Monday, November 3, 2014

ஜோதிடம் அடிப்படை

1 நாழிகை = 24 நிமிடம்
2 1/2 நாழிகை = 1 மணி
3 3/4 நாழிகை = 1 முகூர்த்தம்
7 1/2 நாழிகை = 2 முகூர்த்தம் = 1 ஜாமம்
8 ஜாமம் = 1 நாள் (பகல் + இரவு சேர்ந்து)
7 நாள் = 1 வாரம்
15 நாள் = 1 பக்ஷம் (பட்சம்)
2 பக்ஷம் = 1 மாதம்
2 மாதம் = 1 ருது (பருவம்)
3 ருது = 1 ஆயனம்
2 ஆயனம் = 1 வருடம்
நமது வான மண்டலத்தில் குறிப்பாக நமது சூரிய மண்டலத்தில் இருபத்தியேழு நட்சத்திர மண்டலங்கள் உள்ளன அவை பன்னிரண்டு ராசி மண்டலங்களுக்குள் உள்ளன. இந்த பன்னிரண்டு ராசி மண்டலங்களும் பன்னிரண்டு மாதங்களை குறிக்கின்றன. ஒரு நட்சத்திர மண்டலம் நான்கு பாவங்களாக (முதலாம் பாவம், இரண்டாம் பாவம், மூன்றாம் பாவம், நான்காம் பாவம் ) பகுக்கப்பட்டுள்ளன. ஒரு ராசி மண்டலமானது ஒன்பது பாவங்களை கொண்டது.
அதாவது 27×4= 108 108/12=9 அதாவது ஒன்பது நட்சத்திர பாதங்கள் கொண்டது ஒரு ராசி. ஒரு நட்சத்திரம் 4 பாதம் என்றால் ஒரு ராசியில் 3 நட்சத்திரங்களின் பாதங்கள் இருக்கும்
ராசிகள்                    நட்சத்திரங்கள்
மேஷம்           - அசுவினி, பரணி, கார்த்தி கை 1-ஆம் பாதம் முடிய
ரிஷபம்           - கார்த்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரிஷம் 2-ஆம் பாதம் முடிய
மிதுனம்         - மிருகசிரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய
கடகம்            - புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய
சிம்மம்           - மகம், பூரம் உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
கன்னி             - உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய
துலாம்            - சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய
விருச்சிகம்    - விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய
தனுசு             - மூலம், பூராடம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
மகரம்            - உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய
கும்பம்          - அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய
மீனம்            - பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய
.
நட்சத்திர அதிபதிகள்
அஸ்வினி - கேது
பரணி - சுக்கிரன்
கார்த்திகை - சூரியன்
ரோகிணி - சந்திரன்
மிருகசீரிஷம் - செவ்வாய்
திருவாதிரை - ராகு
புனர்பூசம் - குரு (வியாழன்)
பூசம் - சனி
ஆயில்யம் - புதன்
மகம் - கேது
பூரம் - சுக்கிரன்
உத்திரம் - சூரியன்
அஸ்தம் - சந்திரன்
சித்திரை - செவ்வாய்
சுவாதி - ராகு
விசாகம் - குரு (வியாழன்)
அனுஷம் - சனி
கேட்டை - புதன்
மூலம் - கேது
பூராடம் - சுக்கிரன்
உத்திராடம் - சூரியன்
திருவோணம் - சந்திரன்
அவிட்டம் - செவ்வாய்
சதயம் - ராகு
பூரட்டாதி - குரு (வியாழன்)
உத்திரட்டாதி - சனி
ரேவதி - புதன்
ஜோதிட கணிதம்
இந்த ஜோதிட கணித பகுதி கணக்கில் சம்பந்த பட்டது. இது நவாம்சம், பாவம், திரிகோணம், துவதாம்சம், சப்தாம்சம், தசாம்சம், திசை, புக்தி, அஷ்டவர்க்கம் போன்ற கணிதங்களையும், சுப கிரகங்கள், அசுப கிரகங்கள், கிரக பார்வைகள், சுப பார்வைகள், அசுப பார்வைகள், கூட்டு கிரகங்கள், பரிவர்த்தனைகள், வர்கோத்தமம், கிரகங்களின் செயல், ஆட்சி கிரகங்கள், உச்சம் பெற்ற கிரகங்கள், நீச்சம் பெற்ற கிரகங்கள், பகை பெற்ற கிரகங்கள், சமம் பெற்ற கிரகங்கள் போன்றவற்றின் செயல்பாடுகளை பற்றியும் எழுதப்படும்.
ராசி அதிபதிகள்
இயற்கையான சுபகிரகங்கள்
   குரு, சுக்கிரன், தீய கிரகங்களுடன் சேராத புதன், வளர்பிறைச் சந்திரன்.
இயற்கையான அசுபகிரகங்கள்
             சூரியன், செவ்வாய், சனி, இராகு, கேது, தீய கிரகங்களுடன் சேர்ந்த புதன், தேய்பிறைச் சந்திரன்.
லக்ன அடிப்படையிலான சுப, அசுப கிரகங்கள்
ஒவ்வொருவரின் ஜென்ம லக்னத்திற்கு ஏற்ப கிரகங்களின் சுப, அசுபத் தன்மை மாறுபடுகிறது
லக்னம்
சுபர்
அசுபர்
மாரகர்
மேஷம்
சூரியன், குரு
புதன், சனி
புதன், சனி
ரிஷபம்
சூரியன், புதன், சனி
சந்திரன், குரு, சுக்கிரன்
சந்திரன், குரு, செவ்வாய்
மிதுனம்
குரு, சுக்கிரன், சனி
சூரியன், செவ்வாய், குரு
சூரியன், செவ்வாய், குரு
கடகம்
செவ்வாய், குரு
புதன், சுக்கிரன்
புதன், சுக்கிரன்,சனி
சிம்மம்
சூரியன், சுக்கிரன் செவ்வாய்
புதன், சுக்கிரன்
சுக்கிரன், சனி, புதன்
கன்னி
புதன், சுக்கிரன்
சந்திரன், குரு, செவ்வாய்
சந்திரன், குரு, செவ்வாய்
துலாம்
புதன், சுக்கிரன்,சனி
சூரியன், செவ்வாய், குரு
சூரியன், குரு
விருச்சிகம்
சூரியன், சந்திரன்,குரு
செவ்வாய்,புதன், சுக்கிரன்
புதன், சுக்கிரன்
தனுசு
சூரியன், செவ்வாய், புதன்
சுக்கிரன்
புதன், சுக்கிரன்
மகரம்
செவ்வாய், புதன், சுக்கிரன்
சந்திரன், குரு
சந்திரன், குரு
கும்பம்
சுக்கிரன், புதன், சனி
சந்திரன், செவ்வாய் ,குரு
சந்திரன், செவ்வாய்
மீனம்
சந்திரன், செவ்வாய்
சூரியன்,சுக்கிரன், சனி,புதன்
சூரியன், சுக்கிரன்,சனி, புதன்
லக்ன கேந்திரத்திம்  (1,4,7,10)
லக்ன கேந்திரத்தில் இயற்கையான அசுப கிரகங்கள் சுப கிரகங்களாகிறது. இயற்கையான சுப கிரகங்கள் லக்ன கேந்திரத்தில் நன்மைகள் செய்தாலும் சில கிரகங்கள் பலன் தருவதில்லை.
திரிகோணம் (1,5,9 ஆகிய வீடுகள்) 
சுப கிரகங்கள் திரிகோணத்தில் அமரும்போது சிறப்பான பலன்கள் அடையும் என்பது பொது விதி
பணபர ஸ்தானம்  (லக்னத்தில் இருந்து 2,5,8,11) 
இதில் இரண்டாமிடம் ஒருவரின் பண வருவாய் விகிதத்தினை சொல்கிறது,
ஐந்தாமிடம் ஒருவர் முற்பிறவியில் செய்த நல்வினை சார்ந்து இப்பிறவியில் ஏற்படும் தனயோகத்தினை குறிப்பிடுகிறது.
எட்டாமிடம் எதிர்பாராத மற்றும் மறைவான தனங்களை சுட்டி காட்டுகிறது. பதினொன்றாம் இடம் தனது தொழில் மற்றும் உத்தியோகம் மூலம் ஏற்படும் தனவரவு மற்றும் லாபத்தினை குறிக்கிறது.
உபஜெய ஸ்தானம் (லக்னம் முதல் 3,6,10,11 )
இயல்பாகவே ஒருவருக்கு மூன்றாமிடம் தைரியத்தை பற்றியும், ஆறாமிடம் எதிரிகள், நோய், பகை என்பதை பற்றியும், பத்தாமிடம் ஒருவரின் கர்மம் என்ற கடமை மற்றும் செயல்பாடு பற்றியும், பதினொன்றாமிடம் ஒருவர் அடையும் லாபத்தினை பற்றியும் ஜோதிடம் கூறுகிறது.
மறைவு ஸ்தானம் (லக்னம் முதல் எண்ணி வர 3, 6, 8, 12)
இந்த மறைவு ஸ்தானம் அசுப கிரகங்களை கொண்டிருந்தால் நல்ல பலனை தருகிறது. நல்ல கிரகங்கள் மறைவு ஸ்தானத்தில் அமர்ந்தால் சுப பலன்கள் மங்கிவிடுகிறது.
ஆட்சி பெற்ற கிரகங்கள் 
ஒரு ராசியின் சொந்த காரர் தனது  ராசியில் தனியாக (வேறு கிரக சேர்க்கை இல்லாமல் ) தங்கி இருக்கும்போது அதிக பலமுடனும், தனது ஸ்தானத்திற்கு நல்ல பலன்களை அள்ளி தரும்.
செவ்வாய்  -   மேஷம், விருச்சிக ராசிகளுக்கு சொந்தகாரர்
புதன்          -     மிதுனம், கன்னி  ராசிகளுக்கு சொந்தகாரர்
குரு           –      தனுசு, மீன ராசிகளுக்கு சொந்தகாரர்
சுக்கிரன்     –    ரிஷபம், துலாம்  ராசிகளுக்கு  சொந்தகாரர்
சனி          -       மகரம், கும்ப வீட்டிற்கு சொந்தக்காரர்
சந்திரன்   –       கடக ராசிக்கு சொந்தக்காரர்
சூரியன்   -       சிம்ம ராசிக்கு சொந்தக்காரர்
ராகு கேது ஆகிய இரு நிழல் கிரகங்களுக்கு சொந்த வீடு கிடையாது.
௧. ஒரு கிரகம் தனது ஆட்சி வீட்டில் வக்கிரம் பெறலாம் (பொது விதி)
௨. ஒரு கிரகம் ஆட்சி வீட்டில் ராகு கேதுவுடன் சேர்ந்து அஸ்தங்க தோஷம் அடைந்தால் நல்ல பலன் தர இயலாது.
௩. இரு கிரகங்கள் நல்ல நிலையில் ஆடசி பெற்றால் ஒரு சாதகன் பூபதி போல் வாழ்வான்
என ஜோதிட கலை கூறுகிறது.
உச்சம் பெற்ற கிரகங்கள்
ஒரு உச்சம் பெற்ற கிரகம், பகை பெற்ற ஒரு கிரகத்தின் நட்சத்திர காலில் (நட்சத்திரத்தில் பிறந்த ) உருவானதாக இருந்தால் பலன் இல்லை. இரு உச்ச கிரகங்கள் ஒருவரை ஒருவர் பார்த்தாலோ பரிவர்த்தனை கொண்டாலோ துன்பமே. நீட்ச வீட்டின் எதிர் வீடு உச்சவீடாகும். நல்ல கிரகங்கள் நல்ல இடத்தில (6,8,12,தவிர) உச்சம் பெற்றால் சுபம். கெட்ட கிரகங்கள் கெட்ட இடத்தில உச்சம் பெறுவதும் நல்லது
சூரியன்  -   மேஷத்தில் உச்சம்
சந்திரன்  -  ரிஷப ராசியில் உச்சம்
குரு        -    கடகத்தில் உச்சம்
புதன்      =    கன்னி ராசியில் உச்சம்சுக்கிரன் –    மீன ராசியில் உச்சம்சனி         –    துலா ராசியில் உச்சம்ராகு        -    ரிஷபத்தில் உச்சம்கேது       –     விருட்சிகத்தில் உச்சம்.
சில ஜாதகருக்கு உச்சம் பெற்ற கிரகம் தனது திசை புக்தியில் கூட செயல் இல்லாமல் இருப்பதை பார்க்க முடியும். அதாவது உச்சம் பெற்றும் பலன் இல்லை என்பது போல்…அதற்க்கு டிகிரி கணிதம் என்று ஒன்று உள்ளது. அதாவது ஒவ்வொரு கிரகமும் ஒரு ராசியில் எந்த டிகிரியில் உச்சம் பெறுகிறது என்பதை பொறுத்து உச்ச கிரகத்தின் நல்ல பலன் அமையும். 
நீச்சம் பெற்ற கிரகங்கள்
உச்சத்தின் எதிர்விளைவு நீச்சம். உச்ச கிரகங்கள் நன்மை செய்கின்றது என்றால் நீட்ச கிரகங்கள் தீமை செய்யும். ஆனால் சில இடங்களில் (லக்னத்திற்கு இத்தனையாவது வீடு என்ற கணக்கில்) நீச்ச கிரகங்கள் நன்மையும் செய்யும். நீச்சம் பெற்ற கிரகம் உள்ள ராசியின் அதிபதி ராசியிலோ அல்லது அம்சத்திலோ ஆட்சி,  உச்சம், லக்ன கேந்திரம் என்ற அமைப்பினை பெற்றால் அதுவே நீச்ச பங்க ராஜயோகம் என்று பொருள்.
சூரியன்       – துலாம் ராசியில் நீச்சம்
சந்திரன்      - விருச்சிகம்  ராசியில் நீச்சம்
செவ்வாய்  - கடக ராசியில் நீச்சம்
புதன்           – மீன ராசியில் நீச்சம்
குரு             – மகர ராசியில் நீச்சம்
சுக்கிரன்     -கன்னி ராசியில் நீச்சம்
சனி            - மேஷ ராசியில் நீச்சம்
ராகு           -விருச்சிக ராசியில் நீச்சம்
கேது          -ரிஷப ராசியில் நீச்சம்
மூலதிரிகோணம்
திரிகோணம் என்பதற்கும் மூலதிரிகோணம் என்பதற்கும் ஜோதிடத்தில் உள்ள வித்தியாசம் என்ன வென்றால் திரிகோணம் என்பது லக்னம் மற்றும் ராசியில் இருந்து எண்ணிவர முறையே 1,5,9 இடங்களாகும். ஆனால் மூலதிரிகோணம் என்பது ஒவ்வொரு கிரகத்திற்கும் ஆட்சி உச்சம் பெறும் அமைப்பை போன்று இந்த மூலதிரிகோண அமைப்பு ஏற்படுகிறது. அதாவது ஒரு கிரகத்திற்கு மூலதிரிகோண வீடு ஒரு வீடு மட்டுமே. ஆட்சி, உச்சம், மூலதிரிகோணம் ஆகியவை ஒரு ஜாதகருக்கு நன்மை செய்வதில் ஒன்றை விட ஒன்று உயர்ந்தது.
இப்போது ஒரு கிரகத்தின் மூலதிரிகோண வீடு என்ன வென்று பாப்போம்:
சூரியன்          -    சிம்மராசி மூலதிரிகோண வீடு.
சந்திரன்         –   ரிஷப ராசி மூலதிரிகோண வீடு.
செவ்வாய்     –   மேஷ ராசி மூலதிரிகோண வீடு.
புதன்              -    கன்னி ராசி மூலதிரிகோண வீடு.
குரு                -   தனுசு ராசி மூலதிரிகோண வீடு.
சுக்கிரன்        -   துலா ராசி மூலதிரிகோண வீடு.
சனி                 –   கும்ப ராசி மூலதிரிகோண வீடு.
ராகு                -    ரிஷப ராசி மூலதிரிகோண வீடு.
கேது              -     விருச்சிக ராசி மூலதிரிகோண வீடு.
ஆக திரிகோணம் என்பது ஒரு வீட்டிற்கும் மூலதிரிகோணம் என்பது ஒரு கிரகத்திற்கும் உண்டானது என்பது இப்போது புரியும்.
தாசா புக்தி
கேது          - 7 வருடங்கள்
சுக்கிரன்   - 20 வருடங்கள்
சூரியன்     - 6 வருடங்கள்
சந்திரன்    - 10 வருடங்கள்
செவ்வாய் - 7 வருடங்கள்
ராகு            - 18 வருடங்கள்
குரு             - 16 வருடங்கள்
சனி             - 19 வருடங்கள்
புதன்           - 17 வருடங்கள்
லக்கினம் -  முதல் வீடு - ஜாதகர் தோற்றம், குண நலன்கள்  பத்தி சொல்லும். ஒவ்வொரு லக்கினத்துக்கும் , சில அடிப்படை பண்புகள் இருக்கு...
இரண்டாம் வீடு - தனம் , குடும்பம், வாக்கு , ஆரம்ப கால கல்விமூன்றாம் வீடு - தைரியம், வீர்யம், இளைய சகோதரம்,நான்காம் வீடு - கல்வி , மாதுர் ஸ்தானம் (தாய்), வாழும் வீடு, வாகனம், சுகம் ஐந்தாம் வீடு -  பூர்வ புண்ணியம், குழந்தைகள்,  குல தெய்வம், முற் பிறவி  ஆறாம் வீடு - கடன், நோய், எதிரிகள்ஏழாம் வீடு - நண்பர்கள் , கணவன் / மனைவிஎட்டாம் வீடு - ஆயுள் , (பெண்களுக்கு - மாங்கல்ய ஸ்தானம் ), திடீர் எழுச்சி , வீழ்ச்சி , வில்லங்கம், சிறை, மான பங்கம், அவமானம்ஒன்பதாம் வீடு - பாக்கிய ஸ்தானம் , பிதுர் (தந்தை) ஸ்தானம் .பத்தாம் வீடு - கர்ம ஸ்தானம்பதினொன்றாம் ஸ்தானம் - லாபம், இரண்டாம் திருமணம் , மூத்த சகோதரம்பன்னிரண்டாம் ஸ்தானம் - விரயம் , அயன , சயன போகம்..  அப்படினா? ஒழுங்கா தூங்குறது..... படுக்கை சுகம்...
கிரகங்களின் பார்வைகள்
எல்லா கிரகங்களுக்கும் - பொதுவா ஏழாம் பார்வை உண்டு.  அதாவது , எந்த ஒரு கிரகமும் , நேர எதிர  இருக்கிற ஏழாம் வீட்டைப் பார்க்கும். ....
சுப கிரகம் , பார்த்தா அந்த வீடு வளம் பெறும்.  பாவ கிரகம் பார்த்தா , நல்லது இல்லை.
எல்லா கிரகத்துக்கும் ஏழாம் பார்வை - பொது.
சனி க்கு -  3 , 10 ஆம் பார்வைகள் உண்டு. 
செவ்வாய்க்கு - 4 , 8 ஆம் பார்வைகளும் உண்டு.
குருவுக்கு - 5 , 9 ஆம் பார்வைகளும் உண்டு.
இதை நல்லா ஞாபகம் வைத்துக் கொள்ளவும்.
இது போக - சூரியனுக்கு - 3 , 10 ஆம் பார்வைகளும் ; ராகு , கேது - 3 , 11 ஆம் பார்வைகளும், சுக்கிரனுக்கு - 4 , 8  - ஆம் பார்வைகளும் உண்டு... ஆனால் , இவை முக்கியத்துவம் பெறுவதில்லை.
ராசிகளில் ஆண் ராசிகள், மற்றும் பெண் ராசிகள்
மேஷம், மிதுனம், சிம்மம்,துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகள் ஆண் ராசிகள் இந்த ராசியை லக்கினமாகக் கொண்டு பிறந்தவர்கள் ஆண் லக்கினத்தில் பிறந்தவர்கள்
ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம்,மகரம், மீனம் ஆகிய ராசிகள் பெண் ராசிகள் இந்த ராசியை லக்கினமாகக் கொண்டு பிறந்தவர்கள் பெண் லக்கினத்தில் பிறந்தவர்கள்

No comments:

Post a Comment