நவக்கிரகங்களில் தலைமை வகிப்பவர் சூரியன். இவருக்குரிய ஞாயிறு, சப்தமி திதியில் சூரியமந்திரம் சொல்லி வழிபட்டால் ஆரோக்கியம் மேம்படும். வியாசரால் இயற்றப்பட்ட இந்த மந்திரம் பாவத்தைப் போக்கும் சக்தி மிக்கது. தினமும் நீராடியபின், கிழக்கு நோக்கி நின்று இதை 12 முறை ஜெபித்து வர எல்லா நன்மையும் உண்டாகும். ஜபாகு சும சங்காஸம்காஸ்ய பேயம் மகாத்யுதிம்தமோரிம் சர்வ பாபக்னம்ப்ரண தோஸ்மி திவாகரம்பொருள்: காஸ்யப முனிவரின் மகனாக அவதரித்தவரே! செம்பருத்தி மலர் போல சிவந்த மேனி கொண்டவரே! பேரொளி உடையவரே! தரிசிப்பவரின் பாவச்சுமையை ”ட்டெரிப்பவரே! இருளின் பகைவரே! சூரியதேவரே! உம்மைப் போற்றுகிறேன்.
குழந்தை, குருநாதர், தெய்வம் இந்த மூன்றையும் வெறும்கையுடன் செல்வது, தரிசிப்பது கூடாது. இயன்ற வரையில்பழங்களையாவது எடுத்துச் செல்ல வேண்டும் என்கிறது நீதி சாஸ்திரம். எனவே, சுவாமி தரிசனத்திற்குச் செல்லும் போது குறைந்த பட்சம் விளக்கேற்ற கொஞ்சம் எண்ணெய், கதம்பம், உதிரிப்பூ, ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்லவேண்டும்.
ஸிம்ஹீம் ஸிம் ஹமுகீம் பகவத;ஸ்ரீபைரவஸ்யோல்லஸத்சூல ஸ்தூல கபால பாச டமருவ்யக்ரோக்ர ஹஸ்தாம்புஜாம்தம்ஷ்ட்ராகோடி விசங்கடாஸ்யகுஹராம்ஆரக்த நேத்ரத்ரயீம்பாலேந்து த்யுதிமௌளிகாம் பகவதீம்ப்ரத்யங்கிராம் பாவயேஅன்பரிடம் பேரன்பு கொண்டவள் பிரத்யங்கிரா. இவளைத் துதிப்பவர்க்கு பகை, எதிர்ப்பு, போன்றவை தாமாகவே விலகும். மனோபலம் மிகும். தினமும் காலையில் குளித்துவிட்டு மனதில் ஸ்ரீப்ரத்யங்கிரா தேவியை எண்ணிக்கொண்டு 108 முறை (குறைந்தது 12 முறை) இந்தத் துதியைச் சொல்லவும். அஷ்டமி, அமாவாசை தினங்களில் அம்பிகைக்கு செவ்வரளி அல்லது சிவப்பு மலர்களால் மாலை சூட்டி அர்ச்சிப்பது சிறப்பு.
உத்கீத ப்ரணவோத்கீதஸர்வ வாகீச்வரேச்வரஸர்வவேத மயோசிந்த்யஸர்வம் போதய போதயகலைமகளுக்கு குரு ஹயக்ரீவர். இவர் குதிரை முகம் கொண்டவர். கடலூர் அருகிலுள்ள திருவந்திபுரம் சிங்கப்பெருமாள் கோயில் அருகிலுள்ள செட்டிபுண்யம்; சென்னை நங்கநல்லூர் ஆகிய இடங்களில் இவருக்கு கோயில்கள் உண்டு. கல்வியில் சிறப்படைய தினமும் காலை, மாலை இம்மந்திரத்தைக் கூறி வந்தால் கல்வியில் உயர்வடையலாம். வியாழக்கிழமை தினங்களில் ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சமர்ப்பிப்பது விளக்குக்கு நெய் சேர்ப்பது. 12 முறை வலம் வந்து வழிபடுவது போன்றவை நற்பலனை அதிகரிக்கும்.
ஓம் நமோ பகவதே வாசுதேவாயதன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாயசர்வாமய வினாசாயத்ரைலோக்ய நாதாயஸ்ரீமஹாவிஷ்ணவே நம;தன்வந்திரி விஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படுகிறார். திருப்பாற்கடலைக் கடையும்பொழுது அமிர்த கலசத்துடன் வந்தவர். சங்கு, சக்கரம், அமிர்த கலசம், அட்டைப் பூச்சி இவற்றை தம் கரங்களில் கொண்டு துலங்குபவர் தன்வந்திரி. இவருக்குரிய இந்த மந்திரத்தை தினமும் காலை மாலை இரு வேளைகளிலும் குறைந்தது 12 முறை சொல்லி வருவது சிறந்த பலனளிக்கும். அருகில் இவருடைய சன்னிதி இருந்தால் நெய் தீபம் ஏற்றி, 12 முறை வலம் வருவது கூடுதல் பலன்.
நமஸ்தே அஸ்து பகவன்விச்வேஸ்வராய மஹாதேவாயத்ரயம்பகாய - த்ரிபுராந்தகாயத்ரிகாக்னி காலாயகாலாக்னி ருத்ராய நீலகண்டாயம்ருத்யுஞ்ஜாய ஸர்வேஸ்வராயஸதாசிவாய ஸ்ரீமன்மஹாதேவாய நம:வசதிகள், அதிகாரம், அழகு, புகழ் என் எவ்வளவு இருந்தாலும் அதை அனுபவிக்க இரண்டு வேண்டும். ஒன்று: ஆரோக்கியம், இரண்டு: ஆயுள், அவற்றை வழங்குபவர் சிவன். அவரை துதிக்க வேண்டிய மந்திரம் இது. ஜாதக ரீதியாக விபத்து, கண்டம் முதலிய சூழல்களில், இந்த மந்திரத்தை எப்போதும் சொல்லிவருவது, மிகப்பெரும் பலன் தரும். மருத்துவமனையில் ஆபத்தான தருணங்களில் அனமதிக்கப்பட்டவர்களுக்காக அருகில் அமர்ந்து மானசீகமாக 108 முறை ஜபித்தால், நிச்சயம் ஆரோக்கியம் மேம்படும்.
இதுவும் சாந்தி மந்திரத்தில் ஒன்று. பிரபஞ்சத்தில் எங்கும். எல்லாவற்றிலும் முழுமை உண்டாகட்டும் என்பது இதன் பொருள். முழுமை எப்போது வாய்க்கும்? தேடல்கள் அனைத்தும் கைகூடிய நிலையில்தான் முழுமை ஏற்படும். அதாவது, யாருக்கும் எந்தவிதக் குறையும் இல்லாத நிலை. அப்படி எல்லாவிதமான தேடல்களும் விருப்பங்களும் எல்லாருக்கும் கைகூடி விடுமா? முடியாது.அப்படியானால், இது எப்படி சாத்தியம்? எப்போது அது ஏற்படும்? எவை அத்தியாவசியமோ அவற்றைத் தவிர, மற்றவற்றில் ஆசையோ, கவனமோ கொள்ளாமல் இருக்கும் போதுதான் இது சாத்தியமாகும். அதன் விளைவாக நம் தேவைகள் போதும் என்கிற நிறைவு மனத்தில் உண்டாவது தான் முழுமையை ஏற்படுத்தும். அந்த மனநிறைவு எல்லா உயிர்களுக்கும் ஏற்படட்டும் என்பதுதான் இந்தப் பிரார்த்தனையின் நோக்கம்.