Thursday, October 23, 2014

கலியுகமே சிறந்த யுகம் ஏன் தெரியுமா?

கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என நான்கு யுகங்கள் உள்ளன. கடவுளை அடைய முதல் மூன்று யுகங்களில் தானம், தவம், யாகம்  போன்றவற்றில் ஈடுபட வேண்டியிருந்தது. ஆனால், கலியுகத்தில் கடவுளை அன்புடன் மனதில் நினைத்தாலே போதும் என்ற நிலை இருக்கிறது. இந்த  வகையில் பார்த்தால் கலியுகம் மிகச்சிறந்த யுகமாக திகழ்கிறது.  தான் நினைத்த நேரமெல்லாம் முருகப்பெருமான் நேரில் வந்து காட்சியளித்ததை அ ருணகிரிநாதர், எங்கே நினைப்பினும் அங்கே என் முன் வந்து எதிர் நிற்பனே என்று குறிப்பிடுகிறார். பக்தர் ஒருமுறை நினைத்தால் முருகன் இ ருமுறை தோன்றி அருள்புரிவான் என்பதை, ஒரு கால் நினைக்கின் இருகாலும் தோன்றும் என்கிறார் நக்கீரர். கலியுக தெய்வமான கந்தனை நம்பி க்கையுடன் நினைத்து வணங்கியவருக்கு நினைத்தது நிறைவேறும்.

No comments:

Post a Comment