Saturday, May 24, 2014

தோஷங்கள் உண்டாகும் காரணம்

மனிதனுடைய பாவ கர்மங்கள் மூன்று வகைப்படும் . அவை 1.சஞ்சித கர்மம் ,2.பிராப்த கர்மம் 3.ஆகாமிய கர்மம் ஆகும் . அவைகளை விரிவாக இங்கே தெரிந்து கொள்ளலாம் .

           1.சஞ்சித கர்மம் :
                                               முன்னோர்கள் செய்த பவபுணியங்களின் பலனால் நமக்கு வரும் வினை பதிவு ஆகும் . இதில் நன்மையும் இருக்கும் , தீமையும் இருக்கும். இதில் வரும் நன்மையும், தீமையும் நாம் அனுபவித்தே தீரவேண்டும் இதில் யாருமக்கும்  விதிவிலக்கு இல்லை. இந்த கர்மத்தால் வரும் கெடுபலனை நீக்கும் பரிகாரம் எதுவும் கிடையாது.


         2.பிராப்த கர்மம் :
                                               இப்பிறவியில் நாம் நம் தொழில் மூலமாகவும் , அதிகாரத்தின் மூலமாகவும் நாம் செய்யும் நன்மை, தீமை. இதனையும் நாம் இப்பிறவியில் அனுபவித்தே ஆகவேண்டும். இந்த கர்மத்தை நாம் பரிகாரம் மூலம் மாற்றிக்கொள்ளலாம்.

       3. ஆகாமிய கர்மம்
                                               மனிதன் புற இச்சையில் மயங்கி மனதாலும் , பேச்சாலும் ,தன் நடவடிக்கைகளாலும் திரும்ப திரும்ப செய்யும் நன்மை தீமைகளின் வினை பதிவு ஆகும். இதில் நன்மையை செய்தல் நன்மையும் , தீமையை செய்தால் கேடுபலனும் உடனே நம்மை வந்தடையும். இந்த கர்ம பலனை நீக்க சில பரிகாரம் உண்டு. ஆயினும் நம் செயல்களிலும் மற்றம் வேண்டும்.

                   ''கருவமைப்பின் வழி வந்த வினைபதிவு சஞ்சிதமாம்
                    உருவெடுத்தபின் கொண்ட வினைபதிவு பிராப்தம்
                    இருவகையும் கூடி எழும் புகுவினையே ஆகாமியம்
                    ஒரு வினையும் வீண் போகா உள்ளடங்கிப் பின் விளைவம் ''

                         என்கிறார் யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி. நாம் நம் கர்ம வினைகளுக்கு உண்டான பரிகாரங்களை செய்துகொண்டு, நாம் செய்யும் செயல்களையும் நல்லதாக மாற்றிக் கொண்டால் வாழ்வில் வெற்றி மேல் வெற்றிதானே.

No comments:

Post a Comment