நவக்கிரகங்களில் ஒருவரான சந்திரனே நம் மனதை இயக்குபவர். வளர்பிறையில்
சந்திரன் ஆற்றலோடு திகழ்வார். அந்நாட்களில் நிலவின் அமுத கிரணங்கள்
பூமியில் விழுவதால், மனம் உற்சாகத்துடன் இருக்கும். உற்சாகமாக
இருக்கும்போது, சுபநிகழ்ச்சிகள் குறைவின்றி சிறப்பாக நடந்தேறும்
என்பதற்காகவே வளர்பிறையைத் தேர்ந்தெடுக்கின்றனர்
Sunday, April 8, 2012
Saturday, April 7, 2012
கோயில் விக்ரகங்களை எப்படி அலங்கரிக்க வேண்டும்?
இறைவனுக்குத் திருமேனியை உருவாக்கியது நாம். புராணத் தகவல்கள் நமக்கு உதவின. பீதாம்பரதாரி என்ற விளக்கத்தை வைத்து கண்ணணுக்குப் பீதாம்பரத்தை அளிக்கிறோம். பலராமனுக்கு நீலாம்பரத்தை அளிக்கிறோம். ஆனால், திகம்பரன் என்ற விளக்கத்தை வைத்து, ஈசனுக்கு வஸ்திரம் அளிக்காமல் இருப்பது இல்லை. சுப்ரவஸ்திராவிருதா என்பதை எண்ணி, கலைமகளுக்கு வெண்ணிற ஆடையை அளிப்போம். வண்ண ஆடைகளைத் தவிர்ப்பவர்களும் உண்டு
அழகுக்கு இலக்கணம் இறைத் திருமேனி. சுந்தரேஸ்வரன் என்று சாஸ்திரம் (ஆபரணார்த்தம் புஷ்பாணி ஸமர்ப்பயாமி). பொன் வைக்கும் இடத்தில் புஷ்பத்தை வை என்று சொல்வதுண்டு; போலியை வை என்று சொல்வதில்லை. சுவர்ண புஷ்பத்தை அளிக்கும் விதமாக புஷ்பத்தை அளிப்பது உண்டு. இறைவனின் படைப்பை அப்படியே அவனுக்கு அளித்தால் போதும். நாம் படைத்த போலி நகைகளை அவனுக்கு அளிப்பது சிறந்த நடைமுறை அல்ல. பாதுகாப்பு இல்லாததால் கவரிங் நகைகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. மாற்றுக் குறையாதவனை மாற்றுக் குறைந்தவனாகச் சித்திரிப்பது நமது மனம். இறையுருவத்தின் உள்ளே கடவுள் மறைந்திருக்கிறார். வெளித் தோற்றமான திருவடியை அவனாகவே பார்ப்பதால் ஏற்பட்ட எண்ணம், போலியைப் பயன்படுத்தத் தூண்டியது.

Tuesday, April 3, 2012
சொத்து வழக்கு சாதகமாக
குடும்பத்தில் பாகப்பிரிவினை, விவாகரத்து என்று வந்துவிட்டால் கோர்ட்,கேஸ் என்று அலைவதைத் தவிர்க்க முடியாது. வழக்கு விவகாரம் ஆஞ்சநேயர் வால் போல நீண்டு கொண்டு சென்று கொண்டே இருக்கும். இதிலிருந்து தப்பி நல்ல தீர்ப்பு விரைவில் கிடைக்க ஆஞ்சநேயரின் திருவடிகளைச் சரணடைவது ஒன்று தான் வழி. சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெயும், வெற்றிலை மாலையும் சாத்தி வழிபடுங்கள். சாதகமான தீர்ப்பு கிடைத்த பின், வடைமாலை சாத்துவதாக வேண்டிக்கொள்ளுங்கள். மூலம் நட்சத்திரத்தன்றும் இவ்வழிபாட்டை செய்து பிரச்னைக்கு தீர்வு பெறலாம்.
Monday, April 2, 2012
தூக்கத்தையும் கெடுக்கும் பயங்கரமான கனவுகள்
தூக்கம் நம் கண்களைத் தழுவட்டுமே!
சிலருக்கு இரவில் நிம்மதியாக உறங்கவே முடிவதில்லை. ஏதோ சிந்தனை, எதிர்காலம் குறித்த பயம், குழந்தை இல்லையே என்ற கவலை, குழந்தைகள் இருந்தால் அவர்களைப் பற்றிய கவலை...இவையெல்லாம் நிம்மதியையும் தூக்கத்தையும் கெடுக்கும். இதனால் பயங்கரமான கனவுகள், அதைக்கண்டு அலறுவது போன்ற துன்பம் ஏற்படுகிறது. இவர்கள் ஒன்பது வெள்ளிக்கிழமை தொடர்ந்து காளி அல்லது துர்க்கை அம்மன் சந்நிதியில், ஒரு எலுமிச்சம்பழத்தை அம்மனின் பாதத்தில் வைத்து வாங்கிக் கொள்ள வேண்டும். அதை தலையணை அருகில் வைத்து தூங்கினால், கனவுத்தொல்லை இருக்காது. இது முடியாதவர்கள் காலையில் நீராடியதும், திருவிளக்கின் முன் அமர்ந்து ஓம்காளி மந்திரத்தை 108 முறை ஜெபிப்பது சிறந்த பரிகாரம்.

இழந்த செல்வம் மீண்டும் கிடைக்க...
திருநள்ளாறு-காரைக்கால் செல்லும் சாலையில், 20 கி.மீ., தொலைவில் உள்ளது திருத்தண்டிகை என்னும் தலம். இங்கு சவுந்தரநாயகி உடனுறை சனத்குமாரேஸ்வரர் அருள்புரிகிறார். ஒருசமயம் வடதிசை அதிபதியான குபேரன் தர்மம் தவறியதால் சாபம் பெற்றான். சப்தரிஷிகளின் ஆலோசனைப்படி திருத்தண்டிகை வந்து வழிபட்டு சாப விமோசனமும் இழந்த செல்வங்களையும் பெற்றான். தான் வரம் பெற்ற நாளில் இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கும் இழந்த செல்வத்தை அடையும் வரம் அருள வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினான்; இறைவனும் அவ்வாறே அருளினார். குபேரன் பேறு பெற்ற நாள் மாசி மாதப் பவுர்ணமி.
ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா?
ஒருவரின் பிறவிகளை ஏழு என்று குறிப்பிடுகிறார். தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் ஆகியவையே ஏழுபிறவிகள்.
இதை
புல்லாகிப் பூண்டாகிப் புழுவாகி மரமாகி
பல்விருகமாகி, பறவையாய்ப், பாம்பாகிக்
கல்லாய், மனிதராய்ப் பேயாய் கணங்களாய்
வல்லசுரராகி முனிவராய்த்தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்ததுள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்
எம்பெருமான்
என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் குறிப்பிடுகிறார். பல பிறவி எடுத்து இளைத்துவிட்டேன் என்று ஈசனிடம் கதறுகிறார்.

Subscribe to:
Posts (Atom)