Friday, June 5, 2015

சீரடி சாயி பாபாவின் 9 வியாழக்கிழமை விரத மகிமை!

சப்த சப்தாஹா சாயி சரித்திர பாராயண விவரம் : துர்லபம் த்ரயேமே வைதத், தெய்வானுக்கிரக ஹேத்துகம் மனுஷ்யத்தயம் முமுக்ஷத்வம் மஹாபுருஷ ஸம்சயம்.

சீரடி சாயி சத்சரித்திர பாராயணத்தையும், விரத பூஜையையும் 67 நாட்களிலோ (சப்த சப்தாஹா) அல்லது ஒரு நாளில் குறிப்பிட்ட அத்தியாயங்கள்

என கணக்கில் கொண்டு 9 நாட்களிலோ முடிக்க வேண்டும். கடவுளால் படைக்கப்பட்ட 84 லட்சம் ஜீவராசிகளிலேயே மிகவும் உன்னதமானது மனித ஜென்மம். அவனால் மட்டுமே இதே மனித ஜென்மத்தில் தனது மனதைக் கட்டுப்படுத்தி ஆத்ம ஞானத்தை பெறும் அவகாசமிருக்கிறது. தேவதைகள் கூட ஒரு தடவையாவது பூலோகத்தில் மனித ஜென்மம் எடுப்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்களாம். ஆதலால், இந்த மனித ஜென்மம் எவ்வளவு விசேஷமானது என்று நினைத்துப் பாருங்கள். சாயிநாதரின் சேவையில் ஜீவன் முக்திப் பெறுவதற்கு முயற்சிக்கலாம். சாயி நாதரின் பிள்ளைகளாகவே இருந்து இந்த ஜென்மத்தில் முக்தியடையலாம்.

சீரடி சாயி நாதரை மனதில் தியானித்து செய்யப்படும் 9 வியாழக்கிழமை விரதம் மற்றும் சப்த சப்தாஹா பாராயணத்தையும் செய்து முடிக்கும் போது

தங்களால் இயன்ற காணிக்கையை பக்தி சிரத்தையுடன் சாயி பாபாவிற்கு சமர்ப்பிக்க வேண்டும். இப்பூஜையை சுயமாகவோ அல்லது ஆச்சார்யரின் துணையுடனோ நமது வீட்டிலேயே செய்து சாயி நாதரின் ஆசீர்வாதம், அனுக்ரஹம், ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், பக்தி, ஞான வைராக்கியமும் பெற்று பிரம்மானந்தத்தைப் பெறலாம்.

சீரடி சாயி நாதரின் விரத பூஜைக்குத் தேவையானப் பொருட்கள்: பூஜை சாமான்கள் : மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி, அக்ஷதை, பஞ்சபாத்திரம், உத்தரணி, மணி, கலசம் அல்லது பெரிய டம்ளரில் தீர்த்தம், அகர்பத்தி, தீப்பெட்டி, தீப ஆராதனைக்கு பசு நெய் அல்லது நல்லெண்ணெய், தேங்காய், பூ, பழங்கள், பிரசாதம் இவை எல்லாம் வைக்க இரண்டு பெரிய தட்டுகள், அவசியமென்றால் கை துடைக்க துணி வைத்துக் கொள்ளலாம்.

காளியை வணங்கும் முறை (ராகுதோஷம் நீங்க )


ராகு திசை நடக்கும் போதோ, ராகு பெயர்ச்சியால் ஒருவரது செயல்பாடுகள் பாதிக்கும் போதோ, நமது பணிகளில் பிறரது தலையீடு தேவையின்றி வரும்போதோ, அவர்கள் நம் பக்கமே வராமல் இருக்கவோ காளிக்கு நாமாகவே அர்ச்சனை செய்யலாம். குறிப்பாக, நவராத்திரி காலத்தில் இதைச் செய்தால் மிகவும் நல்லது.எண் கணிதப்படி ராகுவுக்குரிய எண் 4. இந்த எண் தடைகளை  தரும் என்பது நம்பிக்கை. எனவே தான் 22 (கூட்டினால் 4) ஸ்லோகம் கொண்ட அர்ச்சனையை காளிக்காக வடித்துள்ளதாக கருத வேண்டியுள்ளது. இந்த ஸ்லோகத்தை வீட்டில் மாரியம்மன் அல்லது துர்க்கை படம் முன் அமர்ந்து சொல்லலாம். கொலு வைத்திருந்தால் மேடை முன் அமர்ந்து சொல்லலாம். இந்த ஸ்லோகத்தைச் சொல்லும்போது, செவ்வரளி மலர்களை தூவ வேண்டும்.

ஓம் காள்யை நம:
ஓம் க்ருஷ்ண ரூபாயை நம:
ஓம் பராத்மகாயை நம:
ஓம் முண்டமாலாதராயை நம:
ஓம் மஹாமாயாயை நம:
ஓம் ஆத்யாயை நம:
ஓம் கராளிகாயை நம:
ஓம் ப்ரேதவாஹாயை நம:
ஓம் ஸித்தலக்ஷ்மையை நம:
ஓம் கால ஹராயை நம:
ஓம் ப்ராஹ்மை நம:
ஓம் நாராயண்யை நம:
ஓம் மாஹேஸ்வர்யை நம:
ஓம் சாமுண்டாயை நம:
ஓம் கவுமார்யை நம:
ஓம் அபராஜிதாயை நம:
ஓம் வராஹ்யை நம:
ஓம் நாரஸிம்ஹாயை நம:
ஓம் கபாலின்யை நம:
ஓம் வரதாயின்யை நம:
ஓம் பயநாசின்யை நம:
ஓம் ஸர்வ மங்களாயை நம:

கிரக தோஷம் நீங்க!

ஸம்ரக்த சூர்ணம் ஸஸுவர்ணதோயம்
ஸகுங்குமாபம் ஸகுஸம் ஸபுஷ்பம்
ப்ரதத்த மாதாய ச ஹேம பாத்ரே
ஸஹஸ்ரபானோ பகவன் ப்ரஸீத
- சூர்ய ஸ்லோகம்            

பொருள்: சிந்தூரம் போன்ற சிவந்த நிறமுள்ளவரே, அழகிய மண்டலத்தைக் கொண்டவரே, ஸ்வர்ணம், ரத்னமிழைத்த ஆபரணத்தைத் தரித்தவரே, சூரிய பகவானே, நமஸ்காரம், தாமரையின் ஒளி போன்ற கண்களை உடையவரே, அழகிய தாமரையைக் கையிலேந் தியவரே, பிரம்மா, இந்திரன் நாராயணன், சங்கரன் ஆகியோரின் வடிவமாகத் திகழ்பவரே, நமஸ்காரம். இச்சுலோகத்தைச் சொல்ல, கிரக தோஷங்கள் சூரியனைக் கண்ட பனி போல நீங்கும்.

Thursday, May 14, 2015

கடவுளிடம் வேண்டியது பணிவா? பயமா?

பயபக்தி என்றே சொல்வார்கள். கடவுள் தண்டிப்பவர் என்ற எண்ணத்தால், பக்தி முதலில் பயத்துடன் தொடங்கும். ஆனால், மனம் பக்குவம் பெற்ற  பின், எல்லாம் அவன் செயல் என்ற எண்ணம் உண்டாகும். அப்போது பயம் பணிவாக மாறி விடும். இதை திருவள்ளுவர், கற்றதனால் ஆய பயனென் கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் என்று குறிப்பிடுகிறார். 

பெற்றோரை மதிக்காதவன் தெய்வத்தை வணங்கினால் பலன் உண்டா?

பெற்றோருக்கு சேவை செய்த ஹரிதாஸ் என்ற பக்தரை எதிர்பார்த்து, பாண்டுரங்கன் காத்திருந்ததாக வரலாறு கூறுகிறது. கண்கண்ட தெய்வமான  பெற்றோரை மதிக்காமல் கடவுள் மீது பக்திசெலுத்துவதால் பயனில்லை. மாத்ரு தேவோ பவ; பித்ரு தேவோ பவ என்கிறது வேதம். இதையே அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம் என்கிறார் அவ்வையார். பெற்றோருக்குப் பணிவிடை செய்வது பிள்ளைகளின் கடமை.

திருமண வீட்டில் தேங்காய் கொடுத்து அனுப்புவது ஏன்?

சுபநிகழ்ச்சிக்கு அழைக்கும்போதும், வழியனுப்பும் போதும் லட்சுமியின் அம்சமான வெற்றிலை,பாக்கு கொடுப்பது வழக்கம். இதனை தாம்பூலம் என்பர். சுபநிகழ்ச்சிகளுக்கு வரும் உறவினர்கள் மீண்டும் இன்னொரு சுபவிஷயத்தில் சேர வேண்டும்  என்பதற்காக இவ்வாறு தரும் வழக்கம் உருவானது.  தாம்பூலத்தோடு தேங்காய், பழம், இனிப்பு, சாக்லெட் சேர்த்து கொடுத்ததெல்லாம் பிற்காலத்தில்!.  தற்போது வெற்றிலை, பாக்கு வழக்கம் குறைந்து விட்டதால் தேங்காய், பிஸ்கட்,  தின்பண்டங்கள் கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.

Sunday, May 10, 2015

வீட்டில் விளக்கேற்றி இருக்கும் போது வாசலை மூடக் கூடாதா?

தலை வாசலைத் திறந்து வைப்பதோடு, கொல்லைப்புறத்தைப் பூட்டிய பிறகே விளக்கேற்ற வேண்டும். அப்போது திருமகள் வீட்டுக்கு வருவதாக ஐதீகம். அவள் வீட்டில் தங்க வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறார்கள்.