Wednesday, September 28, 2016

தந்திர வழிமுறைகள்

மந்திரங்களை உபயோகப்படுத்தும் தந்திர வழிமுறைகள் !!!
பாவகர்மாக்களில் (முன் ஜென்மம்) இருந்து விடுபட:
இளநீரில் உள்ள தண்ணீரில் கல்கண்டு சேர்த்து அதில் 1008முறை “ஓம் சிவசிவ ஓம்” என்று தர்ப்பைப்புல் கொண்டு ஜெபித்து தினசரி சூரிய உதயத்திற்கு பதினைந்து நிமிடத்திற்கு முன்பு இளநீரை குடிக்க வேண்டும். பின்பு, சிவபுராணம் படிக்க வேண்டும். இதனால் முன்ஜென்ம பாவ கர்மாக்கள் படிப்படியாக குறையும்.
முடக்கத்தில் இருந்து விடுபட:
(ஸ்தம்பனம் உடைய) வியாபார ஸ்தலங்களிலோ மற்றும் வீட்டில் எந்த காரியமும் நடைபெறாமல் தடைபட்டு ஸ்தம்பித்து நின்று விட்டால் அந்த இடத்தில் ஈசானியத்தில் தேங்காய் எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றி வெள்ளெருக்கு விநாயகருக்கு அருகம்புல் கொண்டு “ஓம் அரி ஒம்”; என்று தினசரி 1008 உரு 48 நாட்கள் ஜெபிக்க முடக்கம் உடையும். சைவ உணவு மட்டுமே சாப்பிட வேண்டும்.
கணவன், மனைவி ஒற்றுமை ஏற்பட:
ராகவேந்திரர் படத்திற்கு மல்லிகைப்பூ மாலை போட்டு அவரை குருவாக ஏற்று வணங்கி பின்பு அந்த படத்திற்கு முன்பு பட்டுத் துணியில் அமர்ந்து “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்”; என்று தினசரி 300 உரு ஜெபிக்க படிப்படியாக கணவன், மனைவி ஒற்றுமை ஏற்படும்.
குருதிசை பாதிப்பில் இருந்து விடுபட:
தினசரி சிவன் கோவிலில் இரவு நடக்கும் பள்ளியறை பூஜையின் போது அப்பிரதட்சணமாக பன்னிரண்டு முறை “ஓம் சிவசிவ ஓம்” என்று மனதில் சொல்லியபடி கோவிலை சுற்றிவர படிப்படியாக குருதிசை பாதிப்பு விலகும். கண்டிப்பாக தினசரி தூதுவளை லேகியம் சாப்பிட வேண்டும்.
குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட:
குடிப்பழக்கத்தில் இருந்து கணவனை திருத்த விரும்பும் பெண்கள் மாதா புவனேஸ்வரி படம் வாங்கி அதில் பாஸ்போர்ட் சைஸ் அளவில் கணவன் படத்தினை உள்ளே வைத்து பிரேம் செய்து அந்த படத்தினை கன்னி மூலையில் வைத்து மல்லிகைப்பூ கொண்டு “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்”; என்று 1008 உரு வீதம் 90 நாட்கள் ஜெபித்து பின்பு தினசரி 300 உரு ஜெபிக்க கட்டாயம் குடிப்பழக்கத்திலிருந்து விடுபடுவார்கள்.
ஒருமுறை என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவருக்கு வயிற்றில் கேன்சர் வியாதியால் மரண போராட்டத்தில் இருந்தார். அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சில வேற்று மதத்தை சேர்ந்தவர்கள் விவசாயம் செய்து வந்தார்கள். அவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் செய்வினை செய்ததால் இவருக்கு கேன்சர் வியாதி ஏற்பட்டது என்று சில குறி சொல்லும் நபர்கள் வதந்தியை கிளப்பி விட்டார்கள். அவரும் அதனை நம்பி செய்வினையை முறிக்க சுமார் ரூ.35,000 வரை செலவழித்து விட்டார். அவருடைய ஜாதகத்தில் அப்பொழுது ஜென்ம ராகு நடைபெற்றது.
மேலும் எட்டாம் அதிபதி திசையில், 12-ம் அதிபதி புத்தி நடைபெற்றது. நண்பர் இறந்து விட்டார். இதை எதற்காக கூறுகிறேன் என்றால் எப்பொழுது அஷ்ட்டமத்து சனி, ஜென்ம சனி, ஜென்ம ராகு, ஜென்ம கேது மற்றும் குரு கிரகம் 8,12-ல் இருந்து திசா புத்தி நடைபெறும் பொழுது இந்த மாதிரியான ஏவல், பில்லி, சூன்யம், செய்வினை பாதிப்பு பற்றிய எண்ணங்களும், நம்பிக்கையும் ஏற்படும்.
செய்வினை, ஏவல், பற்றிய பாதிப்பு விலக:
தினசரி விநாயகர் அகவல் படித்து, பிரண்டை துவையல் சாப்பிட்டு தேனில் “ஓம் அரி ஒம்”; மந்திரத்தை ஜெபித்து, தேனை சாப்பிட்டு வர மேற்படி பாதிப்புகள் விலகும்.
நவக்கிரக தோஷம் விலக:
வீட்டில் நவதானியங்களை கொண்டு முளைப்பாரி போட்டு வளர்த்து அதனை ஏதாவது ஒரு வியாழக்கிழமை சுக்கிர ஓரையில் பூஜை செய்து “ஓம் அரி ஒம்”; என்று 1008 உரு அருகம்புல் கொண்டு ஜெபித்து தண்ணீரில் முளைப்பாரியை கரைத்து விட உடனே நவக்கிரக தோஷம் விலகும்.
செவ்வாய் தோஷம் விலக:
செவ்வாய் தோஷ பாதிப்பு உடையவர்கள் மண்கலயத்தில் கும்பம் வைத்து தேங்காய்க்கு பதிலாக வாழை ப10வை வைத்து, மல்லிகை பூவை கொண்டு 1008 உரு “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்” என்று செவ்வாய்கிழமை செவ்வாய் ஓரையில் ஜெபித்து (7 வாரம்) கடல் மற்றும் ஆற்று தண்ணீரில் வாழை பூவை, விட்டு விட உடனே செவ்வாய் தோஷம் விலகும்.
கெட்ட கனவு, சகுன பாதிப்பில் இருந்து விடுபட:
எந்த கிழமையாக இருந்தாலும் அன்ற சூரிய உதயத்திற்கு முன்பு வாசி யோகத்தில் “ஓம் சிவசிவ ஓம்”மனதார ஜெபித்து வெண்ப10சணியை உணவில் சேர்த்து சாப்பிட உடனே தோஷம் நீங்கும்.
காரிய வெற்றி ஏற்பட:
ஒரு 1 அடி நீளம் 1 அடி அகலம் உள்ள வெள்ளை நிற அட்டையில் பச்சை நிறத்தால் ஸ்வஸ்திக் சின்னம் வரைந்து அதில் மேற்படி மந்திரம் எழுதி கிழக்கு திசையில் உங்கள் தரையில் உட்காரும் பொழுது நெத்தி பொட்டிற்கு எதிரில் ஒட்டி
இதனை பார்த்து மனதார “ஓம் சிவசிவ ஓம்” என்று ஜெபித்து வர எண்ணிய நியாயமான எண்ணங்கள் படிப்படியாக நடைபெறும்.
குழந்தைகளை திருத்த:
இரவில் குழந்தைகள் ஆழ்ந்து உறங்கிய பின்பு அவர்கள் தலைமாட்டில் அமர்ந்து அவர்கள் தலையில் கை வைத்து “ஓம் சிவசிவ ஓம்” என்று மனதார ஜெபித்து உரு ஏற்ற படிப்படியாக குழந்தைகள் நமது சொல்படி கேட்டு நடக்க ஆரம்பிப்பார்கள்.
ராகு திசையின் பாதிப்பு நீங்க:
பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயரை வணங்கி அவரை 18 சுற்றுகள் அப்பிரதட்சணமாக சுற்றி அங்கு “ஓம் சிவசிவ ஓம்” என்று ஜெபித்து வர (தினமும்) ராகு திசையில் கெடுபலன் விலகும்.
கேது திசை பாதிப்பு நீங்க:
தனியாக உள்ள விநாயகர் கோவிலில் அப்பிரதட்சணமாக “ஓம் அரி ஒம்”;      சுற்றுகள் சுற்றி தினமும் ஜெபித்து வர வேண்டும். யானையை கொண்டு நமது முகத்தில் காற்றை ஊதிவிட செய்ய வேண்டும். கேது திசை கெடுபலன் குறையும்.
செல்வம் சேர (நியாயமான முறையில்):
தாமரை தண்டு திரியை பன்னீரில் நனைத்து காயவைத்து கன்னி மூலையில் விளக்கு ஏற்றி தீபம் வடக்கு நோக்கி எரிய வேண்டும். இதன் முன்பு பட்டு துணியில் அமர்ந்து “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்” என்று மனதார 1008 உரு தினசரி 90 நாட்கள் ஜெபித்து வர படிப்படியாக செல்வம் சேரும்.
மேலே கூறியபடி இன்னும் எத்தனையோ முறைகளில் தந்திரமாக மந்திரங்களை மாற்றி ஜெபித்து நம்முடைய தடைகளை நீக்கி வாழ்வில் வளமாக வாழலாம்