Wednesday, September 21, 2016

காளி வழிப்பாட்டின் முக்கியமான கிரமங்கள்

தக்ஷினகாளிகா
இப்பூவுலகில் சக்தி வழிபாட்டு முறை தோன்றிய காலகட்டத்தில் நம் முன்னோர்கள் ஸ்ரீ காளிதேவியின் வழிப்பாட்டு முறையை  தான் முதன் முதலில் வழக்கத்திற்கு கொண்டு வந்தார்கள். காளி  தேவியை நம் முன்னோர்கள் தேர்ந்தெடுக்க காரணமான சில முக்யமான அம்சங்களை இங்கே காண்போம் :-
ஸ்ரீ காளிமாதா பயங்கரமான உருவத் தோற்றம் கொண்டவள். அவள் கையில் கொண் டுள்ள பொருள்களும், தரித்திருக்கும் ஆபரணங்களும் பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தும். அவள் ஒரு பயங்கரி, மிக உக்கிரக மானவள் என்று நினைத்து அவள் உருவப் படத்தைக் கூட வீட்டில் வைத்து வழிபட அஞ்சுவர்.
உண்மைமையில் ஆனந்தமும் பிரேமை யும் நிறைந்த கருணா மூர்த்தி யாகிய இந்த தேவியைக்கண்டு நாம் சற்றும் பயப்படத்தேவை இல்லை. அவளுடைய தோற்றமும் ஆபரணங்களும் மற்றும் ஸ்வரூபத்தில் உள்ள பல லக்ஷணங்களும் வேதாந்த ஸார மான கருத்துக்களையும் மந்தர சாஸ்திர தத்து வங்களையும் அடிப்படையாக கொண்ட குறிப்பு களாகும்.
உதாரணமாக தேவியின் விரிந்து பரவி ஆடிக்கொண்டிருக்கும் கூந்தல் இவள் கட்டி லடங்காத நிலையில் உள்ள பரம்பொருளின் ஸ்வரூபத் தினள் என்ற உண்மையை குரிப்பதாகும்.
இவள் உடலில் வஸ்த்ரம் இன்றி இருப்பது இவள் குணங்கடந்த கோலத்தினள் அதாவது நிர்குணஸ்வரூபிணீ என்ற தத்துவத்தை குறிப்பதாகும்.
இவள் இடது மேற்கரத்தில் தாங்கும் வாள் ஞான சக்தியின் சின்னம் ஆகும்.
இடதுகீழ் கரத்தில் உள்ள வெட்டப்பட்ட சிரஸானது ஒரு யோகி பிரபஞ் சத்தில் எல்லா பற்றுகளும் துறந்துஆனந்த நிலையில் திளைத்து இருப்பதைக் காட்டும் சின்னம் ஆகும்.
மேலும், இவள் தன் இடுப்பில் வெட்டப்பட்ட கரங்களை கோத்த மேகலையை தரித் திருப்பது கர்மயோக ஸித்தியின் மகிமையை காட்டும் சின்னம் ஆகும்.
இவள் ஸ்ரீ மஹாகாளரின் இதயத்தில் வலப்பாதம் வைத்து ஸதா ஆடிக் கொண் டிருப்பது ஜீவன்முக்தனின் நித்யானந்த நிலையை காட்டுகிறது.
பரம கருணாமூர்த்தியாகிய இந்த தேவி, தன் குழந்தைகளாகிய எல்லா ஜீவன் களையும் ரக்ஷிக்கும் ஆனந்தத்தில் திளைத்து மகிழ்ந்து ஆடிய வண்ணம் அருளைப் பொழிகின்ற வேளையில், தனது வலது பாதத்தை தன் அன்பு நாயகராகிய மகாகாளரின் ஹ்ருதய ஸ்தானதிலே அமர்த்துகிறாள்.
தன் பிரிய தேவியின் பாதத்தை தாங்கி களிப்படையும் ஸ்ரீ மஹாகாளர், தேவியின் அருட் செயலின் ஆற்றலைக் கண்டு தன் இயல்பான இயக்கம் செயல் அற்றுப் போவதை உணர்கிறார். செயலற்றுப் போன மஹா காளர் ஒரு சவம் போல் கீழே கிடந்து தேவியின் ஆனந்த கூத்தை பேரின்பத்துடன் அனுபவித்துக் கொண்டி ருக்கிரார்.
இந்த நிலையை தியானிக்கும், எந்த உபாசகனும் தானும் அந்த மகிழ்ச்சிப் பரவசத்தில் மூழ்கி சிவத்துவம் அடைவானே தவிரபீதிக்கு இரையாகமாட்டான்.
இந்த தேவியின் வழிப்பாட்டுக் கிரமத்தில் பலியிடுதல் ஒரு அம்சமாகும். ஜீவன்களை கொன்று அர்ப்பணித்தல் தான் பலி என்று நாம் கருதக்கூடாது. தேவியைஉபாசிப்பவர்கள் தங்களுள் குடி கொண்டிருக்கும் காமம், குரோதம், லோபம், மோகம், மதம் மாற்சரியம் ஆகிய ஆறு உட்பகைவர்களை தேவியின் மந்தர ஜபம் என்கிற ஹோம அக்னியில் அர்ப்பணித்தலே பலியிடுதல் ஆகும்.
காளி தேவியின் மூல மந்திரத்துக்கு ” வித்யாராஜ்ஞீ ” என்றுபெயர் அதாவது வித்யைகளுக் கெல்லாம் “பேரரசி” என்கிறது காளி தந்த்ரம்.
எந்த ஒரு தெய்வ வழிபாட்டிற்கும் பிரதானமானது அதன் மூல சக்தியே. இந்த மூலசக்தி பல பாதைகளில் இயங்கி பல ஸ்வரூபங்கள் கொள்கிறது. அவற்ரில் எல்லாம் இந்த மந்திரத்தின் வலிமையே இயக்கும் சக்தியாக விளங்குவதால் இந்தமூல சக்தி மூர்த்தியே மேலானது. இதுவே பராசக்திமூர்த்தி என்று காளி தந்திரத்தில் வலியுறுத்தப் படுகிறது.
ஆதிகாலம் முதல் பராசக்தியின் வழிபாட்டு கிரமங்கள் 1.காளி 2. தாரா 3. சுந்தரி 4. புவனேஸ்வரி 5.பைரவி 6.சின்னமஸ்தா 7. தூமாவதி .பகளாமுகி 9. மாதங்கி 10.. கமலாத்மிகா என்ற பத்து மூர்த்திகளின் உபாஸனை முறைகளாக பழக்கத்தில் இருந்து வருகின்றன. இந்த வித்தைகளை ” தச மஹா வித்யா ” என்று அழைப்பார்கள்.
இவைகளுள் காளி வழிபாடே முதன்மையானதாக உள்ளதால் காளியை ஆதிபராசக்தி என்று வழங்குவது மரபாயிற்று.
வட நாட்டில் காளிவித்யா வாமாச்சாரமாக தாந்த்ரீக முறையில் அனுஷ்டிக்கப் படுகிறது. ஆனால் நாம் தக்ஷிணாசாரமாக உபநிஷத்து, வேதங்கள், மற்றும் சூக்தங்கள் அடிப்படையில் உபாசிக்கிறோம்.
கைலாசத்தில் ஒருமுறை முப்பத்து முக்கோடி தேவர்கள் புடைசூழ மஹாகாளர் காளிகையை விஸ்தாரமாக பூஜித்துக்கொண்டிருந்தார். அப்போது தேவி காளிகை அவர்கள் முன் தோன்றி உடனேயே மறைந்துவிடுகிறாள். மஹாகாளர் மீண்டும் சமஷ்டியாக, தன் பூஜையில் பங்கேற்க வந்த ஸ்ரீ லலிதா திருபுரசுந்தரி உள்ளிட்ட அனைவரும் மிக தீவிரமாக பிரார்த்திக்க, காளி தேவி மனமிரங்கி மறுபடியும் ஆவிர்பவித்து அநுக்ரஹிக்கிறாள்.
அந்த சமயத்தில் ஸ்ரீ லலிதா திருபுரசுந்தரி காளிகையிடம் தனக்கு சக்தி யை வரமாக அருளவேண்டும் என்று பிரார்த்திக்க, காளிகாதேவி கருணையுடன் “என்னுடைய சஹஸ்ரநாமம் ஸ்தோத்ரம் என்னால் பூர்வத்தில் அமைக்கப் பட்டுள்ளது. அதனை முறைப்படி பாராயணம் செய்து வந்தால் பூரண “சக்தி” ஏற்படும் ” என்று திருவாய் மலர்ந்து அருளி மறைந்தனள்.
அன்று முதல் ஸ்ரீ லலிதா திருபுரசுந்தரியானவள் ” ஸ்ரீ ஸர்வ ஸாம்ராஜ்ய மேதா” என்று அழைக்கப்படும் இந்த ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரத்தை பக்தியுடன் பாராயணம் செய்து வருவதால் சக்தி பெற்று சக்தி யில்லையேல் சிவம் இல்லை என்று கூறும் அளவிற்கு எல்லோரும் இன்புற தன் அருளை பொழிகிறாள்.
சக்தி, மற்றும் காளி உபாசகருக்கு இந்த மந்த்ர ஸ்தோத்ரங்கள்தேவி நமக்கு கொடுத்திருக்கும் வரமாகும். அனைவருக்கும் உபாசனை வெற்றி பெற சக்தியும் சகல சௌபாக்கியங்களையும் கொடுத்து அருளுகிறாள் ஆக இந்த வித்யாக்ரமத்தில் உபாசகன் தன்னால்இயன்ற பூஜை, ஹோமம், தர்ப்பணம், யோகினி ஸந்தர்பணை களும், பரோப காரமும், எப்பொழுதும் காளிதேவியின் ப்ரேமத்யான த்துடன் மந்தர ஜபங்களும் குருவின் தேவைகளையும் வேண்டிய உதவிகளும் செய்து வந்தாலே போதுமானதாகும். இங்கனம் ஸ்ரீ தக்ஷிண காளிகையின் அருளை பெற்று நீடுடி இன்புற வாழ்வோம்.
சுபம்

பஞ்ச பூதங்கள்

பஞ்ச பூதங்கள்

நிலம் நீர் அக்னி காற்று வானம் இதுதானே பஞ்ச பூதங்கள் இதில் நாம் அனுபவிப்பது எத்தனை? நான்கை மட்டும்தான், நிலம் நீர் அக்னி காற்று.

இதில் வானம் என்பது என்ன? கொஞ்சம் யோசித்து பாருங்கள்?

ஆனால் இந்த பஞ்ச பூதங்களில் பெருமை வாழ்ந்தது வானம்... ஆனால் அதை அடைவது எளிதாக்குவது அக்னி. அக்னியை பொறுத்தவரையில் அது அக்னியாக இருக்கும்வரையில் அதை ஒன்றும் செய்ய முடியாது அதுதான் அக்னியின் சிறப்பே. அதுதான் சிவனின் மகிமையே... அந்த அக்னி சொரூபன் தான் அண்ணாமலையான் உண்ணாமலை உடனுரையான்



உருவமிள்ள ஒன்றுதான் வானம் நம் கண்ணின் பார்வைத்திறன் அப்பால் உள்ள பகுதி நீலமாக தெரியும் அதுதான் வானம்..... அதுதான் கடவுள்.

ஆனால் அதை அறிந்தவர்கள் எத்தனை பேர்? அவர்கள்தான் சித்தர்கள் முனிவர்கள் ரிசிகள்... நாமெல்லாம் எங்கே?

மனிதனின் கையில் பட்ட அத்தனையுமே அவனுக்கு சொந்தமாக உள்ளது... அவன் சொன்னபடி அடிமை பட்டு அவன் செயலுக்கு ஏற்ப ஆடிகொண்டுள்ளது சரிதானே?

ஆனால் மனிதனின் கையில் அகப்படாத காற்றும் வானமும் அதனுடைய போக்கில் உள்ளது... அதை அடைவதும் அதை அறிவதும் தான் மனித பிறப்பின் நோக்கம் என்பது என் கருத்து.. காற்று அடக்கி அதாவது மூச்சை அடக்கி ஆள கற்றுகொண்டாலே ஒருவன் பாதி முக்தி அடைந்து விடுகிறான் அதன் பின் வெட்ட வெளி என்கிற அந்த பரப்பிரமத்தை அடைவது எளிதாகிறது....

அதை அடைபவர்கள் எத்தனை பேர்? அதற்குத்தான் அனைவரும் போராடுகிறோம். அதற்குத்தான் இறைவனின் அருள் தேவை அதனாலதான் அவனருளால் அவனை வணங்குகிறோம்....

அவன் அருளால் அவனை அடைதல் மகிழ்ச்சிதானே....

எல்லாம் அவன் செயல்.... அந்த அண்ணாமலையானின் திருநாளில் எழுத தோணியதை இங்கு எழுதிவிட்டேன்......

கார்த்திகை திருநாளில் அனைவரும் ஈசனின் அருளை பெற்று அனைவரும் அனைத்தையும் அடைய என் பரம்பொருள் தாழ் வணங்குகிறேன்

நைவேத்தியம்


நைவேத்தியம் சிறுகதை
சிஷ்யன் ஒருவன் தன் குருவிடம் ஒரு கேள்வி கேட்டான்.
‘’குருவே, நாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இறைவன் சாப்பிட்டால் நாம் பிறருக்கு எப்படி பிரசாதமாக வழங்க முடியும்?
கடவுள் படையலை சாப்பிடுவாரா’’? என்று கேட்டான்.
குரு எதுவும் சொல்லாமல்,
அவனை ஊடுருவி பார்த்துவிட்டு ‘’நமது வேதாந்த வகுப்புக்கு நேரமாகி விட்டது. வகுப்பறையை தயார் செய். சிறிது நேரத்தில் நானும் வருகிறேன்” என்றார்.
அனைத்தும் பூர்ணமான வஸ்துவிலிருத்தே தோன்றியது என பொருள் கொண்ட “பூர்ணமிதம்” எனும் ஈஷாவாசிய உபநிஷத்தில் வரும் மந்திரத்தை விளக்கினார் குரு.
அனைத்து மாணவர்களும் மந்திரத்தை மனதில் உரு போட துவங்கினர்.
சிறிது நேரத்திற்கு பிறகு கேள்வி கேட்ட சிஷ்யனை சைகையால் அழைத்தார் குரு.
குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான்.
“எனதருமை சிஷ்யனே, மந்திரத்தை மனதில் ஏற்றி கொண்டாயா? ,” என்றார்.
“முழுமையாக உள்வாங்கி கொண்டேன் குருவே”.
“எங்கே ஒரு முறை சொல் பார்ப்போம்”
கண்கள் மூடி மனதை ஒருநிலைப்படுத்தி கணீர் குரலில் கூற துவங்கினான்..
” பூர்ண மித பூர்ண மிதம் …” என கூறி முடித்தான்.
மெல்ல புன்சிரிப்புடன் குரு தொடர்ந்தார்..
“நீ சரியாக மனதில் உள் நிறுத்தியதாக தெரியவில்லையே.. எங்கே உனது புத்தகத்தை காட்டு”
பதட்டம் அடைந்த சிஷ்யன், புத்தகத்தை காண்பித்து கூறினான்
“ குருவே தவறு இருந்தால் மன்னியுங்கள்.
ஆனால் நான் கூறியது அனைத்தும் இதில் இருப்பதை போலவே கூறினேன்…”
“இந்த புத்தகத்திலிருந்து படித்துதான் மனதில் உள்வாங்கினாயா?
இதிலிருந்து உள்வாங்கினாய் என்றால் மந்திரம் இதில் இருக்கிறதே?
நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் புத்தகத்தில் இருக்க கூடாதல்லவா?”
சிஷ்யன் குழப்பமாக பார்த்தான்.
குரு தொடர்ந்தார்,
‘’உனது நினைவில் நின்ற மந்திரம் சூட்சம நிலையில் இருக்கிறது.
புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம்.
இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன்.
இறைவனுக்கு படைக்கப்படுவது ஸ்தூல வடிவில் இருந்தாலும் அவன் சூட்சமமாகவே உட்கொள்கிறான்.
நீ உள்வாங்கிய பின் புத்தகத்தில் மந்திரம் அளவில் குறைந்துவிட்டதா?
அது போலதான் இறைவன் உட்கொண்ட பிரசாதம் அளவில் குறையாமல் நாம் எல்லோரும் உண்கிறோம்.
ஸ்தூலமாக இருக்கும் நாம் ஸ்தூலமாகவும், சூட்சுமமாக இருக்கும் இறைவன் சூட்சுமமாகவும் நைவேத்யத்தை உட்கொள்கிறோம். ”
தனது பக்தியற்ற தர்க்கம் செய்த அறியாமையை குருவிற்கு நைவேத்யம் செய்து முழுமையடைந்தான் சிஷ்யன்.

ஆன்மா

ஆன்மா என்பது ஓா் ஆற்றல் அல்ல
அது எண்ணமும் அல்ல;
ஆனால் அதுவே எண்ணத்தை தோற்றுவிப்பது.
அது உடலும் அல்ல;
ஆனால் அதுவே உடலை தோற்றுவிப்பது.
ஏன் அப்படி?
ஏனெனில், உடலுக்கு அறிவு இல்லை
எண்ணங்களும் அவ்வாறே.
அறிவு என்பதன் பொருள் என்ன?
எதிா்செயல் புாிவது.
ஒரு பொருளை பாா்க்கிறிா்கள்
எப்படி அதை அறிகிறோம்.
முதலில் உடல்.
இரண்டாவது மனம்
மூன்றாவது மனதிற்கு பின்னால் ஆன்மா இருக்கிறது.
இந்த ஆன்மாதான் அறிவொளி உண்டாக்குவது.
மனம் ஆன்மாவின் கருவி மட்டுமே.
இந்த உடல் பலவகை சேர்க்கையான கூட்டுபொருள்.
ஆன்மா எந்த சோ்க்கையும் இல்லாதது
தன்னிச்சையானது.
எதனாலும் பாதிக்கபடாதது.
அது எங்கும் நிறைந்தது.
அனைத்திற்கும் காரணமாக இருந்தாலும், எதன் காரணமாகவும்
அது உருவாகவில்லை.
அது என்றும் சுதந்திரமானது.
நாமே அந்த ஆன்மா!
ஆகவே நாம் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கிறோம்.
அப்படியானால்,
நான் பிறந்திருக்கிறேன்.
நான் இறக்கபோகிறேன்.
என்பதற்கு என்ன அா்த்தம்?
இவையெல்லாம் அறியாமையால்
பேசும் பேச்சுக்கள்.
மன மயக்கங்கள்!
சரீரத்தால் ஏற்படும் மாறுதலால் ஏற்படும் மயக்கங்களே.
ஆகவே நாம் பிறப்பு, இறப்பு அற்றவா்கள். நாம் பிறப்பதுமில்லை
நாம் இறப்பதுமில்லை.

மனம்

மனம் கடுகுப் பொட்டலம் போன்றது. அதை நாலாபுறமும் சிதற விட்டால் ஒன்று சேர்ப்பது கடினம். இளம்மூங்கில் எளிதாக வளைவது போல, இளமையிலேயே மனதை நல்ல விஷயங்களில் செலுத்துவது அவசியம் நான் என்னும் அகங்காரத்தை அழித்து விட்டவன் கடவுளின் காட்சியைப் பெற்று மகிழ்வான். கடவுள் கற்பக மரம் போல கேட்டதையெல்லாம் .கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றார்…நல்லவா்களின் கோாபம் நீடித்திருப்பதில்லை. தண்ணீரி்ல் இட்ட கோலம் போல உடன் மறையும்….
நல்ல மனிதா்களின் சோ்க்கை நாளும் உங்களை உயா்த்தும்.
குடும்ப வாழ்வில் இருந்து கொண்டு, கடவுள் மீது பக்தி செலுத்துபவனே வீரம் மிக்கவன். மனதில் நல்ல எண்ணம் இருந்தால் தான் துாயபக்தி உண்டாகும் . கடவுள் என்னும் எஜமானனுக்கு பணிவிடை செய்து வாழ்வது தான் பிறவிப்பயன். படிப்பதை விட கேட்டு அறிவது உயர்ந்தது. நேரில் கண்டு உணர்ந்து கொள்வது இன்னும் சிறந்தது..மேலும் விவேகம் இல்லாதவனுக்கு எத்துணை சாஸ்திர ஞானம் இருந்தாலும் அதனால் பயன் ஒன்றுமாகப் போவதில்லை…விவேகத்தை கடைபிடியுங்கள்..நீங்கள் உங்கள் தேவைகளை கேட்காமலே அள்ளித்தர இறைவன் இருக்கின்றான்.இன்றைய நற்சிந்தனைகளின் வழி நடப்போம்..l

ஜோதிடம்

1) 10-ல் ராகு பல இடங்கள் சுற்ற வைப்பார்.பல தொழிலை அறிய வைப்பார்.
2)நாலிலே குரு இருக்க அன்னைக்கு சுகமில்லை. வதைத்திடுவர் இது மெய்யே.
3)10-லே குரு இருக்க பல மாற்றம் தந்திடுவார்.தொழில் உத்யோகம் பல இடங்கள் மாற்றம் வரும்.
4)மீனத்தில் கிரகம் நின்று அதன் திசை நடப்பில் வந்தால் நடந்திடுவார் ஊரை விட்டே.தன் சொந்த ஊரை விட்டு தொழில் அல்லது உத்யோகத்திற்கு வெளியில் சென்றிடுவார்.
5)ஐப்பசியில் ஜனித்தவர்க்கு அப்பனோடு மோதல் வரும்.இல்லையெனில் இருவர் கருத்தும் வெவ்வேறாக இருக்கும்.
6)10-லே சூரியன் அலைச்சல் மிகுந்த வாழ்க்கை. தொழில் உத்யோகத்தில் பல மாற்றம் வந்து சேரும்.
7)7-லிலே குரு இருக்க பாவம் அந்த பெண்மனி.அவள் கணவன் கையில் மதுபாட்டில்தான் இருக்கும்.இல்லையெனில் ஆண்டியாய் அலைவான் பாரு.
8)பங்குனியில் ஜெனித்தவர்க்கு மாமனவன் இருக்க மாட்டான்.மீறியே இருந்தாலும் குடும்பத்தோடு பகை கொள்வான்.இது இரண்டும் இல்லையெனில் அவனுக்கு வாரிசில்லை.
9)கார்த்திகையில் பிறந்தவன் அம்மாவை வதைத்திடுவான்
10)3-லே செவ்வாய் சுக்கிரன் பிறர் மனையை நாடிடுவான்

நமஸ்காரங்கள் வகைகள்

1. தலை மட்டும் குனிந்து வணங்கும் முறை ஏகாங்க நமஸ்காரம் எனப்படும்.
2. இரு கைகளையும் தலைக்கு மேல் குவித்து வணங்குவது த்ரியங்க நமஸ்காரம் ஆகும்.
3. இரு கைகள், முழந்தாள் இரண்டு, தலை ஆகிய ஐந்தும் நிலத்தில் பதிய வணங்குவது பஞ்சாங்க நமஸ்காரம் எனப்படும். (பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் மட்டுமே செய்ய வேண்டும்.)
4. அஷ்டாங்க நமஸ்காரம் என்பது தலை, இரு கைகள், இரு செவிகள், இரண்டு முழந்தாள், மார்பு என எட்டு அங்கங்களும் நிலத்தில் பதிய வணங்குவது ஆகும்.
5. தலை, இரு கரங்கள், இரு முழந்தாள், மார்பு என ஆறு அங்கங்கள் நிலத்தில் படுமாறு வணங்குவது சாஷ்டாங்க நமஸ்காரம் ஆகும்.