Tuesday, July 12, 2011

பெருமாளை தாங்கும் சிவன்


நின்ற கோலத்தில் அருளும் மகாவிஷ்ணு, பீடத்தின் மீது அல்லது தாமரை மலரின் மீதுதான் நின்றபடி காட்சி தருவார். ஆனால், அவரே சிவலிங்கத்திற்கு உரிய ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் காட்சிதரும் அதிசயதலம் வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அருகிலுள்ள திருப்பற்கடலில் உள்ளது. இங்குள்ள கருவறையில்  இருக்கும் வெங்கடேஸ்வரர், ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் இருக்கிறார். இத்தலம் அருகில் ரங்கநாதர் கோயில் ஒன்று உள்ளது. இங்கு சுவாமி நெல் அளக்கும் மரக்கால் மீது தலை வைத்து படுத்த கோலத்தில் இருக்க, பிரம்மா, அவரது நாபிக்கமலத்தின் மீது வீற்றிருக்கிறார்.

No comments:

Post a Comment