Wednesday, October 1, 2014

பத்ரகாளி காளி

பார்வதி பத்து கைகளுடன்,பத்ரகாளியாக பூமியில் அவதரித்த நாளே துர்காஷ்டமி. தேவதைகளுக்கு எல்லாம் தலைவி இவள். துர்காஷ்டமி நாளில் சண்டிஹோமம் நடத்தி காளியை வழிபடுவர். மேற்கு வங்கமாநிலத்திலுள்ள கல்கத்தா காளிபிரசித்தி பெற்றது. ராமகிருஷ்ணபரமஹம்சருக்கு அருள்புரிந்தவளே கல்கத்தா காளி. தட்சிணேஸ்வரம் கோயிலில் அர்ச்சராக பணிபுரிந்தபோது பரமஹம்சர் காளியோடுநேரடியாக உரையாடி பலஅற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். சக்திபீடங்களில் இக்கோயில் உத்திரசக்தி பீடம் ஆகும். இங்குள்ள சிவன்நகுலீசர் எனப்படுகிறார்.இங்கு தசரா விழா பிரசித்தி பெற்றது. 

No comments:

Post a Comment