Saturday, August 16, 2014

கணவனை இழந்த பெண்களை இழிவாகக் கருதி ஒதுக்கி வைக்கிறது சமூகம் - மனம் புண்படலாமா?

பொதுவாக, கணவனை இழந்த பெண்களை  இழிவாகக் கருதி ஒதுக்கி வைக்கிறது சமூகம். அதிலும், அவர்கள் எதிரே வந்தால், பலரும் ஒதுங்கிப் போவார்கள். காஞ்சி மடத்தில், தினமும் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் ஒரு அம்மையார் சுத்தம் செய்ய வந்து விடுவார். அவர் கணவனை இழந்தவர். அதிகாலையில் மடத்திற்கு வரும் அவரைப் பார்ப்பவர்கள்,“இவள் முகத்தில் தினமும் காலையில் விழிக்க வேண்டியிருக்கிறதே!” என்று முகம் சுளித்துப் பேசுவார்கள். இது அந்த அம்மையாருக்கும் தெரியும். இருந்தாலும், அதைக் கண்டு கொள்ளாமல் சேவையே பெரிதென நினைத்து, சுத்தப்படுத்தும் பணியைத் தொடர்ந்தார். திடீரென சில நாட்களாக அந்த அம்மையாரைக் காணவில்லை. காஞ்சிப்பெரியவர் இதுபற்றி ஊழியர்களிடம் விசாரித்தார். “அந்த அம்மாவுக்கு உடல் நலமில்லையாம்! அதனால் தான் வரவில்லை!” என்றனர் அவர்கள். உடனடியாக பெரியவர் அந்த அம்மாவின் வீட்டுக்கே போய்விட்டார். தன் வீட்டு வாசலில் பெரியவர் வந்து நின்றதைக் கண்ட அந்த அம்மாவுக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும்... ஓடி வந்து பெரியவரை நமஸ்கரித்தார். அவரிடம் உடல்நலம் விசாரித்த பிறகு மடத்திற்கு திரும்பினார் பெரியவர். நாம் எந்த நிலையில் இருந்தாலும், தெய்வம் கருணை செய்யும் என்பதற்கு இதை விட வேறென்ன உதாரணம் வேண்டும்!

No comments:

Post a Comment