Wednesday, September 21, 2016

நமஸ்காரங்கள் வகைகள்

1. தலை மட்டும் குனிந்து வணங்கும் முறை ஏகாங்க நமஸ்காரம் எனப்படும்.
2. இரு கைகளையும் தலைக்கு மேல் குவித்து வணங்குவது த்ரியங்க நமஸ்காரம் ஆகும்.
3. இரு கைகள், முழந்தாள் இரண்டு, தலை ஆகிய ஐந்தும் நிலத்தில் பதிய வணங்குவது பஞ்சாங்க நமஸ்காரம் எனப்படும். (பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் மட்டுமே செய்ய வேண்டும்.)
4. அஷ்டாங்க நமஸ்காரம் என்பது தலை, இரு கைகள், இரு செவிகள், இரண்டு முழந்தாள், மார்பு என எட்டு அங்கங்களும் நிலத்தில் பதிய வணங்குவது ஆகும்.
5. தலை, இரு கரங்கள், இரு முழந்தாள், மார்பு என ஆறு அங்கங்கள் நிலத்தில் படுமாறு வணங்குவது சாஷ்டாங்க நமஸ்காரம் ஆகும்.

Tuesday, August 16, 2016

பித்ரு தோஷம் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள கருடப்புராணம் கூறும் எளிய வழிமுறைகள்

நமது குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள கருடப் புராணம் மிக எளிமையான வழிமுறைகளை தெளிவாக எடுத்துரைத்துள்ளது.
ஒருவர் இறந்த பின்பு அவருக்குரிய பித்ரு கடன்களை முறைப்படி செய்யாதவர்கள் குடும்பத்தில் மனக் கஷ்டம், பணக்கஷ்டம் போன்றவை இருந்து கொண்டே இருக்கும்.
இறந்தவர் ஆன்மா சாந்தியடைய நமது முன்னோர்கள் பல்வேறு வழிமுறைகளை கையாண்டனர், இறந்தவுடன் இறந்தவருக்கு செய்ய வேண்டிய பிண்டம் இடுதல், இறந்தவரின் திதி தோறும் அவருக்குரிய கடமைகளை செய்தல், போன்றவற்றை செய்யாமல் இருக்கும் போது இறந்தவரின் ஆன்மா பசி, தாகம் போன்றவற்றால் அவதிப்படும், அப்படி அந்த ஆத்மா அவதிப்படும்போது, அந்த அவதியின் கொடூரங்கள் அவரது சந்ததியினரையும் விட்டு வைக்காது, அவர்களையும் பாதிப்படைய வைக்கும். இதைத்தான் பித்ரு தோஷம் என்று கூறுவார்கள்.
ஒருவன் நல்லவனாகவும், தெய்வ பக்தி மிகுந்தவனாக இருந்து இறந்தால், இறந்தவருக்கு பித்ரு கடன்களை சரியாக செய்யாவிட்டாலும் இறந்தவரின் குடும்பத்திற்கு பித்ரு தோஷம் கண்டிப்பாக ஏற்படும். ஆனால் அதன் தாக்கம் சற்று குறைவாக இருக்கும், காரணம், பித்ருக்களுக்கு இறைவனின் ஆசி இருப்பதால் தோஷத்தின் தீவிரம் சற்று குறைவாக இருக்கும்.
ஆனால் ஒருவன் மிக கொடூரமானவனாகவும், அடுத்தவர் மனைவி, அடுத்தவர் சொத்து போன்றவற்றை அபகரித்து, லஞ்சம், திருட்டு போன்ற கொடூரத்தில் ஈடுபடுவானாயின் அவன் இறந்த பிறகு அவனுக்குரிய பித்ரு காரியங்களை அவன் குடும்பம் செய்யாமல் விட்டுவிட்டால் இறந்தவனின் குடும்பத்தினருக்கு மிகப் பெரிய தீங்கு விளையும், இறந்தவனுக்கு இறைவனின் ஆசி இல்லாமல், நரக வேதனையில், பசி, தாகம் போன்றவற்றால் அவதிப்பட்டு அல்லல் படுவான் அப்படிப்பட்டன் படும் வேதனையின் தாக்கம் மிகுந்த வீரியம் மிகுந்ததாக இருக்கும். அந்த தாக்கம் அவனது குடும்பம், மற்றும் சந்ததியினரையும் மிகவும் கொடூரமாக தாக்கும்.
பித்ரு தோஷம் உள்ளவன் வீட்டில் அதிகம் நடைபெறும் செயல்களைப் பார்ப்போம்.
தான் செய்யும் செயல்களில் அதிகமாக பாவம் உண்டாக்கும் செயலையும், லஞ்சம், லாவணியம் போன்ற கெடுதல் தரக்கூடிய செயல்கள் அதிகம் நடைபெறும்.
குழந்தைகள் பிறந்து பிறந்து இறப்பார்கள்.
சுற்றத்தாரோடு ஒற்றுமையில்லாமல் மனம் வேறுபட்டு வாழ்வதற்கும், குடும்பத்தில் நிம்மதி இன்றி கடைசியில் வெறுமையே ஏற்படும்.
பசுக்களை போஷிக்க முடியாமற் போகும்.
நல்ல நண்பனோடு விரோதிக்க நேர்ந்து நல்ல நட்புகள் ஏற்டாமல் போகும்.
ஹரி பக்தி செய்ய முடியாமல் வாழ்நாள் வீணாவதற்கும் ஜெப ஓமங்களைச் செய்ய முடியாமல் போகும்,
தந்தை தாயாரை இகல்வதும், அவர்களை மதிக்காமல் அவமதிக்கும் செயல்கள் நடைபெறும்.
பணம் மற்றும் சொத்து, பொன் பொருள், பெண் போன்ற காரணங்களால் அயலாரை கொல்ல முயற்சிக்கும் செயலுக்கு மனம் உந்தப்படும்.
இழிந்தோர் செய்யும் தொழிலைச் செய்து பிழைக்க நேரிடும்.
அதர்மங்களையே செய்ய தூண்டும் எண்ணம் மனம் முழுவதும் எழும்.
பிதுர் கர்மங்களை விக்கினத்தால் தடைபட்டு குறைபட்டு போகும்,
புத்திரன் பகைவனைப் போல மாறும் சூழல் ஏற்படும்.
மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாமல் நெடுநாட்கள் பிரிந்து வாழும் நிலை ஏற்படும்.
மேற்கண்ட கெடுதல் தரக்கூடிய செயல் உங்களுக்கு (உங்கள் இல்லத்தில்) அதிகம் நடைபெறுகிறதா, இவை எல்லாம் பிரேத ஜென்மத்தை அடைந்தவனால் ஏற்பட்ட விளைவுகளால் தான் என்பதை கருடப் புராணம் கூறுகிறது.
இதுபோன்ற பிரச்சனை தீரவேண்டுமெனில் பித்ரு கடன்களை ஒழுங்காகவும், கடமை தவறாமலும் செய்யுங்கள், பித்ரு கடன் என்ன என்பதை கேட்டு அறிந்து அதன்படி உங்கள் பித்ருகளை திருப்தி படுத்தினாலே மேற்கண்ட கெடுதல்களில் இருந்து எளிதாக நீங்கள் தப்பிக்கலாம்.

அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு வெற்றி-பாக்கு போடுவதுமட்டுமே, வெற்றிலை போடும் முறை

பழம்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.
தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.
மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது. என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும் இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.
பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது. சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது. வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.
ஆக மொத்தம் வெற்றிலை போடுவதால் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன. அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது. தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது. நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.
இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும் சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது. ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.
தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணாம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும்.
அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.
இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான் தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.

திருமணம்

ஜாதகத்தில் ஏழாமிடமானது களஸ்திர ஸ்தானம், சப்தம ஸ்தானம், இன்ப ஸ்தானம் என்றெல்லாம் கூறப்படும்.

திருமணம் , சூதாட்டம், வழக்கு, சுற்றங்கள் சூழ்தல், வியாபாரம், சன்மானம், சௌக்கியம், அலங்காரம், மனைவியின் அழகு, ஜவுளி வியாபாரம், நட்பு, விவாதங்கள், அன்னிய தேசத்தில் வசித்தல், ஆபரணங்கள்,மனைவியின் சுக துக்கங்கள் அறிவதற்கும் ஏழாமிடம் துணை செய்யும்.

கண்டிட ஏழாம் தான
காரியம் அறிய வேண்டில்
பெண்டிரின் குணமும் அல்லால்
பேசிய காமம் தன்னைக்
கொண்டிடும் செய்தி புத்ரர்
குறிப்பும்யாத் திரையு மாக
வண்டமர் குழலி யாளே!
சுகத்தையும் வகுக்க லாமே!

இறைவனின் திருவிளையாடல்களில், இந்த வாழ்க்கைப் பொருத்தம் மிக முக்கியமான ஒன்று. ஒருவரின் வாழ்க்கை நிம்மதியாக இருப்பதும், நிம்மதி இருந்து தவிப்பதும் தம்பதியரின் கையில் தான் இருக்கின்றது.
மனப் பொருத்தம், வாழ்க்கைப் பிண்ணனி, குடும்பத்தாரது குணாதிசயங்கள், பழக்க வழக்கங்கள், தொழில்கள், இவையெல்லாம் பார்த்து திருமணம் முடிப்போரும் உண்டு.
காதல் கொண்டு வாழ்க்கைத் துணை நலம் தேடுவோருமுண்டு.

புந்தியும் குருவும் ஏழில்
பொருந்திடப் புனிதப் பெண்டிர்
வந்திடும் நல்ல பிள்ளை
வாய்த்திடும்! ஏழில் சுங்கன்
உந்திடப் பாக்யப் பெண்டிர்
உதவியாம்! குளிகன் கேது
சொந்தமாய் ஏழி லாகில்
தூரத்ரீ யோடு வாழ்வான்!

புதன் குரு கூடி ஏழாமிடத்தில் நின்றிருந்தால் உத்தமான மனைவி அமைவாள்.
ஏழாம் வீட்டில் சுக்கிரன் நின்றிருக்க, நல்ல செல்வ வசதியுள்ள குடும்பத்தில் இருந்து பெண் மனைவியாக அமைவாள்.
குளிகனும் கேதுவும் கூடி ஏழாமிடத்தில் இருக்க, இழிவான பெண்ணை இல்லாள் ஆக்கிக் கொள்வான். ( தூரத்ரீ - என்பது தூரத்தில் ஒதுக்கி வைக்கக் கூடிய குணத்தைக் கொண்டவள் எனக் கொள்க)


சரி.....திருமணப் பொருத்தம் பார்ப்பது பற்றியும் ஏழாமிடத்தைக் கொண்டு, அமையும் பெண்ணின் நிலைகளையும் ( நல்ல பெண்மணி, தீய பெண்மணி, தாசியாகுபவள்....என எல்லா விடயங்களையும் வகுத்துக் கொடுத்துள்ள ) பாடல்களையும் பின்னர் பார்ப்போம் .


27 நட்சத்திரங்களின் பட்டியல்:


1.அசுவினி
14.சித்திரை
2.பரணி
15.ஸ்வாதி
3.கிருத்திகை
16.விசாகம்
4.ரோகிணி
17.அனுஷம்
5.மிருகசீரிடம்
18.கேட்டை
6.திருவாதிரை
19.மூலம்
7.புனர்பூசம்
20.பூராடம்
8.பூசம்
21.உத்திராடம்
9.ஆயில்யம்
22.திருவோணம்
10.மகம்
23.அவிட்டம்
11.பூரம்
24.சதயம்
12.உத்திரம்
25.பூரட்டாதி
13.ஹஸ்தம்
26.உத்திரட்டாதி

27.ரேவதி

திருமணப் பொருத்தம் பார்க்க : ஆண் பெண் இருவரின் நட்சத்திரம் 22 வது நட்சத்திரமாக அமைதல் கூடாது.
 
பெண்ணின் நட்சத்திரத்தில் இருந்து 27 வது நட்சத்திரம் ஆண் நட்சத்திரம் அமையக் கூடாது.
 
ஆனால், இந்த இரண்டு நட்சத்திரமும் ஒரே ராசியாக அமையுமானால், பொருந்தும். வேறு ராசியாக இருந்தால் பொருந்தாது.
 
உ-ம். பெண்ணின் நட்சத்திரம் பரணி. ஆணின் நட்சத்திரம் அசுவினி.
இரண்டு நட்சத்திரங்களும் மேஷ ராசி. பரணிக்கு அசுவினி 27 வது நட்சத்திரம். என்பதால் பொருந்தும்.
 
உ-ம்: பெண்ணின் நட்சத்திரம் அசுவினி. ஆணின் நட்சத்திரம் ரேவதி.
அசுவினியில் இருந்து ரேவதி 27 வது நட்சத்திரம்.
 
 
ஒன்று மேஷ ராசி. மற்றது மீன ராசி என்பதனால் பொருந்தாது.
 
  1. சித்திரை, வைகாசி, ஆனி, கார்த்திகை, தை, மாசி மாதங்கள் திருமணம் செய்ய ஏற்ற தமிழ் மாதங்கள்.
  2. ஆண், பெண் இருவரின் பிறந்த நட்சத்திரம், திதி, மாதங்களில் திருமணம் செய்ய ஏற்ற காலமல்ல.
  3. ஒரே குடும்பத்தில் மகனுக்கோ, மகளுக்கோ இரண்டு திருமணமும் ஆறு மாத இடைவெளிக்குப் பிறகே செய்ய வேண்டும். இந்த விதி தற்பொழுது கடைபிடிப்பதில்லை!
  4. அண்ணன் , தம்பி இருவரும் ஒரே குடும்பத்து அக்கா, தங்கையை திருமணம் செய்தல் கூடாது.
  5. திருமணம் முடிவு செய்த நேரத்தில், அந்த குடும்பத்தில் இறப்பு நிகழ்ந்து விட்டால், 31 நாட்கள் கழித்தே திருமணம் செய்ய வேண்டும்.
  6. மிருக சீரிஷம், அஸ்தம், மூலம், அனுஷம், மகம், ரோகிணி, ரேவதி, உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, சுவாதி - இந்த நட்சத்திரங்கள் இருக்கும் காலம் திருமணம் செய்ய ஏற்ற நட்சத்திர தினங்களாகும்.
  7. மேலே குறிப்பிட்ட நட்சத்திரங்கள் மணமகன் , மணமகள் இருவருக்கும் இருவரது பிறந்த நட்சத்திரத்தில் இருந்து 3 -5 -7 -12 - 14 - 16 - 21 - 25 - வது நட்சத்திர நாளாக வரக் கூடாது. ஏனெனில் தாரா பலமில்லாத நாளாக அமைந்து விடும்.



  • அமாவாசை திதி திருமணம் செய்ய கூடாது.


  1. தேய்பிறையில் பஞ்சமி திதி வரையிலும் , வளர்பிறையிலும் திருமணம் செய்யலாம்.
  2. திங்கட் கிழமை, புதன், வியாழன், வெள்ளி , ஞாயிறு ஆகிய தினங்களில் திருமணம் செய்யலாம்.

  • வேதை நட்சத்திரத்தில் திருமணம் செய்யக் கூடாது.

        • வேதை நட்சத்திர விபரம்

    • அசுவினி - கேட்டை
    1.  
              • பரணி - அனுஷம்
    • கார்த்திகை - விசாகம்
    • ரோகிணி - சுவாதி
    • புனர்பூசம் - உத்திராடம்
    • பூசம் - பூராடம்
  1. ஆயில்யம் - மூலம்
  2. மகம் - ரேவதி
  3. பூரம் - உத்திரட்டாதி
  4. உத்திரம் - பூரட்டாதி
  5. அஸ்தம் - சதயம்
  6. மிருகசீரிடம் - சித்திரை , அவிட்டம்.
  7. திருவாதிரை - திருவோணம்



பொருத்தமுள்ள நட்சத்திரங்கள்
பூரட்டாதி – அவிட்டம்
புனர்பூசம் – ஆயில்யம்
திருவாதிரை – மூலம்
ரோகிணி – மிருகசீரிடம்
பரணி – ரேவதி
அனுஷம் – கேட்டை
அசுவினி – சதயம்
பூராடம் – திருவோணம்
உத்திரம் – உத்திரட்டாதி
மகம் – பூரம்
கிருத்திகை – பூசம்
ஹஸ்தம் – சுவாதி
சித்திரை - விசாகம்
 

ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடக்க இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் விரைவில் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடக்க இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் விரைவில் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
1. விதேஹி தேவி கல்யாணம்
விதேஹி விபுலாம் ச்ரியம்
ரூபம் தேஹி ஜயம் தேஹி
யசோ தேஹி த்வி÷ஷா ஜஹி.
2. பத்னீம் மனோரமாம் தேஹி
மானோவ்ருத்தனு ஸாரீனீம்
தாரினீம் துர்கஸம்ஸார
ஸாகரஸய குலோத்பவாம்.
3. விதேஹி தேவி கல்யாணம்
விதேஹி விபுலாம் ச்ரியம்
ரூபம் தேஹி ஜயம் தேஹி
யசோதேஹி த்விஷா ஜஹி

மாமியார் -மருமகள் சண்டை தீர பரிகாரம்

கழுத்திலிருந்து மார்பை வரை உள்ள நீளத்திற்கு வெள்ளியிலான சங்கிலியை மாமியர், மருமகள் இருவரில் ஒருவர் தொடர்ந்து அணிந்து வந்தால் மாமியார் -மருமகள் சண்டை தீரும். நடத்தை விசயமாக சந்தேகத்திற்கு உள்ளாகி அவமானப்படும் பெண்களும் இந்த வெள்ளியிலான அணிகலனை அணியலாம். இது போன்ற பிரச்சினைகளை சந்திக்கும் பெண்களின் ஜாதகத்தில் சுக்கிரன்,சந்திரன் சேர்க்கை இருக்கும்

சந்திராஷ்டமம் நாளில் சங்கடம் தவிர்ப்பது எப்படி?

சந்திராஷ்டமம் நாளில் சங்கடம் தவிர்ப்பது எப்படி?

ஜோதிட சாஸ்திரத்தில் நாம் பலன்களையும், வார, ராசி, நட்சத்திர கோசார பலன்களையும், எந்த நேரத்தில் என்ன செய்யலாம்? எந்தெந்த நேரங்களை தவிர்க்க வேண்டும் என்பதையெல்லாம் நமக்கு ஜோதிட சாஸ்திரம் வழிகாட்ட...ுகிறது. அந்த வகையில் சந்திராஷ்டமம் என்ற அமைப்பு சந்திரனின் சுழற்சியால் ஏற்படுகிறது. சந்திரன் ஒருவர் பிறந்த ராசிக்கு எட்டாம் இடத்தில் வரும்போது சந்திராஷ்டமம் என்கிறோம். இது ஒருவருக்கு என்ன செய்யும் என்பதை காணலாம்.

சந்திரனின் முக்கியத்துவம்

ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் பிரதானமாக இருப்பது லக்னமாகும். இதற்கு அடுத்த நிலையை பெறுவது ராசியாகும். ராசி என்பது நாம் பிறக்கும்போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ, அந்த நட்சத்திரம் அமைந்துள்ள வீட்டை குறிப்பதாகும். சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைத்தான் நாம் ராசி என்கிறோம். அதே நேரத்தில் குரு இருக்கும் இடத்தையோ, ராகு-கேது இருக்கும் இடத்தையோ நாம் ராசி என்று சொல்வதில்லை. இதில் இருந்து சந்திரனின் முக்கியத்துவத்தை நாம் தெரிந்து கொள்ளலாம்.

சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துதான் பிறந்தநாள் கொண்டாடுகிறோம். சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துதான் திருமண பொருத்தம் பார்க்கிறோம். சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துதான் ஒருவருக்கு முதல் தசை எது என்று கணிக்கிறோம். சந்திரன் இருக்கும் ராசிப்படிதான் கோசார பலன்களை பார்க்கிறோம். சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தில்தான் கோயிலில் அர்ச்சனை வழிபாடுகள் செய்கிறோம். சந்திரன் மூலம்தான் நம் ஜாதகத்தில் யோகங்கள், அவயோகங்கள் ஏற்படுகின்றன. இத்தகைய முக்கியத்துவம் பெற்ற சந்திரன் மூலம் நமக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு நெருக்கடியான, அவயோக, இடையூறு ஏற்படுகிறது. அதுதான் சந்திராஷ்டமம் ஆகும்.

நீங்கள் பிறந்த ராசிக்கு ஒவ்வொரு மாதமும், சந்திரன் எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தை கடந்து செல்லும். இதையே சந்திராஷ்டமம் என்கிறோம். சந்திரன்+அஷ்டமம்=சந்திராஷ்டமம். சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான் ‘சந்திராஷ்டம‘ காலம் என்கிறோம். அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டம வேளையாகும்.

பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள், மனசங்கடங்கள், மனச்சோர்வு, இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும். மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர்பார்வையாக தனம், வாக்கு, குடும்பம் எனும் இரண்டாம் இடத்தைப் பார்ப்பதால் அந்த ஸ்தான அமைப்புக்களும் பாதிப்படைகின்றன. ஆகையால் இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுபகாரியங்களை செய்யமாட்டார்கள். மணமகன், மணமகள் ஆகிய இருவருக்கும் சந்திராஷ்டமம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள்.

கிரகப்பிரவேசம், பால் காய்ச்சுதல், வளைகாப்பு, நிச்சயதார்த்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கும் சந்திராஷ்டமத்தை தவிர்த்து விடுவார்கள். முக்கிய பேச்சுவார்த்தைகளை தொடங்க மாட்டார்கள். பிரயாணங்கள் செய்வது, புதிய வண்டி வாங்குவது போன்றவற்றை தவிர்ப்பதும் நலம் தரும்.
சந்திராஷ்டம தினத்தன்று சந்திரனால் நம் மனதில் சில மாற்றங்கள் உண்டாகின்றன. எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுகின்றன. டென்ஷன், கோபதாபங்கள், வாக்குவாதம், மறதி, படபடப்பு, சிடுசிடுப்பு உண்டாகிறது.

இதை நாம் அனுபவபூர்வமாக உணரலாம். ஏனென்றால் சந்திரன் மனோகாரகன், மனதை ஆள்பவன். ஆகையால் நம் எண்ணங்களிலும், செயல்களிலும், கருத்துக்களிலும் நிதான மற்ற நிலை உண்டாகிறது. சந்திரன் ஜெனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைந்து இருந்தாலும், உச்சம், ஆட்சி, நீச்சம் போன்ற அமைப்புக்களில் இருந்தாலும் சந்திராஷ்டமத்தால் கெடுபலன்கள் ஏற்படுவதில்லை என சில ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.

சந்திரன் இருக்கும் இடம்

சந்திரன் தினக்கோள் ஆகும். வேகமாக சுற்றும் இந்த கிரகம் முப்பது நாட்களில் (ஒரு மாதத்தில்) 12 ராசிகளை கடந்துவிடும். இப்படி கடக்கும்போது தினசரி சந்திரன் இருக்கும் இடத்தை பொறுத்து நம் குணாதிசயங்கள் வேறுபடுகிறது. அதே நேரத்தில் லாப நஷ்டங்கள், நிறை குறைகள், சிந்தனை, கோபதாபம், உற்சாகம், வீண் அலைச்சல், பயணங்கள், காதல், காமம் என்று கலவையான பலன்கள் உண்டாகிறது. நாம் பிறந்த ராசிக்கு சந்திரன் எங்கெங்கு வரும்போது என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பதை காணலாம்.

சந்திரன் நாம் பிறந்த ராசியில் இருக்கும் போது, மனம் அலைபாயும். சிந்தனை அதிகரிக்கும். ஞாபக மறதி உண்டாகலாம். வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நலம் தரும்.

இரண்டாம் ராசியில் இருக்கும் போது, பணவரவு உண்டு. பேச்சில் நளினமிருக்கும். வேகம், விவேகம் இருக்கும். கவிஞர்களுக்கு கற்பனை வளம் மிகும்.

மூன்றாம் ராசி: சமயோசிதமாக செயல்படுதல், சகோதர ஆதரவு, அவசிய செலவுகள், உற்சாகம்.
நான்காம் ராசி:பயணங்கள், மனமகிழ்ச்சி, தாய்வழி ஆதரவு, உடல் ஆரோக்கியம்.

ஐந்தாம் ராசி: நல்ல எண்ணங்கள், ஆன்மிக பயணங்கள், தெய்வபக்தி, தெளிந்த மனம், தாய்மாமன் உதவி.

ஆறாம் ராசி: எரிச்சல், டென்ஷன், கோபதாபங்கள், மறதி, வீண்செலவுகள், காயம் ஏற்படுதல்.

ஏழாம் ராசி: பயணங்கள், உற்சாகம், நண்பர்கள் சேர்க்கை, சுற்றுலா, பெண் சுகம்.

எட்டாம் ராசியில் இருக்கும் நாளைத் தான் சந்திராஷ்டமம் என்று சொல்கிறோம். இந்நாளில் மவுனம் காத்தல் நல்லது. தியானம் செய்யலாம். கோயில், குளம் என்று சென்று வரலாம். கொடுக்கல், வாங்கல், வீண் விவாதங்களை தவிர்ப்பது அவசியம்.

ஒன்பதாம் ராசி: காரிய வெற்றி, நல்ல தகவல், குதூகலம், ஆலய தரிசனம், முக்கிய முடிவுகள்.
பத்தாம் ராசி: பயணங்கள், நிறை-குறைகள், பணவரவு, அலைச்சல், உடல் உபாதைகள்.
பதினொன்றாம் ராசி: தொட்டது துலங்கும், பொருள் சேர்க்கை, தரும சிந்தனை, அமைதியான மனம்.
பனிரெண்டாம் ராசி: அலைச்சல், டென்ஷன், கைப்பொருள் இழப்பு, உடல் உபாதைகள், செலவுகள்.

உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம நட்சத்திரம் தரப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட நட்சத்திர நாளில் நிதானமாகவும், கவனமாகவும் இருப்பது நலம் தரும். உதாரணமாக அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் அனுஷம் நட்சத்திரம் வரும் நாள் சந்திராஷ்டம
தினமாகும்.

17ம் நட்சத்திரத்துக்கு வரும் சந்திரன்

உங்களுக்குரிய சந்திராஷ்டம தினத்தை எளிதில் தெரிந்துகொள்ள உதவும் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரம் வரும் நாளே சந்திராஷ்டம தினமாகும்.

பிறந்த நட்சத்திரம் - சந்திராஷ்டம நட்சத்திரம்

அஸ்வினி - அனுஷம்
பரணி - கேட்டை
கிருத்திகை - மூலம்
ரோகிணி - பூராடம்
மிருகசீரிஷம் - உத்திராடம்
திருவாதிரை - திருவோணம்
புனர் பூசம் - அவிட்டம்
பூசம் - சதயம்
ஆயில்யம் - பூரட்டாதி
மகம் - உத்திரட்டாதி
பூரம் - ரேவதி
உத்திரம் - அஸ்வினி
அஸ்தம் - பரணி
சித்திரை - கிருத்திகை
சுவாதி - ரோகிணி
விசாகம் - மிருகசீரிஷம்
அனுஷம் - திருவாதிரை
கேட்டை - புனர்பூசம்
மூலம் - பூசம்
பூராடம் - ஆயில்யம்
உத்திராடம் - மகம்
திருவோணம் - பூரம்
அவிட்டம் - உத்திரம்
சதயம் - அஸ்தம்
பூரட்டாதி - சித்திரை
உத்திரட்டாதி - சுவாதி
ரேவதி - விசாகம்