Saturday, May 24, 2014

பரணி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

 "பரணியில் பிறந்தார் தரணி ஆள்வார்'' என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர் முன்னோர்கள், பரணி நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும் மேஷ இராசியில் இடம்பெறுவதால் இது ஒரு முழுமையான நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திர ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் வாழ்வை முழுமையாக அனுபவித்து வாழ பிறந்தவர்கள், சுவையான உணவுகளை விரும்பி உண்பவர்கள், சரியான அளவு, அமைப்புடன் கூடிய உடல்வாகு தோற்ற பொலிவு கொண்டவர்கள், நல்ல ஆரோகியமும் நீண்ட ஆயுளும் கொண்டவர்கள், சமயோஜித புத்தி கொண்டவர்கள், எத்தகைய துன்பத்தினையும் மனதால் போட்டு குழப்பிகொள்ளாமல், அறிவுப்பூர்வமாக அதனை சிந்தித்து துன்பத்தில் இருந்து வெளியேறுபவர்கள், சாந்தமான சுபாவமும் இரக்க குணமும் இயற்கையிலேயே அமைய பெற்றவர்கள், அதிவேக சிந்தனையும் செயல்திறனும் கொண்டவர்கள், பிறரை எளிதாக புரிந்து கொள்பவர்கள், பிரயாணத்தில் அதிக ஆர்வம் கட்டுவார்கள், காதல் மன்னர்கள், எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள், திட சித்தம் இல்லாதவர்கள், இவர்கள் அதிகமான பகைவர்களை உண்டாக்கி கொள்வார்கள்.இவர்களுக்கு உண்டாகும் நட்சத்திர தோஷங்கள் போக்கவும், இவர்களின் வாழ்வில் உண்டான சோதனைகள் மாறி சாதனைகளும், வளமான வாழ்வும், செல்வ செழிப்பும் உண்டாக செய்ய வேண்டிய பரிகாரங்களை இனி கண்போம்.

அதி தேவதையும், அதி தெய்வமும் :

பரணி நட்சத்திர அன்பர்களின் அதி தெய்வம் காளி அல்லது துர்க்கை ஆகும்.பரணி நட்சத்திர அதி தேவதை யமன், இந்த பூவுலகில் பிறந்த உயிரினங்களின் ஆயுளை முடிப்பவன் யமனே, நீல நிற தேகம்கொண்டு கையில் பாசமும் தண்டமும் ஏந்தி, நீதியில் கூரான தராசு முள்போல நடுநிலை காப்பவன். எருமை வாகனம் ஏறுபவன், சூர்யனுக்கும் சாயா தேவிக்கும் மகனாக பிறந்தவன், சனீஸ்வரனின் சகோதரன் யமன், யமனே பரணி நட்சத்திர அதி தேவதை ஆகும்.

துர்க்கை காயத்திரி மந்திரம் 

                                         ஓம் காத்யாயனாய வித்மஹே 
                                                கன்யா குமாரீய தீமஹி !
                                          தந்நோ துர்க்கி ப்ரசோதயாத் !!

யம காயத்திரி மந்திரம் 

பாச தண்டோஜ்வல புஜத்வயம் மகிஷ வாகனம் !
யமம் நீலதனும் பீர்ம பரணி தேவதாம் பஜே !!

பரணி நட்சத்திர காயத்திரி 

ஓம் க்ருஷ்ணவர்ணாயை வித்மஹே தண்டதராயை தீமஹி !
தந்நோ பரணி ப்ரசோதயாத் !!


பரணி நட்சத்திர பரிகார விருட்சம் 

பரணி நட்சத்திர அன்பர்களின் பரிகார விருட்சம் நெல்லி மரம் ஆகும். தவா என்றால் கருநெல்லி என்று பொருள். மஹா விஷ்ணுவுக்கு மாதவா என்று பெயர் உண்டு. லக்க்ஷ்மியின் அம்சம் தவாவுடன் சேர்ந்ததால் மாதவா என்று பெயர் வந்ததாக பெரியோர்கள் சொல்கிறார்கள். பரணி  நட்சத்திர அன்பர்கள் தான் பிறந்தபரணி  நட்சத்திரம் வரும் நாளில் நெல்லி  மரம் தல விருட்சமாக உள்ள ஆலயங்கள் சென்று நெல்லி  மரத்துக்கு நீர் உற்றுவதும், நெல்லி  மரத்தடியில்தியானம் செய்வதும், விருட்ச பரிகாரங்கள் செய்துகொள்வதும் சிறந்த பரிகாரங்கள் ஆகும். பரணி  நட்சத்திர அன்பர்கள் துர்க்கா  காயத்திரி, யம  காயத்திரி  மந்திரம், பரணி  நட்சத்திர காயத்திரி மந்திரங்களை நெல்லி  மரத்தின் அருகில் அமர்ந்து ஜெபம் செய்வது வாழ்வில் தோன்றும் துன்பங்களை நீக்கி இன்பமான வாழ்வும், செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றியும், உடலை வாட்டும் நோய்கள் தீர்ந்து நீண்ட ஆயுளும், வற்றாத செல்வமும், மங்காத புகழும் பெற்று நீடுடி வாழலாம்.


            நமது சர்வ சக்தி விருட்ச பீடத்தில் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்து தினசரி பரிகார பூஜைகள் நடை பெற்று வருகின்றன. இவை மட்டுமின்றி மகா விருட்சங்களான ருத்ராட்சம், மஹா வில்வம், சரகொன்றை மற்றும் அதி முக்யமான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்த விருட்சங்களுக்கு நடுவே பஞ்சம் மற்றும் பஞ்சமஹா பாவங்கள் சர்வ தோஷங்களை நீக்கும் பஞ்ச லிங்கங்களும் + பாதாள லிங்கமும் பிரதிஷ்டை செய்ய பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே சர்வ சக்தி விருட்ச பீடம் மிக உயர்ந்த பலன்களை தரும் நட்சத்திர பரிகார ஸ்தலம் ஆகும். உங்கள் வாழ்வு வளம் பெற இங்கு வந்து பரிகாரங்களை செய்து கொள்வது மிக்க பலன்தரும், உங்கள் வாழ்வு மலர உங்கள் துன்பங்களை களைய பஞ்ச லிங்க + பாதாள லிங்க பிரதிஷ்டை திருப்பணியில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள், நன்கொடைகள் தந்து உதவுங்கள், திருப்பணிக்கு நன்கொடை அளிக்கும் அன்பர்களின் வாழ்வு சிறக்க அவர்கள் பிறந்த நட்சதிரதன்று (ஆயுள் முழுதும்) தொடர்ந்து பரிகார பூஜைகள் அவர்களுக்காக நடத்தப்படும்

வியாபாரத்தில் செல்வம் கொழிக்க வைக்கும் வாலை சக்கரம்

இன்றைய கால கட்டத்தில் வியாபாரம் செய்வது என்பது மிகவும் கடுமையான ஒரு செயல் ஆகிவிட்டது. ஒன்று பல போட்டியாளர்களும், அந்த வியாபார போட்டியல் வாடிக்கையாளர்களை கவர விலை குறைப்பும், பல சலுகைகளும் பரிசுப்பொருட்களை வாடிக்கையளர்களுக்கு அள்ளி வழங்குவதும் போன்ற காரணங்களாலும், செய்யும் வியாபாரங்களில் நல்ல லாபத்தினை நாம் அடைவது என்பது சாத்தியமில்லை. மேலும் நமது ஜாதகங்களில் உள்ள தோஷங்களும், கிரகங்களின் கோட்சாரமும், திசை - புத்தியால் நமக்கு உண்டாகும் பலன்களும் அதாவது நமது கர்மவினை பலன்களும் நம்மை நாம் செய்யும் வியாபாரத்தில்  பெரும் இலாபத்தினை வெற்றிகளை வளர்ச்சியினை பாதிக்கும் அம்சங்களாக விளங்குகின்றன.

       சரி இந்த நிலை மாற நாம் தெய்வ அருளினை தான் நாட வேண்டி இருக்கிறது, நாம் நேரடியாக தெய்வ அருளினை பெறுவது இயலாத காரியம் என்பதை அறிந்த முன்னோர்களும் சித்தர்களும் நாமும் வளமுடன் வாழ என்ற நோக்கிலேயே அருளி சென்றவை தான் எந்திரங்களும் அதற்க்கு உண்டான மந்திரங்களும் அதற்கென உடன் வைக்கும் வசிய மூலிகைகளும் ஆகும். அவ்வகையில் வியாபாரிகள் வியாபாரங்களில் வெற்றி மேல் வெற்றி அடையவும், செல்வங்கள் அடையவும், வாடிக்கையாளர்கள் பெருகவும் சொல்லி சென்ற எந்திரமே"வியாபாரத்தில் செல்வம் கொழிக்க வைக்கும் வாலை சக்கரம்" ஆகும்.

நாக தோஷம் ஜோதிட பார்வை







   நாக தோஷம் என்ற பெயரை கேட்ட உடனே அச்சப்படுகின்றனர் பலர். இது  தேவையற்ற பயமாகும். சரியான பரிகாரம் மூலம் இந்த தோஷத்தை நீக்கி கொள்ளலாம். ஜோதிட ரீதியாக இராகு மற்றும் கேது லக்னம் அல்லது இராசிக்கு 1,2,4,5,7,8,10,12 ம் இடங்களில் அமர்ந்தால் நாக தோஷம் என்று பொருள். இந்த நிலை உங்களுக்கு ஜாதகத்தில் இருந்தால் கோட்சார ரீதியில் அந்த இடங்களுக்கு இராகு, கேது வரும் காலங்களில் கெடு பலன்கள் நடைபெறுவதை காணலாம்.
              நாக தோஷம் தரும் கெடுபலன்களை இனி பார்ப்போம். குடும்ப வாழ்வில் சிக்கல்கள் தொடரும், கல்வி கெடும், நாணயம் தவறும், குடும்பத்தை விட்டு விலக்கி வைக்கும், சேமிப்பு இருக்காது, தயார் சுகம் கெடும், தொழிலாளர் ஒத்துழைப்பு இருக்காது, திருமணம் தடைபடும், புத்திர பாக்கியம் கெடும், பெண்களின் ஜதகமாயின்  கற்பிக்கு சோதனை வரும்.
             இத்தகைய பலன் உள்ளவர்கள் உடனே சர்ப்ப தோஷ பரிகாரம் செய்தல் கெடு பலன்கள் நீங்கி வாழ்வு சுகம் பெரும்.


தோஷங்கள் உண்டாகும் காரணம்

மனிதனுடைய பாவ கர்மங்கள் மூன்று வகைப்படும் . அவை 1.சஞ்சித கர்மம் ,2.பிராப்த கர்மம் 3.ஆகாமிய கர்மம் ஆகும் . அவைகளை விரிவாக இங்கே தெரிந்து கொள்ளலாம் .

           1.சஞ்சித கர்மம் :
                                               முன்னோர்கள் செய்த பவபுணியங்களின் பலனால் நமக்கு வரும் வினை பதிவு ஆகும் . இதில் நன்மையும் இருக்கும் , தீமையும் இருக்கும். இதில் வரும் நன்மையும், தீமையும் நாம் அனுபவித்தே தீரவேண்டும் இதில் யாருமக்கும்  விதிவிலக்கு இல்லை. இந்த கர்மத்தால் வரும் கெடுபலனை நீக்கும் பரிகாரம் எதுவும் கிடையாது.


         2.பிராப்த கர்மம் :
                                               இப்பிறவியில் நாம் நம் தொழில் மூலமாகவும் , அதிகாரத்தின் மூலமாகவும் நாம் செய்யும் நன்மை, தீமை. இதனையும் நாம் இப்பிறவியில் அனுபவித்தே ஆகவேண்டும். இந்த கர்மத்தை நாம் பரிகாரம் மூலம் மாற்றிக்கொள்ளலாம்.

       3. ஆகாமிய கர்மம்
                                               மனிதன் புற இச்சையில் மயங்கி மனதாலும் , பேச்சாலும் ,தன் நடவடிக்கைகளாலும் திரும்ப திரும்ப செய்யும் நன்மை தீமைகளின் வினை பதிவு ஆகும். இதில் நன்மையை செய்தல் நன்மையும் , தீமையை செய்தால் கேடுபலனும் உடனே நம்மை வந்தடையும். இந்த கர்ம பலனை நீக்க சில பரிகாரம் உண்டு. ஆயினும் நம் செயல்களிலும் மற்றம் வேண்டும்.

                   ''கருவமைப்பின் வழி வந்த வினைபதிவு சஞ்சிதமாம்
                    உருவெடுத்தபின் கொண்ட வினைபதிவு பிராப்தம்
                    இருவகையும் கூடி எழும் புகுவினையே ஆகாமியம்
                    ஒரு வினையும் வீண் போகா உள்ளடங்கிப் பின் விளைவம் ''

                         என்கிறார் யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி. நாம் நம் கர்ம வினைகளுக்கு உண்டான பரிகாரங்களை செய்துகொண்டு, நாம் செய்யும் செயல்களையும் நல்லதாக மாற்றிக் கொண்டால் வாழ்வில் வெற்றி மேல் வெற்றிதானே.

பாவத்தைப் போக்கும் சக்தி கங்கை நீருக்கு வந்தது ஏன்?

பகீரதன் செய்த தவத்தின் பயனாக ஆகாயத்தில் ஓடிய வானதி நதியே கங்கை என்ற பெயரில் பூமிக்கு வந்தது. அதை சிவபெருமான் தன் ஜடாமுடியில் தாங்கியதாக புராணம் கூறுகிறது. திரிவிக்ரம மூர்த்தியாக மண்ணையும், விண்ணையும் அளந்த திருமாலின் திருவடியை சத்தியலோகத்தில் தரிசித்த பிரம்மா அபிஷேகம் செய்து வழிபட்டார். அதுவே கங்கையாக பூலோகத்தில் ஓடுகிறது என்றும் சொல்வர். இப்படி தெய்வ சம்பந்தம் பெற்ற நதி என்பதால், பாவம் போகும் என்று 

எந்த தெய்வத்திற்கு.. தேங்காய் மூடியில் நெய் தீபம்!

பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி நாளில் இந்த தீபமேற்றி வழிபடுவது வழக்கத்தில் உள்ளது. மற்றபடி இதைப் பற்றிக் கூறுவதற்கு சாஸ்திர ரீதியாக செய்திகள் எதுவுமில்லை.

சனி திசை வராமல் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

ஒருவர் பிறந்த நட்சத்திரத்தைப் பொறுத்து எல்லா கிரகங்களின் திசைகளும் ஒன்றன் பின் ஒன்றாக வரவே செய்யும். இதிலிருந்து யாரும் தப்ப முடியாது. சனிதிசை வந்து விட்டாலே சிரமம் என்றும் கருத வேண்டாம். ஜீவன பலத்தையும்(தொழில்), ஆயுள் பலத்தையும் தரும் அதிகாரம் சனி ஒருவருக்கே உண்டு. நீதி, நியாயத்திற்கு கட்டுப்படும் இவருக்கு, தர்ம நெறியில் வாழ்பவர்கள் யாவரையும் பிடிக்கும்.சனீஸ்வரர் ஜாதகத்தில் சுபபலம் பெற்றிருந்தால் ஆயுள், ஆரோக்கியம், தொழில், செல்வ வளம், நல்ல பணியாளர்கள், மக்கள் செல்வாக்கு உண்டாகும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.