Monday, September 18, 2023

பிள்ளையாருக்கு ஏன் தோப்புக்கரணம் போடுகிறோம்?



பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுகிறோம்! எதற்காக போடுகிறோம் என்ற காரணங்கள் நமக்கு தெரிவதில்லை? அதில் உள்ள காரணங்கள் மறைபொருளாக வைக்கப்பட்டுள்ள ரகசியங்கள் என்னவென்று பார்ப்போம்:

இடகலை என்னும் நாடி வலதுகால் பெருவிரலில் இருந்து புறப்பட்டு மேலே ஏறுகிறது. அதேபோல் பிங்கலை என்னும் நாடி இடதுகால் பெருவிரலில் இருந்து புறப்பட்டு மேலே ஏறுகிறது.

இந்த இரு நாடிகளும் மேலேறி வரும் பொழுது மூலாதாரத்தில் ஒரு பின்னல் போட்டும், இதயத்தில் ஒரு பின்னல் போட்டும், புருவமத்தியில் ஒரு பின்னல் போட்டும் இருக்கிறது. வலது கால் பெருவிரலில் இருந்து வரும் இடகலை என்னும் நாடி புருவமத்தியில் மாறி இடது பக்கமாகவும், இடது கால் பெருவிரலில் இருந்து புறப்பட்டு வரும் பிங்கலை என்னும் நாடி புருவமத்தியில் மாறி வலது பக்கமாகவும், புருவமத்தியில் மாறி மாறி நெற்றிப் பொட்டு வழியாக மூளைப் பகுதிக்குச் செல்கிறது.

சுழுமுனை என்னும் நாடியானது மூலாதாரத்திலிருந்து ஆரம்பித்து எல்லா நாடிகளுக்கும் ஆதாரமாக இருக்கும் நடு துவாரத்தில் உட்புறமாக சஞ்சாரம் செய்து மேல் நோக்கிச் சென்று இரு புருவமத்தியிலுள்ள ஆக்கினை பகுதியைப் பற்றி நிற்கும்.

நெற்றிப் பொட்டில் நாம் இரு கைகளையும் மடக்கி விரல்களால் குட்டிக் கொள்ளும் போது அந்த இடங்களில் உள்ள பின்னல் நரம்புகளில் அந்த அதிர்வு பரவி சரீரத்தில் பின்னி வரும் நரம்புகளில் ஒரு துடிதுடிப்பை உண்டாக்குகிறது. அந்த துடிதுடிப்பு மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தியில் இந்த அசைவு பதிகிறது.

அதற்கு பிறகு இரண்டு காதுகளையும் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போடும் போது குண்டலினி சக்தியில் அசைவை ஏற்படுத்துகிறது. பல தடவை தொடர்ந்து தோப்புக் கரணம் போடும் பொழுது குண்டலினி சக்தியை தூண்டி மேலே எழ வைக்கிறது.



தோப்புக் கரணம் போடும் பொழுது குண்டலினி சக்தி மூலாதாரத்திலிருந்து எழுந்து சுழுமுனை நாடி வழியாக புருவமத்தியில் கொண்டு வந்து நிறுத்திவிடுகிறது. ஜப்பானில் ஜென் புத்த மதத்துறவிகள் இந்த தோப்புக் கரணத்தை குண்டலினி சக்தியை கிளப்புவதற்கு உபயோகப்படுத்துகிறார்கள்.

நம்முள் உறங்கிக் கிடக்கும் சக்தியை எழுப்ப தோப்புக்கரணம் போடுகிறோம். இந்த தோப்புக் கரணத்தை பிள்ளையாருக்கு மட்டும் ஏன் போட வேண்டும்? பிள்ளையார் சிலை முன் ஏன் போட வேண்டும் என்பதை பார்ப்போம்:



மனிதர்களுடைய உடலில் ஆறு ஆதாரங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆதாரத்திற்கும் ஒரு தெய்வசக்தி உண்டு. ஒவ்வொரு ஆதாரத்திலும் உள்ள தெய்வ சக்தியின் அருள் நமக்குக் கிடைத்தால் அந்த ஆதாரத்தை விழிப்படையச் செய்து அதன் சக்தியை நாம் பெற முடியும்.

ஆதாரம் தெய்வ சக்திகள்

மூலாதாரம் விநாயகர்

சுவாதிட்டானம் பிரம்மா

மணிபூரகம் விஷ்ணு

அநாகதம் ருத்திரன்

விசுக்தி மகேஸ்வரன்

ஆக்கினை சதாசிவன்

இந்த ஆறு ஆதார தெய்வ சக்திகளின் அருளால் கிடைப்பது தான் சகஸ்ரார சித்தி ஆகும். மேற்கண்ட காரணங்களால் தான் பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுகிறோம்!

தோப்புக்கரணம் போடும் முறை தோப்புக்கரணத்தை முறையாகப் போடுவது எப்படி என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

முதலில் நம்முடைய தோள்பட்டை அளவுக்குக் கால்களை பிரித்துவைத்து நிற்க வேண்டும்.

இடது கையால் வலது காது மடலையும், வலது கையால் இடது காது மடலையும் பிடிக்க வேண்டும்.

கட்டைவிரல் வெளியேயும், ஆள்காட்டி விரல் உட்பக்கம் இருக்க வேண்டும்.

வலது கை, இடது கையின் மேல் இருக்க வேண்டும்.

தலையை நேராக வைத்து, மூச்சுக் காற்றை உள்ளிழுக்க வேண்டும்.

நம்மால் எந்த அளவு சிரமம் இல்லாமல், உட்கார முடியுமோ அந்த அளவு உட்கார வேண்டும்.

பின்பு மூச்சுக் காற்றை வெளியிட்டவாறே, அப்படியே எழுந்து நிற்கவேண்டும்.

இதன் மூலம் நமது தண்டுவடத்தின் மூலாதாரத்தில் சக்தி உருவாகும்.

பித்ரு தோஷம் – பித்ரு பூஜை



காலையில் எழுந்து பித்ரு காரகனான சூரியனை நோக்கி குளித்த ஈர வஸ்திரத்துடன் நின்று இந்த மந்திரம் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். சூரிய பகவானை மனதில் நிலை நிறுத்தி கூறி வந்தால் பித்ருக்களினால் ஏற்படும் தடை நீங்கி வாழ்வில் நன்மை ஏற்படும்.

ஹரி ஓம் ஹ்ராம் ஹ்ரீம்! சஹசிவ சூரியாய! வா வா ஐயும் கிலியும் சவ்வும் வசி வசி ஸ்வாஹா

பித்ரு தோஷம் உடையவர்கள் இதனை ஞாயிற்றுக்கிழமை வரும் அமாவாசையன்று தொடங்க வேண்டும். இதை முடிந்தவரை செய்துவர பாவங்கள் அனைத்தும் தீரும். தடைகள் அகன்று சுப காரியங்கள் நடக்கும்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான சிவபெருமான் நாவாய் முகுந்தன் என்று பெயர் கொண்டு அருள்பாலிக்கும் இத்தலம் பித்ரு பூஜை செய்ய சிறந்த தலமாக கருதப்படுகிறது. இத்தலம் கேரளாவில் திருநாவாய் என்ற ஊரில் அமைந்துள்ளது.

இத்தல விருட்சத்தின் அடியில் பித்ருக்களுக்கு அமாவாசையன்று அன்னம் வைத்து வழிபடுகின்றனர். இங்கு பித்ரு பூஜை செய்தால் நல்ல பலன் அடையலாம். நம் முன்னோர்கள் இறந்த நேரம் மற்றும் திதிகளை குறித்து வைத்து அடுத்து வரும் ஒவ்வொரு ஆண்டும் பித்ரு தர்ப்பணம் செய்வது நல்லது.

பித்ருக்களுக்கு தர்ப்பணங்கள் செய்யும்போது காலை 7 மணிக்குள் செய்துவிட வேண்டும். அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தின்போது தர்ப்பணம் செய்வது மிகவும் நல்லது. தர்ப்பணங்களை முறைப்படி சரியான நேரத்தில் செய்தால் வாழ்வில் உள்ள கஷ்டங்கள் நீங்கும்.

பித்ருக்களுக்கு தர்ப்பணம் நதிகளின் கரைகளில் கொடுத்தால் அதற்கு அதிக சக்தி உண்டு. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது பல யாகங்களை செய்வதை விட மேலானதாகும். ஒரு ஆண்டிற்கு ஒருவர் 96 முறை தர்ப்பணங்கள் செய்ய வேண்டும்.

அமாவாசை மற்றும் சூரிய சந்திர கிரகணங்களில் பித்ருகளுக்கு செய்யும் தர்ப்பணங்களுக்கு மிகுந்த பலன் உண்டு. அமாவாசையன்று அன்னதானம் செய்வது மிகவும் நல்லது.

பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நாட்களில் வெங்காயம், பூண்டு மற்றும் வாசனை திரவியங்களை தவிர்க்க வேண்டும்.

ஒருவருடம் நாம் பித்ருபூஜை செய்ய தவறிவிட்டால் பித்ருக்களுக்கு மனவருத்தம் ஏற்படும் என கூறப்படுகிறது.

ஆடி அமாவாசை அன்று பித்ருக்களுக்கு செய்யும் தர்ப்பணங்களுக்கு மிகவும் சக்தி உண்டு. இந்த நாளில் பித்ருக்களை சாந்தப்படுத்தினால் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழலாம். இந்த நாளில் தர்ப்பணம் கொடுக்க முன்னோர்களின் ஆசி முழுவதும் நமக்கு கிடைக்கும்.

திருவாதிரை, புனர்பூச நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று தர்ப்பணம் செய்தால் 12 வருடங்கள் பித்ருக்களை திருப்திப்படுத்த முடியும்.

பணம் காக்காவிட்டாலும் புண்ணியம் காக்கும்

பொதுவாகவே தான தர்மங்கள் செய்வது மிகவும் சிறந்தது. நம்மை காக்கும் கவசம் போன்றது. அதிலும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை போன்ற பித்ருக்களுக்குரிய தினங்கள், சந்திர-சூரிய கிரகணம் ஏற்படும் புண்ணிய காலங்கள், தீபாவளி, பொங்கல், நவராத்திரி, விஜயதசமி, கார்த்திகை போன்ற பண்டிகை காலங்களில்; சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்ற முக்கிய விரத நாட்களில் தான தருமங்கள் செய்வது பன்மடங்கு பலன் தரக்கூடியது. ஒருவரது விதியையே மாற்றக்கூடியது. எப்படி என்கிறீர்களா? கீழ்கண்ட கதையை படியுங்கள்:

பிச்சைக்காரனை விரட்டிய கருமிக்கு கிடைத்த நற்கதி அந்த ஊரில் மிகப் பெரிய கருமி ஒருவன் இருந்தானாம். தர்மம் என்ற சொல்லையே அறியாதவன் அவன். பிச்சைக்காரர்களுக்கு மறந்தும் கூட தர்மம் செய்யாதவன். அவன் வீட்டிற்கு தெரியாத்தனமாக எவராவது வந்து பிச்சைக் கேட்டால், நாயைவிட்டு ஏவாத குறையாக விரட்டிவிட்டுத் தான் மறுவேலை பார்ப்பான். ஏனெனில் அவன் வீட்டு முற்றத்தில் உள்ள தோட்டத்தில் அழகான பூச்செடிகள் உண்டு. பிச்சை கேட்டு வருகிறவர்கள் போகும்போது ஏதாவது பூவை பறித்துக்கொண்டு சென்றுவிட்டால்? அந்த அச்சத்தில் யாசகம் கேட்போர் வாயிலில் நிற்கக் கூட அனுமதிப்பதில்லை அவன்.

அன்று ஆடி அமாவாசை. உள்ளே அமர்ந்து இவன் மதிய உணவை ஒரு பிடி பிடித்துக்கொண்டிருந்தான்.

வாசலில் சத்தம். “ஐயா சாமி ஏதாவது தர்மம் போடுங்க… சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு சாமி….” உட்கார்ந்தவாரே வாயிலை நோக்கி எட்டிப் பார்த்தான். ஒரு வயதான பரதேசி கையில் திருவோட்டுடன் நின்றுகொண்டிருந்தார்.

இவன் தான் பிச்சைக்காரர்களை ஏறெடுத்தும் கூட பார்க்க விரும்பாதவனாயிற்றே… எதுவுமே அறியாதவன் போல அவன் சாப்பிடும் சாப்பாட்டில் குறியாக இருந்தான்.

பிச்சைக்காரனோ இவனை பற்றி கேள்விப்பட்டிருப்பான் போல. “இவனிடம் இன்று யாசகம் பெறாமல் போவதில்லை” என்கிற உறுதியுடன் நின்றுகொண்டிருந்தான். இவனோ “இல்லை போய்வா” என்று சொல்லகூட விரும்பாமல் உணவில் லயித்திருந்தான்.

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த பிச்சைக்காரன் இவன் வீட்டு முற்றத்தில் வந்து நிற்க, அதை பார்த்த இவனுக்கு கோபம் தலைக்கேறியது. சாப்பிடுவதை நிறுத்திவிட்டு எழுந்து ஓடிவந்தான்.

“யோவ்… அறிவில்லை உனக்கு. நீ பாட்டுக்கு உள்ளே வர்றியே… போ முதல்ல இங்கேயிருந்து…தர்மமும் இல்லை கிர்மமும் இல்லை”

“ஐயா சாப்பிட்டு நாலு நாள் ஆச்சி… ஏதாவது பழையது இருந்தா கூட கொடுங்க போதும்”

“அதெல்லாம் ஒன்னும் இல்லை … முதல்ல இடத்தை காலி பண்ணு”

அந்த பரதேசியோ இவனிடம் ஏதாவது பெறாமல் அந்த இடத்தை விட்டு நகர்வதில்லை என்று உறுதி பூண்டுவிட்டான்.

அவன் விடாக்கண்டன் என்றால் இவன் கொடாக்கண்டன் அல்லவா…?

பாதி சாப்பாட்டில் இருந்து வேறு எழுந்து வந்திருந்தபடியால் இவன் கோபம் தலைக்கேறியது… தனது எச்சில் கையை பிச்சைக்காரனை நோக்கி ஓங்கி அவனை அடிக்கப்போனான்.

பிச்சைக்காரன் இதை எதிர்பாராது மிரண்டுபோய்விட்டான். அவன் சற்று பின்வாங்க… இந்த அரிபரியில் இவனது எச்சில் கையில் இருந்த ஒரு சோற்றுப் பருக்கை பறந்து போய் பிச்சைக்காரனின் திருவோட்டில் விழுந்தது.

பிச்சைக்காரன் முனகியபடியே செல்ல… இவன் மீண்டும் வீட்டிற்கு வந்து உணவை தொடர்ந்து சாப்பிடலானான்.

ஆண்டுகள் உருண்டன. ஒரு நாள் இவன் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்து இறந்துவிடுகிறான்.

எமதூதர்கள் இவனை சங்கலியால் பிணைத்து இழுத்து சென்று எமதர்மன் முன்னர் நிறுத்துகின்றனர்.

இவனது கணக்குகளை ஆராய்ந்த சித்திரகுப்தன் எமதர்மனிடம், “பிரபோ… வாழ்வில் மறந்தும் கூட புண்ணியச் செயலை செய்யாதவன் இவன். நரகத்தில் உள்ள அத்தனை தண்டனைகளும் இவனுக்கு பொருந்தும்” என்று கூற..

“என்ன சொல்கிறாய்… சித்திரகுப்தா…. மறந்தும் கூட புண்ணியச் செயலை செய்ததில்லையா?”

“ஆம் பிரபோ!” என்கிறான் சித்திர குப்தன்.

“இல்லை சித்திரகுப்தா மனிதர்களாக பிறந்தவர் எவரும் 100% பாபம் அல்லது 100% புண்ணியம் என்று செய்திருக்க முடியாது. நன்றாக மீண்டும் இவன் கணக்கை பார்”

மறுபடியும் இவன் ஜனன மரண வாழ்வியல் கணக்கை பார்த்த சித்திரகுப்தன் “இல்லை பிரபோ…. இவன் புண்ணியச் செயலையே செய்ததில்லை” என்று அறுதியிட்டு கூறிவிடுகிறான். இருப்பினும் எமனுக்கு திருப்தியில்லை..

“இவன் முகத்தை பார்த்தால் தன்னை மறந்து இவன் ஏதோ புண்ணியச் செயலை செய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது… எதற்கும் அஷ்ட திக்பாலகர்களில் மற்றவர்களை கேட்டுவிடுகிறேன்” என்றவன் அஷ்டதிக்பாலகர்களில் மற்றவர்களை அங்கு வருமாறு பணிக்க, அடுத்த நொடி இந்திரன், அக்னி, நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் முதலான அஷ்டதிக்பாலகர்கள் அங்கு தோன்றுகின்றனர்.

(நம்மை 24 மணிநேரமும் கண்காணிப்பவர்கள் இந்த அஷ்டதிக் பாலகர்கள். இவர்களிடமிருந்து நாம் செய்யும் எந்த பாவ/புண்ணிய காரியங்களும் தப்பாது! அஷ்டதிக்பாலகர்களில் எமனும் ஒருவன்!)

“தர்மராஜா எங்களை அழைத்ததன் காரணம் என்னவோ?” என்று அவர்கள் வினவ, இந்த மானிடனின் வழக்கை கூறுகிறான் எமதர்மன்.

“இவன் இவனையரியாமல் ஏதேனும் புண்ணியம் செய்திருக்கவேண்டும் என்று என் உள்மனம் கூறுகிறது. சித்திரகுப்தனால் அதை கணிக்க முடியவில்லை. நீங்கள் தானே மக்களின் பாப புண்ணிய செயல்களை எப்போதும் கண்காணித்து வருபவர்கள். இவனை அறியாமல் இவன் ஏதாவது புண்ணியச் செயலை செய்திருக்கிறானா?”

அனைவரும் உதட்டை பிதுக்குகின்றனர். ஆனால் வாயுதேவன் மட்டும், “நீதிதேவா – இவன் இவனை அறியாமல் ஒரு புண்ணியச் செயலை செய்திருக்கிறான். மகத்துவம் மிக்க ஆடி அமாவாசை தினத்தன்று தன்னிடம் யாசகம் கேட்டு வந்த பிச்சைக்காரனை இவன் அடித்து விரட்ட எத்தனித்தபோது இவனது கைகளில் ஒட்டியிருந்த சோற்று பருக்கை பறந்து போய் பிச்சைக்காரனின் திருவோட்டில் விழுந்தது. அந்த பருக்கையை சுமந்து சென்றது நான் தான்!” என்றான்.

அதை கேட்ட எமன், “நான் கணித்தது சரியாகிவிட்டது. இவன் செயல் தீய நோக்கோடு அமைந்திருந்தாலும்

அவனையுமறியாமல் பித்ருக்களுக்குரிய ஆடி அமாவாசையன்று இவன் ஒரு சோற்று பருக்கை தானம் செய்த படியால் இவனது தவறுகள் மன்னிக்கப்படுகின்றன. மீண்டும் பூலோகத்தில் நல்ல குலத்தில் பிறந்து உத்தமமான செயல்களை செய்து சுவர்க்கத்தை அடைவானாக. அதே சமயம் யாசகம் கேட்டவரை அடிக்க பாய்ந்த காரணத்தால் அதற்குரிய தண்டனையையும் பூலோகத்தில் அனுபவிக்கவேண்டும்” என்று அருளாசி வழங்கி அவனை அனுப்பிவிடுகிறான்.

அடுத்த பிறவியில் நல்ல குலத்தில் பிறக்கும் அவன், சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ்ந்து வருகிறான். தான தருமங்களும் செய்து வருகிறான். இருப்பினும் முன்ஜென்மத்தில் யாசகம் கேட்டோரை அடிக்க பாய்ந்ததால் ஏற்பட்ட பாவத்தின் காரணமாக முதுமைக் காலத்தில் பக்கவாதம் ஏற்பட்டு ஒரு கை செயலிழந்துவிடுகிறது. இருப்பினும் தனது முன்வினையால் இது நமக்கு ஏற்பட்டுள்ளது போலும் என்று தன்னை தேற்றிக்கொண்டு இறுதி வரையில் தர்மம் தவறாது வாழ்ந்து மறைந்தான்.

இதை படித்தவுடன் இதிலிருக்கும் நீதியை தான் எடுத்துக்கொள்ளவேண்டுமே தவிர, ஆடி அமாவாசையன்று ஒரு சோற்று பருக்கை தானம் செய்தால் கூட சொர்க்கம் தான் என்று தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

தெரியாமல் செய்த ஒரு நல்ல செயலுக்கே இத்தனை மகிமை என்றால், விஷேட நாள் கிழமை ஆகியவற்றின் மகத்துவத்தை அறிந்து மனமுவந்து செய்யும் தான தர்மங்களின் பலன் எத்தகையாதாக இருக்கும் என்று கணக்கிட்டுக்கொள்ளுங்கள். (இந்த கணக்கு பார்ப்பதெல்லாம் ஆரம்பத்தில் தான். நற்செயல்கள் மற்றும் புண்ணிய காரியங்களின் மேல் உங்களுக்கு ஈடுபாடு வந்துவிட்டால் ஒரு கட்டத்தில் அதை ஒரு கடமையாகவே செய்ய ஆரம்பித்துவிடுவீர்கள்!!)

பாவச் செயல்களை செய்பவர்கள் தங்களையுமறியாமல் நல்ல செயல்களை செய்யும்போது இறைவன் அவர்களின் தவறுகளை மன்னித்து, அவர்கள் செய்த நல்ல செயல்களை மட்டும் கருத்தில் கொண்டு அவர்களை தடுத்தாட்கொள்கிறான். இறைவனது இந்த குணம் தான் இன்று பலரது வாழ்க்கையை தடம் மாற்றியிருக்கிறது. (அடியேன் உள்பட).

எனவே உங்கள் பிள்ளைகளுக்கு பணத்தை மட்டும் சேர்க்காமல் புண்ணியத்தையும் சேர்த்து வாருங்கள். பணம் காக்காவிட்டாலும் புண்ணியம் காக்கும்.

ஆன்மிக ஒழுக்க நெறிமுறை பண்புகள் மட்டுமே இளைய தலைமுறையை பாதுகாக்கும்

செல்வத்தை மட்டுமே குறியாகத் தேடும் கலாசாரத்தை ஏற்று உலகமே வேகமாக மாறிவரும் நிலையில் வேத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள ஒழுக்க நெறிமுறை பண்புகள் இந்த நவீன காலத்துக்கு எப்படி பொருந்தும்? என்று என்னைக் கேட்டார் ஒரு இளம் நண்பர். தொடர்ந்து, ‘இது தற்போது இளைய தலைமுறையினர் எழுப்பும் கேள்வி’ என்றார். முக்கியமான கேள்வி. பதில் சொல்கிறேன், கவனமாகக் கேள், என்றேன். காலம் காலமாக நம் முன்னோர்கள் பின்பற்றி பயனடைந்து வந்த வேத சாஸ்திரங்களுக்கு, இந்த பாரம்பரிய கலாசார வழிகாட்டிகளுக்கு, ‘இக்கால நடைமுறைக்கு ஒவ்வாத ஒழுக்க நெறிமுறைகள்’ என்று முத்திரை குத்தி, அவைகளை ஏற்றுக்கொள்ளவோ அல்லது பின்பற்றவோ நம் இளையத் தலைமுறையினர் தயங்குகிறார்கள். அனைத்து கலாசாரங்களும் சங்கமித்து ‘உலகமயமாகி’ வரும் இந்தக் காலத்தில் வேதமாவது, பண்டைய கலாசாரமாவது! என்று அவர்கள் எள்ளிநாகையாடுவது நம் கண்கூடாகக் காணும் ஒரு சோக நிகழ்வு. உலகத்துக்கே ஆன்மிக வாழ்வியல் தத்துவத்தை பறைசாட்டிய இந்த மண்ணில், வேகத்தையும் சுயநலத்தையும் பொருளாதார உயர்வை மட்டுமே மையமாகக் கொண்டும், தனிமனித-சமுதாய தர்ம ஒழுக்கநெறிமுறைகளுக்குப் புறம்பாக இயங்கும் இந்த நவீன வாழ்வியல் மாய தத்துவத்தை, நம் இளைய தலைமுறையினர் ஏற்றுக்கொண்டது துரதிருஷ்டம். இந்த நிலைக்கு நாம் அனைவரும் ஒருவகையில் காரணம் என்று நினைக்கிறேன். உண்மையான ஆன்மிகக் கல்வியையும், வாழ்வியல் பண்புகளையும் அவைகளுக்குள்ள நெறிமுறை மேம்பாடுகளைப் பற்றியும் அவர்களுக்கு சொல்லித்தரும் வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர தவறிவிட்டோம். பெற்றோர்கள் என்ற வகையில் நாமும் தெரிந்து கொள்ளும் வாய்பை இழந்து விட்டோம். இப்போதாவது இந்தத் தவறை உணர்ந்து இந்த நிலைமையை சரி செய்ய முயல்வது நாம் அனைவரின் சமுதாயக் கடமையாகும். முதலில் சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம். வேதங்கள் சூத்திரங்களாலும், பாடல்களாலும், செய்யுள் நடைகளாலும் ஆனவை. காலங்களைக் கடந்தது. இந்த உலகைப் படைத்த பரம்பொருள் அருளியது. தனிமனித, சமுதாய வாழ்வியல் தத்துவக் களஞ்சியம் இவை. எப்போது அருளினார்? உயிரினங்கள் தோன்றியபோது! அது எப்போது? விவரிக்கமுடியாத ஒரு காலத்தில்! மனிதன் யோசிக்கத்தொடங்கும் முன்!! பல ‘யுகங்களுக்கு’ முன்னால் என்று சொல்லலாம். அக்காலத்தில் வந்த ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் போன்றவர்கள் வேதங்களுக்கு விளக்கம் அளிக்க எளிய நடையில் பாசுரங்களை (உபநிஷத்துக்கள்) எழுதினர். அவைகளில் ஒரு பகுதி குருகுல (குரு-சிஷ்ய பாரம்பரிய) வழியில் தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக இன்றும் நம்மிடையே வலம் வந்துகொண்டிருக்கிறது. பெரும்பாலானவை பாதுகாக்கப்பட முடியவில்லை. காலப்போக்கில் அழிந்துபோனது. வேதங்களின் சாராம்சம் வேதாந்தம். இது என்ன? நாம் அனைவரும் தெய்வத்தால் படைக்கப்பட்டவர்கள். தெய்வீகமானவர்கள். ‘நம் வாழ்வின் பயனே இந்த தெய்வீகத்தை உணர்வதுதான்’. அதே போல மற்ற உயிர்களில் உள்ள அதே தெய்வீகத்தையும் உணர்வது. நம்மை உணர்ந்தால், உலகையும் அதன் பின்னணி உண்மையையும் உணரலாம். நம்மைப் படைத்த பரமனை உணரலாம். பிறவிப் பயனை அடையலாம். இந்த உன்னத நிலையை உணர்வதற்கான வழிமுறைகளைத்தான் வேதாந்தம் சொல்கிறது.

ஆன்மிகப் பாதையிலிருந்து நம்மை விலகத் தூண்டும் எட்டு காரணிகள்



நம் எண்ணங்கள்தான் நம்மை இயக்குகின்றன. ஒரு நாளைக்கு பல ஆயிரக்கணக்கான எண்ணங்கள் நம் மனதில் தோன்றினாலும், அடிப்படையில் இந்த எண்ணங்கள் அனைத்தையும் இரண்டு ரகங்களுக்குள் அடக்கமுடியும்.

ஒன்று, நம்மை இயக்கும் சக்தியான பரம்பொருளைப் பற்றிய சிந்தனை (இது சில நேரங்களில், சிலருக்கு மட்டும்). இரண்டாவது, நம் வாழ்க்கையைப் பற்றியது (பெரும்பாலான மற்ற நேரங்களில்). இந்த இரண்டு சிந்தனைகளைத் தவிர வேறு எதைப் பற்றியும் நாம் யோசிப்பதில்லை.

பரம்பொருள் சிந்தனை என்பது பொதுவாக ஆன்மிக அல்லது தெய்வீகச் சிந்தனை. கடவுள் பக்தி, அல்லது பக்தி சம்பந்தப்பட்ட காரியங்கள், கோவில்கள், தானம், தியானம், போன்றவையாக இருக்கலாம். பக்தி சித்தாந்தத்தைக் கடந்து ஞானமார்கம் தேடுபவர்களுக்கு தங்கள் உண்மையான இயல்பைத் தேடும் ஆத்ம சிந்தனையாக இருக்கலாம். இந்த உயர்நிலை சிந்தனையில்லாதபோது, நம்மைச் சுற்றியுள்ள இந்த உலகோடு நம் புலன்கள் உறவாடுவதை மையமிட்டே நம் எண்ணங்கள் பிரதிபலிக்கின்றன. இதைச் சார்ந்தே நம் வாழ்க்கைப் பயணமும் அமைகிறது.

வாழ்க்கை பற்றிய சிந்தனையில் பெரும்பாலும் நாம், நம் குடும்பம், உறவுகள், நம்மைச் சுற்றியுள்ள உலகம், ஆசைகள், வேட்கைகள், நல்லவை, கெட்டவை, தேவை, தேவையில்லாதவை, பயன்படக்கூடியவை, பயனில்லாதவை போன்ற சிறிய, சம்சார வட்டத்துக்குள் சிக்கிக்கொள்கிறோம். இத்தகைய சிந்தனைகளால், சம்சார வட்டத்துக்குள் இருந்து வெளிவரமுடியாமல் நம்மைத் தடுத்து சீர்குலைக்க வைக்கும் எட்டு நாசக் காரணிகளைப் பற்றி பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அழகாக விளக்குகிறார்.

த்யாயதோ விஷயா புன்ச சங்க தேஷுபஜாயாதே சங்காத் சஞ்சாயதே காம காமாத் கிக்ரோதோ பிஜாயாதே க்ரோதாத் பவதி சம்மோஹ சம்மோஹாத் ஸ்முருதி விப்ரமஹ ஸ்முருதி பரன்ஷாத் புத்தி நாஷோ புத்தி, புத்தி நாஷாத் பிரணஷ்யதி (அத்யாயம் 2, ஸ்லோகம் 62,63)

புலன்களுக்கு சுகத்தை தரும் பொருள்களின் மேல் எண்ணங்கள் லயிக்கும்போது (த்யாயதே), மனம் அவைகளோடு ஒட்டிக்கொள்கிறது (சங்க-இணைப்பு). சதா அவைகளைப் பற்றியே நினைத்து வட்டமிட்டுகிறது. ‘அது எனக்குக் கிடைத்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்?’ என்று அந்தப் பொருளின் மேல் ஆசையைத் (காமம்) தூண்டுகிறது. இந்த ஆசை சிந்தனை தொடரும்போது, ‘அதை அடையாமல் விடப் போவதில்லை’ என்ற ஒரு வேகமும் வெறியும் உண்டாகிறது. ஆசை பேராசையாக மாறுகிறது. அது தடை படும்போதோ, அல்லது கிடைக்காமல் போகும்போதோ அது ஏமாற்றமாக மாறுகிறது. ஏமாற்றம் கோபத்தைத் (க்ரோதம்) தூண்டுகிறது.

கோபம் நம் மனதை இரண்டு வகையில் பாதிக்கிறது. முதலில் தெளிவாக யோசிக்கும் திறமையை மூடி மறைக்கிறது (சம்மோஹத்-மறைத்தல்). அது குழப்பத்தை ஏற்படுகிறது (விப்ரமஹ-குழப்பம்). இதனால் கற்றுக்கொண்ட நல்ல விஷயங்கள் (ஆன்மிக சிந்தனை உட்பட) மறந்துபோகின்றன (பரன்ஷாத்-மறப்பு). இதனால் புத்தி தடுமாறுகிறது (புத்தி நாசம்). சரியான முடிவு எடுக்கமுடியாமல் தவறான பாதையில் சிக்கிக் கொள்கிறோம். ஆன்மிக சிந்தனை தடைபடுகிறது. தவறான பாதையில் சிக்கிக் கொண்டபிறகு நாம் சந்திக்கும் பிரச்சனைகள் பெரிதாகும்போது அவைகளிலிருந்து விடுபடுவது முக்யமாகி, அவைகளுக்கும் விடைதேடுவதே நம் முதல் பணியாகிறது.

இந்த முயற்சியில் அவ்வப்போது ஆறுதல் கிடைக்க மீண்டும் எளிய வகையில் உடனடி நிவாரணம் தரும் ஆன்மிகம் தேடுகிறோம். எதிர்பார்த்த நிவாரணம் கிடைக்காத போது ஆன்மீகத்தின் மீதும் தெய்வீகத்தின் மீதும் நம்பிக்கை குறைந்து ஏமாற்றம், வெறுப்பு ஏற்படுகிறது. இதனால்தான் நம்மில் பெரும்பாலோர் ஆன்மிகத்தில் முழு ஈடுபாடு கொள்ளமுடிவதில்லை. நாம் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு என்று இருந்தால் அது ஆன்மிகம் மட்டுமே என்பதையும் நம்மால் ஏற்றுக்கொள்ளவோ உணரவோ முடிவதில்லை.

இதை எப்படி சரி செய்வது என்பதை பார்ப்போம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மூன்று வகையான உயிரோட்டங்கள் உள்ளன. இவை அவனுக்குள் சதா உள்நோக்கி பாய்ந்துகொண்டுள்ளன. அவை ஞான உயிரோட்டம், கர்ம உயிரோட்டம், மற்றும் ஸ்வபாவ உயிரோட்டம். இவைகளின் ஓட்டத்தைப் பொறுத்தே அவன் உள், வெளி உலக நடவடிக்கைகள் உள்வாங்கப்பட்டு வெளிப்படுத்தப் படுகின்றன.

ஒரு விஷயத்தை தெரிந்துகொள்ளுதல், புரிந்துகொள்ளுதல், உணர்ந்துகொள்ளுதல் போன்ற இவை அனைத்தும் ஞான உயிரோட்டத்தால் ஏற்படுவது. எந்த ஒரு காரியத்தையும் செய்யும் விதம் பற்றிய வரையறைகளை தேர்வு செய்வது கர்ம உயிரோட்டம். நாம் பிறக்கும்போதே நமக்குள் பிரத்யேகமாக உருவான உள்நிலை பரிவர்தனைகளை (பாவனைகளை) வெளிக்காட்டுவது ஸ்வபாவ உயிரோட்டம்.

இங்கே ஸ்வபாவ உயிரோட்டம் பற்றி நிறைய தெரிந்து கொள்வது அவசியம். இதை ‘ஸம்ஸ்க்காரம்’ என்று குறிப்பிட்டு சொல்கின்றன வேதங்கள். இது ஒரு வகையான எண்ணச் சுமைகள் (நினைவுச் சுவடுகள்). நல்லவை, தொல்லை தருபவை சேர்ந்த ஒரு கலவை. பிறந்ததிலிருந்து நாம் பார்த்த அனுபவங்கள், சில நிகழ்வுகள், ஆறாத வடுக்கள், சோகம் அல்லது சுகம் தரும் நினைவுகள் (சென்ற பல பிறப்புகளிலிருந்தும் கூட இருக்கலாம்) ஆகியவை நம் மனதில் பதியவைக்கின்றன. இவை ஆழ்மனதில் பத்திரமாக பாதுகாக்கப் படுகிறது. இந்த எண்ணச் சுவடுகளின் தாக்கங்கள் செயல் வெளிப்பாடுகளாக வெளிபடுகின்றன. இது ஒரு வகையான ஸ்திர நிலை. சாதாரணமாக மாற்றிக்கொள்ளவோ அழிக்கவோ முடிவதில்லை. தேவைப்படும்போது இவை மனதைவிட்டு கொப்பளித்துக்கொண்டு வெளிவருகிறது.

சிலர் சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப் படுவது, சந்தேகப் படுவது, ஆதங்கப் படுவதைப் பார்க்கிறோம். சிலர் எதற்கும் அசராமல், மிகப் பெரிய இன்னல்களையெல்லாம் கூட சர்வ சாதாரணமாக கையாள்வதையும் பார்க்கிறோம். கூச்சம், குறும்பு, கிண்டல், அமைதி, உரக்கப் பேசுவது, மென்மையாகப் பேசுவது, கூர்ந்து கவனிப்பது, மரியாதையான நடத்தை, பக்தி, சிரித்துப் பேசுவது, இப்படி ஒவ்வொருவருக்கும் என்று ஒரு தனிப்பட்ட பாவனை (ஸ்வபாவம்) இருக்கிறது. இதை சாதாரணமாக அழிக்கவோ அல்லது அதன் பிரதிபலிப்பிலிருந்து விடுபடுவது என்பது சுலபமான காரியம் அல்ல.

பெரும்பாலான நேரங்களில் ஸம்ஸ்க்காரங்களின் உந்துதல்படியேதான் புத்தி முடிவு எடுக்கிறது. அதன் தொடர்ச்சியாகவே நாம் பல காரியங்களை தெரிந்தோ தெரியாமலோச் செய்கிறோம், பின்னர் அவைகளின் (நல்ல அல்லது தீய) விளைவுகளையும், பலன்களையும் ஏற்றுக்கொண்டு அனுபவிக்கிறோம். செம்மைபடாத நம் எண்ணங்களே நமக்கு எதிராக திரும்பி, எப்படி நம்மை அழிக்கின்றன பார்த்தீர்களா? இவைகளை பிராரர்த கர்மவினைகள் என்கிறது வேதங்கள். ஆக நமக்குள்ளே சேர்த்துவைத்திருக்கும் இந்த ஸ்வபாவங்களை எப்படி சீர்ப்படுத்துவது? செம்மைப்படுத்துவது?

செம்மை படாத ஸ்வபாவம் எப்படி ஆபத்தானது என்பதை துரியோதனின் மனப் போக்கை உதாரணமாக வைத்து விளக்குகிறது ஸ்ரீமத் மஹாபாரத புராணம். இதில் ஒரு ஸ்வாரஸ்யமான தகவலை இங்கே சொல்லித்தான் ஆகவேண்டும். மஹாபாரத புராணத்தை தன் வாழ்நாளில் முதன் முதலாகக் கேள்விப்பட்ட ஒரு நாத்திக நண்பர் என்னை ஒரு கேள்வி கேட்டார். மிகப் பெரிய ஞான தத்துவங்களை ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு போதித்திருப்பது சரியா என்றுத் தெரியவில்லை. சாதுவான, சாத்வீகமான அர்ஜுனனுக்கு இது பெரிதாகப் பயன்படப் போவதில்லை. இவ்வளவு தத்துவக் குவியல்களையும் நியாய தர்மங்களையும் இந்தக் கதையின் முக்கிய வில்லனான துரியோதனனுக்கு சொல்லியிருந்தால் ஒரு வேளை அவன் மனம் மாறி, யுத்தமும் அழிவும் இல்லாமல் தவிர்த்திருக்கலாமே?

நியாயமான கேள்வி. இது பரம்பொருளான ஸ்ரீ கிருஷ்ணனுக்குத் தெரியாதா? யுத்தத்துக்கு முன்னரே துரியோதனனைச் சந்தித்து அவனுக்கு நல்ல விஷயங்களை போதிக்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர். ஆனால் துரியோதனின் ஸ்வபாவம் நல்ல விஷயங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாதது. ‘நீ சொல்லும் தர்மம், அதர்மம், நியாயம், அநியாயம், நல்லது, கேட்டது எல்லாம் எனக்கும் தெரியும் கண்ணா! நானும் குருகுலத்தில் கற்றவனே. ஆனால் தர்மத்தையும், நியாயத்தையும், நல்லவைகளையும் ஏற்றுக்கொள்ள என் மனம் மறுக்கிறதே! என் மனம் சொல்லும் அதர்ம, அநியாய, கெட்ட விஷயங்களை, அவைகளின் உந்துதல்களை என்னால் எதிர்க்க முடியவில்லையே! என் மனம் எடுக்கும் முடிவுதான் என்னுடையது’ என்று ஆணித்தரமாக அத்துணை போதனைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறான்.

சாட்சாத் பரம்பொருளே வந்து நல்லவைகளை போதித்தாலும், அவன் ஸ்வபாவம் அவனை எப்படி தடுக்கிறது பாருங்கள். இந்த பாவனைதான் அவன் அழிவுக்குக் காரணமானது. அதனால்தான் மனதையும், எண்ணங்களையும், பாவனைகளையும் கட்டுப்படுத்தும் திறமைகொண்ட அர்ஜுனனுக்கு ஞானபோதனை செய்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர். இந்த போதனைகள் அர்ஜுனனுக்கு மாத்திரம் அல்ல, நம் எல்லோருக்கும் சேர்த்துதான்.

அன்று துரியோதனன் பேசியது நிதர்சனமாக உண்மை. இது அவன் பிரச்சனை மட்டுமல்ல. இன்று இதுவே நம் பெரும்பாலோரின் மிகப் பெரிய பிரச்சனை. நம் வளர்ப்பு, படிப்பு, புத்தி, அந்தஸ்து, நாகரீகம் அனைத்தும் இருந்தாலும் சில நேரங்களில் நாம் மற்றவர்களிடம் கேவலமாக நடந்துகொள்ளும் விதம், ஸம்ஸ்காரங்கள் பிராரர்த கர்ம வினைப்படி எப்படி நம்மைக் கட்டுப்படுத்துகிறது என்பதற்கான உதாரணம். அதனால் பலவிதமான சிக்கல்களில் தொடர்ந்து சிக்கி அல்லல் பாடுகிறோம் என்பதைக் கண்கூடாக அனுபவித்து வருகிறோம்.

அப்படியென்றால் சதா இந்த ஸம்ஸ்க்கார மாயத்தில் சிக்கி உழன்றுக்கொண்டிருக்க வேண்டியதுதானா? தேவை இல்லை. இங்கேதான் ஆன்மிக நிவாரணம் உதவுகிறது.

ஒரு விஷயத்தை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஸ்வபாவம் என்பது நம் உண்மையான இயல்பு அல்ல. நம் மனம் காட்டும், எண்ணங்களால் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு நிலை. ஆனால் இதுதான் நம் உண்மையான இயல்பு என்று ஏற்றுக்கொண்டு இந்த நிலையிலிருந்து விடுபட நாம் முயல்வதே இல்லை. இது நம் உண்மையான இயல்பை நாம் உணரவே முடியாமல் தடுக்கும் மிகப் பெரிய தடை.

இதற்கு என்ன நிவாரணம்? நம் உண்மை இயல்பை உணர்வது என்பது நம் உண்மையான ஸ்வரூபமே தெய்வீகம் என்பதை உணருவது!

இது எப்படி சாத்தியம்? நம் அறியாமையால் இந்த உடல், உள்ளம், எண்ணங்கள், புத்தி கொண்ட கலவையே ‘நாம்’ என்று தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறோம் , இதுவே நம் இயல்பு என்றும் நம்புகிறோம். இந்தப் புலன் கல்வைகளால் ஏற்படும் அனைத்து சிக்கல்களையும் நம்முடையது என்று ஏற்றுக்கொண்டு மேலும் அல்லல்படுகிறோம். அதனால் தொடர்ந்து தவறு செய்து பிரச்சனைகளில் சிக்கிக்கொள்கிறோம் என்று சுட்டிக்காட்டுகின்றன வேதங்கள்.

நம் அனைவருக்கும் ஒரே ஸ்வரூபம்- தெய்வீகம். சத்சித்ஆனந்த நிலை. ஆத்ம நிலை. ப்ரம்ம நிலை. ஆனால் ஸ்வபாவத்தால் மாறுபடுகிறோம். ஸ்ரீ கிருஷ்ணர் கூறியுள்ள எட்டு (நினைப்பு, இணைப்பு, காமம், க்ரோதம், மறைப்பு, குழப்பம், மறப்பு, புத்திநாசம்) காரணிகளுக்கும் அடிமையானவர்கள் இவைகளின் வெளிப்பாடான ஸ்வபாவங்களுக்கு அடிமையாகிறார்கள்.

நல்ல வாழ்க்கையை கடைபிடிக்க புத்தன் எட்டு வழிகளை (அஷ்டாங்க மார்க்கம்) சொல்லிச் சென்றுள்ளார். மனதை கட்டுப்படுத்த எட்டு யோக (அஷ்டாங்க யோக) முறைகளை பதஞ்சலி முனிவர்சொல்லிச் சென்றுள்ளார். அதுபோல நம்மை ஆன்மீகப் பாதையில் முனைப்போடு செல்லத் தடையாக இருக்கும் இந்த எட்டு நாச காரணிகளிலிருந்து விடுபட வேண்டிய முக்கியத்தை நமக்கு அர்ஜுனன் வாயிலாகப் போதித்துள்ளார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.

செம்மைபடாத ஸ்வபாவங்களிலிருந்து விடுபட வேதங்கள் பல வழிகளைக் காட்டியுள்ளது. அந்தக் காலத்தில் குருகுலங்கள் இதற்கான முறையான பயிற்சிகளை கற்றுத் தந்துவந்தன. இன்றைக்கு இவைகளைப் பற்றி படித்து தெரிந்துகொண்டாலும், விளக்கம் சொல்லவோ, ஆழமான பயிற்சி தரவோ தகுந்த குருகுலங்களோ, குருமார்களோ இல்லை. கற்றுக்கொள்ள நமக்கு நேரமோ, முனைப்போ, வழிமுறைகளோ இல்லை.

பிறகு என்னதான் வழி? ஒன்று, நாமே போராடி முயன்று கற்றுக்கொள்வது. இரண்டாவது, நம்மைப் படைத்தவன் மட்டுமே செய்யக்கூடியது!

‘அவித்ய-காம-கர்ம’ என்பது ஒரு ஆபத்தான வாழ்வியல் வட்டம். தவறானக் கல்வி (அவித்ய அல்லது அறியாமை) தேவை இல்லாத இச்சைகளை (காம) உருவாக்கும். இச்சைகளின் எதிர்மறை விளைவே கர்ம வினைப்பலன்கள். நாம் பார்ப்பது, உணர்வது அனைத்தும் நம் உண்மை இயல்பு நிலை பற்றிய அறியாமையால் ஏற்படும் தோற்றங்கள். இதிலிருந்து ‘உண்மையை’ அறிந்து பிரித்து எடுக்க கடும் பயிற்சியும் உழைப்பும் தேவை. மனதை ஒருநிலைப் படுத்தும் தியானம், மந்த்ர ஸ்மரணை, பக்தி வழிபாடு, தர்மகாரியங்கள் செய்வது போன்றவை ஓரளவுக்கு பலன் தரும். இது மிகவும் கஷ்டமான காரியம்.

அவித்ய-காம-கர்ம வட்டத்திலிருந்து விடுதலை பெற அனைத்தும் உணர்ந்த ஒரு பிரம்மகுருவின் உதவியும், ஆசீர்வாதமும், வழிகாட்டுதலும் இல்லாமல் இது சாத்தியமில்லை. ஆனால் அத்தகைய குருவை எங்கே எப்படி அடையாளம் காண்பது?

அப்படிபட்ட காணற்கரிய ஒரு அதிசய குருவைத்தான் வேலூர் மாவட்டம் (தற்போது திருப்பத்த்தூர் மாவட்டம்) ஆம்பூர் அருகே அமைத்திருக்கும் உலகின் 13வது ஜோதிர்லிங்கத் திருத்தலமான சென்னப்பமலையில் காண்கிறோம். பிரம்மகுரு ஸ்ரீ கோடிதாத்தாஸ்வாமிகள் முக்காலம் உணர்ந்தவர். சதா அருவ ரூபத்தில் சஞ்சரிப்பவர். தேவைப்படும்போது தன் சீடன் ஸ்ரீ ராமநாத ஸ்வாமிகள் உடலில் ஐக்யமாகி, உருவம் கொண்டு தன்னை நாடி வரும் அன்பர்களின் மனதையும், எண்ணங்களையும் சுத்தப்படுத்தி, ஸ்வபாவ எதிர்மறை எண்ணங்களை நேர்மறையாக்கி, சீர் செய்து, செம்மைபடுத்தி, நம்பிக்கை தந்து, தைரியத்துடன் வாழ்க்கைப்பயணம் தொடர இந்த குரு வழிவகை செய்கிறார்.

ஆறுகால பூஜை



1. உசத்கால பூஜை முதல் பூசையான இது. சூரிய உதயத்திற்கு முன்பே நடத்தப்படுகிறது. ஆகமத்தின்படி சூரிய உதயத்திற்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன் நடத்தப்பட வேண்டும். இந்தப் பூசையின் போது சிவாச்சாரியார், பைரவர் சந்நதியில் வைக்கப்பட்டிருக்கும் சாவியை பூஜை செய்து எடுத்துக் கொள்வார். மங்கள வாத்தியத்துடன் பள்ளியறை சென்று திருப்பள்ளி எழுச்சி ஓதுவார். பின்பு பெருமான் சிலையை மட்டும் மேள வாத்தியத்துடன் கோவிலை வலம் வந்து மூலவரான லிங்கத்தின் முன்பு வைத்து பூசை நடைபெறும். உற்சவர் சிலையில் இருந்த பெருமான், லிங்க வடிவான மூலவர் சிலைக்கு செல்வதாக நம்பிக்கை. இந்தப் பூசை அபிசேக ஆராதனையோடு முடிவடைகிறது.

2. காலசந்தி பூஜை ஆகமத்தின்படி காலசந்தி சூரிய உதயத்திலிருந்து ஏழரை நாழிகைக்குள் நடைபெற வேண்டும். பூசையின் போது சூரியன், விநாயகருக்கு, துவாரத்திற்கு பூசை நடைபெறுகிறது. பின்பு மூலவர், பரிவாத தெய்வங்களுக்கு அர்ச்சனை நடைபெற்று பஞ்சக்ருத்யம் கூறி நித்ய பலியுடன் பூசை முடிவடைகிறது.

3. உச்சிக்கால பூஜை இப்பூசை நண்பகலில் நடத்தப்படுகிறது. விநாயகர் பூசை முடிந்ததும், துவாரபாலகரை வழிபட்டு மூலவரான இலிங்கத்திற்கு அலங்காரம், ஆவரணம், தூபம், தீபம், நைவேத்தியம் போன்றவை நடைபெறுகின்றன. அந்தப் பூசைப் பொருட்கள் மூலவரிடமிருந்து அகற்றப்பட்டு சண்டேசரிடம் வைத்து வழிபடப்படுகிறது.

4. சாயரட்சை பூஜை இந்தப் பூசையானது சூரியனின் மறைவுக்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும். விநாயகர் பூசை, மூலவரான இலிங்கத்திற்கு அபிசேகம், அலங்காரம் செய்து தீபம், நைவேத்தியம் படைக்கப்படுகிறது.

5. சாயரட்சை இரண்டாம் கால பூஜை விநாயகர் பூசை, மூலவருக்கு அபிசேக, ஆராதனை, தீபம், நைவேத்தியப் படையல் பூசை செய்யப்படுகிறது. பின்பு பரிவார தெய்வங்கள், நித்யாக்னி கார்யம், நித்யோத்சவ பலி ஆகிய பூசை நடைபெற்று சண்டேசுவர பூசையுடன் இரண்டாம் கால பூசை முடிவடைகிறது.

6. அர்த்தசாம பூஜை மூலவருக்கு அபிசேகம், ஆராதனை முடிந்ததும், உற்சவ மூர்த்திகள் பள்ளியறைக்கு எடுத்துச் சென்று, அங்கு நறுமண மலர்கள், ஏலக்காய், இலவங்கம், வெற்றிலைப் பாக்கு வைத்து திரையிடப்படுகிறது. இதனை பள்ளியறை பூசை என்பர். பள்ளிறைப் பூசை முடிந்ததும் சண்டேசுவரர் பூசை நடைபெறுகிறது. பின்பு பைரவர் சந்நிதியில் சாவியை வைத்து பூசை நடைபெற்று அர்த்தசாம பூசை முடிவடைகிறது.

ஆறுகால பூஜை நடக்கும் நேர அட்டவணை
>1. உஷத் காலம் – காலை 6:00 மணி
2. கால சந்தி – காலை 8:00 மணி
3. உச்சிக்காலம் – பகல் 12:00 மணி
4. சாய ரட்சை – மாலை 6:00 மணி
5. இராக்காலம் – இரவு 8:00 மணி
6. அர்த்த ஜாமம் – இரவு 10:00 மணி

ஹோரை (அ) ஓரை என்றால் என்ன?

ஹோரை (அ) ஓரை என்றால் என்ன?



இரண்டரை நாழிகை கொண்ட நேரம். ஒரு நாழிகை 24 நிமிடம். 60 நிமிடம் கொண்டது ஒரு மணி நேரம். இது அன்றைய சூரிய உதயம் முதல் கணக்கினில் எடுத்துக் கொள்ளப்பெறும். இராசிப் பொது, இலக்கினம், ஐந்து நாழிகை கொண்ட நேரம், சமயம், முகூர்த்தம், ஒரு மணி நேரம் கொண்டதும் ஆகும்.

ஓரையாவது மணி, நாளொன்றுக்கு 24 ஓரையாம். அதாவது ஓராதிபர் எழுவர். இராசிப் பொது, இலக்கினம், ஐந்து நாழிகை நேரம். இரண்டரை நாழிகை கொண்ட நேரம், இராசி, இலக்கினம், ஒரு முகூர்த்த நேரம். இலக்கினம், ஐந்து நாழிகை. ஓரை பார்த்துச் செயலினைச் செய்பவன் சிறந்த முறையினில் பலனைப் பெறுவான்.

ஓரை வகைகள் ஓரை, ஓரைக்கதிபன், சூரிய ஓரை, சந்திர ஓரை, செவ்வாய் ஓரை, புதன் ஓரை, குரு ஓரை, சுக்கிர ஓரை, சனி ஓரை ஆகிய ஓரைகளின் சிறப்பு பலன்களைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

ஓரைக்கதிபன் இலக்கினாதிபதி, ராசிக்கதிபதி. ஓரைக்கு அதிபதி – ஓரைக்கு அதிபதியான கிரகம்.

ஓரைகளின் பெயர்கள் ஏழு கிழமைகளின் பெயரில் உள்ளது. அவை சூரிய ஓரை, சந்திர ஓரை, செவ்வாய் ஓரை, புதன் ஓரை, குரு ஓரை, சுக்கிர ஓரை, சனி ஓரை ஆகியனவாகும். ராகு, கேதுவிற்கு ஓரைகள் தரப்பெறவில்லை. “சனி போல ராகுவும் செவ்வாய் போல கேதுவும்” என நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ள பழமொழியால் இக்கிரகங்களினுடைய ஓரையையும் நாம் அறியலாம். சப்த ரிஷிகள் உட்பட அனைத்துப் பெரியோர்களும் ஓரை பார்த்துச் செயலினைச் செய்பவனை எளிதில் வெற்றி கொள்ள இயலாது என்றனர். இதனால் கிரகங்கள் வசியமாகின்றன.

காலஹோரை பற்றிய விளக்கம் (சாதக அலங்காரம்) மரணம், விவாகம், மக்களைப் பெற்று வாழ்ந்திருத்தல், மகிழ்வடைதல், சிறையிருத்தல், தனம் இவைகளைச் செய்யும் அல்லது கொடுக்கும் காலங்களான சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, அங்காரகன் ஆகிய இவர்களுக்கு ஒரு நாளாகிய 60 நாழிகையை ஒவ்வொருவருக்கும் இரண்டரை நாழிகையாக அதாவது ஒரு மணி நேரமாகக் கணக்கிட்டுச் சொல்ல வேண்டும். அதாவது 24 மணி நேரம் பகிர்ந்தளிக்கப் பெற்றுள்ளது. “அருக்கன் புகர்புந்தி யிந்துதுண் மந்தனோ டந்தணன் சேய் இருக்குங் கடிகை யிரண்டரையா மிந்த வோரைகளில் மரிக்கு மணஞ்செயு மக்களைப் பெற்று மகிழ்ந் திருக்கும் சிரிக்குஞ் சிறைப்படுஞ் செல்வமும் போமனத் தேர்ந்து கொள்ளே”