இதை மோட்சதீபம் என்பர். மோட்சம் என்றால் விடுதலை. இவ்வுடலிலிருந்து உயிர்
விடுதலை பெற்று இறைவனடி சேர்வதை மோட்சம் என்பார்கள். வானுலகம் செல்லும்
உயிருக்கு நல்ல கதி கிடைப்பதற்காக இறைவனுக்கு ஏற்றப்படும் தீபமே மோட்ச
தீபம். கோயில்களில் கோபுர உச்சியில் மாலைப் பொழுதில் ஏற்றுவது வழக்கமாக
இருந்தது. சில கோயில்களில் கருவறையிலும் ஏற்றுகிறார்கள். மூன்று, ஐந்து
என்ற எண்ணிக்கையில் ஏற்றலாம்.
Saturday, February 2, 2013
லட்சியத்தை அடைய என்ன செய்வது?
தொண்டு, தானம், இரக்கமான செயல்கள், ஆகியவற்றின் மூலம் பிறரைச்
சந்தோஷப்படுத்தினால், நீங்கள் இன்பத்தை விதைப்பதோடு, இன்பத்தையும் அறுவடை
செய்வீர்கள். விதியை உயரிய எண்ணங்களாலும்,
நற்செயல்களாலும், நற்சிந்தனையாலும் உங்களால் மாற்றியமைக்க முடியும்.
தன்னலமற்ற, பணிவுடைய தொண்டினால் இதயத்தைத் தூய்மைப்படுத்துங்கள். உடம்புக்கு வெளியே கிடைக்கும் இன்பத்தால் ஒரு போதும் நிறைவு கிடைக்காது என்பதை உணரக் கற்றுக் கொள்ளுங்கள்.
அனைத்து தீய பண்புகளும் கோபத்திலிருந்து புறப்படுகின்றன. கோபத்தை அடக்கிவிட்டால், தாமாகவே அனைத்து தீயகுணங்களும் தொலைந்து போகும். தீயவர்களைத் தண்டிப்பதையோ, நல்லவர்களை கவுரவிப் பதையோ இறைவன் செய்ய மாட்டான். நாம் செய்த செயல்களே நமக்கு பரிசு அல்லது தண்டனையைத் தருகின்றன.
பகைமை, பேராசை, தன்னலம், பொறாமை ஆகியவற்றை களைவதன் மூலம் இதயத் தோட்டத்தில் அமைதியை வளருங்கள், அப்போது தான் உங்களுடன் இருப்பவர்களுக்கும் அமைதியும், சமாதானமும் கிடைக்கும். உண்மையையும், நேர்மையையும் பின்பற்றினால், உங்கள் லட்சியத்தை அடைவது உறுதி. பெற்றோரை கடவுள் போல் நேசியுங்கள். அனைவரிடமும் அன்பை வளருங்கள். மனித சமுதாயத்தின் மீதுள்ள அன்பு, முதலில் நம் வீட்டிலேயே துவங்குகிறது என்பதை உணருங்கள்.
உங்களை தாக்கும் ஆசைகளும், கஷ்டங்களும் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் பிரார்த்தனையை முழுமையாக நம்புங்கள். பிரார்த்தனையால் ஊடுருவிச் செல்ல முடியாத உறுதியான கோட்டையை உங்களால் கட்ட முடியும். உங்கள் வருங்காலம், தலைவிதி, ஒழுக்கம் இவை அனைத்தும் உங்களின் எண்ணங்கள், செயல்கள் மூலமாகவே அமைகின்றன. வாழ்க்கையில் உயரிய எண்ணங்களை வளர்த்தால் உயரிய ஒழுக்கம் உருவாகும். தீய சிந்தனையால் தீமையே விளையும்.
ஆன்மிகத்துறையில் விரைவாக முன்னேற எண்ணினால் அகிம்சை, சத்தியம், பிரம்மச்சரியம் இவற்றை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். மிருக குணத்தைப் போக்கி, மனிதத் தன்மையை கைக்கொள்வதே தெய்வீக வாழ்க்கை. இந்த தூய தன்மையை அனைவரும் அன்றாட வாழ்க்கையில் கடைபிடித்து வாழ்க்கையில் உயரலாம். -சிவானந்தர்.

அசரீரி என்பதன் பொருள் என்ன?
உயிர்கள் அனைத்திற்கும் உடம்பு உண்டு. உடம்பை சமஸ்கிருதத்தில் சரீரம்
என்பர். சரீரத்தைப் பெற்றிருப்பதால் உயிர்களுக்கு சரீரி என்று பெயர். இதைப்
போல தேவதைகளுக்கும் உருவம் உண்டு. அவற்றை காணும் சக்தி நமக்குக் கிடையாது.
இருந்தாலும், பக்தர்களை ஆட்கொள்ளும் விதத்தில் சப்த வடிவில் நம்மோடு
தொடர்பு கொள்வதாக சாஸ்திரம் கூறுகிறது. சுயவடிவமான சரீரத்தைக் காட்டாமல்
வெறும் ஒலி வடிவில் கேட்பதை அசரீரி என்று குறிப்பிடுகிறோம்.
குரு பார்க்க கோடி நன்மை என்பது ஏன்?
நவக்கிரகங்களில் முழுமையான சுபகிரகம் குரு. இவர் தேவர்களுக்கு பாடம்
போதிக்கும் குருவுமாவார். எனவே, இவரது பார்வை எந்த ராசியின் மீது பட்டாலும்
எல்லாத் தோஷங்களும் நீங்கிவிடும். ஒருவருடைய ராசிப்படி ஏழரைச்சனி
நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த ராசிக்கு குரு பார்வை இருந்தால்
கெடுதல் விளையாது என்பதையே குரு பார்க்க கோடி நன்மை என்கிறார்கள். கோடி
என்றால் அளவு கடந்த என்றும் பொருள் உண்டு.
அந்த ஒருவர் நீங்களா?
அந்தக் காலத்தில் மாதம் மும்மாரி மழை பொழிந்ததாகச் சொல்வர். இந்த
மும்மாரி பெய்தது என்பதற்கான பழம் பாடல் ஒன்றுண்டு. அது என்ன தெரியுமா?..
வேதம் ஓதும் வேதியர்க்கோர் மழை
நீதி மன்னர் நெறியினர்க்கோர் மழை
மாதர் கற்புடை மங்கையர்க்கோர் மழை
மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே
மூதுரை என்னும் நூலில், நெல்லுக்கு பாய்ச்சிய நீர் புல்லுக்கும் பாய்வது போல, ஊரில் ஒரு நல்லவர் இருந்தாலும் போதும் அவருக்காகவே மழை பொழியும். அதன் பயன் எல்லா உயிர்களுக்கும் கிடைக்கும், என்கிறார் அவ்வையார். அந்த ஒருவராகும் முயற்சியில் நாம் ஒவ்வொருவரும் இருக்கவேண்டும் என்பதே அவரின் எண்ணம்.

ஒருவருக்கொருவர் சந்திக்கும் பொழுது வணக்கம் தெரிவிப்பது ஏன்?
இந்தியர்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கும் பொழுது நமஸ்தே அல்லது
நமஸ்காரம் என்று கூறி வணக்கம் தெரிவிப்பது மரபு. இரண்டு உள்ளங்கைகளையும்
நெஞ்சின் முன் ஒன்று சேர்த்தவாறு வைத்துக் கொண்டு, தலையைத் தாழ்த்தி
நமஸ்காரம் என்று கூறுகிறோம்.
சம வயது உடையவர், நம்மைவிட, சிறியவர்கள், வயது முதிர்ந்தவர்கள், நண்பர்கள் ஆகிய அனைவரையும் வணக்கம் கூறித்தான் வரவேற்கிறோம். சாஸ்திரங்களில் ஐந்து வகையான மரபு வழிவரவேற்பு முறைகள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் நமஸ்காரம் என்பது ஒன்று. பொதுவாக நமஸ்காரம் என்றால் நெடுஞ்சான் கிடையாகக் கீழே விழுந்து வணங்குதல் என்று பொருள் கொள்ளப்படும் ஆயினும் இச்சொல் தற்காலத்தில் நாம் ஒருவரை ஒருவர் நமஸ்காரம் என்று கூறி வரவேற்பதையும் குறிக்கிறது.
ஏன் கூறுகிறோம்?: நமஸ்காரம் என்பது நமது பண்பாட்டின் அடையாளமான ஓர் வரவேற்புச் சொல். அது வழிபாட்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆயினும் அச்சொல்லின் பின்னே ஓர் உயர்ந்த தத்துவம் அடங்கியுள்ளது. சமஸ்கிருதத்தில் நமஸ்தே என்பது நமஹ+தே என்று பிரிக்கப்படுகிறது. இதன் பொருள் நான் உங்களைத் தலை தாழ்த்தி வணங்குகிறேன் அல்லது எனது வணக்கங்கள் அல்லது நான் நெடுஞ்சாண் கிடையாகக் கீழே விழுந்து வணங்குகிறேன் என்பதாகும். நமஹ என்ற சொல்லிற்கு நமம (என்னுடையது அல்ல) என்று பொருள் கொள்ளலாம். இவ்வாறு வணங்கும்போது மற்றவர் முன்பாக நமது அகங்காரம் வெகுவாகக் குறைந்து மறைந்தொழிகிறது.
இருவர் சந்திக்கும்போது அவர்களது மனங்கள் ஒன்றோடொன்று உறவாடுவதுதான் உண்மையான சந்திப்பாகும். நாம் ஒருவரை வணங்கி வரவேற்கும்போது நமஸ்காரம் என்கிறோம். இதன் பொருள் நம் இருவரின் மனங்கும் வகையில்தான் உள்ளங்கைகளை நெஞ்சின்முன் ஒன்றாகச் சேர்க்கின்றனர்.
சிரம் தாழ்த்தி வணங்குவது அன்பும் பணிவும் கலந்த நட்பை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தும் ஒரு செய்கை. இதன் பின் ஒரு ஆழ்ந்த ஆன்மிக உட்பொருளும் பொதிந்துள்ளது. என்னுள் உறைந்துள்ள உயிர்த் தத்துவமான, தெய்வத்தன்மையுடைய ஆன்மா அல்லது இறைவன்தான்ல, அனைத்திலும் நிறைந்து நிற்கிறான் என்ற உண்மையை உணர்ந்திருப்பதைக் காட்டவே, நாம் சந்திக்கும் மனிதரிடமும் எங்கும் நிறைந்த இறைவனை நாம் காண்பதைத் தெரிவிக்கும் வகையில் சிரசினைத் தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறோம்.
இந்த உண்மைகளை நாம் உணரும், பொழுது நமது வரவேற்பு ஒரு சடங்காகவோ, கருத்தாழ மற்ற ஒரு சொல்லாகவோ இராது. மாறாக, ஒருவரை வரவேற்கையில், நமது வணக்கம் இருவருக்குமிடையே அன்பும், மரியாதையும் கலந்த ஒரு சூழ்நிலையை உருவாக்கி, அதன் பலனாக ஒருவருக்கொருவர் உணர்ச்சி பூர்வமாக உண்மையான உணர்வோடு ஒன்றிட வழிவகுக்கும்.

தாயை வணங்கினால் உண்டாகும் நன்மைகள் என்ன?
தாயிற்சிறந்த கோயிலுமில்லை என்பார்கள். பாலூட்டி சீராட்டி கண் போல காத்தவள்
தாய். திருமணம், பணிவாய்ப்பு போன்ற சுபவிஷயங்களின் போது பெற்றோரை வணங்க
வேண்டியது அவசியம். பெற்றோருக்கு பாதபூஜை செய்வது இதற்காகவே. ஜோதிட ரீதியாக
தாயை வழிபட்டவருக்கு சந்திரன் நன்மை அளிப்பதாகச் சொல்வர். சந்திராஷ்டம
நாட்களில் தாயை வணங்குவது பிரச்னையைத் தீர்க்கும்.
Subscribe to:
Posts (Atom)