Saturday, May 11, 2024

சாபத்திலிருந்து விடுபட பரிகாரம்

சில குடும்பங்களில் தீர்க்க முடியாத பெரிய பெரிய கஷ்டங்கள் இருக்கும். அதற்கு பின்னால் என்ன காரணம் இருக்கிறது என்று அலசி ஆராய்ந்து பார்த்தால், யாரோ எப்பவோ விட்ட சாபம் காரணமாக வந்து நிற்கும். யார் சாபம் விட்டாலும் பலிக்குமா? என்ற கேள்வியை எழுப்பினால், நிச்சயம் கிடையாது. நம் பக்கம் உண்மையிலேயே தவறு இருந்து நம்மால் அடுத்தவர்கள், பாதிக்கப்பட்டு இருந்தால், அதற்கான சாபம் நமக்கு கிடைத்திருந்தால், நிச்சயம் அது பலிக்கும். ஆனால் போன போக்கில் யார் வேண்டுமென்றாலும் யாருக்கு வேண்டும் என்றாலும் சாபம் கொடுக்கலாம். அந்த வகையில் நம் மீது தவறு இல்லை எனும் பட்சத்தில், பிறர் விட்ட சாபம் நமக்கு பலிக்காது. சாபத்திலிருந்து விடுபட பரிகாரம் உங்களுக்கு யார் சாபம் கொடுத்தாங்க, அவர்களுடைய காலில் விழுவதுதான் ஒரே வழி. அவர்களுடைய காலில் விழுந்து செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு, அவர்கள் மனது குளிரும்படி நடந்து கொண்டால், அந்த சாபத்தின் தாக்கம் குறையும். உங்களுடைய குடும்பத்தின் கஷ்டம் குறையும். அதற்கு வாய்ப்பே கிடையாது. சாபம் விட்டவரிடம் நம்மால் போய் பேசவே முடியாது என்பவர்கள், இரண்டாவது இடத்தில் ஒரு பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் இருக்கும் சித்திரகுப்தன் கோவிலுக்கு சென்று விளக்கு போட வேண்டும். உங்களுடைய குடும்பம் சாபத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. குடும்ப தலைவருக்கு எத்தனை வயசு ஆகிறது, அத்தனை விளக்கு ஏற்ற வேண்டும். சித்திரகுப்தன் கோவிலுக்கு சென்று ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த விளக்கை ஏற்ற வேண்டும். தொடர்ந்து ஒன்பது வாரம், ஞாயிற்றுக்கிழமைகள் இப்படி விளக்கு போட்டு சித்திரகுப்தனிடம் வேண்டுதல் வைத்தால், உங்கள் சாபத்திலிருந்து விடுபடுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment