புரட்டாசி சனியன்று ஓம் நாராயணாய நம என்ற எட்டெழுத்து மந்திரத்தைச் சொல்கிறோம். இதிலுள்ள நம என்ற சொல்லுக்கு உனக்கே நான் உரியவன் என்பது அர்த்தம். ஓம்காரமாக விளங்கும் நாராயணனே உனக்கே நான் உரியவன் என்பது மந்திரத்தின் முழுப்பொருள். அதாவது உலகத்தில் வந்து விட்ட பிறகு, என்றோ ஒருநாள் செல்லப்போகிறோம். அவ்வாறு செல்லும் நாளில் நாராயணா! உன்னால் வந்த நாங்கள் உன் இடத்திற்கே திரும்பி வந்து விடுகிறோம் என்று சரணாகதி அடைவதாக அர்த்தம். கலியுகக் கொடுமைகளில் இருந்து தப்பித்து, பூலோகத்தில் சுகமாகவும், நிம்மதியாகவும் வாழ ஓம் நமோ நாராயணாய என்று சொல்வது பொருத்தமானது.
Friday, September 18, 2015
Tuesday, September 15, 2015
கஷ்டமா... ஆண்டவனிடம் மட்டும் சொல்லுங்க!
* நாம் பலவீனர்கள் ஆவோம்.
* நம் பலவீனம் மற்றவர்களுக்குத் தெரிந்தால் நமது பலத்தை இழப்பதுடன், அவர்களது அடக்குமுறைக்கும் ஆளாவோம்.
* நமக்கு கிடைக்கும் வருமானம், புகழ் ஆகியவற்றைக் கண்டு பிறர் மகிழ்வதை விட பொறாமையே கொள்வர். அவர்களின் பார்வை நம் வாழ்வில் பின்னடைவை ஏற்படுத்தும்.
* பிறரிடம் கருத்துப் பரிமாற்றம் செய்தால், நம் பிரச்னைகளின் தீவிரம் குறையும் என்பது சரியான கருத்தாக முடியாது. கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
* திருமணத்துக்கு முன்பு தாயிடம் கருத்து பரிமாற்றம் செய்யலாம்.
* இதையெல்லாம் விட நமது சோதனைகள், வேதனைகள், இன்பங்கள்,நாம் பட்ட அவமானங்கள் எல்லாவற்றையும் ஆண்டவனிடம் மனம் திறந்து சொல்லுங்கள். உங்களுக்கு மனஅமைதி உறுதியாகக் கிடைக்கும்.
* மனஅமைதி இல்லாத போது, நல்ல நுõல்களைப் படியுங்கள். நம்பிக்கை தரும் நுõல்களைப் படியுங்கள். ஆன்மிக சொற்பொழிவுகளுக்குச் சென்று, நல்லுரைகளைக் கேளுங்கள். மனம் ஆனந்தமடையும்.
விநாயகருக்கு தோப்புக்கரணம் போட்டு, நெற்றியில் குட்டி வழிபடுவது ஏன்?
விநாயகருக்கு நாம் தோப்புக்கரணம் போட்டு, நெற்றியில் குட்டிக் கொள்கிறோம். இதனால் உடலில் சுறுசுறுப்பு ஏற்படுகிறது. தியானம் செய்பவர்கள் தலையில் குட்டி விநாயகரை வழிபட்டால் மன ஒருமைப்பாடு ஏற்படும் என்பது நம்பிக்கை. இதற்கு ஒரு புராணக்கதை உண்டு.அகத்தியர் கொண்டுவந்த கமண்டலத்தை காகம் வடிவெடுத்து வந்த விநாயகர் கவிழ்த்தார். பின், ஒரு அந்தணச் சிறுவனின் வடிவத்தில் அகத்தியர் முன்பு வந்து நின்றார். கோபம் கொண்ட அகத்தியர் விநாயகரின் தலையில் குட்டினார். அப்போது விநாயகர் சுயரூபம் எடுத்து உலக நன்மைக்காககாவிரி நதியை உருவாக்க அவ்வாறு செய்ததாக கூறினார். அகத்தியர் தன் தவறுக்காக வருந்தி தன் தலையிலேயே குட்டிக்கொண்டார். அன்று முதல் விநாயகருக்கு தலையில் குட்டி வழிபடும் வழக்கம் ஏற்பட்டது. கஜமுகாசுரன் என்ற அசுரன் தேவர்களை அடிமைப்படுத்தி தனக்கு தோப்புக்கரணம் போட வைத்தான். விநாயகர் அவனை அழித்து தேவர்களை பாதுகாத்தார். அசுரன் முன் போட்டதோப்புகரணத்தை விநாயகர் முன்பக்தியுடன் தேவர்கள் ÷ பாட்டனர்.அன்று முதல் தோப்புக்கரணம் போடும் பழக்கம் வந்தது. அறிவியல் ரீதியாக தோப்புக்கரணம் போடுவதாலும், நெற்றியில்குட்டிக் கொள்வதாலும் நம் உடலில் உள்ள சுஷûம்னா என்ற நாடிதட்டி எழுப்பப்படுகிறது. அதிலிருக்கும் அமிர்த கலசம் மேலே எழும்பி அமிர்தம் முழுவதும் உடலில் பரவுகிறது.இதனால் மன எழுச்சியும்,சுறுசுறுப்பும் உண்டாகிறது.
Sunday, August 16, 2015
முன்னோருக்கு திதி கொடுப்பது எதற்காக?
வரும் 14ம் தேதி ஆடிஅமாவாசை வருகிறது. அன்று முன்னோர்களுக்கு திதி கொடுப்பது பற்றி விளக்கம் அளிக்கிறார் சத்குரு ஜக்கிவாசுதேவ்.அவர் சொல்வதைக் கேளுங்கள்.உங்கள் தாத்தாவோ, அப்பாவோ இறந்து விட்டார்கள். அவர்கள் உயிரோடு இருந்த காலத்தில் அவர்களை நீங்கள் விரும்பலாம், விரும்பாமலும் இருக்கலாம். ஆனால், இந்த உடலைக் கொடுத்தவர்கள் அவர்கள் தானே. நாம் உலகில் வாழ்வதற்கு முக்கியமான உடலைக் கொடுத்ததற்கு இதயத்தில் நன்றியுணர்வு காட்ட வேண்ட வேண்டும். அவர்களை நீங்கள் ஆணியில் அடித்து சுவரில் தொங்க விட்டு (போட்டோ) மறந்துவிடுகிறீர்கள். குறைந்த பட்சம் வருடத்திற்கு ஒருமுறையாவது அவர்களின் நினைவாக ஏதாவது செய்ய வேண்டும். அவர்களின் நினைவு நாளில் காகம், பசு போன்றவற்றிற்கு உணவிடுவது மிகவும் நல்லது. அவ்வாறு செய்வது உங்களுக்கு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். இந்நாளில் 50, 100 ஏழைகளுக்கு நீங்கள் உணவுஅளிக்கலாம். இப்படிசெய்தா, இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையுமோ, அடையாதோ தெரியாது. ஆனால், நிச்சயம் உங்களின் ஆத்மா சாந்தி பெறும். அதுதான் முக்கியமானது.வாழ்க்கை முடிந்தவர்களின் ஆத்மாவைப் பற்றிச்சிந்திப்பதை விட உங்களின் ஆத்மா நன்மை பெறவே, இதுபோன்ற சடங்குகள் உருவாக்கப்பட்டன.
வேண்டுதல் நிறைவேற எவ்வாறு வழிபட வேண்டும்!
பரிகார பூஜை செய்வதற்காக நவகிரககோயில்களுக்குச் செல்கிறோம் அங்கே கடைப்பிடிக்க வேண்டிய நியதிகள். எல்லா கோயில்களுக்குமே இவை பொருந்துபவை. கோயில் நுழைவாயிலில் கை- கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம்.
முதல்நாள் இரவே பரிகாரத் தலத்திற்குச் சென்றுவிடுவது நல்லது. போகும்போதோ வரும்போதோ உறவினர் வீடு மற்றும் பிற தலங்களுக்குச் செல்லவேண்டாம். புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பும் பின்பும் அசைவ உணவு, மது இவற்றைத் தவிர்ப்பீர். மற்ற விஷயங்களிலும் கட்டுப் பாடு தேவை.
பெண்கள் வீட்டுக்கு விலக்காகி ஏழு நாட்கள் கழித்துச் செல்வது நல்லது. யாரிடமும் கடன் வாங்கிச் செல்லவேண்டாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பூஜைக்குச் கென்று சொல்லி வாங்காதீர். போகும்போதோ வரும்போதோ குல தெய்வத்தை வழிபடலாம்; தோஷமில்லை. தர்ப்பணம் கொடுக்காதவர்களுக்கு எந்த பூஜையும் பலன் தராது.
பரிகாரங்கள் அனைத்தையும் தாங்களே முன்னின்று செய்யவும். பொழுதுபோவதற்காக (சுற்றுலா) கோயில் செல்லாதீர். தங்கள் சக்திக்கேற்றபடி பூ ஜை செய்ய வேண்டும். வசதியுள்ளவர்கள் சாதாரண பூஜை செய்தால் பலிக்காது; எளியவர்கள் கடன் வாங்கி பெரிதாகச் செய்ய வேண்டாம். பூ ஜைக்கு அமாவாசை, பவுர்ணமி, தங்கள் பிறந்தநாள், சித்திரை 1, ஜனவரி 1 போன்றவை உகந்தவை.
தலங்களுக்குச் செல்வதற்குமுன் ஒரு நாளும், பின் ஒரு நாளும் இறந்தவர் வீட்டிற்குச் செல்லாதீர். நெருங்கிய உறவினர் இறந்துவிட்டால் அர்ச்சகர் அல்லது ஜோதிடரைக் கேட்டு, தகுந்த காலம் கடந்து தரிசிக்க வேண்டும். வசதியுள்ளவர்கள் புத்தாடை அணிந்து செல்லலாம். மாலை நேர பூஜைக்கு காலை அணிந்த உடையை அணியாதீர். பொருட்கள் தரமாக இருந்தால் அனைத்தையும் பரிகார தலத்தில் வாங்குவது சிறந்தது. முதலில் விநாயருக்கு அறுகம்புல் வைத்து பிரார்த்தித்து, ஒரு தேங்காயை வலது கையில் வைத்துக்கொண்டு ஒரு பிரதட்சணம் வந்து, பூஜையைத் துவங்கி ஒதுக்கப்பட்ட இடத்தில் அந்த சிதறுகாயை உடையுங்கள்.
கோயிலுக்குள் யாருடனும் பேசவேண்டாம், செல்போன்களைத் தவிர்க்கவும். வெற்றிலைக்கு நுனியும், வாழைப் பழத்திற்கு காம்பும் இருக்க ÷ வண்டும். சிதறு காயைத் தவிர மற்ற காய்களை மஞ்சள் தடவி (இளநிற மஞ்சள்) எடுத்துச் செல்லுங்கள். மண்விளக்குகளில் ஐந்து இடத்தில் மோதிர விரலால் மஞ்சள், குங்குமம் வைக்கவேண்டும் இதற்கு சந்தனம் உபயோகிக்ககூடாது. பூஜைப் பொருட்களை கைகளில், பிளாஸ்டிக் பைகளில் கொடுக்காமல் பித்தளை எவர்சில்வர் தாம்பாளம் கூடை இவற்றில் வைத்துக்கொடுங்கள்.
பால்கோவா, இனிப்புகள் அவல் பொரி, கடலை இவற்றையும் நைவேத்தியமாகப் பயன்படுத்தலாம். திரைபோட்டபின் பிரதட்சிணம் வர ÷ வண்டாம். விநாயகருக்கு ஒன்று, தனி அம்பாளுக்கு இரண்டு சிவனைச் சார்ந்த அம்பாளுக்கு மூன்று என்ற கணக்கில் வலம்வாருங்கள். ஒரு பி ரதட்சிணம் முடிந்ததும் கொடி மரத்தடியில் கைகூப்பி நின்று வணங்கி பின் அடுத்ததைத் துவங்கவும். கொடிமரத்தடியைத் தவிர வேறெங்கும் விழுந்து வணங்கக்கூடாது.
பிற தீபங்களிலிருந்து உங்கள் தீபத்தை ஏற்ற வேண்டாம். நெய் அல்லது எண்ணெய்யை பிற விளக்குகளில் ஊற்ற வேண்டாம். அபிஷேக ஆராதனைகளும், ஹோமங்களும் உயர்வு தரும். பரிகாரம் செய்யும் நேரத்தில், பரிகாரம் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் உறங்கக்கூடாது. பூஜை செய் துகொண்டிருக்கும் சமயம், யாராவது பிரசாதம் கொடுத்தால், அதைப் பெற்றுக்கொண்டு பூஜை முடிந்தபின் உண்ணவும். பரிகாரம் செய்தபின் பூஜை ப்பொருட்களை அங்கேயே கொடுத்து விடுவது நல்லது. பசுமாட்டிற்கு வாழைப்பழம், மற்றவற்றை அர்ச்சகரிடம் கொடுக்கலாம்; சிப்பந்திகளிடமும் கொடுக்கலாம்.
பிரத்யேக கனி வகைகளை வைத்துப் படைப்பது நல்லது. எலுமிச்சை, மாதுளை, ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, மா முதலியன. வேகமாக பி ரதட்சிணம் வராமல் பொறுமையாக வருவது நல்லது. பலனை முழுமையாகப் பெற ஒரு வருட காலம் வரை ஆகலாம். நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒருநாள். ஒவ்வொரு கோயிலிலும் தீபம் ஏற்றுவதற்கென்றுள்ள தனியான இடத்தில் ஏற்றவும் சிலைகள் அருகில் ஏற்றக்கூடாது. சுவாமியைத் தொடாமல் பூஜிக்கவும். பூஜை செய்த பொருட்கள் பூஜை செய்யாதவற்றுடன் சேர்த்துவிடக்கூடாது.
நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களுக்காக ஐந்து மூக்கு தீபம் ஏற்ற வேண்டும். திரி கனமாக இருந்தால் தீபம் நின்று எரியும் தீபம் ஏற்றிய பின் விளக்குகளை தூக்கி தீபம் காட்டுவது, நகர்த்துவது கூடாது. ஒரு கையில் விபூதி, குங்குமம் வாங்கக் கூடாது. இடது கையை கீழே வைத்து வலது கையை மேலே வைத்து பவ்யமாகப் பெற்றுக் கொள்ள வேண்டும். விபூதி குங்குமத்தை பேப்பரில் வாங்கக்கூடாது. பெற்ற விபூதி, குங்கும பிரசாதத்தை கீழே கொட்டாமல் வீட்டிற்கு பேப்பரில் மடித்து எடுத்துச் செல்லவும். அறுகம்புல், வில்வம், தாமரைப்பூ, சம்பங்கி, சாமந்தி, பச்சை மரிக்கொழுந்து, சங்குப்பூ, நீலப்பூ, துளசி, மல்லிகை, ரோஜா, பன்னீர் ரோஜா, விருட்சிப்பூ, போன்ற பூவகைகளால் பூஜிப்பது நல்லது.
காளி, துர்க்கா, முருகனுக்கு பஞ்ச அரளிப் பூக்கள் விசேஷமானவை. அம்பாளுக்கு மெருன் நிற குங்குமமே சிறந்தது. சாதாரண மாலையை வா ங்காமல் பாதம் வரையிலுள்ள வாகை மாலையை வாங்குங்கள். சுவாமி சன்னிதியில் ஸ்தோத்திரங்கள் பாடுவது பிறருக்கு தொல்லையாக அமையும். அமைதி தேவை.
கஜ பூஜை, ஒட்டக பூஜை, கோ பூஜை, சிப்பந்திகளுக்கு தட்சிணை தருவது போன்றவை பூஜையின் பலனை அதிகரிக்கும் ஜீவகாருண்யம் உயர்வு த ரும். பிரதான மூர்த்திகளை மட்டுமின்றி பரிவார தேவதைகள் என வழங்கப்படும் பிற சன்னிதிகளிலும் வழிபாடு தேவை. நெய் தீபமேற்றி உதிரி புஷ்பங்களை சமர்ப்பிக்கலாம். தல வரலாறு புத்தகம் வாங்கி தலம் சம்பந்தப்பட்ட அனைத்து விசேஷங்களையும் தெரிந்துகொள்வது பூஜைக்கு உதவும். விபூதி, குங்குமம் வாங்கும் முன்பே அர்ச்சகருக்கு தட்சிணை கொடுத்துவிட வேண்டும்.
சங்கல்பம் மிக முக்கியம். கோபுர தரிசனம் கோடி நன்மை. சண்டிகேஸ்வரருக்கு கடைசிப் பிராகாரத்தில் தீபமேற்றி வழிபடுங்கள். சொடுக்கப் ÷ பாடாதீர். கொடி மரத்தடியில் வடக்குப் பார்த்து விழுந்து வணங்கி பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும். பிறகு சற்று விலகி கீழே அமர்ந்து சற்று நேரம் தியானம் பண்ணி பிரார்த்தனையை நிறைவு செய்யவும். ஆரம்பத்தில் விநாயகரிடம் விடுத்த வேண்டுகோள்தான் இறுதிவரை இருக்க ÷ வண்டும்; மாறக்கூடாது. பிரார்த்தனைகள் ஒன்று அல்லது இரண்டுக்கு மேல் இருக்கக்கூடாது. காவல் தெய்வங்கள் இருந்தால் அவர்களை வழிபட்ட பிறகே விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும். இத்தகைய பூஜைகள் காரியசித்தி பூஜைகள்தானே தவிர, கர்மவினைகளை முற்றிலும் மாற்றாது. ஆனால் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும். பூஜைக்கு முன்னுரிமை பெறுபவை முறையே பித்ருக்கள், குலதெய்வம், விநாயகர், தசாநாதன், பி ரச்சினை அல்லது கோரிக்கை சார்ந்த தெய்வம்.
நவகிரகங்கள் சம்பந்தமின்றி நேரடியாக செயல்படும் ஆற்றல் முனீஸ்வரர், அனுமன், பசு, யானைக்கு உண்டு. தோஷ நிவர்த்திப் பூஜைகளை 30 வ யதிற்குள் செய்துவிடுங்கள். இயல்பான - முழுமையான நம்பிக்கையுடன் பூரண மன அமைதியுடன் பிரார்த்தனை செய்யுங்கள். சின்னச்சின்ன பூ ஜைகளைவிட அனைத்தும் அடங்கிய முறையான பிரத்யேக பூஜைதான் பலன்களை அள்ளித் தருகின்றன. ஆண்டவன் நினைத்தால் மட்டுமே பூ ஜைக்குரிய அனுமதி கிடைக்கும். ஆண்டவனை நினைத்துக்கொண்டே இருங்கள். காலம் கனியும்போது ஆண்டவன் நம்மை நினைப்பார்.

பூஜையில் வைக்கும் சுண்டலின் முக்கியத்துவம் தெரியுமா!
பூஜையின் போது சுண்டலுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. பொதுவாக இறைவனை நினைத்து உபவாசம் இருப்பதே மேலானது. இந்நேரத்தில் புரதச்சத்து மிகுந்த சமச்சீர் உணவான சுண்டலை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியம். நீராவியில் வேக வைப்பதால் சத்து குறையாது. நோயாளிகளுக்கும் கருவுற்ற பெண்களுக்கும் சுண்டல் அற்புதமான உணவு. மேலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான தானிய வகை சுண்டல் சமைத்தால், நவக்கிரகங்களையும் திருப்திபடுத்தலாம்.
ஞாயிறு (சூரியன்)- அவித்த கோதுமை கலந்த சுண்டல், திங்கள் (சந்திரன்)- பாசிப்பயிறு, அப்பளம் கலந்த புட்டு, செவ்வாய்- துவரை சுண்டல், புதன்- பயறு சுண்டல், வியாழன்- கொண்டைக்கடலை சுண்டல், வெள்ளி- மொச்சை சுண்டல், சனி- எள் சேர்த்த சுண்டல், ராகு- உளுந்து சுண்டல், ÷ கது- கொள்ளு சுண்டல்.

தமிழகத்தில் கோவில்கள் அதிகம் இருப்பது ஏன்?
64 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள் என அருளாளர்கள் பிறந்த புண்ணிய பூமி தமிழகம். திருத்தலங்களுக்கு நேரில் சென்று பதிகம், பாசுரங்களைப் பாடி மக்கள் மத்தியில் பக்திப்பயிர் வளர்த்தனர். தமிழ் இலக்கியத்தில் பக்தி பாடல்களே மிக அதிகம். கோவில் வழிபாடு என்பதுதமிழகத்தில் அன்றாட வாழ்வின் அம்சமாக இருப்பதால், கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற சுலவடை உள்ளது.
Subscribe to:
Posts (Atom)