்புச்செலவு கூடும். தாயின் தேவையை நிறைவேற்ற தாமதிப்பீர்கள். புத்திரர்கள் பிடிவாதமாக நடந்து கொண்டாலும், மாதத்தின் பிற்பகுதியில் நிலைமை சரியாகும். சொத்தின் பேரில் கடன் வாங்குவதற்கான சூழ்நிலை உருவாகும். உடல்நிலை அதிருப்தி தரும். அலைச்சலால் அசதி உண்டாகும். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடப்பர். குடும்பத்தில் அமைதி நிலைத்திருக்கும். நண்பர்களின் உதவி  கிடைக்கும்.
தொழிலதிபர்கள் எதிர்வரும் தடைகளை சரிப்படுத்தினால் மட்டுமே உற்பத்தி சிறக்கும்.  நிர்வாகச் செலவு அதிகரிக்கும். பணியாளர்கள் பணியில் குறுக்கீடுகளைச் சந்திப்பர். பொறுப்பு உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே பணி இலக்கு நிறைவேறும். வியாபாரிகள் கூடுமான வரையில் ரொக்கத்திற்கு பொருள் விற்பது நல்லது.  பணிபரியும் பெண்கள் பணிச்சுமையை சந்திப்பர்.  பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்கக்கூடாது. குடும்பப் பெண்கள் குடும்பநலன் சிறக்க பாடுபடுவர். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனம், கடின உழைப்பின் மூலம் சுமாரான விற்பனை காண்பர். அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைப் பெற பெரும் பொருள் செலவழிப்பர். அரசியலில் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். விவசாயிகளுக்கு ஓரளவு விளைச்சலும், அதற்கேற்ப வருமானமும் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் ஓரளவு லாபம் உண்டு. மாணவர்கள் அக்கறையுடன் படிப்பதால் மட்டுமே தரதேர்ச்சி கிடைக்கும்.

பரிகாரம்: சாஸ்தாவை வழிபாடு நன்மை தரும்.   உஷார் நாள்: 28.2.12 இரவு 7.13 - 1.3.12 காலை 6.07.
வெற்றிநாள்: பிப்ரவரி 17, 18   நிறம்: ஊதா, ஆரஞ்ச்    எண்: 1, 8

விருச்சிகம் (விசாகம் 4, அனுஷம், கேட்டை) கவனம்
எந்தச் சூழலையும் தைரியமாய் எதிர்கொள்ளும் விருச்சிகராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் செவ்வாய் பத்தாம் இடமான சிம்மத்தில் அனுகூலக்குறைவாக உள்ளார். நற்பலன் தரும் கிரகங்களாக சுக்கிரன், புதன் உள்ளனர். உங்கள் செயல்திறமையில் பொறாமை கொண்ட சிலர், உங்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பர் கவனம். வீட்டிற்கு தகுந்த பாதுகாப்பு தேவை. வாகனம் இயக்கும் போது மிதவேகம் அவசியம். புத்திரர்கள் மாத முற்பகுதியில் உங்கள் சொல்படி நடந்தும் பிற்பகுதியில் முரண்பட்ட குணத்துடனும் செயல்படுவர். உடல்நலம் சுமாராக இருக்கும். கணவன், மனைவி ஒருவர் நலனில் ஒருவர் அக்கறை கொள்வர். மனைவி, மகளின் ஜாதக யோக பலன் குடும்பத்தில் நன்மையை உருவாக்கும். வெளியூர் பயணங்களை அவசியம் இருந்தால் மட்டும் மேற்கொள்வது நல்லது.
தொழிலதிபர்கள் போட்டியாளர்களின் குறுக்கீடுகளை தவிர்க்க தகுந்த மாற்று நடவடிக்கை எடுப்பர். வியாபாரிகள் லாபத்தைக் குறைத்து விற்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவர். பணியாளர்களுக்கு சோம்பல் அல்லது உடல்நிலை காரணமாக பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படும். சலுகைகளை கேட்பதில் அவசரம் கூடாது. பணிபுரியும் பெண்கள் உடல்நலம் பேணுவதால் மட்டுமே பணியில் ஆர்வம் வளரும். சக பணியாளர்களிடம் தேவையற்ற விவாதம் கூடாது. குடும்பப் பெண்கள்  கணவருடன் ஒற்றுமையாக இருப்பர். சுயதொழில் புரியும் பெண்களுக்கு விற்பனை மற்றும் லாபம் சுமாராக இருக்கும். அரசியல்வாதிகள் எதிரிகளால் வரும் தொல்லையைச் சரிசெய்ய கூடுதல் பணம் செலவழிக்கும் நிலை உண்டு. முக்கியஸ்தர்களின் சிபாரிசால் பதவி, பொறுப்பு கிடைக்கும். விவசாயிகளுக்கு சாகுபடி செலவு கூடுதலாகும். வருமானம் சுமார். மாணவர்களுக்கு வெளிவட்டார பழக்கத்தால் படிப்பில் கவனம் சிதறும். உஷாராக இருங்கள்.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் பணியிடத்தில் நல்ல சூழ்நிலை ஏற்படும்.  உஷார் நாள்: 2.3.12 காலை 6.08 - 4.3.12  பிற்பகல் 2.56 .
வெற்றி நாள்: பிப்ரவரி 19, 20           நிறம்: மஞ்சள், நீலம்    எண்: 3, 4
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1)  உற்சாகம்
நம்பிக்கையுடன் செயலாற்றும் தனுசு ராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் குரு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து ராசியை பார்க்கிறார். நவக்கிரகங்களில் ராகு, செவ்வாயைத் தவிர மற்ற கிரகங்கள் அனைத்தும் இந்த மாதம் உங்களுக்கு அளப்பரிய நற்பலன்களை வழங்குவர். சமூகப்பணியில் விருப்பத்துடன் ஈடுபட்டு வருவீர்கள். கவுரவம் மிக்க மனிதராக வலம் வருவீர்கள். வருமானம் சிறப்பாக இருப்பதால் மனதில் உற்சாகம் கரை புரளும். வீடு, வாகனத்தில் தேவையான புதிய மாற்றங்களைச் செய்து முடிப்பீர்கள். புதிய சொத்து வாங்கும் சூழல் உருவாகும். இஷ்டதெய்வ வழிபாடு சிறக்கும். எதிரிகள் கூட உங்களின் வளர்ச்சியைக் கண்டு வியப்பர். உடல்நிலை திருப்திகரமாக இருக்கும். தம்பதியர் பாசத்துடன் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை உருவாக்குவர். 
தொழிலதிபர்கள் அரசு தொடர்பான விஷயங்களில் அனுகூலம் காண்பர். வியாபாரிகள் விற்பனையில் வளர்ச்சி காண்பதுடன் விரிவாக்கப் பணியில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். பணியாளர்கள் அதிகாரிகளின் மத்தியில் செல்வாக்கு பெறுவர். பணிபுரியும் பெண்கள் சகபணியாளர்களின் நட்புறவைப் பெறுவர். பதவி உயர்வு, விரும்பியஇடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. குடும்பப் பெண்கள் கணவரின் அன்பைப் பெறுவர். குடும்பத் தேவைக்கான பணவசதி கிடைத்து இனிய வாழ்வு நடத்துவர். ஆடை, ஆபரணச்சேர்க்கையும் உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் திட்டமிட்டு செயல்பட்டு உற்பத்தியைப் பெருக்குவர். அமோக விற்பனையால் லாபம் கூடும். வருமானம் உயர்வதால் மனதில் நம்பிக்கை வளரும். அரசியல்வாதிகள் அதிகாரிகளின் நல்ல ஆதரவுடன் திட்டங்களை நிறைவேற்றுவர். அந்தஸ்து மிக்க பதவி கிடைக்கும். விவசாயிகளுக்கு தாராள மகசூலும் கால்நடை வளர்ப்பில் உபரி வருமானம் கிடைக்கும். மாணவர்கள் சாதனை நிகழ்த்தும் விதத்தில் நன்கு படிப்பர். விளையாட்டிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவர்.
பரிகாரம்: கிருஷ்ணரை வழிபடுவதால் பலன்கள் மேலும் அதிகரிக்கும்.   உஷார் நாள்: 4.3.12 பிற்பகல் 2.57 - 6.3.12 இரவு 9.19.
வெற்றி நாள்: பிப்ரவரி 21, 22, 23      நிறம்: பச்சை, சிமென்ட்    எண்: 4, 9
மகரம் (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) செலவு
ஆர்வத்துடன் கடமையாற்றும் மகர ராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் சனிபகவான் பத்தாம் இடத்தில் உச்சம் பெற்று இருக்கிறார். இந்த மாதம் நற்பலன் தருகிற கிரகங்களாக சுக்கிரன், ராகு உள்ளனர். உங்கள் செயல்திறன் மேம்படும். குடும்பச் செலவு அதிகரிக்கும். மற்றவர்களின் செயல்பாடு கண்டு மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். சகோதரர்கள் உங்களிடம் உதவி கேட்டு நச்சரிப்பர்.  வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது. புத்திரர்கள் பிடிவாதத்துடன் செயல்படுவர். சொத்து தொடர்பான ஆவணம், விலை மதிப்புள்ள பொருள்களை மற்றவர் பொறுப்பில் கொடுக்கக் கூடாது. உடல்நலம் சுமாராக இருக்கும். பணவரவு சுமார் என்பதால், குடும்பத் தேவைகளை நிறைவேற்ற கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். தம்பதியர் ஒருவருக்கொருவர் அனுசரணையுடன் நடந்து கொள்வர். 
தொழிலதிபர்கள் விடாமுயற்சியுடன் உற்பத்தியை சீராக்கி லாபம் காண்பர்.  வியாபாரிகள் சந்தையில் மறைமுகப் போட்டிகளைச் சந்திப்பதுடன், நடைமுறைச் செலவைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுவர். பணியாளர்கள் குறுக்கிடும் சவால்களை எதிர்கொண்டு முன்னேறுவர். சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் பணிச்சுமையால் அவதிப்பட்டாலும் அதற்கேற்ப ஆதாயம் கிடைக்கும். அனுபவசாலிகளின் ஆலோசனையைக் கேட்டுப் பெறுவர். குடும்பப் பெண்கள் கணவர் வழி உறவினர்களின் பாராட்டைப் பெறுவர். சுயதொழில் புரியும் பெண்கள் சுமாரான விற்பனையும், அதற்கேற்ற வருமானமும் காண்பர். அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைப் பெற்று மகிழ்வர். பொது விவகாரங்களில் தலையிடும் போது அதிக கவனம் அவசியம். விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவர். மாணவர்கள் வீண்பொழுதுபோக்கை குறைத்துக் கொள்வது நல்லது. கவனமுடன் படித்தால் மட்டுமே தேறுவர்.
பரிகாரம்: அம்பாளை வழிபடுவதால் வீட்டில் சுபநிகழ்ச்சி நடந்தேறும்.   உஷார் நாள்: 6.3.12 இரவு 9.20- 9.3.12 அதிகாலை 1.31
வெற்றி நாள்: பிப்ரவரி 24, 25  நிறம்: வெள்ளை, ஆரஞ்ச்     எண்: 2, 9
கும்பம் (அவிட்டம், 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) நிதானம்
சாதனை நிகழ்த்தி முன்னேறத் துடிக்கும் கும்பராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் சனிபகவான் பாக்ய ஸ்தானம் துலாத்தில் உச்சம் பெற்று அனுகூலக்குறைவாக உள்ளார். இந்தமாதம் நவக்கிரகங்களில் சுக்கிரன் மட்டுமே உங்கள் வளர்ச்சிக்கு வழிகாட்டி உதவுகிறார். சமூகத்தில் இருக்கும் நற்பெயரைப் பாதுகாக்க முயற்சிப்பது நல்லது. எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நன்மை தரும். பணத்தேவை அதிகரிக்கும். வீடு, வாகனத்தில் நம்பகத்தன்மை குறைவான யாருக்கும் இடம்தருவது கூடாது. புத்திரர்கள் தகுதிக்குறைவான நபர்களிடம் பழகுவதற்கான கிரகநிலை உள்ளது.  தேவையற்ற ஆடம்பரப் பொருட்களை வாங்குவதை தவிர்ப்பது அவசியம். வயிறு தொடர்பான தொந்தரவு ஏற்பட வாய்ப்புண்டு. தம்பதியர் கருத்துவேறுபாடு கொள்வர். விட்டுக் கொடுத்து செயல்பட்டால் நிம்மதி இருக்கும். கொடுக்கல் வாங்கலில் நிதானம் அவசியம்.
தொழிலதிபர்கள் மூலதனத் தேவைக்காக கடன் வாங்க நேரிடும். தொழிலாளர் ஒத்துழைப்பு கிடைக்கும். லாபம் சுமார். வியாபாரிகள் சந்தையில் போட்டிகளைச் சந்திப்பர். ஓரளவு லாபம் கிடைக்கும். பணியாளர்கள் தாமதமாக பணிகளைச் செய்வதால், நிர்வாகத்தின் கண்டிப்புக்கு ஆளாவர். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கப் பெறுவர். பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தினரின் குறிப்பறிந்து செயல்படுவது நல்லது. சலுகைகளைப் பெற காத்திருக்க நேரிடும். குடும்ப பெண்கள் கணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் கூடுதல் உழைப்பால் சீரான வளர்ச்சி பெறுவர். அரசியல்வாதிகள் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவர். சமூகப்பணியில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். விவசாயிகளுக்கு மிதமான மகசூலும் அதற்கேற்ப வருமானமும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியோடு கலைத்துறையில் ஈடுபாடு கொள்வர். நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.
பரிகாரம்: பெருமாளை வழிபடுவது சிறப்பு.    உஷார் நாள்: 9.3.12 அதிகாலை 1.32- 11.3.12 அதிகாலை 4.23
வெற்றி நாள்: பிப்ரவரி 26, மார்ச் 12, 13        நிறம்: ஊதா, சிவப்பு      எண்: 1, 8
மீனம் (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) ஜாதகம்
பணிகளை ஆர்வமுடன் செய்யும் மீனராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் குரு, ராசிக்கு இரண்டாம் இடத்தில் அனுகூலத்தன்மையுடன் உள்ளார். கேது, செவ்வாய், சுக்கிரன் தங்கள் பங்கிற்கு கூடுதல் நற்பலன்களை வழங்குவர். புதிய திட்டங்களில் வெற்றி ஏற்படும். சகோதர வகையில் சுபமங்கல நிகழ்வு உண்டு. வீடு, வாகன பாதுகாப்பில் கவனம் கொள்வதால் மட்டுமே, திருடுபோவதை தவிர்க்கலாம். தாயாருக்கு சிகிச்சை தேவைப்படும். புத்திரர்கள் மந்தகதியில் இயங்குவர். கடன் கொடுத்த பணம் வசூலாகும். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்வு கிடைக்கும்.குடும்பத்தின் முக்கிய தேவைகளை பெருமளவில் நிறைவேற்றுவீர்கள். தம்பதியர் பாசத்துடன் நடந்துகொள்வர். நண்பர்களுக்கு இயன்ற உதவி செய்வீர்கள். சொத்து வாங்க விரும்புபவர்களுக்கு சாதகமான காலம். வெளியூர் பயணத்தால் கூடுதல் பணச்செலவும் கால விரயமும் ஏற்படலாம். பயணங்களை முக்கியத்துவம் கருதி ஏற்பது நல்லது.
தொழிலதிபர்கள் கூடுதல் மூலதனத்தில் அபிவிருத்தி பணிபுரிவர். உற்பத்தி, விற்பனை சிறந்து தாராள பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் இடையூறு அணுகாத சுமூகநிலை அடைவர். ஓரளவுக்கு சலுகை கிடைக்கும். வியாபாரிகளுக்கு போட்டி குறைந்து விற்பனை உயரும். லாபவிகிதம் அதிகரிக்கும். பணிபுரியும் பெண்கள் உற்சாகமாக செயல்பட்டு பணிக்கு சிறப்பு சேர்த்திடுவர். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் பெறலாம். குடும்ப பெண்கள் கணவரின் கருத்து, எண்ணங்களை மதித்து நடப்பர். ஆடை, ஆபரணச் சேர்க்கை தகுதிக்கேற்ப கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு தொழிற்கருவிகள் வாங்க அனுகூலம் உண்டு. அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். விவசாயிகளுக்கு மகசூல் சிறந்து பயிருக்கு நல்ல விலை கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் பின்தங்கலாம். கவனம்.
பரிகாரம்: மாரியம்மனை வழிபடுவதால் தொழில் சிறந்து சொத்து சேர்க்கை கிடைக்கும். உஷார் நாள்: 13.2.12 காலை 6.01 - 14.2.12 இரவு 10.10
மற்றும் 11.3.12 அதிகாலை 4.24 - 13.3.12 காலை 6.45 .
வெற்றி நாள்: பிப்ரவரி 28, மார்ச் 7, 8    நிறம்: நீலம், ரோஸ்        எண்: 4, 7

Sunday, February 12, 2012

விரதத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் ..

விரதம் என்ற சொல்லுக்கு கஷ்டப்பட்டு  இருத்தல் என்று பொருள். விரதமிருப்பவர், அன்று முழுவதும் சுவாமியின் அருகிலேயே இருப்பதாக எண்ண வேண்டும். கடவுளை எண்ணி விரதம் மேற்கொள்வதால் நமது உள்ளம் தூய்மை அடைவதுடன் அறியாமையினால் நாம் செய்த தீவினைகளும், பாவங்களும் நம்மை விட்டு விலகும்.

விரதம் மேற்கொள்ளும் போது கீழ்கண்டவற்றை தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.

  • சதாசர்வ காலமும் மனதில் இறைவனை மட்டுமே எண்ணி துதித்தல் வேண்டும்.
  • தம்மை விதவிதமாக அலங்காரம் செய்து கொள்ளாமலும், நாவிற்கு சுவையான உணவு வகைகளை உண்ணாமலும் இருத்தல் வேண்டும்.
  • கேளிக்கைச் செயல்களிலோ, வீண் விவாதங்களிலோ ஈடுபடக்கூடாது.
  • பிறரைப்பற்றி புறம் பேசுவதோ, குறை கூறுவதோ கூடாது.
  • அடுத்தவர் மனம் துன்பப்படும்படியான தீய சொற்களைப் பேசக்கூடாது.
  • மனதில் தான் என்ற கர்வத்தை அறவே அகற்ற வேண்டும்.
  • விரும்பத்தகாத செயல்களை செய்யக்கூடாது.
  • அதிகமாக தானம் செய்ய வேண்டும். அவ்வாறு, தானம் செய்யும்போது எவ்வளவு பொருள் கொடுத்தாலும், இவ்வளவு குறைவாகவே கொடுக்கிறோமே! என்ற எண்ணத்துடன் கொடுக்க வேண்டும்.
  • அரிசி சாதத்தையும், வெங்காயம், பூண்டு இவற்றையும் தவிர்த்து விட வேண்டும். அரிசி, வெங்காயம், பூண்டு இவற்றைச் சாப்பிட்டால் தூக்கம் வரும். சிந்தனை மாறும். இதனால் தான் இவற்றை வேண்டாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இவ்வாறு செய்வதன் மூலம் எளிதில் இறைவனின் அருளை எளிதில் பெறலாம்.

நன்றி தினமலர்.
 

Saturday, February 11, 2012

காளி மந்திரம் - மூல மந்திரம்

ஸ்ரீ காளி தியானம்


வாமோர்த்வேசின்ன முண்டம் வரமபிதததோ தக்ஷிணோர்த்மே திக்ஷ்ணம்
கட்கம் சாதேஹ்ய பீதிம் கரகமலதலே பிப்ரதீம் மேக காந்திம்

திக்வஸ்த்ராம் ஊர்த்துவ கேசீம் சவகரக்ருத் காஞ்சிகலாபாம் சவாஸ்ருக்
விஸ்பூர்யத் வ்யாத்தவக்த்ராம் சரிதஜன பலதாம் காளிகாம் தாம் பஜேஹம் பொருள்: இடது மேல் கரத்தில் கூரிய கத்தியும், அதன் கீழ்க்கரத்தில் வெட்டப்பட்ட தலையும், வலது மேல்கரத்தில் அபயமும், கீழ்க்கரத்தில் வரமும் உடையவள். கருமையான நிறத்தினள். ஆடையற்றவள். மேல்நோக்கிய கேசமுடையவள். சவங்களின் கரங்களை ஒட்டியாணமாக அணிந்திருப்பவள். ரத்தம் சொட்டும் சிவந்த, தொங்கும் நாக்கினை உடையவள். பக்தர்களுக்கு வேண்டியவற்றை அருளுபவளுமாகிய காளியை வணங்குகிறேன்.

மூல மந்திரம்

க்ரீம் க்ரீம் க்ரீம் ஹும் ஹும் ஹ்ரீம் ஹ்ரீம் தக்ஷிணே காளிகே

க்ரீம் க்ரீம் க்ரீம் ஹும் ஹும் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா 


காயத்ரீ மந்திரம்

ஓம் மஹாகாள்யை வித்மஹே
ச்மசான வாஸின்யை தீமஹி
தந்நோ கோர ப்ரசோதயாத்


ஸ்ரீ காளி அஷ்டோத்திர சத நாமாவளி


ஓம் காள்யை நம
ஓம் கபாலின்யை நம
ஓம் காந்தாயை நம
ஓம் காமதாயை நம
ஓம் சுந்தர்யை நம
ஓம் காளராத்ர்யை நம
ஓம் காளிகாயை நம
ஓம் காலபைரவ பூஜிதாயை நம
ஓம் குருகுல்லாயை நம
ஓம் காமின்யை நம

ஓம் கமனீய ஸ்வபாவின்யை நம
ஓம் குலீனாயை நம
ஓம் குலகர்த்ர்யை நம
ஓம் குலவர்த்ம ப்ரகாசின்யை நம
ஓம் கஸ்தூரி ரஸ நீலாயை நம
ஓம் காம்யாயை நம
ஓம் காம ஸ்வரூபிண்யை நம
ஓம் ககாரவர்ண நிலயாயை நம
ஓம் காமதேனவே நம
ஓம் கராளிகாயை நம

ஓம் குலகாந்தாயை நம
ஓம் கராளாஸ்யாயை நம
ஓம் காமார்த்தாயை நம
ஓம் கலாவத்யை நம
ஓம் க்ருசோதர்யை நம
ஓம் காமாக்யாயை நம
ஓம் கௌமார்யை நம
ஓம் குலஜாயை நம
ஓம் குலமான்யாயை நம
ஓம் கீர்த்திவர்தின்யை  நம

ஓம் கமஹாயை நம
ஓம் குலபூஜிதாயை நம
ஓம் காமேச்வர்யை நம
ஓம் காமகாந்தாயை நம
ஓம் குஞ்ஜரேச்வர காமின்யை நம
ஓம் காமதாத்ர்யை நம
ஓம் காமஹர்த்ர்யை நம
ஓம் க்ருஷ்ணாயை நம
ஓம் கபர்தின்யை நம
ஓம் குமுதாயை நம

ஓம் கிருஷ்ண தேஹாயை நம
ஓம் காளிந்த்யை நம
ஓம் குலபூஜிதாயை நம
ஓம் காச்யப்யை நம
ஓம் க்ருஷ்ணமாத்ரே நம
ஓம் குலிசாங்க்யை நம
ஓம் கலாயை நம
ஓம் க்ரீம் ரூபாயை நம
ஓம் குலகம்யாயை நம
ஓம் கமலாயை நம

ஓம் கிருஷ்ணபூஜிதாயை நம
ஓம் க்ருசாங்க்யை நம
ஓம் கின்னர்யை நம
ஓம் கர்த்ர்யை நம
ஓம் கலகண்ட்யை நம
ஓம் கார்த்க்யை நம
ஓம் கம்புகண்ட்யை நம
ஓம் கௌலின்யை நம
ஓம் கௌமுத்யை நம
ஓம் காம ஜீவன்யை நம

ஓம் குலஸ்த்ரியை நம
ஓம் கீர்த்திதாயை நம
ஓம் க்ருத்யாயை நம
ஓம் கீர்த்தயே நம
ஓம் குலபாலிகாயை நம
ஓம் காமதேவகலாயை நம
ஓம் கல்பலதாயை நம
ஓம் காமாங்க வர்த்தின்யை நம
ஓம் குந்தாயை நம
ஓம் குமுதப்ரியாயை நம

ஓம் கதம்ப குஸுமோத்சுகாயை நம
ஓம் காதம்பின்யை போற்றி
ஓம் கமலின்யை நம
ஓம் க்ருஷ்ணாநந்த பிரதாயின்யை நம
ஓம் குமாரீ பூஜனரதாயை நம
ஓம் குமாரீ கண சோபிதாயை நம
ஓம் குமாரீ ரஞ்ஜன ரதாயை நம
ஓம் குமாரீ வ்ரத தாரிண்யை நம
ஓம் கங்காளாயை நம
ஓம் கமனீயாயை நம

ஓம் காமசாஸ்த்ர விசாரதாயை நம
ஓம் கபாலகட்வாங்க தராயை நம
ஓம் காலபைரவ ரூபிண்யை நம
ஓம் கோடர்யை  நம
ஓம் கோடராக்ஷ்யை நம
ஓம் காச்யை நம
ஓம் கைலாச வாஸின்யை நம
ஓம் காத்யாயன்யை நம
ஓம் கார்யகர்யை நம
ஓம் காவ்யசாஸ்த்ர ப்ரமோதின்யை நம

ஓம் காமாகர்ஷண ரூபாயை நம
ஓம் காமபீட நிவாஸின்யை நம
ஓம் கங்கின்யை நம
ஓம் காகின்யை நம
ஓம் க்ரீடாயை நம
ஓம் குத்ஸிதாயை நம
ஓம் கலஹப்ரியாயை நம
ஓம் குண்டகோலோலோத்பவ நம
ஓம் ப்ராணாயை நம

ஓம் கௌசிக்யை நம
ஓம் கும்ரஸ்தன்யை நம
ஓம் கலாக்ஷõயை நம
ஓம் காவ்யாயை நம
ஓம் கோகநதப்ரியாயை நம
ஓம் காந்தாரவாஸின்யை நம
ஓம் காந்த்யை நம
ஓம் கடினாயை நம
ஓம் க்ருஷ்ண வல்லபாயை நம
ஓம் க்ருஷ்ண ஸாஹ்ய கர்யை நம


மயானத்தில், சவம் போல் கிடக்கும் சிவன் மேல் ஏறி நிற்பவள். கொல்கத்தாவில் உள்ள காளிகோயில் மிகவும் புகழ்பெற்றது. பொதுவாகக் காளிக்கு உரிய கோயில்கள் ஊரின் மையத்தில் இல்லாமல், சற்று தள்ளியே ஒதுக்குப்புறத்தில் இருக்கும். காளியின் கணவன் மஹாகாலன், மஹாகவி காளிதாஸன், பாரதியார், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஆகியோர் காளியின் தீவிர பக்தர்களாவார்கள். காளி பரப்ப்ரம்ம ஸ்வரூபிணி ஆவாள். கைவல்ய பதவியைத் தரக்கூடியவள். காளி உபாஸனை, குண்டலினி. சக்தியை எழும்பச் செய்யும். 

Wednesday, February 8, 2012

அவஹந்தி ஹோமம் (விவசாயம்) - ஆன்மிக வளர்ச்சிஅவஹந்தி ஹோமம் (விவசாயம்)
விவசாயத்தில் நல்ல மகசூல் பெறவும், நாடு பசுமைப்புரட்சியில் சிறக்கவும், பொருளாதார முன்னேற்றம் ஏற்படவும், ஆன்மிக வளர்ச்சி ஏற்படவும், "அவஹந்தி ஹோமம் நடத்த வேண்டும்.

மிலாடி நபி: நல்வழி காட்ட வந்த நபிகளார்!

மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்காக இறைவனால் அனுப்பப்படும் தூதுவர்களாக நபிமார்கள் விளங்கினர். அல்லாஹ்வால் பூமிக்கு அனுப்பப்பட்ட மாமணி தான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். நாயகம்(ஸல்) அவர்கள், கி.பி.570, ரபியுல் அவ்வல் மாதம் 12ம் தேதி மெக்கா நகரில் அவதரித்தார்கள். இவரது தந்தை ஹஸ்ரத் அப்துல்லாஹ். தாய் ஹஸ்ரத் ஆமீனா. நாயகம்(ஸல்) அவர்களை ஹஸ்ரத் முஹம்மத் முஸ்தபா அஹ்மத் முஸ்தபா ரஸுலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று அழைப்பர்.  நாயகம்(ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்னதாகவே அவர்களது தந்தை இறந்து விட்டார். தாயார் ஆமீனா, அவர் பிறந்த ஆறாம் ஆண்டில் காலமாகி விட்டார். எனவே, பாட்டனார் ஹஜ்ரத் அப்துல் முத்தலிப்பின் பாதுகாப்பில் நாயகம்(ஸல்) அவர்கள் வளர்ந்து வந்தார்கள். பிறகு அவரும் காலமாகி விடவே, சிறிய தந்தை ஹஜ்ரத் அபுதாலிப் பராமரிப்பில் இருந்தார்கள்.  அண்ணலார் அவர்கள் இளமையிலேயே செல்வாக்குடனும், நற்குணத்துடனும் திகழ்ந்தார்கள். இதன் காரணமாக மக்கள் அவர்களை அல் அமீன்(நம்பிக்கையாளர்) என்றும், அஸ்ஸாதிக்(உண்மையாளர்)என்றும் பாராட்டினர். 23ம் வயதில் நாயகம்(ஸல்) அவர்கள், கதீஜா(ரலி) அம்மையாரை திருமணம் செய்து கொண்டார்கள். 40ம் வயதில் இவரை தனது தூதராக அல்லாஹ் அறிவித்தான். நாயகம்(ஸல்) அவர்களுக்கு 11 துணைவியர் இருந்தனர். இவர்கள் மூலம் ஏழு குழந்தைகள் பிறந்தனர்.

ஆண்மக்கள் மூவரும் குழந்தையாக இருந்தபோதே இறந்து விட்டார்கள். பெண்களில் நான்காவதாக பிறந்த பாத்திமா (ரலி) அம்மையார் இவருக்கு இரண்டு பேரன்மாரைப் பெற்றுத் தந்தார். அவர்களுக்குஹசன் (ரலி), ஹுசைன்(ரலி) என பெயரிடப்பட்டது. பாத்திமா அம்மையாரை சுவர்க்கத்து பெண்களின் தலைவி என இஸ்லாமிய பெண்கள் போற்றுகின்றனர். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், இறைவனால் தூதராக அறிவிக்கப்பட்டதும், நமது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே! நான் அவனுடைய தூதனாக இருக்கிறேன், என்றார்கள். இதைக் கேட்ட மெக்காவாசிகள் அவரைத் துன்புறுத்தினர். 53 வயது வரை அவர்கள் இந்தக் கொடுமையை அனுபவித்தார்கள். இதன் காரணமாக மெக்காவில் இருந்து 450கி.மீ., தூரத்தில் உள்ள மெதீனாவுக்கு அவர்கள் குடிபெயர வேண்டியதாயிற்று. மெதீனாவில் நாயகம்(ஸல்) அவர்களை ஆதரித்த மக்களின் எண்ணிக்கை பெருகியது. இதன்பிறகு பலயுத்தங்களை செய்து, மெக்கா நகர மக்களையும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளச் செய்தார்கள். நாயகம்(ஸல்) அவர்கள் மிகுந்த பணிவுடையவர்கள். பிறரது துன்பத்தை நீக்குவதில் அக்கறை காட்டினார்கள். கி.பி.632 ரபியுல் அவ்வல் மாதம் 12ம்தேதி இவ்வுலகைத் துறந்தார்கள். அவர்கள் பிறந்ததும் மறைந்ததும் ஒரே நாளில் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். இந்த நாளையே, மிலாடி நபி என்னும் பெயரில் உலகெங்கும் கொண்டாடுகிறார்கள்.

புனிதர்கள் தவறான பாதையில் சென்ற காலத்தில், அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக இறைவனால் அனுப்பப்பட்ட தூதுவர்களாக நபிமார்கள் விளங்கினர். அரபுநாட்டில் வாழ்ந்தவர்களின் நிலைமை படுமோசமாக இருந்த காலத்தில், அங்கே குடிப்பதும், பெண் குழந்தைகள் பிறந்தால் கொன்று புதைப்பதும், சமூக விரோத செயல்கள் நடப்பதுமாக இருந்தது. இத்தகைய பாவகரமான வாழ்க்கையை மேற்கொண்டிருந்த மக்களை சீர்திருத்த அல்லாஹ்வால் பூமிக்கு அனுப்பப்பட்ட மாமணிதான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.அண்ணலார் நாயகம் (ஸல்) அவர்கள் கி.பி.570, ரபியுல் அவ்வல் மாதம் 12ம் தேதி மெக்கா நகரில் அவதரித் தார்கள். இவர்களது தந்தை ஹஜ்ரத் அப்துல்லாஹ் அவர்கள். தாய் ஹஜ்ரத் ஆமீனா அவர்கள். நாயகம் அவர்களின் முழுப்பெயர் ஹஜ்ரத் முஹம்மத் முஸ்தபா அஹ்மத் முஸ்தபா ரஸுலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பதாகும். இவர்கள் பிறப்பதற்கு முன்னதாகவே தந்தை அப்துல்லாஹ் அவர்கள் காலமாகி விட்டார்கள். தாயார் ஆமீனா அவர்கள், இவர்கள் பிறந்த 6ம் ஆண்டில் காலமானார்கள். எனவே ஹஜ்ரத் அப்துல் முத்தலிப் என்று அழைக்கப்பட்ட இவர்களது பாட்டனார், நாயகத்தை வளர்த்து வந்தார்கள் . பிறகு அவர்களும் காலமாகிவிடவே, சிறியதந்தை ஹஜ்ரத் அபுதாலிப் அவர்களது பராமரிப்பில் வளர்ந்து வந்தார்கள். நபிகள் நாயகம் அவர்கள் இளமையிலேயே செல்வாக்குடனும், நற்குணத்துடனும் திகழ்ந்தவர்கள். இதன் காரணமாக மக்கள் அவர்களை அல்அமீன் (நம்பிக்கையாளர்), என்றும், அஸ் ஸாதிக் (உண்மையாளர்) என்றும் பாராட்டினர்.

23ம் வயதில் இவர் கதீஜா (ரலி) அம்மையாரை நபிகளார் திருமணம் செய்து கொண்டார்கள்.  40ம் வயதில் இவர்களை தனது தூதராக அல்லாஹ் அறிவித்தான். நாயகம்(ஸல்) அவர்களுக்கு 11 மனைவிமார்கள் இருந்தனர். இவர்கள் மூலம் ஏழு குழந்தைகள் பிறந்தார்கள். ஆண் மக்கள் மூவரும் குழந்தையாக இருந்தபோதே இறந்துவிட்டனர். பெண்களில் நான்காவதாக பிறந்த பாத்திமா (ரலி) அம்மையார், இவருக்கு இரண்டு பேரன்மாரை பெற்றுத் தந்தார்கள். அவர்களுக்கு ஹசன் (ரலி), ஹுசைன் (ரலி) என பெயரிடப்பட்டது. பாத்திமா அம்மையார் அவர்கள் சுவர்க்கத்து பெண்களின் தலைவி என போற்றப்படுகிறார்கள்.நபிகள் நாயகம் அவர்கள், இறைவனால் தூதராக அறிவிக்கப் பட்டதும், நமது வணக்கத் திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே. நான் அவனுடைய தூதனாக இருக்கிறேன், என்று சொன் னார் கள். இதைக் கேட்ட மெக்காவாசிகள் அவரை கொடுமை செய்தனர். 53ம் வயது வரை அவர்கள் கடுமையான சோதனைகளை அனுபவித்தார்கள். இதன் காரணமாக மெக்காவிலிருந்து 450 கி.மீ. தூரத்திலுள்ள மெதீனாவுக்கு குடிபெயர வேண்டியதாயிற்று. மெதீனாவில் தான் நாயகம் அவர்களை ஆதரித்த மக்களின் எண்ணிக்கை பெருகியது. இதன்பிறகு பல யுத்தங்கள் செய்து மெக்கா நகர மக்களையும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளச் செய்தார்கள் நாயகம் அவர்கள். நபிகள் நாயகம் மிகுந்த பணிவுடையவர்கள். பிறரது துன்பத்தை நீக்குவதில் இவர்களுக்கு இணை யாருமில்லை. அவர்கள் இவ்வுலகில் தங்களது 63ம் வயதுவரை வாழ்ந்தார்கள். கி.பி.632, ரபியுல் அவ்வல் மாதம் 12ம் தேதியில் இவ்வுலகைத் துறந்தார்கள். அவர்கள் பிறந்ததும் மறைந்ததும் ஒரே நாளில்தான். இந்த நாளையே மிலாடி நபி என்னும் பெயரில் கொண்டாடுகிறார்கள்.

Tuesday, February 7, 2012

சிவன் முத்திரைகள்

முத்திரைகள்
4.1 முத்ரா என்ற சொல்லுக்கு இறைவழிபாட்டின்போது விரல்களை குறிப்பிட்ட வகையாக வைத்துக் கொள்ளும் முறை என்ற பொருள் ஸம்ஸக்ருத அகராதிகளில் காணக்கிடைக்கிறது. முத்ரா என்ற சொல் ஒரு காரணப் பெயர். முத் என்ற வினைச் சொல் மகிழ்வூட்டும், மனநிறைவளிக்கும் என்று பொருள்படுவது. த்ரா என்ற பதத்துக்கு விரைந்து வெளியேற்றுதல் என்று பொருள். எனவே, தேவதைகளுக்கு மகிழ்வையும் மன நிறைவையும் அளிப்பதுவும், விரைவாகப் பாவங்களை அகற்றுவதும் ஆன கிரியைக்கு முத்ரா என்பதாகக் காரணப் பெயர் அமைந்துள்ளது

4.2 முத்திரைகளின் பெருமையை விளக்கிக் கூறும் ச்லோகங்கள் இவ்வாறு கூறுகின்றன: எல்லா தேவர்களையும் மகிழ்விப்பதாலும், பாவத் தொடர்பைப் போக்குவதாலும் அவை முத்திரை என்று பெயர் பெறுகின்றன. முத்திரைகள் எல்லாக் காமங்களையும் (இன்பம்) (தர்ம-அர்த்த-காம-மோக்ஷம் என்பதே அறம், பொருள், இன்பம், வீடு என்றாகிறது), அர்த்தங்களையும் (செல்வம்), கூட்டுவிப்பதாகும். தந்த்ரங்களில் கற்பிக்கப்பட்ட முத்திரைகளைக் காட்டுவதால், மந்த்ர தேவதைகள் ப்ரீதி அடைவார்கள். அர்ச்சனை, ஜபம், த்யானம் முதலியவற்றின் போதும், ஸ்நானம், ஆவாஹனம், சங்கப்பரதிஷ்டை , ரக்ஷணம், நைவேத்யம், முதலிய கிரியைகளின்போதும், அந்தந்த (பூஜா) கலபங்களில் கூறப்பட்ட முத்திரைகளை உரிய ஸ்தானங்களில், உரிய லக்ஷணங்களுடன் காண்பிக்க வேண்டும்.

4.3 முத்திரைகளைப் பற்றிய சில விளக்கங்களை நம்மில் பலருக்குப் பரிச்சயமான ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயண முறையை ஒரு உதாரணமாகக் கொண்டு காண்போம்.

4.4. மனனத்தால் (ஜபிப்பதனால்) ஸாதகனைக் (ஜபிப்பவனைக்)  காப்பவை (மநநாத் த்ராயதே ) மந்திரங்கள் பலவகை: ஓர் அக்ஷரம் உள்ளவை பிண்டம்; இரண்டு அக்ஷரம் உள்ளவை கர்த்ரீ; மூன்று முதல் ஒன்பது அக்ஷரங்கள் கொண்டவை பீஜம்; ஒன்பதுக்கு மேல் அக்ஷரங்கள் கொண்டவை மந்த்ரங்கள்.

4.5 மந்திரங்கள் அனாதியானவை. இறைவனோடு மூச்சுக் காற்றென ஒன்றியவை. அவற்றை மானஉஷ சக்திகள் உருவாக்கவில்லை. அவை பேறு பெற்றவர்கள் பாக்கியசாலிகள். ரிஷிகள் மந்திரங்களை முதலில் கண்டறிந்து, அவற்றின் சக்தியை உணர்ந்து, உலக நன்மைக்காக அவற்றை வெளியிட்டவர்கள். ஒரு மந்திரத்தை ஜபிக்கத் தொடங்கும் முன் வலக்கையால் சிரஸ்ஸைத் தொட்டு, அந்த மந்திரத்தைக் கண்டறிந்து சொன்ன முனிவரை நினைவு கூர்ந்து, அவரை வணங்குவதாகப் பாவனை செய்வதுதான் குரு ந்யாஸம். இவ்வாறு சிரஸ்ஸைத் தொடும் செய்கை ஒரு முத்திரை.

4.6 மந்திரம் அமைந்துள்ள சொற்கட்டுக்கு (சந்தத்திற்கு) சந்தஸ் என்று பெயர். அதற்கு வணக்கம் செலுத்துவதே சந்தஸ் ந்யாஸம் என்பது, சந்தஸ்ஸை நினைவு கூர்ந்து, உதட்டின் மேல் வலது  கையால் தொடும் முத்திரையே சந்தஸ் ந்யாஸம்.

4.7 அந்தந்த மந்திரத்துக்கு உரிய தேவதையை இதயத்தில் அமர்த்துவதாகப் பாவித்து இதயத்தைத் தொடுவது தேவதா ந்யாஸம்.

4.8 மந்திரம் என்பது, மரம் போன்று பலன் தரும் வரிந்த சக்தி வடிவம். இதன் விதை போல, கருவாக, இதன் சூக்ஷ்ம சக்தி அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்துள்ள சொல் வடிவமே பீஜம். அந்த பீஜத்தில் அடங்கியுள்ள வீர்யமே சக்தி. சக்தி தேவையின்றி வேறிடத்தில் செல்லாமல், அதனைப் பிணைத்து வைத்திருக்கும் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் என்ற மாலா மஹா மந்திரத்துக்கு ஐம் என்பது பீஜம்; ஸெள: என்பது சக்தி; க்லீம் என்பது கீலகம்; (இந்த ஐம் ஸெள: க்லீம் என்ற மூன்று அக்ஷரங்களும் சேர்ந்து ஸ்ரீ பாலா மந்திரம் என்ற தனிப் பெயரும் பெற்றுள்ளன). ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர பாராயணத்துக்கு முன்னால் ந்யாஸம் செய்யும்போது, இந்த அக்ஷரங்களைச் சொல்லி, அங்கங்களைத் தொட்டு, அங்கு அவை நிலைத்திருப்பதாக பாவனை செய்கிறோம். இந்த கிரியைகள் பீஜ ந்யாஸம், சக்தி ந்யாஸம், கீலக ந்யாஸம் எனப்படும். எந்த உறுப்புகளை எவ்வாறு தொடவேண்டும் என்பது அவரவரது குரு போதித்த ஸம்ப்ரதாயத்தைப் பொறுத்தது.

4.9 இவ்வாறே விநியோக ந்யாஸம், கர ந்யாஸம், அங்க ந்யாஸம் முதலியனவும் ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம பாராயணத்துக்கு விதிக்கப்பட்டுள்ளன.

4.10 மேற்கூறியவற்றால் (அ) மந்திரங்கள் உச்சரிக்கும்போது, முத்திரைகளுக்கு முக்கிய இடம் உண்டென்பதும், (ஆ) அந்த முத்திரைகளும் குரு பரம்பரைக்கு ஏற்ப பேதங்களாகும் என்பதும் பெறப்படும். அதே வகையில்தான், மந்திரங்களை ப்ரயோகித்து சிவாலய பூஜா கிரியைகள் நடக்கும்போது, பல வகையான முத்திரைகளுக்கு அக்கிரியைகளில் முக்கியத்துவம் தரப்படுகின்றது. அவற்றை சிவாச்சாரியார்கள் பயிற்சி பெறும்போது, குருமுகமாகக் கற்றறிவர். பின்னர் அவர்கள் அவற்றைப் பிழைகளின்றி, ச்ரத்தையுடன் ப்ரயோகிக்கும்போது, கிரியைகளைச் சூழ்ந்து வரும் மந்திரங்களின் பலன்கள் பூரணமாக ஸித்தியாகின்றன. முத்திரைகள் வெறும் அங்க சேஷ்டைகள் அல்ல; அவை பொருள் பொதிந்தவை; கிரியைகளுக்கு பூரணத்துவத்தை அளிப்பவை.

4.11 நல்ல செயல்முறைகளுக்குத் தந்த்ரங்கள் என்று பெயர். மந்திரங்களை உபயோகித்து பூஜை செய்யும் விதி முறைகளும் தந்த்ரங்களே. அத்தந்த்ரங்கள் எழுதப்பட்டுள்ள நூல்களையும் தந்த்ரங்கள் என்றே அழைப்பர். ஆகமங்கள் அனைத்தும் அத்தகு தந்த்ர நூல்களே.

4.12 வேதங்களில் ஓம் என்ற ப்ரணவமும், ஸ்வாஹா, ஸ்வதா, வஷட், வெளஷட், வேட், வாத் முதலிய மந்திரங்களும், பூ; புவ; ஸுவ; என்னும் வ்யாஹ்ருதிகளும் முதல் முதலாகக் கூறப்படுகின்றன. பிற்காலத்துத் தந்த்ர சாஸ்திரங்களில் ஹம், ஹாம், ஹும், ஹூம், ஹ்ரீம், ஹ்ராம், ஹ்ரோம், ஸ்ரீம், ஐம், ஏம், க்லீம், பட் முதலிய ஒலிச் சேர்க்கைகள் குறிப்பிடப்படுகின்றன. இவை அனைத்தும் மந்திர சக்தி வாயந்தவை. இவற்றை ஆகம நூல்கள் பீஜாக்ஷரங்கள் என்று பெயரிட்டு திருக்கோவில் கிரியைகளுக்குப் பெரும் அளவில் பயன்படுத்துகின்றன. பூஜா மந்திரங்களை முறைப்படி குருவிடமிருந்து கற்றுக் கொள்ளும்போது, பீஜாக்ஷர மந்திரங்களின் ப்ரயோகமும் கற்றுத் தரப்படும்.

4.13. யந்த்ரம் என்ற சொல்லுக்கு ஒரு பொருளையோ சக்தியையோ தேக்கி வைத்திருக்கும் கருவி, ஒரு செயல் புரிகையில் அதற்குப்  பயன்படுத்தப்படும் கருவி, சாதாரண அறிவுக்கெட்ட சக்தியைத் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு சாதனம் என்றெல்லாம் பொருள் காணப்படுகிறது. எனவே மந்திரங்களின் மூலம் பூஜா விதிகளைக் கூறும் தந்த்ர நூல்கள், யந்த்ரங்களின் விவரங்களையும், அவற்றை உபயோகிக்க வேண்டிய முறைகளையும் கூட வெளியிடுகின்றன. மந்திரங்களை ப்ரயோகித்துப் பலனடைய உதவும் தந்த்ரங்களாம் முத்திரைகமைச் சரியாக உபயோகிப்பதால், அம்மந்திரங்களுக்குரிய தெய்வங்கள் மகிழ்கின்றனர் என்பதும், முத்திரைகள் காட்டும்போது அவை யந்த்ரங்களோடு சம்மபந்தப்பட்டிருந்தால், அந்த யந்திரங்கள் தாங்கியுள்ள, தாங்க வேண்டிய, சக்திக்கான தேவதைகளும் திருப்தி அடைவது உறுதி.

4.14 முத்திரைகளுக்கு இன்னொரு முக்கியத்துவமும் உண்டு. பெரும்பாலான முத்திரைகள் அப்போது ஓதப்பட்டுக்கொண்டிருக்கும் மந்திரச் சொற்களின் பொருளையும், வழிபாட்டு உபாங்கத்தையும் அனுசரித்தே நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. நடைபெறும் சிவ பூஜா கிரியைகளை, மந்திரங்களின் வாயிலாக அறிய முடியாதவர்களும்கூட, முத்திரைகளைக் கண்ணுற்று, அவற்றை ஊகித்து உணரலாம்.

4.15 இனி வரும் பக்கங்களில், சிவாலயங்களில் பயன்படுத்தப்பெறும் பல்வகையான முத்திரைகளில் சில, தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. முத்திரைகளின் சித்திரத்தைக் வைத்துக்கொண்டு, அவற்றில் பயிற்சியற்றோர் தேர்ச்சி பெறலாம் என்ற நோக்கில் அவை இங்கு சேர்க்கப்படவில்லை ! முத்திரைகளை பூஜா விதிகளோடு சேர்த்து, குரு மூலமாகத்தான் கற்றறிய வேண்டும்; அச்சிலேறி வருவதைப் பார்த்துக் கற்றுக் கொண்டு முத்திரைகளை ப்ரயோகிக்க இயலாது; ப்ரயோகித்தாலும் அவை பலன் தராதென்பதோடுகூட, அவ்வழி பெரும் தவறுங்கூட. இந்த புத்தகத்தில் காணப்படும் முத்திரைகளின் படங்களும் விளக்கமும், ஆலய வழிபாட்டிற்குச் செல்வோர், சிவாச்சாரியார் செய்யும் கிரியைகளின் பொருளை, முக்கியத்துவத்தை, உணர்ந்து கொள்ள உதவுவதற்காகவே அச்சேறி வருகின்றன.


முத்திரைகளின் விளக்கம்

1. குரு வந்தன முத்திரை : ஸுமுகம் : விரித்து, பக்க வாட்டில் சேர்ந்த இரு கைகளையும் உள்ளங்கைகள் நம் முகத்தைப் பார்க்குமாறு உயர்த்திப் பிடித்தல்.
2. குரு வந்தன முத்திரை : ஸுவ்ருத்தம் : ஸுமுக (1) முத்திரையில் விரல்களை மடக்குதல். கட்டைவிரல்கள் மேல் நோக்கி இருக்க வேண்டும்.
3. குரு வந்தன முத்திரை : சதுரச்ரம் : மேல் நோக்கியும் கீழ்நோக்கியும் கைகளை விரித்து (இடது கை கீழே) மணிக்கட்டு அருகே சேர்த்தல்.
4. குரு வந்தன முத்திரை : முத்கரம் : கட்டைவிரல்கள் தன்னை நோக்க, இடது முட்டி மீது வலது முட்டியை வைத்தல்.
5. குரு வந்தன முத்திரை : யோனி : இரு மோதி விரல்களையும், நடுவிரல்களின் பின்பக்கமாக வளைத்துக் கொண்டுவந்து, ஆட்காட்டி விரல்களால் பிடித்துக் கொள்ளவும்; இடது சுண்டுவிரலை வலது சுண்டுவிரலால் பிடித்துக் கொள்ளவும்; கட்டைவிரல் நுனிகளால் நடுவிரல்களின் நடுப்பகுதியைத் தொடவும்.
6. குரு வந்தன முத்திரை : ம்ருகீ : இரு கைகளின் கட்டை விரல், நடு விரல். மோதிர விரல்களை மடித்து நுனிகளைச் சேர்த்து, மற்ற விரல்களை நீட்டி, தலைக்கு மேல் பிடித்தல்.
7. அர்க்ய ஸ்த்தாபன முத்திரை : மத்ஸ்யம் : வலது உள்ளங்கை கீழ் நோக்க, இடது உள்ளங்கை அதனைத் தாங்க, கட்டை விரல்களை மட்டும் மீனின் செதில்களைப் போல் அசைத்துக் காட்டுதல்.
8. அர்க்ய ஸ்த்தாபன முத்திரை : அஸ்த்ரம் : வலது நடு விரல் மற்றும் ஆள்காட்டி விரல்களால் இடது உள்ளங்கையில் மும்முறை தட்டுதல்.
9. அர்க்ய ஸ்த்தாபன முத்திரை : அவகுண்டனம் : கைமுட்டிகளைக் கீழே காட்டி, வலது ஆட்காட்டி விரலால் ப்ரதக்ஷிணமாகவும், இடது ஆட்காட்டி விரலால் அப்ரதக்ஷிணமாகவும் இலக்கைச் சுற்றிக் காண்பித்தல்.
10. அர்க்ய ஸ்த்தாபன முத்திரை : தேனு - அம்ருதீகரணம் : ஒரு கையின் சுட்டு விரல் மற்றதின் மோதிர விரலைத் தொடவும், ஒன்றின் நடுவிரல் மற்றதின் ஆள்காட்டி விரலைத் தொடவும் செய்வது. (பால் இறங்கி நிற்கும் பசுவின்மடி போல் காணப்படும்.)
11. அர்க்ய ஸ்த்தாபன முத்திரை : காலினீ : இடது கை மேல் நோக்க, வலது கையைக் கவிழ்த்து, விரல்களை வளைத்துப் பிடித்தல். இடது கட்டை விரலும் வலது சுண்டுவிரலும் சேர்ந்து காணும் இடைவெறி மூலம் விசேஷார்க்யத்தப் பார்க்க உதவும் முத்திரை.
12. ஆவாஹனாதி முத்திரை : ஆவாஹனீ : ஸுமுக (1) முத்திரையில் கட்டை விரல்களால் மோதிர விரல்களின் அடிப்பாகத்தை தொட்டு அசைத்தல்.
13. ஆவாஹனாதி முத்திரை : ஸம்ஸ்தாபனீ (ஸ்தபனீ) : ஆவாஹனீ (12) போலவே கீழ் நோக்கிச் செய்தல்.
14. ஆவாஹனாதி முத்திரை : ஸந்திதாபனீ : கைமுட்டிகளை விரல்களின் நடுப்பகுதியில் சேர்த்து, கட்டை விரல்களை மேல் நோக்கிப் பிடித்தல்.
15. ஆவாஹனாதி முத்திரை : ஸந்நிரோதினீ : கட்டைவிரல்கள் உள்ளே மறைய, மற்ற நான்கு விரல்களின் நகங்கள் ஒன்றுக்கொன்று உரச, முட்டிகளைச் சேர்த்துப் பிடித்தல்.
16. ஆவாஹனாதி முத்திரை : ஸம்முகீகரணீ : விரல்கள் மடங்கிய நிலையில், கைமுட்டிகளை பக்க வாட்டில் சேர்த்து, நிமிர்த்திப் பிடித்தல்.
17. ஆவாஹனாதி முத்திரை : வந்தனீ : கைகூப்பி, விரல்கள் வளையாது, மார்புக்கு நேரே வந்தனம் செய்தல்.
18. ஆவாஹனாதி முத்திரை : தத்வம் : மற்ற விரல்கள் நிமிர்ந்திருக்க, இடது கை மோதிர விரல் நுனியைக் கட்டைவிரல் நுனியால் தொடுதல்.
19. ஆவாஹனாதி முத்திரை : சின் முத்திரை (அ) ஜ்ஞாந முத்திரை : வலது உள்ளங்கை வெளியே நோக்க, மூன்று விரல்கள் நிமிர்ந்திருக்க, ஆள்காட்டி விரல் நுனியைக் கட்டைவிரல் நுனியால் தொடுதல்.
20. ஆவாஹனாதி முத்திரை : ஸம்ஹாரம் (நிர்யாணம்) : இடக்கை கீழ் நோக்க, அதன் மேலே வலக்கையினை மேலே நோக்குமாறு வைத்து விரல்களைப் பிடித்துக்கொண்டு அசைத்துக் காட்டுதல்.
21. நியாஸ முத்திரை : முகம் : நான்கு வலக்கை விரல்களால் உதடுகளைத் தொடுதல்.
22. நியாஸ முத்திரை : கரசம்புடம் : ஸம்புடம் போல், கைகளை எதிர்முகமாகக் குவித்துப் பிடித்தல்.
23. நியாஸ முத்திரை : அஞ்ஜலி (நமஸ்காரம்) : இரண்டு கைகளையும் சேர்த்து, விரல்களை இணைத்து, பெருவிரல்கள் ஒன்றின் மேல் ஒன்றாகப் பின்னியுற வைப்பது.
24. நியாஸ முத்திரை : ஹ்ருதயம் : வலக்கையில் நடுவிலுள்ள மூன்று விரல்களால் இதயப் பகுதியைத் தொடுதல்.
25. நியாஸ முத்திரை : சிரஸ்: வலக்கையில் நடு மற்றும் மோதிர விரல் நுனிகளால் தலை உச்சியைத் தொடுதல்.
26. நியாஸ முத்திரை : சிகை : வலக்கை கட்டை விரல் நுனியால் சிகை (குடுமி) இருக்க வேண்டிய இடத்தைத் தொடுதல்.
27. நியாஸ முத்திரை : கவசம் : கைகளை மாற்றி, அனைத்து விரல்களாலும் தோள்களைத் தொடுதல்.
28. நியாஸ முத்திரை : நேத்ரம் : வலக்கையின் நடுவிலுள்ள மூன்று விரல்களால், இரு கண்கள், அவற்றின் நடுப்பகுதி ஆகியவற்றைத் தொடுதல்.
29. நியாஸ முத்திரை : அஸ்த்ரம் : வலது நடு விரல் மற்றும் ஆள்காட்டி விரல்களால் இடது உள்ளங்கையில் மும்முறை தட்டுதல்.
30. நியாஸ முத்திரை : ந்யாஸம் : வலது கை கட்டை விரலால் மடங்கிய மூன்று விரல்களைச் சேர்த்தபின், ஆட்காட்டி விரலால் அங்கங்களைத் தொடுவது.
31. நிவேதன முத்திரை : க்ராஸம் : மேல் நோக்கும் இடது கையால், கிண்ணத்தில் அன்னம் இருப்பது போல் பாவனையாகக் காட்டுவது.
32. நிவேதன முத்திரை : ப்ராணன் : வலது கை நடுவிரலையிம் ஆள்காட்டி விரலையும் சேர்த்துக் கட்டை விரலுடன் பிடித்து, இடக்கையின் க்ராஸ முத்திரை மீது நிவேதனம் செய்வது போல ஆட்டிக் காண்பித்தல்.
33. நிவேதன முத்திரை : அபானன் : வலது கை மோதிர விரலையும் நடுவிரலையும் சேர்த்துக் கட்டை விரலுடன் பிடித்து, இடக்கையின் க்ராஸ முத்திரை மீது நிவேதன் செய்வது போல ஆட்டிக் காண்பித்தல்.
34. நிவேதன முத்திரை : வ்யானன் : வலது கை சுண்டு விரலையும் மோதிர விரலையும் சேர்த்துக் கட்டை விரலுடன் பிடித்து, இடக்கையின் க்ராஸ முத்திரை மீது நிவேதனம் செய்வது போல ஆட்டிக் காண்பித்தல்.
35. நிவேதன முத்திரை : உதானன் : வலது கை மோதிர விரலையும் ஆள்காட்டி விரலையும் சேர்த்துக் கட்டை விரலுடன் பிடித்து, இடக்கையின் க்ராஸ முத்திரை மீது நிவேதனம் செய்வது போல ஆட்டிக் காண்பித்தல்.
36. நிவேதன முத்திரை : ஸமானன்; வலது கையின் அனைத்து விரல்களையும் சேர்த்துப் பிடித்து, இடக்கையின் க்ராஸ முத்திரை மீது நிவேதனம் செய்வது போல ஆட்டிக் காண்பித்தல்.
37. கணேச வந்தன முத்திரை : தந்தம் : வலக்கையின் நடுவிரலை மட்டும் மேலே நீட்டி, மற்றவற்றை மடக்கிப்பிடித்தல்.
38. கணேச வந்தன முத்திரை : பாசம் : இரு கை முட்டிகளையும் ஆள்காட்டி விரல்களின் நுனிகள் தொடுமாறு சேர்த்து, கட்டை விரல் நுனிகளும் அவற்றைச் சந்திக்கச் செய்தல்.
39. கணேச வந்தன முத்திரை : அங்குசம் : வலக்கை நடு விரல் நேராக நீட்டப்படும்; ஆள்காட்டி விரல் அதன் நடுப்பகுதி வரை வந்து முன் நோக்கி வளையும்.
40.கணேச வந்தன முத்திரை : விக்னம் : இறுகப்பிடித்த வலக்கை முட்டி கீழ் நோக்க, நடு விரல் மட்டும் நீட்டப்படுவது.
41. கணேச வந்தன முத்திரை : பரசு: உள்ளங்கைகளை ஒன்றை ஒன்று நோக்க, குறுக்கு வாட்டில் சேர்த்து, விரல்களை நீட்டுதல்.
42. கணேச வந்தன முத்திரை : லட்டுகம் : கையிலடங்கிய லட்டு அல்லது கொழுக்கட்டையைக் காண்பிப்பது போன்ற பாவனை.
43. கணேச வந்தன முத்திரை : பீஜாபூரம் : மாதுளம்பழம் போலக் கையைக் குவித்துப் பிடித்தல்.
44. சிவ வந்தன முத்திரை : லிங்கம் : உயர்த்திய வலது கட்டை விரலை முதலில் இடது கட்டை விரலால் பற்றிக் கொண்டு, பிறகு மற்ற இடக்கை விரல்களாலும் சுற்றிப் பிடித்து, இறுதியாக வலது கைவிரல்களால் இடக்கையை இறுகப் பிடித்து, இதயத்தின் அருகே பரிசுத்தமான மனத்துடன் வைத்துக் கொள்வது.
45. சிவ வந்தன முத்திரை : யோனி : மோதிர விரல்களுடன் சேர்த்து நீட்டிய நடு விரல்களின் மேல், கட்டை விரல்களை வைத்தல்.
46. சிவ வந்தன முத்திரை : திரிசூலம் : மடக்கிய வலக்கை சுண்டு விரலைக் கட்டை விரலால் அழுத்திக்கொண்டு, மற்ற மூன்று விரல்களை நீட்டிக் காண்பித்தல்.
47. சிவ வந்தன முத்திரை : அக்ஷமாலா : வளைந்த வலக்கை ஆள்காட்டி விரல் நுனியைக் கட்டை விரல் நுனி தொட, மற்ற மூன்று விரல்களை நீட்டிக் காண்பித்தல்.
48. சிவ வந்தன முத்திரை : வரம் : கீழ் நோக்கி மலர்ந்து நீண்ட வலது கை.
49. சிவ வந்தன முத்திரை : அபயம் : மேல் நோக்கி மலர்ந்து நீண்ட இடது கை.
50. சிவ வந்தன முத்திரை : ம்ருகீ : இரு கைகளின் கட்டை விரல், நடு விரல், மோதிர விரல்களை மடித்து நுனிகளைச் சேர்த்து , மற்ற விரல்களை நீட்டி, தலைக்கு மேல் பிடித்தல்.
51. சிவ வந்தன முத்திரை : கட்வாங்கம் : கையின் ஐந்த விரல்களையும் மேல் நோக்கிச் சேர்த்து, சற்று வளைத்துப் பிடித்தல்.
52. சிவ வந்தன முத்திரை : கபாலம் : இடது கையில் மண்டை ஓடு இருப்பது போல் பாவனை செய்து, அந்தக் கையை இடது பக்கமாக பிøக்ஷ கேட்பது போல் நீட்டுதல்.
53. சிவ வந்தன முத்திரை : டமருகம் : சற்றே விரிந்த வலக்கை முட்டியை, நடு விரலை மட்டும் சற்றுத் தூக்கிப் பிடித்து, காதிற்கு அருகே உடுக்கு அடிப்பது போல பாவனை செய்தல்.
54. பொதுவான முத்திரை : சாபம் (வில்) : உயர்த்திய வலக்கை நடுவிரல் நுனியை, ஆட்காட்டி விரல் நுனியைத் தொடுமாறு செய்தல்.
55. பொதுவான முத்திரை : சங்கம் : இடது கைக் கட்டை விரலை வலது முட்டியால் பற்றிக்கொண்டு, வலக்கை கட்டை விரலைச் சங்கு ஊதுவதுபோல் பாவனை செய்தல்.
56. பொதுவான முத்திரை : கட்கம் : வலது கட்டைவிரலால் சுண்டு விரலையும் மோதிர விரலையும் சேர்த்துப் பிடித்துக்கொண்டு, மற்ற இரு (ஆள்காட்டி, நடு விரல்களையும் ஒன்றோடு ஒன்று சேராமல் நீட்டுதல், (ஆள்காட்டி, நடு) விரல்களைச் சேர்த்து வைத்து நீட்டுவதே கட்க முத்திரை என்றும் சேர்க்காமல் நீட்டுதல் கோவிடாண முத்திரை என்றும் கொள்வதுண்டு)
57. பொதுவான முத்திரை : சர்மம் (கேடயம்) : இடது கையைக் குறுக்காக நீட்டி விரல்களை மடக்குதல்.
58. பொதுவான முத்திரை : முஸலம் : இடது முட்டி மீது வலது முட்டியை வைத்தல்.
59. பொதுவான முத்திரை :  வீணா : விணை வாசிப்பது போல் கைகளால் பாவனை செய்து தலையையும் அசைப்பது.
60. பொதுவான முத்திரை : புஸ்தகம் : கை முஷ்டியைத் தன்னை நோக்கிப் பிடிப்பது.
61. பொதுவான முத்திரை : கும்பம் : வலது இடது கட்டை விரல்கள் பக்க வாட்டில் உரசுமாறு இரு கை முட்டிகளையும் சேர்த்து நீட்டுதல்.
62. பொதுவான முத்திரை : ப்ரார்த்தனா : இரு கை விரல்களையும் விரித்துப் பக்க வாட்டில் தன்னை நோக்கிச் சேர்த்து இதயத்தில் வைத்துக் கொள்ளுதல்
63. பொதுவான முத்திரை : பசுமுத்திரை : சுண்டு விரல்களின் அடிப் பகுதியை கட்டை விரல் நுனிகளால் தொட்டுக்கொண்டு, இருகைகளையும் ஒன்று சேர்த்துக் குவித்து வணங்குவது. இது முத்தேவியருக்கும் மிகவும் உகந்தது.
64. நிரீக்ஷண முத்திரை : கட்டை விரல் மோதிர விரலை வளைத்துப் பிடிக்க மற்ற விரல்களை நீட்டுவது.
65. அப்யுக்ஷண முத்திரை : விரல்களை சேர்த்து நீட்டி, கட்டை விரலை அவற்றுடன் இணைத்து, கவிழ்த்துப் பிடிப்பது. இது சோத்திக முத்திரை, மற்றும் கவிழ்ந்த பதாகை எனவும் வழங்கப்பெறும்.
66. கோவிடான முத்திரை : ஆள்காட்டி விரலையும், நடு விரலையும் இணையாமல் நீட்டி, சுண்டு விரல் மோதிர விரல்களை மடக்கி இவற்றை கட்டை விரல்லால் அழுத்திப் பிடிப்பது.
67. சோடிகா முத்திரை; விரல்களை மடக்கி, ஆள்காட்டி விரலால் கட்டை விரல் மத்தியில் விரல் துடிக்கத் தெறிப்பது.
68. சாண முத்திரை : நடுவிரல்கள் மூன்றையும் இணைத்து, மற்ற விரல்களை விலக்கி நீட்டுவது.
69 மஹா முத்திரை : கைவிரல்கள் நீண்டிருப்பது.
70. ப்ரஸன்ன முத்திரை : இரண்டு கைகளையும் கூப்பி, இரண்டு கட்டை விரல்களையும் இணைத்து, அவற்றின் நுணிகள் மோதிர விரலின் அடியில் பொருந்த, உள்ளே மடக்குவது. இதை ஆவாஹன முத்திரை எனவும் கூறுவர்.
71. அதிஷ்டான முத்திரை : இரண்டு கைக் கட்டை விரல்களாலும் உள்ளங்கையைத் தொடுவது.
72. உஷ்ணீக முத்திரை : கட்டை விரல் நுணியை ஆள்காட்டி விரல் நுணியால் தொடுவது.
73. யோக முத்திரை : நடுவிரல் நுணியை பெருவிரல் நுணியால் தொடுவது. இதை மோக முத்திரை என்றும் கூறுவர்.
74. ஆக்ர முத்திரை : சுண்டுவிரல் நுணியை பெருவிரல் நுணியால் தொடுவது.
75. கடா முத்திரை : இரண்டு கைகளையும் இணைந்து, நடு விரல்கள் மூன்றினாலும் உள்ளங்கைகளைத் தொடுவது.
76. உஷ முத்திரை : ஒரு கை மோதிர விரலால் மற்றொரு கையில் உள்ளங்கையைத் தொடுவது.

சித்தர்கள் கூறும் எளிய மருத்துவ முறைகள்!


பண்டைச் சித்தர்கள் தங்களது ஆய்வின் மூலமாக நோயினைத் தீர்க்க எளிய முறையை உருவாக்கித் தந்துள்ளார்கள். இந்த மருத்துவ முறை பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது. அதில் வீட்டில் தினந்தோறும் பயன்படுத்தும் உணவுப் பொருள்கள் மூலம் எளிதாக செய்யும் சில மருத்துவ முறைகளையும் குறிபிட்டுள்ளனர் அவை ..

ஐந்தாறு துளசி இலைகளோடு ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை நன்கு வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும். தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவினால் சளி குணமாகும். நெல்லிக்காய் இடித்துச் சாறு பிழிந்து, தேன் சேர்த்துச் சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். சட்டியில் படிகாரம் போட்டுக் காய்ச்சி ஆறவைத்து, அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும். ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடித்தால் அஜீரணம் சரியாகும். மஞ்சளை தணலில் இட்டு, சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண் ஆறும். பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும். வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடித்தால் வயிற்று வலி நீங்கும். 

செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும். வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும். கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும். ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும். எலுமிச்சம்பழச்சாறு, தேனில் கலந்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்.
ஆஞ்சநேயருக்கு வடை மாலை, வெண்ணெய் சார்த்துவது ஏன்?

நமது உடல் தசையால் ஆனது. தசை வளர்ச்சிக்கு உளுந்து முக்கிய காரணமாகிறது. ஒல்லியாக இருப்பவர்கள் இட்லி, தோசை, உளுந்துவடை சாப்பிட்டால் சதைப்பிடிப்பு ஏற்படும். ஆனால், சதையாலான இந்த உடம்பு எதற்காவது பயன்படுமா? எனவே, பயனற்ற இந்த உடலை உனக்கே அர்ப்பணிக்கிறேன் ஆஞ்சநேயா என்ற தத்துவார்த்தத்தின் அடிப்படையிலேயே உளுந்துவடை மாலை அணிவிக்கிறோம். அனுமானுடைய தாய் அஞ்சனாதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உளுந்து வடைசெய்து கொடுத்ததாக ஐதீகம். உளுந்து எலும்புகளுக்கு நல்ல போஷாக்கு.

வெண்ணெய் சாத்துதல்: ராம ராவண யுத்தம் நடக்கிறது அப்போது ராமரையும் லக்குமணரையும் தன் தோளில் சுமந்து கொண்டு சென்றார் அனுமான் அப்போது ராவணன் சராமாரியாய் அம்பு தொடுக்க சக்திமிக்க அம்பால் அவர் தாக்கப் பட்டார், அந்தக் காயத்திற்கு மருந்தாக தன் உடம்பில் வெண்ணெய் பூசிக் கொண்டாராம். வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உடையது அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்ற நம்பிக்கை, அதனால் வெண்ணெய் சார்த்தும் பழக்கம் உள்ளது,

Wednesday, February 1, 2012

மங்கள சமஸ்கரண ஹோமம் (குழந்தை பாக்கியம்)


திருமணம் ஆகி நீண்டகாலமாக குழந்தை இல்லாத தம்பதிகள் நடத்த வேண்டிய ஹோமம் மங்கள சமஸ்கரண ஹோமம் ஆகும். குழந்தை பாக்கியம் பெறவும், நம் அனைத்து செயல்களிலும் வெற்றிபெறவும், குடும்பச் சூழலிலிருந்து தப்பி பரிபூரண விடுதலை பெறவும் இந்த ஹோமத்தை நடத்தலாம்.