இதை மோட்சதீபம் என்பர். மோட்சம் என்றால் விடுதலை. இவ்வுடலிலிருந்து உயிர்
விடுதலை பெற்று இறைவனடி சேர்வதை மோட்சம் என்பார்கள். வானுலகம் செல்லும்
உயிருக்கு நல்ல கதி கிடைப்பதற்காக இறைவனுக்கு ஏற்றப்படும் தீபமே மோட்ச
தீபம். கோயில்களில் கோபுர உச்சியில் மாலைப் பொழுதில் ஏற்றுவது வழக்கமாக
இருந்தது. சில கோயில்களில் கருவறையிலும் ஏற்றுகிறார்கள். மூன்று, ஐந்து
என்ற எண்ணிக்கையில் ஏற்றலாம்.
No comments:
Post a Comment