Monday, November 3, 2014

செவ்வாய் தோஷம் என்றால் என்ன.! திருமணத்திற்கு தடையா, இல்லையா.!!

செவ்வாய் தோஷம் என்றால் என்ன.! திருமணத்திற்கு தடையா, இல்லையா.!!

கல்யாணத்திற்கு பெரும் தடையாக இருக்கும் முக்கிய தோஷமாக இது கருதப்படுகிறது. ஆனால் இந்த செவ்வாய் தோஷம் ஆணுக்கும், பெண்ணுக்கும் இருந்தால் திருமணம் செய்யலாம்.
ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து மற்றொருவற்கு செவ்வாய் தோஷம் இல்லை எனில் அவர்களுக்கு திருமணம் செய்யக்கூடாது என சோதிடம் கூறுகிறது.
லக்கனம், சந்திரன், சுக்கிரன் முதலியவைகளுக்கு 2,4,7,8,12,ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாக கருத வேண்டும். அப்படி மீறி திருமணம் செய்தால் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு செவ்வாய் தெசை நடைபெற்றால் அக்காலத்தில் துணைவர் துணைவியை இழக்க வேண்டிய நிலை வரும் என சோதிடம் கணிக்கிறது.
2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் உள்ள எல்லோருக்கும் செவ்வாய் தோஷம் என்று கூறிவிட முடியாது.
இதற்கு சில விதிவிலக்குகள் உள்ளன.
மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் தோஷம் வலிமை குன்றி தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.
காரணம் என்னவென்றால் சம்பந்தப்பட்ட வீடுகளில் செவ்வாய் ஆட்சி, உச்சம், நீசம், பெற்று இருப்பதால் தோஷம் குன்றும்.
குரு, சூரியன், சனி சந்திரனுடன் சேர்ந்திருந்தால் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.
சூரியன், சந்திரன், குரு, சனி, ஆகியவற்றால் பார்க்கப்பட்டால் பாவமில்லை என சோதிடம் கூறுகிறது.
சிம்மம் அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.
2 -ம்  இடம் மிதுனம், அல்லது கன்னி ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.   
4 - ம் இடம் மேஷம், விருச்சிகம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.
7 - ம் இடம் கடகம், மகரம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.
8 - ம் இடம் தனுசு, மீனம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.

இரண்டும், இரண்டிற்கு மேற்பட்ட தாரம் ஏற்படக்காரணம் என்ன  

7-ம் அதிபதி கெட்டு கெட்டவர்கள் வீட்டில் அமையப்பெற்றால் இருதார யோகம் உண்டு
7-ம் அதிபதி ராகுவுடன் சேர்க்கை பெற்றாலோ அல்லது
7-ம் இடத்தில் அசுபர் இருந்தாலோ இரண்டு அசுபர்கள் 2-ம்இடத்தில் அமைந்தாலோ
7-ம் அதிபதி 10-ல் அமையப் பெற்று ஆட்சி, உச்சம், நட்பு பெற்று10-ம் அதிபதியால் பாக்கப்பட்டாலோ
11-ம் வீட்டில் இரண்டு வலிமையான கிரகங்கள் அமையப் பெற்று இருந்தாலோ
7-ம் அதிபதியும் சுக்கிரனும் இணைந்து இருந்தாலோ அம்சத்தில் சேர்ந்து காணப்பட்டாலோ
7-ம் அதிபதி கெட்டு 11-ல் இரு கிரகங்கள் அமையப் பெற்றிருந்தாலோ
7-ம் இடத்தில் சுக்கிரன், சனி இணைந்து காணப்பட்டாலோ
சுக்கிரன் இரட்டை ராசியில் அமையப்பெற்று அந்த வீட்டிற்கு அதிபதி உச்சம் பெற்று 7-ம் அதிப்தி ஆட்சி பெற்று இருந்தால் இரண்டும், இரண்டிற்கு மேற்பட்ட தாரங்கள் உண்டாகின்றது. 7-ம் இடத்தில் எத்தனை சுபகிரகங்கள் உண்டோ அத்தனை தாரங்கள் எனக் கொள்க.

விதவைப் பெண்
7-ம் இடத்தில் உள்ள செவ்வாய் சூரியன் சேர்கை பெற்றால் அவள் விதவையாவாள்.
மூன்று அசுபர்கள் 7-ம் இடத்தில் அமையப்பெற்றால் அந்தப் பெண் மாங்கல்ய பலம் இழந்து விடுவாள்.
8ம் இடமான மங்கல்ய ஸ்தானத்தில் செவ்வாய், சனி, ராகு, கேது,போன்ற அசுபர்கள் அமையப்பெற்றாலும் விதவையாகி விடுவாள்.
7-ம் இடத்தில் சனி, செவ்வாய் போன்ற அசுபர்கள் இணைது இருதால் இளவயதில் மாங்கல்ய பலம் இழ்க்க நேரிடும்.
விவாகரத்து
மங்கையர்களின் ஜாதகத்தில் 7-ம், 8-ம் இடங்கள் கெட்டிருந்தாலும்
லக்கினாதிபதி,  7-ம் இடத்திற்கு அதிபதி 6, 8 போன்ற மறைவிடத்தில் இருந்தாலும்
12-ம் இடத்தில் ராகு, 6-ம் இடத்தில் கேது அமையப் பெற்ற பெண்களும்
7-ம் இடத்தில் நீச கிரகம் இருந்து சுபரால் பார்க்கப்பட்டாலும் விவாகரத்து அமையப் பெறும்
6-ம் வீடும், 7-ம் வீடும் தரும் களத்திர தோஷம்
திருமணம் என்றால் உடனே நினைவுக்கு வருவது 7-ம் வீடு தான். ஏனென்றால் அது களத்திர ஸ்தானம் என்றழைக்கப்படுகிறது.  7-ம் வீடு களத்திர ஸ்தானமென்றால் 7-ம் வீட்டிற்குப் 12-ம் வீடான6-ம் வீடு திருமண பந்தத்திற்கு எதிர்மறையான பலனைக் கொடுக்கும் வீடாகும்.  தம்பதியர்க்குள் கருத்து வேற்றுமை, பிரிவு,ஆகியவை களைக் கொடுக்கும்.  ஆகவே திருமணப் பொருத்தம் பார்க்கும்போதே 7-ம் வீடும், 6-ம் வீடும் சம்பந்தப்பட்டு இருக்கிறதா எனப் பார்த்து ஜாதகங்களைச் சேர்த்தல் நலம்.
வெறும் பத்துப் பொருத்தங்களை மட்டும் பார்த்து ஜாதகங்களை இணைப்பது அவ்வளவு நல்லது அல்ல; சிலர் தசப் பொருத்தம் மட்டும் பார்ப்பர்; சிலர் சமசப்தமம் இருந்தால் மட்டும் போதுமென்று ஜாதகங்களை இணைப்பர். சிலர் நட்சத்திர ஆதிக்க பலம் உள்ளவைகளான மிருகசீரிஷம், மகம்,சுவாதி, அனுஷம் ஆகிய 4 நட்சத்திரங்களுக்கும் தசப்பொருத்தம் தேவை இல்லை என்று ஜாதகங்களைச் சேர்ப்பார்கள். நாம் 6-ம் வீடும், 7-ம் வீடும் சமமந்தப் பட்டால் எவ்வாறு பாதிப்புக்களை, பாதகங்களை ஏற்படுத்துகின்றன என்று பார்ப்போம்.


undefined


உதாரண ஜாதகம் - 1 

 சூரி/
 சனி
 சுக்/
 ராகு
     11
     12
 புதன்
          ராசி
   ல/குரு
 சந்திர
 
     2

       6
      5
  செவ்/
கேது
      3









         2
 புதன்
       4
  சந்தி        
ல/ கேது
 
       அம்சம்
  குரு
சூரி 
   ராகு
11
செவ்/ சுக்
  சனி
         8








உதாரண ஜாதகம் எண் 1-ஐப் பாருங்கள்.
இது கடக லக்கின ஜாதகம். லக்கினத்தில் குரு. 7-ம் வீட்டில் சந்திரன். இது கஜகேஸ்வரி யோகம்.  ஆகவே மிகுந்த நல்ல பலனைக் கொடுக்கும் என்று கூறலாம். ஆனால் உண்மையில் அவ்வாறில்லை.  திருமணமாகி சில மாதங்கள் தான் கணவன்,மனைவியாக வாழ்ந்தனர்.  அதற்குப் பின் பிரிவுதான். திரும்பவும் அவர்கள் சேரவே இல்லை.  இதற்குக் காரணம் என்ன  7-ம்வீட்டிற்கு குருவின் பார்வை. குரு பார்க்கக் கோடிப் புண்ணியம் அல்லவா என்று நீங்கள் கேட்க்கலாம். குருவின் பார்வை நம்மையைச் செய்யவில்லை.
மாறாகத் தீமையைத்தான் செய்து இருக்கிறது. எப்படி குரு 6-ம்வீட்டிற்கு அதிபதியல்லவா 6-ம் வீடு 7-ம் வீட்டிற்கு எதிரிடையான பலனைக் கொடுக்க வேண்டுமல்லவா 7-ம் வீடு திருமணமென்றால் 6-ம் வீடு பிரிவினை அல்லவா ஆக குருவின் பார்வை திருமண வாழ்க்கையில் பிரிவினையைக் கொடுத்து விட்டது. அதைத் தவிர செவ்வாய் 7-ம் வீட்டை வேறு பார்க்கிறார். ஆக இருவரும் சண்டை போட்ட்டுக் கொண்டு பிரிந்து விட்டனர்.
உதாரண ஜாதகம் - 2
         2
 செவ்
     4
  சுக்/ ராகு   
ல/ குரு 
       ராசி
சூரி/
புதன்
    12
சந்தி    
கேது
    10
 சனி
    8










         2
 
 சனி/
  ராகு
        4
 சுக்கி   
  ல/
சூரிய 
       அம்சம்
   செவ்
       12

    7 

       11
      10
  குரு/
கேது
  புத்/
  சந்தி










இரண்டாம் ஜாதகத்தை பாருங்கள்.
இது கும்ப லக்கின ஜாதகம். லக்கினத்தில் குரு. 7-ல் சந்திரன். இதுவும் கஜகேஸ்வரி யோக ஜாதகம் தான். உடனே களத்திர ஸ்தானத்தில் கஜகேஸ்வரி யோகம் ஏற்படுவதால் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தால் ஏமாற்றமாகத்தான் இருக்கும்.  7-ல் சந்திரன். அவர் யார் அவர் 6-ம் வீட்டின் அதிபதி. 6-ம் வீட்டின் அதிபதி 7-ல்; 7-ம் வீட்டின் அதிபதி சூரியன் 6-ல்; இரண்டு அதிபதிகளும் பரிவர்த்தனையாகி விட்டார்கள்.  இந்தப் பரிவர்த்தனை திருமண வாழ்க்கையை முற்றிலுமாகக் கெடுத்து விட்டது. 7-ம் வீடு, 6-ம் வீடும் பரிவர்த்தனை யில் சம்மந்தப்பட்டு விட்டதால் திருமண வாழ்க்கை கசந்து, இவர் மனைவியுடன் வாழ்த நாட்கள் மாதங்கள் மூன்று மட்டுமே. சுமார் 60 வயது வரை வாழ்ந்த இவர்  தனிமையிலேயே தன் வாழ்நாட்களைக் கழித்தார். பார்த்தீர்களா 6-ம் வீடு செய்கின்ற கோலத்தை.
உதாரண ஜாதகம் -3
         6
 
       7
  சுகி/
  சனி
  சூரி  
         5 
       ராசி
 கேது/
செவ்/புத
        ராகு

சந்தி

       குரு
      2
   ல/
     12










         2
 
       3
        4
  சூரி/
  குரு  
ல/
 புதன் 
       அம்சம்
கேது/சனி
சந்தி
     ராகு

சுக்கி

      11
     செவ்
   9
     8











மூன்றாவது ஜாதகத்தைப் பாருங்கள்.
துலா லக்கின ஜாதகம்.  7-ம்வீட்டிற்குக் குருவின் பார்வை.  குரு 6-ம் வீட்டின் அதிபதியல்லவா 6-ம் வீட்டின் அதிபதியாகி 7-ம் இடத்தைப் பார்ப்பதால் திருமண பந்தம் Divorce வரை சென்று விட்டது.  ஆம். திருமணபந்தம் விலகி இருவரும் விவாக ரத்துச் செய்து விட்டனர்.
உதாரண ஜாதகம் - 4

        6
 
  சனி/
  புதன்
  சூரி/
  செவ்
  சுக்கி
  ராகு 
       ராசி
 10
     4
 கேது

            3
      2
  ல/
கு/சந்
     12









         11
 
       12
    ல/
        2
  சூரி/ராகு
       அம்சம்
     3
         9

  கேது  

          8
  குரு
புத/சு
சனி/சந்
     செவ்









நான்காவது ஜாதகத்தைப் பாருங்கள். 
இதுவும் துலா லக்கின ஜாதகம். லக்கினத்தில் குரு. 7-ம் வீட்டிற்கு 6-ம்வீட்டிற்குடைய குருவின் பார்வை.  இத்துடன் 7-ல் சனி வேறு.  திருமணமாகி 3-மாதங்கள்சேர்ந்து இருந்தனர்.  பின்பு சண்டையிடுக் கொண்டு அந்தப் பெண் தாய் வீட்டில் தஞ்சமடைந்து விட்டாள்.  திருமணமாகி ஒன்றறை ஆண்டுகள் ஆகி இருக்கின்றன. அதில் 3 மாதங்கள்தான் சேர்ந்து இருந்தனர். இன்னும் சேர வில்லை.  பார்த்தீர்களா 6-ம்வீட்ட்டதிபர்  7-ம் வீட்டைப் பார்த்ததினால் விளைந்த விபரீதத்தை. சரி! இவர் மனைவியின் ஜாதகத்தைப் பார்ப்போமா
 உதாரண ஜாதகம் - 5
   புதன்  
 சூரி/
  சந்   
  ல/ சனி
செவ்/சுக்
      2
       10
       அம்சம்
 கேது
ராகு
     4  
குரு      
       7
        6
         5








   ராகு    
 சூ/ சனி  
ல/
சந் சுக்
       செவ
       10
       அம்சம்
    3
         9
 குரு    
8    
7
புத    
கேது









ஐந்தாம் ஜாதகதைப் பாருங்கள்
இவர் ரிஷப லக்கினம். லக்கினத்தில் செவ்வாய், சனி,சுக்கிரன்.  மூவரும் 7-ம்இடத்தைப் பார்க்கிறார்கள். செவ்வாய், சனி இரண்டும் இயற்கையிலேயே அசுப கிரகங்கள்.  லக்கினத்தில் இருப்பதால் இவரின் குணம் கெட்டு விட்டது. செவ்வாய் இருப்பதால் முரட்டு சுபாவம் உள்ளவராகவும், சனி இருப்பதனால் மிகத் தாழ்ந்த சுபாவம் உள்ளவராகவும்  இருக்கின்றார். இவர் தன் கணவருடன் சேராததற்குக் காரணம் இவர் சுபாவமே. தன் கணவன், தன் தாயார், தந்தையரை விட்டு தன்னுடன் வர வேண்டுமென்பது இவரது வாதம். இவர்கள் பிரிந்து வாழ்வதற்கு இதுதான் காரணம். செவ்வாய், சனி இருப்பதுடன் லக்கினத்தில் சுக்கிரனும் இருக்கிறார்.  சுக்கிரன் யார் சுக்கிரன் 6-ம் வீட்டிற்கு அதிபதி. 6-ம்வீட்டின் அதிபதி லக்கினத்தில் இருந்து 7-ம் வீட்டைப் பார்ப்பதனால் அவர்களுக்குள் பிரிவு ஏற்படக் காரணமாயிற்று. சுக்கிரன் ஓர் அழகிய கிரகமல்லவா அவர் லக்கினத்தில் இருப்பதனால் அவருக்கு அழகிய உருவ அமைப்பை சுக்கிரன் கொடுத்து விட்டார். ஆனால் அதே சுக்கிரன் 6-ம் வீட்டு அதிபதியாகி 7-ம் வீட்டைப் பார்த்ததினால் பிரிவையும் உண்டாக்கி விட்டார்.
பொதுவாக ஜாதகங்களைச் சேர்க்கும்போது 10-ப்பொருத்தங்களை மட்டும் பார்க்காது 7-ம் வீடு பாதிக்கப் பட்டு இருக்கிறதா என்று பார்த்துச் சேர்ப்பது நல்லது.  அதே போன்று சந்திரனுக்கு செவ்வாய், சனி, ராகு போன்ற தீய கிரகங்கள் சேர்க்கை இல்லாது பார்த்துச் சேர்ப்பது நல்லது. இவர்கள் சேர்க்கை இருப்பின் அந்த ஜாதகத்தை ஒதுக்கிவிடவும்.


கிரகங்களின் பொது குனம்

கிரகங்களின் பொது குனம்:-

சூரியன்
ஆன்மாவை பிரதிபலிப்பவன் சூரியன். ஓருவருக்கு ஆத்மபலம் அமையவேண்டுமானால் சூரியபலம் ஜாதகத்தில் அமையவேண்டும். சூரியனை வணங்கி ஆதித்திய ஷிருதய மந்திரத்தால் இராமன் இராவனனை வெல்லும் ஆற்றல் பெற்றான். வேதங்களில் தலைசிறந்த மந்திரம் காயத்ரீ. காயத்ரீ மந்திரத்துக்கு உரியவன் சூரியன். சூரியநமஸ்காரம் என்ற ஓரு விசேஷமான வழிபாடு முறை உண்டு. இதை செய்வதில் ஆன்மீக பலமும் சரிர பலமும் அடையமுடியும் என்பது அனுபவம் கண்ட உண்மை. சுயநிலை,சுய-உயர்வு, செல்வாக்கு கௌரவம், ஆற்றல், வீரம், பராகிரமம், சரிர சுகம், நன்நடத்தை நேத்திரம், உஷ்ணம், ஓளி அரசாங்க ஆதரவு முதலியவற்றின் காரன் சூரியன்.
சூரியன் அக்கினியை அதிதேவதையாக கொண்டவன். கதிரவன், ரவி, பகலவன் என பல பெயர்கள் உண்டு. தகப்பனை குறிக்கும் கிரகம் சூரியன். உத்திரம், உத்திரட்டாதி, கார்திகை நட்சத்திரக்கு உரியவன். சூரியனுக்கு சொந்த வீடு சிம்மம். உச்ச வீடு மேஷம், நீச்ச வீடு சுக்கிரன்.
செவ்வாய்
அங்காரகன், குஜன்,மங்களன் என்ற பெயர்களும் உண்டு. முதல் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்ற அரசியல் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள், நாட்டு தளபதிகள், நீதிபதிகள், பொரியியல் வல்லுனர்கள் முதலானோர்களின் ஜாதகங்களில் செவ்வாயின் பலம் இருந்தே தீரும் என்பது உறுதி.
பெருந்தன்மை அதே நேரத்தில் கண்டிப்பு, தொண்டு செய்தல், தலைமை வகித்தல், வைராக்கியம், பகைவரை வெல்லும் பராக்கிரம் இவற்றை வழங்குபவன் செவ்வாய் கிரகம். ரத்தத்திற்க்கும், சகோதரத்திற்க்கும் காரகன். மேஷம், விருச்சிகம் ஆட்சி வீடுகள். மகரம் உச்ச வீடு, கடகம் நீச வீடு.
அவிட்டம், மிருக சீரிடம், சித்திரை நட்சத்திரங்கள் செவ்வாய்க்கு உரிய நட்சத்திரங்கள். ஜாதகத்தில் செவ்வாய் தோஷமுடையவர்களுக்கு சீக்கிரம் திருமணம் ஆவதில்லை. லக்னத்திற்கு 2,4,7,8,12 இவைகளில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் உண்டு. ஆனால் செவ்வாய் குருவோடு சேர்ந்தாலும், சனி, ராகு, கேதுவோடு சேர்ந்தாலும் செவ்வாய் தோஷம் பரிகாரம் ஆகிவடும். செவ்வாய் குருவோடு சேர்ந்தால் குருமங்கள யோகம் உண்டாகும். செவ்வாய் சந்திரனோடு சேர்ந்தால் சந்திரமங்கள யோகம் உண்டாகும்.
சந்திரன்
மனதிற்க்கும், உடலுக்கும் காரகன் சந்திரன். உலக வாழ்வுக்கு சரிர பலம் முக்கியம். சரிர பலத்திற்க்கு மனவளம் அடிப்படை. ஜாதகத்தில் சந்திரன் பலம் பெற்றிருந்தால் இரண்டையுமே அடைய முடியும். ரோகினி அஸ்தம் திருவோணம் இந்த மூன்று நட்சத்திரங்களுக்கும் நாயகன் சந்திரன். தாய்க்கு காரகன் சந்திரன். கடகம் ஆட்சி எனும் சொந்த வீடு, ரிஷபம் உச்ச வீடு, விருச்சிகம் நீச வீடு. திருமண பொருத்தங்கள் சந்திரன் சஞ்சாரம் செய்யும் நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டே உறுதிபடுத்தபட்டு வருகின்றன. சுபமுகர்தங்கள் நிச்சயிக்கபடுவதும் சந்திரனைக் கொண்டுதான். நாம் பிறக்கும் போது சந்திரன் இருந்த வீட்டை வைத்துதான் கோச்சார பலன்கள் நிர்ணயிக்கபடுகின்றது. சந்திரன் ஜாதகத்தில் அமைந்த வீடு தான் இராசி எனப்படுகிறது.
சூரியனோடு கோச்சார ரீதியாக சேரும் பொழுது அமாவாசை ஆகின்றது.
சூரியனும், சந்திரனும் ஓன்றுக்கொன்று பார்வையிடும் பொழுது அதாவது நேர்கோட்டில் 180 பாகையில் சந்திக்கும் பொழுது பௌர்ணமி ஆகின்றது.
புதன்
சுபகிரக வரிசையில் புதனும் சேரும். ஆனால் புதனோடு பாவகிரகங்கள் சேர்ந்தால் பாவி ஆகிவிடும். புதன் அலிக்கிரகம். எந்த கிரகத்தோடு சேர்கிறதோ அந்த கிரகத்தின் தன்மை பிரதிபல்க்கும். கேட்டை, ஆயில்யம், ரேவதி இந்த மூன்று நட்சத்திரங்களின் நாயகன். முதுன ராசிக்கும், கன்னி ராசிக்கும் அதிபதி புதனே.
புதன் ஆட்சி பெற்று அல்லது உச்சம் பெற்று சூரியனோடு சேர்ந்தால் புதஆதித்ய யோகம் உண்டாகும். இதனால் கல்வி மூலம் பெரிய அந்தஸ்த்தை ஏற்படுத்தும். புதன் -வித்யாகாரகன். கல்வி வித்தை, தொழில் இவைகளின் மூலம் சிறப்பை ஏற்படுத்துபவன். நாடகம் மற்றும் நடன அமைப்புகளுக்கு புதனுடைய பலமே காரணம்.
நகைச்சுவை ததும்பும் நயமான பேச்சு, பளிச்சென்ற உச்சரிப்பு, புத்தக வெளியீடு இவைகளுக்கு புதபலமே காரணம். புதன் வாக்குஸ்தானத்தில்- 2 ஆம் இடத்தில் ஆட்சி உச்சம் பெற்றால் சிறந்த பேச்சுதன்மை இருக்கும்.
குருபகவான்
குருவருள் திருவருள் என்பார்கள். குருபகவான் என்று சிறப்பித்து கூறப்படும் குருபார்க்க கோடி நன்மை. குருபார்வை அதாவது வியாழ நோக்கம் வந்தால் திருமணம் மற்றும் சுபகாரியங்கள் செய்யலாம் என்ற வழக்கம் உள்ளது. சுபகிரக வரிசையில் முதன்மையாக பேசபடும் குருபகவான் ஆட்சி வீடுகள் மீனம், தனுசு. உச்ச வீடு கடகம், நீச வீடு மகரம்.
குருபகவான் ஆட்சி அல்லது உச்சம் பெற்று சூரியனோடு இனைந்நு 6,8,12 வது இடங்களில் மறைவு பெறாமல் அமைந்தால் ராஜயோகம். கோடிஸ்வர யோகம் அமையும். மேதைகளையும்> ஞானிகளையும் உருவாக்குவது குருபகவான். பிரகஸ்பதி என்று குருகிரகத்தை அழைப்பார்கள் இதன் பொருள் ஞானத்தலைவன் என்பதாகும்.
விவேகத்தையும்,
அந்தஸ்தையும், ஆற்றலையும், புத்திர பாக்கியத்தையும் வாரி வழங்குவார். பஞ்ச பூதங்களில் ஆகாயம் குருபகவான். கன்னி லக்னமாக அமைந்து, குரு 3ல் அமர்ந்து பாவகிரகங்கள் பார்த்தாலோ- சேர்ந்தாலோ இரண்டு மனைவிகள் அமையும்.
குருபகவான் ஜாதகங்களில் சிறப்பாக அமைந்தால் நல்ல குடும்பம், நல்ல கணவன்,மனைவி, செல்வசெழிப்பு அனைத்தும் ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெறலாம். தெய்வ அருள் கிடைக்கும். ஜோதிட ஞானத்தை குரு வழங்குவார். அறிவு வாயந்த குழந்தைகளை பெறுவதும் குருபகவான் அருள்தான்.
சுக்கிரன்
கலைக்கு காரகன் சுக்கிரன். பரணி, பூரம், பூராடம் இந்த மூன்று நட்சத்திரங்களுக்கும் நாயகன். ரிஷபம், துலாம் ஆட்சி வீடுகள், மீனம் உச்ச வீடு, கன்னி நீச வீடு.சுக்கிரன் சந்திரனுடன் கூடி பலமுடன் 10ல் இருந்தால் நடிப்புகலையில் தேர்ச்சிபெற்று, குறிப்பிட்ட ஜாதகர் அல்லது ஜாதகி நட்சத்திர ஸ்தானம் பெற்று அவ்வகையில் அதிர்ஷ்டசாலியாக திகழ முடியும்.
லக்னம் எதுவானாலும் சரி சுக்கிரன் 10வது வீட்டில் தனித்திருப்பாரானல் நிச்சயமாக கலைத்துறை ஓன்றில் பாண்டித்யம் பெற்று அதனால் மற்றோரை பரவசபடுத்துகின்ற ஆற்றல் அமைந்து அவ்வகையில் அதிர்ஷ்டம் பெற முடியும்.
பொருட்களை வாங்குவதும், விற்பதும் இன்றைய வாழ்வியலில் முக்கியமான தொழில் ஆகும். இந்த தொழில் வளமையை ஏற்படுத்துவார் சுக்கிரன். சுக்கிரன் பலம் பெற்று இருந்தால் காதலில் வெற்றிகிடைக்கும். ஓருவரது ஜாதகத்தில் சுக்கிரன் தசாகாலம் நடக்கும் போது நல்லமுறையில் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய சிற்றின்ப, பேறின்பங்களுக்கு வழிவகுப்பார்.
குறிப்பிட்ட ஓரு நபரை பார்த்து இவர் ஜென்டில்மேன் என்று சொன்னால் அவர் ஜாதகத்தில் சுக்கிரன் சிறப்பாக அமைந்துள்ளார் என்று அர்த்தம். லக்னத்திற்க்கு 4ல் ஆட்சி, உச்சம், நட்புப்பெற்று அமர்ந்தால் வண்டி, வாகனம், செல்வாக்கு, அந்தஸ்து ஆகியவை அற்புதமாக அமையும
சனிபகவான்
மகர ராசிக்கும், கும்ப ராசிக்கும் அதிபதி. அனுஷம், பூசம், உத்திரட்டாதி நட்சந்திரங்களுக்கு நாயாகன். துலாம், சனிபகவானுக்கு உச்ச வீடு. மேஷம் நீசம், நீசம் பெற்ற சனிபகவான் நன்மை தரமாட்டார். உச்சம் பெற்ற சனிபகவான் நன்மைகளை வாரி வழங்குவார்.
சனிபகவான் பார்வை கொடியது. சனிபகவானுக்கு சுபகிரகங்கள் பார்வை நன்மை செய்யும் இடமான 3,6,10,15,9 அகிய இடங்களில் இருந்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லை.
நீண்ட கால வாழ்வுக்கும், மரணத்திற்க்கும் காரகன் சனிபகவான். வாகனம் காகம். கலி,காரி,முடவன் என்ற பல பெயர்கள் உண்டு.
ஓருவர் ஜாதகத்தில் சனி நீசம் பெற்று வக்கிரம் பெறாமல் பலம் இழந்த நிலையில் இருந்தால் வாத நோயை ஏற்படுத்தும். சனிபகவான் பலம் பெற்ற ஜாதகர் சர்வ சக்திகளையும் பெறவாய்ப்பு உண்டு.
ஜாதகத்தில் நல்ல நிலையில் சனி இருந்தால், அந்த ஜாதகர் ஓரு நாட்டுக்கே தலைவராகவும் வாய்ப்பு உண்டு. வறுமை, நோய், கலகம், அவமரியாதை, இரும்பு, எண்னை, கருமைநிறம், பெரிய இயந்திர தொழிற்சாலை, தொழிலாளர் வர்க்கம் இவைகளுக்கு காரகன். சனிபகவான் பலம் பெற்று அமைந்தால் ஜாதகருக்கு அவர் சம்மந்தபட்ட இனங்களில் பொன்னையும், பொருளையும் வாரி வழங்குவார்.
இராகு
சதயம், சுவாதி, திருவாதிரை இம்மூனறு நட்சத்திரங்களும் இராகு பகவானுக்கு உரியது. இவருக்கு சொந்த வீடுகள் கிடையாது. உச்ச வீடு விருச்சிகம், நீச வீடு ரிஷபம். எந்த நட்ச்த்திரத்தில் அல்லது வீட்டில் அமர்கிறாரோ அந்த அந்த பலன்களை வழங்குவார். இராகுவை போல கொடுப்பவன் இல்லை என்பது ஜோதிட பலமொழி.
சனியை போல ராகுவும் பலன்களை தருவார். வெளிநாடு. வெளிபாஷை, வெளிமனிதர்கள், வேறு மதம் சார்ந்தவர்களோடு நட்பு-அதன் மூலம் நன்மை இவைகளை வழங்குவார் இராகு. 7-வது, 8-வது வீட்டில்,இராகு இருந்தால் சங்கடங்களை கொடுப்பார்.
இராகு சர்ப தோஷம், கால சர்ப தோஷம் முதலியன ஏற்படும். இராகு பலம் பெற்று ஓருவர் ஜாதகத்தில் இருந்தால்- ஸ்பெகுலேஷன்-லாட்டரி, பந்தயம் மூலமாக ஓரு மனிதரை கோடிஸ்வரர் ஆக்குவார்.
பலமிழந்த இராகு- ஏமாற்றுதல், பொய் சொல்லுதல், கள்ள வழியில் நடத்தல் ஆகியவைகளுக்கு காரணங்களாக அமையும். அரசாங்கத்தில் பதவி-புகழ் பெறுவதற்கு, எதிரிகள் அஞ்சி நடப்பதற்க்கு இராகு பலமே காரணம்.
இராகு லக்ன கேந்திரம் அல்லது திரிகோண ஸ்தானமான 5,9 ல் இருந்தால் சிறப்பு பலன்கள் தருவார். 6,12 ல் இருந்தாலும் வெற்றி கிடைக்கும்.
கேது
இவருக்கு ஞானகாரகன் என்று பெயர். வேதாந்த அறிவு நுட்பங்களுக்கும், மோட்சத்திற்க்கும், எந்த ஓரு பிரச்சனையிலிருந்து விமோச்சனம் பெறுவதற்க்கும் காரகத்துவம் உள்ளது கேது.
எளிமை, கடுமை இரண்டுக்கும் உடையதும், உலக பந்தங்களில் இருந்து விடுபட வைப்பதும் கேதுவே. வியாதியில் இருந்து நிவாரணம் தருவதும், பகைவரை முறியடிக்க செய்வதும் கேது. கோபத்தில் நடைபெறும் தவறுகளுக்கும் கேதுவே காரணம். கேதுவைப்போல கெடுப்பவன் இல்லை என்பது ஜோதிட பழமொழி.
விபத்துகளையும். தாகாத சகவாசத்தையும் வழங்குவதும் கேதுவே.ரிஷபத்தில் நீசம், விருச்சிகத்தில் உச்சம். பஞ்ச பூதங்களில் ஜலம். கேது ஞானமாரக்கத்தில் ஆன்மீகத்தை வழங்குபவர்.

பிரபஞ்ச தோற்றம்

- பஞ்ச பூதங்களின் தோற்றம்
அண்ட கோடியிலுள்ள அனைத்து கிரகங்களும் அணுக்களின் கூட்டமேயாகும். இவ்வணுக்களின் கூட்டம் சுத்த வெளியின் வெளிப்பாடாகும். சுத்த வெளி என்பது இயங்காத நிலை. இயங்காத நிலையிலுள்ள ஓர் அணு இயங்கும் நிலைக்கு தற்சுழற்சி காரணமாக வெளிப்படும் போது இயங்கும் நிலை உருவாகிறது. அது சக்தி அணு எனப்படும். இந்த சக்தி அணு தற்சுழற்சி, வேகம், பருமன் இவற்றின் துணை கொண்டு பல அணுக்கள் உருவாகின்றது. இவ்வணுக்களுக்கு இரண்டு காந்த தன்மைகள் உண்டு. தள்ளும் சக்தி, ஈர்க்கும் சக்தி என்பதாகும். இதையே நம் முனிவர்கள் அன்றைய மனிதர்களுக்கு விளங்காத காரணத்தால் காந்தத்திற்கு இரண்டு தன்மை தள்ளும் சக்தி, ஈர்க்கும் சக்தி. இதையே கந்தனுக்கு இரண்டு மனைவி வள்ளி, தெய்வானை என்று குறிப்பிட்டனர். கந்தன் காலத்தால் மருவி கந்தனானார். அதே போல் சிவ சக்தி என்பதும், சிவனின் தன் பாதி சக்தி என்று கூறுவதன் உள்நோக்கம், இயக்கமற்ற சிவனுள் இயங்கும் சக்தி தன் பாதி என கூறப்பட்டது.
இச்சிவனை இயக்கமற்றவன் என்பதை சுத்த வெளி என்பர். இயங்கும், சக்தி களம் என்பது அண்ட கோடியில் அமைந்துருக்கும் கிரகங்கள், ஜீவராசிகள் அனைதுமாகும்.
கிரகங்களின் தோற்றமும், அதன் சுற்று வட்டபாதைகளும் அது செல்லும் வேகமும் ஒரே மாதிரியானதாகும். அணுக்களின் கூட்டமே கிரகங்களாகும். அணுக்கள் ஒன்றோடொன்று மோதியும், விலகியும் அதாவது ஈர்க்கும் சக்தியையும், தள்ளும் சக்தியையும் கொண்டு அதிகமாக அவைகளும் இரு சக்திகளை மையமாக வைத்து இணைந்து கிரகங்கள் தன் வட்டப்பாதையில் தன்னை தானே சுழன்று கொண்டு தன் பாதையில் நகர்ந்தும் பிசகாமல் சூரியனை மையமாக வைத்து சுழன்று கொண்டு வருகிறது.
பஞ்சபூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, விண் ஆகிய அனைத்தும் அணுக்களின் கூட்டமேயாகும். 2c)இவற்றில் முதலில் தோன்றியது விண் ஆகும். பிறகு காற்று, அடுத்ததாக நீர், நெருப்பு, நிலம் என்பதாகும். கிரகங்கள் அனைத்தும் சக்தி களம் முழுவதும் ஒரு வட்ட வடிவமான ஒரு அமைப்பாகும். அவற்றில் விண் என்ற அணுவிலிருந்து வெளிப்படும் அதிர்வலைகள், விண்கல் தன்னுள் மோதிக்கொண்டு காற்றை வெளிப்படுதுகின்றன. இக்காற்றானது மையத்தை நோக்கி விரைந்து வரவர அதன் அடர்த்தி அதிகமாகி ஆக்ஸிஜன் அதாவது நாம் சுவாசிக்கும் காற்றாக அமைகிறது. இதனையே நம் விஞ்ஞானிகள் பூமியிலிருந்து 10 மைல் சுற்றளவிற்கு காற்று அடர்தியாகவும், அதற்குமேல் 100 மைல் சுற்றளவிற்கு காற்று அடர்த்தி குறைவாகவும் அமந்துள்ளதாக கூறுகிறார்கள். ஆக்ஸிஜன் ஆகிய காற்று மையத்தை நோக்கி விரைந்து செல்லும் பொழுது ஹைட்ரஜன் வாயுவாக திரிந்து இவை ஆக்ஸிஜனும், ஹைட்ரஜனும் (H2O) இணைந்த நிலயை நீரின் தோற்றமாக உள்ளது. இந்த நீர் அதன் மையத்தை நோக்கி செல்லும் பொழுது நெருப்பாக ஆகிறது. இந்த நெருப்பு குழம்பு அதன் மையத்தை நோக்கி விரையும் பொழுது, இருக்கும் அணுக்கருக்குள் சிதைவு ஏற்பட மையத்திலிருந்து நெருப்பு குழம்பு பீறிட்டு வெளிவருகிறது. இது நீர் பரப்பிற்கு அப்பால் சென்று எரிமலையாக அமைகிறது.
அங்குள்ள காற்று ஆக்ஸிஜன் அந்த எரிமலையை குளிரச் செய்து கற்பாறைகளாக, மலைகளாக அமைகிறது. இவ்வாறு நிலம் அமைகிறது. இதன் மொத்த தொகுப்பை பூமி என்று அழைக்கிறோம். விண் தோன்றுவதற்கு முன் வெற்றிடமே அமைந்திருக்கவேண்டும். அதற்கு அடுத்த நிலையில் விண் உருவாகி விண்ணிலிறிந்து காற்று உருவாகி, நெருப்பிலிருந்து நிலம் உருவாகியுள்ளது. இதன் அடுத்த நிலையே பரிணாம வளர்ச்சியின் உச்சகட்டமாகிய உயிரினங்கள் முதல் மனிதன் வரை தோன்றியுள்ளனர். இந்த இயக்கம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.