Friday, October 1, 2010

அம்மன் வழிபாடு

அம்மன் வழிபாடு


அம்மன் போற்றி


ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் அருமறையின் வரம்பே போற்றி
ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி
ஓம் அரசிளங்குமரியே போற்றி
ஓம் அப்பர்பிணி மருந்தே போற்றி
ஓம் அமுத நாயகியே போற்றி
ஓம் அருந்தவ நாயகியே போற்றி
ஓம் அருள்நிறை அம்மையே போற்றி
ஓம் ஆலவாய்க் கரசியே போற்றி
ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி
ஓம் ஆதியின் பாதியே போற்றி
ஓம் ஆலால சுந்தரியே போற்றி
ஓம் ஆனந்தவல்லியே போற்றி
ஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி
ஓம் இமயத்தரசியே போற்றி
ஓம் இடபத்தோன் துணையே போற்றி
ஓம் ஈசுவரியே போற்றி
ஓம் உயிர் ஓவியமே போற்றி
ஓம் உலகம்மையே போற்றி
ஓம் ஊழிவினை தீர்ப்பாய் போற்றி
ஓம் எண்திசையும் வென்றோய் போற்றி
ஓம் ஏகன் துணையே போற்றி
ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி
ஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஒப்பிலா அமுதே போற்றி
ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி
ஓம் கற்றோர்க் கினியோய் போற்றி
ஓம் கல்லோர்க்கும் எளியோய் போற்றி
ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி
ஓம் கல்யாண சுந்தரியே போற்றி
ஓம் கனகமணிக் குன்றே போற்றி
ஓம் கற்பின் அரசியே போற்றி
ஓம் கருணையூற்றே போற்றி
ஓம் கல்விக்கு வித்தே போற்றி
ஓம் கனகாம்பிகையே போற்றி
ஓம் கதிரொளிச் சுடரே போற்றி
ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி
ஓம் காட்சிக்கினியோய் போற்றி
ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி
ஓம் கிளியேந்திய கரத்தோய் போற்றி
ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி
ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி
ஓம் கூடற்கலாப மயிலே போற்றி
ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி
ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி
ஓம் சக்தி வடிவே போற்றி
ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி
ஓம் சிவகாம சுந்தரியே போற்றி
ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி
ஓம் சிவயோக நாயகியே போற்றி
ஓம் சிவாநந்த வல்லியே போற்றி
ஓம் சிங்கார வல்லியே போற்றி
ஓம் செந்தமிழ் தாயே போற்றி
ஓம் செல்வத்துக்கரசியே போற்றி
ஓம் சேனைத் தலைவியே போற்றி
ஓம் சொக்கர் நாயகியே போற்றி
ஓம் சைவநெறி நிலைக்கச் செய்தோய் போற்றி
ஓம் ஞானாம்பிகையே போற்றி
ஓம் ஞானப் பூங்கோதையே போற்றி
ஓம் தமிழர் குலச்சுடரே போற்றி
ஓம் தண்டமிழ்த் தாயே போற்றி
ஓம் திருவுடையம்மையே போற்றி
ஓம் திசையெல்லாம் புரந்தாய் போற்றி
ஓம் திரிபுர சுந்தரியே போற்றி
ஓம் திருமலை நாயகியே போற்றி
ஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி
ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
ஓம் தென்னவன் செல்வியே போற்றி
ஓம் தேன்மொழியம்மையே போற்றி
ஓம் தையல்நாயகியே போற்றி
ஓம் நற்கனியின் சுவையே போற்றி
ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி
ஓம் நல்ல நாயகியே போற்றி
ஓம் நீலாம்பிகையே போற்றி
ஓம் நீதிக்கரசியே போற்றி
ஓம் பக்தர்தம் திலகமே போற்றி
ஓம் பழமறையின் குருந்தே போற்றி
ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி
ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி
ஓம் பவளவாய்க் கிளியே போற்றி
ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாகம் பிரிய அம்மையே போற்றி
ஓம் பாண்டிமாதேவியின் தேவே போற்றி
ஓம் பார்வதி அம்மையே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பெரிய நாயகியே போற்றி
ஓம் பொன் மயிலம்மையே போற்றி
ஓம் பொற்கொடி அன்னையே போற்றி
ஓம் மலையத்துவசன் மகளே போற்றி
ஓம் மங்கல நாயகியே போற்றி
ஓம் மழலைக் கிளியே போற்றி
ஓம் மனோன் மணித் தாயே போற்றி
ஓம் மண் சுமந்தோன் மாணிக்கமே போற்றி
ஓம் மாயோன் தங்கையே போற்றி
ஓம் மாணிக்க வல்லியே போற்றி
ஓம் மீனவர்கோன் மகளே போற்றி
ஓம் மீனாட்சி அம்மையே போற்றி
ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி
ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி
ஓம் யாழ் மொழியம்மையே போற்றி
ஓம் வடிவழகம்மையே போற்றி
ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி
ஓம் வேத நாயகியே போற்றி
ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி
ஓம் அம்மையே அம்பிகையே போற்றி
ஓம் அங்கையற்கண் அம்மையே போற்றி போற்றி



திருவிளக்கு வழிபாடு


ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி
ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி
ஓம் முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றி
ஓம் மூவுலகும் நிறைந்திருந்தாய் போற்றி
ஓம் வரம்பில் இன்பமாய் வளர்ந்திருந்தாய் போற்றி
ஓம் இயற்கையாய் அறிவொளி ஆனாய் போற்றி
ஓம் ஈரேழுலகும் ஈன்றாய் போற்றி
ஓம் பிறர் வயமாகா பெரியோய் போற்றி
ஓம் பேரின்பப் பெருக்காய் பொலிந்தாய் போற்றி
ஓம் பேரருட் கடலாம் பொருளே போற்றி
ஓம் முடிவில் ஆற்றல் உடையாய் போற்றி
ஓம் மூவூலகுந் தொழ மூத்தோய் போற்றி
ஓம் அளவிலாச் செல்வம் தருவாய் போற்றி
ஓம் ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி
ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி
ஓம் இருள் கெடுத்து இன்பருள் ஈந்தாய் போற்றி
ஓம் மங்கள நாயகியே மாமணி போற்றி
ஓம் வளமை நல்கும் வல்லியே போற்றி
ஓம் அறம் வளர்நாயகி அம்மையே போற்றி
ஓம் மின் ஒளியம்மையாம் விளக்கே போற்றி
ஓம் மண் ஒளிப்பிழம்பாய் வளர்ந்தாய் போற்றி
ஓம் தையல் நாயகித் தாயே போற்றி
ஓம் தொண்டர் அகத்தமர் தூமணி போற்றி
ஓம் முக்கட் சுடரின் முதல்வி போற்றி
ஓம் ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றி
ஓம் சூளாமணியே சுடரொளி போற்றி
ஓம் இருள் ஒளித்து இன்பமும் ஈவோய் போற்றி
ஓம் அருள் மொழிந்து எம்மை ஆள்வாய் போற்றி
ஓம் அறிவினுக்கு அறிவாய் ஆனாய் போற்றி
ஓம் இல்லக விளக்காம் இறைவி போற்றி

ஓம் சுடரே விளக்காம் தூயாய் போற்றி
ஓம் இடரைக் களையும் இயல்வினாய் போற்றி
ஓம் இடரைக் களையும் இயல்பினாய் போற்றி
ஓம் எரிசுடராய் நின்ற இறைவி போற்றி
ஓம் ஞானச் சுடர் விளக்காய் நின்றாய் போற்றி
ஓம் அருமறைப் பொருளாம் ஆதி போற்றி
ஓம் தூண்டு சுடரனைய ஜோதி போற்றி
ஓம் ஜோதியே போற்றி சுடரே போற்றி
ஓம் ஓதும் உள்ஒளி விளக்கே போற்றி
ஓம் இருள் கெடுக்கும் இல்லக விளக்கே போற்றி
ஓம் சொல்லக விளக்காம் ஜோதி போற்றி
ஓம் பலா காண் பல்லக விளக்கே போற்றி
ஓம் நல்லக நமசிவாய விளக்கே போற்றி
ஓம் உவப்பிலா ஒளிவளர் விளக்கே போற்றி
ஓம் உணர்வு சூழ் கடந்தோர் விளக்கே போற்றி
ஓம் உடம்பெனும் மனையக விளக்கே போற்றி
ஓம் உள்ளத் தகளி விளக்கே போற்றி
ஓம் உயிரெணும் திரிமயக்கு விளக்கே போற்றி
ஓம் இடர்படும் ஞானத்தீ விளக்கே போற்றி
ஓம் நோக்குவார்க்கு எரிகொள் விளக்கே போற்றி
ஓம் ஆதியாய் நடுவுமாகும் விளக்கே போற்றி
ஓம் அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி
ஓம் ஜோதியாய் உணர்வுமாகும் விளக்கே போற்றி
ஓம் தில்லைப் பொதுநட விளக்கே போற்றி
ஓம் கற்பனை கடந்த ஜோதி போற்றி
ஓம் கருணை உருவாம் விளக்கே போற்றி
ஓம் அற்புத கோல விளக்கே போற்றி
ஓம் அருமறைச் சிரத்து விளக்கே போற்றி
ஓம் சிற்பர வியோம விளக்கே போற்றி
ஓம் பொற்புடன் நடஞ்செய் விளக்கே போற்றி
ஓம் உள்ளத் திருளை ஒழிப்பாய் போற்றி
ஓம் கள்ளப் புலனைக் கரைப்பாய் போற்றி
ஓம் உருகுவோர் உள்ளத்து ஒளியே போற்றி
ஓம் பெருகுஅருள் சுரக்கும் பெரும போற்றி
ஓம் இருள்சேர் இருவினை எறிவாய் போற்றி
ஓம் அருவே உருவே அருவுருவே போற்றி
ஓம் நந்தா விளக்கே நாயகி போற்றி
ஓம் செந்தாமரைத் தாள் தந்தாய் போற்றி
ஓம் தீப மங்கள ஜோதி போற்றி
ஓம் மதிப்பவர் மாமணி விளக்கே போற்றி
ஓம் பாகம் பிரியா பராபரை போற்றி
ஓம் ஆகம முடிமேல் அமர்ந்தாய் போற்றி
ஓம் ஏகமும் நடஞ்செய் எம்மான் போற்றி
ஓம் ஊழி ஊழி உள்ளோய் போற்றி
ஓம் ஆழியான் காணா அடியோய் போற்றி
ஓம் ஆதியும் அந்தமும் அற்றாய் போற்றி
ஓம் அந்தமில் இன்பம் அருள்வாய் போற்றி
ஓம் முந்தை வினையை முடிப்போய் போற்றி
ஓம் பொங்கும் கீர்த்தி பூரண போற்றி
ஓம் தன்னருள் சுரக்கும் தாயே போற்றி
ஓம் அருளே உருவாய் அமைந்தோய் போற்றி
ஓம் இருநில மக்கள் இறைவி போற்றி
ஓம் குருவென ஞானம் கொடுப்போய் போற்றி
ஓம் ஆறுதல் எமக்கிங் களிப்போய் போற்றி
ஓம் தீதெல்லாம் தீர்க்கும் திருவே போற்றி
ஓம் பக்தியில் ஆழ்ந்த பரமே போற்றி
ஓம் எத்திக்குந் துதி ஏய்ந்தாய் போற்றி
ஓம் அஞ்சலென் றருளும் அன்பே போற்றி
ஓம் தஞ்சமென் றவரைச் சார்வோய் போற்றி
ஓம் ஓதுவார் அகத்துறை ஒளியே போற்றி
ஓம் ஓங்காரத் துள்ளொழி விளக்கே போற்றி
ஓம் எல்லா உலகமும் ஆனாய் போற்றி
ஓம் பொல்லா வினைகள் அறுப்பாய் போற்றி
ஓம் புகழ் சேவடி என்மேல் வைத்தோய் போற்றி
ஓம் செல்வாய செல்வம் தருவாய் போற்றி
ஓம் பூங்கழல் விளக்கே போற்றி போற்றி
ஓம் உலகம் உவப்புற வாழ்வருள் போற்றி
ஓம் உயிர்களின் பசிப்பிணி ஒளித்தருள் போற்றி
ஓம் செல்வம் கல்வி சிறப்பருள் போற்றி
ஓம் நல்லன்பு ஒழுக்கம் நல்குவாய் போற்றி
ஓம் விளகிட்டார்க்கு மெய்நெறி விளக்குவாய் போற்றி
ஓம் நலம் எலாம் உயிர்க்கு நல்குக போற்றி
ஓம் தாயே நின்னருள் தந்தாய் போற்றி
ஓம் தூய நின்திருவடி தொழுதனம் போற்றி
ஓம் போற்றி என்பார் அமரர் விளக்கே போற்றி
ஓம் போற்றி என்பார் மனிதர் விளக்கே போற்றி
ஓம் போற்றி என் அன்புபொலி விளக்கே போற்றி
ஓம் போற்றி போற்றி திருவிளக்கே போற்றி



திருமகள் வழிபாடு


ஓம் திருவே போற்றி
ஓம் திருவளர் தாயே போற்றி
ஓம் திருமாலின் தேவி போற்றி
ஓம் திருவெலாம் தருவாய் போற்றி
ஓம் திருத்தொண்டர் மணியே போற்றி
ஓம் திருப்புக முடையாய் போற்றி
ஓம் திருஞான வல்லி போற்றி
ஓம் திருவருட் செல்வி போற்றி
ஓம் திருமால் மகிழ்வாய் போற்றி
ஓம் திருமார்பி லமர்ந்தாய் போற்றி
ஓம் தினமெமைக் காப்பாய் போற்றி
ஓம் தீப சோதியே போற்றி
ஓம் தீதெலாம் தீர்ப்பாய் போற்றி
ஓம் தூப சோதியே போற்றி
ஓம் துயரந்தீர்த் தருள்வாய் போற்றி
ஓம் திருப்பாற் கடலாய் போற்றி
ஓம் தருவழு தருள்வாய் போற்றி
ஓம் அன்னையே அருளே போற்றி
ஓம் அழகெலாம் உடையாய் போற்றி
ஓம் அயன்பெறு தாயே போற்றி
ஓம் அறுமுகன் மாமி போற்றி
ஓம் அமரர்குல விளக்கே போற்றி
ஓம் அமரேசன் தொழுவாய் போற்றி
ஓம் அன்பருக் கினியாய் போற்றி
ஓம் அண்டங்கள் காப்பாய் போற்றி
ஓம் ஆனந்த வல்லியே போற்றி
ஓம் ஆருயிர்க் குயிரே போற்றி
ஓம் ஆவிநல் வடிவே போற்றி
ஓம் ஆக்கம தருள்வாய் போற்றி
ஓம் இச்சை கிரியை போற்றி
ஓம் இருள்தனைக் கடிவாய் போற்றி
ஓம் இன்ப பெருக்கே போற்றி
ஓம் இகபர சுகமே போற்றி
ஓம் ஈகையின் பொலிவே போற்றி
ஓம் எங்குமே நிறைந்தாய் போற்றி
ஓம் எண்குண வல்லி போற்றி
ஓம் ஓங்கார சக்தி போற்றி
ஓம் ஒளிமிகு தேவி போற்றி
ஓம் கற்பக வல்லி போற்றி
ஓம் காமரு தேவி போற்றி
ஓம் கனக வல்லியே போற்றி
ஓம் கருணாம் பிகையே போற்றி
ஓம் குத்து விளக்கே போற்றி
ஓம் குலமகள் தொழுவாய் போற்றி
ஓம் மங்கல விளக்கே போற்றி
ஓம் மங்கையர் தொழுவாய் போற்றி
ஓம் தூங்காத விளக்கே போற்றி
ஓம் தூயவர் தொழுவாய் போற்றி
ஓம் பங்கச வல்லி போற்றி
ஓம் பாவலர் பணிவாய் போற்றி
ஓம் பொன்னி அம்மையே போற்றி
ஓம் புலவர்கள் புகழ்வாய் போற்றி
ஓம் நாரணன் நங்கையே போற்றி
ஓம் நாவலர் துதிப்பாய் போற்றி
ஓம் நவரத்தின மணியே போற்றி
ஓம் நவநிதி நீயே போற்றி
ஓம் அஷ்டலக் குமியே போற்றி
ஓம் அறம்பொருள் தருவாய் போற்றி
ஓம் ஆதிலட்சுமியே போற்றி
ஓம் ஆணவம் அறுப்பாய் போற்றி
ஓம் கஜலட்சுமியே போற்றி
ஓம் கள்ளமும் கரைப்பாய் போற்றி
ஓம் தைரியலட் சுமியே போற்றி
ஓம் தயக்கமும் தவிர்ப்பாய் போற்றி
ஓம் தனலட் சுமியே போற்றி
ஓம் தனதானியம் தருவாய் போற்றி
ஓம் விஜயலட் சுமியே போற்றி
ஓம் வெற்றியைத் தருவாய் போற்றி
ஓம் வரலட் சுமியே போற்றி
ஓம் வரமெலாம் தருவாய் போற்றி
ஓம் முத்துலட் சுமியே போற்றி
ஓம் முத்தியை அருள்வாய் போற்றி
ஓம் மூவேந்தர் தொழுவாய் போற்றி
ஓம் முத்தமிழ் தருவாய் போற்றி
ஓம் கண்ணேஎம் கருத்தே போற்றி
ஓம் கவலையை ஒழிப்பாய் போற்றி
ஓம் விண்ணேஎம் விதியே போற்றி
ஓம் விவேகம் தருள்வாய் போற்றி
ஓம் பொன்னேநன் மணியே போற்றி
ஓம் போகம தருள்வாய் போற்றி
ஓம் பூதேவி தாயே போற்றி
ஓம் புகழெலாம் தருவாய் போற்றி
ஓம் சீதேவி தாயே போற்றி
ஓம் சிறப்பெலாம் அருள்வாய் போற்றி
ஓம் மதிவதன வல்லி போற்றி
ஓம் மாண்பெலாம் தருவாய் போற்றி
ஓம் நித்திய கல்யாணி போற்றி
ஓம் நீதிநெறி அருள்வாய் போற்றி
ஓம் கமலக் கன்னி போற்றி
ஓம் கருத்தினி லமர்வாய் போற்றி
ஓம் தாமரைத் தாளாய் போற்றி
ஓம் தவநிலை அருள்வாய் போற்றி
ஓம் கலைஞானச் செல்வி போற்றி
ஓம் கலைஞருக் கருள்வாய் போற்றி
ஓம் அருள்ஞானச் செல்வி போற்றி
ஓம் அறிஞருக் கருள்வாய் போற்றி
ஓம் எளியவர்க் கருள்வாய் போற்றி
ஓம் ஏழ்மையைப் போக்குவாய் போற்றி
ஓம் வறியவர்க் கருள்வாய் போற்றி
ஓம் வறுமையை ஒழிப்பாய் போற்றி
ஓம் வேத வல்லியே போற்றி
ஓம் வேட்கையைத் தணிப்பாய் போற்றி
ஓம் பெரியோர்க் கருள்வாய் போற்றி
ஓம் நல்லவர்க் கருள்வாய் போற்றி
ஓம் அடியவர்க் கருள்வாய் போற்றி
ஓம் அனைத்துமே ஆனாய் போற்றி
ஓம் அருள்இலக் குமியே போற்றி
ஓம் மகாலட்சுமியே போற்றி போற்றி




கலைமகள் வழிபாடு

ஓம் அறிவினுக் கறிவாய் ஆனாய் போற்றி
ஓம் செறிஉயிர் நாத்தொறும் திகழ்வோய் போற்றி
ஓம் ஆட்சிகொள் அரசரும் அழியாய் போற்றி
ஓம் காட்சிசேர் புலவர்பல் கனிவோய் போற்றி
ஓம் இல்லக விளக்கம் இறைவி போற்றி
ஓம் நல்லக மாந்தரை நயப்பாய் போற்றி
ஓம் ஈரமார் நெஞ்சினர் இடந்தோய் போற்றி
ஓம் ஆரமார் தொடையால் அணிவோய் போற்றி
ஓம் உலகியல் நடத்தும் ஒருத்தி போற்றி
ஓம் அலகில் உயர்கிறி வளிப்போய் போற்றி
ஓம் ஊனமில் வெள்ளை உருவினாய் போற்றி
ஓம் கானக் குயில்மொழிக் கன்னியே போற்றி
ஓம் எண்ணிலாப் புகழுடை எந்தாய் போற்றி
ஓம் பண்ணியல் தமிழின் பாவாய் போற்றி
ஓம் ஏழுல குந்தொழும் இறைவி போற்றி
ஓம் சூழுநல் அன்பரின் துணைத்தாய் போற்றி
ஓம் ஐதுசேர் வெண்கலை ஆடையாய் போற்றி
ஓம் மைதீர் முத்து மாலையாய் போற்றி
ஓம் ஒட்டக் கூத்தர்க் குதவினோய் போற்றி
ஓம் வட்டவெண் தாமரை வாழ்வோய் போற்றி
ஓம் ஓம் ஓதுவார் அகத்துறை ஒளியே போற்றி
ஓம் போதுசேர் அருட்கண் பொற்கொடி போற்றி
ஓம் ஒளைவைமூ தாட்டியாய் ஆனாய் போற்றி
ஓம் கௌவையே இல்லாக் கலைமகள் போற்றி
ஓம் கல்விக் கரசே கலைக்கடல் போற்றி
ஓம் நல்விற் புருவ நங்காய் போற்றி
ஓம் செங்கையில் புத்தகம் சேர்த்தாய் போற்றி
ஓம் அங்கையில் படிகம் அடக்கியோய் போற்றி
ஓம் சமை குண் டிகைக்கைத் தாயே போற்றி
ஓம் அமைவுகொள் ஞான அருட்கையாய் போற்றி
ஓம் அஞ்சலென் றருள்தரும் அன்னே போற்றி
ஓம் மடமறு நான்முகன் வாழ்வே போற்றி
ஓம் திடமுறு செந்தமிழ்த் தெளிவே போற்றி
ஓம் கண்கண்ட தெய்வக் கண்மனி போற்றி
ஓம் பண்கண்ட பாவிற் படர்ந்தனை போற்றி
ஓம் தந்தையும் தாயுமாய்த் தீழைப்போய் போற்றி
ஓம் மைந்தரோ டொக்கலாய் வளர்வோய் போற்றி
ஓம் நல்லோர் சொற்படி நடப்போய் போற்றி
ஓம் பல்லோர் பரவும் பனுவலோய் போற்றி
ஓம் மன்னரும் வணங்க வைப்போய் போற்றி
ஓம் உன்னரும் பெருமை உடையோய் போற்றி
ஓம் யாவர்க்கும் இசைந்த யாயே போற்றி
ஓம் பாவும் பொருளுமாய்ப் படர்வோய் போற்றி
ஓம் பூரப் பரிவரு பொற்கொடி போற்றி
ஓம் வார நெஞ்சினர் வழித்துணை போற்றி
ஓம் சிலம்பொலிச் சிற்றடித் திருவருள் போற்றி
ஓம் நல<<உமை இடக்கணாம் நாயகி போற்றி
ஓம் வள்ளைக் கொடிச் செவி மானே போற்றி
ஓம் பிள்ளை மொழித் தமிழ்ப் பிராட்டி போற்றி
ஓம் அழகின் உருவே அணங்கே போற்றி
ஓம் பழகு தமிழின் பண்ணே போற்றி
ஓம் இளமை குன்றா ஏந்திழாய் போற்றி
ஓம் வளமை குளிர்மை மன்னினாய் போற்றி
ஓம் அறனும் பொருளும் அருள்வோய் போற்றி
ஓம் வறனறு இன்பம் மலிந்தோய் போற்றி
ஓம் சொன்ன கலைகளின் தொடர்பே போற்றி
ஓம் மன்னிய முத்தின் வயங்குவாய் போற்றி
ஓம் கம்பர்க் கருளிய கருத்தே போற்றி
ஓம் நம்பினோர்க் கின்பருள் நல்லோய் போற்றி
ஓம் காண்டகும் எண்ணென் கலையாய் போற்றி
ஓம் வேண்டா வெண்மையை விலக்குவாய் போற்றி
ஓம் கிட்டற் கரிய கிளிமொழி போற்றி
ஓம் வெட்ட வெளியாம் விமலை போற்றி
ஓம் கீர்த்தியார் வாணியாம் கேடிலாய் போற்றி
ஓம் ஆர்த்தியார் அன்பரின் அகத்தாய் போற்றி
ஓம் குமர குருபரர்க் குதவினோய் போற்றி
ஓம் அமரரும் வணங்கும் அம்மே போற்றி
ஓம் கூர்மையும் சீர்மையும் கொண்டோய் போற்றி
ஓம் ஆர்வலர் ஏத்த அருள்வோய் போற்றி
ஓம் கெடலரும் பாவின் கிழத்தி போற்றி
ஓம் விடலரும் அறிவின் வித்தே போற்றி
ஓம் கேள்வி கல்விக் கிழமையோய் போற்றி
ஓம் ஆள்வினை அருளும் அமிழ்தே போற்றி
ஓம் கையகக் கழுநிர்க் கலைமகள் போற்றி
ஓம் பொய்தீர் அருங்கலைப் பொருளே போற்றி
ஓம் கொன்டற் கூந்தற் கொம்பே போற்றி
ஓம் வண்டமிழ் வடமொழி வளனே போற்றி
ஓம் கோதில் பலமொழிக் குருந்தே போற்றி
ஓம் போதில் உறையும் பொன்னே போற்றி
ஓம் சங்கொத் தொளிர்நிறத் தாளே போற்றி
ஓம் அங்கண் அருள்நிறை அம்மா போற்றி
ஓம் சாதலும் பிறத்தலும் தவிர்ந்தோய் போற்றி
ஓம் போதலும் இருத்தலும் போக்கினோய் போற்றி
ஓம் சினமும் செற்றமும் தீர்ந்தோய் போற்றி
ஓம் மனமும் கடந்த மறைபொருள் போற்றி
ஓம் சீரார் சிந்தா தேவியே போற்றி
ஓம் ஏரார் செழுங்கலை இன்பே போற்றி
ஓம் சுடரே விளக்கே தூயாய் போற்றி
ஓம் இடரே களையும் இயல்பினாய் போற்றி
ஓம் சூழும் தொண்டரின் தொடர்பே போற்றி
ஓம் ஏழுறும் இசையின் இசைவே போற்றி
ஓம் செவ்விய முத்தமிழ்த் திறனே போற்றி
ஓம் ஒளவியம் அறுக்கும் அரசி போற்றி
ஓம் சேவடிச் செல்வம் அளிப்போய் போற்றி
ஓம் பாவடிப் பயனே படைத்தருள் போற்றி
ஓம் சைவம் தாங்கும் தனிக்கொடி போற்றி
ஓம் மையெலாம் போக்கும் மருந்தே போற்றி
ஓம் சொல்லோடு பொருளின் சுவையருள் போற்றி
ஓம் அல்லொடு பகலுன் அடைக்கலம் போற்றி
ஓம் சோர்விலா அறிவின் தொடர்பே போற்றி
ஓம் தீர்விலா நுண்கலைத் திறனே போற்றி
ஓம் தமிழ்க்கலை தமிழ்ச்சுவை தந்தருள் போற்றி
ஓம் தமிழ்மந் திரமொழித் தண்பயன் போற்றி
ஓம் தாயே நின்னருள் தந்தாள் போற்றி
ஓம் தாயேநின் திருவடி தொழுதனம் போற்றி
ஓம் திருவுடன் கல்வித் திறனருள் போற்றி
ஓம் இருநிலத் தின்பம் எமக்கருள் போற்றி
ஓம் பிரம்மனின் பத்தினியே போற்றி போற்றி



சந்தோஷிமாதா வழிபாடு


ஓம் சந்தோஷி மாதா போற்றி
ஓம் சகலமும் அருள்வாய் போற்றி
ஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றி
ஓம் வெற்றிகள் தருவாய் போற்றி
ஓம் கன்னியிற் சிறந்தாய் போற்றி
ஓம் கற்பகத்தருவே போற்றி
ஓம் கருணைக் கடலே போற்றி
ஓம் காரணத்தினுருவே போற்றி
ஓம் காரியமும் ஆனாய் போற்றி
ஓம் காசித்தல முறைவாய் போற்றி
ஓம் கதை கேட்டு மகிழ்வாய் போற்றி
ஓம் காலதேசம் கடந்தாய் போற்றி
ஓம் கஜமுகன் குழந்தாய் போற்றி
ஓம் முக்குண உருவே போற்றி
ஓம் மூவுலகிற் சிறந்தாய் போற்றி
ஓம் இனியநின் உருவே போற்றி
ஓம் இனிப்பினை விரும்புவாய் போற்றி
ஓம் வாட்டமிலா முகத்தாய் போற்றி
ஓம் வரமிக்கத் தருவாய் போற்றி
ஓம் அகரமுதலே எழுத்தே போற்றி
ஓம் ஆதி அந்தமில்லாய் போற்றி
ஓம் ஈடிணையற்றாய் போற்றி
ஓம் இணையயடி தொழுதோம் போற்றி
ஓம் கோரியது கொடுப்பாய் போற்றி
ஓம் குலம் காக்கும் சுடரே போற்றி
ஓம் விரதத்திற்கு உரியாய் போற்றி
ஓம் விளக்கத்தின் விளக்கம் போற்றி
ஓம் பிறப்பிறப் பற்றாய் போற்றி
ஓம் பிறப்பினைத் தருவாய் போற்றி
ஓம் பெருவாழ்வு அருள்வாய் போற்றி
ஓம் பிழைதனைப் பொறுப்பாய் போற்றி
ஓம் வணக்கத்திற்குரியாய் போற்றி
ஓம் வணங்கினால் மகிழ்வோய் போற்றி
ஓம் ஒலிக்குமோர் ஓசை போற்றி
ஓம் உயர்வுகள் தருவாய் போற்றி
ஓம் கோள்களும் போற்றப் போற்றி
ஓம் குறைகளைத் தவிர்ப்பாய் போற்றி
ஓம் நிறைவினைத் தருவாய் போற்றி
ஓம் சக்தியின் உருவே போற்றி
ஓம் தெய்வத்தின் தெய்வம் போற்றி
ஓம் சூலத்தைகக் கொண்டாய் போற்றி
ஓம் வாளினை ஏற்றாய் போற்றி
ஓம் தீமைகள் அழிப்பாய் போற்றி
ஓம் திசையெல்லாம் நிறைந்தாய் போற்றி
ஓம் அற்புத உருவே போற்றி
ஓம் ஆனந்த சிலையே போற்றி
ஓம் தாமரை அமர்ந்தாய் போற்றி
ஓம் தக்கன தருவாய் போற்றி
ஓம் தருமத்தின் உருவே போற்றி
ஓம் தாயாக வந்தாய் போற்றி
ஓம் நினைத்ததைத் தருவாய் போற்றி
ஓம் நிம்மதி அருள்வாய் போற்றி
ஓம் உமையவள் பேத்தி போற்றி
ஓம் உன்னதத் தெய்வம் போற்றி
ஓம் செல்வத்தின் உருவமே போற்றி
ஓம் ஜெகமெலாம் காப்பாய் போற்றி
ஓம் உயிர்க்கு உயிராவாய் போற்றி
ஓம் உலகெலாம் நீயே போற்றி
ஓம் ஆபரணமணிவாய் போற்றி
ஓம் ஆடைகள் தருவாய் போற்றி
ஓம் ஒளிமிகு முகத்தாய் போற்றி
ஓம் கருணைசேர் கரத்தாய் போற்றி
ஓம் மனைமக்கள் ஈவாய் போற்றி
ஓம் மங்கலம் தருவாய் போற்றி
ஓம் உன்னையே துதித்தோம் போற்றி
ஓம் உடமைகள் தருவாய் போற்றி
ஓம் நங்கையர்க்கு நாயகி போற்றி
ஓம் நலமெலாம் தருவாய் போற்றி
ஓம் ஆரத்தி ஏற்பாய் போற்றி
ஓம் ஆனந்த உருவே போற்றி
ஓம் பாடல்கள் கேட்பாய் போற்றி
ஓம் பாசத்தைப் பொழிவாய் போற்றி
ஓம் குணமெனும் குன்றே போற்றி
ஓம் குன்றென அருள்வாய் போற்றி
ஓம் தேவியர் தேவி போற்றி
ஓம் தரிசனம் தருவாய் போற்றி
ஓம் சிவனருள் பெற்றாய் போற்றி
ஓம் சிறப்பெலாம் கொண்டாய் போற்றி
ஓம் விஷ்ணுவருள் பெற்றாய் போற்றி
ஓம் விண்ணவர் போற்றப் போற்றி
ஓம் நான் முகன் கருணைபெற்றாய் போற்றி
ஓம் நலன்களின் உருவம் நீயே போற்றி
ஓம் போற்றிக்கு அருள்வாய் போற்றி
ஓம் புண்ணிய நாயகி போற்றி
ஓம் செல்வத்தின் உருவே போற்றி
ஓம் செல்வத்தைப் பொழிவாய் போற்றி
ஓம் சரணமடைந்தால் மகிழ்வாய் போற்றி
ஓம் சற்குணவதியே போற்றி
ஓம் ஐங்கரன் மகளே போற்றி
ஓம் அனைத்துமே நீதான் போற்றி
ஓம் கண்களின் ஒளியே போற்றி
ஓம் கனகமாமணியே போற்றி
ஓம் அன்பருக்கு அன்பே போற்றி
ஓம் அனைவருக்கும் அருள்வாய் போற்றி
ஓம் செல்வமாம் நிதியே போற்றி
ஓம் செல்வத்தின் பதியே போற்றி
ஓம் தத்துவமானாய் போற்றி
ஓம் வித்தகச் செல்வி போற்றி
ஓம் பழங்களை ஏற்பாய் போற்றி
ஓம் பாயாசம் உண்பாய் போற்றி
ஓம் வெல்லம் கடலைசேர்த்து போற்றி
ஓம் விருப்பமாய் உண்பாய் போற்றி
ஓம் இல்லத்தில் எழுந்தருள்வாய் போற்றி
ஓம் ஓம்கார உருவே போற்றி
ஓம் உன்னதத் தெய்வம் நீயே போற்றி
ஓம் சந்தோஷிமாதாவே போற்றி
ஓம் சௌபாக்கியம் அருளவாய் போற்றி
ஓம் சந்தோஷி மாதாகி ஜெய்! போற்றி



துர்காதேவி  போற்றி


ஓம் துர்கையே போற்றி
ஓம் அன்னையே போற்றி
ஓம் அக்னீஸ்வரியே போற்றி
ஓம் அஷ்டமி நாயகியே போற்றி
ஓம் அவதூறு ஒழிப்பவளே போற்றி
ஓம் அசுரர்க்கு எமனே போற்றி
ஓம் அன்பர்க்கெளியவளே போற்றி
ஓம் அமரரைக் காப்பவளே போற்றி
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் அறக்காவலே போற்றி
ஓம் அபயகரத்தாளே போற்றி
ஓம் ஆதாரசக்தியே போற்றி
ஓம் இறைவியே போற்றி
ஓம் இச்சா சக்தியே போற்றி
ஓம் ஈர்ப்பவளே போற்றி
ஓம் ஈடிலாளே போற்றி
ஓம் உக்ரதேவதையே போற்றி
ஓம் உன்மத்தபங்கியே போற்றி
ஓம் எண்கரத்தாளே போற்றி
ஓம் எட்டாக்குழலியே போற்றி
ஓம் எலுமிச்சை விரும்பியே போற்றி
ஓம் எதிர்ப்பைக் குலைப்பவளே போற்றி
ஓம் ஏழ்மையகற்றுபவளே போற்றி
ஓம் ஏவல் குலைப்பவளே போற்றி
ஓம் ஒளிர்பவளே போற்றி
ஓம் ஓங்காரியே போற்றி
ஓம் கம்பீர உருவமே போற்றி
ஓம் கவலையறச் செய்பவளே போற்றி
ஓம் காளியே போற்றி
ஓம் கதாயுததாரியே போற்றி
ஓம் காபாலியே போற்றி
ஓம் காப்பவளே போற்றி
ஓம் கிரிதுர்கையே போற்றி
ஓம் கிருஷ்ணசோதரியே போற்றி
ஓம் குமாரியே போற்றி
ஓம் குறுநகையளே போற்றி
ஓம் குங்குமப்பிரியையே போற்றி
ஓம் குலக்காவலே போற்றி
ஓம் க்ரியாசக்தியே போற்றி
ஓம் கோள்விளை தீர்ப்பவளே போற்றி
ஓம் சண்டிகேசுவரியே போற்றி
ஓம் சர்வசக்தியே போற்றி
ஓம் சந்தனப்பிரியையே போற்றி
ஓம் சர்வாலங்காரியே போற்றி
ஓம் சாமுண்டியே போற்றி
ஓம் சர்வாயுததாரியே போற்றி
ஓம் சிவதுர்கையே போற்றி
ஓம் சினவேல்கண்ணியே போற்றி
ஓம் சிம்மவாஹினியே போற்றி
ஓம் சித்தியளிப்பவளே போற்றி
ஓம் சியாமளையே போற்றி
ஒம் சீதளையே போற்றி
ஓம் செம்மேனியளே போற்றி
ஓம் செவ்வண்ணப்பிரியையே போற்றி
ஓம் ஜயதேவியே போற்றி
ஓம் ஜோதிக்கனலே போற்றி
ஓம் ஞானசக்தியே போற்றி
ஓம் ஞாலக்காவலே போற்றி
ஓம் தற்பரமே போற்றி
ஓம் தயாபரியே போற்றி
ஓம் திருவுருவே போற்றி
ஓம் திரிசூலியே போற்றி
ஓம் தீதழிப்பவளே போற்றி
ஓம் தீனர்க்காவலே போற்றி
ஓம் துட்டர்க்குத் தீயே போற்றி
ஓம் துர்கனையழித்தவளே போற்றி
ஓம் துக்கம் தீர்ப்பவளே போற்றி
ஓம் நலமளிப்பவளே போற்றி
ஓம் நந்தர்குலக்கொழுந்தே போற்றி
ஓம் நவசக்தியே போற்றி
ஓம் நவகோணத்துறைபவனே போற்றி
ஓம் நிமலையே போற்றி
ஓம் நிலவணியாளே போற்றி
ஓம் நிறைவே போற்றி
ஓம் நிறைந்தவளே போற்றி
ஓம் படைத்தவளே போற்றி
ஓம் பாலிப்பவளே போற்றி
ஓம் பயிரவியே போற்றி
ஓம் பயநாசினியே போற்றி
ஓம் பிரம்மசாரிணியே போற்றி
ஓம் பயங்கரியே போற்றி
ஓம் புவனேஸ்வரியே போற்றி
ஓம் பூஜிக்கப்படுபவளே போற்றி
ஓம் மலநாசினியே போற்றி
ஓம் மஹிஷாசுரமர்த்தினியே போற்றி
ஓம் மங்கலவடிவே போற்றி
ஓம் மஹேஸ்வரியே போற்றி
ஓம் மங்கையர்க்கரசியே போற்றி
ஓம் மகவளிப்பவளே போற்றி
ஓம் மாதர் துணையே போற்றி
ஓம் மாங்கல்யம் காப்பவளே போற்றி
ஓம் முக்கண்ணியே போற்றி
ஓம் முக்தியளிப்பவளே போற்றி
ஓம் மூத்தவளே போற்றி
ஓம் மூலப்பொருளே போற்றி
ஓம் மூவுலகத்தாயே போற்றி
ஓம் மூவுலகும் வென்றவளே போற்றி
ஓம் யசோதபுத்ரியே போற்றி
ஓம் யமபயம் தீர்ப்பவளே போற்றி
ஓம் ராகுகால தேவதையே போற்றி
ஓம் ரௌத்திரியே போற்றி
ஓம் வல்லவளே போற்றி
ஓம் வாராகியே போற்றி
ஓம் வீர உருவமே போற்றி
ஓம் விஷ்ணு துர்கையே போற்றி
ஓம் வையகக்காப்பே போற்றி
ஓம் வைஷ்ணவியே போற்றி
ஓம் வெற்றியளிப்பவளே போற்றி



அஷ்டலக்ஷ்மி  போற்றி


ஓம் அஷ்டலக்ஷ்மியே போற்றி
ஓம் அதிர்ஷ்டலக்ஷ்மியே போற்றி
ஓம் அன்னலக்ஷ்மியே போற்றி
ஓம் அபயலக்ஷ்மியே போற்றி
ஓம்  அலங்காரலக்ஷ்மியே போற்றி
ஓம் அஸ்வாரூடலக்ஷ்மியே போற்றி
ஓம் அஷ்டபுஜலக்ஷ்மியே போற்றி
ஓம் அஷ்டாதசபுஜலக்ஷ்மியே போற்றி
ஓம் அம்ருதலக்ஷ்மியே போற்றி
ஓம் அனந்தலக்ஷ்மியே போற்றி
ஓம் ஆதிலக்ஷ்மியே போற்றி
ஓம் ஆனந்தலக்ஷ்மியே போற்றி
ஓம் இஷ்டலக்ஷ்மியே போற்றி
ஓம் இந்திரலக்ஷ்மியே போற்றி
ஓம் ஐஸ்வர்யலக்ஷ்மியே போற்றி
ஓம் ஓங்கார லக்ஷ்மியே போற்றி
ஓம் கஜலக்ஷ்மியே போற்றி
ஓம் கனகலக்ஷ்மியே போற்றி
ஓம் கற்பகலக்ஷ்மியே போற்றி
ஓம் கனகாபிஷேக லக்ஷ்மியே போற்றி
ஓம் கன்யாலக்ஷ்மியே போற்றி
ஓம் காருண்யலக்ஷ்மியே போற்றி
ஓம் கிருபாலக்ஷ்மியே போற்றி
ஓம் கீர்த்திலக்ஷ்மியே போற்றி
ஓம் கோ லக்ஷ்மியே போற்றி
ஓம் கோலாபுரி லக்ஷ்மியே போற்றி
ஓம் சத்ய லக்ஷ்மியே போற்றி
ஓம் சர்வ லக்ஷ்மியே போற்றி
ஓம் சம்பத்ஸ்வரூபியே போற்றி
ஓம் சந்தானலக்ஷ்மியே போற்றி
ஓம் சாந்தலக்ஷ்மியே போற்றி
ஓம் சாகரோத்பவ லக்ஷ்மியே போற்றி
ஓம் சித்த லக்ஷ்மியே போற்றி
ஓம் சிவானந்த லக்ஷ்மியே போற்றி
ஓம் சுபலக்ஷ்மியே போற்றி
ஓம் சுந்தர லக்ஷ்மியே போற்றி
ஓம் சுவர்ண லக்ஷ்மியே போற்றி
ஓம் சுஸ்மித லக்ஷ்மியே போற்றி
ஓம் சுகாசன லக்ஷ்மியே போற்றி
ஓம் சௌபாக்ய லக்ஷ்மியே போற்றி
ஓம் ஸ்தித லக்ஷ்மியே போற்றி
ஓம் ஸெளந்தர்ய லக்ஷ்மியே போற்றி
ஓம் சுவர்க்க லக்ஷ்மியே போற்றி
ஓம் ஸைன்ய லக்ஷ்மியே போற்றி
ஓம் ஜய லக்ஷ்மியே போற்றி
ஓம் ஜகல்லக்ஷ்மியே போற்றி
ஓம் ஜோதி லக்ஷ்மியே போற்றி
ஓம் ஜேஷ்ட சோதரியே போற்றி
ஓம் ஷட்புஜ லக்ஷ்மியே போற்றி
ஓம் ஷோடச லக்ஷ்மியே போற்றி
ஓம் தன லக்ஷ்மியே போற்றி
ஓம் தனத லக்ஷ்மியே போற்றி
ஓம் தயா லக்ஷ்மியே போற்றி
ஓம் தான்ய லக்ஷ்மியே போற்றி
ஓம் த்ரிகுண லக்ஷ்மியே போற்றி
ஓம் த்வார லக்ஷ்மியே போற்றி
ஓம் த்விபுஜ லக்ஷ்மியே போற்றி
ஓம் த்விபுஜ வீரலக்ஷ்மியே போற்றி
ஓம் திவ்ய லக்ஷ்மியே போற்றி
ஓம் தீபலக்ஷ்மியே போற்றி
ஓம் தீரலக்ஷ்மியே போற்றி
ஓம் தைர்ய லக்ஷ்மியே போற்றி
ஓம் துளசி லக்ஷ்மியே போற்றி
ஓம் துக்க நிவாரணியே போற்றி
ஓம் நாகலக்ஷ்மியே போற்றி
ஓம் நித்திய லக்ஷ்மியே போற்றி
ஓம் பால லக்ஷ்மியே போற்றி
ஓம் பங்கஜ லக்ஷ்மியே போற்றி
ஓம் பாக்ய லக்ஷ்மியே போற்றி
ஓம் பிரம்மசோதரியே போற்றி
ஓம் பிரசன்ன லக்ஷ்மியே போற்றி
ஓம் பிரகாச லக்ஷ்மியே போற்றி
ஓம் பில்வ லக்ஷ்மியே போற்றி
ஓம் பூலக்ஷ்மியே போற்றி
ஓம் புவன லக்ஷ்மியே போற்றி
ஓம் பூஜ்ய லக்ஷ்மியே போற்றி
ஓம் பூர்ண லக்ஷ்மியே போற்றி
ஓம் போக லக்ஷ்மியே போற்றி
ஓம் மகாலக்ஷ்மியே போற்றி
ஓம் மாயாலக்ஷ்மியே போற்றி
ஓம் மோக்ஷலக்ஷ்மியே போற்றி
ஓம் மோஹனலக்ஷ்மியே போற்றி
ஓம் யக்ஞலக்ஷ்மியே போற்றி
ஓம் யந்திரலக்ஷ்மியே போற்றி
ஓம் யோகலக்ஷ்மியே போற்றி
ஓம் யௌவன லக்ஷ்மியே போற்றி
ஓம் ராஜலக்ஷ்மியே போற்றி
ஓம் ராஜ்யலக்ஷ்மியே போற்றி
ஓம் ரம்யலக்ஷ்மியே போற்றி
ஓம் ரூபலக்ஷ்மியே போற்றி
ஓம் லக்ஷ்மியே போற்றி
ஓம் லங்காதகனியே போற்றி
ஓம் வரலக்ஷ்மியே போற்றி
ஓம் வரதலக்ஷ்மியே போற்றி
ஓம் விஷ்ணுலக்ஷ்மியே போற்றி
ஓம் விஜயலக்ஷ்மியே போற்றி
ஓம் விஸ்வலக்ஷ்மியே போற்றி
ஓம் வித்யாலக்ஷ்மியே போற்றி
ஓம் வீரலக்ஷ்மியே போற்றி
ஓம் வீர்யலக்ஷ்மியே போற்றி
ஓம் ஞானலக்ஷ்மியே போற்றி
ஓம் ஹம்ஸவாகினியே போற்றி
ஓம் ஹ்ருதயலக்ஷ்மியே போற்றி
ஓம் ஹிரண்ய லக்ஷ்மியே போற்றி
ஓம் ஸ்ரீ லக்ஷ்மியே போற்றி
ஓம் ஸ்ரீ சக்ர லக்ஷ்மியே போற்றி
ஓம் ஸ்ரீ சூக்த லக்ஷ்மியே போற்றி
ஓம் ஸ்ரீப்ரதனாலக்ஷ்மியே போற்றி



மகா காளியம்மன் போற்றி


ஓம் காளியே போற்றி
ஓம் காக்குமன்னையே போற்றி
ஓம் அனுக்ரஹ காளியே போற்றி
ஓம் அல்லலறுப்பவளே போற்றி
ஓம் அஷ்டபுஜ காளியே போற்றி
ஓம் அகா நாசினியே போற்றி
ஓம் அளத்தற்கரியவளே போற்றி
ஓம் அங்குசபாசமேந்தியவளே போற்றி
ஓம் ஆதாரசக்தியே போற்றி
ஓம் ஆலகாலத் தோன்றலே போற்றி
ஓம் இளங்காளியே போற்றி
ஓம் இடுகாட்டுமிருப்பவளே போற்றி
ஓம் இஷ்டதேவதையே போற்றி
ஓம் இடர் பொடிப்பவளே போற்றி
ஓம் ஈறிலாளே போற்றி
ஓம் ஈரெண்முகத்தாளே போற்றி
ஓம் உயிர்ப்பிப்பவளே போற்றி
ஓம் உக்ரகாளியே போற்றி
ஓம் உச்சிகாளியே போற்றி
ஓம் உச்சினிமாகாளியே போற்றி
ஓம் உதிரமேற்றவளே போற்றி
ஓம் ஊழிசக்தியே போற்றி
ஓம் எழுதலைக்காளியே போற்றி
ஓம் எட்டெட்டு கரத்தாளே போற்றி
ஓம் எதிர் இலாளே போற்றி
ஓம் எலுமிச்சைப்பிரியையே போற்றி
ஓம் ஓங்காரியே போற்றி
ஓம் ஹும்காரியே போற்றி
ஓம் கபாலியே போற்றி
ஓம் கங்காளியே போற்றி
ஓம் கரிய காளியே போற்றி
ஓம் கட்வாங்கதாரியே போற்றி
ஓம் கபந்தவாகினியே போற்றி
ஓம் கபாலமாலை அணிந்தவளே போற்றி
ஓம் காமகாளியே போற்றி
ஓம் காலபத்னியே போற்றி
ஓம் குஹ்யகாளியே போற்றி
ஓம் குங்கும காளியே போற்றி
ஓம் சமரிலாளே போற்றி
ஓம் சம்ஹார காளியே போற்றி
ஓம் சவ ஆரோகணியே போற்றி
ஓம் சண்டமுண்டசம்ஹாரியே போற்றி
ஓம் சிம்மவாகினியே போற்றி
ஓம் சிககுண்டலதாரியே போற்றி
ஓம் சித்த காளியே போற்றி
ஓம் சிறுவாச்சூராளே போற்றி
ஓம் சிவசக்தியே போற்றி
ஓம் சீலைக்காளியே போற்றி
ஓம் சுடலைக் காளியே போற்றி
ஓம் சுந்தர மாகாளியே போற்றி
ஓம் சுரகாளியே போற்றி
ஓம் சூல தாரியே போற்றி
ஓம் செங்காளியே போற்றி
ஓம் செந்தூரம் ஏற்பவளே போற்றி
ஓம் சோமகாளியே போற்றி
ஓம் சோகம் தீர்ப்பவளே போற்றி
ஓம் தன காளியே போற்றி
ஓம் தக்ஷிணகாளியே போற்றி
ஓம் தண்டினியே போற்றி
ஓம் தசமுகியே போற்றி
ஓம் தாண்டவியே போற்றி
ஓம் தாருகனையழித்தவளே போற்றி
ஓம் திகம்பரியே போற்றி
ஓம் திரிபுரஜனனியே போற்றி
ஓம் தில்லைக்காளியே போற்றி
ஓம் தீதழிப்பவளே போற்றி
ஓம் நாத ஆதாரமே போற்றி
ஓம் நாகாபரணியே போற்றி
ஓம் நர்த்தன காளியே போற்றி
ஓம் நிர்வாணியே போற்றி
ஓம் நித்திய காளியே போற்றி
ஓம் நிக்ரஹ காளியே போற்றி
ஓம் பல்பெயராளே போற்றி
ஓம் பராசக்தியே போற்றி
ஓம் பஞ்சகாளியே போற்றி
ஓம் பத்ரகாளியே போற்றி
ஓம் பஞ்சமுகியே போற்றி
ஓம் பயங்கரியே போற்றி
ஓம் பல்வடிவினனே போற்றி
ஓம் பாதாளகாளியே போற்றி
ஓம் பூத காளியே போற்றி
ஓம் பூக்குழி ஏற்பவளே போற்றி
ஓம் பெருங்கண்ணியே போற்றி
ஓம் பேராற்றலே போற்றி
ஓம் பொன்காளியே போற்றி
ஓம் பொல்லாரையழிப்பவளே போற்றி
ஓம் மதுரகாளியே போற்றி
ஓம் மடப்புரத்தாளே போற்றி
ஓம் ம(க)õகாளியே போற்றி
ஓம் மகாமாயையே போற்றி
ஓம் மங்களரூபியே போற்றி
ஓம் முக்கண்ணியே போற்றி
ஓம் மூவுலக நாயகியே போற்றி
ஓம் மூர்க்க காளியே போற்றி
ஓம் மோக நாசினியே போற்றி
ஓம் யக்ஷிணி காளியே போற்றி
ஓம் யோகீஸ்வரியே போற்றி
ஓம் ரக்ஷிணி காளியே போற்றி
ஓம் ரௌத்திரியே போற்றி
ஓம் வடபத்ரகாளியே போற்றி
ஓம் வங்கத்து தேவியே போற்றி
ஓம் விரிசடையாளே போற்றி
ஓம் வீரசக்தியே போற்றி
ஓம் வித்யா தேவியே போற்றி
ஓம் வீரமாகாளியே போற்றி
ஓம் வெக்காளியே போற்றி
ஓம் வெற்றி வடிவே போற்றி
ஓம் காளீஸ்வரித்தாயே போற்றி



சப்தமாதர்  போற்றி


ஓம் பிரம்மியே போற்றி
ஓம் பிரம்ம சக்தியே போற்றி
ஓம் அன்னவாகினியே போற்றி
ஓம் அபயகரத்தாளே போற்றி
ஓம் இந்தளூர்த்தேவியே போற்றி
ஓம் ஈர்த்து அருள்பவளே போற்றி
ஓம் சடைமுடியாளே போற்றி
ஓம் ஜபமாலை ஏந்தியவளே போற்றி
ஓம் நான்முகியே போற்றி
ஓம் நால்வேதமாதாவே போற்றி
ஓம் பத்மாசனியே போற்றி
ஓம் பயநாசினியே போற்றி
ஓம் மலர்விழியாளே போற்றி
ஓம் மான்தோலுடையாளே போற்றி
ஓம் மாகேஸ்வரியே போற்றி
ஓம் மகேஸ்வரன் ரூபியே போற்றி
ஓம் அன்பர்க்கு எளியவளே போற்றி
ஓம் அசுரநிக்ரஹியே போற்றி
ஓம் கருணாபுரத்தேவியே போற்றி
ஓம் காளை வாகினியே போற்றி
ஓம் த்ரிசூலதாரியே போற்றி
ஓம் த்ரைலோக்ய மோகினியே போற்றி
ஓம் பஞ்சமுகியே போற்றி
ஓம் பல்லாயுதமேந்தியவளே போற்றி
ஓம் படர் சடையாளே போற்றி
ஓம் பாம்பணியாளே போற்றி
ஓம் முக்கண்ணியே போற்றி
ஓம் வெண்ணிற மேனியளே போற்றி
ஓம் வெற்றியளிப்பவளே போற்றி
ஓம் கௌமாரியே போற்றி
ஓம் குமார சக்தியே போற்றி
ஓம் அகந்தை அளிப்பவளே போற்றி
ஓம் அசுர சம்காரியே போற்றி
ஓம் உண்மையுணர்த்துபவளே போற்றி
ஓம் உடும்ப மரத்தடியிலிருப்பவளே போற்றி
ஓம் கஞ்சனூர்த் தேவியே போற்றி
ஓம் குங்கும வண்ணியே போற்றி
ஓம் சண்முகியே போற்றி
ஓம் சக்தி ஆயுததாரியே போற்றி
ஓம் மயில்வாகினியே போற்றி
ஓம் மகுடமணிந்தவளே போற்றி
ஓம் வீர சக்தியே போற்றி
ஓம் வறியோர்க்காவலே போற்றி
ஓம் வைஷ்ணவியே போற்றி
ஓம் விரிகண்ணாளே போற்றி
ஓம் கருடவாகினியே போற்றி
ஓம் கதாயுததாரியே போற்றி
ஓம் சங்கேந்தியவளே போற்றி
ஓம் சக்கரமும் ஏற்றவளே போற்றி
ஓம் சுந்தரவதனியே போற்றி
ஓம் சேந்தன்குடித்தேவியே போற்றி
ஓம் பெருமுலையாளே போற்றி
ஓம் பேரழகியே போற்றி
ஓம் மகாமாயையே போற்றி
ஓம் மஞ்சள்நிற ஆடையளே போற்றி
ஓம் வனமால்தாரியே போற்றி
ஓம் விஷ்ணு அம்சதேவியே போற்றி
ஓம் வாராகியே போற்றி
ஓம் வழுவூர்த்தேவியே போற்றி
ஓம் அஸ்திரவாராகியே போற்றி
ஓம் ஆபரணதாரியே போற்றி
ஓம் கதாயுததாரியே போற்றி
ஓம் கபாலமாலையணிந்தவளே போற்றி
ஓம் கலப்பை ஏந்தியவளே போற்றி
ஓம் கார்முகில் வண்ணியே போற்றி
ஓம் சக்தி சேனாபதியே போற்றி
ஓம் ஸ்வப்ன வாராகியே போற்றி
ஓம் துஷ்டநிக்ரஹியே போற்றி
ஓம் தூம்ரவாராகியே போற்றி
ஓம் பட்டுடுத்தவளே போற்றி
ஓம் பகை பொடிப்பவளே போற்றி
ஓம் மஹிஷ வாகினியே போற்றி
ஓம் மகா வாராகியே போற்றி
ஓம் இந்திராணியே போற்றி
ஓம் இன்னல் களைபவளே போற்றி
ஓம் அங்குசதாரியே போற்றி
ஓம் ஆயிரம் கண்ணாளே போற்றி
ஓம் கஜவாகினியே போற்றி
ஓம் கதாயுதபாணியே போற்றி
ஓம் கலக்கம் தீர்ப்பவளே போற்றி
ஓம் கல்பமரத்தடியிலிருப்பவளே போற்றி
ஓம் தயாபரியே போற்றி
ஓம் தருமபுரத் தேவியே போற்றி
ஓம் யமபயநாசினியே போற்றி
ஓம் யானைக்கொடியுடையவளே போற்றி
ஓம் சாமுண்டேஸ்வரியே போற்றி
ஓம் சண்டனையழித்தவளே போற்றி
ஓம் ஆந்தை வாகினியே போற்றி
ஓம் அஷ்டயோகினி சூழ்ந்தவளே போற்றி
ஓம் அதிகந்தரியே போற்றி
ஓம் ஆடியருள்பவளே போற்றி
ஓம் ஊர்த்துவகேசியே போற்றி
ஓம் உத்திரமாயூரதேவியே போற்றி
ஓம் கர்ஜிப்பவளே போற்றி
ஓம் கனல் ஏந்தியவளே போற்றி
ஓம் பத்மாக்ஷியே போற்றி
ஓம் பிரளயரூபியே போற்றி
ஓம் வாருணிசாமுண்டியே போற்றி
ஓம் வடவிருக்ஷத்தடியிலிருப்பவளே போற்றி
ஓம் ரக்தசாமுண்டியே போற்றி
ஓம் ராக்ஷஸநிக்ரஹியே போற்றி
ஓம் எழுபெருந்தேவியரே போற்றி
ஓம் எளியோரைக் காப்போரே போற்றி
ஓம் சிவாலயத் தேவியரே போற்றி
ஓம் சீக்கிரமே கனிபவரே போற்றி
ஓம் வடதிசை நோக்குபவரே போற்றி
ஓம் வரம்யாவும் அருள்பவரே போற்றி



காயத்ரி தேவி  போற்றி


ஓம் ஸ்ரீ காயத்ரி தேவியே போற்றி ஓம்!
ஓம் அருள் அன்னையே போற்றி ஓம்!
ஓம் அஞ்ஞானத்தை அகற்றுபவளே போற்றி ஓம்!
ஓம் அமைதியே போற்றி ஓம்!
ஓம் அழிவற்றவளே போற்றி ஓம்!
ஓம் ஆத்ம சக்தியே போற்றி ஓம்!
ஓம் ஆக்ஞா சக்தியே போற்றி ஓம்!
ஓம் இனிமையே போற்றி ஓம்!
ஓம் இன்பமே போற்றி ஓம்!
ஓம் ஸ்ரீ காயத்ரி தேவியே போற்றி ஓம்!
ஓம் ஈரைந்து கரங்களுடையவளே போற்றி ஓம்!
ஓம் காட்சிக்கு இனியவளே போற்றி ஓம்!
ஓம் சங்குசக்கரம் ஏந்தியவளே போற்றி ஓம்!
ஓம் சகஸ்ரார சக்தியே போற்றி ஓம்!
ஓம் சந்திர பிம்பமே போற்றி ஓம்!
ஓம் சுயஞ் ஜோதியே போற்றி ஓம்!
ஓம் தாமரைப் பீடத்தில் அமர்ந்திருப்பவளே போற்றி ஓம்!
ஓம் நல்லார்க்கு இனியவளே போற்றி ஓம்!
ஓம் நலமளிப்பவளே போற்றி ஓம்!
ஓம் ஸ்ரீ காயத்ரி தேவியே போற்றி ஓம்!
ஓம் மூல மந்திரமே போற்றி ஓம்!
ஓம் மூலாதாரமே போற்றி ஓம்!
ஓம் ஞான பூமியே போற்றி ஓம்!
ஓம் சாவித்ரி தேவியே போற்றி ஓம்!
ஓம் ஆதியும் அந்தமும் இல்லாதவளே போற்றி ஓம்!
ஓம் ஈஸ்வரியே போற்றி ஓம்!
ஓம் ஊழ்வினையைப் போக்குபவளே போற்றி ஓம்!
ஓம் ஒப்பில்லாதவளே போற்றி ஓம்!
ஓம் குற்றமற்றவளே போற்றி ஓம்!
ஓம் ஸ்ரீ காயத்ரி தேவியே போற்றி ஓம்!
ஓம் சர்வேஸ்வரியே போற்றி ஓம்!
ஓம் ஸ்ரீ சக்கரமே போற்றி ஓம்!
ஓம் சாந்தமே போற்றி ஓம்!
ஓம் சாஸ்திரங்களின் வடிவமே போற்றி ஓம்!
ஓம் சுகத்தைக் கொடுப்பவளே போற்றி ஓம்!
ஓம் சொரூபிணியே போற்றி ஓம்!
ஓம் தாயாக இருப்பவளே போற்றி ஓம்!
ஓம் தியான ரூபமே போற்றி ஓம்!
ஓம் தியானத்திற்கு இலக்கணமே போற்றி ஓம்!
ஓம் ஸ்ரீ காயத்ரி தேவியே போற்றி ஓம்!
ஓம் நற்கதியே போற்றி ஓம்!
ஓம் நிர்மலமானவனே போற்றி ஓம்!
ஓம் நிறை ஞானியே போற்றி ஓம்!
ஓம் பரிசுத்தமானவளே போற்றி ஓம்!
ஓம் மாசற்றவளே போற்றி ஓம்!
ஓம் வித்யா வதியே போற்றி ஓம்!
ஓம் வேத வடிவமே போற்றி ஓம்!
ஓம் யாகப் பிரியையே போற்றி ஓம்!
ஓம் யோகீஸ்வரியே போற்றி ஓம்!
ஓம் ஸ்ரீ காயத்ரி தேவியே போற்றி ஓம்!
ஓம் சரஸ்வதியே போற்றி ஓம்!
ஓம் அட்சர வடிவமே போற்றி ஓம்!
ஓம் அறிவு வடிவினளே போற்றி ஓம்!
ஓம் கலையே போற்றி ஓம்!
ஓம் கலைகளின் இருப்பிடமே போற்றி ஓம்!
ஓம் கலைவாணியே போற்றி ஓம்!
ஓம் கலையரசியே போற்றி ஓம்!
ஓம் கலைமகளே போற்றி ஓம்!
ஓம் கலைக்கூடமே போற்றி ஓம்!
ஓம் ஸ்ரீ காயத்ரி தேவியே போற்றி ஓம்!
ஓம் கலைமாமணியே போற்றி ஓம்!
ஓம் கலைச் செல்வியே போற்றி ஓம்!
ஓம் கலைக் களஞ்சியமே போற்றி ஓம்!
ஓம் கலைகளின் வடிவமே போற்றி ஓம்!
ஓம் கலைகளின் தலைவியே போற்றி ஓம்!
ஓம் கல்விக் கடலே போற்றி ஓம்!
ஓம் கல்விக் களஞ்சியமே போற்றி ஓம்!
ஓம் கல்விப் பொருளே போற்றி ஓம்!
ஓம் கல்விக்கு உரியவளே போற்றி ஓம்!
ஓம் ஸ்ரீ காயத்ரி தேவியே போற்றி ஓம்!
ஓம் வாணியே போற்றி ஓம்!
ஓம் வாகீஸ்வரியே போற்றி ஓம்!
ஓம் வித்தகியே போற்றி ஓம்!
ஓம் வீணா வாணியே போற்றி ஓம்!
ஓம் நாவுக்கரசியே போற்றி ஓம்!
ஓம் சத்தியமே போற்றி ஓம்!
ஓம் சத்திய வடிவே போற்றி ஓம்!
ஓம் குருவே போற்றி ஓம்!
ஓம் தைரிய வடிவினளே போற்றி ஓம்!
ஓம் ஸ்ரீ காயத்ரி தேவியே போற்றி ஓம்!
ஓம் ஞாபகசக்தி வடிவினளே போற்றி ஓம்!
ஓம் ஞானேஸ்வரியே போற்றி ஓம்!
ஓம் புவனேஸ்வரியே போற்றி ஓம்!
ஓம் யோகேஸ்வரியே போற்றி ஓம்!
ஓம் லோகேஸ்வரியே போற்றி ஓம்!
ஓம் தியானேஸ்வரியே போற்றி ஓம்!
ஓம் ஞானமே போற்றி ஓம்!
ஓம் ஞான வடிவமே போற்றி ஓம்!
ஓம் ஞானானந்த வடிவமே போற்றி ஓம்!
ஓம் ஸ்ரீ காயத்ரி தேவியே போற்றி ஓம்!
ஓம் ராணியே போற்றி ஓம்!
ஓம் நாராயணியே போற்றி ஓம்!
ஓம் பூரண சந்திரனே போற்றி ஓம்!
ஓம் மங்களகரமானவளே போற்றி ஓம்!
ஓம் கற்பகத் தருவே போற்றி ஓம்!
ஓம் வெற்றி வடிவினளே போற்றி ஓம்!
ஓம் எங்கும் நிறைந்திருப்பவளே போற்றி ஓம்!
ஓம் ஸ்ரீ காயத்ரி தேவியே போற்றி ஓம்!



மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி போற்றி


ஓம் ஓம் சக்தியே போற்றி ஓம்!
ஓம் ஓங்கார ஆனந்தியே போற்றி ஓம்!
ஓம் உலக நாயகியே போற்றி ஓம்!
ஓம் உறவுக்கும் உறவானவளே போற்றி ஓம்!
ஓம் உள்ளமலர் உவந்தவளே போற்றி ஓம்!
ஓம் ஓதரிய பெரும் பொருளே போற்றி ஓம்!
ஓம் உண்மைப் பரம்பொருளே போற்றி ஓம்!
ஓம் உயிராய் நின்றவளே போற்றி ஓம்!
ஓம் மருவத்தூர் அமர்ந்தாய் போற்றி ஓம்!
ஓம் மனமாசைத் துடைப்பாய் போற்றி ஓம்!
ஓம் கவலை தவிர்ப்பாய் போற்றி ஓம்!
ஓம் ககனவெளி ஆனாய் போற்றி ஓம்!
ஓம் புற்றாகி வந்தவளே போற்றி ஓம்!
ஓம் பாலாகி வடிந்தவளே போற்றி ஓம்!
ஓம் பாமரர் துயர் துடைப்பாய் போற்றி ஓம்!
ஓம் பண்ணாக இசைந்தாய் போற்றி ஓம்!
ஓம் பாமலர் உவந்தாய் போற்றி ஓம்!
ஓம் பாம்புரு ஆனாய் போற்றி ஓம்!
ஓம் சித்துரு அமைந்தாய் போற்றி ஓம்!
ஓம் செம்பொருள் நீயே போற்றி ஓம்!
ஓம் சக்தியே தாயே போற்றி ஓம்!
ஓம் சன்மார்க்க நெறியே போற்றி ஓம்!
ஓம் சமதர்ம விருந்தே போற்றி ஓம்!
ஓம் ஓங்கார உருவே போற்றி ஓம்!
ஓம் ஒருதவத்துக் குடையாய் போற்றி ஓம்!
ஓம் நீள்பசி தவிர்ப்பாய் போற்றி ஓம்!
ஓம் நிம்மதி தருவாய் போற்றி ஓம்!
ஓம் அகிலமே ஆனாய் போற்றி ஓம்!
ஓம் அகண்டமே விரிந்தாய் போற்றி ஓம்!
ஓம் ஆன்மீகச் செல்வமே போற்றி ஓம்!
ஓம் அனலாக ஆனாய் போற்றி ஓம்!
ஓம் நீராக நிறைந்தாய் போற்றி ஓம்!
ஓம் நிலனாகத் தணிந்தாய் போற்றி ஓம்!
ஓம் தூறாக வளர்ந்தாய் போற்றி ஓம்!
ஓம் துணிபொருள் நீயே போற்றி ஓம்!
ஓம் காராக வருவாய் போற்றி ஓம்!
ஓம் கனியான மனமே போற்றி ஓம்!
ஓம் மூலமே முதலே போற்றி ஓம்!
ஓம் முனைச்சுழி விழியே போற்றி ஓம்!
ஓம் வீணையே இசையே போற்றி ஓம்!
ஓம் விரைமலர் அணிந்தாய் போற்றி ஓம்!
ஓம் தத்துவங் கடந்தாய் போற்றி ஓம்!
ஓம் சகலமறைப் பொருளே போற்றி ஓம்!
ஓம் உத்தமி ஆனாய் போற்றி ஓம்!
ஓம் உயிர்மொழிக்குருவே போற்றி ஓம்!
ஓம் நெஞ்சம் நீ மலர்வாய் போற்றி ஓம்!
ஓம் நீள் நிலத் தெய்வமே போற்றி ஓம்!
ஓம் துரிய நிலையே போற்றி ஓம்!
ஓம் துரியா தீத வைப்பே போற்றி ஓம்!
ஓம் ஆயிர இதழ் உறைவாய் போற்றி ஓம்!
ஓம் அகிலமெலாம் ஆட்டுவிப்பாய் போற்றி ஓம்!
ஓம் கருவான மூலம் போற்றி ஓம்!
ஓம் உருவான கோலம் போற்றி ஓம்!
ஓம் சாந்தமே உருவாய் போற்றி போற்றி ஓம்!
ஓம் சரித்திரமே மறைத்தாய் போற்றி ஓம்!
ஓம் சின்முத்திரை தெரிப்பாய் போற்றி ஓம்!
ஓம் சினத்தை வேரறுப்பாய் போற்றி ஓம்!
ஓம் கையிரண்டு உடையாய் போற்றி ஓம்!
ஓம் கரைபுரண்ட கருணை போற்றி ஓம்!
ஓம் மொட்டுடைக் கரத்தாய் போற்றி ஓம்!
ஓம் மோனநல் தவத்தாய் போற்றி ஓம்!
ஓம் யோகநல் உருவே போற்றி ஓம்!
ஓம் ஒளியென ஆனாய் போற்றி ஓம்!
ஓம் எந்திரத் திருவே போற்றி ஓம்!
ஓம் மந்திரத் தாயே போற்றி ஓம்!
ஓம் பிணி தவிர்த்திடுவாய் போற்றி ஓம்!
ஓம் பிறவிநோய் அறுப்பாய் போற்றி ஓம்!
ஓம் மாயவன் தங்கையே போற்றி ஓம்!
ஓம் சேயவன் தாயே போற்றி ஓம்!
ஓம் திரிபுரத்தாளே போற்றி ஓம்!
ஓம் ஒருதவம் தெரிப்பாய் போற்றி ஓம்!
ஓம் வேம்பினை ஆள்வாய் போற்றி ஓம்!
ஓம் வினையெலாம் தீர்ப்பாய் போற்றி ஓம்!
ஓம் அஞ்சனம் அருள்வாய் போற்றி ஓம்!
ஓம் ஆருயிர் மருந்தே போற்றி ஓம்!
ஓம் கண்ணொளி காப்பாய் போற்றி ஓம்!
ஓம் கருத்தொளி தருவாய் போற்றி ஓம்!
ஓம் அருள்ஒளி செய்வாய் போற்றி ஓம்!
ஓம் அன்பொளி கொடுப்பாய் போற்றி ஓம்!
ஓம் கனவிலே வருவாய் போற்றி ஓம்!
ஓம் கருத்திலே நுழைவாய் போற்றி ஓம்!
ஓம் மக்களைக் காப்பாய் போற்றி ஓம்!
ஓம் மனநோயைத் தவிர்ப்பாய் போற்றி ஓம்!
ஓம் எத்திசையும் ஆனாய் போற்றி ஓம்!
ஓம் இதயமாம் வீணை போற்றி ஓம்!
ஓம் உருக்கமே ஒளியே போற்றி ஓம்!
ஓம் உள்ளுறை விருந்தே போற்றி ஓம்!
ஓம் மலப்பிணி தவிர்ப்பாய் போற்றி ஓம்!
ஓம் மனங்கனிந்து அருள்வாய் போற்றி ஓம்!
ஓம் நாதமே நலமே போற்றி ஓம்!
ஓம் நளின மலர் அமர்வாய் போற்றி ஓம்!
ஓம் ஒற்றுமை சொல்வாய் போற்றி ஓம்!
ஓம் உயர்நெறி தருவாய் போற்றி ஓம்!
ஓம் நித்தமுங் காப்பாய் போற்றி ஓம்!
ஓம் நேரமும் ஆள்வாய் போற்றி ஓம்!
ஓம் பத்தினி பணிந்தோம் போற்றி ஓம்!
ஓம் பாரமே உனக்கே போற்றி ஓம்!
ஓம் வித்தையே விளக்கே போற்றி ஓம்!
ஓம் விந்தையே தாயே போற்றி ஓம்!
ஓம் ஏழையர் அன்னை போற்றி ஓம்!
ஓம் ஏங்குவோர் துணையே போற்றி ஓம்!
ஓம் காலனைப் பகைத்தாய் போற்றி ஓம்!
ஓம் கண்மணி ஆனாய் போற்றி ஓம்!
ஓம் சத்தியப் பொருளே போற்றி ஓம்!
ஓம் சங்கடந் தவிர்ப்பாய் போற்றி ஓம்!
ஓம் தத்துவச் சுரங்கமே போற்றி ஓம்!
ஓம் தாய்மையின் விளக்கமே போற்றி ஓம்!
ஓம் ஆறாதார நிலையே போற்றி ஓம்!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

 

அன்னை அகிலாண்டேஸ்வரி  போற்றி


ஓம் அன்னையே அகிலாண்டேஸ்வரியே போற்றி
ஓம் அன்னத்தைப் பழிக்கும் நடையுடைய ஹம்ஸத்வனியே போற்றி
ஓம் அறிவிலா மூடன் எனக் கனுகி ரகிப்பாய் போற்றி
ஓம் அறுபத்தி நான்கு கலைகளுக்கும் அதிபதியே போற்றி
ஓம் அபயமளிக்கும் அபயாம்பிகையே போற்றி
ஓம் அழகுக் கடலான அங்கயற்கண்ணி போற்றி
ஓம் அழகிய ஸ்தன பாரங்களையுடைய அம்பிகே போற்றி
ஓம் அக்கினியாய் அருள் செய்யும் ஆவுடையே போற்றி
ஓம் ஆதி சக்தியானவளே ஆதரிப்பாய் போற்றி
ஓம் ஆதியந்த மற்ற பரம்பொருளே போற்றி
ஓம் ஆழமான பார்வையையுடைய அபிராமி போற்றி
ஓம் இன்பங்களெல்லாம் தந்தருள்வாய் ஈஸ்வரியே போற்றி
ஓம் இருளைப் போக்கி ஒளியைத் தரும் ஜோதியே போற்றி
ஓம் இரத்த பீஜனை சம்கரித்த பத்ரகாளி போற்றி
ஓம் இரவை ஏற்படுத்தும் சௌகந்திகா போற்றி
ஓம் ஈசனின் இடப்பக்கம் அமர்ந்தவளே போற்றி
ஓம் உம்பர்களுக்கு உவப்பளித்த உலகமாதா போற்றி
ஓம் ஊசிமேல் தவமிருந்த உலகநாயகியே போற்றி
ஓம் ஊனிலும் உயிரிலும் கலந்த உமையே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தவளே ஏகாட்சரி போற்றி
ஓம் என் இதயமே கோவிலாய் கொள்ளுவாய் போற்றி
ஓம் எல்லையற்ற குணநிதியே! ஏகாம்பரி போற்றி
ஓம் என்றும் பதினாறாய் விளங்கும் ஏலங்குழலி போற்றி
ஓம் ஏது செய்வேன் ஆதரிக்கும் நாயகியே போற்றி
ஓம் ஏழேழு பிறவியிலும் எனைக் காப்பாய் போற்றி
ஓம் ஐங்கரனைப் பெற்ற அன்ன பூரணியே போற்றி
ஓம் ஐசுவரியத்தை அள்ளித்தரும் சோமசுந்தரியே போற்றி
ஓம் ஒன்றே பலவான ஓங்காரி போற்றி
ஓம் என்னும் எழுத்திலே உறைந்தவளே போற்றி
ஓம் ஒளடதமாய் அங்கிருந்து ஆதரிப்பாய் போற்றி
ஓம் கயிலையில் வாழும் கற்பகமே போற்றி
ஓம் கரும்பு வில்லைக் கையில்கொண்ட கல்யாணி போற்றி
ஓம் கங்கா நதிக்கரை வாழும் விசாலாட்சி போற்றி
ஓம் காமேச்வரன் மகிழும் காமேச்வரி போற்றி
ஓம் காமத்தை ஜெயித்தக் காமாட்சி போற்றி
ஓம் கிளியைக் கையில் கொண்ட கின்னரரூபி போற்றி
ஓம் குதர்க்கமில்லா மனம்தருவாய் கோலவிழி போற்றி
ஓம் குவலயத்தை ரட்சிக்கும் கோமதி போற்றி
ஓம் குங்குமப்பூ நிறத்தாளே குமரியே போற்றி
ஓம் குகனைப் பெற்ற உமாதேவி போற்றி
ஓம் கேசவனின் தங்கையான ராஜ ராஜேஸ்வரி போற்றி
ஓம் கேட்டவர்க்கு வரமளிக்கும் காந்திமதியே போற்றி
ஓம் கோடி சூர்யப்ரகாச வதனி போற்றி
ஓம் சண்டமுண்டனை சம்கரித்த சாமுண்டி போற்றி
ஓம் சப்த,ஸ்பரிச,ரூப,ரஸ,கந்தங்களைப் பாணங்களாய் தரித்தவளே போற்றி
ஓம் சத்துருக்களை ஒடுக்கும் சாரதையே போற்றி
ஓம் சங்கரன் பாதம் பணியம் சமயாம்பா போற்றி
ஓம் சபேசனோடு நடமிடும் சிவகாமி போற்றி
ஓம் சிவசக்தி ஐக்கிய ஸ்வரூபிணி போற்றி
ஓம் சிந்தித்ததை அளிக்கவல்ல சிந்தாமணியே போற்றி
ஓம் சிரித்துப் புரமெரித்த சிவப்பிரியே போற்றி
ஓம் சிவனையே சோதித்த சாம்பவி போற்றி
ஓம் சீர்காழியில் உறையும் திரிபுர சுந்தரியே போற்றி
ஓம் கம்ப நிசும்பரை வதைத்த துர்க்காதேவி போற்றி
ஓம் சூதறியா பாலகன் நான் துணையிருப்பாய் போற்றி
ஓம் சூரிய சந்திரர்களை தாடங்கமாய் அணிந்த அகிலாண்டேஸ்வரி போற்றி
ஓம் செல்வமே வடிவான சௌந்தரி போற்றி
ஓம் சொக்கருக்கு மாலையிட்ட மீனாம்பிகே போற்றி
ஓம் சௌபாக்கியத்தைத் தரும் சௌதாமினி போற்றி
ஓம் சௌந்தர்யத்தின் பிறப்பிடமாம் சியாமளையே போற்றி
ஓம் ஞான சம்பந்தருக்கு அருளிய சிவசங்கரி போற்றி
ஓம் ஞானத்தை அளிக்கும் ஞானாம்பிகே போற்றி
ஓம் தட்சனுக்காக வாதிட்ட தாட்சாயிணி போற்றி
ஓம் தனங்களை அள்ளித்தரும் தயாமித்ரையே போற்றி
ஓம் திக்விஜயம் செய்த தடாதகை தேவியே போற்றி
ஓம் தில்லையில் தாண்டவமிடும் சபேசினி போற்றி
ஓம் தீராவினை தீர்க்கும் தியாகேஸ்வரி போற்றி
ஓம் துஷ்டர்களுக்கு அச்சத்தை தருபவளே போற்றி
ஓம் தூய என் நெஞ்சிலே துணையிருப்பாய் போற்றி
ஓம் தேன்போன்ற குரலுடைய தர்மாம்பிகா போற்றி
ஓம் தேவாதி தேவர்களின் ஸேவிதையே போற்றி
ஓம் தேடிவந்து ரட்சிக்கும் கிருபாகரி போற்றி
ஓம் தை வெள்ளியிலே ஊஞ்சலிலே ஆடிடுவாய் போற்றி
ஓம் தொண்டர்களின் உள்ளமெல்லாம் குடியிருப்பாய் போற்றி
ஓம் தோகையே! தூயமணி மரகதமே போற்றி
ஓம் நவநிதிகளின் இருப்பிடமான நவாட்சரி போற்றி
ஓம் நாடெல்லாம் நயந்து அன்பு காட்டும் நிமலையே போற்றி
ஓம் நாத வடிவானவளே நிரஞ்சனியே போற்றி
ஓம் நிரந்தரமாய் ஆனந்தத்தைத்தரும் நிர்குணமே போற்றி
ஓம் பண்டாசுரனை வதைத்த பாலாம்பிகே போற்றி
ஓம் பர்வத ராஜன் மகளான பார்வதியே போற்றி
ஓம் பகலை உண்டாக்கிய பஞ்சாட்சரி போற்றி
ஓம் பதினாறு பேறுகளையும் அளிக்கவல்ல பதிவிரதே போற்றி
ஓம் பாபம் தொலைப்பவளே பராத்பரி போற்றி
ஓம் பிறப்பறுக்க வந்த புவனேஸ்வரி போற்றி
ஓம் பிணி தீர்க்கும் நாயகி பரமேஸ்வரி போற்றி
ஓம் பிரளய காலத்திலும் பிரகாசிக்கும் பைரவி போற்றி
ஓம் பீஜாட்சரத்தில் உறையும் பத்ராயை போற்றி
ஓம் பூதப்ரேத பைசாசங்களிடமிருந்து காப்பாற்றும் வாராஹி போற்றி
ஓம் பை நாகங்களை ஆபரணமாய் அணிந்தவளே போற்றி
ஓம் மஹிஷாசுரனை வதைத்த மர்த்தனியே போற்றி
ஓம் மலையாள தேசம் வாழும் மஹேஸ்வரி போற்றி
ஓம் மலையத்துவஜன் யாகத்தில் தோன்றிய அங்கயற்கண்ணி போற்றி
ஓம் மதுரமான சிரிப்பை உடைய மதுரகாளி போற்றி
ஓம் மனதுக்கும் வாக்குக்கும் எட்டாத மதனசுந்தரி போற்றி
ஓம் மலைவாழையை தோற்கடிக்கும் துடையையுடைய மகாராக்ஞி போற்றி
ஓம் மங்களத்தைக் கொடுக்கும் மங்களாம்பிகா போற்றி
ஓம் மன்மதனை ஆளும் மகா மாயா போற்றி
ஓம் மதங்க முனிவரின் தவப்பலனாகப் பிறந்த மாதங்கி போற்றி
ஓம் மந்தகாச முகமுடைய மலர் வதனி போற்றி
ஓம் மாரியாய் அருள் புரியும் கருமாரி போற்றி
ஓம் மின்னல் கொடி போன்ற மனோன்மணியே போற்றி
ஓம் மீனைப் போன்ற கண் படைத்த மீனாட்சி போற்றி
ஓம் மூன்று குணங்களை உடைய மூகாம்பிகை போற்றி
ஓம் மேகம் போன்ற கூந்தலை உடைய மதுமதியே போற்றி
ஓம் மோகத்தை வெல்ல வைக்கும் மாயாதேவி போற்றி
ஓம் ஜலமயமான அம்ருதேஸ்வரி போற்றி
ஓம் ஸ்ரீ சக்கரத்தில் வாழும் ஸ்ரீ லலிதாம்பா போற்றி



அங்காளபரமேஸ்வரி  போற்றி


ஓம் அங்காளீஸ்வரியாயினி போற்றி
ஓம் அம்ச பிரகாயினி போற்றி
ஓம் அம்பிகாயாயினி போற்றி
ஓம் நவபஞ்சனியாய போற்றி
ஓம் ஆதிலக்ஷ்மியாய போற்றி
ஓம் குருசாந்தியே போற்றி
ஓம் குருநாராயணி போற்றி
ஓம் பஞ்சமூர்த்தியே போற்றி
ஓம் பரமேஸ்வரியே போற்றி
ஓம் பவ்யாயினி போற்றி
ஓம் பராசக்தி போற்றி
ஓம் அங்காளீஸ்வரி போற்றி
ஓம் ஆதியே போற்றி
ஓம் மகாதேவித்யை போற்றி
ஓம் மகாதேவியே போற்றி
ஓம் மகாகாளியை போற்றி
ஓம் காமப்பிரியாயை போற்றி
ஓம் காமினியை போற்றி
ஓம் அஸ்டவர்க்காயை போற்றி
ஓம் அம்பிகையே போற்றி
ஓம் அனுப்பிரியை போற்றி
ஓம் அங்கபூரணியை போற்றி
ஓம் நாரணி போற்றி
ஓம் நவசக்தியாயினி போற்றி
ஓம் பஞ்சசக்தியாயினி போற்றி
ஓம் இப்பிரித்யை போற்றி
ஓம் பிரவதாயை போற்றி
ஓம் பிரம்மகுருவை போற்றி
ஓம் பிரம்மாட்ஷியை போற்றி
ஓம் இப்பிருர்த்யை போற்றி
ஓம் ஆதித்யை போற்றி
ஓம் மஹாத்யை போற்றி
ஓம் மாலினியை போற்றி
ஓம் குங்மாயை போற்றி
ஓம் ஷிவாயனியை போற்றி
ஓம் சக்தியாயினியை போற்றி
ஓம் சூலதாரியை போற்றி
ஓம் கபாலதாரினியை போற்றி
ஓம் கத்தியாயினி போற்றி
ஓம் காத்யாயினி போற்றி
ஓம் சித்தியாயினி போற்றி
ஓம் அங்கபூரணியாயினி போற்றி
ஓம் அகிலாண்ட நாயகி போற்றி
ஓம் பரமாத்மாயினி போற்றி
ஓம் திவிதாயினி போற்றி
ஓம் தீட்சதாயினி போற்றி
ஓம் திலிமங்களாயினி போற்றி
ஓம் தீப்தாயினி போற்றி
ஓம் பிரஷ்டி போற்றி
ஓம் பிவாட்சியண்யை போற்றி
ஓம் நமன்ஷிண்யை போற்றி
ஓம் நவகோடியை போற்றி
ஓம் நவப்பிரதாயை போற்றி
ஓம் நளாட்சியை போற்றி
ஓம் மஞ்சுளா போற்றி
ஓம் சக்தியாயினி போற்றி
ஓம் மகாபதாயை போற்றி
ஓம் மகாட்சியை போற்றி
ஓம் மனோ பீஜாயை போற்றி
ஓம் மாமங்கு ஜாயை போற்றி
ஓம் அம்சவதாயை போற்றி
ஓம் அங்காளியை போற்றி
ஓம் திலிதாங்காயை போற்றி
ஓம் திவிமங்களாயை போற்றி
ஓம் திருபூஜாம்பதியை போற்றி
ஓம் திருமாத்யை போற்றி
ஓம் திரிசூலியே போற்றி
ஓம் திவ்யை போற்றி
ஓம் திருமஞ்சதை போற்றி
ஓம் குமாயை போற்றி
ஓம் தேவியை போற்றி
ஓம் காளியை போற்றி
ஓம் சிவாயை போற்றி
ஓம் அனுப்பிரியை போற்றி
ஓம் ஆத்மாயை போற்றி
ஓம் ஆத்யை போற்றி
ஓம் பவ்யை போற்றி
ஓம் பாதித்யை போற்றி
ஓம் அனுப்பிரியையாயை போற்றி
ஓம் காமாயை போற்றி
ஓம் காலதரியை போற்றி
ஓம் காத்யாயினி போற்றி
ஓம் அம்சவதாயை போற்றி
ஓம் பிரபாயை போற்றி
ஓம் பரபதியை போற்றி
ஓம் பிங்களாயை போற்றி
ஓம் பிரத்யை போற்றி
ஓம் அனுஷ்டாயை போற்றி
ஓம் தேவித்யை போற்றி
ஓம் ஆதித்யை போற்றி
ஓம் மாரித்யை போற்றி
ஓம் மகாபலாயை போற்றி
ஓம் மகாசக்தியை போற்றி
ஓம் மனோகரியை போற்றி
ஓம் ஆதிபராசக்தியே போற்றி
ஓம் அம்சாயை போற்றி
ஓம் ஆத்ம பிரத்யை போற்றி
ஓம் அனுப்பிரயை போற்றி
ஓம் அனுமந்தாயை போற்றி
ஓம் சிவஹரியை போற்றி
ஓம் வராகியை போற்றி
ஓம் வம்ச பிரத்யை போற்றி
ஓம் அகம் பூஜிதாயை போற்றி
ஓம் அங்காளீஸ்வரியே போற்றி
ஓம் ஈஸ்வரியே போற்றி
ஓம் மீனாட்சியே போற்றி
ஓம் காமாட்சியே போற்றி
ஓம் விசாலாட்சியே போற்றி

No comments:

Post a Comment