சுவாமி இருக்கும் மூலஸ்தானத்தை கருவறை என்கிறார்கள். கரு என்ற சொல் குழந்தை உருவாவதை மட்டும் குறிப்பதில்லை. ஒரு கதைஎழுதுவதற்குக் கூட கரு வேண்டும். பணம் வைக்கும் அறையைக்கருவூலம் என்கிறோம். அதுபோல, ஒரு கோயிலின் அடித்தளமாக பிரதிஷ்டை செய்யப்படும் பிரதான மூர்த்தியின் இருப்பிடத்தை கருவறை என்று குறிப்பிடுகின்றனர்.கருவில் இருக்கும் குழந்தையைப் பாதுகாத்தால் நன்றாகப் பிறந்து வளர்ந்து ஆளாகிறது. நல்ல கருவை அடித்தளமாகக் கொண்டு எழுதப்படும் கதை, மக்களிடம் சென்று சேர்ந்தால் உலகம் திருந்துகிறது. கரு வூலத்தில் இருக்கும் பொக்கிஷம் மக்களுக்கு நன்மையளிக்கிறது. இதுபோல்,கருவறையில் இருக்கும் மூலமூர்த்தியை வழிபட்டால் நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மை உண்டாகிறது. ஆன்மிக உணர்வால் உலகமேஅமைதியாக இருக்கிறது என்ற அடிப்படையில் மூலஸ்தானத்தைகருவறை என்று அழைத்தனர்.
Saturday, January 24, 2015
Wednesday, January 14, 2015
பொங்கல் பூஜை செய்வது எப்படி?
பொங்கல் வைக்க உகந்த நேரம்:காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி.
இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ஸ்டவ்வில் பொங்கல் வைக்கிறார்கள். ஆனால், சூழ்நிலைகளைக்காரணம் காட்டி, நமது பாரம்பரியத்தை மறந்து போவது முறையானதல்ல. மேலும், இளைய தலைமுறையினர், அக்காலத்தில் நாம் எப்படி பொங்கலிட்டோம் என்பதையும் தெரிந்து கொண்டு எதிர்காலத்திலும் கடைபிடிக்க வேண்டும்.
வீட்டு வாசலில் பொங்கல் வைக்க வசதியில்லாவிட்டால், தெருமக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, நல்ல நேரத்தை தேர்ந்தெடுத்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் இணைந்து பொங்கல் வைக்க வேண்டும். கோயில்களையும் தேர்ந்தெடுக்கலாம். பால் பொங்கும் போது, சூரிய நமஸ்காரம் செய்து, “பொங்கலோ பொங்கல் என ஒரு சேர முழக்கமிட வேண்டும். ஏனெனில், இது ஒரு ஒற்றுமைத் திருவிழா. தேரோட்டம் என்ற நிகழ்ச்சியை ஊர் ஒற்றுமை கருதி எப்படி நம் முன்னோர்கள் நமக்கு அறிவுறுத்தி சென்றார்களோ, அதுபோல பொங்கலும் மக்களிடையே ஒருமைப்பாட்டை வளர்க்கும் விழா என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே வீட்டுக்குள் காஸ்ஸ்டவ், மண்ணெண்ணெய் அடுப்பு இவற்றில் பொங்கல் வைப்பதைத் தவிர்த்து வீதியில் வைக்க வேண்டும். நகரங்களாக இருந்தாலும் கூட, கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்புஅளிக்கும் வகையில், அங்கிருந்து பனை ஓலை அல்லது தென்னை ஓலை தருவித்து பொங்கலிட வேண்டும்.
பொங்கலன்று காலையில் நல்ல நேரம் பார்த்து, வீட்டு முற்றத்தில் பெரிய அளவிலான குத்துவிளக்கேற்றி, அதன் முன் ஒரு வாழை இலையைப் போட வேண்டும். அதன் இடது ஓரத்தில் நாழி நிறைய பச்சை நெல் வைக்க வேண்டும். இலையில் பச்சரிசியை பரப்பி, அதன் மேல் கத்தரிக்காய், கருணைக்கிழங்கு, சிறுகிழங்கு, வள்ளிக்கிழங்கு, அவரைக்காய், சீனிஅவரை, பூசணித் துண்டு, பிடிகிழங்கு, காப்பரிசி (வெல்லம், பச்சரிசி கலவை) வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள்கிழங்கு ஆகியவற்றை வைக்க வேண்டும். கரும்பின் ஓலையை வெட்டாமல் நீள கரும்பாக சுவரில் சாய்த்து வைக்க வேண்டும். ஒற்றைக் கரும்பாக வைப்பதைத் தவிர்த்து இரண்டு கரும்புகள் வைக்க வேண்டும்.
பொங்கல் பானையை மண்அடுப்பு அல்லது பொங்கல் கட்டி எனப்படும் கற்கள் மீது வைக்க வேண்டும். திருவிளக்கிற்கு பத்தி, கற்பூர ஆரத்தி காட்டியபிறகு, உங்கள் குல தெய்வம் இருக்கும் கோயிலின் திசையை நோக்கி காட்ட வேண்டும். பின்னர் சூரியபகவானுக்கு ஆரத்தி காட்டியதும், ஒரு தேங்காயை உடைத்து, அதன் நீரை பானையில் விட வேண்டும்.
சுத்தப்படுத்திய பச்சரிசியை நன்றாகக் களைந்து, அந்த தண்ணீரை பானையில் விட வேண்டும். அடுப்புக்கும், பொங்கல் பானைக்கும் தூபம் (பத்தி) காட்டி, பற்ற வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்து பால் பொங்கும் போது குலவையிட வேண்டும். குலவை தெரியாதவர்கள் ‘பொங்கலோ பொங்கல் என முழங்க வேண்டும். பின்னர் பானையிலுள்ள சுடும் நீரை, அரிசி வேகும்அளவிற்கு மட்டும் வைத்துக் கொண்டு, மீதியை முகந்து விட வேண்டும். அரிசியை போட்டு, வெந்ததும் அவ்வப்போது அகப்பையால் கிண்டி கொடுக்க வேண்டும். இல்லா விட்டால், பாத்திரத்தின் அடியில் பிடித்து விட வாய்ப்புண்டு. பொங்கலை இறக்கிய பிறகு, சர்க்கரைப் பொங்கல் வைக்க வேண்டும்.
இலையின் முன்னால் இந்த பானைகளை இறக்கி வைத்து, திருவிளக்கிற்கும், சூரியனுக்கும் பூஜை செய்ய வேண்டும். ஆதித்ய ஹ்ருதயம் தெரிந்தவர்கள் அந்த ஸ்லோகங்களைச் சொல்லலாம். மற்றவர்கள் சூரியன் குறித்த தமிழ் பாடல்களைப் படிக்கலாம். பின்னர் காகத்திற்கு பொங்கல் வைக்க வேண்டும். காகம் உணவை எடுத்த பிறகு, குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் கொடுக்க வேண்டும். அதன்பிறகே பெரியவர்கள் சாப்பிட வேண்டும். பின், காய்கறி வகைகள் சமைத்து வெண்பொங்கலை மதிய வேளையில் சாப்பிட வேண்டும். இரவில் முன்னோரை நினைத்து, இனிப்பு வகைகள், புத்தாடை வைத்து வணங்க வேண்டும். புத்தாடையை தானமாக கொடுத்து விட வேண்டும்.
Sunday, December 28, 2014
துளசியில் இவ்ளோ விஷயம் இருக்கா!
துளசியைப் பூவோடு சேர்த்து விஷ்ணுவை ஆராதிப்பது சிறப்பு. துளசியில் நெற்கதிர் போல பூக்கள் இருப்பதைக் காணலாம். அதற்கு அடுத்த நிலையில் துளசி இலைகள், துளசிக்கட்டை, துளசி வேர் ஆகியவற்றாலும் பெருமாளை ஆராதிக்கலாம். அதுவும் இல்லாத பட்சத்தில்துளசி செடி இருந்த மண்ணாலும் பூஜிக்கலாம். இதில் எதற்கும் வாய்ப்பில்லாத போது, அர்ச்சிக்கும் மலர் எதுவாக இருந்தாலும்,“பெருமாளே! இந்த மலரை துளசியாக ஏற்று அருள்புரிய வேண்டும்’ என்று மனதில் எண்ணியவாறே ‘துளசி! துளசி!’ என்று சொல்லிக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்
சனி பகவானை நேருக்கு நேர் வணங்க கூடாது என்பது ஏன்?
கோயிலில் ஸ்தாபிக்கப்பட்ட எந்த ஒரு தெய்வத்தையும் வணங்கும்போது, நேருக்கு நேர் நின்று தரிசிக்கக் கூடாது. அந்த தெய்வத்தின் பார்வையை சக்தியை நம்மால் தாங்கிக்கொள்ள இயலாது. சன்னிதியின் இரு பக்க வாட்டிலும் நின்று தரிசிக்க வேண்டும். தெய்வ சக்தியை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் சக்தியை உடைய நந்தி, கருடாழ்வார், சிம்மம் போன்ற அந்த தெய்வ வாகனங்கள் மட்டும் நேருக்கு நேர் அமைக்கப்பட்டிருப்பதை கோயில்களில் காணலாம்.
நவக்கிரகங்களில் ஒவ்வொரு கிரகத்துக்கும் அதன் இருப்பிடம், சேர்க்கை, பார்வை ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொருவிதமான பலன்கள் உண்டு. இதற்கு ஸ்தான பலம், ஸம்யோக பலம், த்ருஷ்டி பலம் என்று சொல்வார்கள். இயற்கையிலேயே அசுபகிரஹமான சனி கிரஹத்தின் 3, 7, 10ஆம் பார்வை பொதுவாக அசுப பலனையே ஏற்படுத்தும். ஆகவே, சனியின் பார்வை பொதுவாக அசுபத்தையே ஏற்படுத்தும் என்பதால், கோயில்களிலும் சனீஸ்வரன் சன்னிதியில் (சனியின் பார்வை நம் மீது விழக்கூடாது என்பதால்) நேருக்கு நேர் நின்று அமர்ந்து சனியை தரிசிப்பதைத் தவிர்க்கிறார்கள். இது ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்.
நவக்கிரகங்களை, தன் கட்டுப்பாட்டில் வேலைக்காரர்களாக வைத்து கொடுமைப்படுத்தி வந்த இலங்கை வேந்தன் இராவணன், சூரியன், சந்திரன், செவ்வாய் முதலான ஒன்பது கிரகங்களையும் தனது சிம்மாசனத்தின் கீழே அமைக்கப்பட்டிருக்கும் படிக் கட்டுகளில் படுக்க வைத்து, தான் அரியணையில் ஏறும்போதும் இறங்கும்போதும் அவர்களின் மார்பின் மீது தனது கால்களை வைத்து அவர்களை மிதித்துக் கொண்டே அரியணை ஏறும் வழக்கத்தைக் கொண்டிருந்தான். இதற்காக நவக்கிரகங்கள் ஒன்பதும் ஒவ்வொரு படிகளிலும் ஒவ்வொன்றாக வரிசையாக மேல்நோக்கி படுத்துக் கொண்டிருக்கும். ஆனால், நவக்கிரகங்களில் சனி கிரகம் மட்டும் (தனது பார்வை பட்டால் கெடுதல் விளையும் என்பதால்), மேல் நோக்கிப் படுக்காமல் கீழ் (தரையை) நோக்கி குப்புறப்படுத்திருந்தது.
இதை கவனித்த நாரதர், இராவணனின் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக, இராவணன் சபைக்கு வந்து, ராவணன் நவக்கிரஹங்களை காலால் மிதித்து அரியணை ஏறுவதை கவனித்தார். அப்போது ராவணனிடம் நாரதர், ராவணா! உனது கட்டளையை அனைவரும் மதித்து, மேல் நோக்கி படிகளில் படித்திருக்கிறார்கள். ஆனால், இந்த சனி கிரகம் மட்டும் உனது கட்டளையை அவமதிக்கும் வகையில் கீழ் (தரை) நோக்கி படுத்திருக்கிறது பார்த்தாயா! என்று கூற, ராவணனும் சனியை மேல் நோக்கி படுக்கச் சொன்னான்.
தனது பார்வையால் கெடுதல் விளையும் என்பதை சனி கிரகம் எடுத்துச் சொல்லியும் ராவணன் பிடிவாதமாக இருக்கனே, சனியும் படிக்கட்டில் மேல் நோக்கியவாறு திரும்பிப் படுத்தது. ராவணன் தனது காலால் சனியை மாõர்பில் மிதிக்கும்போது சனி கிரகத்தின் குரூரமான பார்வை, இராவணனின் மீது விழுந்தது. அது முதல் ராவணனுக்கு அனர்த்தம் ஆரம்பமாயிற்று. நாரதரும் வந்த வேலை முடிந்ததை எண்ணி மகிழ்ச்சியுடன் புறப்பட்டார். புராணத்தில் காணப்படும் இந்த நிகழ்வின் மூலம் சனியின் பார்வை நம் மீது விழாமல் இருப்பது சிறப்பானது என்பது தெரிகிறது.

நமது உடல் தசையால் ஆனது. தசை வளர்ச்சிக்கு உளுந்து முக்கிய காரணமாகிறது. ஒல்லியாக இருப்பவர்கள் இட்லி, தோசை, உளுந்துவடை சாப் பிட்டால் சதைப்பிடிப்பு ஏற்படும். ஆனால், சதையாலான இந்த உடம்பு எதற்காவது பயன்படுமா? எனவே, பயனற்ற இந்த உடலை உனக்கே அர்ப் பணிக்கிறேன் ஆஞ்சநேயா என்ற தத்துவார்த்தத்தின் அடிப்படையிலேயே உளுந்துவடை மாலை அணிவிக்கிறோம். அனுமானுடைய தாய் அஞ்சனாதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உளுந்து வடைசெய்து கொடுத்ததாக ஐதீகம். உளுந்து எலும்புகளுக்கு நல்ல போஷாக்கு.
வெற்றிலைமாலை: ராமர் வெற்றி பெற்றதை சீதைக்கு முதலில் தெரிவித்தவர் ஆஞ்சநேயர். இதனால் மகிழ்ந்த சீதை தன் அருகில் இருந்த வெற்றிலைக் கொடியில் இருந்த இலைகளை மாலையாக்கி அணிவித்தாள். அதன் அடிப்படையில் எண்ணிய செயல் வெற்றி பெற ஆஞ்சநேயருக்கு வெற்றிலைமாலை அணிவிக்கும் வழக்கம் உண்டானது. மாலையை எப்படி கட்டுவது?: இரு வெற்றிலை, ஒரு பாக்கு என வைத்துக் கொண்டு மாலை தொடுக்க வேண்டும். ஒரு மாலையில் 21 கண்ணிகள் அமைவது நல்லது. 48, 54, 108 எண்ணிக்கையிலும் வெற்றிலையைக் கட்டலாம். ஒற்றைப்படை எண்ணிக்கையில் 3, 5, 7 என சனிக்கிழமைகளில் மாலை சாத்துவது நல்லது. இதனால், சுபநிகழ்ச்சிகளில் ஏற்படும் தடை நீங்கி விரைவில் நல்லபடியாக நடந்தேறும். | |
ஏழரை சனிக்கு அறிவியல் பரிகாரம்!
எனக்கு ஏழரைச்சனி, எனக்கு அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனி என்றெல்லாம் பலரும் நடுக்கம் கொள்கிறார்கள். இவை தங்கள் வாழ்க்கையில் பெரும் பின்னடவை ஏற்படுத்தும் என நினைக்கிறார்கள். இதற்காக பல பரிகாரங்களைச் செய்கிறார்கள். அதில் தவறில்லை. ஆனால், செலவே இல்லாமல் எளிய அறிவியல் பரிகாரம் ஒன்று உள்ளது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். கோள்களின் நகர்வுகளை அறிந்து கொண்டால் பரம்பொருளான கடவுளின் நிலையை அடையமுடியும், என வானவியல் அறிஞர் ஆர்யபட்டா கூறியுள்ளார். கோள்களின் நகர்வு பற்றி அறிந்தவர்கள் நல்ல பிள்ளைகளைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள், என யஜுர் வேத ஜோதிடம் கூறுகிறது.
நாசா விஞ்ஞானி கார்ல் சாகன், நாம் கிரகங்கள், நட்சத்திரங்களில் இருந்து தான் பிறந்திருக்கிறோம். நம் பூர்வீகமே நட்சத்திரங்கள் தான். அவைகளைப் பற்றி எந்த அளவுக்கு அறிந்து கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நம்முடைய எதிர்காலம் நன்றாக அமையும், என்று குறிப்பிடுகிறார். கிரகம், நட்சத்திரங்களை நோக்கி தியானம் செய்தால் நற்பலனை நிச்சயம் நம்மால் பெற முடியும். வானத்தில் கிரகங்கள் எந்த இடத்தில் சுற்றுகின்றன என்பது பற்றி யாரும் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. அதனைத் தெரிந்து கொள்வதால் நமக்கு உண்டாகும் பலனையும் யாரும் அறிந்து கொள்ளவில்லை. பொதுவாக, ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் கிரகம் செல்வதை பெயர்ச்சி என குறிப்பிடுகிறோம். அந்த வகையில் குரு, சனி கிரகங்களின் பெயர்ச்சிகளை மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர். மெதுவாக நகர்வதால் சனியை மந்த கிரகம் என்பர். 9 கோடி மைல் துõரத்தில் இருக்கும் பூமி, சூரியனைச் சுற்றி வர ஒரு வருடம் ஆகிறது. ஆனால், சூரியனை விட்டு 85 கோடி மைல் தள்ளியிருக்கும் சனி, அதற்கான சுற்றுப்பாதையில் ஒரு முறை சுற்றி வர 30 வருடம் ஆகிறது. மிக நீண்ட தொலைவில் இருப்பதால், சனி ஒரு ராசியைக் கடக்க உத்தேசமாக இரண்டரை ஆண்டு காலம் ஆகிறது.
தற்போது சனி கிரகம் தீர்க்க ரேகை 209ல் இருந்து 210 ஐ அடைகிறது. அதாவது 209 டிகிரியில் உள்ள துலாமை விட்டு, 210 டிகிரியிலுள்ள விருச்சிக ராசியை அடைவதையே துலாம்- விருச்சிக ராசி மாற்றம் என்கிறோம். சரி...இனி அறிவியல் ரீதியாக சனி பரிகாரம் தேடுவது பற்றி பார்ப்போம். பஞ்சாங்கம் அல்லது எபிமரிஸ் அளிக்கும் கிரக நிலைகளை ஒரு வரைபடத்தில் சுற்றுப்பாதைகளில் அமைத்துக் கொண்டால் சனி உள்ளிட்ட எல்லா
கிரகங்களையும் அதன் இருப்பிடத்திலேயே பறவைப் பார்வையாக மனதாலேயே நம்மால் பார்க்க முடியும். அதாவது, கிரகங்களை ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருப்பதாக மனதில் கற்பனை செய்து கொள்ள வேண்டும். தற்போதைய சனிப்பெயர்ச்சியில், சூரியனுக்கு மிகவும் அருகில், அதாவது 15 டிகிரி அளவு வித்தியாசத்தில் சனி இருக்கும். எனவே இந்த முறை ஏற்படும் சனிப்பெயர்ச்சியை நேரில் பார்ப்பது கடினம். எனவே, சூரியனுக்கு சற்று மேலாக சனி இருப்பதாக நம் மனதில் கற்பனை செய்து கொள்ள வேண்டும். முதலில், பூமியின் வடதுருவத்தை மனதில் வரவழைக்க வேண்டும். அ ங்கிருந்து பல லட்சம் கோடி மைல் துõரம் மனதாலேயே கடந்து செல்ல வேண்டும்.
அப்போது சூரிய மண்டலத்தையும், அதனைச் சுற்றியுள்ள நட்சத்திரங்களையும் ஒரே நேரத்தில் ஒரே பார்வையாக நம் மனதால் காண முடியும். சூரியனுக்கு அருகில் சனி இருப்பதாக மனதில் கற்பனை செய்து, சனீஸ்வரா! எனக்கு உன்னால் வரும் கெடுபலன்களில் இருந்து காப்பாற்று, என மனதால் தியானம் செய்ய வேண்டும். இந்த முறையில் இரவில் அல்லது பகலில் எந்த நேரத்திலும் மனத்திரையில் கண்டு தியானிக்கலாம். சனி மட்டுமல்ல! பிற கிரகப்பெயர்ச்சிகளால் நமக்கு பிரச்னை இருந்தாலும், சம்பந்தப்பட்ட கிரகங்களுடன் ஒன்றாகவோ அல்லது குறிப்பிட்ட கிரகத்துடன் அன்றைய நாளில் சம்பந்தப்பட்ட நட்சத்திரத்துடன் ஒன்றிக் கலந்தோ உயிர்க்கலப்பு பெறலாம். கிரகங்களின் இருப்பிடத்தை மனத்திரையில் கண்டு தியானத்தில் ஆழ்ந்து விடுவதன் மூலம் அவைகளிடம் இருந்து காந்த அலைக்கதிர்களைநம்மால் ஈர்க்க முடியும். 10 அல்லது 15 நிமிடம் இந்த திய õனத்தை செய்வதன் மூலம் கிடைக்கும் பலன், கோயில்களில் நவக்கிரகங்களை வலம் வந்து அடையும் பலனுக்கு ஈடாகவோ அல்லது அதற்கும் ÷ மலானதாகவோ இருக்கும். உங்கள் பிறந்த நட்சத்திர நாளில், உங்களது நட்சத்திரம் இருக்குமிடத்தை உத்தேசமாகக் கணக்கிட்டு அந்த இடத்திற்கு மனதால் சென்று தியானம் செய்பவர்கள் பிரத்யேக பலனைப் பெற முடியும். கிரகங்கள் ஒன்பதும் நம் உடம்பில் ஒவ்வொரு பாகத்தைக் குறிக்கும். சூரியன்- எலும்பு, சந்திரன்- ரத்தஓட்டம், செவ்வாய்- மஜ்ஜை, புதன்- தோல், வியாழன்- மூளை, சுக்கிரன்- உயிர்ச்சக்தி, சனி- நரம்பு மண்டலம். அந் தந்த உறுப்புகள் நலம் பெற அந்த கிரகத்தை நோக்கி தியானம் செய்யலாம். மொத்தத்தில், இரவு நேரத்தில் மட்டுமே கிரகம், நட்சத்திரங்களைக் கண்டு களிக்கலாம் என்ற நிலையை மாற்றி பிரமிப்பூட்டும் பறவைப்பார்வை மூலம் பகல், இரவு பாகுபாடு இல்லாமல் எந்த நேரத்திலும் மனதை செலுத்தி உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி மன ஆரோக்கியத்தை அடையலாம். இதை நடைமுறையில் கொண்டு வர நாம் எதையும் கற்றுக் கொள்ள வேண்டியதில்லை. வீட்டிலேயே அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து கிரகங்களின் இருப்பிடம் அறிந்து மனம் செலுத்தி தியானம் செய்வதே போதுமானது. இவ்வாறு தொடர்ந்து செய்பவர்கள் வாழ்வில் பல நன்மைகளைப் பெறுவது உறுதி.

ராகு காலம்.. எமகண்டம் பார்ப்பது எப்படி?
திருவிழா சந்தையில் வெளியே புறப்பட்டு விளையாடச் செல்வது ஞாயமா?
விளையாட்டாய் புண்ணியம் செய்தாலும் திருவருளை ஞானமும் சத்தியமும் வெளிப்படுத்தும்!
எப்போதும் எந்தச் செயலைச் செய்யும் போதும் ராகுகாலம், எமகண்டம் பார்க்க காலண்டரைப் புரட்டுபவரா நீங்கள்? அப்படியானால் மேலே இருக்கும் இரண்டு வாக்கியங்களையும் மனப்பாடம் செய்துகொள்ளுங்கள். அப்புறம் உங்களுக்கு ராகுகாலம், எமகண்டம் பார்க்க காலண்டர் தேவைப்படாது.
எப்படி? திங்கட்கிழமை 7.30-9 ராகுகாலம், அடுத்து சனிக்கிழமை 9-10.30, வெள்ளிக்கிழமை 10.30-12, புதன் கிழமை 12-1.30, வியாழக்கிழமை 1.30-3, செவ்வாய்க்கிழமை 3-4.30, ஞாயிற்றுக்கிழமை, 4.30-6. இதில் முதல் நாளுக்கு உரிய நேரமான 7.30-9 மட்டும் நினைவில் இருந்தால் போதும், வாக்கியத்தில் ஒவ்வொரு வார்த்தையி<லும் முதலில் உள்ள எழுத்துகளை கிழமையின் முதலெழுத்தாகக் கொண்டால் அடுத்தடுத்த ஒன்றரை மணி நேரம் ராகுகாலம் என எளிதாகத் தெரிந்துகொண்டுவிடலாம்.
இரண்டாவது வாக்கியம் யம கண்டத்திற்கு வியாழக்கிழமை 6-7.30 எமகண்டம். அடுத்தடுத்து வாக்கியத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையின் முதலெழுத்தை கிழமையின் முதலெழுத்தாகக் கொண்டால், அடுத்தடுத்து புதன், செவ்வாய், திங்கள், ஞாயிறு, சனி, வெள்ளிக் கிழமைகள் அடுத்தடுத்த ஒன்றரை மணிநேரம் எமகண்டம் என்பதைக் கணக்கிட்டுவிடுவது சுலபம்தான்!

Subscribe to:
Posts (Atom)