Wednesday, March 7, 2012

அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்கள்

ஆஸ்த்மா நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழத்தைச் சாப்பிடக் கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட பின் மோர் சாப்பிடக்கூடாது. வாழைப்பழம் தினமும் சாப்பிட்டு வர ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உடல் சமநிலையில் இருக்கும். நன்கு கனிந்த பூவன் வாழைப்பழத்துடன் சீரகத்தைச் சேர்த்துப் பிசைந்து தினமும் காலையில் சாப்பிட்டு வர இரத்த மூலம் குணமாகும். நீரிழிவிற்குப் பேயன் பழம் நல்ல மருந்து, பேயன் பழத்தோடு சீரகத்தூளும் வெந்தயப் பொடி, சிறுகுறிஞ்சான் பொடி, நெய் ஆகியவற்றைச் சேர்த்துச் சாப்பிட்டால் நீரிழிவு நீங்கும். கண்பார்வை தெளிவடைய தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட வேண்டும்.

தண்ணீர்: உடலில் ஏற்படும் கழிவுகளை நீக்கப் போதுமான அளவு நல்ல குடிநீர் பயன்படுகிறது. காலை பல் தேய்த்ததும், வெறும் வயிற்றில் நான்கு டம்ளர் தண்ணீர் அருந்தியபின் ஒருமணி நேரம் வேறு உணவுகள் உண்ணாதிருந்தால் இரவு உள்ள உணவு நன்கு ஜீரணமான நிலையில் உடல் கழிவுகள் சிறுநீர் மற்றும் மலமாக வெளிப்பட்டு உடல் கழிவுகள் தேங்கி விஷத்தன்மை அடையாமல் சுத்தமடையும். உணவுக்கு முன்போ, பின்போ அருந்தும் தண்ணீர் அவ்வாறு பயன்படுவதில்லை என்பதல்லாமல் ஜீரணத்திற்கு இடைஞ்சல் ஏற்படுகிறது. வயிற்றில் உணவு அமினோ அமிலங்களினால் ஜீரணிக்கப்படுகிறது. அதிகப் படியான நீர் அவ்வகை அமிலங்களை நீர்த்து விடச் செய்வதினால் ஜீரணம் குறைபாடடைகிறது. உணவு உண்டபின் இரண்டு மணி நேரம் கழித்து தாகம் இல்லாவிட்டாலும் இரண்டு டம்ளர் தண்ணீர் பருகினால் ஜீரணத்திற்கு அந்த நீர் இடைஞ்சல் தராமல் உதவி புரியும்.

உடலில் அதிக ப்ளூரைடு சேரக் கூடாது. உங்கள் வீட்டுக்குடிநீரை (கிணற்று நீர், போர் மூலம் எடுக்கப்படும் நீர்) டெஸ்ட் செய்து அதில் எவ்வளவு ப்ளூரைடு உள்ளது என்பதைச் சோதனை செய்து கொள்வது நல்லது. அதிக ப்ளூரைடு தண்ணீரில் இருந்தால் அதைக் குடிக்கும் குழந்தைகளுக்கு எலும்பு, பற்கள், குடல் மூளை, இரத்தக் குழாய், தோல், சிறுநீரகப்பாதை ஆகியவை பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. வேண்டிய அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் சிறுநீரகங்களில் கற்கள் உண்டாகாமல் தடுத்துக் கொள்ளலாம். நமக்கு ஆற்றல் உண்டாவதைத் தீர்மானிப்பதில் தண்ணீர் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. நமது உடலில் 70 முதல் 80 சதவீதம் தண்ணீர் உள்ளது. குடல்கள், நுரையீரல், மூளை ஆகிய பாகங்களில் ஏற்படும் வறட்சியினால் (டீஹைட்ரேசன்) பல நோய்கள் உண்டாகின்றன. குடல்களில் ஏற்படும் நீர் வறட்சி, மலச்சிக்கல், கல்லீரல், சிறு நீரகக் கோளாறுகளுக்குக் காரணமாகிறது

திங்கள், புதன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் விருந்து கொடுக்கவும், விருந்து சாப்பிடவும் சிறந்தவை. மற்ற நாட்களில் விருந்து அளித்தாலோ, சாப்பிட்டாலோ மனச்சுமை உண்டாகும் என நீதி சாஸ்திரம் கூறுகிறது.

No comments:

Post a Comment