Saturday, May 11, 2024

வீட்டில் தெய்வீக சக்தி எப்போதும் நிறைந்திருக்க இப்படி செய்து பாருங்க

நம்மை சுற்றி ஏதாவது ஒருவகையில் நெகடிவ் எனர்ஜி எனப்படும் எதிர்மறை ஆற்றல் இருந்து கொண்டு தான் இருக்கும். இது நம்முடைய வீட்டிற்குள்ளும் நமக்கே தெரியாமல் பரவி விடுகிறது. இதனால் வீட்டில் அடிக்கடி சண்டை, ஏதாவது பிரச்சனை, வீண் செலவு, நிம்மதியின்றை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. இவற்றில் இருந்து விடுபட தெய்வீக சக்தி நம்முடைய வீட்டில் குடியேற வேண்டும், லட்சுமி கடாட்சம் நிறைய வேண்டும் என அனைவரும் விரும்புவது உண்டு. அப்படி நம்முடைய எப்போதும் தெய்வீக சக்தி நிறைவதற்கு எளிய பரிகாரங்களை செய்தாலே போதும். வீட்டில் தெய்வீக சக்தி நிறைந்திருக்க வேண்டும், நமக்கு எந்த கெட்ட விஷயங்களும் நடந்து விடக் கூடாது, அதிகமாக நன்மைகள் நடக்க வேண்டும், வீட்டில் எந்த கஷ்டமும் ஏற்படக் கூடாது. வீட்டில் அன்பும், மகிழ்ச்சியும், நிம்மதியும் நிறைந்திக்க வேண்டும் என்ற எண்ணம், ஆசை அனைவருக்குள்ளும் இருக்கும். தினமும் வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்கிறோம். வழிபாடுகள் உள்ளிட்டவற்றை செய்கிறோம். இருந்தாலும் வீட்டில் ஏதோ ஒன்று குறைவது போல் மனதில் குறை இருந்த கொண்டே இருக்கிறது என்கிறவர்கள், வீட்டில் தெய்வீக சக்தி எப்போதும் பரவி இருக்க வேண்டும் என நினைக்கிறவர்கள் இந்த எளிய, அதே சமயம் மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம். வீட்டில் ஒரு பாத்திரம் அல்லது கிண்ணத்தில் பன்னீர் அல்லது சுத்தம் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு கைபிடி அளவிற்கு மல்லிகைப்பூ எடுத்துக் கொள்ளுங்கள். இது சுவாமிக்கு அர்ச்சனை செய்த பூவாகவும் இருக்கலாம். அப்படி இல்லை என்றால் மல்லிகைப்பூவை வாங்கி, மகாலட்சுமியின் பாதத்தில் போட்டு சமர்பித்து, பிறகு அந்த பூவை எடுத்து, ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் பன்னீர் அல்லது தண்ணீர் இருக்கும் பாத்திரத்தில் போட்டு விடுங்கள். சிறிது திருநீரை எடுத்து மனதார கடவுளை வேண்டிக் கொண்டு, அதையும் அந்த தண்ணீருக்குள் போட்டு விடுங்கள். அனைத்தையும் நன்றாக கலந்து, அந்த தண்ணீருக்குள் கை வைத்து, "ஓம் குபேராய நமஹ மகாலட்சுமியே நமஹ" என்ற மந்திரத்தை எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை சொல்லுங்கள்.

No comments:

Post a Comment