Thursday, November 20, 2014

காளி வழிபாடு

காளியை வழிபட்டால் சகலயோகங்கள் பெறலாம். காளிவழிபாடு தொன்று தொட்டு நம்மிடையே இருந்து வருகிறது. காளி கோயில்கள் பெரும்பாலும் தனித்தே காணப்படும். ஒரு சில சிவன் கோவில்களிலும் காளிதேவி அருள்பாலிக்கிறார். இவள் கலியுக தெய்வம், தன்னை நம்பியவர்களை இவர் கைவிடமாட்டார்.  
 
விரதங்களைக் கடைபிடித்தல், பலியிடுதல், தீ மிதித்தல், ஆகிய வழிபாடுகள் இவரைச் சார்ந்தவை.  பத்ரகாளி, மாகாளி, பிடாரி, எல்லையம்மன், வடக்குவாசல் செல்வி, ஆயா செல்லியம்மாள், மகமாயி என்றெல்லாம் இவரை அழைப்பர். `காலி' என்று இவரை  முதலில் அழைத்தனர். இதற்கு `காலத்தின் வடிவமானவள்' என்று பொருள்.  
 
பின்னர் `காளி' என மாறியது. இதற்கு `கருப் பாவள்' என்று பொருள். சிவபெருமாளை நோக்கி இவர் கடும் தவம் புரிந்து தன் கருப்பு நிறத்தை மாற்றி பொன்னுடல் பெற்றார். இதன் பிறகு இவர் `கவுரி' எனப்பட்டார். `கவுரி' என்றால் தங்க உடல் பெற்றவர் எனப் பொருள். நீங்கிய கருப்பு நிறம். `கவுசகி' என்று பெயர் பெற்று மீண்டும் காளியாயிற்று.  
 
சிவபுராணத்தில் காளியை `ஆதி காளி' என்கின்றனர். ஜைன புத்த மதங்களில் 24 பட்சிகளின் பெயர் சொல்லப்பட்டுள்ளது. அதில் ஒருத்திக்கு `மகாகாளி' என்று பெயர். அதாவது, காலத்தால் அழிக்க முடியாத தெய்வமாக இவர் விளங்குகிறார்.  
 
பார்ப்பதற்கு பயங்கரமாக இருப்பாரே  தவிர, இவரைப் போல குணவதி யாருமில்லை. சதயம் நட்சத்திரக்காரர்களின் தெய்வம் காளி.நல்லவருக்கு நல்லவர், கெட்டவருக்கே மகா கெட்டவராக இவர் விளங்குறார்.  

1 comment:

  1. அருள்மிகு மாகாளியம்மன் ஆலயம் அங்காளபரமேஸ்வரி குறிமேடை கரசங்கால் செல் 9551024176

    ReplyDelete