Monday, October 25, 2010

ஷஷ்டி விரதம் - விரதங்கள் – 1





 விரதத்தின் பொருள்


விரதம் என்பதற்கு ஒன்றையே எண்ணி அதில் மனம் லயித்திருத்தல் என்பது பொருள். வரித்தல் என்பதிலிருந்தே விரதம் என்ற சொல் பிறந்தது என்று கூறலாம். வரித்தல் என்பதற்கு கை கொள்ளுதல் அல்லது ஏற்றுக் கொள்ளுதல் என்பது பொருள். உணவு உண்ணாமலிருத்தலும் மிதமாக உணவை உண்பதும் தீயவற்றை நீக்கி நல்லவற்றை உண்பதுமாகிய உணவு நியமமே “விரதம்” என அழைக்கப்படுகிறது. ஆனால் இது விரதத்தின் முதற் நிலை என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வாறு இருத்தலே முழுமையான விரதம் என்று கூற முடியாது. மனம் அடங்கக் கற்பதே விரதத்தின் முதற்படியாகும். உணவை ஒழித்து இருப்பது விரதம் அல்ல. எண்ணங்களை ஒடுக்கி, சிந்தைகள் ஏதும் இல்லாமல் இருப்பதே ’விரதம்’ என்கிறார் ரமணர். குரங்கு போல் அலைந்து திரியும் மனத்தை அடக்கி நிறுத்தி இறைவன் திருவடியில் நிலைத்திருத்தலே சிறப்பான விரதத்தின் முதற்படி என்று கூறலாம்.


விரதத்தின் பயன்


மனம் ஒடுங்க புலன் ஒடுங்கம். புலன் ஒடுங்க அகம் ஒடுங்கும். அகம் ஒடுங்க, ஆன்ம ஒளி பிரகாசிக்கும். அந்த ஆன்ம ஒளியை அகத்திலே கண்டு தரிசிப்பதே விரதத்தின் பயன். பொறிகள் அடங்க வேண்டுமானால் உணவு ஒடுங்க வேண்டும். “அன்னம் அடங்க அஞ்சும் அடங்கும்” என்பது ஆன்றோர் முது மொழி. அதை உள்ளபடி உணர்ந்து விரதம் இருக்க வேண்டும். இறையருள் பெற முயற்சிக்க வேண்டும்.





முருகனுக்குரிய விரதங்கள் மூன்று. செவ்வாய்க் கிழமை விரதம், கார்த்திகை விரதம், சஷ்டி விரதம் என்பன அவை. சிலர் வெள்ளிக் கிழமை விரதமும் முருகனுக்கு உகந்தது என்று கூறுவர். மிகச் சிறந்தது ஸ்கந்த ஷஷ்டி விரதமாகும்.


 
செவ்வாய்க் கிழமை விரதம்


இவ்விரதத்தை வலியுறுத்திக் கூறியவர் வள்ளலார் இராமலிங்க அடிகள். அடிகளார் உருவ வழிபாட்டை ஒறுத்து, ஜோதி வழிபாட்டையே வலியுறுத்தியவ்ர் என்றாலும், அவர் தனது ஆன்மப் பயணத்தின் ஆரம்ப கட்டத்தில் உருவ வழிபாட்டையே மேற் கொண்டிருந்தார். திருத்தணிகைப் பெருமானையும், கந்த கோட்ட முருகனையும், ஒற்றியூர் வடிவுடை அம்மனையுமே அவர் முதற்கண் வழிபடு கடவுளாகக் கொண்டிருந்தார். தில்லை நடராஜரை தனது தெய்வமாகக் கருதி வழிபட்ட வள்ளலார்தான், பின்னர் அகத்திலே உள்ளொளி பெற்று அரு பெருஞ் சோதி ஆண்டவர் தரிசனம் பெற்று, அனைவருமே அதைக் கண்டு, வழிபட்டு உய்ய அழைத்தார்.


இனி, செவ்வாய்க் கிழமை விரதம்


(தொடரும்)





No comments:

Post a Comment