Tuesday, August 9, 2016

நவக்ரஹ தோஷம் தீர ஒரு எளிய மந்திரம்


நவக்ரஹ தோஷம் தீர ஒரு எளிய மந்திரம்



அதிகாலையில் எழுந்து 6 மணிக்குள் நீராடி சூரியனைப் பார்த்தபடி  நின்று இந்த மந்திரத்தை 108 தடவை  ஜெபித்துவர எந்த கிரகத்தின் தோஷம் இருந்தாலும் அதன் பாதிப்பு வெகுவாகக் குறையும்.

வடஇந்தியாவில் இதனை அதிகம் பேர் ஜபித்துப் பலன் அடைந்து வருகிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை அல்லது அமாவாசை  அன்று இதைத் துவங்கவும்.

மந்திரம் :-

நமக்காக ஜெபிக்கும் போது 
ஓம் நமோ பகவதே பாஸ்கராய மம சர்வ க்ரஹானாம் பீடா நாஷனம் குரு குரு ஸ்வாஹா|| 


பிறருக்காக ஜெபிக்கும் போது 

ஓம் நமோ பகவதே பாஸ்கராய .................... சர்வ க்ரஹானாம் பீடா நாஷனம் குரு குரு ஸ்வாஹா|| 

( ................ என்ற இடத்தில் யாருக்காக ஜெபிக்கிறோமோ அவருடைய அல்லது அந்த குடும்பத்தின் பெயர்    )

மந்திர தந்திர ரகசியங்கள்


மந்திர தந்திர ரகசியங்கள் செய்யுங்கள்)
1.ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கி செவ்வாய்க்கிழமை தோறும் ஒரு பசுவுக்கு நாட்டு வாழைப்பழம் வாங்கிக் கொடுத்துவர வறுமை நீங்கி செல்வ நிலையில் உயர்வு உண்டாகும்.
2.தொழில் முடக்கம் நீங்கி தொழில் விருத்தி அடைய
ஒரு கரும்புள்ளி இல்லாத நல்ல எலுமிச்சம்பழம் ஒன்று வாங்கி கடை,அலுவலகம் முழுவதும் வளாகம் முழுவதும் வெளியில் நின்று நாகு துண்டாக நறுக்கி தெற்கு முகமாக நின்று குங்குமம் தடவித் திசைக்கு ஒன்றாக எறிந்து விடவும். கடை அலுவலகம் இவற்றில் இருந்த தொழில் முடக்கம் நீங்கி தொழில் சிறப்பாக நடைபெறும்.இதை செவ்வாய்க்கிழமை அன்று செய்யவும்.வியாபாரம் இல்லாமல் அடைத்து வைத்தட கடைகளில் இதை செய்து பின் கடை திறந்து வியாபாரம் செய்யத் தொழில் சிறக்கும்.
3.திருமணத்தடை,வறுமை,வேலையின்மை மற்றும் தோஷம் உள்ளவர்கள் நல்லெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து கொஞ்சம் பஞ்சகவ்யம் சேர்த்து குளித்து அருகில் உள்ள ஆலயம் சென்று அர்ச்சனை செய்து கொள்ள தோஷங்கள் விரைவில் நீங்கி நல்வாழ்வு உண்டாகும்.
ஆண்கள் - சனிக்கிழமை
பெண்கள் - வெள்ளிக்கிழமை
4.பொருளாதாரம் உயர:-
ஞாயிற்றுக்கிழமையும் பூசம் நட்சத்திரமும் கூடிய நாளன்று அதிகாலையில் நாயுருவிச் செடிக்கு முறைப்படி காப்புக் கட்டி சாபநிவர்த்தி செய்து பிடுங்கி
அதைக் கையில் வைத்துக்கொண்டே சண்டி நவாக்ஷரி மந்திரம் 1008 உரு ஜெபம் செய்து பின்னர் வெள்ளைநிறப் பட்டு அல்லது பருத்தித் துணியை மஞ்சள் கலந்த தண்ணீரில் நனைத்து அந்தத் துணியால் நாயுருவிச் செடியைச் சுற்றவும். இதைக் கடை,அலுவலகம், வீடுகளில் வைக்க பொருளாதார நிலை உயர்வடையும்.
5.இரவில் கை,கால் ,முகம் கழுவிய பின்னர் தூங்கினால் துஷ்ட சக்திகள் தொல்லை செய்யாது.இரவில் தானாக விந்தி சக்தி வெளியேறாது.
6.அடிக்கடி ஆபத்துகளைச் சந்தித்து வருபவர்கள்,அஷ்டமத்துச் சனி நடப்பவர்கள், அஷ்டமாதிபதி தசை அல்லது புத்தி நடப்பவர்கள் மஹாம்ருத்யுஞ்சய மந்திரம் ஜெபித்து பின் வெளியே கிளம்பினால் விபத்துகள் இன்றி வீடு திரும்பலாம்.
7.அரச மரத்தின் அற்புத சக்தி :
1. தீரா நோய் தீர
ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் தினமும் மதியம் 12:00 முதல் 1:30 மணிக்குட்பட்ட வேளையில் அரசமர வேரைத் தொட்டு வணங்கி வர தீராத நோய்கள் தீரும்.குறிப்பிட பகுதியில் பாதிப்பு ,நோய் இருந்தால் பாதிப்பு / நோய் உள்ள பகுதியில் வேரைத் தொட்டு
வைக்கவும்.விரைவில் குணம் கிடைக்கும்.
2.ஞாயிற்றக்கிழமை அன்று மட்டும் அரச மரத்தைத் தொடக்கூடாது .
3.குறைந்த அல்லது உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் ,அதிகம் உணர்ச்சி வசப்படுபவர்கள் இனிப்பு பண்டம் அல்லது சர்க்கரை கலந்த நீரை அரச மர வேரில் விட விரைவில் ரத்த அழுத்த நோய் பாதிப்பு குறையும்.
4.தினமும் கிழக்கு முகமாக நின்று அரச மரத்திற்கு நீர் விட்டு வர பித்ரு தோஷ பாதிப்புகள் குறையும்.
5.ஆயுள் தோஷம் உள்ளவர்கள் (அற்பாயுள் ) சனிக்கிழமை தோறும் அரச மரத்திற்கு நீர் விட்டு தொட்டு வணங்கி வர ஆயுள் கூடும்.

அமாவசை தினத்தில் நல்ல காரியங்களை துவங்கலாமா?


அமாவாசைக்கு பிறகு வரும் நாட்களை வளர்பிறை 

நாட்கள் என்று அழைக்கிறோம். எனவே புதிய

 காரியங்களை வளர்பிறையின் துவக்க

நாளிலிருந்து ஆரம்பிப்பது நலமென்று

 நிறையப்பேர் 

நம்புகிறார்கள். சிலர் அமாவாசை என்பது சந்திரன்

 இல்லாத நாள் அதாவது பூமிக்கு சந்திரன் தெரியாது

 அன்று இருட்டாக இருக்கும். 


எனவே இருட்டு பொழுதில் நற்காரியங்களை 

செய்ய கூடாது என்றும் சொல்கிறார்கள். இதில் எது 

சரி எது தவறு என்று முடிவெடுப்பது மகா சிரமமான

 காரியம். அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு என்று 

பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டு போகலாம்.

 ஆனால் அது சரியல்ல.



இதை ஜோதிட சாஸ்திரம் மற்றும் வானியல் 

சாஸ்திரத்தின் அடிப்படையில் பார்க்க வேண்டும்.

 அமாவசை தினத்தில் சூரியனும் சந்திரனும் ஒரே 

நேர்கோட்டில் சந்திக்கின்றன அன்று இவ்விரு 

கிரகங்களும் ஒரே ராசியில் இருக்கும் அந்த 

நேரத்தில் இரண்டு கிரகங்களில் ஆகர்ஷன 

சக்தியும் 

மிக அதிகமாக இருக்கும். 


இதனால் மனித மூளையில் துரிதமான 

மாற்றங்கள் 

நிகழும் வாய்ப்பு நிறைய உண்டு அதாவது மனம்

 கொந்தளிப்பான நிலையிலேயே இருக்கும். 

ஏறக்குறைய கடலை போல எனவே அந்த

 நாட்களில் சுப காரியங்கள் செய்வது கூட தவறு 

அல்ல ஆனால் புதிய காரியங்களை துவங்குவது

 தவறு என்பதே சரியான கருத்தாகும்.

உங்கள் கர்மவினை தீர மரக்கன்று நடுங்கள்

இதுவும் இறைவழிபாடுதான்


வீட்டின் முன்புறம் அல்லது பின்புறம் (இதில் வாஸ்து தேவையில்லை) பசுமையாகவும் விலங்கினங்களுக்கு பயன்தரும் வகையில் மரம், செடிகள் இருத்தல் அவசியம்.

இயற்கையே இறைவனின் வடிவம்தான்

அனில், கிளிகள், குருவி, வண்டு, ஓணான், பட்டாம்பூச்சி இவைகள் வாழ இடம் தந்து உண்டு மகிழ வழிசெய்தால் நம்வீடு கோயிலாகும்

காலையில் குயில் கூவும் இல்லமே இறைவனின் இருப்பிடம்

தென்னை, வாழை ஆகியன காய் இனத்தை சார்ந்தவை இவை வழிபாட்டில் மிகமுக்கிய பங்கு வகித்தாலும் அணில், கிளிகள், காகம் ஆகியன வாழும் வீடாகும்.

மா, சப்போட்டா, மாதுளம், கொய்யா, சீத்தாப்பழம் போன்றவை பறவைகள், அனில் விரும்பி உண்டு தன் இனத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் நம் இனம் வாழும்

பூக்கள் இல்லாத வழிபாடே இல்லை. பூக்கள் வாசனையும், தேனி, வண்டு, பட்டாம்பூச்சிகளுக்கு தேனை தந்து வீட்டே அலங்கரிக்கிறது

எனவே இல்லத்தை இயற்கையால் அலங்கரித்து இறைவன் வாழும் கோயிலாக்குவோம்

இயற்கையை நேசிப்பவன் மனிதன் !

இயற்கையை காப்பவன் இறைவன் !!

மரம் இல்லம் எனும் கோவிலின் விமானம்

ஒரு மரம் வெட்டினால் 10 மரம் நடவேண்டும்

மனையடி சாஸ்திரம்

பெளத்தம் கூறும் 'மனத்தினால் செய்யப்படும் பாவங்கள்'!

உடலளவில் மட்டுமின்றி, மனதளவிலும் பாவங்கள் செய்தல் கூடாது என்று ஆழமாக வலியுறுத்துகிறது பெளத்தம். அந்த வகையில் மனத்தினால் செய்யப்படும் பாவங்களை அடுக்கும் பெளத்தம், எவ்வகையான செயல்பாடுகளில் ஈடுபடுவது நன்மை பயக்கும் என்றும் தெளிவாக எடுத்துரைக்கிறது.

மனத்தினால் செய்யப்படும் பாவங்களாவன :

* அபித்யா : பிறரது செல்வத்தையும் பொருளையும் விரும்புவது, பிறரிடம் இருப்பதைக் கண்டு ஏங்குவதும் ஆகும்.

* வியாபன்ன சித்தம் : பிற உயிர்கள் அழிந்துவிடக்கூடாதா என மனத்தால் நினைத்தல்.

* மித்யா திருஷ்டி : எதிர்மறை எண்ணங்கள் கொண்டிருத்தல். அதாவது, 'பிறருக்கு ஈவதால் எந்தப் புண்ணியமும் இல்லை'; 'இவ்வுலகத்தில் பாவங்களும் இல்லை, பரலோகமும் இல்லை' என்பது போன்ற எண்ணத்தைக் கொண்டிருத்தல்.

இந்த மூன்று வகையான மனத்தினால் செய்யப்படும் பாவங்களையும் செய்திராமல், மேற்கூறினவற்றுக்கு நேரெதிராகச் செயல்படுவதே தர்மாசரணம் என்கிறது பெளத்தம்!


ஐம்புலன்களில் ஒன்றான வாய் மூலம் செய்யப்படும் பாவங்களையும், அவற்றைச் செய்யாமல் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் சிறப்பாக வலியுறுத்துகிறது, பெளத்தம்.

வாய் மூலம் செய்யப்படும் பாவங்களாவன:

பொய் பேசுதல் : தெரியாததை தெரியும் என்று கூறுதல்; காணாததைக் கண்டாதாகச் சொல்லுதல்... இவ்வாறு சுய லாபத்துக்காக பொய் பேசுதல் பாவச் செயலாகும்.

கோள் சொல்லல் : பிறருக்குத் துன்பம் ஏற்படுத்தும் விதமாகவும், கலகமூட்டும் நோக்கத்துடனும் கோள் சொல்லுதலும் பாவமே.

கடுமையாக பேசுதல் : பிறருக்கு வருத்தத்தையும், துன்பத்தையும் அளிக்கும் விதமாக கடுமையான மொழிகளால் பேசுதல். கெட்ட வார்த்தைகளைப் பிரயோகித்தல்.

வீண்பேச்சு : பிரலாபித்தல் என்று சொல்லக்கூடிய சமயம் அறியாது பேசுதல்; உண்மையில்லாததைச் சொல்லுதல்; காரணமின்றி உளறுதல்; அர்த்தம் மற்றும் நியாயம் அற்ற பேச்சு.

மேற்குறிப்பிட்ட வாயினால் செய்யப்படும் நான்கு பாவங்களையும் செய்தல் கூடாது என்பதை கடுமையாக வலியுறுத்துகிறது 'பெளத்தம்'.


பாவங்கள் என்பது என்னென்ன என்பதைத் தெரிந்துக்கொண்டு, அதைச் செய்யாமல் இருக்க நம்மில் பலரும் முனைகிறோம்.

அத்தகையோருக்கு தருமத்தை போதிக்கும் பெளத்தம், முதலில் மனிதனால் செய்யப்படும் பாவங்களைப் பகுத்து கூறுகிறது.

இவ்வகையான பாவங்களை புரியாமல் இருப்பதும் தருமமே என்பதை மிகத் தெளிவாக விளக்குகிறது.

மனிதன் தனது உடலால் செய்யும் பாவங்களை மூன்றாக பிரித்து, அதனைத் தெளிவாக விளக்குகிறது பெளத்தம்.

உடலால் செய்யப்படும் பாவங்களாவன:

1. பிராணாதிபாதம்

ஹிம்சை புரிதல், தன் கரங்களில் இரத்தக்கறை படும்படியான வன்முறைச் செயல்களில் ஈடுபடுதல் மற்றும் பிராணிகளிடம் அன்பாக இருக்காமல், வதை செய்தல்.

2. அதின்ன தானம்

திருட்டுக் காரியங்களைச் செய்தல், பிறருக்குச் சொந்தமான உடமைகளை, அந்நபருக்குத் தெரியாமல் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளுதல் போன்றவையான கள்ளத்தனங்கள்.

3. காமத்தில் தவறு செய்தல்

பிறன் மனை நோக்குதலையே காமத்தில் செய்யும் தவறு என்க்றது பெளத்தம்

ஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்

. ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ – சகல யோகமும் சௌபாக்யமும் உண்டாக.2. சுத்த பஞ்சாக்ஷரீ – மனோரத இஷ்ட காம்யார்த்த அபிலாக்ஷைகள் நிறைவேற.
3. சிவ அஷ்டாக்ஷரீ - ஸர்வ சத்ரு, மிருக, ரோக உபாதிகள் நீங்க.
4. சிவ பஞ்ச தசாக்ஷரீ – அஷ்ட ஐஸ்வர்யப் பிராப்தி அடைய.
5. சிதம்பர பஞ்சாக்ஷரீ – ஞான வைராக்யம், சிவ கடாக்ஷம் பெற.
6. குரு தாரக பஞ்சாக்ஷரீ – ஸகல ஜன வசீகரணம், ராஜாங்க வெற்றி, தேவதா ப்ரீதி உண்டாக.
7. ம்ருத்யுஞ்ஜய த்ரயக்ஷரீ – அகால, அபம்ருத்யு பயம் நீங்க, ஆயுள் விருத்தியடைய.
8. சிதம்பர சபாநடன மந்த்ரம் – அனைத்து பாப தோஷ பரிகாரம், ரக்ஷா பந்தனம்.
9. நீலகண்ட மந்த்ரம் – எதிர்பாராத கொடிய ஆபத்தினின்று மீளல், தவிர்த்துக் கொள்ள.
10. மஹா நீலகண்ட மந்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம்.
11. த்வனி மந்த்ரம் – மன சாந்தி, சந்தி, சந்துஷ்டி, சிவானந்த அநுபூதி பெற.
12. சிவ காயத்ரீ – நினைவுத்திறன், சமயோசித புத்தி, புதிய யுக்தி, வாக்சாதூர்யம் கூட.
13. மார்கதர்சீ சிவ மந்த்ரம் – பிரயாண சௌகர்யம், எவ்வித ஆபத்துகளும் விபத்துகளும் நேராதிருக்க.
14. ருணமோசன சிவ மந்த்ரம் – கடன் நீங்க, தேவ, பித்ரு ரிஷி கடன் அடைதல், பணவரவு, சேகரிப்பு அதிகரிக்க.
15. பசுபதி காயத்ரீ – ஸகல வித திருஷ்டி விலக, வழக்கில் வெற்றி, குடும்ப மகிழ்ச்சி ஏற்பட.
16. சிவ நவாக்ஷரீ - கார்யா தடைகள், தேக்கநிலை தீர்வு, நிர்வாகத் திறன் கூடுதல், புது முயற்சிகள் பலிதம்.
17. பாசுபதாஸ்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம், ஆபிசார தோஷம், செய்வினைகள் அகல.
18. ருத்ர காயத்ரீ – பாப தோஷ விமோசனம், நிரந்தர ஜயம்.
19. வித்யாப்ரத சிவமந்த்ரம் – புத்திகூர்மை, மேதா விலாஸம், சொல் வசீகரணம், ஸரஸ்வதி கடாக்ஷம் பெற.
20. உமாமஹேஸ்வர மந்த்ரம் – குடும்ப ஒற்றுமை அன்யோன்யம், மட்டற்ற மகிழ்ச்சி, குதூகலம் பெற.
21. ஆபத்துத்தாரக கௌரீவல்லப மந்த்ரம் – எல்லா ஆபத்துக்களும் தடைகளும் நீங்கி, நிரந்தர ஜயம் உண்டாக.
22. ஸர்வபாபஹர பவ மந்த்ரம் – அனைத்து பாப தோஷங்களும், அனாசார பாதிப்பும் விலகுதல்.
23. ரக்ஷாப்ரத கௌரீ சிவ மந்த்ரம் – சீரான உடல் நலம், முகப்பொலிவு, மறுமலர்ச்சி, ஆரோக்கியம் கூடுதல்.
24. ம்ருத் ஸஞ்சீவினி – அகால, அபம்ருத்யு பயம் நீங்கல், ஆயுள் விருத்தி.
25. பஞ்சதசீ சிவ மந்த்ரம் – ஸகல கார்ய சித்தி, செயற்கரிய செயல் செய்தல், வாழ்வில் ஏற்றம்.
26. சுதர்ஸன மந்த்ரம் – செய்வினை, சத்ருக்களின் தொல்லை, வியாபாரத் தடை நீங்குதல், மனச்சாந்தி அடைய.
27. லக்ஷ்மி ந்ருஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி.
28. சுதர்ஸன நரஸிம்ஹ மந்த்ரம் – எதிரிகள் தொல்லை, வழக்கு வியாஜ்யம், குடும்ப-தொழில் குழப்பங்கள் நீங்க.
29. வாஸுதேவ மந்த்ரம் – வறுமை, கிலேசம், சந்தேகம், தீவினைகள் அகன்று இம்மை மறுமை நலன்கள் கொழிக்க.
30. விஸ்வரூப மந்த்ரம் – சதுர்வித புருஷார்த்தங்கள், மனோபலம், ஜயம், அசைகள் பூர்த்தியாக.
31. கந்தர்வராஜ மந்த்ரம் – தடை நீங்கி திருமணம், குடும்ப சூழ்நிலைச் சிக்கல்கள் நிவர்த்தி, சுப கார்யங்கள் நடைபெற.
32. ஹயக்ரீவ மந்த்ரம் – புத்தியும் சக்தியும் தூண்டப்படுதல், கல்வியில் ஏற்றம், மஹாவித்வத்வம், இனிய சொல் மெய்யுணர்வு.
33. நாமத்ரயம் – அனைத்து பாப விமோசனம், சுமுக சூழ்நிலை ஏற்பட.
34. சுதர்ஸன அபரோ மந்த்ரம் – ரக்ஷா ப்ரதானம், அடிமன பயம் நீங்குதல், மனநிறைவு, நிம்மதி.
35. நரஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி, நோய் வறுமை நீங்கி ஸகல சம்பத்துகள் அடைய.
36. கருட மந்த்ரம் – விஷம், ஸர்ப்ப தோஷம், துஷ்ட மிருக பயம் விலக.
37. மஹா கருட மந்த்ரம் - அதைர்யம், பாபம், விஷக்ரஹ தோஷங்கள், துஷ்டர் பயம் ஆகியன விலக.
38. தன்வந்த்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை ஏற்பட.
39. கருட காயத்ரீ மந்த்ரம் – தாமதம் நீங்கி எண்ணிய காரியம் முடிதல், சீக்ர கார்யசித்தி பெற.
40. சுதர்ஸன காயத்ரீ மந்த்ரம் – ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் பெற்று சௌகர்யம் ஏற்பட.
41. தன்வந்த்ரீ காயத்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை, மன்மதஸ்வரூபம் ஏற்பட.
42. வித்யா கோபால மந்த்ரம் – வித்யா பிராப்தி, நினைவாற்றல், வாக்குவன்மை, மேதா விலாசம் கூடுதல்.
43. அன்ன கோபால மந்த்ரம் – அன்னபானாதி சம்விருத்தி, தன்னிறைவு பெற.
44. சௌபாக்யலக்ஷ்மீ மந்த்ரம் – லக்ஷ்மி கடாக்ஷம், தாபத்ரய நிவர்த்தி, அஞ்ஞான நிவர்த்தி.
45. க்ஷேத்ர ப்ராப்திகர மந்த்ரம் – பூமி லாபம், குபேர சம்பத்து ஸ்திர லாபம் பெற.
46. க்ஷேத்ர ப்ராப்திகர அபேரா மந்த்ரம் – இந்த்ர பதவி, பொன் விளையும் பூமிக்கு அதிபதி, லோக பிரசித்தி, ஸ்திரத்தன்மை அடைய.
47. த்ருஷ்டி துர்கா மந்த்ரம் – ஸர்வ திருஷ்டி தோஷ பரிகாரம், முன்னேற்றம்.




ஹரிஹர மந்த்ரம் :-

“ஓம் ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாரயணாய ஓம் ஓம் நமசிவாய”


*

Thursday, July 14, 2016

ராகு - கேது தோஷம் போக்கும் மயிலை முண்டகக் கண்ணி அம்மன்

சென்னை: மயிலையில் எழுந்தருளி உள்ள அம்மன் முண்டகக்கண்ணி என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறாள். நாக தோஷம் மற்றும் மாங்கல்ய தோஷம் உள்ளவர்களுக்கு இவள் கண்கண்ட தெய்வமாக விளங்குகின்றாள். இது ராகு - கேது தோஷம் போக்கும் தலமாகவும் அமைந்துள்ளது.ஆடி மாதம் பிறக்கப் போகிறது. ஆடி மாதம் வந்தாலே அம்மன் ஆலயங்களில் திருவிழாக்களுக்குப் பஞ்சமிருக்காது. பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாகத் திகழும் சென்னை மயிலாப்பூரில் வாழும் முண்டகக் கண்ணி அம்மன் ஆலயத்தைப் பற்றி இன்றைய ஆலய உலா பகுதியில் அறிந்து கொள்வோம்.
பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு சுயம்புவாகத் தோன்றியவள் முண்டகக் கண்ணி அம்மன். முண்டகம் என்பதற்குப் பல்வேறு பொருள் வழங்கப்பட்டாலும், தாமரை மலர் என்பதே பொருத்தம். கண்ணி என்பதற்கு கண்களை உடையவள் என்று பொருள் கூறப்படுகிறது.


தாமரை போன்ற கண்களையும் உடையவள் என்ற பொருளில் முண்டகக் கண்ணி என்றப் பெயரில் இங்குள்ள அன்னை அழைக்கப்படுகிறாள்.எளிமையும், அழகும், அருளும் நிறைந்த இந்த ஆலயம், மயிலாப்பூரில் நடுவே அமைந்துள்ளது. அன்னை முண்டகக்கண்ணி வீற்றிருப்பதால் அந்த தெருவின் பெயரே முண்டகக் கண்ணியம்மன் கோவில் தெரு என்று அழைக்கப்படுகிறது. மாதவப் பெருமாள் கோவிலின் பின்புறத்தில் கிழக்கு முகமாக இந்தத் திருக்கோவில் அமைந்துள்ளது.கம்பீர ராஜகோபுரம்எளிய மூன்று நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கி கம்பீரமாக நிற்கிறது. சில மாதங்களுக்கு முன்புதான் இந்த ஆலயத்திற்கு குடமுழுக்கு நடைபெற்றது. ராஜகோபுரம் அமைந்துள்ள ஆலயம் என்றாலும் அன்னை வீற்றிருப்பதோ எளிமையான தென்னங்கீற்றைக் கொண்டு வேயப்பட்ட கொட்டகையின் உள்ளேதான்.


எளிய ஆலயம்அன்னைக்கு

கருவறை கட்டிடம் கட்ட பக்தர்கள் முயன்றபோது, அதில் பல்வேறு வழிகளில் தடை ஏற்பட்ட தாகவும், தனக்கு தென்னங்கீற்றால் அமைந்த கூரை மட்டுமே விருப்பம் என பக்தர்களின் கனவில் அம்பாள் சொன்னதாகவும் கூறப்படுகிறது. எனவே, அன்னைக்கு தென்னங்கூரையே கருவறை விமானமாக இதுநாள் வரையிலும் இருந்து வருகிறது.

  உலக மக்களை வெம்மையில் இருந்து காக்கவே, அன்னை இந்தக் கோலம் கொண்டுள்ளதாக தல வரலாறு தெரிவிக்கிறது.சுயம்பு வடிவ அன்னைதன்னை நாடிவரும் பக்தர்கள் எவ்வளவு பெரிய நிலையில் இருந்தாலும், எளிமையாக வாழ்வதே சிறந்தது என்பதை வலியுறுத்தும் வகையிலும் இக்கோலம் அமைந்துள்ளது. கருவறைக்கு முன்பாக, இருபுறமும் துவாரபாலகிகள் வீற்றிருக்கின்றனர். உள்ளே பிரமாண்ட பிரபையின் முன்பாக, முண்டகக் கண்ணி அம்மன் சுயம்புவாக எழுந்தருளியுள்ளாள்.
அழகிய அம்மன்:

அன்னையின் திருவுருவம் மலர்வதற்கு முந்தைய தாமரை மொட்டின் வடிவில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கற்திருமேனியான அன்னையின் முன்புறமும், பின்புறமும் புடைப்புச் சிற்பமாக சூலம் அமைக்கப்பட்டுள்ளது. அன்னையின் அழகை காணும் போதே பக்தர்களின் மேனியில் ஒருவித சிலிர்ப்பு இயற்கையாகவே ஏற்படுகிறது


தாமரை மொட்டில் அன்னைஅன்னை சுயம்பு வடிவத்தில் தாமரை மொட்டாய் அமர்ந்திருக்க, அன்னைக்கு கவசமாக பெரிய பிரபை அமைப்பு காணப்படுகிறது. இது வெள்ளிக் கவசத்தால் போர்த்தப்பட்டுள்ளது. இதில் ஐந்துதலை நாகம் படம் விரித்து நிழல்தரும் கோலத்தில் அமைந்துள்ளது. இதன் இருபுறமும் துவார பாலகிகள் அமைந்துள்ளனர்.நாகம் வழிபடும் ஆலயம்அன்னையின் வலதுபுற எதிரில் மிகப்பெரிய அரச மரமும், அதனடியில் நாகக் கன்னிகளும் உள்ளன. அன்னையின் பின்புறம் தல மரமான ஆலம் விழுதுகள் இல்லாத அபூர்வ மரமான கல்லால மரமும், புற்றுடன் மூன்றடி உயர கல் நாகமும் அமைந்துள்ளன. பின்புறம் உள்ள புற்றில் வாழும் நாகம், நாள்தோறும் இரவில் அன்னையை வணங்கி வழிபட்டு செல்கிறாள் என்பது ஐதீகம்.


உற்சவர் சன்னிதிஅன்னையின் இடதுபுறம் உற்சவர் சன்னிதி உள்ளது. அதன் எதிரே பிரமாண்ட வேப்ப மரமும் இருக்கிறது. உற்சவர் அன்னை, சாந்தம் தவழும் முகத்துடன் காட்சிஅளிக்கிறார். அன்னையின் சிரசில் கரந்த மகுடம் உள்ளது. முன்னிரு கைகள் ஒன்றில் கத்தியும், மற்றொன்றில் அபய முத்திரையும், பின்னிரு கைகள் ஒன்றில் உடுக்கையும், மற்றொன்றில் ஏலமும் ஏந்தி, அமர்ந்த கோலத்தில் அன்னை காட்சி தருகிறாள். அன்னை ஒளி வீசும் முகத்துடன் புன்னகை பூத்துக் காட்சி தருவதைக் காண, கண் கோடி வேண்டும்.


சப்த கன்னியர்கள்உற்சவர் சன்னிதியின் இடதுபுறம் மகேஸ்வரி, வைஷ்ணவி, பிராமி, கவுமாரி, இந்திராணி, சாமுண்டி, வராகி என சப்த கன்னியர் சிறு கல் வடிவில் வீற்றிருக்கின்றனர். இவர்களுக்கு இருபுறத்திலும் ஜமத்கினி முனிவர் மற்றும் பரசுராமர் சுதை வடிவில் உள்ளனர்.


நாகதோஷம் நீங்கும்இத்தலத்து

 அன்னை நாக வடிவத்தை ஒத்திருப்பதாலும், நாகம் இவளை வழிபடுவதாலும், நாக தோஷம் மற்றும் மாங்கல்ய தோஷம் உள்ளவர்களுக்கு இவள் கண்கண்ட தெய்வமாக விளங்குகின்றாள். அம்மை நோய்க்கும், கண் நோய்க்கும் இந்த அம்மனை வழிபடலாம். மேலும், தீராப்பிணி, திருமணத்தடை, கல்வி, மகப்பேறு, வீடு வாகன வசதிகளுக்கும் வரம் தரும் அன்னையாகத் திகழ்கின்றாள்.

அலங்கார நாயகிஅன்னைக்கு:

 காலையில் தொடங்கி, நண்பகல் வரை தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. அன்னைக்கு பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, சந்தனம், பன்னீர் என பல்வேறு விதமான அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இதன்பின், அன்னையின் திருமுகத்தில் பெரிய மஞ்சள் உருண்டையைத் தட்டையாக்கிப் பதிய வைத்து, கண் மலர், நாசி, அதரம் வைத்து, வேப்பிலை பாவாடை கட்டி, பூமாலை சார்த்தி அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டுகின்றனர்.

சிறப்பு விழாக்கள்சித்திரைப் :

புத்தாண்டு பிறப்பு அன்று 108 விளக்கு பூஜை, சித்திரை பவுர்ணமியில் 1,008 பால்குடப் பெருவிழா, ஆடியில் பூரத் திருவிழா, 1,008 கூடையில் பூச்சொரிதல் விழா, ஆடிப்பூரம், விஜயதசமி, தைக் கடைசி வெள்ளி, சித்ரா பவுர்ணமி மற்றும் தமிழ் வருடப் பிறப்பு ஆகிய ஐந்து நாட்களில் மட்டுமே அன்னை வெள்ளி சிம்ம வாகனத்தில் வீதியுலா வருவது வழக்கம்
எப்படி வருவது?சென்னை பாரிமுனையில் இருந்தும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும் மயிலாப்பூருக்கு பேருந்து வசதிகள் உள்ளன. பறக்கும் ரயில் மூலமும் இந்த ஆலயத்திற்கு எளிதாக வரலாம். முண்டகக் கண்ணியம்மன் கோவில் ரயில் நிலையத்தில் இறங்கி 5 நிமிடங்களில் கோவிலை அடையலாம்.