அந்தக் காலத்தில் மாதம் மும்மாரி மழை பொழிந்ததாகச் சொல்வர். இந்த
மும்மாரி பெய்தது என்பதற்கான பழம் பாடல் ஒன்றுண்டு. அது என்ன தெரியுமா?..
வேதம் ஓதும் வேதியர்க்கோர் மழை
நீதி மன்னர் நெறியினர்க்கோர் மழை
மாதர் கற்புடை மங்கையர்க்கோர் மழை
மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே
மூதுரை என்னும் நூலில், நெல்லுக்கு பாய்ச்சிய நீர் புல்லுக்கும் பாய்வது போல, ஊரில் ஒரு நல்லவர் இருந்தாலும் போதும் அவருக்காகவே மழை பொழியும். அதன் பயன் எல்லா உயிர்களுக்கும் கிடைக்கும், என்கிறார் அவ்வையார். அந்த ஒருவராகும் முயற்சியில் நாம் ஒவ்வொருவரும் இருக்கவேண்டும் என்பதே அவரின் எண்ணம்.

No comments:
Post a Comment