Monday, December 28, 2015

காலையில் எழுந்திருக்கும் போது

காலையில் எழுந்திருக்கும் போது :-
அண்ணாமலை எம் அண்ணா போற்றிகண்ணார் அமுதக் கடலே போற்றி

குளிக்கும் போது :-
சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி

கோபுர தரிசனம் காணும் போது :-
தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

வீட்டைவிட்டு வெளியில் செல்லும் போது :-
காவாய் கனகக் குன்றே போற்றிஆவா எந்தனக்கு அருளாய் போற்றி

நண்பரைக் காணும் போது :-
தோழா போற்றி துணைவா போற்றி

கடை திறக்கும் போது :-
வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி

நிலத்தில் அமரும் போது :-
பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி

நீர் அருந்தும் போது :-
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி

அடுப்பு பற்ற வைக்கும் போது :-
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி

உணவு உண்ணும் போது :-
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக்கு ஆரமுதம் ஆனாய் போற்றி

மனதில் அச்சம் ஏற்படும் போது :-
அஞ்சேல் என்றிங்கு அருளாய் போற்றி

உறங்கும் போது :-
ஆடக மதுரை அரசே போற்றி
கூடல் இலங்கு குருமணி போற்றி

நாமீயை விட நாமத்துக்கே ப்ராபாவம் ஜாஸ்தி

காலையில் துயிலெழும் போது :-
"ஹரிர் ஹரி ஹரிர் ஹரி"என்று ஏழு தடவை சொல்ல வேண்டும்.

வெளியே புறப்பட்டுப் போகும் போது :-
"கேசவா"என்று சொல்ல வேண்டும். "கேசவா" என்று சொன்னால் இடர்கள் எல்லாம் கெடும்.

உணவு உட்கொள்ளும் போது :-
"கோவிந்தா"என்று சொல்லிவிட்டுச் சாப்பிட வேண்டும்.

இரவு படுக்கச் செல்லும் போது :-
"மாதவா"என்று கூற வேண்டும்.

Friday, September 18, 2015

நினைத்தது நிறைவேற சிவனுக்கு மாவிளக்கு!

அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவது போல, நினைத்தது நிறைவேற சிவனுக்கும் மாவிளக்கு ஏற்றலாம். இதற்காக சனி பிரதோஷம் அல்லது மாத சி வராத்திரி நாளில் வீட்டில் விளக்கேற்றி, நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என துவங்கும் மாணிக்கவாசகரின் சிவபுராணத்தை படிக்க வேண்டும்.  மாலையில் கோவிலுக்குச் சென்று நந்தீஸ்வரர், சுவாமியை மூன்று முறைவலம் வந்து வழிபட வேண்டும். பின், பச்சரிசி மாவு அகல் செய்து, அதில்  நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும்

புரட்டாசி சனிக்கிழமையின் மகத்துவம்!

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்," என்கிறார் கீதையில் கண்ணபிரான். மார்கழி மாதத்தைப் போலவே புரட்டாசி மாதமும் இறைவனின் திருவிழாக்கள் பல நடக்கும் மாதமாக விளங்குகிறது. திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே, பல பெருமாள் கோயில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடை பெறுகின்றன. தேவி பராசக்தியைப் போற்றும் நவராத்திரி விழாவும் இம்மாதத்தில் தான் நடை பெறுகின்றது. இது தவிர திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம்.

புரட்டாதிச் சனி என்று சுருக்கமாக அழைக்கப்படும் புரட்டாதிச் சனிக்கிழமை விரதம் புரட்டாதி மாதத்தில் உள்ள சனிக்கிழமைகளில் சனிபகவானை நோக்கிக் கடைப்பிடிக்கப் படும் விரதம் ஆகும். சனிக்கிரகம் நவக்கோள்களில் ஒன்று. அவர் சூரியனுக்கு வெகு தூரத்தில் உள்ளார். சனீஸ்வரன் சூரியனுக்கும் சாயாதேவிக்கும்  மகனாகப் பிறந்தார். அவர் பிறந்த செய்தியை அறிந்த சூரியபகவான் சனீஸ்வரனைப் பார்க்கச் சென்றார். சனீஸ்வரனைக் கண்டவுடன் சூரியனார் குஷ்டரோகியானார். இதனால் வெகுண்ட சூரியன் சனீஸ்வரனைத் தூக்கித்தூர வீசினார். சனிபகவான் வெகுதூரத்தில் விழுந்து முடவனார் என்று புராணங்கள் கூறும். இயம தர்மராஜனின் அவதாரமே சனிபகவான் என்றும் கூறுவர். புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிப்பார். கன்னிராசி புதனின் ஆட்சி உச்ச வீடாகும். மகா விஷ்ணுவே புதனாக அவதாரம் செய்தார் என்பர். எனவேதான் சனீஸ்வர விரதம் கடைப்பிடிப்போர் சிவ விஷ்ணு ஆலயங்களில் உள்ள சனீஸ்வர பகவானிற்கு எள்நெய் எரித்து வழிபடுவதோடு,  சிவ விஷ்ணுக்களையும் வழிபடுவது கட்டாயமாகின்றது. 

பொதுவாக திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை. ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்றென்கின்றனர். புதனின் அதி தேவதையாகவும், பிரத்யதி தேவதையாகவும் இருப்பவர் மஹாவிஷ்ணு. ஆகவே விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது. இந்த மாதத்தை "எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு.   ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.

புரட்டாசி சனியன்று ஓம்

புரட்டாசி சனியன்று ஓம் நாராயணாய நம என்ற  எட்டெழுத்து மந்திரத்தைச் சொல்கிறோம். இதிலுள்ள நம என்ற சொல்லுக்கு உனக்கே நான் உரியவன் என்பது  அர்த்தம். ஓம்காரமாக விளங்கும் நாராயணனே உனக்கே நான் உரியவன் என்பது மந்திரத்தின் முழுப்பொருள். அதாவது உலகத்தில் வந்து விட்ட பிறகு, என்றோ ஒருநாள் செல்லப்போகிறோம். அவ்வாறு செல்லும் நாளில் நாராயணா! உன்னால் வந்த நாங்கள் உன் இடத்திற்கே திரும்பி வந்து விடுகிறோம் என்று சரணாகதி அடைவதாக அர்த்தம். கலியுகக் கொடுமைகளில் இருந்து தப்பித்து, பூலோகத்தில் சுகமாகவும், நிம்மதியாகவும் வாழ ஓம் நமோ நாராயணாய என்று சொல்வது பொருத்தமானது.

Tuesday, September 15, 2015

கஷ்டமா... ஆண்டவனிடம் மட்டும் சொல்லுங்க!* நாம் பலவீனர்கள் ஆவோம்.
* நம் பலவீனம் மற்றவர்களுக்குத் தெரிந்தால் நமது பலத்தை இழப்பதுடன், அவர்களது அடக்குமுறைக்கும் ஆளாவோம்.
* நமக்கு கிடைக்கும் வருமானம், புகழ் ஆகியவற்றைக் கண்டு பிறர் மகிழ்வதை விட பொறாமையே கொள்வர். அவர்களின் பார்வை நம் வாழ்வில்  பின்னடைவை ஏற்படுத்தும்.
* பிறரிடம் கருத்துப் பரிமாற்றம் செய்தால், நம் பிரச்னைகளின் தீவிரம் குறையும் என்பது சரியான கருத்தாக முடியாது. கணவன் மனைவியிடமும்,  மனைவி கணவனிடமும் கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளலாம். 
* திருமணத்துக்கு முன்பு தாயிடம் கருத்து பரிமாற்றம் செய்யலாம்.
* இதையெல்லாம் விட நமது சோதனைகள், வேதனைகள், இன்பங்கள்,நாம் பட்ட அவமானங்கள் எல்லாவற்றையும் ஆண்டவனிடம் மனம் திறந்து  சொல்லுங்கள். உங்களுக்கு மனஅமைதி உறுதியாகக் கிடைக்கும்.
* மனஅமைதி இல்லாத போது, நல்ல நுõல்களைப் படியுங்கள். நம்பிக்கை தரும் நுõல்களைப் படியுங்கள். ஆன்மிக சொற்பொழிவுகளுக்குச் சென்று,  நல்லுரைகளைக் கேளுங்கள். மனம் ஆனந்தமடையும்.

விநாயகருக்கு தோப்புக்கரணம் போட்டு, நெற்றியில் குட்டி வழிபடுவது ஏன்?

விநாயகருக்கு நாம் தோப்புக்கரணம் போட்டு, நெற்றியில் குட்டிக் கொள்கிறோம். இதனால் உடலில் சுறுசுறுப்பு ஏற்படுகிறது. தியானம் செய்பவர்கள்  தலையில் குட்டி விநாயகரை வழிபட்டால் மன ஒருமைப்பாடு ஏற்படும் என்பது நம்பிக்கை. இதற்கு ஒரு புராணக்கதை உண்டு.அகத்தியர்  கொண்டுவந்த கமண்டலத்தை காகம் வடிவெடுத்து வந்த விநாயகர் கவிழ்த்தார். பின், ஒரு அந்தணச் சிறுவனின் வடிவத்தில் அகத்தியர் முன்பு வந்து  நின்றார். கோபம் கொண்ட அகத்தியர் விநாயகரின் தலையில் குட்டினார். அப்போது விநாயகர் சுயரூபம் எடுத்து உலக நன்மைக்காககாவிரி நதியை  உருவாக்க அவ்வாறு செய்ததாக கூறினார். அகத்தியர் தன் தவறுக்காக வருந்தி தன் தலையிலேயே குட்டிக்கொண்டார். அன்று முதல் விநாயகருக்கு  தலையில் குட்டி வழிபடும் வழக்கம் ஏற்பட்டது. கஜமுகாசுரன் என்ற அசுரன் தேவர்களை அடிமைப்படுத்தி தனக்கு தோப்புக்கரணம் போட  வைத்தான். விநாயகர் அவனை அழித்து தேவர்களை பாதுகாத்தார். அசுரன் முன் போட்டதோப்புகரணத்தை விநாயகர் முன்பக்தியுடன் தேவர்கள் ÷ பாட்டனர்.அன்று முதல் தோப்புக்கரணம் போடும் பழக்கம் வந்தது. அறிவியல் ரீதியாக தோப்புக்கரணம் போடுவதாலும், நெற்றியில்குட்டிக்  கொள்வதாலும் நம் உடலில் உள்ள  சுஷûம்னா என்ற நாடிதட்டி எழுப்பப்படுகிறது. அதிலிருக்கும் அமிர்த கலசம் மேலே எழும்பி அமிர்தம்  முழுவதும் உடலில் பரவுகிறது.இதனால் மன எழுச்சியும்,சுறுசுறுப்பும் உண்டாகிறது.

Sunday, August 16, 2015

முன்னோருக்கு திதி கொடுப்பது எதற்காக?

வரும் 14ம் தேதி ஆடிஅமாவாசை வருகிறது. அன்று முன்னோர்களுக்கு திதி கொடுப்பது பற்றி விளக்கம் அளிக்கிறார் சத்குரு ஜக்கிவாசுதேவ்.அவர் சொல்வதைக் கேளுங்கள்.உங்கள் தாத்தாவோ, அப்பாவோ இறந்து விட்டார்கள். அவர்கள் உயிரோடு இருந்த காலத்தில் அவர்களை நீங்கள் விரும்பலாம், விரும்பாமலும் இருக்கலாம். ஆனால், இந்த உடலைக் கொடுத்தவர்கள் அவர்கள் தானே. நாம் உலகில் வாழ்வதற்கு முக்கியமான உடலைக் கொடுத்ததற்கு இதயத்தில் நன்றியுணர்வு காட்ட வேண்ட வேண்டும். அவர்களை நீங்கள் ஆணியில் அடித்து சுவரில் தொங்க விட்டு (போட்டோ) மறந்துவிடுகிறீர்கள். குறைந்த பட்சம் வருடத்திற்கு ஒருமுறையாவது அவர்களின் நினைவாக ஏதாவது செய்ய வேண்டும். அவர்களின் நினைவு நாளில் காகம், பசு போன்றவற்றிற்கு உணவிடுவது மிகவும் நல்லது. அவ்வாறு செய்வது உங்களுக்கு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். இந்நாளில் 50, 100 ஏழைகளுக்கு நீங்கள் உணவுஅளிக்கலாம். இப்படிசெய்தா, இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையுமோ, அடையாதோ தெரியாது. ஆனால், நிச்சயம் உங்களின் ஆத்மா சாந்தி பெறும். அதுதான் முக்கியமானது.வாழ்க்கை முடிந்தவர்களின் ஆத்மாவைப் பற்றிச்சிந்திப்பதை விட உங்களின் ஆத்மா நன்மை பெறவே, இதுபோன்ற சடங்குகள் உருவாக்கப்பட்டன.

வேண்டுதல் நிறைவேற எவ்வாறு வழிபட வேண்டும்!

பரிகார பூஜை செய்வதற்காக நவகிரககோயில்களுக்குச் செல்கிறோம் அங்கே கடைப்பிடிக்க வேண்டிய நியதிகள். எல்லா கோயில்களுக்குமே இவை  பொருந்துபவை. கோயில் நுழைவாயிலில் கை- கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம்.

முதல்நாள் இரவே பரிகாரத் தலத்திற்குச் சென்றுவிடுவது நல்லது. போகும்போதோ வரும்போதோ உறவினர் வீடு மற்றும் பிற தலங்களுக்குச்  செல்லவேண்டாம். புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பும் பின்பும் அசைவ உணவு, மது இவற்றைத் தவிர்ப்பீர். மற்ற விஷயங்களிலும் கட்டுப் பாடு தேவை.

பெண்கள் வீட்டுக்கு விலக்காகி ஏழு நாட்கள் கழித்துச் செல்வது நல்லது. யாரிடமும் கடன் வாங்கிச் செல்லவேண்டாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில்  பூஜைக்குச் கென்று சொல்லி வாங்காதீர். போகும்போதோ வரும்போதோ குல தெய்வத்தை வழிபடலாம்; தோஷமில்லை. தர்ப்பணம்  கொடுக்காதவர்களுக்கு எந்த பூஜையும் பலன் தராது.

பரிகாரங்கள் அனைத்தையும் தாங்களே முன்னின்று செய்யவும்.  பொழுதுபோவதற்காக (சுற்றுலா) கோயில் செல்லாதீர். தங்கள் சக்திக்கேற்றபடி பூ ஜை செய்ய வேண்டும். வசதியுள்ளவர்கள் சாதாரண பூஜை செய்தால் பலிக்காது; எளியவர்கள் கடன் வாங்கி பெரிதாகச் செய்ய வேண்டாம்.  பூ ஜைக்கு அமாவாசை, பவுர்ணமி, தங்கள் பிறந்தநாள், சித்திரை 1, ஜனவரி 1 போன்றவை உகந்தவை.

தலங்களுக்குச் செல்வதற்குமுன் ஒரு நாளும், பின் ஒரு நாளும் இறந்தவர் வீட்டிற்குச் செல்லாதீர். நெருங்கிய உறவினர் இறந்துவிட்டால் அர்ச்சகர்  அல்லது ஜோதிடரைக் கேட்டு, தகுந்த காலம் கடந்து தரிசிக்க வேண்டும். வசதியுள்ளவர்கள் புத்தாடை அணிந்து செல்லலாம். மாலை நேர பூஜைக்கு  காலை அணிந்த உடையை அணியாதீர். பொருட்கள் தரமாக இருந்தால் அனைத்தையும் பரிகார தலத்தில் வாங்குவது சிறந்தது. முதலில் விநாயருக்கு  அறுகம்புல் வைத்து பிரார்த்தித்து, ஒரு தேங்காயை வலது கையில் வைத்துக்கொண்டு ஒரு பிரதட்சணம் வந்து, பூஜையைத் துவங்கி ஒதுக்கப்பட்ட  இடத்தில் அந்த சிதறுகாயை உடையுங்கள்.

கோயிலுக்குள் யாருடனும் பேசவேண்டாம், செல்போன்களைத் தவிர்க்கவும். வெற்றிலைக்கு நுனியும், வாழைப் பழத்திற்கு காம்பும் இருக்க ÷ வண்டும். சிதறு காயைத் தவிர மற்ற காய்களை மஞ்சள் தடவி (இளநிற மஞ்சள்) எடுத்துச் செல்லுங்கள். மண்விளக்குகளில் ஐந்து இடத்தில் மோதிர  விரலால் மஞ்சள், குங்குமம் வைக்கவேண்டும் இதற்கு சந்தனம் உபயோகிக்ககூடாது. பூஜைப் பொருட்களை கைகளில், பிளாஸ்டிக் பைகளில்  கொடுக்காமல் பித்தளை எவர்சில்வர் தாம்பாளம் கூடை இவற்றில் வைத்துக்கொடுங்கள்.

பால்கோவா, இனிப்புகள் அவல் பொரி, கடலை இவற்றையும் நைவேத்தியமாகப் பயன்படுத்தலாம். திரைபோட்டபின் பிரதட்சிணம் வர ÷ வண்டாம். விநாயகருக்கு ஒன்று, தனி அம்பாளுக்கு இரண்டு சிவனைச் சார்ந்த அம்பாளுக்கு மூன்று என்ற கணக்கில் வலம்வாருங்கள். ஒரு பி ரதட்சிணம் முடிந்ததும் கொடி மரத்தடியில் கைகூப்பி நின்று வணங்கி பின் அடுத்ததைத் துவங்கவும். கொடிமரத்தடியைத் தவிர வேறெங்கும் விழுந்து  வணங்கக்கூடாது.

பிற தீபங்களிலிருந்து உங்கள் தீபத்தை ஏற்ற வேண்டாம். நெய் அல்லது எண்ணெய்யை பிற விளக்குகளில் ஊற்ற வேண்டாம். அபிஷேக  ஆராதனைகளும், ஹோமங்களும் உயர்வு தரும். பரிகாரம் செய்யும் நேரத்தில், பரிகாரம் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் உறங்கக்கூடாது. பூஜை செய் துகொண்டிருக்கும் சமயம், யாராவது பிரசாதம் கொடுத்தால், அதைப் பெற்றுக்கொண்டு பூஜை முடிந்தபின் உண்ணவும். பரிகாரம் செய்தபின் பூஜை ப்பொருட்களை அங்கேயே கொடுத்து விடுவது நல்லது. பசுமாட்டிற்கு வாழைப்பழம், மற்றவற்றை அர்ச்சகரிடம் கொடுக்கலாம்; சிப்பந்திகளிடமும்  கொடுக்கலாம்.

பிரத்யேக கனி வகைகளை வைத்துப் படைப்பது நல்லது. எலுமிச்சை, மாதுளை, ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, மா முதலியன. வேகமாக பி ரதட்சிணம் வராமல் பொறுமையாக வருவது நல்லது. பலனை முழுமையாகப் பெற ஒரு வருட காலம் வரை ஆகலாம். நமக்கு ஒரு வருடம் என்பது  தேவர்களுக்கு ஒருநாள். ஒவ்வொரு கோயிலிலும் தீபம் ஏற்றுவதற்கென்றுள்ள தனியான இடத்தில் ஏற்றவும் சிலைகள் அருகில் ஏற்றக்கூடாது.  சுவாமியைத் தொடாமல் பூஜிக்கவும். பூஜை செய்த பொருட்கள் பூஜை செய்யாதவற்றுடன் சேர்த்துவிடக்கூடாது.

நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களுக்காக ஐந்து மூக்கு தீபம் ஏற்ற வேண்டும். திரி கனமாக இருந்தால் தீபம் நின்று எரியும்  தீபம் ஏற்றிய பின் விளக்குகளை தூக்கி தீபம் காட்டுவது, நகர்த்துவது கூடாது. ஒரு கையில் விபூதி, குங்குமம் வாங்கக் கூடாது. இடது கையை கீழே  வைத்து வலது கையை மேலே வைத்து பவ்யமாகப் பெற்றுக் கொள்ள வேண்டும். விபூதி குங்குமத்தை பேப்பரில் வாங்கக்கூடாது. பெற்ற விபூதி,  குங்கும பிரசாதத்தை கீழே கொட்டாமல் வீட்டிற்கு பேப்பரில் மடித்து எடுத்துச் செல்லவும். அறுகம்புல், வில்வம், தாமரைப்பூ, சம்பங்கி, சாமந்தி,  பச்சை மரிக்கொழுந்து, சங்குப்பூ, நீலப்பூ, துளசி, மல்லிகை, ரோஜா, பன்னீர் ரோஜா, விருட்சிப்பூ, போன்ற பூவகைகளால் பூஜிப்பது நல்லது.

காளி, துர்க்கா, முருகனுக்கு பஞ்ச அரளிப் பூக்கள் விசேஷமானவை. அம்பாளுக்கு மெருன் நிற குங்குமமே சிறந்தது. சாதாரண மாலையை வா ங்காமல் பாதம் வரையிலுள்ள வாகை மாலையை வாங்குங்கள். சுவாமி சன்னிதியில் ஸ்தோத்திரங்கள் பாடுவது பிறருக்கு தொல்லையாக அமையும்.  அமைதி தேவை.

கஜ பூஜை, ஒட்டக பூஜை, கோ பூஜை, சிப்பந்திகளுக்கு தட்சிணை தருவது போன்றவை பூஜையின் பலனை அதிகரிக்கும் ஜீவகாருண்யம் உயர்வு த ரும். பிரதான மூர்த்திகளை மட்டுமின்றி பரிவார தேவதைகள் என வழங்கப்படும் பிற சன்னிதிகளிலும் வழிபாடு தேவை. நெய் தீபமேற்றி உதிரி  புஷ்பங்களை சமர்ப்பிக்கலாம். தல வரலாறு புத்தகம் வாங்கி தலம் சம்பந்தப்பட்ட அனைத்து விசேஷங்களையும் தெரிந்துகொள்வது பூஜைக்கு  உதவும். விபூதி, குங்குமம் வாங்கும் முன்பே அர்ச்சகருக்கு தட்சிணை கொடுத்துவிட வேண்டும்.

சங்கல்பம் மிக முக்கியம். கோபுர தரிசனம் கோடி நன்மை. சண்டிகேஸ்வரருக்கு கடைசிப் பிராகாரத்தில் தீபமேற்றி வழிபடுங்கள். சொடுக்கப் ÷ பாடாதீர். கொடி மரத்தடியில் வடக்குப் பார்த்து விழுந்து வணங்கி பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும். பிறகு சற்று விலகி கீழே அமர்ந்து சற்று நேரம் தியானம் பண்ணி பிரார்த்தனையை நிறைவு செய்யவும். ஆரம்பத்தில் விநாயகரிடம் விடுத்த வேண்டுகோள்தான் இறுதிவரை இருக்க ÷ வண்டும்; மாறக்கூடாது. பிரார்த்தனைகள் ஒன்று அல்லது இரண்டுக்கு மேல் இருக்கக்கூடாது. காவல் தெய்வங்கள் இருந்தால் அவர்களை வழிபட்ட  பிறகே விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும். இத்தகைய பூஜைகள் காரியசித்தி பூஜைகள்தானே தவிர, கர்மவினைகளை முற்றிலும் மாற்றாது.  ஆனால் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும். பூஜைக்கு முன்னுரிமை பெறுபவை முறையே பித்ருக்கள், குலதெய்வம், விநாயகர், தசாநாதன், பி ரச்சினை அல்லது கோரிக்கை சார்ந்த தெய்வம்.

நவகிரகங்கள் சம்பந்தமின்றி நேரடியாக செயல்படும் ஆற்றல் முனீஸ்வரர், அனுமன், பசு, யானைக்கு உண்டு. தோஷ நிவர்த்திப் பூஜைகளை 30 வ யதிற்குள் செய்துவிடுங்கள். இயல்பான - முழுமையான நம்பிக்கையுடன் பூரண மன அமைதியுடன் பிரார்த்தனை செய்யுங்கள். சின்னச்சின்ன பூ ஜைகளைவிட அனைத்தும் அடங்கிய முறையான பிரத்யேக பூஜைதான் பலன்களை அள்ளித் தருகின்றன. ஆண்டவன் நினைத்தால் மட்டுமே பூ ஜைக்குரிய அனுமதி கிடைக்கும். ஆண்டவனை நினைத்துக்கொண்டே இருங்கள். காலம் கனியும்போது ஆண்டவன் நம்மை நினைப்பார்.

பூஜையில் வைக்கும் சுண்டலின் முக்கியத்துவம் தெரியுமா!

பூஜையின் போது சுண்டலுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. பொதுவாக  இறைவனை நினைத்து உபவாசம் இருப்பதே மேலானது. இந்நேரத்தில்  புரதச்சத்து மிகுந்த சமச்சீர் உணவான சுண்டலை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியம். நீராவியில் வேக வைப்பதால் சத்து குறையாது. நோயாளிகளுக்கும் கருவுற்ற பெண்களுக்கும் சுண்டல் அற்புதமான உணவு. மேலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான தானிய வகை சுண்டல் சமைத்தால், நவக்கிரகங்களையும் திருப்திபடுத்தலாம்.

ஞாயிறு (சூரியன்)- அவித்த கோதுமை கலந்த சுண்டல், திங்கள் (சந்திரன்)- பாசிப்பயிறு, அப்பளம் கலந்த புட்டு, செவ்வாய்- துவரை சுண்டல்,  புதன்- பயறு சுண்டல், வியாழன்- கொண்டைக்கடலை சுண்டல், வெள்ளி- மொச்சை சுண்டல், சனி- எள் சேர்த்த சுண்டல், ராகு- உளுந்து சுண்டல், ÷ கது- கொள்ளு சுண்டல்.

தமிழகத்தில் கோவில்கள் அதிகம் இருப்பது ஏன்?

64 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள் என அருளாளர்கள் பிறந்த புண்ணிய பூமி தமிழகம். திருத்தலங்களுக்கு நேரில் சென்று பதிகம், பாசுரங்களைப்  பாடி மக்கள் மத்தியில் பக்திப்பயிர் வளர்த்தனர். தமிழ் இலக்கியத்தில் பக்தி பாடல்களே மிக அதிகம். கோவில் வழிபாடு என்பதுதமிழகத்தில்  அன்றாட வாழ்வின் அம்சமாக இருப்பதால், கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற சுலவடை உள்ளது.

ஐந்து தலை பாம்பின் ரகசியம்!

சிவன் தனது தலை, கழுத்து, கைகளில் பாம்பை ஆபரணமாக அணிந்துள்ளார். இதற்கு விசேஷ காரணம் உள்ளது. மனிதனுக்கு கண், காது, மூக்கு,  வாய், மெய் என்னும் ஐம்புலன்கள் உள்ளன. இவை தீயவழிகளில் ஈடுபடும் போது, விஷம் கக்கும் நாகம் போல துன்பத்திற்கு மனிதன் ஆளாக நேரிடும். இவற்றை அடக்கி நல்வழியில் செலுத்தி விட்டால் வாழ்விற்கு அழகூட்டும் ஆபரணமாக மாறி விடும். இதை நமக்கு உணர்த்தவே  நாதனாகிய சிவன் ஐந்துதலை நாகப்பாம்பைஆபரணமாக அணிந்துள்ளார். பாம்பின் ஐந்து தலையும் ஐம்புலனைக் குறிக்கும். இதை வெளிப்படுத்தும்  விதமாக தங்கம், வெள்ளி, பித்தளையால் ஆன நாகத்தை லிங்கத்தின் மீது ஆபரணமாக சாத்துவர். நாக லிங்கத்தை தரிசித்தால் தீய ஆசைகள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும்.

Thursday, August 6, 2015

புண்ணிய நதிகளில் நீராடினால் அறியாத வயதில் செய்த பாவம் நீங்குமா?

அறிந்தே கூட செய்து இருந்தாலும், மனம் வருந்தி கடவுளிடம் சரணடைந்தவர்கள் கடல், நதிகளில் நீராடபாவம் நீங்கும். அறியாமல் செய்த பாவம் நிச்சயம் அகலும்.

ஒன்பது வாரம் படித்தால் ஓகோவென வாழலாம்!

லோக மாதாவான அம்பிகைக்குரிய பாராயணத் துதிகளில் மங்களசண்டிகை மகிமை வாய்ந்தது. இதனை ஆடி செவ்வாய், வெள்ளியன்று படித்தால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் உண்டாகும். ஏதாவது கோரிக்கை வைத்து ஒன்பது செவ்வாய்க்கிழமை தொடர்ந்து படித்தால் அது நிறைவேறி ஓகோவென வாழலாம்.

ரக்ஷ ரக்ஷ ஜகன் மாதா
சர்வ சக்தி ஜெய துர்கா
ரக்ஷ ரக்ஷ ஜகன் மாதா
சர்வ சக்தி ஜெய துர்கா 
மங்கள வாரம் சொல்லிட வேண்டும்
மங்கள கன்னிகை ஸ்லோகம் இதை
ஒன்பது வாரம் சொல்லுவதாலே
உமையவள் திருவருள் சேரும்
படைப்பவள் அவளே
காப்பவள் அவளே
அழிப்பவள் அவளே சக்தி - அபயம்
என்று அவளை சரண் புகுந்தாலே
அடைக்கலம் அவளே சக்தி - 
ஜயஜயசங்கரி கவுரி மனோகரி 
அபயம் அளிப்பவள் அம்பிகை பைரவி 
சிவ சிவ சங்கரி சக்தி மகேஸ்வரி 
திருவருள் தருவாள் தேவி
கருணையில் கங்கை, கண்ணனின் தங்கை
கடைக்கண் திறந்தால் போதும்
வருவினை தீரும், பழவினை ஓடும்
அருள் மழை பொழிபவள் - நாளும்
நீலநிறத்தோடு ஞாலம் அளந்தவள்
காளி எனத் திரிசூலம் எடுத்தவள்
பக்தருக்கெல்லாம் பாதை கொடுத்தவள்
நாமம் சொன்னால் நன்மை தருபவள்
நாமம் சொன்னால் நன்மை தருபவள்

முகூர்த்தவேளையில் அட்சதை தூவ காரணம்!

முகூர்த்தவேளையில் மஞ்சள் அரிசியான அட்சதை தூவி மணமக்களை வாழ்த்துவர். அட்சதை என்றால் பழுது இல்லாதது என்றும், முனை முறியாத முழு அரிசி என்றும் பொருளுண்டு. அரிசியை மஞ்சளில் தோய்த்து அட்சதை செய்வது இன்றைய வழக்கம். நெல்லை உரலில் இட்டு முனை முறியாமல் லாவகமாக குத்தி அரிசியாக்குவர். இதை மஞ்சளில் தோய்த்து, அதை பூவாக எண்ணி மணமக்களுக்கும், இளையவர்களுக்கும் ஆசியளிக்க பயன்படுத்தலாம் என்கிறது சாஸ்திரம். பழுதில்லாத அந்த அரிசி போல வாழ்வில், தம்பதியரும் பழுதின்றி நிறைவாக வாழ வேண்டும் என்பதே இதன் தத்துவம். 

கோவிலில் பிறர் ஏற்றிய விளக்கு அணைந்திருந்தால் அதை நாம் ஏற்றலாமா?

மிகவும் புண்ணியம். வேதாரண்யம் மறைநாதசுவாமி கோவில் கருவறையில் ஒரு எலி திரிந்து கொண்டிருந்தது. அங்கே விளக்கு அணையும் நிலையில் இருந்தது. அதிலிருந்த நெய்யைக் குடிப்பதற்காக விளக்கில் எலி ஏற, அதன் மூக்கு திரியில் பட்டு அணைய இருந்த தீபம் சுடர் விட்டு பிரகாசித்தது. அந்த புண்ணியம் காரணமாக மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக பிறப்பு எடுத்து, திருமாலின் திருவடியை அடையும் பேறு பெற்றது. இதன் அடிப்படையில், அணைந்த தீபத்தை ஏற்றி வைப்போருக்கு சக்கரவர்த்தி யோகம் உண்டாகும் என்பதை அறிய முடிகிறது.

ஆடி அமாவாசை

ஆக.14ல், ஆடி அமாவாசை வருவதை ஒட்டி, முன்னோர் வழிபாட்டு தலங்கள் இடம் பெற்றுள்ளன. ராமேஸ்வரம்: ராவணனை சம்ஹாரம் செய்த பாவம் தீர, ராமர் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம் ராமேஸ்வரம். இங்கு, ராமன் பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்தை ராமலிங்கம் என்றும்,  அனுமன் பிரதிஷ்டை செய்த லிங்கத்தை விசுவலிங்கம் என்றும் அழைக்கிறார்கள். காசியாத்திரை செல்வோர் இங்கு தீர்த்தங்களில் நீராடி, ராமநாதரை கங்கை நீரால் அபிஷேகம் செய்வர். கோவிலுக்குள் 22 தீர்த்தங்கள் உள்ளன.  இங்குள்ள கடல் அக்னி தீர்த்தம் எனப்படுகிறது. பிதுர்தர்ப்பணம் செய்வோர் ஆடி அமாவாசையன்று  ராமநாதசுவாமியை வழிபடுவர். இருப்பிடம்: மதுரையில் இருந்து 200 கி.மீ.,
தொலைபேசி: 04573- 221 223.

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காசிக்கு நிகரான தலமாக கருதப்படுகிறது. வைகை ஆற்றின் கரையிலுள்ள பிதுர்தலமான இதற்கு பிதுர் மோட்சபுரம்  என்ற  பெயருண்டு.  அஸ்தி கரைத்தாலும், தர்ப்பணம் செய்தாலும் அவர்கள் நற்கதியாகிய பிறவாநிலை பெறுவர் என்பது ஐதீகம். அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோர் இங்கு வந்த போது, வைகைக்கரையிலுள்ள மணல் எல்லாம் சிவலிங்கம் போல் காட்சியளித்ததாம். இதனால் ஆற்றில் இறங்க அஞ்சி மறுகரையில் நின்றே வழிபட்டனர். அவர்கள் தரிசனம் பெறும் விதத்தில் நந்தியும் விலகி நின்றது. 
இருப்பிடம்: மதுரையில் இருந்து 18 கி.மீ., 
தொலைபேசி: 94435 01761, 04575 265 082, 265 084.

கன்னியாகுமரி: முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் பகவதியம்மன் அருள்புரிகிறாள். பாணாசுரனின் கொடுமையால் வருந்திய தேவர்கள், அன்னை பார்வதியின் உதவியை நாடினர். பிரம்மாவிடம் வரம் பெற்ற பாணாசுரனை அழிக்க அம்பிகையே கன்னியாக வடிவெடுத்து  தவத்தில் ஈடுபட்டாள். தவத்தால் பலம் பெற்ற அம்பிகை சக்ராயுதத்தை ஏவி பாணாசுரனை வதம் செய்தாள். வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்து மகாசமுத்திரம் ஆகிய மூன்றும் சங்கமிக்கு இங்கு பிதுர்தர்ப்பணம் 
செய்வோருக்கு முன்னோர் ஆசி கிடைக்கும். 
இருப்பிடம்: மதுரையில் இருந்து 235 கி.மீ.,
தொலைபேசி: 04652- 246 223.

அழகர்கோவில் நுõபுர கங்கை: திவ்யதேசங்களில் ஒன்றான மதுரை அழகர்கோவிலில் கள்ளழகர் அருள்பாலிக்கிறார். பதினெட்டாம் படி கருப்பசாமி சக்தி மிக்கவர்.  அனுமன் தீர்த்தம், கருடதீர்த்தம், சக்கர தீர்த்தம், நுõபுர கங்கை ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. திருமால் உலகை மூன்று அடிகளால் அளந்த போது, அவரது சிலம்பு அணிந்த திருவடி வானம் நோக்கி சென்றது. அது கண்ட பிரம்மா தன் கலச நீரால் திருவடிக்கு அபிஷேகம் செய்தார். அந்த நீர் கங்கை போல் ஊற்றெடுத்தது. இதனால், இந்த தீர்த்தம் நுõபுர கங்கை என பெயர் பெற்றது. நுõபுர கங்கையில் நீராடி தர்ப்பணம் செய்வது சிறப்பு. 
இருப்பிடம்: மதுரையில் இருந்து 25 கி.மீ.,
தொலைபேசி: 0452- 247 0228, 247 0229.

ஆனைமலை மாசாணி அம்மன்:  பொள்ளாச்சி அருகிலுள்ள ஆனைமலை அடிவாரத்தில் ஆழியாற்றின் கரையில் மன்னன் நன்னனுக்குரிய மாமரம் இருந்தது. அந்த பழங்களை யாரும் பறிக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தான். ஒருநாள் ஆற்றில் நீராடிய இளம்பெண் மிதந்து வந்த மாம்பழத்தை  சாப்பிட்டாள். அவளுக்கு நன்னன் மரண தண்டனை கொடுத்தான். அவள் மீது ஊரார் இரக்கம் கொண்டனர். அதுவே பக்தியாகி  வழிபட்டனர். மயான சயனி என்பதே மாசாணி என மருவியது. உப்பாற்றின் கரையில் அம்மன் 17 அடி நீளத்தில்  படுத்த நிலையில் காட்சி தருகிறாள்.  இவள்  நீதி தெ#வமாக விளங்குகிறாள். 
இருப்பிடம்: பொள்ளாச்சியில் இருந்து 14 கி.மீ.,
தொலைபேசி: 04253- 282 337, 283 173. 

திருச்செங்கோடு அர்த்தநாரி: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர் கோவிலில், சிவன் அம்பிகையை இடபாகத்தில் ஏற்ற நிலையில் அருள்புரிகிறார். இங்குள்ள செங்கோட்டு வேலவன் சன்னிதி சிறப்புமிக்கது. 1200 படிகள் கொண்ட மலைக்கோவிலான இங்கு உள்ள 60வது படி சத்தியப்படி எனப்படுகிறது. அந்தக் காலத்தில் வழக்குகளை இங்கு பேசித் தீர்க்கும் வழக்கம் இருந்தது. அர்த்தநாரீஸ்வரரின் திருவடியில் சுரக்கும் தேவதீர்த்தம் மகிமை மிக்கது. அமாவாசை நாளில் இந்த தீர்த்தத்தைப் பருகினால் உடல் நோய், மன நோய் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும் . 
இருப்பிடம்: ஈரோட்டில் இருந்து 18 கி.மீ.,
தொலைபேசி: 04369-250 238.

அனுமந்தபுரம் வீரபத்திரர்:  தட்சனின் யாகத்தை நிறுத்த, சிவன் தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பினார். சாகாவரம் பெற்ற தட்சனின் தலையை வீரபத்திரர் வெட்டினார்.  பிறகு, தன் கோபம் தணிய பூலோகத்தில் உள்ள அனுமந்தபுரம் வெற்றிலை தோட்டத்தில் தங்கி  அமைதி பெற்றார்.  இத்தலத்தில் வீரபத்திரருக்கு கோவில் அமைக்கப்பட்டது. செவ்வாய்தோஷம், உடல்நோய் நீங்க ஐந்து அமாவாசை அல்லது ஐந்து பவுர்ணமி நாட்களில், இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, சுவாமிக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபடுகின்றனர். இருப்பிடம்: விழுப்புரம்- சென்னை சாலையில் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து 10 கி.மீ.,             
தொலைபேசி: 044- 2746 4325.

பண்ணாரி மாரியம்மன்: பண்ணாரி வனப்பகுதியில் மேய்ந்த பசுக்கூட்டத்தில் ஒரு பசு மட்டும், அங்குள்ள வேங்கை மரத்தடியில் அடிக்கடி பாலைச் சுரந்தது. இதை அறிந்த மாடு மேய்ப்பவன் அந்த இடத்திலுள்ள புற்றின் அடியில், ஒரு அம்பாள் சிலை இருப்பதைக் கண்டான். விஷயமறிந்த ஊரார் அங்கு வந்த போது, ஒருவருக்கு அருள் வந்தது. பசுமை மிக்க இந்த இடத்தில் மாரியம்மனாக வீற்றிருக்கும் என்னை வழிபட்டால் வேண்டும் வரம் அளிப்பேன், என்று அம்மன் வாக்களித்தாள். அதன்படி கோவில் அமைத்து வழிபாடு செய்யத் தொடங்கினர்.  ஆடி செவ்வாய், வெள்ளி, அமாவாசை நாட்களில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. இங்கு புற்றுமண்ணே பிரசாதம்.
இருப்பிடம்: ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் வழியாக 77 கி.மீ.,
தொலைபேசி: 04295- 243 366, 243 442, 243 289.

தேவிபட்டினம் நவபாஷாண கடல்: ராமநாதபுரம் அருகிலுள்ள தேவிபட்டினம் கடலில், ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவபாஷாணம் என்னும் கற்களால் ஆன நவக்கிரகங்கள் உள்ளன. அமாவாசையன்று இந்தக் கடலில் நீராடி நவக்கிரகங்களை வழிபட்டால் கிரகதோஷம் அகலும் என்பது ஐதீகம். இங்குள்ள சக்கர தீர்த்தம் என்னும் தர்ம புஷ்கரணியில் நீராடினால் பாவநிவர்த்தி உண்டாகும். வீரசக்தி பீடமாக விளங்கும் இங்கு அம்பிகை மகிஷாசுரமர்த்தினியாக வீற்றிருக்கிறாள். புகழ் மிக்க மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரத்தால் போற்றப்படும் அம்பிகை இவளே. ராவணனுடன் போரிடும் முன் ராமர், லட்சுமணர், அனுமன் மூவரும் வெற்றி பெற இந்த அம்பிகையை வழிபட்டனர். 
இருப்பிடம்: ராமநாதபுரத்தில் இருந்து 15 கி.மீ.,

பவானி சங்கமேஸ்வரர்: ஈரோடு மாவட்டம் பவானியில், பவானி ஆறு காவிரிஆற்றுடன் கூடுகிறது. இங்குள்ள சங்கமேஸ்வரர் கோவிலில் அன்னை வேதாம்பிகை அருள்பாலிக்கிறாள். சம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலத்திற்கு  திருநணா என்றும் பெயருண்டு. திருநணா என்பதற்கு  பாவம் நெருங்காது என்பது பொருள்.  அதனால்  இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சிவதரிசனம் செய்வோருக்கு  பாவம் நெருங்குவதில்லை என்பது ஐதீகம். காவிரி, பவானி, அமுதநதி கூடுவதால் பவானியை  முக்கூடல் என்று சொல்வர். ஆடி மாதம் முழுவதுமே இங்கு நீராடி, சுவாமியை வழிபடுவது சிறப்பு. 
இருப்பிடம்: ஈரோட்டில் இருந்து 15 கி.மீ., 
அலைபேசி: 98432 48588, தொலைபேசி: 04256- 230 192. 

செதலபதி முக்தீஸ்வரர்: திருவாரூர் மாவட்டம் செதலபதி முக்தீஸ்வரர் கோவிலை தில தர்ப்பணபுரி என்று சொல்வர். அமாவாசையன்று செய்யும் தர்ப்பணத்தின் பெயரால் அமைந்த தலம்  இது.  திலம் என்றால் எள் என்று பொருள். இத்தலத்தில் ராமர் தனது தந்தை தசரதர், ஜடாயு இருவருக்கும் எள்ளால் தர்ப்பணம் செய்ததால் இப்பெயர் ஏற்பட்டது. முக்தி தருபவராக சிவன்  இருப்பதால் முக்தீஸ்வரர் எனப்படுகிறார். அம்பிகை சுவர்ணவல்லித் தாயார் செல்வம் தருகிறாள். இங்குள்ள அரசலாற்றிலும், சந்திர தீர்த்தத்தில் நீராடி முன்னோர் வழிபாட்டை மேற்கொள்வர்.  
இருப்பிடம்: திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ., தொலைவில் பூந்தோட்டம் கிராமம். இங்கிருந்து  4 கி.மீ.,
அலைபேசி: 94427 14055, தொலைபேசி: 04366- 238818, 239 700 

அய்யாவாடி பிரத்யங்கிரா: அய்யாவாடியில் காளியின் அம்சமான பிரத்யங்கிராதேவி அருள்புரிகிறாள். இலங்கை போரில் வெற்றி பெறுவதற்காக ராமர் யாகம் செய்து இந்த தேவியை வழிபட்டார். சரபேஸ்வரரின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய இவள்  சிங்க முகம், 18 கைகள், சிரித்த முகத்துடன் கரிய நிறத்தில் காட்சி தருகிறாள். எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபட, அமாவாசையன்று அம்மனுக்கு காலை முதல் மதியம் வரை நிகும்பலா யாகம்  இங்கு நடக்கிறது.   பழம், பட்டு, பூக்கள் என 108  திரவியங்களை சேர்ப்பர். யாக குண்டத்தில் மிளகாய் வத்தலை இட்டாலும் நெடி  சிறிதும் இருக்காது.யாகம் நிறைவேறியதும், சரபேஸ்வரர், பிரத்யங்கிரா தேவிக்கு அபிஷேகம் நடக்கும்.  
இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து 10 கி.மீ.,
தொலைபேசி: 94431 24347, 0435 246 3414.

பாபநாசம் பாபநாசநாதர்: 
நவகைலாயத் தலங்களில் முதல் தலம் பாபநாசம் பாபநாசநாதர் கோவில். தாமிரபரணியின் கரையில் அமைந்த  இங்கு அகத்தியர் சிவபார்வதியின்திருமணக் கோல தரிசனம் பெற்றார். கருவறையின் பின்புறம் உள்ள பிரகாரத்தில் கல்யாண சுந்தரர் என்ற பெயரில் சிவபார்வதி திருமணக் கோலத்தில் உள்ளனர். இங்கு அம்பிகை உலகம்மையாக வீற்றிருக்கிறாள். கங்கை நதி தன்னிடம் சேரும் பாவத்தை ஆண்டுக்கு ஓருமுறை தாமிரபரணிக்கு வந்து நீராடி போக்கிக் கொள்வதாக ஐதீகம். பாபநாசநாதர் லிங்கம் ருத்திராட்சத்தால் ஆனது. ஆடி அமாவாசையன்று தாமிரபரணியில் நீராடி முன்னோர் வழிபாடு செய்வது சிறப்பு. 
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து 50 கி.மீ.,
தொலைபேசி: 04634- 223 268

சொரிமுத்தையனார் கோவில்: சாஸ்தாவின் முதல் தலம் பொதிகை மலையில் உள்ள  சொரிமுத்தையனார் கோவில். பூர்ணா, புஷ்கலா தேவியருடன் வீற்றிருக்கிறார்.  பாணதீர்த்தம் கோவிலில் இருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ளது. அம்பில் புறப்பட்ட பாணம் போல  நீர் கொட்டுவதால் பாண தீர்த்தம் என பெயர் வந்தது. இந்த அருவியை தூரத்தில் இருந்து தரிசனம் செய்யலாம். (குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது) ஆடி அமாவாசையன்று பக்தர்கள் தாமிரபரணியில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்கின்றனர்.  அகத்தியர் அருவியிலும் நீராடி தர்ப்பணம் செய்யலாம். 
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் சொரிமுத்தையனார் கோவில் 54 கி.மீ., 
தொலைபேசி: 04634- 250 209

சுருளிமலை தீர்த்தம்: சுருளிமலையில் முருகன் குடி கொண்டிருக்கிறார். ஆண்டிகோலத்தில் சுவாமி காட்சியளிப்பதால் சுருளியாண்டி எனப்படுகிறார். இந்த மலையிலுள்ள கைலாச புடவு குகையில் சிவன் கைலாசநாதர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். குகையின் மேல்பகுதியில் முருகன் உள்ளார். சனீஸ்வரரின் பிடியிலிருந்து விடுபட தேவர்கள் இங்கு வந்து தவமிருந்தனர். முருகன் அவர்களை சனியின் பிடியில் இருந்து காத்தார்.  ஆடி அமாவாசையன்று சுருளிதீர்த்தம் அருவியில் நீராடி பிதுர் 
தர்ப்பணம் அளிக்கின்றனர். இங்குள்ள பூதநாராயணப்பெருமாள் கோவிலில் விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது. 
இருப்பிடம்: தேனியிலிருந்து 40 கி.மீ.,
அலைபேசி: 93452 61022.

அச்சிறுபாக்கம் ஆட்சிபுரீஸ்வரர்:  திரிபுர அ”ரர்களை அடக்க எண்ணிய சிவன் தேரில் புறப்பட்டார். அப்போது முதற்கடவுளான விநாயகரை வணங்க வேண்டும் என்ற நியதியை அவர் பின்பற்றவில்லை. எனவே,  விநாயகர் தேரின் அச்சை முறித்தார்.  தவறை உணர்ந்த சிவன் விநாயகரை மனதில் தியானிக்க தேர் சரியானது. சட்டத்தை தெய்வமும் பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படையில் இந்த நிகழ்வு அமைந்தது. தேரின் அச்சு முறிந்த இடத்தை அச்சு+இறு(முறிந்த)+பாக்கம் என்று அழைத்தனர். இதுவே அச்சிறுபாக்கம் ஆனது. இங்குள்ள சிவன் ஆட்சிபுரீஸ்வரர்  எனப்படுகிறார். இவரை அமாவாசையன்று வழிபட புதிய முயற்சி தடையின்றி நிறைவேறும்.
இருப்பிடம்: செங்கல்பட்டில் இருந்து 48 கி.மீ. 
அலைபேசி: 98423 09534, தொலைபேசி: 044 - 2752 3019.

முப்பத்து முக்கோடி என்றால் எத்தனை ஆண்டு?

நினைக்க முடியாத வாழ்நாள்புராணங்களில் முப்பத்து முக்கோடி தேவர்கள், நாட்கள் பற்றியெல்லாம் சொல்லப்பட்டுள்ளது. முப்பத்து முக்கோடி என்றால் 33 கோடி அல்ல. 33 என்ற எண்ணுக்குப் பிறகு 26 பூஜ்யங்கள் சேர்ப்பது என்ற கருத்து உண்டு. அந்த  அளவுக்கு வாழ்ந்தவன் ராவணன். சிவபக்தனான இவன், சிவதரிசனத்தை நேரில் பெற தன் ஒன்பது தலைகளை வெட்டி காணிக்கையாக்கினான். அப்படியும், சிவன் வராமல் போகவே பத்தாவது தலையையும் வெட்ட முயன்ற போது, சிவன் காட்சி தந்தார். அவரிடம் முப்பத்து முக்கோடி நாட்கள் வாழும் வரத்தைப் பெற்றான். அவன் வாழ்ந்த ஒவ்வொரு நாளும் ஒரு லிங்கம் அமைத்து வழிபட்டான். இலங்கையில் இருந்த இந்த லிங்கங்கள் கடல் கோளினால் அழிந்திருக்க வேண்டும் என்கின்றனர்.

Wednesday, July 22, 2015

சாஸ்திரங்கள் மற்றும் அறிவியல் கூறும் ஆடியின் சிறப்பு!

நம் முன்னோர்கள் ஒரு வருடத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்திருக்கிறார்கள். தை மாதம் முதல் தேதியிலிருந்து ஆனி மாதம் வரை உத்தரானப்  புண்ணிய காலம் என்றும், ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம் என்றும் கூறுவர். தட்சிணாயனம் மழைக்காலத்தின் தொடக்கத்தையும் உத்தரா யனம் கோடைக்காலத்தின் ஆரம்பத்தையும் குறிக்கிறது. உத்தாரயனக் காலத்தில் சூரியன் வடக்கிலிருந்து தெற்காகவும். ஆடி முதல் மார்கழி வரை  தெற்கிலிருந்து வடக்காகவும் பயணிப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால்  உண்மையில் சூரியன் அவ்வாறு பயணிப்பதில்லை. நீள்வட்டப்  பாதையில் சூரியனைச் சுற்றிவரும் பூமியால் ஏற்படுவதே அது. பூமியிலிருந்து பார்க்கும் நமக்கு சூரியன் நகர்வதாகத் தோற்றமளிக்கிறது. இது  காட்சிப்பிழை அல்லது பூமியின் இடமாறு தோற்றப்பிழை. பூமி தெற்கு-வடக்காகச் செல்வதே உண்மை. டிசம்பர் 21-ல் நீள்வட்டப் பாதையில்  ஆறுமாதப் பெயர்ச்சியை முடித்து. சூரியனுக்கு மறுபுறம் திரும்பி சுழன்று பெயர்ச்சி அடையும். அப்போது பூமி வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச்  செல்லும். ஆனால் நமக்கு சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லுவதைப்போல் தெரியும். 

தட்சிணாயனம் தொடங்கும் ஆடி மாதத்தில் சூரியனிடமிருந்து ஒருவிதமான சூட்கம சக்திகள் வெளிப்படுவதாகவும், பிராண வாயு அதிகமாகக்  கிடைக்கும் என்றும், உயிர்களுக்குத் தேவையான ஆதாரசக்தியை அதிகமாகத் தரும் மாதம் இதுவென்றும் வேதங்கள் கூறுகின்றன. ஆடி மாதம் பி றந்ததும் நீர் நிலைகளில் நீராடுவது போற்றப்படுகிறது. ஆனால் முதல் மூன்று நாட்கள் ஆறுகளுக்கு தோஷமான நாளாகக் கருதப்படுவதால், அதன் பிறகு நீராடுவது நல்லதென்பர். ஆறுகளில் நீராடும்போது, ஆறு எந்த திசையிலிருந்து ஓடி வருகிறதோ அந்த திசையைப் பார்த்து நீராட வேண்டும்.  கோவிலில் உள்ள குளத்தில் நீராடும்போது வடக்கு திசை நோக்கி நீராட வேண்டும்.

ஆடி- பெயர் வந்தது எப்படி?

ஆடி என்பது ஒரு தேவமங்கையின் பெயர் என்கிறது புராணம். ஒரு சமயம் பார்வதிதேவி, ஈசனைப் பிரிந்து தவம் செய்யும் நிலை ஏற்பட்டது. சி வபெருமான் தனிமையில் இருப்பதை அறிந்த ஆடி என்னும் தேவகுல மங்கை பாம்பு உருவம் எடுத்து, கயிலையின் உள்ளே யாரும் அறியா  வண்ணம் நுழைந்தாள், பிறகு பார்வதி தேவியாக உருமாறி சிவபெருமான் அருகில் சென்றாள். அப்போது ஒரு கசப்பான சுவையை சிவபெருமான்  உணர்ந்தார். தன்னை நோக்கி வந்தவள் பார்வதி அல்ல என்பதை அறிந்து. தன் சூலாயுதத்தால் ஆடியை அழிக்க யத்தனித்தார். அப்போது  சூலாயுதத்திலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி ஆடியை புனிதமடையச் செய்தது. அவள் ஈசனை வணங்கி, ஒரு நிமிடமாவது தங்கள் அன்பான  பார்வை என்மீது பாட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நடந்துகொண்டேன். என்னை மன்னித்தருள வேண்டும் என்று வேண்டினாள். ஆனால்  சிவபெருமான். என் தேவி இல்லாத சமயம் நீ அவளைப்போல வடிவம் கொண்டு வந்தது தவறு. எனவே பூவுலகில் கசப்புச் சுடையுடைய மரமாகப்  பிறப்பாய் என்றார்.

அவள் விமோசனம் கேட்க, கவலை வேண்டாம், நீ மரமாகிப் போனாலும் ஆதிசக்தியின் அருளும் உனக்குக் கிட்டும். சக்தியை வழிபடுவதுபோல்  உன்னையும் வழிபடுவார்கள். ஆடியாகிய உன் பெயரிலேயே ஒரு மாதம் பூலோகத்தில் அழைக்கப்படும். அந்த வேளையில் நீ கசப்பு குணம்  கொண்ட மரமாக இருந்து மக்களுக்கு நல்லதைச் செய்வாய் என்று அருளினார். ஆடி என்ற தேவலோகத்துப் பெண் தான் பூலோகத்தில் வேப்ப  மரமாகத் திகழ்கிறாள். ஈசனின் சாபமே அவளுக்கு வரமாக மாறியது. தெய்வாம்சம் பொருந்திய வேம்பு ஆதிசக்தியின் அம்சமாக உள்ளது. நோய் கள் பலவற்றை குணமாக்கும் சக்தி கொண்டது; குளிர்ச்சியானது. அதன் காற்று உடல்நலத்தினைக் காக்கும். அதன் கசப்புத்தன்மை நோய் எதிர்ப்பு  சக்தியைக் கொடுத்து வளமான உடல் ஆரோக்கியம் தரும். வேப்ப இலையின் கொழுந்தில் நம் உடலுக்குத் தேவையான சக்தி(புரோட்டின்) இருப் பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். தினமும் காலை வேளையில் மூன்று, நான்கு வேப்பங் கொழுந்துகளை வெறும் வயிற்றில் மென்று  சுவைத்தால் மருத்தவரிடம் செல்லு<ம் நிலை ஏற்படாது என்று சித்த மருத்துவம் கூறுகிறது. அதேசமயம், கசப்புச் சுவையை அளவுக்கு அதிகமாகப்  பயன்படுத்தினால் ரத்தத்தின் வீரியம் குறைந்து உடலில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே சித்த மருத்துவர் ஆலோசனைப்படி வேப்பங் கொழுந் தினைப் பயன்படுத்த வேண்டும்.

அம்மை நோய்க்கு அருமருந்தாக வேம்பு திகழ்கிறது. காய்ச்சலை குணப்படுத்தும் வேம்பு கஷாயம் இன்றும் மருத்துவ உலகில் புகழ்பெற்றுத்  திகழ்கிறது. அதனால்தான் கிராமப்புறங்களில் வீட்டின் வாசல் முன்பு வேப்ப மரங்களை வளர்க்கிறார்கள். நகர்ப்புறங்களிலும் வேப்ப மரங்கள்  வளக்கப்பட்டால் தூய்மையான காற்று கிடைக்கும்.

ஆடியும் தமிழர் பண்பாடும்!

ஆடிப் பட்டம் தேடி விதை– இது முதுமொழி. ஆடி மாதத்தில் விவசாயப் பணியை துவக்கினால் ஆண்டு முழுவதும் விளைச்சல், விவசாயிகள்  வாழ்க்கை சிறப்புறும் என்பது நம்பிக்கை. காலப்போக்கில் பருவமழை தவறியதால், ஆடியில் விதைப்பது புரட்டாசி, ஐப்பசி என தள்ளிப்போகிறது.  ஆடியில் சுப காரியங்கள் நடத்துவதில்லை. புதுமணத் தம்பதியை ஆடி முதல் தேதியில் (தலை ஆடி) அழைத்து பெண் வீட்டார் விருந்து கொடுப்பர்.  ஆடி நடுப்பகுதியிலும் விருந்துதான். ஆடி பதினெட்டாம் பெருக்கன்று புதுமணப் பெண்ணிற்கு தாலி பெருக்கி போடும் நிகழ்வு இன்றும்  தொடர்கிறது. சில கிராமங்களில் ஆடியில் காடுகளில் பாரி வேட்டை என்ற பெயரில் முயல், குருவிகளை வேட்டையாடுவர்.

Friday, June 19, 2015

பவுர்ணமி குத்துவிளக்கு பூஜை!

சித்திரை பவுர்ணமி- தானிய விருத்தி
வைகாசி பவுர்ணமி- செல்வ வளம்
ஆனி பவுர்ணமி- விவாகப் பேறு
ஆடி பவுர்ணமி- நீண்ட ஆயுள்
ஆவணி பவுர்ணமி- புத்திரப்பேறு
புரட்டாசி பவுர்ணமி- பசுக்கள் விருத்தி
ஐப்பசி பவுர்ணமி- களஞ்சியம் நிரம்பும்
கார்த்திகை பவுர்ணமி- நற்கதி கிட்டும்
மார்கழி பவுர்ணமி- ஆரோக்ய வாழ்வு
தை பவுர்ணமி- காரிய சித்தி
மாசி பவுர்ணமி- துயர் நீங்கும்
பங்குனி பவுர்ணமி- சுபிட்சம் உண்டாகும்

பரமபத விளையாட்டு சொல்லும் நீதி என்ன?

உயர்த்தும் ஏணிகளும், கடிக்கும் பாம்புகளும் வாழ்க்கைப் பாதையில் சகஜம். ஏற்ற இறக்கமின்றி வாழவே முடியாது. இவற்றை சமாளித்து வெற்றி கொள்வது தான் பரமபத விளையாட்டின் தத்துவம்.

அனுமனை சனிக்கிழமையில் வழிபட வேண்டும் என்பது ஏன்?

சனிக்கிழமை பெருமாள் வழிபாட்டுக்குரிய நாள். கலியுகத்தில் விஷ்ணு ஏழுமலையானாக திருப்பதியில் அவதரித்த நன்னாள் புரட்டாசி சனி.  ஆஞ்சநேயரை சனிக்கிழமை வழிபட்டால் சனி தோஷம் நீங்கும். இதனால், சனிக்கிழமையில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

பெண் தெய்வங்களை சிறப்பு மிக்கதாக கருதுவது ஏன்?

பெண்மையின் கனிந்த நிலையே தாய்மை. சுயநலம் சிறிதும் இன்றி, தன் குடும்பம், குழந்தைகள் என்ற அன்பு உணர்வோடு பெற்ற தாய் இருப்பது  போல, உலகம் என்னும் குடும்பத்தின் தாயாக இருப்பவள் அம்பிகை. அன்பு, கருணை, பொறுமை,தியாகம், சத்தியம், தர்மம் என எல்லா நற்குண ங்களின் சேர்க்கை அவள். பெண்ணுக்கே தைரியம் அதிகம். அதனால் காவல் தெய்வங்களாக காளியம்மன், மாரியம்மன், துர்க்கையம்மன் என்னும்  பெயர்களில் அம்பிகையை வழிபடுகிறோம். சுவாமியே இல்லாமல், அம்பாள் மட்டும் தனித்திருக்கும் கோவில்களும் நம் நாட்டில் நிறைய உள்ளன.

Friday, June 5, 2015

ராசி, நட்சத்திர மந்திரங்கள்!

ஸ்ரீ கணபதி மந்திரங்கள்
1. ஸ்ரீ வல்லப மஹா கணபதி மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
க்லௌம் கம் கணபதயே வர
வரத சர்வ ஜனம்மே
வசமானய ஸ்வாஹா
2. தன ஆகர்ஷண கணபதி மந்திரம்
ஓம் க்லாம் க்லீம் கம் கணபதயே
வரவரத மம தன
தான்ய சம்ருத்திம் தேஹி
தேஹி ஸ்வாஹா
3. வ்ராத கணபதி மந்திரம்
ஓம் நமோ வ்ராத பதயே
நமோ கணபதயே நம:
ப்ரமதபதயே நமஸ்தேஸ்து
லம்போதராய
ஏகதந்தாய விக்னவிநாசினே
சிவ சுதாய
வரத மூர்த்தயே நமோ நம:
4. கணபதி காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய
தீமஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்
5. ஸ்ரீ லட்சுமி கணபதி மந்திரம்
ஓம் ஸ்ரீம் கம் சௌம்யாய லட்சுமி கணபதயே
வரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா
6. ஸர்வ வித்யா கணபதி மந்திரம்
தினமும் காலையில் 108 முறை சொல்ல கல்வி, அறிவு வளர்ச்சி பெறும். அறிவு விருத்தியாகும். தீய எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் உண்டாகும்.
ஐம் ப்ளூம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
க்லௌம் கம் கணபதயே
வர வரத ஐம் ப்ளூம் சர்வ
வித்யாம் தேஹி ஸ்வாஹா
கஷ்டங்கள் நீங்கி செல்வம் பெருக
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் தனநாயிகாயை
ஸ்வர்ணாகர்ஷண தேவ்யாயை
சர்வ தாரித்திரிய நிவாரணாயை
ஓம் ஹ்ரீம் ஸ்வாஹா:
ஸ்ரீ மஹாலெட்சுமி மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஸ்ரீரியை நம
காலை மாலை 108 முறை சொல்லி வந்தால் விரைவில் லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.
மனோவியாதி, விரோதிகளால் அச்சம் நீங்கி மனோதைரியம் பெற
ஸக்தே பஜே த்வாம் ஜகதோ ஜனித்ரீம்
ஸூகஸ்ய தாத்ரீம் ப்ரணதார்த்தி ஹந்த்ரீம்
நமோ நமஸ்தே குஹ ஹஸ்த பூஷே
பூயோ நமஸ்தே ஹ்ருதி ஸன்னி தத்ஸ்வ !!
எடுத்த காரியத்தில் வெற்றி பெற
ராமதூத மஹாதீர ருத்ர வீர்ய சமுத்பவ
அஞ்ஜநாகர்ப்ப சம்பூத, வாயு புத்ரா நமோஸ்துதே
(திருமண தடைநீங்கி திருமணம் நடைபெற தினமும் பெண்கள் கூறவேண்டியது. இதை தினமும் 108 முறை சொல்லவும்)
சர்வ மங்கள மாங்கல்யே சிவே
சர்வார்த்த சாதகே ! சரண்யே
த்ரயம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே
இதை மனதிற்குள் எப்பொழுதும் பெண்கள் சொல்லிக் கொண்டிருந்தாலே வறுமை நீங்கும். தினமும் பலமுறை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால் அஷ்டலெட்சுமியின் அருள் கிட்டும்.
ஸ்ரீசுப்ரமண்யர்
(செவ்வாய்தோஷம் விலக தினமும் 108 முறை சொல்லவும்)
ஷடானனம் குங்கும ரக்த வர்ணம்
மஹாமதிம் திவ்ய மயூர வாகனம்
ருத்ரஸ்ய ஸுனும் ஸூரசைன்ய நாதம்
குஹம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே
சகல காரியங்களும் ஸித்திக்கும் ஸ்ரீவித்யா மகா மந்திரம்
ஓம் நமோ பகவதி சர்வ மங்களதாயினி
சர்வயந்த்ர ஸ்வரூபிணி சர்வமந்திர ஸ்வரூபிணி
சர்வலோக ஜனனீ சர்வாபீஷ்ட ப்ரதாயினி
மஹா த்ரிபுரசுந்தரி மஹாதேவி
சர்வாபீஷ்டம சாதய சாதய ஆபதோ நாசய நாசய
சம்பதோப்ராபய ப்ராபய சஹகுடும்பம் வர்தய வர்தய
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
சகல தேவதா ஸ்ரீகாயத்ரி மந்திரங்கள்
ஸ்ரீ காயத்ரி கஷ்டங்கள் விலக
ஓம்
பூர்ப் புவஸ்ஸுவ
தத்ச விதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீம ஹி
தியோ யோந ப்ரசோதயாத்
1. ஸ்ரீசுப்ரமண்யர்
(செவ்வாய்தோஷம் விலக தினமும் 51- முறை சொல்லவும்)
ஓம்
தத்புருஷாய வித்மஹே
மஹாசே நாய தீமஹி
தந்நோ ஷண்முக ப்ரசோதயாத்
2. ஸ்ரீருத்ரர் (சிவன்
(நவக்ரஹ தோஷம் விலக 11-முறை தினமும் சொல்லவும்)
ஓம்
தத்புருஷாய வித்மஹே
மஹாசே தேவாய தீமஹி
தந்நோ ருத்ர ப்ரசோதயாத்
கீழ்க்கண்ட மந்திரத்தை செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை காலை, மாலை பதினாறு முறை பாராயணம் செய்து, ஸ்ரீ துர்க்கையை நமஸ்கரிக்க வீட்டில் சர்வ மங்களமும் உண்டாகும்.
தும்துர்கே: துரிதம் ஹர
காலை தீப வணக்க மந்திரம்
காலையில் பூஜை அறையில் விளக்கு ஏற்றும் பொழுது கீழ்க்கண்ட மந்திரத்தை கூறி ஏற்றவும்.
(பலன்: எல்லா காரியங்களும் வெற்றியடையும்)
ஸோயம் பாஸ்கர வித்யஸ்த
கிரணோத்கர பாஸ்வா
தீப: ஜ்யோதிர் நமஸ்துப்யம்
சுப்ரபாதம் குருஷ்வமே.
துளசியை வழிபட மந்திரம்
துளசி மாடத்தை மூன்று முறை வலம் வந்து கீழ்க்கண்ட மந்திரத்தை கூறினால் ஸ்ரீமஹாலட்சுமி கடாக்ஷம் உண்டாகும்.
நமஸ் துளசி கல்யாணி, நமோ விஷ்ணுப்ரியே சுபே
நமோ மோக்ஷப்ரதே தேவி: ஸம்பத் ப்ரதாயிகே.
கோ பூஜை மந்திரம்
பசுவை காலை வேளையில் தரிசனம் செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை கூற நல்ல அருள் கிடைக்கும்.
சர்வ காமதுகே தேவி சர்வ தீர்த்தாபிஷேசினி
பாவனே சுரபி சிரேஷ்டே தேவி துப்யம் நமோஸ்துதே.
அரசமர வழிபாட்டு மந்திரம்
அரச மரததை தரிசனம் செய்யும் போது கீழ்க்கண்ட மந்திரத்தை கூறி வழிபட நன்மைகள் விளையும்.
மூலதோ பிரம்மரூபாய மத்யதோ விஷ்ணுரூபிணே
அக்ரதஸ் சிவரூபாய வ்ருக்ஷ ராஜாயதே நம:
ஆயுர்பலம் யசோவர்ச்ச: ப்ரஜா: பசு வஸுநிச
ப்ரம்ம ப்ரக்ஞாம் சமேதாம் சத்வம் நோதேஹி வனஸ்பதே.
வில்வ மரவழிபாட்டு மந்திரம்
வில்வ மரத்தை தரிசனம் செய்யும்போது கீழ்க்கண்ட மந்திரத்தை கூறி வழிபட இறை அருள் கிட்டும்
தர்சனம் பில்வ வ்ருக்ஷஸ்ய
ஸ்பர்சனம் பாபநாசனம்
அகோர பாபஸம் ஹாரம்
ஏக பில்வம் சிவார்ப்பணம்.
செல்வம் பெருக மந்திரம்
108 முறை சொல்லவும்
லக்ஷ்மீ-பதே கமல-நாப
ஸுரேஸ விஷ்ணோ
வைகுண்ட க்ருஷ்ண
மதுஸூதன புஷ்கராக்ஷ
ப்ரஹ்மண்ய கேஸவ
ஜனார்தன வாஸுதேவ
லக்ஷ்மீ - ந்ருஸிம்ஹ
மம தேஹி கரா வலம்பம்.
மேற்கண்ட மந்திரத்தை லக்ஷ்மி நரசிம்மரை வழிபட்டு ஜெபிக்கவும்.
மாலையில் தீபம் ஏற்றும் போது கூற வேண்டிய மந்திரம்
மாலை நேரத்தில் பூஜை அறையில் விளக்கேற்றும் போது கீழ்க்கண்ட மந்திரத்தை கூறி விளக்கேற்றினால் சகல சுகமும் உண்டாகும்.
சிவம் பவது கல்யாணம்
ஆயுராரோக்ய வர்த்தனம்
மம: துக்க வினாசாய
ஸந்த்யா  தீபம் நமோ நம:
கெட்ட கனவு பரிகார மந்திரம்
நீங்கள் தூங்கும் போது கெட்ட சொப்பனங்கள் ஏற்பட்டால் கீழ்க்கண்ட மந்திரத்தை 5 முறை கூறினால் பரிகாரம் ஏற்படும்.
ஓம் ஸ்ரீ கோவிந்தன நமஹ
வேலை கிடைக்க மந்திரம்
ஸ்ரீ தேவி ஹி அம்ருதோத்
பூதா-கமாலா-சந்த்ரசேபாநா
விஷ்ணு-பத்னீ வைஷ்ணவீச
வராஹோஹச்ச ஸார்ங்கிணீ
ஹரி-ப்ரியா தேவ-தேவி
மஹாலக்ஷ்மீ ச ஸுந்தரீ
ஸ்ரீலக்ஷ்மி தாயை வழிபட்டு மேற்கொண்ட மந்திரத்தை 21 முறை ஜெபிக்கவும்.
நாளும், கோளும் நல்லன ஆக மந்திர்ம
நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே
ஆளாய அன்பு செய்வோம் மடநெஞ்சே அரன் நாமம்
கேளாய் நங்கிளை கிளைக்குங் கேடுபடாத் திறம் அருளிக்
கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமானே.
சிவபெருமானையும், அம்பாளையும், வழிபட்டு 5முறை மேற்கண்ட மந்திரத்தை ஜெபிக்கவும்.
சுப மங்களங்கள் உண்டாக மந்திரம்
பிரம்மா முராரி:
த்ரிபுராந்தகஸ்ச
பாநுஸ்ஸீ பூமிஸுதோ புதஸ்ச
குருஸ்ச ஸுக்ர:
ஸநி-ராகு-கேதவ:
குர்வந்து ஸர்வே
மம ஸுப்ரபாதம்
மேற்கண்ட மந்திரத்தை காலை வேளையில் 21 முறை ஜெபித்து வர சுப மங்களங்கள் ஏற்படும்.
விதியை வெல்ல மந்திரம்
தங்குவர் கற்பகத் தாருவின் நீழிலில் தாயரின்றி
மங்குவர் மண்ணில் வழுவாய் பிறவியை மால் வரையும்
பொங்குவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்திக்
கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.
ஞானமூர்த்தி நாள் வழிபாட்டு மந்திரங்கள்
அஷ்ட புஷ்பாஞ்சலி
ஓம் பவாய தேவாய நம:
ஓம் பவஸ்ய தேவஸ்ய பத்ன்யை நம:
ஓம் ஸர்வாய தேவாய நம:
ஓம் ஸர்வஸ்ய தேவஸ்ய பத்ன்யை நம:
ஓம் ஈசானாய தேவாய நம:
ஓம் ஈசானஸ்ய தேவஸ்ய பத்ன்யை நம:
ஓம் பசுபதயே தேவாய நம:
ஓம் பசுபதஸ்ய தேவஸ்ய பத்ன்யை நம:
ஓம் ருத்ராய தேவாய நம:
ஓம் ருத்ரஸ்ய தேவஸ்ய பத்ன்யை நம:
ஓம் உக்ராய தேவாய நம:
ஓம் உக்ரஸ்ய தேவஸ்ய பத்ன்யை நம:
ஓம் பீமாய தேவாய நம:
ஓம் பீமஸ்ய தேவஸ்ய பதன்யை நம:
ஓம் மஹதே தேவாய நம:
ஓம் மஹாதேவஸ்ய பத்ன்யை நம:
அஷ்ட அர்க்கியம்
ஓம் பவம் தேவம் தர்ப்பயாமி
ஓம் பவஸ்ய தேவஸ்ய பத்ன்யை ஸ்வாஹா
ஓம் ஸர்வம் தேவம் தர்ப்பயாமி
ஓம் ஸர்வஸ்ய தேவஸ்ய பத்ன்யை ஸ்வாஹா
ஓம் ஈசானம் தேவம் தர்ப்பயாமி
ஓம் ஈசானஸ்ய தேவஸ்ய பத்ன்யை ஸ்வாஹா
ஓம் பசுபதயே தேவம் தர்ப்பயாமி
ஓம் பசுபதஸ்ய தேவஸ்ய பத்ன்யை ஸ்வாஹா
ஓம் ருத்ரம் தேவம் தர்ப்பயாமி
ஓம் ருத்ரஸ்ய தேவஸ்ய பத்ன்யை ஸ்வாஹா
ஓம் உக்ரம் தேவம் தர்ப்பயாமி
ஓம் உக்ரஸ்ய தேவஸ்ய பத்ன்யை ஸ்வாஹா
ஓம் பீமம் தேவம் தர்ப்பயாமி
ஓம் பீமஸ்ய தேவஸ்ய பத்ன்யை ஸ்வாஹா
ஓம் மஹதே தேவம் தர்ப்பயாமி
ஓம் மஹா தேவஸ்ய பத்ன்யை ஸ்வாஹா
பஞ்ச கற்பூர ஆரத்தி
ஓம் ராஜாதிராஜாய பிரசஹ்ய சாஹினே நமோவயம் வைஸ்ரவனாய குர்மஹே ஸமேகமான் காம காமாய மஹ்யம் ! காமேஸ்வரோ வைஸ்ரவனோத தாது ! குபேராய வைஸ்ரவனாய மகாராஜய நம:
மந்த்ர புஷ்பம்
யோ பாம் புஷ்பம் வேத புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி சந்த்ரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவான் ப்ரஜவான் பசுமான் பவதி எ ஏவம் வேத ஆயதனம் வேத ஆயதனவான் பவதி
ஓம் வேதாதௌஸ்வர : ப்ரோக்தோ வேதாந்தேச ப்ரகடித : தஸ்ய ப்ரக்ருதி நஸ்ய:ய: பரஸ்ஸ மஹேஸ்வர
ஓம் கௌரி மிமாய ஸலிலானி தக்ஷத்யேகபதீ த்விபதிஸா சதுஷ்பதீ அஷ்டாபதி நவபதி பபூஷஷி க்ஷரா பரமே வ்யோ மன்
சதுர்வேதம்
ஓம் அக்னி மீளே புரோஹிதம் யஜ்ஞஸ்ய தேவம்ருத் விஜம் ஹோதாரம் ரத்னதாதமம்
ஓம் இஷேத்வோர்ஜேத்வா வாயவஸ்ஸத்தோபாய வஸ்த்த தேவோ வஸ்ஸவிதா ப்ரார்ப்பயது ச்ரேஷ்ட்டதமாய கர்மணே
ஓம் அக்ன ஆயாஹி வீதயே க்ருணானோ ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஓம்சந்ரோதே வீரபீஷ்டய ஆபோ பவந்து பீதயே சம்யோரபிஸ்ரவந்து ந:
க்ருஹ்ய சூத்ரம்
ஓம் அதோதோ தர்ச பூர்ணமா ஸவ்யாக்யா ஸ்யாமஹ ப்ராதர் அக்னிஹோத்ரம் ஹுத்வா அன்ய மாஹம்ருணீயம் ம்ருண்ய அக்னே நன்வா ததாதி நஹ்ஸ்யோன்ய மக்னிம் ப்ரணயதி
இதிகாச புராணம்
ஓம் ஆஜ்யம் புருஷ மீசானம் புருஹுதம் புரஷ்க்ருதம்
பரமேகாக்ஷரம் ப்ரும்ம வ்யக்தா வ்யக்தம் சநாதனம்
ஸ்வஸ்தி வாசகம்
ஓம் ஸ்வஸ்தி ந இந்த்ரோ வ்ருத்தஸ்வா; ஸ்வஸ்திந: புஷா விஸ்வ வேதா
ஸ்வஸ்திநதார்ச்யோ அரிஷ்டநேமி: ஸ்வஸ்தினோ ப்ருஹஸ்பதிர் தாதது:
பஞ்சாட்சர ஸ்தோத்திரம்
ஓம் சிவலிங்கம்மணிஸ்ஸாக்ஷõது மந்த்ர: பஞ்சாட்சர சுத:
பூதரே ஒளஷதம் பும் சாந் த்ரிவிதம் முக்தி காரணம்
சிவஞான போதம்
ஓம் ஸ்த்ரிபும் நபும்சகா தத்வாது ஜகத: கார்ய தர்ஸனாது
அஸ்தி கர்த்தா சஹ்ருதவைதது ஸ்ருஜத்யஸ்மாத ப்ரபுர் ஹர:
தலமான்மியம்
விஸ்வஞ்ஞானம் சிவஞ்ஞானம் சர்வக்ஞானப் ரதாயகம்
ஆனந்த மயஞ்ஞானம் ஞானமூர்த்திம் சிவம் பஜே
ஞானசக்திம் ப்ராணசக்திம் சர்வ சக்திப் ரகாசிநீம்
சக்திசித் வியாபிநீம் தேவீம் ஞானாம்பிகாம் சிவாம் பஜே
பஞ்சாங்க ச்ரவணம்
திசேச்ச ச்ரியமாப்னோ தீவாராதாயுஷ்ய வர்த்தனம்
நட்சத்ராது ஹரதே பாபம் யோகாது ரோக நிவாரணம்
கரணாது கார்ய சித்திஞ்ச பஞ்சாங்கம் பலமுத்தமம்
வியோம வியாபி பரசிவ ப்ரம்மாத்மகம் மானசம்
ச்ருஷ்டி ஸ்திதி அதிகார போகம் அமலம் பாவாத்மகம் வாசிகம்
லோக÷க்ஷம சுரட்சண பாலனம் ஸ்வாபேட்ச சித்தா ரச்ரிதம்
வந்தே சுந்தர பரசிவ குடிலம் சித்தேச்வரம் சாச்வதம்
வாழ்த்து
ஞானநன் மறைகள் வாழ்க நற்றவம் வேள்வி வாழ்க
ஞானநல் லன்னை யோடும் ஞானநல் மூர்த்தி வாழ்க
ஊனமில் லரசு மன்னி உயர்தனிச் செங்கோ லோச்ச
வானநல் வளங்கள் ஆர்ந்து வையகம் வாழ்க ! வாழ்க !!

சீரடி சாயி பாபாவின் 9 வியாழக்கிழமை விரத மகிமை!

சப்த சப்தாஹா சாயி சரித்திர பாராயண விவரம் : துர்லபம் த்ரயேமே வைதத், தெய்வானுக்கிரக ஹேத்துகம் மனுஷ்யத்தயம் முமுக்ஷத்வம் மஹாபுருஷ ஸம்சயம்.

சீரடி சாயி சத்சரித்திர பாராயணத்தையும், விரத பூஜையையும் 67 நாட்களிலோ (சப்த சப்தாஹா) அல்லது ஒரு நாளில் குறிப்பிட்ட அத்தியாயங்கள்

என கணக்கில் கொண்டு 9 நாட்களிலோ முடிக்க வேண்டும். கடவுளால் படைக்கப்பட்ட 84 லட்சம் ஜீவராசிகளிலேயே மிகவும் உன்னதமானது மனித ஜென்மம். அவனால் மட்டுமே இதே மனித ஜென்மத்தில் தனது மனதைக் கட்டுப்படுத்தி ஆத்ம ஞானத்தை பெறும் அவகாசமிருக்கிறது. தேவதைகள் கூட ஒரு தடவையாவது பூலோகத்தில் மனித ஜென்மம் எடுப்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்களாம். ஆதலால், இந்த மனித ஜென்மம் எவ்வளவு விசேஷமானது என்று நினைத்துப் பாருங்கள். சாயிநாதரின் சேவையில் ஜீவன் முக்திப் பெறுவதற்கு முயற்சிக்கலாம். சாயி நாதரின் பிள்ளைகளாகவே இருந்து இந்த ஜென்மத்தில் முக்தியடையலாம்.

சீரடி சாயி நாதரை மனதில் தியானித்து செய்யப்படும் 9 வியாழக்கிழமை விரதம் மற்றும் சப்த சப்தாஹா பாராயணத்தையும் செய்து முடிக்கும் போது

தங்களால் இயன்ற காணிக்கையை பக்தி சிரத்தையுடன் சாயி பாபாவிற்கு சமர்ப்பிக்க வேண்டும். இப்பூஜையை சுயமாகவோ அல்லது ஆச்சார்யரின் துணையுடனோ நமது வீட்டிலேயே செய்து சாயி நாதரின் ஆசீர்வாதம், அனுக்ரஹம், ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், பக்தி, ஞான வைராக்கியமும் பெற்று பிரம்மானந்தத்தைப் பெறலாம்.

சீரடி சாயி நாதரின் விரத பூஜைக்குத் தேவையானப் பொருட்கள்: பூஜை சாமான்கள் : மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி, அக்ஷதை, பஞ்சபாத்திரம், உத்தரணி, மணி, கலசம் அல்லது பெரிய டம்ளரில் தீர்த்தம், அகர்பத்தி, தீப்பெட்டி, தீப ஆராதனைக்கு பசு நெய் அல்லது நல்லெண்ணெய், தேங்காய், பூ, பழங்கள், பிரசாதம் இவை எல்லாம் வைக்க இரண்டு பெரிய தட்டுகள், அவசியமென்றால் கை துடைக்க துணி வைத்துக் கொள்ளலாம்.

காளியை வணங்கும் முறை (ராகுதோஷம் நீங்க )


ராகு திசை நடக்கும் போதோ, ராகு பெயர்ச்சியால் ஒருவரது செயல்பாடுகள் பாதிக்கும் போதோ, நமது பணிகளில் பிறரது தலையீடு தேவையின்றி வரும்போதோ, அவர்கள் நம் பக்கமே வராமல் இருக்கவோ காளிக்கு நாமாகவே அர்ச்சனை செய்யலாம். குறிப்பாக, நவராத்திரி காலத்தில் இதைச் செய்தால் மிகவும் நல்லது.எண் கணிதப்படி ராகுவுக்குரிய எண் 4. இந்த எண் தடைகளை  தரும் என்பது நம்பிக்கை. எனவே தான் 22 (கூட்டினால் 4) ஸ்லோகம் கொண்ட அர்ச்சனையை காளிக்காக வடித்துள்ளதாக கருத வேண்டியுள்ளது. இந்த ஸ்லோகத்தை வீட்டில் மாரியம்மன் அல்லது துர்க்கை படம் முன் அமர்ந்து சொல்லலாம். கொலு வைத்திருந்தால் மேடை முன் அமர்ந்து சொல்லலாம். இந்த ஸ்லோகத்தைச் சொல்லும்போது, செவ்வரளி மலர்களை தூவ வேண்டும்.

ஓம் காள்யை நம:
ஓம் க்ருஷ்ண ரூபாயை நம:
ஓம் பராத்மகாயை நம:
ஓம் முண்டமாலாதராயை நம:
ஓம் மஹாமாயாயை நம:
ஓம் ஆத்யாயை நம:
ஓம் கராளிகாயை நம:
ஓம் ப்ரேதவாஹாயை நம:
ஓம் ஸித்தலக்ஷ்மையை நம:
ஓம் கால ஹராயை நம:
ஓம் ப்ராஹ்மை நம:
ஓம் நாராயண்யை நம:
ஓம் மாஹேஸ்வர்யை நம:
ஓம் சாமுண்டாயை நம:
ஓம் கவுமார்யை நம:
ஓம் அபராஜிதாயை நம:
ஓம் வராஹ்யை நம:
ஓம் நாரஸிம்ஹாயை நம:
ஓம் கபாலின்யை நம:
ஓம் வரதாயின்யை நம:
ஓம் பயநாசின்யை நம:
ஓம் ஸர்வ மங்களாயை நம: