Thursday, May 14, 2015

கடவுளிடம் வேண்டியது பணிவா? பயமா?

பயபக்தி என்றே சொல்வார்கள். கடவுள் தண்டிப்பவர் என்ற எண்ணத்தால், பக்தி முதலில் பயத்துடன் தொடங்கும். ஆனால், மனம் பக்குவம் பெற்ற  பின், எல்லாம் அவன் செயல் என்ற எண்ணம் உண்டாகும். அப்போது பயம் பணிவாக மாறி விடும். இதை திருவள்ளுவர், கற்றதனால் ஆய பயனென் கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் என்று குறிப்பிடுகிறார். 

பெற்றோரை மதிக்காதவன் தெய்வத்தை வணங்கினால் பலன் உண்டா?

பெற்றோருக்கு சேவை செய்த ஹரிதாஸ் என்ற பக்தரை எதிர்பார்த்து, பாண்டுரங்கன் காத்திருந்ததாக வரலாறு கூறுகிறது. கண்கண்ட தெய்வமான  பெற்றோரை மதிக்காமல் கடவுள் மீது பக்திசெலுத்துவதால் பயனில்லை. மாத்ரு தேவோ பவ; பித்ரு தேவோ பவ என்கிறது வேதம். இதையே அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம் என்கிறார் அவ்வையார். பெற்றோருக்குப் பணிவிடை செய்வது பிள்ளைகளின் கடமை.

திருமண வீட்டில் தேங்காய் கொடுத்து அனுப்புவது ஏன்?

சுபநிகழ்ச்சிக்கு அழைக்கும்போதும், வழியனுப்பும் போதும் லட்சுமியின் அம்சமான வெற்றிலை,பாக்கு கொடுப்பது வழக்கம். இதனை தாம்பூலம் என்பர். சுபநிகழ்ச்சிகளுக்கு வரும் உறவினர்கள் மீண்டும் இன்னொரு சுபவிஷயத்தில் சேர வேண்டும்  என்பதற்காக இவ்வாறு தரும் வழக்கம் உருவானது.  தாம்பூலத்தோடு தேங்காய், பழம், இனிப்பு, சாக்லெட் சேர்த்து கொடுத்ததெல்லாம் பிற்காலத்தில்!.  தற்போது வெற்றிலை, பாக்கு வழக்கம் குறைந்து விட்டதால் தேங்காய், பிஸ்கட்,  தின்பண்டங்கள் கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.

Sunday, May 10, 2015

வீட்டில் விளக்கேற்றி இருக்கும் போது வாசலை மூடக் கூடாதா?

தலை வாசலைத் திறந்து வைப்பதோடு, கொல்லைப்புறத்தைப் பூட்டிய பிறகே விளக்கேற்ற வேண்டும். அப்போது திருமகள் வீட்டுக்கு வருவதாக ஐதீகம். அவள் வீட்டில் தங்க வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறார்கள். 

விரைவில் சொந்த வீடு அமைய வேண்டுமா?

சிவபெருமான், பார்வதி தேவியிடம் கருத்து வேறுபாடு கொள்வது போல் திருவிளையாடல் நிகழ்த்தி, அவளைப் பிரிந்து தியானத்தில் ஆழ்ந்தார். அப்போது அவரின் உடம்பில் அரும்பிய வியர்வை பூமியில் விழுந்து குழந்தையாக மாறியது. அக்குழந்தைக்கு மங்களன் என பெயரிட்டு பூமாதேவி வளர்த்தாள். மங்களனும் தவத்தில் ஈடுபட்டு கிரகபதவி பெற்றான். அவனே செவ்வாய் என வழங்கப்படுகிறான். இதற்கு ரத்தம் போல சிவந்த நிறம் கொண்டவன் என்பது பொருள். ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்று இருந்தால், நிலபுலம், வீடுவாசல் அமையும் யோகமுண்டாகும். செவ்வாய் பலமற்றவர்கள், சிவப்பு நிற மலர்களால் செவ்வாயை அர்ச்சித்து வர விரைவில் சொந்தவீடு அமையும்.

நீதி தெய்வம் காளி!

காளி வழிபாடு பழமையானது. சங்க காலத்தில் பாலை நில மக்கள் கொற்றவை என்னும்பெயரில் காளியை வழிபட்டனர். கிராமங்களில் செல்லியம்மன், எல்லையம்மன், பிடாரியம்மன், வடக்குவாசல் செல்வி  என்றெல்லாம் காளியே வழிபடப்படுகிறாள். காஷ்மீரில் வைஷ்ணவி,  ராஜஸ்தானில் பவானி, வங்காளத்தில் காளி,  கர்நாடகத்தில் சாமுண்டி, கேரளத்தில் பகவதி என்ற பெயர்கள் இவளுக்கு வழங்கப்படுகிறது. நீதிதெய்வமான காளியை வழிபட்டால் நியாயம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பெற்றோரை மதிக்காதவன் தெய்வத்தை வணங்கினால் பலன் உண்டா?

பெற்றோருக்கு சேவை செய்த ஹரிதாஸ் என்ற பக்தரை எதிர்பார்த்து, பாண்டுரங்கன் காத்திருந்ததாக வரலாறு கூறுகிறது. கண்கண்ட தெய்வமான  பெற்றோரை மதிக்காமல் கடவுள் மீது பக்திசெலுத்துவதால் பயனில்லை. மாத்ரு தேவோ பவ; பித்ரு தேவோ பவ என்கிறது வேதம். இதையே அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம் என்கிறார் அவ்வையார். பெற்றோருக்குப் பணிவிடை செய்வது பிள்ளைகளின் கடமை.