Monday, November 3, 2014

செவ்வாய் தோஷம் என்றால் என்ன.! திருமணத்திற்கு தடையா, இல்லையா.!!

செவ்வாய் தோஷம் என்றால் என்ன.! திருமணத்திற்கு தடையா, இல்லையா.!!

கல்யாணத்திற்கு பெரும் தடையாக இருக்கும் முக்கிய தோஷமாக இது கருதப்படுகிறது. ஆனால் இந்த செவ்வாய் தோஷம் ஆணுக்கும்பெண்ணுக்கும் இருந்தால் திருமணம் செய்யலாம்.
ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து மற்றொருவற்கு செவ்வாய் தோஷம் இல்லை எனில் அவர்களுக்கு திருமணம் செய்யக்கூடாது என சோதிடம் கூறுகிறது.
லக்கனம்சந்திரன்சுக்கிரன் முதலியவைகளுக்கு 2,4,7,8,12,ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாக கருத வேண்டும். அப்படி மீறி திருமணம் செய்தால் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு செவ்வாய் தெசை நடைபெற்றால் அக்காலத்தில் துணைவர் துணைவியை இழக்க வேண்டிய நிலை வரும் என சோதிடம் கணிக்கிறது.
2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் உள்ள எல்லோருக்கும் செவ்வாய் தோஷம் என்று கூறிவிட முடியாது.
இதற்கு சில விதிவிலக்குகள் உள்ளன.
மேஷம்விருச்சிகம்மகரம்கடகம் ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் தோஷம் வலிமை குன்றி தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.
காரணம் என்னவென்றால் சம்பந்தப்பட்ட வீடுகளில் செவ்வாய் ஆட்சிஉச்சம்நீசம்பெற்று இருப்பதால் தோஷம் குன்றும்.
குருசூரியன்சனி சந்திரனுடன் சேர்ந்திருந்தால் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.
சூரியன்சந்திரன்குருசனிஆகியவற்றால் பார்க்கப்பட்டால் பாவமில்லை என சோதிடம் கூறுகிறது.
சிம்மம் அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.
2 -ம்  இடம் மிதுனம்அல்லது கன்னி ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.   
4 - ம் இடம் மேஷம்விருச்சிகம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.
7 - ம் இடம் கடகம்மகரம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.
8 - ம் இடம் தனுசுமீனம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.

இரண்டும்இரண்டிற்கு மேற்பட்ட தாரம் ஏற்படக்காரணம் என்ன  

7-ம் அதிபதி கெட்டு கெட்டவர்கள் வீட்டில் அமையப்பெற்றால் இருதார யோகம் உண்டு
7-ம் அதிபதி ராகுவுடன் சேர்க்கை பெற்றாலோ அல்லது
7-ம் இடத்தில் அசுபர் இருந்தாலோ இரண்டு அசுபர்கள் 2-ம்இடத்தில் அமைந்தாலோ
7-ம் அதிபதி 10-ல் அமையப் பெற்று ஆட்சிஉச்சம்நட்பு பெற்று10-ம் அதிபதியால் பாக்கப்பட்டாலோ
11-ம் வீட்டில் இரண்டு வலிமையான கிரகங்கள் அமையப் பெற்று இருந்தாலோ
7-ம் அதிபதியும் சுக்கிரனும் இணைந்து இருந்தாலோ அம்சத்தில் சேர்ந்து காணப்பட்டாலோ
7-ம் அதிபதி கெட்டு 11-ல் இரு கிரகங்கள் அமையப் பெற்றிருந்தாலோ
7-ம் இடத்தில் சுக்கிரன்சனி இணைந்து காணப்பட்டாலோ
சுக்கிரன் இரட்டை ராசியில் அமையப்பெற்று அந்த வீட்டிற்கு அதிபதி உச்சம் பெற்று 7-ம் அதிப்தி ஆட்சி பெற்று இருந்தால் இரண்டும்இரண்டிற்கு மேற்பட்ட தாரங்கள் உண்டாகின்றது. 7-ம் இடத்தில் எத்தனை சுபகிரகங்கள் உண்டோ அத்தனை தாரங்கள் எனக் கொள்க.

விதவைப் பெண்
7-ம் இடத்தில் உள்ள செவ்வாய் சூரியன் சேர்கை பெற்றால் அவள் விதவையாவாள்.
மூன்று அசுபர்கள் 7-ம் இடத்தில் அமையப்பெற்றால் அந்தப் பெண் மாங்கல்ய பலம் இழந்து விடுவாள்.
8ம் இடமான மங்கல்ய ஸ்தானத்தில் செவ்வாய்சனிராகுகேது,போன்ற அசுபர்கள் அமையப்பெற்றாலும் விதவையாகி விடுவாள்.
7-ம் இடத்தில் சனிசெவ்வாய் போன்ற அசுபர்கள் இணைது இருதால் இளவயதில் மாங்கல்ய பலம் இழ்க்க நேரிடும்.
விவாகரத்து
மங்கையர்களின் ஜாதகத்தில் 7-ம், 8-ம் இடங்கள் கெட்டிருந்தாலும்
லக்கினாதிபதி,  7-ம் இடத்திற்கு அதிபதி 6, 8 போன்ற மறைவிடத்தில் இருந்தாலும்
12-ம் இடத்தில் ராகு6-ம் இடத்தில் கேது அமையப் பெற்ற பெண்களும்
7-ம் இடத்தில் நீச கிரகம் இருந்து சுபரால் பார்க்கப்பட்டாலும் விவாகரத்து அமையப் பெறும்
6-ம் வீடும், 7-ம் வீடும் தரும் களத்திர தோஷம்
திருமணம் என்றால் உடனே நினைவுக்கு வருவது 7-ம் வீடு தான். ஏனென்றால் அது களத்திர ஸ்தானம் என்றழைக்கப்படுகிறது.  7-ம் வீடு களத்திர ஸ்தானமென்றால் 7-ம் வீட்டிற்குப் 12-ம் வீடான6-ம் வீடு திருமண பந்தத்திற்கு எதிர்மறையான பலனைக் கொடுக்கும் வீடாகும்.  தம்பதியர்க்குள் கருத்து வேற்றுமைபிரிவு,ஆகியவை களைக் கொடுக்கும்.  ஆகவே திருமணப் பொருத்தம் பார்க்கும்போதே 7-ம் வீடும்6-ம் வீடும் சம்பந்தப்பட்டு இருக்கிறதா எனப் பார்த்து ஜாதகங்களைச் சேர்த்தல் நலம்.
வெறும் பத்துப் பொருத்தங்களை மட்டும் பார்த்து ஜாதகங்களை இணைப்பது அவ்வளவு நல்லது அல்லசிலர் தசப் பொருத்தம் மட்டும் பார்ப்பர்சிலர் சமசப்தமம் இருந்தால் மட்டும் போதுமென்று ஜாதகங்களை இணைப்பர். சிலர் நட்சத்திர ஆதிக்க பலம் உள்ளவைகளான மிருகசீரிஷம்மகம்,சுவாதிஅனுஷம் ஆகிய நட்சத்திரங்களுக்கும் தசப்பொருத்தம் தேவை இல்லை என்று ஜாதகங்களைச் சேர்ப்பார்கள். நாம் 6-ம் வீடும்7-ம் வீடும் சமமந்தப் பட்டால் எவ்வாறு பாதிப்புக்களைபாதகங்களை ஏற்படுத்துகின்றன என்று பார்ப்போம்.


undefined


உதாரண ஜாதகம் - 1 

 சூரி/
 சனி
 சுக்/
 ராகு
     11
     12
 புதன்
          ராசி
   /குரு
 சந்திர
 
     2

       6
      5
  செவ்/
கேது
      3









         2
 புதன்
       4
  சந்தி        
ல/ கேது
 
       அம்சம்
  குரு
சூரி 
   ராகு
11
செவ்/ சுக்
  சனி
         8








உதாரண ஜாதகம் எண் 1-ஐப் பாருங்கள்.
இது கடக லக்கின ஜாதகம். லக்கினத்தில் குரு. 7-ம் வீட்டில் சந்திரன். இது கஜகேஸ்வரி யோகம்.  ஆகவே மிகுந்த நல்ல பலனைக் கொடுக்கும் என்று கூறலாம். ஆனால் உண்மையில் அவ்வாறில்லை.  திருமணமாகி சில மாதங்கள் தான் கணவன்,மனைவியாக வாழ்ந்தனர்.  அதற்குப் பின் பிரிவுதான். திரும்பவும் அவர்கள் சேரவே இல்லை.  இதற்குக் காரணம் என்ன  7-ம்வீட்டிற்கு குருவின் பார்வை. குரு பார்க்கக் கோடிப் புண்ணியம் அல்லவா என்று நீங்கள் கேட்க்கலாம். குருவின் பார்வை நம்மையைச் செய்யவில்லை.
மாறாகத் தீமையைத்தான் செய்து இருக்கிறது. எப்படி குரு 6-ம்வீட்டிற்கு அதிபதியல்லவா 6-ம் வீடு 7-ம் வீட்டிற்கு எதிரிடையான பலனைக் கொடுக்க வேண்டுமல்லவா 7-ம் வீடு திருமணமென்றால் 6-ம் வீடு பிரிவினை அல்லவா ஆக குருவின் பார்வை திருமண வாழ்க்கையில் பிரிவினையைக் கொடுத்து விட்டது. அதைத் தவிர செவ்வாய் 7-ம் வீட்டை வேறு பார்க்கிறார். ஆக இருவரும் சண்டை போட்ட்டுக் கொண்டு பிரிந்து விட்டனர்.
உதாரண ஜாதகம் - 2
         2
 செவ்
     4
  சுக்/ ராகு   
ல/ குரு 
       ராசி
சூரி/
புதன்
    12
சந்தி    
கேது
    10
 சனி
    8










         2
 
 சனி/
  ராகு
        4
 சுக்கி   
  ல/
சூரிய 
       அம்சம்
   செவ்
       12

    7 

       11
      10
  குரு/
கேது
  புத்/
  சந்தி










இரண்டாம் ஜாதகத்தை பாருங்கள்.
இது கும்ப லக்கின ஜாதகம். லக்கினத்தில் குரு. 7-ல் சந்திரன். இதுவும் கஜகேஸ்வரி யோக ஜாதகம் தான். உடனே களத்திர ஸ்தானத்தில் கஜகேஸ்வரி யோகம் ஏற்படுவதால் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தால் ஏமாற்றமாகத்தான் இருக்கும்.  7-ல் சந்திரன். அவர் யார் அவர் 6-ம் வீட்டின் அதிபதி. 6-ம் வீட்டின் அதிபதி 7-ல்; 7-ம் வீட்டின் அதிபதி சூரியன் 6-ல்; இரண்டு அதிபதிகளும் பரிவர்த்தனையாகி விட்டார்கள்.  இந்தப் பரிவர்த்தனை திருமண வாழ்க்கையை முற்றிலுமாகக் கெடுத்து விட்டது. 7-ம் வீடு, 6-ம் வீடும் பரிவர்த்தனை யில் சம்மந்தப்பட்டு விட்டதால் திருமண வாழ்க்கை கசந்துஇவர் மனைவியுடன் வாழ்த நாட்கள் மாதங்கள் மூன்று மட்டுமே. சுமார் 60 வயது வரை வாழ்ந்த இவர்  தனிமையிலேயே தன் வாழ்நாட்களைக் கழித்தார். பார்த்தீர்களா 6-ம் வீடு செய்கின்ற கோலத்தை.
உதாரண ஜாதகம் -3
         6
 
       7
  சுகி/
  சனி
  சூரி  
         5 
       ராசி
 கேது/
செவ்/புத
        ராகு

சந்தி

       குரு
      2
   ல/
     12










         2
 
       3
        4
  சூரி/
  குரு  
ல/
 புதன் 
       அம்சம்
கேது/சனி
சந்தி
     ராகு

சுக்கி

      11
     செவ்
   9
     8











மூன்றாவது ஜாதகத்தைப் பாருங்கள்.
துலா லக்கின ஜாதகம்.  7-ம்வீட்டிற்குக் குருவின் பார்வை.  குரு 6-ம் வீட்டின் அதிபதியல்லவா 6-ம் வீட்டின் அதிபதியாகி 7-ம் இடத்தைப் பார்ப்பதால் திருமண பந்தம் Divorce வரை சென்று விட்டது.  ஆம். திருமணபந்தம் விலகி இருவரும் விவாக ரத்துச் செய்து விட்டனர்.
உதாரண ஜாதகம் - 4

        6
 
  சனி/
  புதன்
  சூரி/
  செவ்
  சுக்கி
  ராகு 
       ராசி
 10
     4
 கேது

            3
      2
  ல/
கு/சந்
     12









         11
 
       12
    ல/
        2
  சூரி/ராகு
       அம்சம்
     3
         9

  கேது  

          8
  குரு
புத/சு
சனி/சந்
     செவ்









நான்காவது ஜாதகத்தைப் பாருங்கள். 
இதுவும் துலா லக்கின ஜாதகம். லக்கினத்தில் குரு. 7-ம் வீட்டிற்கு 6-ம்வீட்டிற்குடைய குருவின் பார்வை.  இத்துடன் 7-ல் சனி வேறு.  திருமணமாகி 3-மாதங்கள்சேர்ந்து இருந்தனர்.  பின்பு சண்டையிடுக் கொண்டு அந்தப் பெண் தாய் வீட்டில் தஞ்சமடைந்து விட்டாள்.  திருமணமாகி ஒன்றறை ஆண்டுகள் ஆகி இருக்கின்றன. அதில் மாதங்கள்தான் சேர்ந்து இருந்தனர். இன்னும் சேர வில்லை.  பார்த்தீர்களா 6-ம்வீட்ட்டதிபர்  7-ம் வீட்டைப் பார்த்ததினால் விளைந்த விபரீதத்தை. சரி! இவர் மனைவியின் ஜாதகத்தைப் பார்ப்போமா
 உதாரண ஜாதகம் - 5
   புதன்  
 சூரி/
  சந்   
  ல/ சனி
செவ்/சுக்
      2
       10
       அம்சம்
 கேது
ராகு
     4  
குரு      
       7
        6
         5








   ராகு    
 சூ/ சனி  
ல/
சந் சுக்
       செவ
       10
       அம்சம்
    3
         9
 குரு    
8    
7
புத    
கேது









ஐந்தாம் ஜாதகதைப் பாருங்கள்
இவர் ரிஷப லக்கினம். லக்கினத்தில் செவ்வாய்சனி,சுக்கிரன்.  மூவரும் 7-ம்இடத்தைப் பார்க்கிறார்கள். செவ்வாய்சனி இரண்டும் இயற்கையிலேயே அசுப கிரகங்கள்.  லக்கினத்தில் இருப்பதால் இவரின் குணம் கெட்டு விட்டது. செவ்வாய் இருப்பதால் முரட்டு சுபாவம் உள்ளவராகவும்சனி இருப்பதனால் மிகத் தாழ்ந்த சுபாவம் உள்ளவராகவும்  இருக்கின்றார். இவர் தன் கணவருடன் சேராததற்குக் காரணம் இவர் சுபாவமே. தன் கணவன்தன் தாயார்தந்தையரை விட்டு தன்னுடன் வர வேண்டுமென்பது இவரது வாதம். இவர்கள் பிரிந்து வாழ்வதற்கு இதுதான் காரணம். செவ்வாய்சனி இருப்பதுடன் லக்கினத்தில் சுக்கிரனும் இருக்கிறார்.  சுக்கிரன் யார் சுக்கிரன் 6-ம் வீட்டிற்கு அதிபதி. 6-ம்வீட்டின் அதிபதி லக்கினத்தில் இருந்து 7-ம் வீட்டைப் பார்ப்பதனால் அவர்களுக்குள் பிரிவு ஏற்படக் காரணமாயிற்று. சுக்கிரன் ஓர் அழகிய கிரகமல்லவா அவர் லக்கினத்தில் இருப்பதனால் அவருக்கு அழகிய உருவ அமைப்பை சுக்கிரன் கொடுத்து விட்டார். ஆனால் அதே சுக்கிரன் 6-ம் வீட்டு அதிபதியாகி 7-ம் வீட்டைப் பார்த்ததினால் பிரிவையும் உண்டாக்கி விட்டார்.
பொதுவாக ஜாதகங்களைச் சேர்க்கும்போது 10-ப்பொருத்தங்களை மட்டும் பார்க்காது 7-ம் வீடு பாதிக்கப் பட்டு இருக்கிறதா என்று பார்த்துச் சேர்ப்பது நல்லது.  அதே போன்று சந்திரனுக்கு செவ்வாய்சனிராகு போன்ற தீய கிரகங்கள் சேர்க்கை இல்லாது பார்த்துச் சேர்ப்பது நல்லது. இவர்கள் சேர்க்கை இருப்பின் அந்த ஜாதகத்தை ஒதுக்கிவிடவும்.


கிரகங்களின் பொது குனம்

கிரகங்களின் பொது குனம்:-

சூரியன்
ஆன்மாவை பிரதிபலிப்பவன் சூரியன். ஓருவருக்கு ஆத்மபலம் அமையவேண்டுமானால் சூரியபலம் ஜாதகத்தில் அமையவேண்டும். சூரியனை வணங்கி ஆதித்திய ஷிருதய மந்திரத்தால் இராமன் இராவனனை வெல்லும் ஆற்றல் பெற்றான். வேதங்களில் தலைசிறந்த மந்திரம் காயத்ரீ. காயத்ரீ மந்திரத்துக்கு உரியவன் சூரியன். சூரியநமஸ்காரம் என்ற ஓரு விசேஷமான வழிபாடு முறை உண்டு. இதை செய்வதில் ஆன்மீக பலமும் சரிர பலமும் அடையமுடியும் என்பது அனுபவம் கண்ட உண்மை. சுயநிலை,சுய-உயர்வு, செல்வாக்கு கௌரவம், ஆற்றல், வீரம், பராகிரமம், சரிர சுகம், நன்நடத்தை நேத்திரம், உஷ்ணம், ஓளி அரசாங்க ஆதரவு முதலியவற்றின் காரன் சூரியன்.
சூரியன் அக்கினியை அதிதேவதையாக கொண்டவன். கதிரவன், ரவி, பகலவன் என பல பெயர்கள் உண்டு. தகப்பனை குறிக்கும் கிரகம் சூரியன். உத்திரம், உத்திரட்டாதி, கார்திகை நட்சத்திரக்கு உரியவன். சூரியனுக்கு சொந்த வீடு சிம்மம். உச்ச வீடு மேஷம், நீச்ச வீடு சுக்கிரன்.
செவ்வாய்
அங்காரகன், குஜன்,மங்களன் என்ற பெயர்களும் உண்டு. முதல் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்ற அரசியல் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள், நாட்டு தளபதிகள், நீதிபதிகள், பொரியியல் வல்லுனர்கள் முதலானோர்களின் ஜாதகங்களில் செவ்வாயின் பலம் இருந்தே தீரும் என்பது உறுதி.
பெருந்தன்மை அதே நேரத்தில் கண்டிப்பு, தொண்டு செய்தல், தலைமை வகித்தல், வைராக்கியம், பகைவரை வெல்லும் பராக்கிரம் இவற்றை வழங்குபவன் செவ்வாய் கிரகம். ரத்தத்திற்க்கும், சகோதரத்திற்க்கும் காரகன். மேஷம், விருச்சிகம் ஆட்சி வீடுகள். மகரம் உச்ச வீடு, கடகம் நீச வீடு.
அவிட்டம், மிருக சீரிடம், சித்திரை நட்சத்திரங்கள் செவ்வாய்க்கு உரிய நட்சத்திரங்கள். ஜாதகத்தில் செவ்வாய் தோஷமுடையவர்களுக்கு சீக்கிரம் திருமணம் ஆவதில்லை. லக்னத்திற்கு 2,4,7,8,12 இவைகளில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் உண்டு. ஆனால் செவ்வாய் குருவோடு சேர்ந்தாலும், சனி, ராகு, கேதுவோடு சேர்ந்தாலும் செவ்வாய் தோஷம் பரிகாரம் ஆகிவடும். செவ்வாய் குருவோடு சேர்ந்தால் குருமங்கள யோகம் உண்டாகும். செவ்வாய் சந்திரனோடு சேர்ந்தால் சந்திரமங்கள யோகம் உண்டாகும்.
சந்திரன்
மனதிற்க்கும், உடலுக்கும் காரகன் சந்திரன். உலக வாழ்வுக்கு சரிர பலம் முக்கியம். சரிர பலத்திற்க்கு மனவளம் அடிப்படை. ஜாதகத்தில் சந்திரன் பலம் பெற்றிருந்தால் இரண்டையுமே அடைய முடியும். ரோகினி அஸ்தம் திருவோணம் இந்த மூன்று நட்சத்திரங்களுக்கும் நாயகன் சந்திரன். தாய்க்கு காரகன் சந்திரன். கடகம் ஆட்சி எனும் சொந்த வீடு, ரிஷபம் உச்ச வீடு, விருச்சிகம் நீச வீடு. திருமண பொருத்தங்கள் சந்திரன் சஞ்சாரம் செய்யும் நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டே உறுதிபடுத்தபட்டு வருகின்றன. சுபமுகர்தங்கள் நிச்சயிக்கபடுவதும் சந்திரனைக் கொண்டுதான். நாம் பிறக்கும் போது சந்திரன் இருந்த வீட்டை வைத்துதான் கோச்சார பலன்கள் நிர்ணயிக்கபடுகின்றது. சந்திரன் ஜாதகத்தில் அமைந்த வீடு தான் இராசி எனப்படுகிறது.
சூரியனோடு கோச்சார ரீதியாக சேரும் பொழுது அமாவாசை ஆகின்றது.
சூரியனும், சந்திரனும் ஓன்றுக்கொன்று பார்வையிடும் பொழுது அதாவது நேர்கோட்டில் 180 பாகையில் சந்திக்கும் பொழுது பௌர்ணமி ஆகின்றது.
புதன்
சுபகிரக வரிசையில் புதனும் சேரும். ஆனால் புதனோடு பாவகிரகங்கள் சேர்ந்தால் பாவி ஆகிவிடும். புதன் அலிக்கிரகம். எந்த கிரகத்தோடு சேர்கிறதோ அந்த கிரகத்தின் தன்மை பிரதிபல்க்கும். கேட்டை, ஆயில்யம், ரேவதி இந்த மூன்று நட்சத்திரங்களின் நாயகன். முதுன ராசிக்கும், கன்னி ராசிக்கும் அதிபதி புதனே.
புதன் ஆட்சி பெற்று அல்லது உச்சம் பெற்று சூரியனோடு சேர்ந்தால் புதஆதித்ய யோகம் உண்டாகும். இதனால் கல்வி மூலம் பெரிய அந்தஸ்த்தை ஏற்படுத்தும். புதன் -வித்யாகாரகன். கல்வி வித்தை, தொழில் இவைகளின் மூலம் சிறப்பை ஏற்படுத்துபவன். நாடகம் மற்றும் நடன அமைப்புகளுக்கு புதனுடைய பலமே காரணம்.
நகைச்சுவை ததும்பும் நயமான பேச்சு, பளிச்சென்ற உச்சரிப்பு, புத்தக வெளியீடு இவைகளுக்கு புதபலமே காரணம். புதன் வாக்குஸ்தானத்தில்- 2 ஆம் இடத்தில் ஆட்சி உச்சம் பெற்றால் சிறந்த பேச்சுதன்மை இருக்கும்.
குருபகவான்
குருவருள் திருவருள் என்பார்கள். குருபகவான் என்று சிறப்பித்து கூறப்படும் குருபார்க்க கோடி நன்மை. குருபார்வை அதாவது வியாழ நோக்கம் வந்தால் திருமணம் மற்றும் சுபகாரியங்கள் செய்யலாம் என்ற வழக்கம் உள்ளது. சுபகிரக வரிசையில் முதன்மையாக பேசபடும் குருபகவான் ஆட்சி வீடுகள் மீனம், தனுசு. உச்ச வீடு கடகம், நீச வீடு மகரம்.
குருபகவான் ஆட்சி அல்லது உச்சம் பெற்று சூரியனோடு இனைந்நு 6,8,12 வது இடங்களில் மறைவு பெறாமல் அமைந்தால் ராஜயோகம். கோடிஸ்வர யோகம் அமையும். மேதைகளையும்> ஞானிகளையும் உருவாக்குவது குருபகவான். பிரகஸ்பதி என்று குருகிரகத்தை அழைப்பார்கள் இதன் பொருள் ஞானத்தலைவன் என்பதாகும்.
விவேகத்தையும்,
அந்தஸ்தையும், ஆற்றலையும், புத்திர பாக்கியத்தையும் வாரி வழங்குவார். பஞ்ச பூதங்களில் ஆகாயம் குருபகவான். கன்னி லக்னமாக அமைந்து, குரு 3ல் அமர்ந்து பாவகிரகங்கள் பார்த்தாலோ- சேர்ந்தாலோ இரண்டு மனைவிகள் அமையும்.
குருபகவான் ஜாதகங்களில் சிறப்பாக அமைந்தால் நல்ல குடும்பம், நல்ல கணவன்,மனைவி, செல்வசெழிப்பு அனைத்தும் ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெறலாம். தெய்வ அருள் கிடைக்கும். ஜோதிட ஞானத்தை குரு வழங்குவார். அறிவு வாயந்த குழந்தைகளை பெறுவதும் குருபகவான் அருள்தான்.
சுக்கிரன்
கலைக்கு காரகன் சுக்கிரன். பரணி, பூரம், பூராடம் இந்த மூன்று நட்சத்திரங்களுக்கும் நாயகன். ரிஷபம், துலாம் ஆட்சி வீடுகள், மீனம் உச்ச வீடு, கன்னி நீச வீடு.சுக்கிரன் சந்திரனுடன் கூடி பலமுடன் 10ல் இருந்தால் நடிப்புகலையில் தேர்ச்சிபெற்று, குறிப்பிட்ட ஜாதகர் அல்லது ஜாதகி நட்சத்திர ஸ்தானம் பெற்று அவ்வகையில் அதிர்ஷ்டசாலியாக திகழ முடியும்.
லக்னம் எதுவானாலும் சரி சுக்கிரன் 10வது வீட்டில் தனித்திருப்பாரானல் நிச்சயமாக கலைத்துறை ஓன்றில் பாண்டித்யம் பெற்று அதனால் மற்றோரை பரவசபடுத்துகின்ற ஆற்றல் அமைந்து அவ்வகையில் அதிர்ஷ்டம் பெற முடியும்.
பொருட்களை வாங்குவதும், விற்பதும் இன்றைய வாழ்வியலில் முக்கியமான தொழில் ஆகும். இந்த தொழில் வளமையை ஏற்படுத்துவார் சுக்கிரன். சுக்கிரன் பலம் பெற்று இருந்தால் காதலில் வெற்றிகிடைக்கும். ஓருவரது ஜாதகத்தில் சுக்கிரன் தசாகாலம் நடக்கும் போது நல்லமுறையில் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய சிற்றின்ப, பேறின்பங்களுக்கு வழிவகுப்பார்.
குறிப்பிட்ட ஓரு நபரை பார்த்து இவர் ஜென்டில்மேன் என்று சொன்னால் அவர் ஜாதகத்தில் சுக்கிரன் சிறப்பாக அமைந்துள்ளார் என்று அர்த்தம். லக்னத்திற்க்கு 4ல் ஆட்சி, உச்சம், நட்புப்பெற்று அமர்ந்தால் வண்டி, வாகனம், செல்வாக்கு, அந்தஸ்து ஆகியவை அற்புதமாக அமையும
சனிபகவான்
மகர ராசிக்கும், கும்ப ராசிக்கும் அதிபதி. அனுஷம், பூசம், உத்திரட்டாதி நட்சந்திரங்களுக்கு நாயாகன். துலாம், சனிபகவானுக்கு உச்ச வீடு. மேஷம் நீசம், நீசம் பெற்ற சனிபகவான் நன்மை தரமாட்டார். உச்சம் பெற்ற சனிபகவான் நன்மைகளை வாரி வழங்குவார்.
சனிபகவான் பார்வை கொடியது. சனிபகவானுக்கு சுபகிரகங்கள் பார்வை நன்மை செய்யும் இடமான 3,6,10,15,9 அகிய இடங்களில் இருந்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லை.
நீண்ட கால வாழ்வுக்கும், மரணத்திற்க்கும் காரகன் சனிபகவான். வாகனம் காகம். கலி,காரி,முடவன் என்ற பல பெயர்கள் உண்டு.
ஓருவர் ஜாதகத்தில் சனி நீசம் பெற்று வக்கிரம் பெறாமல் பலம் இழந்த நிலையில் இருந்தால் வாத நோயை ஏற்படுத்தும். சனிபகவான் பலம் பெற்ற ஜாதகர் சர்வ சக்திகளையும் பெறவாய்ப்பு உண்டு.
ஜாதகத்தில் நல்ல நிலையில் சனி இருந்தால், அந்த ஜாதகர் ஓரு நாட்டுக்கே தலைவராகவும் வாய்ப்பு உண்டு. வறுமை, நோய், கலகம், அவமரியாதை, இரும்பு, எண்னை, கருமைநிறம், பெரிய இயந்திர தொழிற்சாலை, தொழிலாளர் வர்க்கம் இவைகளுக்கு காரகன். சனிபகவான் பலம் பெற்று அமைந்தால் ஜாதகருக்கு அவர் சம்மந்தபட்ட இனங்களில் பொன்னையும், பொருளையும் வாரி வழங்குவார்.
இராகு
சதயம், சுவாதி, திருவாதிரை இம்மூனறு நட்சத்திரங்களும் இராகு பகவானுக்கு உரியது. இவருக்கு சொந்த வீடுகள் கிடையாது. உச்ச வீடு விருச்சிகம், நீச வீடு ரிஷபம். எந்த நட்ச்த்திரத்தில் அல்லது வீட்டில் அமர்கிறாரோ அந்த அந்த பலன்களை வழங்குவார். இராகுவை போல கொடுப்பவன் இல்லை என்பது ஜோதிட பலமொழி.
சனியை போல ராகுவும் பலன்களை தருவார். வெளிநாடு. வெளிபாஷை, வெளிமனிதர்கள், வேறு மதம் சார்ந்தவர்களோடு நட்பு-அதன் மூலம் நன்மை இவைகளை வழங்குவார் இராகு. 7-வது, 8-வது வீட்டில்,இராகு இருந்தால் சங்கடங்களை கொடுப்பார்.
இராகு சர்ப தோஷம், கால சர்ப தோஷம் முதலியன ஏற்படும். இராகு பலம் பெற்று ஓருவர் ஜாதகத்தில் இருந்தால்- ஸ்பெகுலேஷன்-லாட்டரி, பந்தயம் மூலமாக ஓரு மனிதரை கோடிஸ்வரர் ஆக்குவார்.
பலமிழந்த இராகு- ஏமாற்றுதல், பொய் சொல்லுதல், கள்ள வழியில் நடத்தல் ஆகியவைகளுக்கு காரணங்களாக அமையும். அரசாங்கத்தில் பதவி-புகழ் பெறுவதற்கு, எதிரிகள் அஞ்சி நடப்பதற்க்கு இராகு பலமே காரணம்.
இராகு லக்ன கேந்திரம் அல்லது திரிகோண ஸ்தானமான 5,9 ல் இருந்தால் சிறப்பு பலன்கள் தருவார். 6,12 ல் இருந்தாலும் வெற்றி கிடைக்கும்.
கேது
இவருக்கு ஞானகாரகன் என்று பெயர். வேதாந்த அறிவு நுட்பங்களுக்கும், மோட்சத்திற்க்கும், எந்த ஓரு பிரச்சனையிலிருந்து விமோச்சனம் பெறுவதற்க்கும் காரகத்துவம் உள்ளது கேது.
எளிமை, கடுமை இரண்டுக்கும் உடையதும், உலக பந்தங்களில் இருந்து விடுபட வைப்பதும் கேதுவே. வியாதியில் இருந்து நிவாரணம் தருவதும், பகைவரை முறியடிக்க செய்வதும் கேது. கோபத்தில் நடைபெறும் தவறுகளுக்கும் கேதுவே காரணம். கேதுவைப்போல கெடுப்பவன் இல்லை என்பது ஜோதிட பழமொழி.
விபத்துகளையும். தாகாத சகவாசத்தையும் வழங்குவதும் கேதுவே.ரிஷபத்தில் நீசம், விருச்சிகத்தில் உச்சம். பஞ்ச பூதங்களில் ஜலம். கேது ஞானமாரக்கத்தில் ஆன்மீகத்தை வழங்குபவர்.

பிரபஞ்ச தோற்றம்

- பஞ்ச பூதங்களின் தோற்றம்
அண்ட கோடியிலுள்ள அனைத்து கிரகங்களும் அணுக்களின் கூட்டமேயாகும். இவ்வணுக்களின் கூட்டம் சுத்த வெளியின் வெளிப்பாடாகும். சுத்த வெளி என்பது இயங்காத நிலை. இயங்காத நிலையிலுள்ள ஓர் அணு இயங்கும் நிலைக்கு தற்சுழற்சி காரணமாக வெளிப்படும் போது இயங்கும் நிலை உருவாகிறது. அது சக்தி அணு எனப்படும். இந்த சக்தி அணு தற்சுழற்சி, வேகம், பருமன் இவற்றின் துணை கொண்டு பல அணுக்கள் உருவாகின்றது. இவ்வணுக்களுக்கு இரண்டு காந்த தன்மைகள் உண்டு. தள்ளும் சக்தி, ஈர்க்கும் சக்தி என்பதாகும். இதையே நம் முனிவர்கள் அன்றைய மனிதர்களுக்கு விளங்காத காரணத்தால் காந்தத்திற்கு இரண்டு தன்மை தள்ளும் சக்தி, ஈர்க்கும் சக்தி. இதையே கந்தனுக்கு இரண்டு மனைவி வள்ளி, தெய்வானை என்று குறிப்பிட்டனர். கந்தன் காலத்தால் மருவி கந்தனானார். அதே போல் சிவ சக்தி என்பதும், சிவனின் தன் பாதி சக்தி என்று கூறுவதன் உள்நோக்கம், இயக்கமற்ற சிவனுள் இயங்கும் சக்தி தன் பாதி என கூறப்பட்டது.
இச்சிவனை இயக்கமற்றவன் என்பதை சுத்த வெளி என்பர். இயங்கும், சக்தி களம் என்பது அண்ட கோடியில் அமைந்துருக்கும் கிரகங்கள், ஜீவராசிகள் அனைதுமாகும்.
கிரகங்களின் தோற்றமும், அதன் சுற்று வட்டபாதைகளும் அது செல்லும் வேகமும் ஒரே மாதிரியானதாகும். அணுக்களின் கூட்டமே கிரகங்களாகும். அணுக்கள் ஒன்றோடொன்று மோதியும், விலகியும் அதாவது ஈர்க்கும் சக்தியையும், தள்ளும் சக்தியையும் கொண்டு அதிகமாக அவைகளும் இரு சக்திகளை மையமாக வைத்து இணைந்து கிரகங்கள் தன் வட்டப்பாதையில் தன்னை தானே சுழன்று கொண்டு தன் பாதையில் நகர்ந்தும் பிசகாமல் சூரியனை மையமாக வைத்து சுழன்று கொண்டு வருகிறது.
பஞ்சபூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, விண் ஆகிய அனைத்தும் அணுக்களின் கூட்டமேயாகும். 2c)இவற்றில் முதலில் தோன்றியது விண் ஆகும். பிறகு காற்று, அடுத்ததாக நீர், நெருப்பு, நிலம் என்பதாகும். கிரகங்கள் அனைத்தும் சக்தி களம் முழுவதும் ஒரு வட்ட வடிவமான ஒரு அமைப்பாகும். அவற்றில் விண் என்ற அணுவிலிருந்து வெளிப்படும் அதிர்வலைகள், விண்கல் தன்னுள் மோதிக்கொண்டு காற்றை வெளிப்படுதுகின்றன. இக்காற்றானது மையத்தை நோக்கி விரைந்து வரவர அதன் அடர்த்தி அதிகமாகி ஆக்ஸிஜன் அதாவது நாம் சுவாசிக்கும் காற்றாக அமைகிறது. இதனையே நம் விஞ்ஞானிகள் பூமியிலிருந்து 10 மைல் சுற்றளவிற்கு காற்று அடர்தியாகவும், அதற்குமேல் 100 மைல் சுற்றளவிற்கு காற்று அடர்த்தி குறைவாகவும் அமந்துள்ளதாக கூறுகிறார்கள். ஆக்ஸிஜன் ஆகிய காற்று மையத்தை நோக்கி விரைந்து செல்லும் பொழுது ஹைட்ரஜன் வாயுவாக திரிந்து இவை ஆக்ஸிஜனும், ஹைட்ரஜனும் (H2O) இணைந்த நிலயை நீரின் தோற்றமாக உள்ளது. இந்த நீர் அதன் மையத்தை நோக்கி செல்லும் பொழுது நெருப்பாக ஆகிறது. இந்த நெருப்பு குழம்பு அதன் மையத்தை நோக்கி விரையும் பொழுது, இருக்கும் அணுக்கருக்குள் சிதைவு ஏற்பட மையத்திலிருந்து நெருப்பு குழம்பு பீறிட்டு வெளிவருகிறது. இது நீர் பரப்பிற்கு அப்பால் சென்று எரிமலையாக அமைகிறது.
அங்குள்ள காற்று ஆக்ஸிஜன் அந்த எரிமலையை குளிரச் செய்து கற்பாறைகளாக, மலைகளாக அமைகிறது. இவ்வாறு நிலம் அமைகிறது. இதன் மொத்த தொகுப்பை பூமி என்று அழைக்கிறோம். விண் தோன்றுவதற்கு முன் வெற்றிடமே அமைந்திருக்கவேண்டும். அதற்கு அடுத்த நிலையில் விண் உருவாகி விண்ணிலிறிந்து காற்று உருவாகி, நெருப்பிலிருந்து நிலம் உருவாகியுள்ளது. இதன் அடுத்த நிலையே பரிணாம வளர்ச்சியின் உச்சகட்டமாகிய உயிரினங்கள் முதல் மனிதன் வரை தோன்றியுள்ளனர். இந்த இயக்கம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.

ஜோதிடம் அடிப்படை

1 நாழிகை = 24 நிமிடம்
2 1/2 நாழிகை = 1 மணி
3 3/4 நாழிகை = 1 முகூர்த்தம்
7 1/2 நாழிகை = 2 முகூர்த்தம் = 1 ஜாமம்
8 ஜாமம் = 1 நாள் (பகல் + இரவு சேர்ந்து)
7 நாள் = 1 வாரம்
15 நாள் = 1 பக்ஷம் (பட்சம்)
2 பக்ஷம் = 1 மாதம்
2 மாதம் = 1 ருது (பருவம்)
3 ருது = 1 ஆயனம்
2 ஆயனம் = 1 வருடம்
நமது வான மண்டலத்தில் குறிப்பாக நமது சூரிய மண்டலத்தில் இருபத்தியேழு நட்சத்திர மண்டலங்கள் உள்ளன அவை பன்னிரண்டு ராசி மண்டலங்களுக்குள் உள்ளன. இந்த பன்னிரண்டு ராசி மண்டலங்களும் பன்னிரண்டு மாதங்களை குறிக்கின்றன. ஒரு நட்சத்திர மண்டலம் நான்கு பாவங்களாக (முதலாம் பாவம், இரண்டாம் பாவம், மூன்றாம் பாவம், நான்காம் பாவம் ) பகுக்கப்பட்டுள்ளன. ஒரு ராசி மண்டலமானது ஒன்பது பாவங்களை கொண்டது.
அதாவது 27×4= 108 108/12=9 அதாவது ஒன்பது நட்சத்திர பாதங்கள் கொண்டது ஒரு ராசி. ஒரு நட்சத்திரம் 4 பாதம் என்றால் ஒரு ராசியில் 3 நட்சத்திரங்களின் பாதங்கள் இருக்கும்
ராசிகள்                    நட்சத்திரங்கள்
மேஷம்           - அசுவினி, பரணி, கார்த்தி கை 1-ஆம் பாதம் முடிய
ரிஷபம்           - கார்த்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரிஷம் 2-ஆம் பாதம் முடிய
மிதுனம்         - மிருகசிரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய
கடகம்            - புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய
சிம்மம்           - மகம், பூரம் உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
கன்னி             - உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய
துலாம்            - சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய
விருச்சிகம்    - விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய
தனுசு             - மூலம், பூராடம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
மகரம்            - உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய
கும்பம்          - அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய
மீனம்            - பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய
.
நட்சத்திர அதிபதிகள்
அஸ்வினி - கேது
பரணி - சுக்கிரன்
கார்த்திகை - சூரியன்
ரோகிணி - சந்திரன்
மிருகசீரிஷம் - செவ்வாய்
திருவாதிரை - ராகு
புனர்பூசம் - குரு (வியாழன்)
பூசம் - சனி
ஆயில்யம் - புதன்
மகம் - கேது
பூரம் - சுக்கிரன்
உத்திரம் - சூரியன்
அஸ்தம் - சந்திரன்
சித்திரை - செவ்வாய்
சுவாதி - ராகு
விசாகம் - குரு (வியாழன்)
அனுஷம் - சனி
கேட்டை - புதன்
மூலம் - கேது
பூராடம் - சுக்கிரன்
உத்திராடம் - சூரியன்
திருவோணம் - சந்திரன்
அவிட்டம் - செவ்வாய்
சதயம் - ராகு
பூரட்டாதி - குரு (வியாழன்)
உத்திரட்டாதி - சனி
ரேவதி - புதன்
ஜோதிட கணிதம்
இந்த ஜோதிட கணித பகுதி கணக்கில் சம்பந்த பட்டது. இது நவாம்சம், பாவம், திரிகோணம், துவதாம்சம், சப்தாம்சம், தசாம்சம், திசை, புக்தி, அஷ்டவர்க்கம் போன்ற கணிதங்களையும், சுப கிரகங்கள், அசுப கிரகங்கள், கிரக பார்வைகள், சுப பார்வைகள், அசுப பார்வைகள், கூட்டு கிரகங்கள், பரிவர்த்தனைகள், வர்கோத்தமம், கிரகங்களின் செயல், ஆட்சி கிரகங்கள், உச்சம் பெற்ற கிரகங்கள், நீச்சம் பெற்ற கிரகங்கள், பகை பெற்ற கிரகங்கள், சமம் பெற்ற கிரகங்கள் போன்றவற்றின் செயல்பாடுகளை பற்றியும் எழுதப்படும்.
ராசி அதிபதிகள்
இயற்கையான சுபகிரகங்கள்
   குரு, சுக்கிரன், தீய கிரகங்களுடன் சேராத புதன், வளர்பிறைச் சந்திரன்.
இயற்கையான அசுபகிரகங்கள்
             சூரியன், செவ்வாய், சனி, இராகு, கேது, தீய கிரகங்களுடன் சேர்ந்த புதன், தேய்பிறைச் சந்திரன்.
லக்ன அடிப்படையிலான சுப, அசுப கிரகங்கள்
ஒவ்வொருவரின் ஜென்ம லக்னத்திற்கு ஏற்ப கிரகங்களின் சுப, அசுபத் தன்மை மாறுபடுகிறது
லக்னம்
சுபர்
அசுபர்
மாரகர்
மேஷம்
சூரியன், குரு
புதன், சனி
புதன், சனி
ரிஷபம்
சூரியன், புதன், சனி
சந்திரன், குரு, சுக்கிரன்
சந்திரன், குரு, செவ்வாய்
மிதுனம்
குரு, சுக்கிரன், சனி
சூரியன், செவ்வாய், குரு
சூரியன், செவ்வாய், குரு
கடகம்
செவ்வாய், குரு
புதன், சுக்கிரன்
புதன், சுக்கிரன்,சனி
சிம்மம்
சூரியன், சுக்கிரன் செவ்வாய்
புதன், சுக்கிரன்
சுக்கிரன், சனி, புதன்
கன்னி
புதன், சுக்கிரன்
சந்திரன், குரு, செவ்வாய்
சந்திரன், குரு, செவ்வாய்
துலாம்
புதன், சுக்கிரன்,சனி
சூரியன், செவ்வாய், குரு
சூரியன், குரு
விருச்சிகம்
சூரியன், சந்திரன்,குரு
செவ்வாய்,புதன், சுக்கிரன்
புதன், சுக்கிரன்
தனுசு
சூரியன், செவ்வாய், புதன்
சுக்கிரன்
புதன், சுக்கிரன்
மகரம்
செவ்வாய், புதன், சுக்கிரன்
சந்திரன், குரு
சந்திரன், குரு
கும்பம்
சுக்கிரன், புதன், சனி
சந்திரன், செவ்வாய் ,குரு
சந்திரன், செவ்வாய்
மீனம்
சந்திரன், செவ்வாய்
சூரியன்,சுக்கிரன், சனி,புதன்
சூரியன், சுக்கிரன்,சனி, புதன்
லக்ன கேந்திரத்திம்  (1,4,7,10)
லக்ன கேந்திரத்தில் இயற்கையான அசுப கிரகங்கள் சுப கிரகங்களாகிறது. இயற்கையான சுப கிரகங்கள் லக்ன கேந்திரத்தில் நன்மைகள் செய்தாலும் சில கிரகங்கள் பலன் தருவதில்லை.
திரிகோணம் (1,5,9 ஆகிய வீடுகள்) 
சுப கிரகங்கள் திரிகோணத்தில் அமரும்போது சிறப்பான பலன்கள் அடையும் என்பது பொது விதி
பணபர ஸ்தானம்  (லக்னத்தில் இருந்து 2,5,8,11) 
இதில் இரண்டாமிடம் ஒருவரின் பண வருவாய் விகிதத்தினை சொல்கிறது,
ஐந்தாமிடம் ஒருவர் முற்பிறவியில் செய்த நல்வினை சார்ந்து இப்பிறவியில் ஏற்படும் தனயோகத்தினை குறிப்பிடுகிறது.
எட்டாமிடம் எதிர்பாராத மற்றும் மறைவான தனங்களை சுட்டி காட்டுகிறது. பதினொன்றாம் இடம் தனது தொழில் மற்றும் உத்தியோகம் மூலம் ஏற்படும் தனவரவு மற்றும் லாபத்தினை குறிக்கிறது.
உபஜெய ஸ்தானம் (லக்னம் முதல் 3,6,10,11 )
இயல்பாகவே ஒருவருக்கு மூன்றாமிடம் தைரியத்தை பற்றியும், ஆறாமிடம் எதிரிகள், நோய், பகை என்பதை பற்றியும், பத்தாமிடம் ஒருவரின் கர்மம் என்ற கடமை மற்றும் செயல்பாடு பற்றியும், பதினொன்றாமிடம் ஒருவர் அடையும் லாபத்தினை பற்றியும் ஜோதிடம் கூறுகிறது.
மறைவு ஸ்தானம் (லக்னம் முதல் எண்ணி வர 3, 6, 8, 12)
இந்த மறைவு ஸ்தானம் அசுப கிரகங்களை கொண்டிருந்தால் நல்ல பலனை தருகிறது. நல்ல கிரகங்கள் மறைவு ஸ்தானத்தில் அமர்ந்தால் சுப பலன்கள் மங்கிவிடுகிறது.
ஆட்சி பெற்ற கிரகங்கள் 
ஒரு ராசியின் சொந்த காரர் தனது  ராசியில் தனியாக (வேறு கிரக சேர்க்கை இல்லாமல் ) தங்கி இருக்கும்போது அதிக பலமுடனும், தனது ஸ்தானத்திற்கு நல்ல பலன்களை அள்ளி தரும்.
செவ்வாய்  -   மேஷம், விருச்சிக ராசிகளுக்கு சொந்தகாரர்
புதன்          -     மிதுனம், கன்னி  ராசிகளுக்கு சொந்தகாரர்
குரு           –      தனுசு, மீன ராசிகளுக்கு சொந்தகாரர்
சுக்கிரன்     –    ரிஷபம், துலாம்  ராசிகளுக்கு  சொந்தகாரர்
சனி          -       மகரம், கும்ப வீட்டிற்கு சொந்தக்காரர்
சந்திரன்   –       கடக ராசிக்கு சொந்தக்காரர்
சூரியன்   -       சிம்ம ராசிக்கு சொந்தக்காரர்
ராகு கேது ஆகிய இரு நிழல் கிரகங்களுக்கு சொந்த வீடு கிடையாது.
௧. ஒரு கிரகம் தனது ஆட்சி வீட்டில் வக்கிரம் பெறலாம் (பொது விதி)
௨. ஒரு கிரகம் ஆட்சி வீட்டில் ராகு கேதுவுடன் சேர்ந்து அஸ்தங்க தோஷம் அடைந்தால் நல்ல பலன் தர இயலாது.
௩. இரு கிரகங்கள் நல்ல நிலையில் ஆடசி பெற்றால் ஒரு சாதகன் பூபதி போல் வாழ்வான்
என ஜோதிட கலை கூறுகிறது.
உச்சம் பெற்ற கிரகங்கள்
ஒரு உச்சம் பெற்ற கிரகம், பகை பெற்ற ஒரு கிரகத்தின் நட்சத்திர காலில் (நட்சத்திரத்தில் பிறந்த ) உருவானதாக இருந்தால் பலன் இல்லை. இரு உச்ச கிரகங்கள் ஒருவரை ஒருவர் பார்த்தாலோ பரிவர்த்தனை கொண்டாலோ துன்பமே. நீட்ச வீட்டின் எதிர் வீடு உச்சவீடாகும். நல்ல கிரகங்கள் நல்ல இடத்தில (6,8,12,தவிர) உச்சம் பெற்றால் சுபம். கெட்ட கிரகங்கள் கெட்ட இடத்தில உச்சம் பெறுவதும் நல்லது
சூரியன்  -   மேஷத்தில் உச்சம்
சந்திரன்  -  ரிஷப ராசியில் உச்சம்
குரு        -    கடகத்தில் உச்சம்
புதன்      =    கன்னி ராசியில் உச்சம்சுக்கிரன் –    மீன ராசியில் உச்சம்சனி         –    துலா ராசியில் உச்சம்ராகு        -    ரிஷபத்தில் உச்சம்கேது       –     விருட்சிகத்தில் உச்சம்.
சில ஜாதகருக்கு உச்சம் பெற்ற கிரகம் தனது திசை புக்தியில் கூட செயல் இல்லாமல் இருப்பதை பார்க்க முடியும். அதாவது உச்சம் பெற்றும் பலன் இல்லை என்பது போல்…அதற்க்கு டிகிரி கணிதம் என்று ஒன்று உள்ளது. அதாவது ஒவ்வொரு கிரகமும் ஒரு ராசியில் எந்த டிகிரியில் உச்சம் பெறுகிறது என்பதை பொறுத்து உச்ச கிரகத்தின் நல்ல பலன் அமையும். 
நீச்சம் பெற்ற கிரகங்கள்
உச்சத்தின் எதிர்விளைவு நீச்சம். உச்ச கிரகங்கள் நன்மை செய்கின்றது என்றால் நீட்ச கிரகங்கள் தீமை செய்யும். ஆனால் சில இடங்களில் (லக்னத்திற்கு இத்தனையாவது வீடு என்ற கணக்கில்) நீச்ச கிரகங்கள் நன்மையும் செய்யும். நீச்சம் பெற்ற கிரகம் உள்ள ராசியின் அதிபதி ராசியிலோ அல்லது அம்சத்திலோ ஆட்சி,  உச்சம், லக்ன கேந்திரம் என்ற அமைப்பினை பெற்றால் அதுவே நீச்ச பங்க ராஜயோகம் என்று பொருள்.
சூரியன்       – துலாம் ராசியில் நீச்சம்
சந்திரன்      - விருச்சிகம்  ராசியில் நீச்சம்
செவ்வாய்  - கடக ராசியில் நீச்சம்
புதன்           – மீன ராசியில் நீச்சம்
குரு             – மகர ராசியில் நீச்சம்
சுக்கிரன்     -கன்னி ராசியில் நீச்சம்
சனி            - மேஷ ராசியில் நீச்சம்
ராகு           -விருச்சிக ராசியில் நீச்சம்
கேது          -ரிஷப ராசியில் நீச்சம்
மூலதிரிகோணம்
திரிகோணம் என்பதற்கும் மூலதிரிகோணம் என்பதற்கும் ஜோதிடத்தில் உள்ள வித்தியாசம் என்ன வென்றால் திரிகோணம் என்பது லக்னம் மற்றும் ராசியில் இருந்து எண்ணிவர முறையே 1,5,9 இடங்களாகும். ஆனால் மூலதிரிகோணம் என்பது ஒவ்வொரு கிரகத்திற்கும் ஆட்சி உச்சம் பெறும் அமைப்பை போன்று இந்த மூலதிரிகோண அமைப்பு ஏற்படுகிறது. அதாவது ஒரு கிரகத்திற்கு மூலதிரிகோண வீடு ஒரு வீடு மட்டுமே. ஆட்சி, உச்சம், மூலதிரிகோணம் ஆகியவை ஒரு ஜாதகருக்கு நன்மை செய்வதில் ஒன்றை விட ஒன்று உயர்ந்தது.
இப்போது ஒரு கிரகத்தின் மூலதிரிகோண வீடு என்ன வென்று பாப்போம்:
சூரியன்          -    சிம்மராசி மூலதிரிகோண வீடு.
சந்திரன்         –   ரிஷப ராசி மூலதிரிகோண வீடு.
செவ்வாய்     –   மேஷ ராசி மூலதிரிகோண வீடு.
புதன்              -    கன்னி ராசி மூலதிரிகோண வீடு.
குரு                -   தனுசு ராசி மூலதிரிகோண வீடு.
சுக்கிரன்        -   துலா ராசி மூலதிரிகோண வீடு.
சனி                 –   கும்ப ராசி மூலதிரிகோண வீடு.
ராகு                -    ரிஷப ராசி மூலதிரிகோண வீடு.
கேது              -     விருச்சிக ராசி மூலதிரிகோண வீடு.
ஆக திரிகோணம் என்பது ஒரு வீட்டிற்கும் மூலதிரிகோணம் என்பது ஒரு கிரகத்திற்கும் உண்டானது என்பது இப்போது புரியும்.
தாசா புக்தி
கேது          - 7 வருடங்கள்
சுக்கிரன்   - 20 வருடங்கள்
சூரியன்     - 6 வருடங்கள்
சந்திரன்    - 10 வருடங்கள்
செவ்வாய் - 7 வருடங்கள்
ராகு            - 18 வருடங்கள்
குரு             - 16 வருடங்கள்
சனி             - 19 வருடங்கள்
புதன்           - 17 வருடங்கள்
லக்கினம் -  முதல் வீடு - ஜாதகர் தோற்றம், குண நலன்கள்  பத்தி சொல்லும். ஒவ்வொரு லக்கினத்துக்கும் , சில அடிப்படை பண்புகள் இருக்கு...
இரண்டாம் வீடு - தனம் , குடும்பம், வாக்கு , ஆரம்ப கால கல்விமூன்றாம் வீடு - தைரியம், வீர்யம், இளைய சகோதரம்,நான்காம் வீடு - கல்வி , மாதுர் ஸ்தானம் (தாய்), வாழும் வீடு, வாகனம், சுகம் ஐந்தாம் வீடு -  பூர்வ புண்ணியம், குழந்தைகள்,  குல தெய்வம், முற் பிறவி  ஆறாம் வீடு - கடன், நோய், எதிரிகள்ஏழாம் வீடு - நண்பர்கள் , கணவன் / மனைவிஎட்டாம் வீடு - ஆயுள் , (பெண்களுக்கு - மாங்கல்ய ஸ்தானம் ), திடீர் எழுச்சி , வீழ்ச்சி , வில்லங்கம், சிறை, மான பங்கம், அவமானம்ஒன்பதாம் வீடு - பாக்கிய ஸ்தானம் , பிதுர் (தந்தை) ஸ்தானம் .பத்தாம் வீடு - கர்ம ஸ்தானம்பதினொன்றாம் ஸ்தானம் - லாபம், இரண்டாம் திருமணம் , மூத்த சகோதரம்பன்னிரண்டாம் ஸ்தானம் - விரயம் , அயன , சயன போகம்..  அப்படினா? ஒழுங்கா தூங்குறது..... படுக்கை சுகம்...
கிரகங்களின் பார்வைகள்
எல்லா கிரகங்களுக்கும் - பொதுவா ஏழாம் பார்வை உண்டு.  அதாவது , எந்த ஒரு கிரகமும் , நேர எதிர  இருக்கிற ஏழாம் வீட்டைப் பார்க்கும். ....
சுப கிரகம் , பார்த்தா அந்த வீடு வளம் பெறும்.  பாவ கிரகம் பார்த்தா , நல்லது இல்லை.
எல்லா கிரகத்துக்கும் ஏழாம் பார்வை - பொது.
சனி க்கு -  3 , 10 ஆம் பார்வைகள் உண்டு. 
செவ்வாய்க்கு - 4 , 8 ஆம் பார்வைகளும் உண்டு.
குருவுக்கு - 5 , 9 ஆம் பார்வைகளும் உண்டு.
இதை நல்லா ஞாபகம் வைத்துக் கொள்ளவும்.
இது போக - சூரியனுக்கு - 3 , 10 ஆம் பார்வைகளும் ; ராகு , கேது - 3 , 11 ஆம் பார்வைகளும், சுக்கிரனுக்கு - 4 , 8  - ஆம் பார்வைகளும் உண்டு... ஆனால் , இவை முக்கியத்துவம் பெறுவதில்லை.
ராசிகளில் ஆண் ராசிகள், மற்றும் பெண் ராசிகள்
மேஷம், மிதுனம், சிம்மம்,துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகள் ஆண் ராசிகள் இந்த ராசியை லக்கினமாகக் கொண்டு பிறந்தவர்கள் ஆண் லக்கினத்தில் பிறந்தவர்கள்
ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம்,மகரம், மீனம் ஆகிய ராசிகள் பெண் ராசிகள் இந்த ராசியை லக்கினமாகக் கொண்டு பிறந்தவர்கள் பெண் லக்கினத்தில் பிறந்தவர்கள்

Thursday, October 23, 2014

கலியுகமே சிறந்த யுகம் ஏன் தெரியுமா?

கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என நான்கு யுகங்கள் உள்ளன. கடவுளை அடைய முதல் மூன்று யுகங்களில் தானம், தவம், யாகம்  போன்றவற்றில் ஈடுபட வேண்டியிருந்தது. ஆனால், கலியுகத்தில் கடவுளை அன்புடன் மனதில் நினைத்தாலே போதும் என்ற நிலை இருக்கிறது. இந்த  வகையில் பார்த்தால் கலியுகம் மிகச்சிறந்த யுகமாக திகழ்கிறது.  தான் நினைத்த நேரமெல்லாம் முருகப்பெருமான் நேரில் வந்து காட்சியளித்ததை அ ருணகிரிநாதர், எங்கே நினைப்பினும் அங்கே என் முன் வந்து எதிர் நிற்பனே என்று குறிப்பிடுகிறார். பக்தர் ஒருமுறை நினைத்தால் முருகன் இ ருமுறை தோன்றி அருள்புரிவான் என்பதை, ஒரு கால் நினைக்கின் இருகாலும் தோன்றும் என்கிறார் நக்கீரர். கலியுக தெய்வமான கந்தனை நம்பி க்கையுடன் நினைத்து வணங்கியவருக்கு நினைத்தது நிறைவேறும்.

மேஷம்: ஐப்பசி - மாத ராசி பலன் (18.10.2014 - 16.11.2014)

மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) மங்கல நிகழ்ச்சி!

நட்புக்கு முன்னுரிமை அளிக்கும் மேஷ ராசி அன்பர்களே! 

இந்த மாதம் புதன் நவ.2 வரை நன்மை தர காத்திருக்கிறார். சுக்கிரன் நவ. 13ல் சாதகமான இடத்துக்கு வருகிறார். ராகு மாதம் முழுவதும் நன்மை அளிக்கிறார். 6 ல் இருக்கும் ராகுவால் முயற்சியில் வெற்றி உண்டாகும். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். ஆற்றல் மேம்படும்.குடும்பத்தில் மாதத் தொடக்கத்தில் சுப நிகழ்ச்சி சிறப்பாக நடக்கும். நவ.2 க்குள் திருமணம் போன்ற சுபவிஷயம் நல்ல முறையில் கைகூடும். அதன்பின் கணவன் மனைவியிடையே கருத்துவேறுபாடு உருவாகலாம்.

தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அக். 20 க்குப் பிறகு பெண்கள் வகையில் தொல்லை ஏற்படலாம்.ஒதுங்கி இருக்கவும். நவ. 13க்கு பிறகு நிலைமை சீராகும்.

பணியாளர்களுக்கு சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். புதனால் சிலர் உயர் பதவியை அடைய வாய்ப்புண்டு. நவ. 2 க்கு பிறகு அலைச்சலும். வேலைப்பளுவும் ஏற்படும். விடாமுயற்சி எடுத்தால் கோரிக்கை
நிறைவேறும்.

கலைஞர்கள் தீவிர முயற்சி எடுத்து முன்னேற வேண்டியதிருக்கும். நவ. 3க்குப் பிறகு சுக்கிரன் சாதகமாக காணப்படுவதால் புதிய ஒப்பந்தம் எளிதாக கிடைக்கும். போதிய வருமானம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் ஓரளவே பலனை எதிர்நோக்கலாம். புகழ் கவுரவத்திற்கு பங்கம் உண்டாகாது.  மாணவர்கள் புதன் சாதகமாக காணப்படுவதால், நற்பலன் காணலாம். ஆசிரியர்களிடம் நன்மதிப்பு பெறுவர். நவ. 2 க்குப் பிறகு சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.

விவசாயிகளுக்கு மகசூல் சீராக இருக்கும். அதிகம் உழைக்க வேண்டியிருந்தாலும், அதற்கான வருவாய் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த பலன் கிடைக்காது.  பெண்கள் சிறப்பான நிலை காண்பர். புத்தாடை அணிகலன் கிடைக்க பெறுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

நல்ல நாள்: அக். 21, 22, 23, 24, 25, 30, 31, நவ.  1, 2, 3, 6, 7, 10, 11, 12

கவன நாள்:  அக். 26,  27   சந்திராஷ்டமம்  கவனம்

அதிர்ஷ்ட எண்: 7, 8                             நிறம்: நீலம், பச்சை

வழிபாடு: வியாழக்கிழமை தட்சணாமூர்த்தியை வழிபடுங்கள். சூரிய வழிபாடு நன்மை தரும். ஏழைகளுக்கு துவரை தானம் செய்வதோடு வீட்டில் விளக்கேற்றி வழிபடுங்கள்.

Wednesday, October 1, 2014

சரஸ்வதிக்குரிய நட்சத்திரங்கள்!

நவராத்திரியில் நவமியன்று சரஸ்வதி பூஜை நடத்துவர். ஆனாலும், சரஸ்வதியின் ஜென்ம நட்சத்திரமான மூலத்தில் தொடங்கி, பூராடம்,உத்திராடம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களிலும் சரஸ்வதியை வழிபடவேண்டும் என்றும் பூஜாவிதி உண்டு. திருவாவடுதுறைஆதீனத்தில், புரட்டாசி மாத மூல நட்சத்திரத்தன்று, ஏட்டுசுவடிகளில் சரஸ்வதியை எழுந்தருளச் செய்யும்வழக்கம் இப்போதும்உள்ளது. இதனால்நான்கு தினங்கள் சரஸ்வதி பூஜை செய்யும்நடைமுறை அந்தகாலத்தில் இருந்ததைஅறிய முடிகிறது.