Thursday, August 15, 2013

மாத ராசி பலன் ஆவணி ராசிபலன் (17.8.13 முதல் 16.9.13 வரை


மேஷம்:உடல்நலனில் கவனம்!

செவ்வாயை ஆட்சிநாயகனாகக் கொண்ட மேஷராசி அன்பர்களே!

சூரியன் சிம்மத்தில் பிரவேசிக்கும் இந்த காலம், பகைவர் தொல்லை அதிகரிக்கும். வியாதி ஏற்படலாம் என்பது ஜோதிட விதி. அதேநேரம், சூரியனின் 7-ம் பார்வை 11-ம் இடமான கும்பத்தில் விழுவதால் எடுத்த செயல் சிறப்பாக நிறைவேறும். நல்ல பொருளாதார வளம் அமைந்திருக்கும். செவ்வாயால் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். உடல் நலம் பாதிப்பு வரலாம். வயிறு பிரச்னை வரும். பயணத்தின் போது கவனம் தேவை. ஆனால், செவ்வாயின் பார்வை சிறப்பாக அமையும். அதன் மூலம் வருமானம் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு நட்பு கிரகமான சுக்கிரன் 6-ம் இடத்தில் இருப்பதால் முயற்சியில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படலாம். ஆனால், செப்.8க்குப் பிறகு அவர் 7-ம் இடத்துக்கு செல்வதால் பெண்களால் தொல்லை வரலாம். ஆனால், அவரது பார்வையால் நன்மை கிடைக்கும்.புதன் 5ம் வீட்டில் இருப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். சிலர் தொழில் ரீதியாக குடும்பத்தை விட்டு பிரியும் நிலை உருவாகலாம். ஆனால், செப்.3ல் இடம் மாறி கன்னிக்கு செல்கிறார். இதனால், முயற்சியில் வெற்றி உண்டாகும். சுப நிகழ்ச்சி நடந்தேறும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். மாணவர்களுக்கு செப்.3 க்குபிறகு புதன் சாதகமாக இருப்பதால், போட்டிகளில் வெற்றி காண்பர். கலைஞர்கள் நற்பெயர் பெற்று மகிழ்வர். தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தம் பெற விடாமுயற்சி தேவைப்படும். செப்.8 க்குப் பிறகு சீரான நிலை காண்பர்.பெண்களுக்கு வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த குழப்பம் மாத இறுதியில் விலகும். அதுவரை பொறுமையுடன் இருப்பது அவசியம். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

நல்ல நாட்கள்: ஆகஸ்ட் 19, 20, 21, 22, 26, 30, 31,செப்.1,7,8, 9,10, 15,16
கவன நாட்கள்: செப். 11,12 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்கள்: 3,7    நிறம்: வெள்ளை,பச்சை
வழிபாடு: வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள். செவ்வாயில் முருகன், துர்க்கையை வழிபடுங்கள். காலையில் சூரியனை வணங்குங்கள்.  

ரிஷபம்: வருமானம் உயரும்!

சுக்கிரனை ஆட்சிநாயகனாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே!


ரிஷப ராசிக்கு 4-ம் இடமான சிம்மத்தில் சூரியன் ஆட்சி பெற்று இருக்கும் காலம் இந்த ஆவணி மாதம். அவரால் பெண்கள் வழியில் விரோதம் ஏற்படலாம். அவரின் பார்வை கும்பத்தில் இருப்பதால் எடுத்த பணியை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நல்ல பொருளாதார வளம் இருக்கும். தேவைகளைப் பூர்த்தி செய்யலாம்.செவ்வாயால் பக்தி எண்ணம் மேம்படும். எடுத்த புதிய முயற்சிகள் வெற்றி பெறும். வருமான உயர்வால் பொருளாதாரம் மேம்படும். அதோடு செவ்வாயின் பார்வை துலாமில் விழுவது சிறப்பு. அதன் மூலம் திடீர் பணவரவைக் காண்பீர்கள். உங்கள் ஆட்சி நாயகன் சுக்கிரன் 5-ம் இடமான கன்னியில் இருப்பது மிகச்சிறப்பு. அவரால் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் லாபம் அதிகரிக்கும். செப்.8க்குப் பிறகு, சுக்கிரன் 6-ம் இடத்துக்குச் செல்வது சிறப்பானது அல்ல என்றாலும், அவர் உங்கள் ஆட்சி நாயகன் என்பதால் கெடுபலன் தரமாட்டார். புதனால் மாத தொடக்கத்தில் நன்மையும், பொருள் வளமும் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செப்.3க்குப் பிறகு கன்னிக்கு செல்வதால் நன்மை தர இயலாது. குடும்பத்தில் பிரச்னை உருவாகலாம். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.வருட கிரகங்களான குரு, சனி, ராகு ஆகியோரால் நன்மையே உண்டாகும்தொழில் வளர்ச்சி அடையும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். மாணவர்களுக்கு இந்த மாதத்தை பொறுத்தவரை முன்னேற்றமான நிலை நீடிக்கிறது. கலைஞர்கள் மாத முற்பகுதியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் நன்மதிப்பு உண்டாகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். கேதுவால் பித்தம், மயக்க உபாதைகள் வரலாம்.

நல்ல நாட்கள்: ஆகஸ்ட் 21, 22, 23, 24,25,28,29,செப்.2, 3,9,10,11,12
கவன நாட்கள்: ஆகஸ்ட்17,18,செப்.13,14
அதிர்ஷ்ட எண்கள்: 3,9    நிறம்: மஞ்சள், சிவப்பு, பச்சை
வழிபாடு: கேது பகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். காலையில் சூரியனை வணங்குங்கள். சூரிய உதயத்துக்கு முன் எழுவது நல்லது. சூரியன் மறையும் போது தூங்கவோ, சாப்பிடவோ கூடாது


மிதுனம்: குடும்ப மகிழ்ச்சி!

புதனை ஆட்சிநாயகனாகக் கொண்ட மிதுனராசி அன்பர்களே!

சூரியன் 3-ம் இடத்தில் இருக்கும் சிம்மராசி அவரது சொந்தவீடாக இருப்பதால் அதிக நன்மைகளை வழங்குவார். செல்வாக்குடன் திகழ்வீர்கள். பொருளாதார வளம் கூடும். தொழிலில் லாபம் சிறப்பாக இருக்கும். உடல் நலம் சிறப்படையும்.உங்கள் ஆட்சி நாயகன் புதன் 3ல் இருப்பது நல்லதல்ல. பகைவரால் இடையூறு உருவாகும். அரசு வகையில் அனுகூலம் இருக்காது. எனவே, வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். ஆனால், செப்.3ல் புதன் கன்னி ராசிக்கு செல்கிறார். அப்போது நன்மையை வாரி வழங்குவார். பொருள் சேரும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்செவ்வாயால் இருந்த உடல்நலக்குறைவு ஆகஸ்ட்20க்குப் பிறகு மறையும். அதன்பின் செவ்வாய் 2ம் இடத்திற்கு செல்கிறார். அதனால் சிலரது வீட்டில் களவு போக வாய்ப்புண்டு. கவனம். அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.உங்கள் ராசிக்கு நட்பு கிரகமான சுக்கிரன் 4ம் இடத்தில் இருப்பதால் பொருளாதார வளம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செப்.8ல் அவர் துலாம் ராசிக்கு செல்கிறார். அதனால் தொழில் நிமித் தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை உருவாகலாம்.வெளியூர் பயணம் ஏற்படலாம். ஆனால், அவரது பார்வையால் நன்மை கிடைக்கும். அதன் மூலம் நல்ல பணவரவு இருக்கும்உடல்நலம் சுகம் கிட்டும்.இதுதவிர கேது உங்களுக்கு 11-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை தந்து கொண்டிருக்கிறார். மற்ற கிரகங்களால் ஏற்படும் பிரச்னைகளை அவர் முறியடித்து வெற்றியை அள்ளித் தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். கணவன், மனைவியிடையே அன்பு பெருகும். விருந்து விழா என உல்லாசமாக கழியும். கலைஞர்கள் முன்னேற்ற பாதையில் செல்வர். மாணவர்கள் அக்கறையுடன் செயல்படுவது நல்லது. செப்.3 க்குப் பிறகு புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி காணலாம்.

நல்ல நாட்கள்: ஆகஸ்ட் 17, 18,23,24,25,26,27,30,31, செப்.1,4, 5, 6,11,12,13,14
கவன நாட்கள்: ஆகஸ்ட் 19,20,செப்.15,16
அதிர்ஷ்ட எண்கள்: 5,7    நிறம்: வெள்ளை, சிவப்பு
வழிபாடு: வியாழனன்று தட்சிணாமூர்த்தியையும், சனியன்று ஆஞ்சநேயரையும் வழிபட்டு வாருங்கள். ஊனமுற்றவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். புதனன்று பசுவுக்கு பசுந்தழை போடுங்கள்.


கடகம்: படிப்பில் கவனம்!
ஆகஸ்ட் 13,2013சந்திரனை ஆட்சிநாயகனாகக் கொண்ட கடகராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சந்திரன் நட்பு வீடான தனுசுவில் இருக்க ஆவணி பிறக்கிறது. இதனால் மனதில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தில் சந்தோஷம் கூடும். பகைவர்களை முறியடிக்கும் ஆற்றல் உருவாகும். சுக்கிரன் மாதம் முழுவதும் நன்மை தரும் நிலையில் உள்ளார். அவர் 3-ம் இடமான கன்னியில் இருந்து குடும்பத்தில் நல்ல அனுபவங்களையும், மனதில் உற்சாகத்தையும் வாரி வழங்குவார். தம்பதியர் இடையே இருந்த கருத்துவேறுபாடு மறைந்து ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உடல் நலம் சிறப்படையும். செப்.8ல் சுக்கிரன் 4-ம் இடத்துக்கு சென்று நன்மையை அள்ளித்தருவார். மதிப்பு மரியாதை அதிகரிக்கும்கல்விகாரகனான புதன் 2-ம் வீட்டில் இருந்து பிற்போக்கான பலனை தரலாம். குறிப்பாக அவப்பெயர் வரலாம். உங்கள் படிப்புக்கு பாதிப்பு ஏற்படலாம். அதே நேரம், புதனின் பார்வை மூலம், படிப்பில் கவனமாக இருந்து முயற்சி செய்பவர்களுக்கு வெற்றி உறுதி. பெண்கள் புத்தாடை அணி கலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். செப்.3ல் புதன் தனது வீடான கன்னிராசிக்கு செல்கிறார். இதனால் பகைவரால் இடையூறு உருவாகும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.சூரியன் ஆட்சி வீடான சிம்மத்தில் இருக்கிறார். ராசிக்கு 2-ம் இடமாக சிம்மம் இருப்பதால் பொருள் விரயம் ஏற்படும். கண் வலி வரலாம்.பெரும்பாலான கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் எந்த ஒரு செயலும் நிறைவேற விடாமுயற்சியும், அலைச்சலும் இருக்கவே செய்யும். கையில் பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். தொழில் விஷயமாக யாரிடமும் வாக்குவாதம் கூடாது. கலைஞர்களுக்கு புகழ் பாராட்டு கிடைக்கும். உடல்நலன் சுமாராக இருக்கும். பயணத்தின் போது கவனம் தேவை.

நல்ல நாட்கள்: ஆகஸ்ட் 17, 18,19,20,26,27,28,29,செப்.2, 3,7,8,13,14,15,16
கவன நாட்கள்: ஆகஸ்ட் 21,22 
அதிர்ஷ்ட எண்கள்: 4,8    நிறம்: வெள்ளை
வழிபாடு: ஊனமுற்றவர்கள், மூதாட்டிகளுக்கு உதவியும். காலையில் சூரியதரிசனமும் செய்யுங்கள். முருகன் கோயிலுக்கு சென்று வாருங்கள். ஏழைகளுக்கு துவரம்பருப்பு தானம் செய்யுங்கள்.

சிம்மம்: பதவி உயர்வு!சூரியனை ஆட்சிநாயகனாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!

ராசிநாயகனான சூரியன் சிம்மத்தில் இருக்கும் காலமே ஆவணி. பொதுவாக சூரியன் ஒருவரது ராசியில் இருக்கும்போது அலைச்சலும் சோர்வும் உண்டாகும். செல்வாக்கு பாதிக்கப்படும். உடல் உபாதைகள் தென்படும் என்பது பொது விதி. ஆனாலும், அவர் சிம்மராசி நாயகன் என்பதால் எந்த பின்னடைவையும் தர மாட்டார். பூமிகாரகனாகிய செவ்வாய் 12-ம் இடத்துக்கு வருகிறார். அதனால் பித்தம், மயக்க உபாதைகள் உண்டாகும். பொருள் விரயம் ஏற்படும். அதேபேரம் செவ்வாயின் 4, 7-ம் இடத்துப் பார்வைகளால் நன்மை கிடைக்கும். சுக்கிரன் இந்த மாதம் சிறப்பாக பலனை தருவார். செப்.8 வரை அவர் 2-ம் இடத்தில் நின்று பொருளாதார வளத்தை கொடுப்பார். சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். செப்.8க்குப் பிறகு அவர் 3-ம் இடமான அவரது சொந்த வீட்டில் இருந்து அதிக பலம் பெறுவதால் கூடுதல் நன்மை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்புதன் செப்.3க்குப் பிறகு இடம் மாறி 2-ம் இடத்திற்கு செல்கிறார். அப்போது அவரால் அவப்பெயர் வரலாம். செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். சிலருக்கு வீண் கவலை உருவாகலாம். ஆனால் அவரின் பார்வையால் முயற்சி செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு ஆடை, அணிகலன் சேரும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். குரு, சனி, ராகுவால் நன்மை உண்டாகும். வருமானம் சீராகும். சுக்கிரன் சாதகமான இடத்தில் இருப்பதால் கலைஞர்களுக்கு புகழ் கிடைக்கும். மாணவர்கள் தொடர்ந்து கஷ்டப்பட்டு படிக்க வேண்டியிருக்கும். குரு பக்க பலமாக இருப்பதால் முயற்சிக்கு தகுந்த பலன் உண்டு.

நல்ல நாட்கள்: ஆகஸ்ட் 19,20,21,22,28,29,30,31, செப்.1,4,5,6,9,10,15,16
கவன நாட்கள்: ஆகஸ்ட் 23, 24,25
அதிர்ஷ்ட எண்கள்: 4,6    நிறம்: சிவப்பு, வெள்ளை
வழிபாடு: பைரவரை வணங்குங்கள். காலையில் சூரிய தரிசனம் செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். மூதாட்டிகளுக்கு உதவுங்கள்.

கன்னி: வீட்டில் சுப நிகழ்ச்சி!புதனை ஆட்சிநாயகனாகக் கொண்ட கன்னிராசி அன்பர்களே!

சூரியன் 12ம் இடமான சிம்மத்தில் சஞ்சரிக்கிறார். உங்கள் ஆட்சி நாயகன் புதனும் அவருடன் இருக்க மாதம் பிறக்கிறது. புதன் 12ல் இருப்பதால் எதிரி தொல்லை, முயற்சியில் தோல்வி, உடல் நலத்தில் சிறிது பாதிப்பு என ஜோதிட தத்துவம் கூறுகிறது. சூரியனால் அலைச்சல், சோர்வும் ஏற்படும். செல்வாக்கு பாதிக்கப்பட வாய்ப்புண்டு. அதற்காக நீங்கள் கவலை கொள்ள தேவையில்லை. காரணம் அந்த இரண்டு கிரகங்களும் 7ம் வீட்டை பார்க்கின்றன. அந்த பார்வைக்கு நன்மை தரும் அபார சக்தி உண்டு. சூரியனின் பார்வையால் பகைவரை வெற்றி கொள்வீர்கள். பொருளாதார வளம் கூடும். உத்தியோகத்தில் மதிப்பு அதிகரிக்கும். மதிப்பு மரியாதை உயரும். ஆரோக்கியம் மேம்படும். புதனின் பார்வையால் எடுத்த முயற்சியில் வெற்றி அடையும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கும். பணியில் இருப்பவர்கள் பதவி உயர்வு காண்பர்.புதன் செப்.3ல் உங்கள் ராசிக்கு வருகிறார். இந்த இடத்தில் அவரால் வீட்டில் சில பிரச்னைகள் உருவாகலாம்.சுக்கிரன் உங்கள் ராசியில் இருப்பதால், பெண்களால் நன்மை கிடைக்கும். அவர்களால் பொருள் சேரும். விருந்து விழா, கேளிக்கை என்று சென்று மகிழ்வீர்கள். இவர் செப்.8ல் இடம்மாறி துலாமிற்கு செல்வதால் பொருளாதார வளம் மேம்படும். மதிப்பு, மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். குரு மற்றும் சனியின் பார்வை சாதகமாக அமைந்துள்ளன. சனி மற்றும் ராகுவின் மீது குருவின் பார்வை விழுவதால் கெடுபலனைத் தர மாட்டார்கள். மாறாக நன்மை பெற வாய்ப்பு உண்டு. எனவே நற்பலனை எதிர்பார்க்கலாம். செவ்வாயால் காரிய அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும். வீடு, மனை வாங்க யோகம் கூடி வரும்.போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர் நிலை பெறுவர். கலைஞர்கள் முன்னேற்றம் காண்பர். பாராட்டு கிடைக்கும். மாணவர்கள் அக்கறையுடன் படித்தால் பலன் கிடைக்கும்.

நல்ல நாள்: ஆகஸ்ட் 21, 22, 23, 24,25,30,31, செப்.1, 2,3,7,8,11,12
கவன நாள்: ஆகஸ்ட் 26,27
அதிர்ஷ்ட எண்கள்: 7,9      நிறம்: வெள்ளை, சிவப்பு
வழிபாடு: சனிக்கிழமை ஆஞ்சநேயரை வழிபடுங்கள். ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.

துலாம்: பணிச்சுமை உயரும்!


சுக்கிரனை ஆட்சிநாயகனாக கொண்ட துலாம்ராசி அன்பர்களே!

சூரியன் உங்கள் ராசிக்கு 11ம் இடத்தில் ஆட்சி பெற்று நன்மை தர காத்திருக்கிறார். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். அரசு வகையில் உதவி கிட்டும். உடல் உபாதை நீங்கி பூரண குணம் உண்டாகும். சுக்கிரன் 12-ம் இடமான கன்னியில் இருந்தாலும், ராசிக்கு அதிபதி என்பதால் கெடுபலன் தர மாட்டார். செப்.8ல் உங்கள் ராசிக்கு வந்து நன்மைகளை வழங்குவார். குறிப்பாக பெண்களால் நன்மை உண்டாகும். பொன், பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள்.கல்விகாரகனான புதன் இந்த மாத தொடக்கத்தில் 11ம் இடத்தில் இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். செயல்கள் வெற்றி அடையும். புதன் செப்.3ல் 12-ம் இடத்துக்கு மாறுவது, சிறப்பானது என்று சொல்ல முடியாது. எதிரியால் தொல்லை வரலாம். முயற்சியில் பின்னடைவச் சந்திக்கும் நிலை உருவாகலாம். உடல்நலனில் அக்கறை காட்டவேண்டி இருக்கும். அவரது 7ம் பார்வையால் நன்மை கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பணியாளர்கள் பதவி உயர்வு காண்பர். செல்வாக்கு அதிகரிக்கும்.பூமிகாரன் செவ்வாயால் உஷ்ணம், தோல், தொடர் பான நோய் வரலாம். பொருட்கள் களவு போக வாய்ப்பு ஏற்படலாம். கலைஞர்கள் கவனமாக செயல்பட வேண்டும். செப்.8க்கு பிறகு சிறப்பான நிலையை அடையலாம். மாணவர்களுக்கு புதன் சாதகமாக இருப்பதால் நல்ல முன்னேற்றம் காணலாம். முயற்சி வீண்போகாது. போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் செப்.3 க்கு பிறகு பணிச்சுமையைச் சந்திக்க வேண்டியிருக்கும். கணவரின் அன்பு கிடைக்கும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். தாய்வீட்டிலிருந்து புதிதாக பொருட்கள் வரப்பெலாம்.

நல்ல நாள்: ஆகஸ்ட் 17,18,23,24,25,26,27,செப்.2,3, 4,5,6,9,10,13,14
கவன நாள்: ஆகஸ்ட் 28,29
அதிர்ஷ்ட எண்: 1,9      நிறம்: சிவப்பு, பச்சை
வழிபாடு: கேது,சனிக்கு அர்ச்சனை செய்யுங்கள். சனியன்று ஆஞ்சநேயர், பெருமாளை வழிபட்டு வாருங்கள். ஏழைகளுக்கு உங்களால் இயன்ற உதவியைச் செய்யுங்கள்

விருச்சிகம்: பணப்புழக்கம் கூடும்!செவ்வாயை ஆட்சி நாயகனாக கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!

செவ்வாய் நன்மை தரும் இடத்தில் இல்லாவிட்டாலும், பார்வையால் நற்பலன் வழங்குவார். ஆகஸ்ட் 20ல், இவர் கடக ராசிக்கு செல்வதால் முயற்சிகளில் பின்னடைவும், ஆரோக்கியக் குறைவும் ஏற்படலாம். செவ்வாய் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும், அவரது 7-ம் இடத்துப் பார்வை சிறப்பாக உள்ளதால், பக்தி எண்ணம் மேலிடும். தெய்வ அனுகூலம் கிடைக்கும். பொருளாதாரம் உயரும்.புதன் 10-ம் இடமான சிம்மத்தில் இருக்கிறார். இதனால் பெண்களின் ஆதரவும், அவர்களால் நன்மையும் ஏற்படும். பொருள் சேரும். புதனின் பார்வையால் பொருளாதாரம் சீராகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இவர் செப்.3ல் கன்னி ராசிக்கு பெயர்ச்சியடைந்தாலும், அவரால் நன்மை தொடரும். குடும்பத்தில் சந்தோஷம் கூடும். பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். எடுத்த காரியம் வெற்றி அடையும்.சூரியன் மாதம் முழுவதும் 10ம் இடமான சிம்மத்தில் இருப்பார். அங்கு அவர் எடுத்த செயலை செய்து முடிக்க அருள்புரிவார். மேலும் நல்ல பணப் புழக்கத்தையும் கொடுப்பார்.சுக்கிரன் 11-ம்இடமான கன்னியில் இருப்பது சிறப்பான அம்சம். அவரால் பணவரவு இருக்கும். சொந்தபந்தங்கள் அடிக்கடி வீட்டிற்கு வருகை புரிவர். உடல் நலம் சுகம் கிட்டும். செப்.8ல், சுக்கிரன் 12-ம் இடமான துலாம்ராசிக்கு மாறுகிறார்.அதனால் காரியத்தடைஏற்படலாம். கேது சாதகமான இடத்தில் இருந்து நன்மையைத் தந்து கொண்டிருக்கிறார். பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர்களின் தொல்லை நீங்கும். அபார ஆற்றல் பிறக்கும். பெண்கள் ஆபரணம் வாங்குவதுடன், பிள்ளைகளால் பெருமை அடைவர். குருபகவான் சாதமற்ற இடத்தில் இருந்தாலும் பார்வை பலத்தால் நன்மை கிடைக்கும். சனி, ராகு மீது குருபார்வை படுவதால் கெடுபலன் குறையும்கலைஞர்கள் சீராக முன்னேறுவர். மாத பிற்பகுதியில் புதிய ஒப்பந்தம்  கிடைக்கும்.

நல்ல நாள்: ஆகஸ்ட் 19, 20, 26,27,28,செப்.4,5,6,7, 8,11,12,15,16
கவன நாள்: ஆகஸ்ட் 30,31,செப்.1
அதிர்ஷ்ட எண்: 3,7    நிறம்: பச்சை,செந்தூரம்
வழிபாடு: நாகராஜரை வணங்குங்கள். ராகு,சனிக்கு அர்ச்சனை செய்வதன் மூலம் செயல்கள் தடையின்றி நடக்கும். மாலையில் வீட்டில் விளக்கேற்றி இஷ்ட தெய்வத்தை வழிபடுங்கள். ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்.


தனுசு: போட்டியில் சாதனை!குருவை ஆட்சிநாயகனாக கொண்ட தனுசுராசி அன்பர்களே!

ராசிநாதனான குரு தற்போது 7ம் இடமான மிதுனத்தில் இருந்து பல நன்மைகளை தந்து கொண்டிருக்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சி, சுபங்களை வாரி வழங்குவார். முக்கிய கிரகங்ளான சனி, ராகுவும் சாதகமாக நிலையில் இருப்பதால் நன்மை அதிகரிக்கும். சூரியன் 9ம் இடமான சிம்மத்தில் சாதகமற்ற நிலையில் இருக்கிறார். மதிப்பு மரியாதை எதிர்பார்த்தபடி இல்லாமல் போகலாம். வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம். ஆனால், சூரியனின் பார்வை சாதகமான இடத்தில் விழுகிறது. அதன் மூலம் அவப்பெயரில் நீங்குவதோடு, பொருளாதார வளமும் அதிகரிக்கும். கல்விகாரகன் புதன் சிம்மராசியில் இருப்பது அவ்வளவு சிறப்பானது அல்ல. அவரால் மனதில் இனம் புரியாத வேதனை உருவாகலாம். உடல் நலமும் பாதிக்கப்படும். செப்.3ல் புதன் கன்னி ராசிக்கு சென்ற பின், பல்வேறு நன்மைகளை கொடுப்பார். குறிப்பாக பெண்களின் ஆதரவு அதிகமாக இருக்கும். அவர்களால் குடும்ப நன்மை பெருகும். பணவரவும் இருக்கும். அதோடு புதனின் பார்வையும் சாதகமான இடத்தில் விழுகிறது. அதன் மூலம் பொருள் சேரும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு 10ம் இடத்தில் இருகிறார். இதனால், எதிரியால் தொல்லை அதிகரிக்கும். ஆனால், அவரின் பார்வை பலத்தால் உறவினர்களோடு பிரச்னை நீங்கி சுமூக நிலை ஏற்படும். செப்.8 ல் சுக்கிரன் 11-ம் இடத்திற்குச் செல்வதால் பணவரவு இருக்கும். சொந்தபந்தங்கள் வருகை புரிவர். உடல் நலம் சுகம் கிட்டும். அவரின் பார்வை பலத்தால் பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் லாபம் அதிகரிக்கும்.கலைஞர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். செப்.8 க்கு பிறகு புதிய ஒப்பந்தம் கிடைக்க வாய்ப்புண்டு. மாணவர்கள் கல்வி வளர்ச்சி பெறுவர். செப்.3க்குப் பிறகு புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் புதிய சாதனை படைப்பர். பெண்கள், குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். உங்களால் குடும்பம் சிறந்து விளங்கும். செவ்வாயின் சஞ்சாரத்தால் உஷ்ண, பித்த உபாதைகள் வரலாம்.

நல்ல நாட்கள்: ஆகஸ்ட் 17, 18,21,22, 28,29,30,31, செப்.1,7,8, 9,10,13,14
கவன நாட்கள்: செப்.2,3
அதிர்ஷ்ட எண்: 6,7   நிறம்: வெள்ளை,நீலம்
வழிபாடு: சிவன் கோயிலுக்கு சென்று வாருங்கள். ஏழைகளுக்கு பாசிப்பயறு தானம் கொடுத்தால் குடும்பத்தில் அமைதி ஏற்படும். காலையில் சூரிய தரிசனம் செய்ய தவறாதீர்கள்.


மகரம்: பிள்ளைகளால் பெருமை!சனீஸ்வரரை ஆட்சி நாயகனாக கொண்ட மகரராசி அன்பர்களே!

சனி உச்சம் பெற்று இருந்தாலும் சாதகமாக காணப்படவில்லை. அவரோடு இருக்கும் ராகுவும் நன்மை தரமாட்டார். ஆனால் குரு பார்வை சனி,ராகுமீது இருப்பதால் கெடுபலன் குறையும். பூமிகாரகரான செவ்வாய், செப்.3 ல் 7ம் இடமான கடகத்திற்கு செல்வது நல்லதல்ல. இதனால், அலைச்சல் ஏற்படும். மனதில் வேதனை உருவாகும். மனைவி வகையில் பிரச்னை வரலாம். எதிரிதொல்லை அதிகரிக்கும். கல்விகாரகன் புதன் சிம்மத்தில் இருப்பதால் முயற்சியில் வெற்றி கிடைக்கும். புத்தாடை, அணிகலன் வாங்கலாம். பிள்ளைகளின் செயல்பாடு பெருமை தரும். செப்.3ல் இவர் கன்னி ராசிக்கு செல்வது நன்மை தராது. சிலரின் பொல்லாப்புக்கு ஆளாகலாம்உடல் நலம் பாதிக்கப்படலாம். சுக்கிரன் 9ல் இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கச் செய்வார். பெண்களால் சுகம் கிடைக்கும். பொருளாதார வளம் கூடும். அதோடு அவரது பார்வையால் நன்மை கூடும். பிரிந்த தம்பதிஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உடல் நலம் சிறப்படையும். செப்.8ல், சுக்கிரன் இடம் மாறி துலாம் ராசிக்கு வருகிறார். அப்போது எதிரிகளால் தொல்லை அதிகரிக்கும். ஆனால், அவரது பார்வையால் நன்மை கிடைக்கும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் கருத்துவேறுபாடு நீங்கி சுமூக நிலை உண்டாகும். குரு சாதகமற்ற இடத்தில் இருந்தாலும், அவரது 9-ம் இடத்துப் பார்வையால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபவிஷயங்கள் நடந்து கொண்டிருக்கும்.கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். வாழ்வில் வசதிபெருகும். மகிழ்ச்சி நிலைத்திருக்கும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். செப்8க்குப் பிறகு சிரத்தை எடுத்தால் தான் புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.மாணவர்களுக்கு, புதன் சாதகமாக உள்ளதால் நற்பெயர் கிடைக்கும். ஆசிரியரின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நன்மை தரும். செப்.3க்கு பிறகு அதிக அக்கறையுடன் படிக்க வேண்டியது இருக்கும்

நல்ல நாட்கள்: ஆகஸ்ட் 19,20,23,24,25,30,31, செப்.1,2,3,9,10,11,12,15,16
கவன நாட்கள்: செப்.4,5,6
அதிர்ஷ்ட எண்: 4,8 நிறம்: பச்சை, வெள்ளை
வழிபாடு: சனிக்கிழமையில் அனுமன், விநாயகரை வழிபடுங்கள். வெள்ளியன்று சிவனை தரிசியுங்கள். வீட்டிலும் விளக்கு ஏற்றி வழிபடுங்கள்.

கும்பம்: சந்தோஷ வாழ்வு!சனீஸ்வரரை ஆட்சி நாயகனாக கொண்ட கும்ப ராசி அன்பர்களே!

தற்போது சனி உச்சத்தில் இருந்தாலும் நன்மை தரும் நிலையில் இல்லை. ஆனால் அவரது 3, 7, 10ம் பார்வைகள் சாதகமாக இருப்பதால் நன்மையை வழங்குவார். குருவும் 5-ம் இடத்தில் நின்று சுப வாழ்வை அளிக்கிறார். கேது 3-ம் இடத்தில் நின்று பொருளாதார வளம் தருகிறார். ராகு சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் குருவின் பார்வை ஏற்படுவதால் கெடுபலன் நேராது. பல கிரகங்கள் சாதகமாக இருப்பதால் சந்தோஷ வாழ்வு அமையும். சூரியனை பொறுத்த வரை இந்த மாதம் நன்மை கிடைக்காது. அலைச்சல் அதிகரிக்கும். அவப்பெயர் வரலாம். வயிறு தொடர்பான உபாதை உருவாகும். செவ்வாயால் பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர் தொல்லை நீங்கும். அபார ஆற்றல் பிறக்கும். நகை வாங்கி மகிழ்வீர்கள். புதன் தற்போது 7-ம் இடமான சிம்மத்தில் இருக்கிறார். அதனால் குடும்பத்தில் குழப்பம் நிலவும். சிலர் தொழில் விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடும். ஆனால் செப்.3ல் கன்னிக்குச் சென்றபின், குடும்ப பிரச்னை தீரும். முயற்சியில் வெற்றி கிட்டும். ஆடை, அணிகலன் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சுக்கிரன் 8-ம் இடத்தில் இருப்பதால் வீட்டில் வசதி பெருகும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பெண்கள் ஆதரவுடன் இருப்பர். பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உடல் நலம் சிறப்படையும்.செப்.8ல் சுக்கிரன் 9-ம் இடத்துக்கு மாறிச் சென்றாலும் நன்மை தொடரும். பெண்களால் நற்சுகம் கிடைக்கும். பொருளாதார வளம் கூடும். அவரது பார்வையால் உறவினர்களிடம் சுமூக நிலை ஏறபடும். முக்கிய கிரகங்களில் கேது சாதகமான இடத்தில் இருந்து நன்மையைத் தந்து கொண்டிருக்கிறார். கடவுளின் அருள் கிடைக்கும். எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும். பொருளாதார வளம் மேம்படும். கலைஞர்கள் நல்வாழ்வு பெறுவதோடு, தொழிலில் முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். மாணவர்கள் நன்கு படித்து சிறப்பான நிலையை அடைவர்.

நல்ல நாட்கள்: ஆகஸ்ட் 17,18,21,22,26,27,செப்.2,3,5, 6,11,12,13,14
கவன நாட்கள்: செப்.7,8
அதிர்ஷ்ட எண்: 2,3,5    நிறம்: சிவப்பு, மஞ்சள்
வழிபாடு: சூரியன், சனி, கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள்பசுவுக்கு பசுந்தழை கொடுங்கள்.


மீனம்: முயற்சியில் வெற்றி!

 குரு 4-ம் இடத்தில் இருந்தாலும், உங்கள் ராசி நாதன் என்பதால் கெடுபலன் உண்டாகாது. ராசிக்கு 6ல் சூரியன் வாழ்வில் எல்லா வகையிலும்  முன்னேற்றம் தருவார். பகைவரை வெல்லும்  ஆற்றல் பிறக்கும். பொருளாதார வளம் கூடும். பணியில் மதிப்பு அதிகரிக்கும். சமூக அந்தஸ்து சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். சூரியனோடு கல்விகாரகன் புதன் இணைந்து இருப்பது சிறப்பு. புதனால், எடுத்த முயற்சியில் வெற்றி உண்டாகும். சுப நிகழ்ச்சி நடந்தேறும். பணியில் இருப்பவர்கள் பதவி உயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.புதன் செப்.3ல், 7-ம் இடமான கன்னிக்குச் செல்கிறார். இதனால் குடும்பத்தில் குழப்பம் நிலவும். மனைவி வகையில் பிரச்னையும், மனக்குழப்பமும் ஏற்படலாம்.சுக்கிரன் 7ம் இடமான கன்னி ராசியில் இருக்கிறார். பெண்கள் வகையில் தொல்லை வரலாம். இவர், செப்.8ல் துலாம் ராசிக்கு செல்கிறார். அதன் மூலம் நன்மைகள் தருவார். வீட்டில் வசதி பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். அதோடு பார்வையாலும் நன்மை கிடைக்கும். பொன், பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள்.பூமிகாரகன் செவ்வாய் ஆகஸ்ட்20ல் கடகத்திற்கு இடம் மாறுவதால் எதிரி தொல்லை உருவாகலாம். உடல்நலம் லேசாக பாதிக்கப்படலாம். குறிப்பாக பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. ஆனால், 7ம் இடத்துப்பார்வையால் நன்மை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சனி, ராகு சாதகமாக இல்லை என்றாலும், அவர்கள் மீது குரு பார்வை படுவதால் அவர்கள் உங்களுக்கு கெடுபலனைத் தரமாட்டார்கள். விரைவாக சுழலும் கிரகங்களால் இந்த மாதம் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம்.கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் அதிக முயற்சியின் பேரில் கிடைக்கும். செப்.8க்குப் பிறகு நிலைமை சீராகி பணம் வரும். மாணவர்கள் போட்டிகளில் வெற்றி காண்பர். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

நல்ல நாட்கள்: ஆகஸ்ட் 17,18,19,20,23,24,25,29,செப்.4, 5,6,7,8,13,14,15,16
கவன நாட்கள்: செப்.9,10
அதிர்ஷ்ட எண்: 1,9    நிறம்: பச்சை, சிவப்பு
வழிபாடு: முருகன், துர்க்கையை வழிபடுங்கள். கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள்.