ஹோமங்களில்
பல வகை உண்டு. அதில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு பலன் இருக்கிறது.
பொதுவாக ஹோமங்களை விளை நிலங்களில்தான் நடத்த வேண்டும். அப்படித்தான்
பழங்காலத்தில் நடத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக செங்கரும்பு, செவ்வாழை விளைந்த நிலத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி,
பசுவைக் கொண்டு சுத்தப்படுத்தி (அதாவது பசுவை வலம் வரச் செய்தல்), அதன்
பின்னர் யாக குண்டம் அமைத்து ஹோமம் செய்வதுதான் முறையானது.
தற்போது ...
Saturday, May 4, 2013
ருத்ராட்சம்
இந்துக்களில் சைவம், வைணவம் என்று கூறுவது போல், கிரகங் களிலும் சைவம், வைணவம் என் றெல்லாம் உண்டு.
செவ்வாய், குரு, சூரியன் ஆகிய மூன் றும் சைவக் கிரகங்கள், சைவக் கட வுள்கள் ஆகும். செவ்வாய் – முருகன், குரு – தட்சிணாமூர்த்தி, சூரியன் சிவனுக்குரியவர்கள். இந்த ஆதிக்கம் உடையவர்கள் எல்லாம் ருத்ராட்சம் அணிந்தால் பிரம்மாண்டமாக முன்னுக்கு வருவார்கள்.
அதிலேயும்
ருத்ராட்சத்திலும் ஒன்று முதல் பல முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் உள் ளன.
ஆனால் எல்லா முக ருத்ராட்சங்களும் பலன் அளிக்கக்கூடிய ருத்ராட்சங்களே.
அதில் எந்த மாறுபாடும் இல்லை.
ஒவ்வொரு முகத்திற்கும் ஏற்றபடி அதில் மருத்துவ குணங்களும், ஆன்மீக குணங்களும் உள்ளன.
சந்திரனின் ஆதிக்கம் உள்ளது.
ஏகமுக ருத்ராட்சம்:
ஜோதிட சாஸ்த்திரத்தின் படி ஏகமுக ருத்ராட்சம் சூரியனின் அதிர்வை பெறுகின்றது. இது இதய நோயை குணப்படுத்தும். வலது கண், தலைவலியைப் போக்கும். தோல் நோயை நீக்கும். சுவாச கோளாறுகளை நீக்கும்.இந்த நோய் உள்ளவர்களோ அல்லது சூரியனின் ஆதிக்கம் குறைந்தவர்களோ ஏகமுக ருத்ராட்சத்தை அணியலாம்.
2 முக ருத்ராட்சம்:
சந்திரனின் ஆதிக்கம் உள்ளது.
சுவாச
கோளாறுகள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள், இடது கண் பதிப்பு உடையவர்கள்,
நுரையீரல் கோளாறு உடையவர்கள் குடல் புண் உள்ளவர்கள், சிறுநீரகக் கோளாறு
உள்ளவர்கள் இதை அணியலாம்.
3 முக ருத்ராட்சம்:
ரத்த சம்பந்தமான நோய்கள் உடையவர்கள் இதை அணியலாம். கழுத்து, காது நோய் உடையவர்கள் ரத்த இறக்கம் (B.P.) குடற்புண், தீராத காயங்கள், எலும்பு சம்பந்தமான வியாதி உடையவர்கள் இதை அணியலாம். செவ்வாயின் அதிர்வுகள் 3 முக ருத்ராட்சதிற்கு உள்ளது.
4முக ருத்ராட்சம்:
கணிதம், எழுத்தும், அறிவும் போன்றவற்றை 4 முக ருத்ராட்சம் ஆதிக்கம் செலுத்துகின்றது. பிஸினஸ் செய்பவர்களுக்கு மிக நல்லது. வாத நோய்கள், ஜுரம், மனம் சம்பந்தப்பட்டவியாதிகளுக்கு இது நல்லது. புதன் அதிர்வுகளை கொண்டது.
5முக ருத்ராட்சம்:
கல்லீரல், கணையம், தொண்டை, பாதம், எலும்பு மஜ்ஜை போன்ற தொடர்பான வியாதிகளை போக்க வல்லது. பணப்புழக்கம், மதம் தொடர்பான விஷயங்கள், உலகாயுத விஷயங்களில் வெற்றி போன்றவற்றைத் தரவல்லது. கடுமையான ஏழ்மையிலிருந்து காப்பாற்றும் தன்மை உடையது. குரு கிரக அதிர்வுகளை கொண்டது.
6முக ருத்ராட்சம்:
ஜனனேந்திரிய உறுப்புகளை நோயை நீக்க வல்லது. வாய்ப்புண், தொண்டை எரிச்சல், இசையில் நாட்டத்தை ஏற்படுத்தும். குடும்ப வாழ்க்கையில் பரஸ்பர அன்பைத் தரும்.
7 முக ருத்ராட்சம்:
மரண பயத்தைப் போக்கும். ஆயுளை நீடிக்கும். ஜலதோசத்தைப் போக்கும். இடுப்புக்கு கீழே உள்ள பகுதிகளில் நோயை நீக்கும். உடலில் உள்ள விசத் தன்மையை நீக்கும். மதுவிற்கு அடிமையானவர்களை விடுதலை தரும். கவலையைப் போக்கும். நம்பிக்கையையும், வெற்றியையும் தரும். சனியின் அதிர்வுகள் படைத்தது.
8 முக ருத்ராட்சம்:
8 முக ருத்ராட்சத்தின் கிரக தேவதை ராகு. சனிக்கு உடைய பலனே இதற்கு எனலாம். திடீர் பிரச்சனைகள், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், கால், சருமம், கண், சிறுநீரக பிரச்சனைகள், ரத்தத்தில் விஷம் சேருதல் போன்றவை 8 முக ருத்ராட்சம் அணிவதால் நீங்கும்.
9 முக ருத்ராட்சம்:
இதன் கிரக அதி தேவதை கிரகமான கேது. நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் கண், வயது சம்பந்தப்பட்ட கோளாறுகள் எல்லாம் 9 முக ருத்ராட்சம் நீக்கும் என சாஸ்த்திரங்கள் கூறுகின்றன.
10 முக ருத்ராட்சம்:
இதற்கு தனியாக அதிதேவதை இல்லை. இது எல்லா கிரகங்களையும் கட்டுப்படுதும் சக்தி படைத்தது. எந்த தீய கிரகத்தின் தன்மையையும் இது நீக்கும்.
11 முக ருத்ராட்சம்:
தியானம் செய்பவர்களுக்கு இது உதவும். யோக, தியான, ஆன்மிக வாழ்க்கையில் உள்ள சிக்கல்களை இது நீக்கும்.
12 முக ருத்ராட்சம்:
இதன் அதிதேவதை சூரியன். சூரியன் தீய அதிர்வுகளால் ஏற்படும் தீமையை இது நீக்கும்.
13 முக ருத்ராட்சம்:
6 முக ருத்ராட்சத்திற்குள்ள பலன்களே தான் இதற்கும், தியானம், ஆன்மிக வாழ்க்கை உயர்வுக்கு இது உதவும்.
14 முக ருத்ராட்சம்:
இதுவும் 7 முக ருத்ராட்சத்தைப் போல பலன் தரும். சனியின் தீய பலன்களை இது மாற்றும்.
ருத்ராட்சத்தை எப்படி வேண்டுமானாலும் அணியலாம். ஆனால் ருத்ராட்சத்தை தனியாக அணியாமல் ஏதாவது ஒரு உலோகத்துடன் சேர்த்து அணிந்தால் அது இல்லற வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நல்லது.
அதற்காகத்தான் ருத்ராட்சத்தின் இரு பக்கத்திலும் பூன் போன்று செய்து அதனை நூலில் கட்டித் தொங்க விடுகிறார்கள்.
ருத்ராட்சத்திற்கு
இயல்பாகவே மருத்துவ குணங்கள் நிறைய உண்டு. ருத்ராட்சத்தை யார்
வேண்டுமானாலும் அணியலாம்.
ஆனால், ருத்ராட்சத்தை தங்கம் அல்லது வெள்ளியில் கட்டி அணி யும்
போது, மந்த்ரா உபதேசம் பெற்று, குரு நாதர் கையில் இருந்து வாங்கி அணியும்
போதெல்லாம் மிகவும் நேமமிஷ்டையுடன் இருக்க வேண்டும். அதாவது தீட்சையாக
தரும் ருத்ராட்சத்தை பெற்றுக் கொண்டு தவறான செயல்கள், பேச்சுவார்த்தைகளில்
ஈடுபடக் கூடாது.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்
தக்கூடிய சக்தியும், மன அழுத்த த்தை குறைக்கும் சக்தியும் ருத்
ராட்சத்திற்கு உண்டு. பக்கவாத த்திற்கு முந்தைய காலகட்டத்தில் ருத்ராட்ச
மாலையை உடம்பு முழுவதும் தேய்த்துவிடும் போது அது சரியாகிறது
அம்பாளுக்கு சாத்திய பட்டுப்புடவையை, கோயிலில் விலைக்கு வாங்கி அணிந்து கொள்ளலாமா?
சுவாமிக்கு சாத்த வேண்டும் என பக்தர்கள் காணிக்கையாக வஸ்திரம் வாங்கிக் கொடுக்கிறார்கள். இதுவே கூடுதலாக சேர்ந்து விடுகிற பொழுது
வீணடிக்காமலிருக்க ஏலத்தில் விடுகிறார்கள். இதன் மூலம் மூன்று வழிகளில் பயன் கிடைக்கிறது. பக்தர்களின் வஸ்திர காணிக்கை நிறைவேறுகிறது. ஏலத்தின் மூலம் கோயில் நிர்வாகத்திற்கு வருவாய் கிடைக்கிறது. வஸ்திரங்கள் வீணாகாமல் மற்றவர்கள் உபயோகிக்கவும் முடிகிறது. சுவாமிக்குப் படைக்கப் படும் நிவேதன பிரசாதத்தை உண்பது போல, சுவாமிக்கென பக்தியோடு அணிவிக்கும் பட்டுப்புடவை உள்ளிட்ட எந்த வஸ்திரங்களையும் உபயோகிக்கலாம்.

நல்லதை செய்ய நேரம் காலம் எதற்கு?
இறைவனை உணர்வதன் மூலமும், காண்பதன் மூலமும் அல்லது இரண்டின் மூலமாகவும்
தெய்வ அருளைப் பெறலாம். மகத்தான ஓர் முடிவைக் காணும் போது, அங்கே மகத்தான
செயலின் ஆரம்பமும் ஏற்பட போகிறது என்பதை உறுதியாக நம்பு. துன்பம் நிறைந்த
அழிவு மனதை அச்சுறுத்தும் போது, ஒரு பெரிய மகத்தான செயல் நிச்சயமாக
வரவிருக்கிறது என ஆறுதல் கொள்ள வேண்டும்.
நினைப்பில் உண்மையும், சொல்லில் உண்மையும் இருக்க வேண்டும். பொய் உனது ஜீவனின் இயல்பானதல்ல. அது வெளியிலிருந்து வருகிறது என்பதை உணரும் போது அதை மறுத்து ஒதுக்குவது எளிதாகும். உலகில் உள்ள எவற்றின் மீதும் நமக்கு ஆசை தேவையில்லை, குறிப்பாக செல்வம், வறுமை, மகிழ்ச்சி, துன்பம், வாழ்வு, சாவு, பெருமை, சிறுமை, அறம், நண்பன், மனைவி, குழந்தைகள், நாடு, நமது வேலை, சொர்க்கம், பூமி இவற்றில் உள்ள அல்லது இவற்றைக் கடந்த எதிலும் நமக்கு ஆசை வேண்டியதில்லை.
கடவுளை மட்டும் நேசிப்பதால், அவரும் பிறரை நேசிக்காமல் உன்னை மட்டும் நேசிக்க வேண்டும் என்று ஆசைப்படலாம். ஆனால், இது நேர்மையற்ற, இயற்கைக்குப் புறம்பான ஆசையாகும். காரணம் கடவுள் ஒருவர் தான், நீயோ பலரில் ஒருவன். இரவில் கண் விழிப்பது சரியான அணுகு முறையல்ல, தேவையான உறக்கத்தைத் தடுத்தால் உடம்பைத் தாமசமாக்கி, விழிப்பு நேரத்தில் செயல் திறனை குறைத்து தடுமாற்றத்தை ஏற்படுத்தும்.
நீ எதை வேண்டுகிறாய் என்பதைத் தூர வைத்துவிட்டு இறைவன் எதை வேண்டுகிறான் என்பதை நீ அறிய விரும்ப வேண்டும். உள்ளம், வேக உணர்ச்சிகள், வழக்கமான கருத்துக்கள் ஆகியவை சரியானது என்று நம்பக்கூடாது. கீதையில் அர்ஜூனன் செய்தது போல அவற்றைத் தாண்டிச் சென்று, சரியானவை, தேவையானவை என்று இறைவன் நிர்ணயித்துஇருப்பதைப் புரிந்து கொள்ள ஆசைப்பட வேண்டும்.
ஆன்மிகத்தில் ஈடுபடுபவரின் உயிரையும், உடலையும் காமச் செயலில் இருந்து காக்க தவறினால், இறைவன் அருள் கிடைக்காமலும், ஆன்மிக இன்பம் பெற வழியில்லாமலும் போய்விடும். எனவே வாழ்க்கையில் தூய்மையான இன்பத்தை அறியும் போது இறைவனையும் அறிய வாய்ப்பு கிடைக்கும். -கேட்கிறார் அரவிந்தர்.

கோயில் சொத்தில் கை வச்சா என்னாகும்?
ராமராஜ்யம் அயோத்தியில் நடந்து கொண்டிருந்த போது, மக்கள் யாராவது
குறைகளைச் சொல்ல வருகிறார்களா என காவலர்களிடம் அக்கறையுடன் கேட்பார். இல்லை
என்றே அவர்கள் பதிலளிப்பர். ஒருநாள் ஒரு நாய் ரத்தக்காயத்துடன் ஓடி வந்து
ராமனைப் பார்க்க வேண்டும் என்றது. நாயை உள்ளே அனுமதிக்கச் சொன்னார் ராமர்.
ராமராஜ்யத்தில் எல்லா உயிர்களும் சமமே. ராமா! உன் ஆட்சியில் எனக்கு
ஏற்பட்ட அவலத்தைப் பார்த்தாயா! ஒரு சன்னியாசி, சாப்பிட்டுக் கொண்டிருந்த
என்னை கல்லால் அடித்து விட்டான். காரணமே இல்லை, என்றது. சன்னியாசி
இழுத்து வரப்பட்டார். ஏன் நாயை அடித்தீர்? அதுவா ராமா! நான் பிச்சை
கிடைத்தால் மட்டுமே சாப்பிடும் பழக்கமுள்ளவன். இன்று பிச்சை கிடைக்கவில்லை.
நான் பட்டினி கிடக்கிறேன்.
இந்த நாய், என் முன்னால் தனக்கு கிடைத்ததை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. இந்த நாய்க்கு கிடைத்தது எனக்கு கிடைக்கவில்லையே என்ற எரிச்சலில் அடித்தேன்,. கொடியவனே! வாயில்லா ஜீவனை வதைத்திருக்கிறாயே! உனக்கு மரணதண்டனை,. அப்போது நாய் சொன்னது. ராமா! மரணதண்டனை போதாது. அதை விட கொடிய தண்டனை தர வேண்டும்,. ராமன் ஆச்சரியப்பட்டார். மரணத்தை விட கொடியது எது? என்றார். நான் சென்ற பிறவியில் ஒரு கோயில் அறங்காவலராக இருந்து, அங்குள்ள சொத்துக்களைச் சாப்பிட்டேன். அதனால் இப்போது நாயாகப் பிறந்து, குப்பையில் கொட்டுவதைச் சாப்பிடுகிறேன். கல்லடி வாங்குகிறேன். இவரையும் ஒரு கோயில் அறங்காவலரா போடுங்க! இந்த ஆள் நிச்சயம் கோயில் பணத்தை தின்பான். என்னை மாதிரி நாயா பிறந்து கல்லடி படட்டும், என்றது நாய்.

Subscribe to:
Posts (Atom)