Sunday, September 23, 2012

மணமேடையில் மறைந்தவர்கள்!

திருமணவிழாவில் மணமேடையில் பெண்ணும் மாப்பிள்ளையும் அமர்ந்திருப்பர். ஆனால், மறைந்த நம் முன்னோர்களுக்கும் இம் மேடையில் இடம் தரப்படும். முன்னோர்களின் ஆசி பெற்ற பின்னரே, மாப்பிள்ளை மணமகளின் கழுத்தில் மாங்கல்யத்தைச் சூட்டவேண்டும் என்பது நியதி. மணமேடையில் பிதுர்களை வணங்குவதற்கு நாந்தி சிரார்த்தம் என்று பெயர். சிலர் மணமேடையில் இதனைச் செய்யாமல் திருமண முகூர்த்தத்திற்கு முதல் நாள் இரவு வீட்டில் வீட்டுச் சாமி கும்பிடுதல் என்னும் பெயரில் திருமாங்கல்யம், முகூர்த்தப்புடவை ஆகியவற்றை முன்னோர்களுக்குப் படைத்து வழிபாடு செய்வர். சீதா, சாவித்ரி, நளாயினி, அனுசூயா, கண்ணகி, சந்திரமதி போன்ற கற்புக்கரசிகளின் திருமணங்கள் எல்லாமே பிதுர் வழிபாட்டுடனேயே நடந்தன.

No comments:

Post a Comment