திருவண்ணாமலையில், மஹா தீபம் ஏற்றுவதற்காக, வேலூர் ஆவின்
நிறுவனத்திடமிருந்து, 3,500 கிலோ நெய் கொள்முதல் செய்யப்பட்டது. கார்த்திகை
தீபத் திருவிழா கடந்த, 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும், 14ம்
தேதி மஹா தேரோட்டமும், 17ம் தேதி அதிகாலை, 4 மணிக்கு பரணி தீபமும், மாலை, 6
மணிக்கு மலை மீது மஹா தீபமும் ஏற்றப்படுகிறது.இதற்காக, ஆவின் நிறுவனம்
நெய் வழங்கி வந்தது. மதுரை காந்தி கிராமம் நிறுவனத்திடமிருந்து, கடந்த, 4
ஆண்டுகளாக கோவில் நிர்வாகம் நெய் கொள்முதல் செய்தது. இந்நிலையில், மீண்டும்
வேலூர் ஆவின் நிறுவனம் கோவில் நிர்வாகத்தினரிடம் தொடர்பு கொண்டு மற்ற
நிறுவனங்களை விட குறைந்த விலைக்கு நெய் வழங்குவதாக கூறினர். இதையடுத்து,
இந்த ஆண்டு ஆவின் நிறுவனத்திடமிருந்து, 3,500 கிலோ நெய் கொள்முதல்
செய்யப்பட்டுள்ளது. இந்த நெய் இன்று, கோவிலுக்கு கொண்டு வரப்படுகிறது.
மேலும், பக்தர்களிடம் இருந்தும் நெய் காணிக்கை பெறப்படுகிறது. இதுவரை,
மூன்று லட்சம் ரூபாய் நெய் காணிக்கை வசூலாகியுள்ளது. மேலும் நெய் காணிக்கை
செலுத்துவதற்கு வசதியாக, அண்ணாமலையார் கோவில் கொடிமரம் அருகே சிறப்பு
உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. மஹா தீபம் ஏற்றுவதற்கு, 17ம் தேதி காலை, மலை
உச்சிக்கு நெய் கொண்டு செல்லப்படும். மஹா தீபம் ஏற்றப்பட்டு தொடர்ந்து, 11
நாட்களுக்கு எரியும். தீபம் ஏற்றுவதற்கு, திருப்பூரிலிருந்து, 1,000
மீட்டர் காடா துணி கொண்டு வரப்படுகிறது.
Sunday, November 17, 2013
கார்த்திகை விளக்கின் தத்துவம்!
எண்ணெய் கரைகிறது, திரி கரிகிறது. ஆம்...தீபம் என்பது தன்னை கரைத்துக்
கொண்டு மற்றவர்களுக்கு ஒளி வழங்குகிறது. பிறர்நலம் பேணுவதற்காக தன் உயிரையே
தியாகம் செய்ய வேண்டும் என்பது கார்த்திகை விளக்கின் தத்துவம். அது
மட்டுமல்ல! தீபத்தின் ஒளி மனிதர்களுக்கு மட்டுமல்ல, பிற உயிரினங்களின்
மீதும், உயிரற்ற பொருட்கள் மீதும் படுகிறது. புழு, கொசு, நிலம், நீர்வாழ்
பிராணிகள் மீதெல்லாம் படுகிறது. தீபஒளி எப்படி எல்லார் மீதும் பரவுகிறதோ,
அதுபோல் மனிதனின் மனதில் எழும் அன்பு ஒளி எல்லார் மீதும் பட வேண்டும்
என்பதையே கார்த்திகை தீபம் நமக்கு உணர்த்துகிறது.
தீபம் ஏற்றும் முறைகள்!
ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து
வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும். வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதே மிகச்
சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில்
தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே
தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில்
ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில்
விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.
விளக்கினை ஏற்றி வைப்பதோடு இதோ இங்கே தரப்பட்டுள்ள துதியினையும்
சொல்லுங்கள். தீப லட்சுமியின் அருளால் உங்கள் வாழ்வில் அஷ்டலட்சுமி
கடாட்சம் சேரும்.
கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும். கார்த்திகை மாதத்தின் தொடக்கத்திலும் முடிவிலுமாக இரு நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் வருமாயின், இரண்டாவதாக வரும் நாளில் கொண்டாடுவது மரபு.

திருவண்ணாமலை தீபத்திருநாளின் சிறப்பு!
திருவண்ணாமலை தீபத்திருநாள் மிகவும் பழமையானது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த
திருவிழாவில் கூடியதையும், அனைவருக்கும் உணவு, தங்குமிடம் அளிப்பதற்காக
தர்ம சத்திரங்கள் இருந்ததையும் அண்ணாமலையார் கோயில் கல்வெட்டுகள் மூலம்
அறிய முடிகிறது. துறவிகள் நிறைந்த ஊராக இத்தலம் இருந்த தால், ஆண்டிகள்
மிகுந்தது அண்ணாமலை என்ற பழமொழியும் உண்டானது. இங்கு வரும் சிவபக்தர்களை
அண்ணாமலை திருக்கூட்டத்தார் என்றனர். இவ்வூரில் உள்ள கோயில்களில் பூஜை
செய்வதும், நந்தவனங்களில் மலர் பறிப்பதும் இவர்களது பணியாக இருந்தன.
இன்றும், திருவண்ணாமலை கோயிலில் சில அடியவர்கள் மாலை கட்டும் பணி
செய்கின்றனர். பூவார் மலர் கொண்டு அடியார் தொழுவார் என்று அருணாசல சிவன்
பூமாலை விரும்புவதை போற்றுகிறார் ஞானசம்பந்தர்.
ஆறுதீபம் ஏற்றுங்க: திருக்கார்த்திகை திருநாளில் திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மலை தீபம் சிவாம்சமாகும். யாராலும் அணுக முடியாத ஞான மலை அண்ணாமலை. தேவர்களாலும் அறிந்து கொள்ளமுடியாத பரம்பொருள் இறைவன். ஆனால், நம் மீது கொண்ட கருணையினால் தன்னை எளிமைப்படுத்திக் கொண்டு அருள்புரியும் நாளே திருக்கார்த்திகை. சூரபத்மனின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டபோது, ஈசனே முருகனாக அவதரித்து அருள்புரிந்தார். அவரது நெற்றிக்கண்ணிலிருந்து தீப்பொறிகள் கிளம்பின. ஆறுதீப்பொறிகளும் சரவணப்பொய்கையில் சிறுகுழந்தைகளாக உருவெடுத்தன. அதுபோல,பெருஞ்சுடரான அண்ணாமலை தீபமே நம் வீட்டு சிறுஅகல்களில் குட்டிக்குழந்தையாக முருகனாக ஒளிவீசுகிறது. வீடுகளில், கார்த்திகை தீபம் ஏற்றும்போது குறைந்த பட்சம் ஆறுதீபங்களை வாசலில் வைக்க வேண்டும். அண்ணாமலை தீபம் வேறு, நம் வீட்டு அகல்தீபம் வேறு என நினைக்க வேண்டாம். இரண்டும் ஒன்றே.
108 நாள் விரதம்: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தன்று காலையில் ஏற்றப்படுவது பரணி தீபம். கோயிலுக்குள் இந்த தீபத்தை ஏற்றுவர். இந்த தீபம் ஏற்றும் சிவாச்சாரியார் 108 நாட்கள் தொடர்ச்சியாக விரதம் இருப்பார். ஒவ்வொரு நாளும் அணையா தீபம் ஏற்றி அண்ணாமலையாரை வழிபடுவார். கார்த்திகைக்கு முன்னதாக 108 நாட்கள் விரதம் இருப்போர் அண்ணாமலையாரின் அருட்கடாட்சத்தை பெறுவர். அவர்களுக்கு மறுபிறவி இல்லை என்பது ஐதீகம்.
பழமையான கார்த்திகை தீப விழா: கார்த்திகை தீப விழா மிகவும் பழமையானதாகும். தொல்காப்பியத்தில் "வேலினொக்கிய விளக்கு நிலையும் என்று இந்தத் திருவிழா பற்றி கூறப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தன்று இந்த விளக்கு ஏற்றப்பட்டதாக நச்சினார்க்கினியர் என்னும் புலவர் உரை எழுதி இருக்கிறார். சமண மத நூல்களிலும் கார்த்திகை தீப விழா பற்றி கூறப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியமான முத்தொள்ளாயிரத்தில் இந்தத் திருவிழா பற்றி கூறப்பட்டுள்ளதிலிருந்து இதன் பழமை தெரியவருகிறது.
உருண்டே கிரிவலம் வந்தவர்: திருண்ணாமலையை நடந்து வலம் வருவதற்குள்ளாகவே கால் வலிக்க ஆரம்பிக்கும். ஆனால், அண்ணாமலை சுவாமி என்பவர், அங்கப்பிரதட்சணம் செய்து மலையை வலம் வருவார். 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இவர், சிவாயநம, ஓம் நமசிவாய என்னும் மந்திரத்தை ஜெபித்தபடியே பிரதட்சணம் செய்வது வழக்கம். நாயன்மார் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். கார்த்திகைதிருவிழாவின் ஆறாம்நாள் நடக்கும் அறுபத்துமூவர் விழாவில், தான் கட்டிய மடாலயத்தில் அன்னதானமும் செய்தார்.
தமிழக தீபாவளி: நல்லக விளக்கது நமச்சிவாயவே என்று சிவனைத் தேவாரம் போற்றுகிறது. கார்த்திகை மாதம் முழுவதும் வாசலில் விளக்கேற்றுவர். ஐப்பசியில் தீபாவளியை ஒளித்திருநாளாகக் கொண்டாடினாலும், தமிழகத்தின் தீபாவளியாக இருப்பது திருக்கார்த்திகை தான். பஞ்சபூதங்களில் அக்னி தத்துவமாகத் திகழும் தலம் திருவண்ணாமலை. நெருப்பைப் போல சிவந்த நிறம் கொண்டதால் இறைவனுக்கு சிவன் என்ற பெயர் ஏற்பட்டது. திருமாலும், நான்முகனும் அடிமுடி காண முடியாத நெருப்பாக இறைவன் காட்சியளித்ததும், உமையவளுக்கு இடப்பாகத்தை தந்ததும் இந்நாளில் தான். தாழ்த்திப் பிடித்தாலும்,மேல்நோக்கி எரிவது நெருப்பின் இயல்பு. அதுபோல, வாழ்ந்தாலும், தாழ்ந்தாலும் மனதால் உயர்ந்த மாமனிதனாக வாழவேண்டும் என்பதே தீபத்திருவிழாவின் நோக்கம்.

திருக்கார்த்திகை தோன்றியது எவ்வாறு?
திருக்கார்த்திகை தோன்றுவதற்கு இரண்டு விதமான காரணங்கள் கூறப்படுகின்றது.
அதில் ஒன்று ஒருமுறை உமாதேவி சிவனின் கண்களை விளையாட்டாக கைகளால்
மறைத்தாள். அப்போது பிரபஞ்சமே இருள்மயமானது. உயிர்கள் அனைத்தும் துயரில்
ஆழ்ந்தன. இச்செயலால், தேவிக்கு பாவம் உண்டானது. விமோசனம் தேடி காஞ்சிபுரம்
சென்று சிவனை நோக்கி தவத்தில் ஆழ்ந்தாள். இறைவனும் தேவிக்கு காட்சியளித்து
திருக்கார்த்திகை நாளில் திருவண்ணாமலை வரும்படி அருள்புரிந்தார். தேவியும்
அண்ணாமலையிலுள்ள பவழக்குன்று மலையில் இருந்த கவுதம மகரிஷி உதவியுடன்
பர்ணசாலை அமைத்து தவம் செய்தாள். பவுர்ணமி சந்திரன் கார்த்திகையில்
சஞ்சரிக்கும் வேளை வந்தது. இறைவன் தேவிக்கு காட்சியளித்து, இடப்பாகத்தில்
ஏற்று அருள்புரிந்தார்.
இந்தத் திருக்கார்த்திகை விழா பிறந்ததற்கு மற்றொரு காரணம். ஒருசமயம் திருக்கயிலாயத்தில் பரமேஸ்வரனும் அம்பிகையும் எழுந்தருளி இருக்கும் போது, அங்கே நெய்யிட்ட திருவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. விளக்கு ஒளி இழக்கும் தருணம் எலி ஒன்று அங்கு வந்தது. நெய்யின் வாசனை அறிந்து அதை உண்ண நினைத்துத் திரியை இழுத்தது. தூண்டி விடப்பட்டதால் தீபம் பிரகாசமாக எரிந்தது. ஒளி மிகுந்ததனால் எலி ஓட ஆரம்பித்தது. ஒளியைத் தூண்டிய எலிக்கு இறைவன் அருள் கிடைத்தது. எலிக்கு அவர் மானிடப் பிறவி கொடுத்தார். அதற்கு அரச போகமும் அரண்மனை வாழ்வும் தந்தருளினார். முன்ஜென்மத்தில் எலியாய் இருந்தது, அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாய்ப் பிறந்தார். எண்ணற்ற செல்வங்களுக்கு அதிபதியானார். கூடவே செருக்கும் வளர்ந்தது. ஒருநாள் அகங்காரத்துடன் திருக்கோயிலுக்குச் சென்றார். பட்டாடைகள் தரையில் புரள அலட்சியத்தோடு நடந்து சென்றதால், அங்கிருந்த அகல் விளக்கின் தீப்பொறி சக்கரவர்த்தியின் மீது பட்டுப் பற்றி எரிந்தது, உடல் புண்ணாயிற்று, செருக்கு அடங்கிய சக்கரவர்த்தி இருகைகூப்பி ஆண்டவனை நோக்கிப் பிரார்த்தித்தார். தனது உடம்பில் ஏற்பட்ட ரணத்தைப் போக்கியருளுமாறு வேண்டினார்.
தீபப்பொறியால் ஏற்பட்ட ரணத்திற்கு நாள்தோறும் திருக்கோயிலில் தீபவரிசைகளை ஏற்றித் தொழுது கொண்டு வா. காலப்போக்கில் உன் நோய் நீங்கும்! என்று இறைவன் அசரீரியாகச் சொல்ல, மன்னன் மகிழ்ச்சியுற்றான். நாள்தோறும் கோயிலுக்குச் சென்று வரிசை வரிசையாக நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டான். இவ்வாறு திருவிளக்கு ஏற்றி வந்த காலத்தில் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரம் கூடிய பவுர்ணமி திதியில் இறைவன் திருவுள்ளம் இரங்கியது. இறைவன் ஜோதி வடிவில் வந்து, ஒளிப்பிழம்பாக நின்றான். மன்னனின் நோய் நீங்கியது. இவ்வாறு தொடங்கிய தீப வரிசை வழிபாடே கார்த்திகை தீபத் திருவிழாவாக உயர்ந்தது என்பர். காலப்போக்கில் அனைத்து வர்ணத்தாரும் இத்தகைய ஒளி வழிபாட்டில் ஈடுபட, இது பொது வழிபாடாக உருவானது. சோதியே, சுடரே, சூழ் ஒளி விளக்கே என்று இறைவனைப் போற்றுகின்றார் மாணிக்கவாசக பெருமான்.

Wednesday, November 6, 2013
சூரசம்ஹாரம் நடத்துவது ஏன்?
கஷ்யப முனிவருக்கும் மாயைக்கும் பிறந்த பிள்ளைகள் சூரபத்மன், சிங்கமுகன்,
தாரகன். இவர்களுக்கு ஆயிரம் தலைகள், இரண்டாயிரம் கைகள். சூரபத்மனுக்கு
அசுரமுகம். தாரகனுக்கு யானைமுகம். சிங்கமுகனுக்கு சிங்கமுகம். இவர்கள்
குலகுருவான சுக்கிராச்சாரியாரிடம் உபதேசம் பெற்று சிவனை நோக்கித்
தவமிருந்தனர். தவப்பயனாக 1008 அண்டங்களையும் ஆட்சிசெய்யும் வரம் பெற்றனர்.
சூரியன், சந்திரன், அக்னிதேவன், குபேரன் முதலிய தேவர்கள் அனைவரும்
அசுரர்களின் பணியாளர்களாக மாறினர். தேவர்கள் பிரம்மாவிடம் சென்று தங்கள்
நிலையைச் சொல்லி வருந்தினர். சூரபத்மனை அழிக்க சிவனால் மட்டுமே முடியும்.
அதனால் அவரிடம் முறையிட்டால் விடுதலை கிடைக்கும், என்றார் பிரம்மா.
தேவர்களும் கைலாயம் சென்று சிவனிடம் முறையிட்டனர். அவருக்கு சத்யோஜாதம்,
வாமதேவம், தத்புருஷம், ஈசானம், அகோரம், அதோமுகம் ஆகிய ஆறு முகங்கள் உண்டு.
அவற்றில் இருந்து ஆறுநெருப்புப் பொறிகளை உண்டாக்கினார். அவை
சரவணப்பொய்கையில் விழுந்து குழந்தைகளாக மாறின. அவற்றை ஒன்று சேர்த்த போது
கந்தன் ஆனார். இவர் சூரபத்மனை வெற்றி கொண்டு தேவர்களைக் காத்தார். ஐப்பசி
சஷ்டிதிதியில் சூரசம்ஹாரம் நிகழ்ந்ததாக ஐதீகம்.
கந்தசஷ்டியில் எவ்வாறு விரதம் இருக்க வேண்டும்?
அதிகாலை4.30-6 மணிக்குள் நீராடவேண்டும். நாள்முழுவதும் விரதம் இருக்க
முடிந்தவர்கள், பால்,பழம் மட்டும் சாப்பிடலாம். ஓரளவு தாக்கு பிடிப்பவர்கள்
ஒருவேளை உணவும், மற்ற நேரங்களில் பால், பழமும் சாப்பிடலாம். உடல்நிலை
காரணமாக சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் எளிய உணவு எடுத்துக்
கொள்ளலாம். ஒரு காலத்தில் வெறும் தண்ணீருடன் விரதம் இருந்தவர்கள் உண்டு.
* முருகனுக்குரிய மந்திரங்களான ஓம் சரவணபவ ஓம் சரவணபவாயநம ஓம் முருகா ஆகிய மந்திரங்களில் ஏதாவது ஒன்றை நாள் முழுதும் ஜெபித்து வர வேண்டும்.
* திருப்புகழ், கந்தசஷ்டிகவசம், ஸ்கந்தகுருகவசம், சண்முககவசம் பாடல்களில் ஏதேனும் ஒன்றை காலையிலும், மாலையிலும் பாராயணம் செய்ய வேண்டும்.
* முருகன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்யவேண்டும்.
* கோயிலுக்கு குழுவாகச் சென்று, ஒருவர் முருகன் நாமத்தைச் சொல்ல மற்றவர்கள் அரோகரா கோஷமிடலாம். உ.ம்: கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா, வேலனுக்கு அரோகரா.
* மலைக்கோயில்களில் மலையை வலம் வந்தால் மிகுந்த புண்ணியம் உண்டாகும். கோயில்களில் தங்கி விரதமிருப்பது நல்லது. பணி காரணம் உள்ளவர்கள் அவரவர் இருப்பிடத்திலேயே விரதமிருக்கலாம்.
மளிகைக்கடை முருகன்: 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த சொக்கநாதப்புலவர், சுவாமிமலை முருகனை மளிகைக்கடை வியாபாரியாக சித்தரித்துப் பாடியுள்ளார். அந்தப்பாடலில், ஏரகத்துச் செட்டியாரே! (சுவாமிமலையின் புராணப்பெயர் திருஏரகம்) என்னிடம் குழம்புக்காக வாங்கிய வெங்காயம், பெருங்காயம், வெந்தயம் ஆகியவை உள்ளன. இப்போது அஜீரணத்தால் அவதிப்படுகிறேன். இந்தப் பொருட்களை சாப்பிட்டால் அது நீங்கி விடும். ஆனால், வெங்காயம் வாடி வதங்கி விட்டது. அதனால் மற்ற பொருள்கள் இருந்தும் பயனில்லை. அதனால், இனி சீரகத்தை மட்டும் கொடு. பெருங்காயம் இனி தேவைப்படாது, என்கிறார். இதன் உண்மையான பொருள் என்ன தெரியுமா? வெங்காயம் என்பது முன்வினைப்பயனால் ஏற்பட்ட உடம்பு. பெருங்காயம் என்பது பெரிய உடம்பு. சீரகம் என்பது மோட்சம். சுவாமிநாதனே! எனக்கு மோட்சத்தைக் கொடுத்து விட்டால், இனி பிறவியில் சிக்கி பெரிய உடம்பை எடுக்கும் வேலை இருக்காது.
மொட்டைத்தலையில் குடுமி: முருகப்பெருமான் தாயின் சம்பந்தம் இல்லாமல், தந்தை சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர். இதை விளக்கும் விதத்தில் பழநியில் தண்டாயுதபாணி என்னும் பெயரில் சிவாம்சத்துடன் அபிஷேகப்பிரியனாக விளங்குகிறார். இவருக்கு பால்,பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், திருநீறு அபிஷேகம் சிறப்பானது. இவர் மொட்டைத் தலையுடன் காட்சியளிக்கிறார். ஆனால், அபிஷேகத்தின் போது ஒரு குடுமி இருப்பதைக் காணமுடியும். ஸ்தல புராணத்தில் முருகனின் குடுமியழகு பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது.
கேரள மக்கள் குவிவது ஏன்?
போகர், புலிப்பாணி சித்தர்களால் வழிபாடு செய்யப்பட்ட பழநி முருகன் கோயிலில், சேரமன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர். மூலவர் தண்டாயுதபாணி, சேரநாடான கேரளாவை நோக்கி மேற்குமுகமாக வீற்றிருக்கிறார். இதனால், கேரளமக்கள் இக்கோயிலுக்கு அதிகம் வருகின்றனர்.

Subscribe to:
Posts (Atom)