Sunday, October 31, 2010

கருடர் வழிபாடு- சமஸ்க்ருதம்

கருடர் வழிபாடு- சமஸ்க்ருதம்

கருடர் வழிபாடு 


மரணபயத்தை போக்கிட

ஓம் தத்புருஷாய வித்மஹே
சுவர்ணபக்ஷõய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்


ஓம் பக்ஷிராஜாய வித்மஹே
சுவர்ணபக்ஷõய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்


ஓம் தக்ஷபத்ராய வித்மஹே
தனாயுபுத்ராய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்

Thursday, October 28, 2010

விரதங்கள் – 4

குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , ,



முருகனுக்குரிய மூன்று விரதங்களில் (செவ்வாய்க்கிழமை விரதம், கார்த்திகை விரதம், ஷஷ்டி விரதம்) மிகச் சிறந்தது ஸ்கந்த ஷஷ்டி விரதமாகும். ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசையை அடுத்த வளர்பிறைப் பிரதமை முதல் ஷஷ்டி ஈறாகவுள்ள ஆறு நாட்கள் ஸ்கந்த ஷஷ்டி விரதம் அனுசரிக்கப்படுகிறது. மாதம் தோறும் ஷஷ்டி திதியிலும் விரதம் இருக்கலாம்.


நல்லூர் கந்தன்


சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்பதற்கு “சஷ்டியில் விரதம் இருந்தால் அதன் அருள் அகப் பையில், அதாவது உள்ளத்தில் வரும்” என்பதுதான் உண்மையான பொருள். இவ்விரதம் உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும் மகத்தான விரதமாகும்.

முதல் நாள் அமாவாசை முதல் தொடர்ந்து ஆறுநாட்களும் அனுசரிக்கப்படும் இவ்விரதத்தில் சிலர் மூன்று வேளையும் உண்ணா நோன்பு இருப்பர். சிலர் பகல் மட்டும் விரதம் இருந்து இரவில் பால், பழம் உண்டு விரதம் மேற் கொள்வர். விரத நன்னாளில் தர்ப்பை அணிந்து சங்கல்பம் செய்துகொண்டு ஆறு நாட்களும் முழு உபவாச விரதமிருந்து இறுதி நாளில் தர்ப்பையை அவிழ்த்து தாம்பூலத் தட்சணையுடன் அர்ச்சகரிடம் அளித்து விரதத்தை நிறைவு செய்பவர்களும் உண்டு. இவர்களில் பலர் முருகன் ஆலயத்திலேயே தங்கி விரதம் இருப்பர். உண்ணா நோன்பு மட்டுமல்லாமல் மௌன விரதம் இருப்போர்களும் உள்ளனர்.

விரத காலத்தில் முருக நாம ஜெபம், கந்த புராணம் படித்தல் நற்பலன் அளிக்கும். ஆறாம் நாள் கந்தஷஷ்டி அன்று துயிலாமல் விழித்திருந்து முருகன் பெருமைகளை நினைந்தும், பேசியும் வழிபடுதல் சிறப்பு. முழு உபவாசம் இருக்க முடியாதவர்கள், கந்த ஷஷ்டி தினத்தில் மட்டுமாவது உபவாசம் இருத்தல் நன்மையைத் தரும். ஏழாம் நாளன்று நீராடி, முருகனை வழிபட்டு வெல்லமும், பச்சைப் பயறும் கலந்து களி செய்து உண்டு விரதத்தை முடிக்கலாம். ஆறு நாள்களும் கந்த புராணத்தை முழுமையாகப் படிக்கலாம். கந்தர் ஷஷ்டிக் கவசம், ஸ்கந்த குரு கவசம், ஷண்முக கவசம் இவற்றைப் பாராயணம் செய்யலாம். திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்தர் கலிவெண்பா, வேல் மாறல் பதிகம், திருவடித் துதி முதலியவற்றைப் பாராயணம் செய்தலும் சிறப்பு தரும். ஆதிசங்கரர் அருளிய சுப்ரமண்ய புஜங்கத்தை உள்ளன்போடு பாராயணம் செய்ய எண்ணிய காரியம் வெற்றி பெறும்.

விரத பலன்

ஆறு நாள்களும், ஆறு காலங்களும் உண்மையாக முருகனை பூஜித்து வழிபடுவோருக்கு வேண்டு வரம் கிட்டும் என்பது மட்டுமில்லை, முருகனது அருட்காட்சியும் கிடைக்கும். கந்த சஷ்டி விரதத்தை மேற்கொண்டு, வலன் என்ற அசுரனை இந்திரன் அழித்தான் என்பதிலிருந்தே இதன் பெருமையை நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஓம் றீம் ஐயும் கிலியும் ஔவும் சௌவும் சரஹண பவ

(முற்றும்)
  
   

 

Wednesday, October 27, 2010

விரதங்கள் – 3

குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , ,


கார்த்திகை விரதம்



கார்த்திகை விரதம், முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களை நினைத்து நன்றி செலுத்தும் விதமாக ஏற்படுத்தப் பட்ட ஒன்று என கூறுவர். அதனால்தான் கந்தன் அப்பெண்களின் பெயரால்,  “கார்த்திகேயன்” என அழைக்கப்படுகிறான். மேலும் ஒரு தகவல் உண்டு. சூரபத்மனை அழிக்க வேண்டி தேவர்கள் விரதமிருந்து ஈசனைத் துதித்தனர்.  ஈசன் தமது நெற்றிக் கண்ணைத் திறக்க, அதிலிருந்து ஒளிவடிவில் ஆறு நெருப்புப் பொறிகள் தோன்றி குழந்தையாய் உருமாறியது. அவ்வாறு ஆறுமுகன் அவதரித்த தினமே திருக்கார்த்திகை தினம். இது தவிர இறைவன் திரிபுர சம்ஹாரம் செய்த தினம் கார்த்திகை தினம் என்றும் ஒரு கருத்துண்டு. இக் கார்த்திகை தினத்தில் விரதம் இருப்பவர்களுக்குக் குறைகள் நீங்கி, நல்வாழ்வும், முக்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.



ஷண்முகநாதன்
கார்த்திகை விரதம் பற்றிக் கந்த புராணம்,


 “நுந்தம் பகலிடை இன்னவன் நோன்றாள் வழிபடுவோர்
தந்தம் குறை முடித்துப் பரந்தனை நல்குவம் என்றான்”

 என்கிறது.


தைமாதக் கார்த்திகையை விட ஆடிக் கார்த்திகையே சிறப்பாகச் சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடித்தல் சிறப்பு. முருகப்பெருமானுடைய விரதங்களுள் முக்கியமானது கார்த்திகை விரதம்.


விரத முறைகள்


தை மாதத்திலோ அல்லது முருகனுக்கு உகந்த கார்த்திகை மாதக் கார்த்திகை நட்சத்திரம் முதலாகவோ இவ்விரதத்தைத் துவங்கலாம். முருகனையே துதித்து உபவாசம் இருக்க வேண்டும். இயலாதோர் காலை, பகல் உணவு தவிர்த்து, இரவில் பால், பழம், பலகாரம் உண்ணலாம். 12 வருடங்கள் தொடர்ந்து பக்தியுடனும், உண்மையான நம்பிக்கையுடனும் இவ்விரதத்தை மேற்கொள்பவனுக்கு முருகனின் அருள் காட்சி கிட்டும் என்பது நம்பிக்கை. விரத நாளில் மாலை ஐந்து மணிக்கு மேல் கார்த்திகை நட்சத்திரம் இருக்கும் நாளே சரியான விரத நாள் என்பது இதில் குறிப்பிடத்தக்கது


இவ்விரதம் முருகனுக்கு மட்டுமல்ல சிவபெருமானுக்கும் உகந்தது. அம்பிகை மகிஷாசுரனுடன் போர் புரிந்து அவனைக் கொன்ற போது அவன் கழுத்தில் அணிந்திருந்த சிவலிங்கம் அவள் கையோடு ஒட்டிக் கொண்டு விட்டது. அதனால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்ய, கார்த்திகை தினத்தன்று தீபம் ஏற்றி அம்பிகை விரதம் இருந்தாள். அதுவே கார்த்திகை விரதம். அவ்விரதத்துக்கு மகிழ்ந்த ஈசன் அன்னை பார்வதி தேவிக்கு ஒளி உருவில் காட்சி கொடுத்ததுடன், தேவிக்கு இடப்பாகம் கொடுத்து ஏற்றுக் கொண்டதும் இந்த நன்னாளில் தான். அதனால்தான் அண்ணாமலையில் அந்த நாளில் தீபம் ஏற்றப்பட்டு கார்த்திகை விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது


கார்த்திகைக்குக் கார்த்திகை நாள் ஒரு ஜோதி
மலை நுனியில் காட்டா நிற்போம்
வாய்த்து வந்த சுடர்காணில் பசிபிணி இல்
லாது உலகில் மன்னி வாழ்வார்
பார்த்தவர்க்கும் அருந்தவர்க்கும் இடையூறு
தவிரும் இது பணிந்தோர் கண்டோர்
கோத்திரத்தில் இருபத்துஓர் தலைமுறைக்கு
முத்திவரம் கொடுப்போம் என்றார்

கார்த்திகை விரதத்தின் பலன்



முறையாக ஒருவன் விரதம் மேற் கொள்ளும் போது அது வரை செய்த பாபங்கள் நீங்குவதுடன் மகத்தான புண்ணிய பலனும் கிடைக்கும். வாழ்க்கை 
 ஒளிரும். தீவினைகள் அகலும். 

 
என்கிறது அருணாசல புராணம் (பாடல் – 159)


ஓம் சரவண பவ


(தொடரும்) 
 

 

Tuesday, October 26, 2010

விரதங்கள் – 2

குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , ,


வள்ளலார் வலியுறுத்திய ஒரு விரதம்தான் செவ்வாய்க்கிழமை விரதம். ஆனால் இது முழுக்க முழுக்க முருகப்பெருமானுக்குரிய விரதம் என்று கூறி விட இயலாது. வள்ளலார் ஆரம்பத்தில் திருத்தணிகை முருகப் பெருமானைத் தொழுது அவரது காட்சி பெற்றவர் என்பது இங்கே நினைக்கத் தகுந்தது.




 
 
வள்ளலார் இராமலிங்க அடிகளார்
 
 
வள்ளலார் ஆரம்ப காலகட்டத்தில் முருகனைத் தொழுது வணங்கியவர். சுப்ரமணியம் என்பது பற்றி அவர், “ சுப்பிரமணியம் என்பது என்னை? நமது புருவ மத்தியில் உருட்சியாய் ஆறு பட்டையாய் உருட்சியுள்ள ஒரு  மணிப் பிரகாசம் பொருந்தியிருக்கின்றது. இந்த ஜோதி மணியை ஷண்முகமென்று பெரியோர்கள் சொல்லுவார்கள். இதன்றி, நமது மூலாதாரத்திற்கு மேல் மூன்றிடந்தாண்டி விசுத்தியாகிய இருதய ஸ்தானத்தில் இடது புறத்தில் ஆறு தலையுடைய ஒரு நாடி இருக்கின்றது. இதைச் சுப்பிரமணியம் என்று சொல்லுவார்கள். இந்தத் தேகத்திலுள்ள ஆறறிவும் ஒருங்கே சேர்ந்த  சுத்த விவேகமென்பதையும் ஷண்முகம் என்பார்கள்.  ஆறு ஆதாரங்களில் உள்ள ஆறு பிரகாசத்தையும் ஷண்முகம் என்பார்கள். ஆயினும் சர்வ தத்துவங்களினது அந்தத்தில் உள்மணிக்கப்பால் சாந்த நிறைவாயுள்ள ஆறுதலாகிய சுத்த ஆன்ம அறிவான உள்ளமே சுப்பிரமணியம்………”
- என்று சுப்பிரமணிய தத்துவத்தைப் பற்றி விளக்கி இருக்கிறார் வள்ளலார்.


 
 
திருத்தணிகை முருகன்
 
 
 
செவ்வாய்க் கிழமை விரதம் பற்றி அடிகளார் கூறி இருக்கும் குறிப்பு.



“திங்கட்கிழமை இரவில் பலகாரஞ் (பழ ஆகாரம்) செய்து, செவ்வாய்க்கிழமை அருணோதயத்தி லெழுந்து, திருநீறு நெற்றியில் மாத்திரம் அணிந்து, நல்ல நினைப்புடன் அங்கசுத்தி, தந்தசுத்தி முதலானவையுஞ் செய்து கொண்டு, சூரியோதயத்திற்கு முன் ஆசாரமான சுத்த சலத்தில் ஸ்நானஞ் செய்து, விபூதியை சலத்தினால் குழைத்து அனுஷ்டானப்படி தரித்துக் கொண்டு, கண்பதியை நினைத்து , பின்பு ஸ்ரீ பஞ்சாஷரத்தை நூற்றெட்டு முறை சபித்து, பின்பு சிவத்தியானம் செய்து, எழுந்து வாயிலில் வந்து சூரியனைப் பார்த்து ஒம் சிவ சூரியாய நம என்று மெதுவாகச் சொல்லி நமஸ்கரித்து அதன் பின்பு அவ்விடத்தில் தானே நின்று கொண்டு, தங்கள் தங்கள் மனத்திலிருக்கிற கோரிக்கைகளை முடித்துக் கொடுக்க வேண்டுமென்று ஸ்ரீ வயித்தியலிங்கரையும் தையனாயகியையும் முத்துக்குமாரசாமியையும் தியானித்துக் கொண்டு, பின்பு ஔம் வயித்தியநாதாய நம வென்று நூற்றெட்டு, ஆயிரத்தெட்டு இரண்டில் எந்த அளவாவது செபித்து, ஒரு பலம் மிளகு சீலையில் முடிந்து வயித்தியலிங்கார்ப்பணம் என்று ஔரிடத்தில் வைத்து, சிவனடியார் ஒருவர்க்கு உபசாரத்தொடு அமுது படைத்து, பின்பு சுசியொடு பச்சரிசிப் பொங்கல் முதலான புசிப்பை அரையாகாரம் முக்கால் ஆகாரங் கொண்டு, அன்று மாலையில் சிவ தரிசனஞ் செய்து, பாய் சயனம், கொட்டை (தலையணை) முதலாகியவையும் விட்டு, மெழுகிய தரையில் கம்பளம் விரித்துப் படுக்க வேண்டும். சிவ சரித்தரங் கேட்க வேண்டும். செபஞ் செய்துகொண்டிருக்க வேண்டும். சந்தனம், புட்பம், தாம்பூலம், இராகம்,. சுகம், பெருந்தூக்கம் முதலானவையும் விட்டிருக்க வேண்டும். “


-என்று வள்ளலார் குறிப்பிட்டிருக்கிறார்.

இதன் மூலம் வேண்டிய கோரிக்கைகள் இனிது நிறைவேறும் என்பது நம்பிக்கை.


(தொடரும்)   


 
 
 
 

Monday, October 25, 2010

ஸ்ரீ குமாரஸ்தவம்

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய இந்த ஸ்தோத்திரம் நற்பலனை வாரி வழங்க வல்லது.




முருகனும் அவன் அடியாரும்…
 
 
 
ஓம் ஷண்முக பதயே நமோ நம!
ஓம் ஷண்மத பதயே நமோ நம!
ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம!
ஓம்ஷட்க்ரீட பதயே நமோ நம!
ஓம்ஷட்கோண பதயே நமோ நம!
ஓம் ஷட்கோச பதயே நமோ நம!
ஓம் நவநிதி  பதயே நமோ நம!
ஓம் சுபநிதி  பதயே நமோ நம!
ஓம் நரபதி பதயே நமோ நம!
ஓம் சுரபதி பதயே நமோ நம!
ஓம் நடச்சிவ பதயே நமோ நம!
ஓம் ஷடஷர பதயே நமோ நம!
ஓம் கவிராஜ பதயே நமோ நம!
ஓம் தபராஜ பதயே நமோ நம!
ஓம் இகபர பதயே நமோ நம!
ஓம் புகழ்முநி பதயே நமோ நம!
ஓம் ஜயஜய பதயே நமோ நம!
ஓம் நயநய பதயே நமோ நம!
ஓம் மஞ்சுள பதயே நமோ நம!
ஓம் குஞ்சரி பதயே நமோ நம!
ஓம் வல்லீ பதயே நமோ நம!
ஓம் மல்ல பதயே நமோ நம!
ஓம் அஸ்த்ர பதயே நமோ நம!
ஓம் சஸ்த்ர பதயே நமோ நம!
ஓம் ஷஷ்டி பதயே நமோ நம!
ஓம் இஷ்டி பதயே நமோ நம!
ஓம் அபேத பதயே நமோ நம!
ஓம் கபோத பதயே நமோ நம!
ஓம் வியூஹ பதயே நமோ நம!
ஓம் மயூர பதயே நமோ நம!
ஓம் பூத பதயே நமோ நம!
ஓம் வேத பதயே நமோ நம!
ஓம் புராண பதயே நமோ நம!
ஓம் ப்ராண பதயே நமோ நம!
ஓம் பக்த பதயே நமோ நம!
ஓம் முக்த பதயே நமோ நம!
ஓம் அகார பதயே நமோ நம!
ஓம் உகார பதயே நமோ நம!
ஓம் மகார பதயே நமோ நம!
ஓம் விகாச பதயே நமோ நம!
ஓம் ஆதி பதயே நமோ நம!
ஓம் பூதி பதயே நமோ நம!
ஓம் அமார பதயே நமோ நம!
ஓம் குமார பதயே நமோ நம!
************************
ஓம் சரவண பவ
 

ஷஷ்டி விரதம் - விரதங்கள் – 1





 விரதத்தின் பொருள்


விரதம் என்பதற்கு ஒன்றையே எண்ணி அதில் மனம் லயித்திருத்தல் என்பது பொருள். வரித்தல் என்பதிலிருந்தே விரதம் என்ற சொல் பிறந்தது என்று கூறலாம். வரித்தல் என்பதற்கு கை கொள்ளுதல் அல்லது ஏற்றுக் கொள்ளுதல் என்பது பொருள். உணவு உண்ணாமலிருத்தலும் மிதமாக உணவை உண்பதும் தீயவற்றை நீக்கி நல்லவற்றை உண்பதுமாகிய உணவு நியமமே “விரதம்” என அழைக்கப்படுகிறது. ஆனால் இது விரதத்தின் முதற் நிலை என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வாறு இருத்தலே முழுமையான விரதம் என்று கூற முடியாது. மனம் அடங்கக் கற்பதே விரதத்தின் முதற்படியாகும். உணவை ஒழித்து இருப்பது விரதம் அல்ல. எண்ணங்களை ஒடுக்கி, சிந்தைகள் ஏதும் இல்லாமல் இருப்பதே ’விரதம்’ என்கிறார் ரமணர். குரங்கு போல் அலைந்து திரியும் மனத்தை அடக்கி நிறுத்தி இறைவன் திருவடியில் நிலைத்திருத்தலே சிறப்பான விரதத்தின் முதற்படி என்று கூறலாம்.


விரதத்தின் பயன்


மனம் ஒடுங்க புலன் ஒடுங்கம். புலன் ஒடுங்க அகம் ஒடுங்கும். அகம் ஒடுங்க, ஆன்ம ஒளி பிரகாசிக்கும். அந்த ஆன்ம ஒளியை அகத்திலே கண்டு தரிசிப்பதே விரதத்தின் பயன். பொறிகள் அடங்க வேண்டுமானால் உணவு ஒடுங்க வேண்டும். “அன்னம் அடங்க அஞ்சும் அடங்கும்” என்பது ஆன்றோர் முது மொழி. அதை உள்ளபடி உணர்ந்து விரதம் இருக்க வேண்டும். இறையருள் பெற முயற்சிக்க வேண்டும்.





முருகனுக்குரிய விரதங்கள் மூன்று. செவ்வாய்க் கிழமை விரதம், கார்த்திகை விரதம், சஷ்டி விரதம் என்பன அவை. சிலர் வெள்ளிக் கிழமை விரதமும் முருகனுக்கு உகந்தது என்று கூறுவர். மிகச் சிறந்தது ஸ்கந்த ஷஷ்டி விரதமாகும்.


 
செவ்வாய்க் கிழமை விரதம்


இவ்விரதத்தை வலியுறுத்திக் கூறியவர் வள்ளலார் இராமலிங்க அடிகள். அடிகளார் உருவ வழிபாட்டை ஒறுத்து, ஜோதி வழிபாட்டையே வலியுறுத்தியவ்ர் என்றாலும், அவர் தனது ஆன்மப் பயணத்தின் ஆரம்ப கட்டத்தில் உருவ வழிபாட்டையே மேற் கொண்டிருந்தார். திருத்தணிகைப் பெருமானையும், கந்த கோட்ட முருகனையும், ஒற்றியூர் வடிவுடை அம்மனையுமே அவர் முதற்கண் வழிபடு கடவுளாகக் கொண்டிருந்தார். தில்லை நடராஜரை தனது தெய்வமாகக் கருதி வழிபட்ட வள்ளலார்தான், பின்னர் அகத்திலே உள்ளொளி பெற்று அரு பெருஞ் சோதி ஆண்டவர் தரிசனம் பெற்று, அனைவருமே அதைக் கண்டு, வழிபட்டு உய்ய அழைத்தார்.


இனி, செவ்வாய்க் கிழமை விரதம்


(தொடரும்)





Thursday, October 14, 2010

ராஜராஜேஸ்வரி வழிபாடு

ராஜராஜேஸ்வரி வழிபாடு- சமஸ்க்ருதம்

(அழியாத ஐஸ்வர்யங்களையும், பதவி உயர்வையும் தரவல்லது)


ஸ்ரீ ராஜராஜேச்வர்யஷ்கம்-ஸ்ரீ தேவி கருமாரி அம்மனுக்கும் பகவதி
ஸ்ரீ சண்டிகா தேவிக்கும் மிகவும் ப்ரியமான ஆனந்த ஸ்தோத்ரம்

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி தேவியைப் பற்றி எட்டு ஸ்லோகங்களும் அழியா செல்வம், அந்தஸ்து, புகழ், பதவி, நோயற்ற மங்களமான குடும்ப சுகவாழ்வு, உயர்கல்வி ஆகியவைகளை அளிக்கவல்லது. ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகத்தின் தலைப்பே எல்லா கடவுள்களுக்கும் ராணியானவள், சர்வ வல்லமை பொருந்தியவள்,  எல்லா இடத்திலும் வ்யாபித்துள்ளவள் என்று அறிவித்தாலும், எட்டு ஸ்லோகங்களும் அம்பா என்றே ஆரம்பிக்கின்றன. அம்பா என்றால் தாய். எல்லா உலகுக்கும் தாய். அவ்விதமே ஒவ்வொரு ஸ்லோகத்தின் கடைசி பாதம் பார்வதி தேவியை, எல்லோருக்கும் மேம்பட்டவள், சேதாநாரூபீ, சர்வ ஐஸ்வர்யம் படைத்தவள், தேவதைகளுக்கு எல்லாம் ராஜ ராஜேஸ்வரி என்று கூறி முடிகிறது உண்மையில் எல்லா ஸ்லோகங்களும் பார்வதி தேவியின் பல அவதாரங்களைக் குறிப்பவையே.

1. அம்பா சாம்பவி சந்த்ரமௌலி அபலா அபர்ணா உமா பார்வதீ
காளீ ஹைமவதீ சிவா த்ரிநயனீ காத்யாயனீ பைரவீ
ஸாவித்ரீ நவயௌவனா சுபகரீ ஸாம்ராஜ்ய-லக்ஷ்மீ-ப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ


தாய், சாம்பவி, சந்த்ரமௌளி, அபலா, அபர்ணா, உமா, பார்வதி,காளி, ஹிமவானின் புதல்வி, சிவா, முக்கண்ணளான காத்யாயநீ,  பைரவீ, சாவித்ரீ, புதுப்புது இளமைத்தோற்றம் உடையவர், சுபத்தைத் தருபவள், சாம்ராஜ்ய லக்ஷ்மியை அளிப்பவள். இவளே ஆத்ம ஸவரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஆவாள்.

2. அம்பா மோஹினி தேவதா த்ரிபுவனீ ஆனந்த-ஸந்தாயினீ
வாணீ-பல்லவ-பாணி-வேணு-முரளீ-கானப்ரியா-லோலினீ
கல்யாணீ உடுராஜபிம்ப-வதனா தூம்ராக்ஷ-ஸம்ஹாரிணீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ


இத்தாயே-மோஹிநீ தேவதை, மூவுல காளி, பேரானந்தம் தருபவள், சரஸ்வதி, இளந்தளிர் கைகள் கொண்டவள், புல்லாங்குழல் இசையை  பிரியத்துடன் இசைத்து விளையாடுபவள். மங்களமானவள், சந்த்ர பிம்பம் போல் முகம் உள்ளவள். தூம்பராக்ஷனை வதம் செய்தவள். இவளே ஆத்மஸ்வரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆவாள்

3. அம்பா-நூபுர-ரத்ன-கங்கண-தரீ கேயூர-ஹாராவலீ
ஜாதீ-சம்பக-வைஜயந்தி-லஹரீ-க்ரைவேயகை-ராஜிதா
வீணா-வேணு-விநோத-மண்டித-கரா வீராஸனே ஸம்ஸ்திதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ


இத்தாயே ரத்னத்தால் ஆன சதங்கை, கை வளை, கழுத்தடிகை, பலவித ஹாரமாலைகள், ஜாதி, சம்பக மாலைகள், வைஜயந்தி மாலை, கழுத்து ஆபரணங்கள் ஆகியவைகளை அணிந்துள்ளாள். வீணை, புல்லாங்குழல் இவைகளை மீட்டும் திருக்கை கொண்டவள். வீராஸநத்தில் வீற்றிருப்பவள். இவளே ஆத்ம ஸ்வரூபிணீ, பரதேவதை பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ ஆவாள்.


4. அம்பா ரௌத்ரிணி பத்ரகாளி பகலா ஜ்வாலாமுகீ வைஷ்ணவீ
ப்ரஹ்மாணீ த்ரிபுராந்தகீ ஸுரநுதா தேதீப்ய மானோஜ்ஜ்வலா
சாமுண்டாச்ரித-ரக்ஷ-போஷ-ஜநநீ தாக்ஷõயணீ வல்லவீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ


இந்தத் தாயானவள் ரௌத்ரிணீ, பத்ரகாளி, தீக்கொழுந்து எரியும் முகம் உள்ள பகலா, வைஷ்ணவி, ப்ரஹ்மாணீ தீரிபுராந்தகீ, தேவர்களால் வணங்கப் பெறுபவள், பளபளக்கும் ஒளிபடைத்தவள், சாமுண்டா, அண்டினவர்களை காப்பாற்றுபவள், அவர்களுக்கு பூஷ்டி அளிக்கும் தாய், தாக்ஷõயணீ, வல்லமை பொருந்தியவள். இவளே ஆத்மஸ்வரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ ஆவாள்


5. அம்பா சூல-தனு:-குசாங்குச-தரீ அர்த்தேந்து பிம்பாதரீ
வாராஹீ மதுகைடப-ப்ரசமனீ வாணீ-ரமா-ஸேவிதா
மல்லாத்யாஸுர-மூகதைத்ய-மதனீமாஹேச்வரீ அம்பிகா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ


இந்தத் தாயாவனள் சூலம், வில், கதை, அங்குசம் ஆகியவைகளைத் தன் திருக்கைகளில் தரித்தவளாயும், தலையில் அர்த்த சந்த்ரனை உடையவளாகவும் இருப்பவள். வாராஹீ, மதுகைடபர்களை அழித்தவள். சரஸ்வதி, லக்ஷ்மீ இவர்களாலும் துதிக்கப் பெற்றவள், மல்லாதி அசுரர்களையும் மூகாசுரனையும் அழித்தவள். மாஹேச்வரீ, அம்பிகா, இவளே ஆத்மஸ்வரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ ஆவாள்.

6. அம்பா ஸ்ருஷ்டி-விநாச-பாலனகரீ ஆர்யா விஸம்சோபிதா
காய்த்ரீ ப்ரணவாக்ஷர அம்ருதரஸ: பூர்ணானுஸந்தீ-க்ருதா
ஓங்காரீ விநதாஸுதார்ச்சித பதா உத்தண்ட-தைத்யாபஹா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ


இந்தத் தாயானவள் ஸ்ருஷ்டி-ஸ்திதி, சம்ஹாரங்களைச் செய்பவள் உயர்ந்தவளாக விளங்குபவள். காயத்ரீ, ப்ரணவம் (ஓங்கார எழுத்து) இவைகளின் அம்ருதரஸமானவள், ஓங்காரஸ்வரூபிணீ தேவதைகளால் வணங்கி அர்ச்சிக்கப்படும் திருவடியை உடையவள், அசுரர்களைக் கொல்வதில் முனைப்பாக இருப்பவள். இவளே ஆத்மஸ்வரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ ஆவாள்.

7. அம்பா சாச்வத-ஆகமாதி-வினுதா ஆர்யா மஹாதேவதா
யா ப்ரஹ்மாதி-பிபீலிகாந்த-ஜநநீ யா வை ஜகன்மோஹினீ
யா பஞ்சப்ரணவாதி-ரேபஜனனீயா சித்கலா மாலினீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ


இந்தத் தாயானவள் அழியாத தேவங்களால் போற்றப்பட்டவள். உயர்ந்த மஹாதேவதை, சதுர்முக ப்ரஹ்மா முதல் ஈ, எறும்பு வரை எல்லாவற்றையும் படைக்கும் ஜகந்மாதா ஆவாள். சகல ஜகத்தையும் மோஹிப்பிப் பவள். பஞ்சப்ரணவாதிகளை உண்டாக்குபவள், ÷ரபம் எனும் அக்ஷரத்துக்கு மூலமானவள் சித்கலா, மாலினி என்ற பெயர்கள் உடையவள். இவளே ஆத்மஸ்வரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ ஆவாள்.

8. அம்பா-பாலித-பக்தராஜ-தனிசம் அம்பாஷ்டகம் ய:படேத்
அம்பா-லோக-கடாக்ஷ வீ÷க்ஷ-லலிதஞ்ச ஐச்வர்யமவ்யாஹதம்
அம்பா பாவன-மந்த்ர-ராஜ-படனா தந்தே ச மோக்ஷ-ப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ


இந்தத் தாயானவள் பக்தர்களைக் காப்பதில் பற்றுள்ளவள். இவளைப் பற்றிய இந்த அம்பாஷ்டகத்தை எவன் படிக்கிறானோ அவன் அம்பாவின் லீலா விநோத கடைக்கண் பார்வைக்கு இலக்காகி உன்னதமான அழியா நற்செல்வங்களைப் பெறுவான்.மேலும் அம்பாளின் இந்த மந்த்ர ராஜத்தைப் படிப்பவனுக்கு மோக்ஷமளிப்பாள். இவளே ஆத்மஸ்வரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ ஆவாள்.


ஸ்ரீ ராஜராஜேச்வர்யஷ்டகம் சம்பூர்ணம் (இந்த ராஜராஜேஸ்வரி அஷ்டகத்தின் பெருமை எட்டாவது ஸ்லோகத்திலேயே சொல்லப்படுகிறது என்பது விசேஷம். எட்டு ஸ்லோகங்கள் உள்ளதால் அஷ்டகம் எனப்படும் அருமருந்தாகிறது.)