இறைவனுக்குத் திருமேனியை உருவாக்கியது நாம். புராணத் தகவல்கள் நமக்கு உதவின. பீதாம்பரதாரி என்ற விளக்கத்தை வைத்து கண்ணணுக்குப் பீதாம்பரத்தை அளிக்கிறோம். பலராமனுக்கு நீலாம்பரத்தை அளிக்கிறோம். ஆனால், திகம்பரன் என்ற விளக்கத்தை வைத்து, ஈசனுக்கு வஸ்திரம் அளிக்காமல் இருப்பது இல்லை. சுப்ரவஸ்திராவிருதா என்பதை எண்ணி, கலைமகளுக்கு வெண்ணிற ஆடையை அளிப்போம். வண்ண ஆடைகளைத் தவிர்ப்பவர்களும் உண்டு
அழகுக்கு இலக்கணம் இறைத் திருமேனி. சுந்தரேஸ்வரன் என்று சாஸ்திரம் (ஆபரணார்த்தம் புஷ்பாணி ஸமர்ப்பயாமி). பொன் வைக்கும் இடத்தில் புஷ்பத்தை வை என்று சொல்வதுண்டு; போலியை வை என்று சொல்வதில்லை. சுவர்ண புஷ்பத்தை அளிக்கும் விதமாக புஷ்பத்தை அளிப்பது உண்டு. இறைவனின் படைப்பை அப்படியே அவனுக்கு அளித்தால் போதும். நாம் படைத்த போலி நகைகளை அவனுக்கு அளிப்பது சிறந்த நடைமுறை அல்ல. பாதுகாப்பு இல்லாததால் கவரிங் நகைகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. மாற்றுக் குறையாதவனை மாற்றுக் குறைந்தவனாகச் சித்திரிப்பது நமது மனம். இறையுருவத்தின் உள்ளே கடவுள் மறைந்திருக்கிறார். வெளித் தோற்றமான திருவடியை அவனாகவே பார்ப்பதால் ஏற்பட்ட எண்ணம், போலியைப் பயன்படுத்தத் தூண்டியது.

No comments:
Post a Comment